karthikaganesan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்னுள் தொலைந்தேனே
அத்தியாயம் 8
சத்யன் பிரசாத் அரவிந்த் மூவரும் திருவிழாவிற்கு சென்றனர். போகும் வழியில் சத்தியன் பிரசாத்திடம், ஜல்லிக்கட்டில் நடந்ததைப் பற்றி சொன்னான். பிரசாதிற்கும் பாண்டியின் மீது பயங்கர கோபம் வந்தது உடனே சத்யனிடம், ‘அவனை சும்மாவா விட்ட” என்று கோபப்பட்டான். “எல்லாருக்கும் அவன்மேல் கொலைவெறியே இருக்கு என்ன பண்றது இப்ப திருவிழா சமயம்னு பொறுமையா இருக்கிறோம். என்னைக்காவது மாட்டாமலா போவான் அன்னைக்கு இருக்கு அவனுக்கு” என்று கூறினான் சத்யன். அப்போது ஓரிடத்தில் கும்பலாக என்னவென்று போய் பார்த்த மூவரும் அங்கே பாண்டியை ஆடி வெளுத்துக் கொண்டிருந்தனர்.
உடனே பிரசாத் பக்கத்தில் இருந்தவரிடம்," என்னாச்சு ஏன் அவனை போட்டு அடிக்கிறீங்க" என்று கேட்டான்.
அதற்கு அவரோ , "நாங்க திருவிழாவுக்காக கடை போடுவதற்கு வெளியூரிலிருந்து வந்திருக்கோம் தம்பி .இந்தப் பையன் நைட் குடிச்சிட்டு வந்து அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி இருக்கான் அது மட்டுமில்லாம இப்ப காலைல வந்துட்டு அதே பொண்ணு கிட்ட தப்பு தப்பா பேசுறான் அப்பதான் தெரிஞ்சது இவன் தான் நைட்டு வந்தான்னு நைட் நாங்க புடிக்கிறதுக்குள்ள ஓடிட்டாங்க இவனும் இவன் கூட்டாளிகளும் நாங்களும் வந்த இடத்தில பிரச்சனை வேண்டாம் அப்படின்னு அமைதியா இருந்துட்டோம் ஆனா திரும்பிவந்து இந்த பொண்ணு கிட்ட தேவையில்லாத வார்த்தைகள் எல்லாம் பேசறான்" என்று அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை காண்பித்து கூறினார்.
அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவரும் "பிழைக்க வந்த இடத்தில் எங்க ஊரு பையன் மேலே கையை வைக்கிறீங்களா உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது அதுவும் எங்க பண்ணையார் பையன் மேலேயே கை வைக்கிறீர்களா" என்று சத்தம் போட்டார்.
உடனே சத்யனும் "நம்ம ஊரை நம்பி பிழைக்க வந்து இருக்காங்க அவங்க கிட்ட போய் தப்பா நடந்துக்க பார்த்திருக்கான், அவன சொல்லாம இவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் நம்மள நம்பி நம்ம ஊருக்கு கடை போட வந்தவர்களை நாமதான் பார்த்துக்கணும் இப்படி இருந்தா நாளப் பின்ன அவங்க வேற ஊர்ல போய் கடை போடும் போது சொல்ல மாட்டாங்களா அந்த ஊர் திருவிழாக்கு கடை போட போன எங்க பொண்ணு கிட்ட அந்த பண்ணையார் மகன் தப்பா நடந்துக்க பார்த்தான்னு, சொன்னா யாருக்கு அசிங்கம் நம்ம ஊருக்கு தானே. இதுக்கு மேல யாராவது பேசினீங்க நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்" என்று விட்டு அந்த கடைக்காரரிடமும் அந்தப் பெண்ணிடமும் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மூவரும் சென்றனர்.
இதையெல்லாம் பார்த்த பாண்டி சத்யன் மீதும் அரவிந்த் மீதும் கொலைவெறியே இருந்தது ஆனாலும் வேகமாக அந்த இடத்தை விட்டு , விட்டால் போதும் என்று ஓடி விட்டான். அவன் சென்ற திசையை பார்த்த மூவரும் அவன் பின்னே சென்றனர் . அவன் பார்க்கா வண்ணம் தனியாக ஒரு இடத்தில் அவன் மேல் துணியை போட்டு அடித்து விட்டனர் . உடனே பாண்டியோ" யாருடா அது துணியால மூஞ்ச மூடிட்டு அடிக்கிறது தைரியமான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வந்து அடிங்கடா " என்று கூறினான். ஆனாலும் இவர்கள் ஒன்றும் கூறாமல் "எங்க வீட்டு பொண்ணு மேல கை வைக்கிறியா" என்று மட்டும் சொல்லி அடித்துவிட்டு துணியை நல்லா போர்த்தி விட்டு சென்றனர்.
இவனோ அந்த கடைக்காரர்களுள் யாரும் அடிக்கிறார்கள் என்று அந்த இடத்தை விட்டு , விட்டால் போதும் என்று ஓடி விட்டான் .
கொஞ்ச தூரம் வந்ததும் அரவிந்த் "ஏண்டா துணியை மூடி அடிச்சிங்க துணி எடுத்துட்டு வெழுத்துருக்கனும்" என்று சொன்னான்.
இல்லடா மச்சான்" இப்ப நம்ம அடிச்சோம்னு தெரிஞ்சா ஊர் பிரச்சனையா கிளப்பி விட்டுட்டுவான். ஆனால் இப்போ வெளியே சொல்ல வெட்கப்பட்டு அமைதியா இருப்பான்".
இதெல்லாம் அவனுக்கு பத்தாது . இன்னும் ஏதாவது வேணும் என்றும் கோபம் கொண்டான் சத்யன்.
அவனை அடித்து விட்டு மூவரும் கடைவீதிக்கு சென்றனர் . கடைவீதியில் நுழையும்போதே ஒரு கண்ணாடி வளையல் கடையை பார்த்ததும் பிரசாத்திற்கு கண்ணாடி வளையல் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. உடனே "நீங்க போய்க்கிட்டே இருங்க நான் வரேன் டா" என்றான்.
உடனே அரவிந்தோ , "என்னடா தங்கச்சிக்கு வளையல் வாங்க போறியா நீ நடத்து நடத்து" என்று என்றுவிட்டு அரவிந்த் நிற்கவும்,
உடனே சத்யனும் "நானும் அவன்கூட போயிட்டு வரேன் டா" என்றான்.
உடனே அரவிந்த் "டேய் நீயுமாடா". என்றான்." கடைசில என்னை தனியா விட்டுட்டீங்களே. சரி வாங்க மூணு பேருமே போலாம் நீங்க உங்க ஆளுக்கு எடுங்க நான் நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கேன் டா" என்றான்.
"நீயும் பிரியாவுக்கு எடுக்க வேண்டியதுதானே" என்று சொல்லி பிரசாத் அரவிந்தை கிண்டல் செய்தான் . உடனே அரவிந்த் பிரசாத்தை ஒரு பார்வை பார்க்கவும் அமைதியாகி விட்டான் . ஆனாலும் அரவிந்த்திற்கு ஒரு உதா கலர் கண்ணாடி வளையலை பார்த்ததும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே அந்த புடவையின் நியாபகமும் வந்தது. 'அந்த புடவைக்கு நல்லா இருக்குமே என்று அந்த வளையலை மட்டும்' எடுத்துக்கொண்டான்.
உடனே இருவரும் கேலி பார்வை பார்த்தனர் அவனை. "டேய் நான் இதை உன் தங்கச்சிக்கு வாங்கல என் தங்கச்சிக்கு வாங்குறேன்" என்றான் .
இப்படியே அன்றைய பொழுது கழிந்தது திருவிழாவும் நல்லபடியாக முடிந்தது மறுநாள் பங்காளி விருந்துக்கு அனைவரும் தயாராகினர்.
இந்தமுறை பங்காளி விருந்திற்கு ராஜவேலு தங்கதுரை குடும்பத்தையும் கிருஷ்ணவேணி குடும்பத்தையும் நீலவேணி ராஜேந்திர குடும்பத்தையும் தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தார்.
காலையிலேயே ஆண்கள் அனைவரும் நடப்பது பறப்பது ஊர்வது தவழ்வது எல்லாத்தையும் வாங்கி வந்திருந்தனர். நீலவேணி கிருஷ்ணவேணி தமயந்தி மற்றும் அவர்கள் பிள்ளைகள் அனைவரும் சமையலில் ஈடுபட்டிருந்தனர்.
ஆண்கள் அனைவரும் ஒரு புறம் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது ராஜேந்திரனிடம் ராஜவேலு சத்யன் மட்டும் பிரியாவின் கல்யாணத்தை பற்றி கூறினார் . உடனே ராஜேந்திரனும் ஊரிலிருந்து வந்ததும் மச்சான் சொன்னாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி. அரவிந்தும் நல்ல பையன் தான் என் கண்ணு பார்க்க வளர்ந்தவன் எந்த ஒரு தப்பான செயலுக்கும் போகமாட்டான் ரொம்ப அமைதியான பையன் ஆனா என்ன கொஞ்சம் கோபம் மட்டும் வரும் . அதற்கு ராஜவேலுவும் அவன் கோபத்தை ஜல்லிக்கட்டில் பார்த்தேன் என்றார் . தங்கதுரை அமைதியாக இதை கேட்டுக்கொண்டிருந்தார் .
அங்கே உள்ளே கிருஷ்ணவேணி தமயந்தியிடம் பேசவில்லை என்றாலும் முகம் திருப்பாமல் வேலை செய்தார் . அவருக்கு தன் மகள் வாழ்க்கை நல்ல படியாக அமைந்த திருப்தி. ஆனாலும் தமயந்தி மீது சிறு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது அந்த வெறுப்பு மகாவின் மீதும் இருந்தது என் அண்ணன் பையனுக்கு இவள் மனைவியாக போறாலா என்ற ஆதங்கம் இருந்தது.
அப்போது நீலவேணி லட்சுமியிடம் அண்ணே உங்களுக்கு விஷயம் தெரியுமா நந்தினிக்கும் பிரசாத்துக்கும் திருமணம் பற்றி பேசியிருக்கும் என்றார்.
இதைக் கேட்டதும் தமயந்திக்கு ஒரே மகிழ்ச்சி . என்னக்கா சொல்றீங்க நந்தினி நம்ம ஊருக்கு மருமகளா வரப்போறாளா என்று சந்தோஷப்பட்டார். உடனே மகாவும் பிரியாவும் நந்தினியை பார்த்தனர் . நந்தினியோ வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டாள். ஆனால் இந்த பேச்சு கிருஷ்ணவேணிக்கு பிடிக்கவில்லை என்பது அவரின் முகத்தை வைத்தே கண்டு கொண்டார் லட்சுமி.
லட்சுமியும் நந்தினிக்கு இந்த திருமணத்தில் சம்பதமா என்று அவளைப் பார்த்தார் அவளின் வெட்கமே சொன்னது சம்மதம் என்று.
பின்பு ஒருவழியாக சமையல் வேலை முடித்து அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு அனைவரும் குட்டி தூக்கம் போட்டு விட்டு , மாலை லட்சுமியும் தமயந்தியும் அனைவருக்கும் காப்பி போட்டுக் கொண்டிருந்தனர் .
அப்போது லக்ஷ்மி தமயந்தியிடம் "வேணிய பத்திதான் உனக்கு தெரியும் இல்ல அண்ணி , அவங்க குணமே அதுதான்".
உடனே தமயந்தியோ, " நான் ஏதும் தப்பா எடுத்துக்கால அவுங்க பொண்ன சத்யனுக்கு கொடுக்க விருப்பப்பட்டாங்க".
உடனே லக்ஷ்மியோ ," சத்யனை விட பிரசாத்தும் நந்தினிக்கும் பொருத்தமாக இருப்பாங்க இதை வேணி உணர்ந்து எல்லாத்தையும் மறக்கனும்னு நினைக்கிறேன்" என்றார் .
"இதெல்லாம் நீ எனக்கு சொல்லனுமா அண்ணி".
மாலை அனைவரும் காபி அருந்தி விட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நந்தினி பிரியா மற்றும் மகா மூவரும் கொல்லை புறத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பார்க்க வந்த வாண்டுகள் அதாவது பிரியாவின் தோழிகள் அவர்களிடம் வந்து ,"அக்கா அக்கா நாளைக்கு மாங்காய் பறிக்க போலாமா" என்று கேட்டது.
உடனே அவர்களிடம் மகாவும் நந்தினியும் ,"அவ வரமாட்டா அவளை கூப்பிடாதீங்க அவளுக்கு நாளை மறுநாள் கல்யாணம் " என்றனர் .
" கல்யாணம் நடந்தா நீ வரமாட்டியா அக்கா " என்று ப்ரியாவை பார்த்து கேட்டனர் .
அதற்கு பிரியாவோ "அதானே நாளை மறுநாள் தானே கல்யாணம் , நாளைக்கு கல்யாணம் மாதிரி பேசுற , அதெல்லாம் இல்லடா நாளைக்கு போலாம் , நம்ம கந்தசாமியும் மாமா வீட்டு தோட்டத்தில் நிறைய மாங்காய் பார்த்தேன் , நாளைக்கு போய் வேட்டையாடுவோம் சரியா" என்றிள்.
உடனே நந்தினியும் பிரியாவும் "தேவையில்லாத வேலை பார்க்காத ப்ரியா கல்யாணத்தை வைத்துகிட்டு ஒழுங்கு மரியாதையா நாளைக்கு எங்கேயும் போகாத, வீட்டிலேயே இரு". என்றனர் .
உடனே ப்ரியாவும் அவர்களை பார்த்து விட்டு , "சரி சரி நான் எங்கேயும் போகல , டேய் நான் வரலைடா நீங்களே எல்லா மாங்காவையும் பறிச்சு சாப்பிடுங்க" என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.
மகாவும் நந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர் . இவர்கள் பார்க்காத வண்ணம் அந்த வாண்டுகளை பார்த்து கண்ணடித்தாள் பிரியா அவர்களும் அவள் சொல்வதை புரிந்துகொண்டு ஓடிவிட்டனர்.
இங்க வாசலில் கிருஷ்ணனிடம் ராஜவேலு "மச்சான் நந்தினிக்கும் பிரசாத்துக்கு வர முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சுக்கலாம் .ரொம்ப நாள் தள்ளி போட வேண்டாம். மூணு ஜோடிகளுக்கும் இந்த மாசமே கல்யாணம் நடந்த மாதிரியே இருக்கும்". என்றார் .
உடனே கிருஷ்ணன் ராஜேந்திரனை பார்த்தார் "அவரோ எனக்கு இதுல சம்மதம் தான் மச்சான் ,ஆனா ஊர்ல எல்லாத்தையும் கலந்து ஒரு வார்த்தை பேசிட்டு சொல்றேன், எப்படினாலும் இந்த வருஷம் பிரசாத்தின் கல்யாணத்தை முடிக்கணும் என்றுதான் இருந்தேன். நேரம் கூடி வரும்போது பண்ணிரலாம் . நான் நாளைக்கே எல்லார்ட்டையும் கலந்து பேசிட்டு சொல்றேன் . முதல்ல இவங்க ரெண்டு பேரு கல்யாணமும் முடியட்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே பிரசாத்துக்கு முடித்துவிடலாம் ". என்று ஒரு வழியாக மூன்று ஜோடிக்கும் திருமணம் பேசி முடித்தனர்.
மறுநாள் மதியம் அனைவரும் திருமண வேலையில் மூழ்கியிருந்த நேரம் பிரியா யாருமறியாமல் கொல்லைப்புறம் வழியாக வந்து மாங்காய் தோட்டத்திற்கு சென்றாள்.
அவளுக்காக காத்திருந்த வாண்டுகளோ இவளைப் பார்த்ததும் துள்ளி குதித்தனர். உடனே "வாங்க வாங்க சீக்கிரம் போய் மாங்க பறிச்சிட்டு சீக்கிரம் போனும் அம்மா பாத்துட்டா அவ்வளவுதான் " என்று சொல்லி மாந்தோப்புகள் பூந்தார்கள்.
அப்போது அங்கே வந்த பாண்டியின் கூட்டாளி பாண்டியை தொலைபேசியில் அழைத்து பிரியாவை பார்த்ததை பற்றி கூறினான். உடனே பாண்டியும் அவளை எப்படியாவது பழி வாங்கணும் என்ற முடிவோடு மாங்கா தோட்டத்திற்கு வந்தான்.
இதை எதுவும் அறியாமல் பிரியா வாண்டுகளுடன் மாங்காய் பறித்து அதில் ஒரு சிறுமி கொண்டுவந்த மிளகாய்த்தூள் உப்பு போட்டு மாங்காய் ரசித்துக் கொண்டிருந்தனர் .
அப்போது அங்கே வந்த பாண்டி பிரியாவை பார்த்து விகாரமாக சிரித்தான் . அவனை பார்த்ததும் பிரியாவிற்கு ஒரு நிமிடம் பயம்வந்தது. சாதாரண நாளாக இருந்தால் கூட பயப்படமாட்டாள். நாளை கல்யாணம் என்ற நிலையில் இன்னைக்கு இவன் கூட பிரச்சனை பண்ணினா தேவையில்லாத பிரச்சனை வருமே என்று தான் பயந்தாள் .
பாண்டியோ," என்னடி ரொம்பதான் பண்ற. அன்னைக்கு என்னவோ ஜல்லிக்கட்டுல அவ உங்க மாட்டை அடக்கி கல்யாணம் பண்ணிக்க போறானா? அவனை நீ கல்யாணம் பண்ணிக்கோ அதுக்கு முன்னாடி____" என்று அசிங்கமாக பேசினான்.
உடனே ப்ரியாவோ ,"நீ எல்லாம் ஆம்பளையாடா தனியா இருக்கிற பொண்டாட்டி உன் வீரத்தை காமிக்கிற இதுதான் உன் ஆம்பளை தனமாக?" என்றாள்.
உடனே," நான் ஆம்பளையா இல்லையானு காமிக்கிறேன் வாடி" என்று அவள் கையை பிடித்தான்.
அப்போது அங்கு வந்த அரவிந்த் உனக்கு வாங்கின அடி பத்தலையா எவ்வளவு வாங்கினாலும் திருந்த மாட்டியா என்று அவனை வெழுத்து வாங்கினான்.
பின், பிரியாவை ஒரு முறை முறைத்தான். உடனே ப்ரியவோ பயந்து கொண்டு அவனுடன் சென்றாள்.
வாண்டுகளுக்கோ தன்னால் பிரியா மாட்டிக் கொண்டதை நினைத்து பயம் கொண்டனர் .
அரவிந்து பிரியாவிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்தான் அவனுக்கு பயங்கர கோபம் ,'நாளை கல்யாணத்தை வச்சுக்கிட்டு இவை இன்னைக்கு பண்ணி இருக்க வேலைய பாரு .கடைசில எல்லாரும் சொல்றாங்க நான் இவளை கொடும படுத்துற மாதிரி இவ என்னை படுத்தாமல் இருந்தா போதாதா' என்று வருத்தம் மற்றும் கோபம் இருந்தது . அவன் கோபத்தை அறிந்த பிரியா அமைதியாக வந்தாள்.
அவனின் கோபத்தை புரிந்து கொண்ட பிரியா அவனின் அமைதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவன் கையை பிடித்தாள் அவனோ அவள் கையை உதரி விட்டு "அவ்வளவு தான் உனக்கு மரியாதை இனிமேயாது பொண்ணா லட்சணமா அடங்கி இரு, இந்த தொல்லைக்கு தான் கல்யாணம் வேணாம்னு சொல்ல நினைச்சேன் நீ எப்ப எந்த பிரச்சனை இழுத்துவிடுவேனு பயமாக இருக்க முடியாது". ச்சீ.
மகா மட்டும் நீங்க நேத்து பேசினத சொல்லாம. இருந்திருந்தா நான் இப்ப இங்கே வந்திருக்கவே மாட்டேன். நீ வர மாட்ட இருந்தாலும் போய் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் தான் வந்தேன் ஆனா நீ என் நம்பிக்கைய பொய்யாகிட்ட நான் மட்டும் இப்போ வரலனா உன் நிலைமையை நினைச்சு பாரு ".என்று கோபமாக கூறி சென்று விட்டான்.
அவன் செல்வதையே கண்களில் கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தாள் பிரியா.
மறுநாள் யாருக்கும் காத்திராமல் காத்திருக்காமல் விடிந்தது . காலையிலேயே ராஜவேலு மட்டும் தங்கதுரையின் குடும்பம் கோவிலுக்கு சென்றுவிட்டனர்.
அங்கே தங்கதுரையும் ராஜவேலுவும் கல்யாண வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் . ராஜேந்திரன் மற்றும் கிருஷ்ணன் வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தனர். கிருஷ்ணவேணி தமயந்தி லட்சுமி மூவரும் மணப்பெண்களை அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தனர் . பிரியா இன்று மிகவும் அமைதியாக இருந்தாள்.
இங்கு சத்யனும் அரவிந்தன் தயாராகி இருந்தனர். காலையில் இருந்து அரவிந்தின் முகமே சரியில்லை என்பதை புரிந்துகொண்டனர் பிரசாதம் சத்யனும். ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை .
அரவிந்திற்கு நேற்று நடந்தது நடந்தது ஜீரணிக்கவே முடியவில்லை ' இப்படி விளையாட்டு புத்தியா இருக்காளே இவ எப்படி நாளைக்கு நம்ம குடும்பத்துல ஒத்துப் போவா என்ற பயம் மிகவும் இருந்தது, கடவுளே நீ தான் எல்லாத்துக்கும் நல்லபடியாக ஒரு வழி காட்ட வேண்டும் ' என்று வேண்டுதல் வைக்கவும் மறக்கவில்லை.
இங்கு முகூர்த்தநேரம் வரவும் பொண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்தனர் . சத்யனும் அரவிந்தும் பக்கத்து பக்கத்தில் மணவரை இட்டு அமர்ந்து இருந்தனர். "நேரமாச்சி பொண்ண அழைச்சிட்டு வாங்க " என்று குரல் கொடுத்தார் ஐயர் .
மகாவும் ப்ரியாவும் குனிந்த தலை நிமிராமல் வந்தனர்.
மகாவை பார்த்த சத்யன் அவளின் அழகில் மயங்கினான்.
பிரியாவை பார்த்த அரவிந்த் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தான் .
சத்யனின் பார்வையில் வெட்கத்தையும் , அரவிந்தின் பார்வையில் கோபத்தையும் பார்த்த இரு பெண்களும் அவரவர் துணையை பார்த்துக்கொண்டு அமைதியாக வந்தனர் .
சத்யன் அருகில் மகாவும் ,அரவிந்த் அருகில் பிரியாவும் , அமர்ந்தனர் .
ஐயர் தாலி எடுத்து கொடுக்க பிரியா அரவிந்த் சத்யன் மகா இருவரின் திருமணமும் இனிதே முடிந்தது .
அரவிந்தின் கோபத்தை பார்த்த பிரியாவிற்கு மனசுக்குள் மிகவும் கஷ்டமாக இருந்தது . அவளுக்கே தெரிந்தது நேற்றைய தவறு அதனால் அமைதியாக இருந்தாள்.
இனி இவர்களின் வாழ்க்கை எப்படி பயணம் செய்யப்போவது என்பதைப் பார்ப்போம்.
தொடரும்...