All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

fathima nuhasa

Bronze Winner
Hi everybody......

நாங்க chitchat la ஜெனரல் பேசிட்டு இருக்கும் போது(உடனே சீரியஸ் modeகு போயிராதீங்க.. வெட்டி அரட்டை தாங்க அடிச்சிட்ருந்தோம்) ஒரு டாபிக் வந்தது..... அது என்னான்னா....

அத சொல்ல முன்னாடி ஒரு ரம்பம் போடலாம்

நாளைய சமுதாயம் அப்டீன்னு சொன்னாலே நமக்கு ஞாபகம் வாரது
வளர்ந்து வர்ர சின்ன சிட்டுகள் தான்

ஆமா.. அவங்களும் நாளை உலகை ஆளப்போறவங்கள்ள...? அதுக்கு நம்மளோட சரியான வழிநடத்தல் ரொம்ப அவசியம் அதுக்காக எங்களால முடிஞ்ச அளவு ஒரு social service....

நாளை என்பது நிச்சயமில்லைதான் ஆனா அதுக்காக யாரும் எதுவும் பண்ணாமலா இருக்கோம்? Future future nu ஓடி ஏதாவது பண்ணிட்டு தானே இருக்கோம்...

அதுனால அதாகப்பட்டது மகாஜனங்களே,
சட்டுனு நாங்களும் ஏதாவது பண்ணலாம்னு இல்லாத மூளைய இருக்குறதா காட்டி..... ஒரு idea பண்ணிருக்கோம்

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்துல ஏதாவது ஒரு theme select பண்ணுவோம்
அந்த கருப்பொருளின் அடிப்படையில் அடிப்படையில் அடுத்த மாதத்துல ஒரு விவாதம் நடக்கும்... அந்த விவாததுக்கு நாங்க ஆறு பேர tag பண்ணுவோம் (உங்களோட விருப்புக்களை கேட்டு தான் பண்ணுவோம்)
இதுல கலந்துக்க விருப்பமானவங்களையும் சேர்த்துப்போம்
முதல்ல நாங்க எடுத்திருக்குர theme பத்தி நாங்களே சின்ன போஸ்ட் போடுவோம் அப்றோம் நாங்க tag பண்ண 6பேரும்.... Negative ஆவும் positive நீங்க விவாதிக்கலாம் அப்றோம் அவங்க கருத்து விவாதம் முடிந்ததும் tag பண்ணாதவங்களும் (audience) அவங்க கருத்த சொல்லலாம் (தயவு செஞ்சு இடைல சொல்லப்படாது)

சரி வாங்க மேட்டருக்கு வரலாம்

"இன்றைய இளம் தலைமுறை நாளைய சமுதாயம்..."

இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு யார் காரணம்??? பெற்றோரா ??? சமூகமா??? நட்பு வட்டமா????
இந்த முதிர்ச்சி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதா??? ஏற்புடையதா???? ஏற்புடையது அன்றா????
இன்றைய கல்வி சூழல் மாணவர்களுக்கு போதிப்பது என்ன???

இப்படி எல்லாம் எங்களுள் நெறைய கேள்விகள் ....... அதனால் இதனை இந்த மாதத்திற்கான கருத்து விவாதமாக முன் வைத்து உங்களோட கோணத்துல இருந்து அறியலாம்னு யோசிச்சிருக்கோம்......

விவாதம் பற்றி.......

#Topic
>இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய மன முதிர்ச்சிக்கு யார் காரணம்??? பெற்றோரா ??? சமூகமா???

இத்தகைய அவர்களது மன முதிர்ச்சி இந்த காலகட்டத்துக்கு அவசியமானதா..??

இவ்ளோத்தயும் படிச்சிட்டு உங்களுக்கு மிகப்பெரிய கேள்வி வந்துருக்கனும்(அய்யயோ வரல்லயா)

சரி நாங்களே அதயும் சொல்லிருரோம்..
இதெல்லாம் யாருடா பண்றதுன்னு..
அதாங்க எல்லா ஊர்லயும் நாளு பேரு இருப்பாங்கல்ல... அந்த நாளுபேரு தான்...

இப்படிக்கு,
#கிருதிஷா...

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விவாதம் இனிதே துவங்கிறது............
 
Tamil novel lover

Bronze Winner
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே” அப்படியிருக்கும்போது குழந்தை எப்படி கெட்டவங்களா மாறுவாங்க. அவர்களை அறியாமல் அவர்கள் மாற்றப்படுகிறார்கள்

நிறைய இடத்துல குழந்தைங்க இது தப்புன்னு தெரியாமலேயே நிறைய விஷயங்கள் செய்றாங்க. அந்த இடத்தில் அவங்களுக்கு நல்லது கெட்டது சொல்லித்தர வேண்டிய பெற்றோர்கள் எங்க போனாங்க.

Tik tok செயலி பத்தி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். அதுல எத்தனை பெற்றவர்கள் அவங்க குழந்தைங்க மத்தவங்களை மரியாதை இல்லாமல் பேசுவது மற்றும் தவறான வார்த்தைகள் உபயோகப்படுத்துவதும் ஊக்குவித்து அதுல போடுறாங்க. அப்போ அந்த குழந்தைக்கு மனசுல என்ன பதியும்....????? அது சரின்னு தானே...!!!!
 
தாமரை

நல்ல துவக்கம் நந்தினி💐💐💐👏👏👏👏👏
 
Top