All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

💖உன்னுள் தொலைந்தேனே 💖-கதை திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖 உன்னுள் தொலைந்தேனே💖


அத்தியாயம் 4


முதலில் அரவிந்த் மற்றும் மகாவை வீட்டில் விற்றுவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றனர் சத்யனும் ப்ரியாவும்.....

வீட்டிற்குள் வந்ததும் அரவிந்த் முதலில் தன் துணி பையை எடுத்துக்கொண்டு சென்றான்...... எங்கே மகா கேட்டு விடுவாளோ என்று.....

உள்ளே சென்று தன் பெட்டியில் வைத்துவிட்டு அங்குள்ள கட்டிலில் அமர்ந்தான்.......

அந்தப் பையில் அவன் கண்ணைக் கவர்ந்த அந்த புடவை இருந்தது....

அந்தப் புடவையை பார்த்ததும் அவனுக்கு அந்தப் புடவையை ஒரு உருவம் கட்டிக் கொண்டு வருவது போல் ஒரு பிம்பம்...... ஆனால் முகம் சரியாக தெரியவில்லை இவனும் யோசித்து யோசித்துப் பார்த்தான் வரவில்லை......

இவன் அறியாமலேயே அந்த புடவையை அவன் கைகள் எடுத்தது...ஆனால் ஏன் எடுத்தோம் என்று தான் தெரியவில்லை .....ஆனால் அந்த புடவையை வைக்கவும் மனம் இல்லை....... அதனால் தனியாக பில் போட்டு வாங்கி வந்துவிட்டான் .....

வீட்டிற்கு வந்தும் அந்த உருவத்தை தன் மனக் கண்ணில் பார்க்க முயற்சித்தான் ஆனால் முடியவில்லை.......

அந்த உருவம் அவனை மிகவும் இம்சித்தது ......முகம் மட்டும் தெரியவில்லை........

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அந்த நினைவை விட்டு வெளியே வந்தான்......

வெளியே தமயந்தியும் தங்கதுரையும் தன் பிள்ளைகளிடம் பேச நினைத்தனர்.......

தங்கதுரை "அரவிந்த் மகா நீங்க காலையில் கடைக்கு போன உடனே லக்ஷ்மியும் ராஜவேலு நம்ம வீட்டுக்கு வந்தாங்க"... என்று ஆரம்பித்தார்......

அரவிந்து ஏதாவது திருவிழா பற்றி பேச வந்து இருப்பாங்க என்று அப்பா சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.....

" சொல்லுங்கப்பா அத்தையும் மாமாவும் வந்தாங்களா என்ன சொன்னாங்க நாளைக்கு கோவிலுக்கு போறத பத்தி பேசினார்களா "..... என்ற கேட்டான்.....

தங்கதுரையும் "இல்லப்பா இது வேற விஷயம் நம்ம மகா சக்தியாக பொண்ணு கேட்டு வந்தாங்க" என்றார்..........


அரவிந்தும் " இது சந்தோஷமான விஷயம் தானேப்பா,,,,,,,, ஏன் தயங்குறீங்க,,, சத்யா நல்ல பையன் ,,,,,,நம்ம மகாவை நல்லா பாத்துக்குவான்.... நீங்க தரேன்னு சொல்லிட்டீங்க தானே"...... என்று கேட்டான்.....

தங்க துறையோ தயங்கி தயங்கி காலையில் நடந்ததை அப்படியே சொன்னார்......

காலை அவர்கள் சென்றதும் லக்ஷ்மியும் ராஜவேலு வும் தங்கதுரையின் வீட்டுக்கு வந்தனர்........

இவர்களைப் பார்த்ததும் தமயந்திக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.....

"வாங்க அண்ணா வாங்க அண்ணி என்னங்க யார் வந்திருக்காங்க பாருங்க",,,,, என்று தங்கதுரையை அழைத்தார்......

தங்கதுரையும் வெளியே வந்து "வாடா என்று விட்டு தமயந்தியிடம் குடிக்க டீ போட சொன்னார்.....

" அதெல்லாம் வேணாம் தங்கச்சி நீ இப்படி வந்து உட்காரு " என்றார் ராஜவேலு....

"சொல்லு வேலு என்ன இவ்வளவு தூரம் வந்திருக்க என்ன விஷயம்" என்றார் தங்கதுரை.......

"தங்கதுரை நான் சுத்தி வளச்சி பேச விரும்பல நம்ம சத்யாவுக்கு மகாவை கேட்கலாம்னு வந்திருக்கேன்" என்றார் ராஜவேலு.....

"என்ன சொல்ற வேலு நம்ம நந்தினியை தானே கேட்கணும்னு ஆசைப்பட்ட இப்ப ஏன் மகாவை" என்று கேட்டார்......

எங்கே மகன் விரும்புவதை சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று நினைத்தார்.......

அப்படித்தான் நினைச்சேன் துரை..... ஆனால் நந்தினிக்கு பிரசாத்தை பேசப் போறதா கேள்விப்பட்டேன்.....


தங்கதுரைக்கு பிரசாத்தை பற்றி தெரியும் ......அவனும் நல்ல பையன்தான்.... அதனால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.....

அவனின் அமைதியை பார்த்த ராஜவேலு "ஏன் துரை பதில் சொல்லாமல் இருக்க நந்தினி இல்லன்னு சொல்லவும் உன் பொண்ண கேட்கிறேன்னு தப்பா நினைக்கிறாயா"...... என்றார்....

நான் அப்படி எல்லாம் நினைக்கலை வேலு...... திடீர்னு வந்த கேட்கவும் ஒரு நிமிஷம் யோசிச்சேன் மத்தபடி ஒன்னும் இல்ல.....

அப்போ பொன்னு குடுக்க சம்பதமா என்று கேட்டார்........

கண்டிப்பா தர்றேன் மகாக்கு தாய்மாமன் சீர் பண்ணதே சத்தியா தானே......... என்றார்...

ராஜவேலு லட்சுமி ரெண்டு பேருக்குமே மனசு நிறைஞ்சு இருந்துது....

லக்ஷ்மி மெதுவாக ராஜவேலுவை பார்த்து அதையும் கேட்க சொல்லி கண்ஜாடை காட்டினாள்......

ராஜவேலுவும் அதை புரிந்துகொண்டு துரை அப்புறம் இன்னொன்னு கேக்கணும் உன்கிட்ட..... இத எனக்காக செய்யணும் இல்ல நீ இஷ்டப்பட்ட சொல்லு..... என்றார்..

என்னனு தயங்காம சொல்லு வேலு.... என்றார்...

அது ஒன்னும் இல்ல துரை நம்ம அரவிந்துக்கு பொண்ணு ஏதும் பார்க்குறியா என்றார்

அரவிந்த் பஸ்டே சொல்லிட்டான் தங்கச்சி கல்யாணம்.... அதுக்கப்புறம் தான் பண்ணிக்குவேன்னு அதனால ஃபர்ஸ்ட் மகளுக்கு தான் முடிக்கணும் நினைச்சுட்டு இருந்தேன் .......இனிமே தான் பார்க்கணும்..... என்றார்..

உடனே வேலுவும் "அப்படின்னா நாம அரவிந்துக்கு பிரியாவை கல்யாணம் பண்ணி வைக்கலாமா ....நீ என்ன நினைக்கிற .....உன் பிரியம் தான் எனக்கு.... நம்ம பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாம் .....சம்பந்திகள் ஆகணும்னு ஆசை .....நீ என்ன நினைக்கிறாய் ......"என்றார்.....





நண்பனே சம்மந்தி யாக வருவது தங்கதுரைக்கு மகிழ்ச்சி...... ஆனாலும் அரவிந்தின் விருப்பம் தெரியாமல் சம்பந்தம் சொல்லவும் தயக்கம்....

அவரின் தயக்கத்தை பார்த்த ராஜவேலு உனக்கு இஷ்டம் இல்லைன்னா வேண்டாம் துரை என்றார்.....

உடனே துரையும் என்னடா இப்படி சொல்ற..... பிரியாவை யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா((துரை உங்க பையன் கண்டிப்பா சொல்லுவான் வேணாம்னு)) நான் அரவிந்த்தோட சம்பந்தமில்லாமல் பேசத்தான் யோசிச்சேன்....மத்தபடி ஒன்னும் இல்ல.... என் பையன் என் பேச்சை மீற மாட்டான்...,. ரெண்டு கல்யாணத்தை ஒரே நாளில் வச்சுக்கலாம் .......எனக்கு பரிபூரண சம்மதம்..... திருவிழா முடிஞ்சி கல்யாணத்த வச்சிக்கலாம் ..... சந்தோசமா போயிட்டு வாடா என்றார்.......

லட்சுமிக்கும் ராஜவேலுக்கும் ஒரே மகிழ்ச்சி....தமயந்திக்கு மகிழ்ச்சிதான்.....

தமயந்திக்கு அரவிந்த எதுவும் சொல்லுவானோ கல்யாணத்துக்கு ஒத்துக்குவானோ என்ற கலக்கம் இருந்தது.....

சரி வேலு பசங்க வந்ததும் அவங்ககிட்ட கலந்து பேசிட்டு நாள் பார்க்கலாம்... முதல்ல திருவிழா நல்லபடியா முடியட்டும்..... என்றார் தங்கதுரை....

நடந்ததை சொல்லி முடித்ததும் தன் மகனை பார்த்தார்

இதைக் கேட்டதும் அரவிந்தருக்கு பெரிய அதிர்ச்சி.... அவனுக்கும் சில பல ஆசைகள் இருந்தது....தனக்கு வர போற பொண்ண பத்தி பெரிய கற்பனை இல்லனாலும அந்த இடத்துல அவனுக்கு ப்ரியாவ வச்சு பார்க்க மனசு வரல.... ஏதோ ஒன்று தடுத்தது...

தன் அப்பாவிடம் என்னை கேட்காமல் எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்க.... பஸ்ட் மகா கல்யாணம் நடக்கட்டும்.....அதுக்கப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கறேன்..... ஒரு வருஷம் போகட்டும்ன்னு சொல்லி விடுங்கள்..... என்றான்.....

நீ சொல்றதெல்லாம் சரிதான்......அவன் என்கிட்ட கேட்கும் போது என்னால மறுப்பு சொல்ல முடியல....... அதுமட்டுமில்லாம உன் தங்கச்சி அந்த வீட்டில் சந்தோஷமா வாழனும் ....அதை நியாபகம் வச்சுக்கோ.... பிரியாவுக்கு என்ன குறை ஏன் வேண்டாம்னு சொல்ற ....... என்னைப் பொறுத்தவரைக்கும் நீ ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பன்னினாலும் உனக்கும் ப்ரியாவுக்கும் தான் திருமணம்.... அது மாறாது.... என்றார் தங்கதுரை....

அப்பா ஒரு முடிவு எடுத்தால் அதை மாற்றுவது ரொம்ப கஷ்டம் என்பதை தெரிந்த அரவிந்த் ஒன்றும் சொல்லாமல் தன் ரூமிற்கு சென்றான்.....

உள்ளே சென்றவனக்கு முதலில் கோபம் பிரியாவின் மேல் தான் வந்தது..... எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று யோசித்தான்.......

அன்று இரவு சாப்பிடாமலே தன் அறையில் இருந்துக்கொண்டான்...

தமயந்தியும் அவன் சாப்பிடாமல் இருப்பது கவலை ......ஆனால் தன் கணவனிடம் யார் சொல்வது தங்கதுரையின் பிடிவாதம் அவளுக்கு நன்றாக தெரியும்.......

அண்ணன் சாப்பிடாமல் இருப்பது மகாவிற்கும் கவலையாக இருந்தது .....அவன் அறைக்குள் சென்று அவனை எழுப்பினாள்....

அவன் அமைதியாக இருக்கவும்..... அண்ணே உனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லனா விட்டுட்டு ....எனக்காக நீ சம்மதம் சொல்ல வேண்டாம்...... என்றாள்

அப்படியெல்லாம் எதுவுமில்லைமா .......நீ உன் மனச போட்டு குழப்பிக்காத..... எனக்கு உடனே கல்யாணம் சொல்லவும் ஏத்துக்க முடியலை...... மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை ......நீ எதுவும் மனசுல போட்டுக்காம நிம்மதியா தூங்கு...... உனக்கும் சத்யனுக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் என்றான்.......





அவள் சென்றதும் தங்கைக்காக பிரியாவை திருமணம் செய்து கொள்ளவும் இஷ்டமில்லை.....

இந்தத் திருமணப் பேச்சை எப்படி நிறுத்துவது என்றும் தெரியவில்லை...... ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான்.....

இங்கு சத்யனின் வீட்டிலோ ராஜவேலு தாங்கள் பெண் கொடுத்து பெண் எடுக்கும் விஷயத்தை சத்யன் மற்றும் பிரியாவிடம் சொன்னார்.....

இதைக் கேட்டதும் சத்யனுக்கும் பிரியாவுக்கும் அதிர்ச்சி...... அரவிந்த் பிரியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லுவானா ?? என்று..... பிரியாவுகம் ஏற்கனவே எனக்கும் அவனுக்கும் ஆகாது.......இதுல கல்யாணமா என்ப்பா உங்களுக்கு இப்படி எல்லாம் தோனுது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தால் ஆனால் வெளியே சொல்லவில்லை......

ப்ரியா அவள் மனதுக்குள் அங்க வீட்ல என்ன நடக்குதோ தெரியல கண்டிப்பா அரவிந்த் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க.... அப்பா தான் தேவையில்லாமல் மனசுல ஆசைய வளர்த்துக்கிட்டு இருக்காரு ... என்று பிரியா எதையும் எதிர் கொள்ளும் முடிவோடு இருந்தாள்...... இருந்தாலும் அவளின் மனதில் ஒரு மூலையில் அவனின் நிராகரிப்பு வலித்தது......

ராஜவேலு சொல்லவேண்டியதை சொல்லி விட்டு அவர் சென்றுவிட்டார்.....

சத்யன் பிரியாவின் அருகில் வந்து நீ எதுக்கும் கவலைப் படாத .....எங்க கல்யாணத்துக்கு உன் வாழ்க்கையை கெடுக்க விரும்பல ...... மகா விடமும் அரவிந்த் இடமும் நான் பேசுகிறேன்.... என்றான்.....

வெளியே வந்த ராஜவேலு காலையில் கிருஷ்ணன் வந்து தன்னிடம் சொன்னதை நினைத்தார்.......

கிருஷ்ணன் காலையில் வந்து நந்தினியை பிரசாத்துக்கு பேசி முடிக்க போறேன் இதுல உங்க தங்கச்சிக்கும் பரிப்பூரண சம்மதம்....

நீங்க எதை பற்றியும் கவலைப்படாமல் சத்தியன் மகா கல்யாணத்தை பேசி முடிங்க..... திருவிழா முடிஞ்ச கையோட நந்தினிக்கும் பிரசாத்துக்கும் நிச்சயம் பண்ணிட்டு ....அடுத்து வரும் நல்ல முகூர்தத்துல கல்யாணம் வச்சிருக்கேன்..... என்றார்...

ராஜவேலுவுக்கோ தன் மச்சினனை நினைத்து பெருமையாக இருந்தது..... தன்னுடைய பெண்னை கேட்காம வெளியே சம்பந்தம் பேசுறாங்க அப்படின்னு எந்த வருத்தமும் இல்லாமல் பொண்ணு பையன் சம்மதம் தான் முக்கியம் என்று கருத்தில் வைத்து விட்டுக் கொடுத்தது அவருக்கு ரொம்ப பெருமை.....

கிருஷ்ணனின் கையைப்பிடித்து கண் கலங்கி விட்டார்..... கிருஷ்ணனோ இதுக்கெல்லாம் ஏன் மச்சான் வருத்தப் படுறீங்க " இன்னார்க்கு இன்னாரென்று தேவன் அன்னைக்கே முடிச்சு போட்டுட்டான்" அதை யாராலையும் மாத்த முடியாது..... நீங்க கவலைப் படாம கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்னுங்க எந்த வேலைனாலும் தயங்காம சொல்லுங்க நம்ம வீட்டு கல்யாணம் மாதிரி முன்னெடுத்து நடத்தி கொடுக்கிறேன்..... நான் வரேன் என்று சொல்லி சென்று விட்டார்........

இதையெல்லாம் நினைத்தபடியே ராஜவேலு படுத்திருந்தார்.....

அன்றிரவு அரவிந்தும் பிரியாவும் ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்தபடியே இருந்தனர் அரவிந்த்திற்கு பிரியாவை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றாலும் தன் தங்கைக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்...... பிரியாவோ அரவிந்த் நல்ல பையன் தான் வேனாம்னு சொல்றதுக்கு எந்தக் குறையும் சொல்ல முடியாது..... ஆனால் அவருக்கு என்ன பிடிக்காது .....பிடிக்காமல் எப்படி கடைசி வரைக்கும் ஒன்னா வாழா முடியும்....
கடவுளே நீ தான் நல்லபடியாக பண்ணி கொடுக்கணும் ......என்று வேண்டுதல் வைத்தாள்......

இங்கு சத்தியனும் மகாவும் தங்கள் திருமணத்தைப் பற்றிய சந்தோஷப்படுவதா..... இல்லை பிரியா அரவிந்தின் திருமணத்தைப் பற்றி கவலைப்படுவதா என்று தெரியாமல் தவித்தனர்......

இங்கு நந்தினியோ பிரசாத்தை நினைத்து கனவில் மிதந்து கொண்டிருந்தாள்.....நந்தினிக்கு எப்போதும் பார்க்கும் சத்தியனைவிட எப்பவாது ஊருக்கு வந்து செல்லும் பிரசாத்தின் மீது ஈர்ப்பு அதிகம்..... அவளுக்கும் பிரசாத்தை தான் பிடித்திருந்தது .....ஆனால் அம்மாவின் விருப்பம் இல்லாத காரணத்தினால்,,,,, அமைதியாக இருந்தால் ,,,,,, இப்போ அம்மாவே சம்மதம் சொல்லவும் பிரசாத் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறதை நினைச்சு அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி.....

பிரசாத்திற்கும் நந்தினி என்றால் இஷ்டம் .... மாமா பொண்ணு என்னும் முறையில் சின்ன வயதிலிருந்தே நந்தினி உனக்குதான் நந்தினி உனக்குதான் என்று கூறியிருந்தார்கள் ஆனால் நாளடைவில் அந்தப் பேச்சு நின்றுவிட்டது........ ஆனாலும் மூளையில அவனுக்கு நந்தினி மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது..... இப்போ அது நிறைவேற போவதை நினைத்து அவனுக்கும் மகிழ்ச்சி....

இப்படியே மூன்று ஜோடிகளும் தங்களின் இணையை நினைத்தவாறே அந்த இரவை கழித்தனர்...



விடிந்தால் திருவிழா ஆரம்பம் காலை காப்புக்கட்டு முளைப்பாரி என்று ஏழு நாளும் ஒரே கலகலப்பாக இருக்கும்.....


நாளை திருவிழா கொண்டாட்டத்துடன் உங்களை சந்திக்கிறேன்.......

தொடரும்...........
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends

நான் கார்த்திகா. (கைப்புள்ள🤣🤣🤣)

💖 உன்னுள் தொலைந்தேனே 💖

அத்தியாயம் 4 கொடுத்துள்ளேன்....சென்ற அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி......🙏🙏🙏

அரவிந்த் அந்த புடவையை யாருக்கு எடுத்தான் என்ற கேள்விக்கு விடை யூடியில்.....


தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇

 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே💖


அத்தியாயம் 5

மறுநாள் கோவில் திருவிழா இனிதே ஆரம்பமானது ..........

முதல் நாள் காப்பு கட்டி,,,,, முளைப்பாரி போடுவார்கள் ...

வளர்பிறை காலங்களில் காப்புக்கட்டி முளைப்பாரிக்கான வேலை தொடங்கப்படும். அதற்கு குறியீடாக வீட்டின் நிலைப்பகுதியில் வேப்ப இலை தோரணம் கட்டி ஊருக்கு, 'இந்த வீட்டில் முளைப்பாரி போட்டுள்ளார்கள்' என்று அறிவிப்பு செய்யபட்டிருக்கிறது. முளைப்பாரி போடுவதற்கு மண்பானை,பனை,மூங்கில் கூடைகள் எடுத்து ஆறு அல்லது குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் மக்கிய எடுக்கிலையை சேர்த்து,முளைப்பாரி சட்டி தயார் செய்யப்படும். பின் பாதுகாத்த விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்திருக்கிறார்கள். பின் அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும். முளைக்கட்டிய பின் விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள். அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை,மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். முளைப்பாரி போட்ட வீடுளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்நாட்களில் வெளிநபர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.

மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்கலில் முளைப்பாரியின் அருகில் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களில் அவர்களின் உடம்பில் இருந்து அதிகப்படியான வெப்பம் மற்றும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறுவதால், அது பச்சிளம் குழந்தை போல் உள்ள முளைப்பாரியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள். காலப்போக்கில்தான் அது பெண்களை இழிவுபடுத்தும் தீட்டு என்று திசைமாறிவிட்டது.......

காப்பு கட்டிவிட்டால் திருவிழா முடியும் வரை வெளியூர் சென்று தங்க கூடாது......

ஏழு நாளும் ஊரே கோலாகலமாக இருக்கும்.....

முதல் நாள் காப்பு கட்டி முளைப்பாரி போடுவர்....

இரண்டாம் நாள் இரவு அரிச்சந்திரன் நாடகம்......

மூன்றாம் நாள் வள்ளி திருமணம்......

நான்காம் நாள் பாட்டு கச்சேரி......

ஐந்தாம் நாள் பகலில் மஞ்சுவிரட்டு....

ஆறாம் நாள் தீ மிதித்தல்.......

ஏழாம் நாள் சாமி ஊருக்குள் வரும்
அப்போது பெண்கள் தங்கள் வீட்டில் போட்ட முளைப்பாரியோடு சாமியின் ஊர்வளத்தோடு வருவர்...

எட்டாம் நாள் அவரவர் அங்காளி பங்காளிகளுக்கு கறி விருந்து நடக்கும்.....



முதல் நாள் திருவிழா இனிதே ஆரம்பமானது..... விடியலில் எழுந்து பெண்கள் குளித்து விட்டு வாசலில் வண்ணமயமாக கோலமிட்டு கோவிலுக்கு சென்றனர்......

ஒவ்வொருவராக காப்பு கட்டி விட்டு வீட்டிற்கு வந்தனர் .......வீட்டில் வந்து முளைப்பாரி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்..,..

அங்க கோவிலில் அரவிந்தனை பார்த்த சத்யன் ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கி நின்றான் அவனின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அரவிந்த் தானே முன் வந்து வாடா மச்சான் இப்ப தான் வந்தியா என்று அவன் தோளில் கை போட்டு பேச ஆரம்பித்தான்......

ஆமா மச்சான் நைட்டு சரியா தூக்கமில்ல ஒரே யோசனையாய் இருந்தது என்றான் ...,.அரவிந்தும் அமைதியாக நின்றான் பின் ஒரு முடிவோடு சத்யனே ஆரம்பித்தான்....

மச்சான் நீ ப்ரியாவை திருமணம் செய்ய சம்மதம் சொல்லாட்டியும் பரவாயில்லை...... இந்த ஜென்மத்தில எனக்கு மகா தான் மனைவி அதில் எந்த மாற்றமும் இல்லை நீ எனக்காக சம்மதம் சொல்ல வேண்டாம்..... இதை ஏன் நான் சொல்றேன்னா எனக்கு மகா முக்கியம் தான்........அதுக்காக பிரியாவோட வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது.....
உனக்கு இஷ்டம் இல்லனா தாராலமா சொல்லலாம்..... என்றான்...

அரவிந்த் தயங்கியபடியே " மச்சான் நீ தப்பா எடுத்துக்கலனா எனக்கு ஒரு சின்ன உதவி மட்டும் செய்ரியா"... என்றான்......

சத்யனும் " சொல்லுடா என்ன உதவி எதனாலும் தயங்காம சொல்லு நான் உனக்காக கண்டிப்பா பண்றேன்"........ என்றான்...

"உன் தங்கச்சி பிரியா கிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்கு மட்டும் எப்படியாவது ஏற்பாடு பன்னுடா.... தப்பா எடுத்துக்காத"..... என்றான்....

"இதுல என்ன இருக்கு தாரளமாக கூட்டிட்டு வரேன் மனசு விட்டு பேசுங்க ஆனால் எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்காக எடுங்க எங்களுக்காக எடுக்காதீங்க"....... என்றான்....

"அரவிந்த் நான் ஒன்னு சொல்லட்டுமா ப்ரியா ரொம்ப அமைதியான பொண்ணுலாம் சொல்ல மாட்டேன்.... ஆனால் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்குவா....... உங்க வீட்டோட பொருந்திப் போவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு....... இதுக்கு மேல எதுவா இருந்தாலும் நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு......நான் அவளை எங்க தோட்டத்துக்கு கூட்டிட்டு வரேன் நீயும் வா ரெண்டு பேரும் பேசுங்க".... என்றான்.....

சத்யன் பிரியாவை அழைச்சிக்கிட்டு தோட்டத்துக்கு போனால் அங்க அரவிந்து ஏற்கனவே பிரியாவிற்காக காத்திருந்தான்.....

அரவிந்தை அங்கு பார்த்ததும் தன் அண்ணனை முறைத்தாள் பிரியா.....

சத்யனோ "என்னை ஏன் பார்க்கிறா.... அவன் தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னா... என்னன்னு போய் அவன் கிட்ட கேளு நான் வயல்ல வேலை பார்க்கிறவங்க பார்த்துட்டு வரேன்".. என்றான்

அரவிந்த் பிரியாவிற்காக காத்துக் கொண்டிருந்தான்......

பிரியாவோ எப்படியும் நம்மல வேண்டாம்னு தான் சொல்ல போறாங்க.... அதுக்குதான் வர சொல்லி இருப்பாங்க.... எதுவா இருந்தாலும் அவங்க வாயில் இருந்து வரட்டும் என்று அமைதியாக நின்றாள்...... ஆனாலும் அவள் மனதில் புதிதாக அவனைப் பார்க்கும் போது இன்று ஒரு படபடப்பை கொடுத்தது......... அதையும் மீறி ஒரு தவிப்பு வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்று.......

அரவிந்தும் ஏன் எப்பவும் கலகலன்னு இருப்பாள்.... இந்த ரெண்டு நாளா அமைதியாக இருக்கா.... எதுவுமே பேச மாட்டேங்குற .....ஏன் தெரியலையே ....என்று என்னினான்.....

அரவிந்தை பேச்சை ஆரம்பித்தான் நான் உன்னை ஏன் பாக்கணும்னு சொன்னேன்னா உனக்கே தெரிஞ்சிருக்கும் நம்ம வீட்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க என்று....

ப்ரியாவும் ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.......

அவளின் அமைதி அரவிந்தை கொஞ்சம் எரிச்சல் மூட்டியது......"மற்ற நேரத்தில் எப்படி வாய் அடிக்கிற இப்ப ஏன் இப்படி அமைதியா இருக்கிற.... ஏதாவது வாய தொறந்து சொல்லு" என்று எரிச்சலுடன் சொன்னான்....

அதுவரை அமைதியாக இருந்த பிரியா "இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க அத சொல்லுங்க பஸ்டு" என்று கடுப்பானாள்.....

" இந்த கல்யாணத்தில் உனக்கு சம்பந்தம் இல்லைன்னு உங்க அப்பாகிட்ட சொல்லு".. என்றான்.....

" நான் ஏன் சொல்லணும் உனக்கு பிடிக்கலைன்னா நீ கல்யாணம் வேணாம்னு சொல்லி நிறுத்து... நான் எல்லாம் சொல்ல முடியாது"..... என்றாள்...

"என்னடி போனா போகுதுன்னு பார்த்தால் மரியாதை இல்லாம நான் நீன்னு பேசுற உன் வாயை பேத்துடுவேன் பாத்துக்கோ மரியாதையா பேசி பழகு "...என்றான்...



"பேப்பிங்க பேப்பிங்க நீங்க பேக்குற வரைக்கும் என் கை என்ன பூ பறிக்குமா".. என்று இவளும் கோபப்பட்டாள்....

"இந்த வாய் தாண்டி உனக்கு ஜாஸ்தி இந்த பேசுற வாயை நான் என்ன பண்றேன் பாரு ".......என்றான்......

இங்க பாருங்க இன்னும் நான் கல்யாணத்துக்கு சம்பதமே சொல்லல அப்பாகிட்ட .......எங்க அண்ணனுக்காக தான் நான் இப்ப அமைதியா இருக்கேன்..... மத்தபடி உங்க மேல பிரியபட்டோ ஆசைப்பட்டோ நான் இந்த கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிக்கல.... அத முதல்ல ஞாபகம் வச்சுக்கோங்க என்றாள்........

என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ ரொம்ப வருத்தப்படுவ......என்றான் அரவிந்த்.....

உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க உங்க அப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்த நிப்பாட்ட வேண்டியதானே தேவையில்லாம ஏன் என் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க....... என்றாள்.....

அவன் மனதுக்குள் "எங்க அப்பா கிட்ட பேசாம நான் இருப்பேன் நினைக்கிறியா எங்க அப்பா இந்த கல்யாணம் நடக்கணும் ஒத்த கால்ல நிக்கிறாரு அதனால தான் உன்கிட்ட பேச வந்தேன் நீ என்னடானா ரொம்ப பேசுற என்று நினைத்துக்கொண்டான்......

நீங்க ஏன் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றீங்க யாரையாவது விரும்புகிறீர்களா...... என்று கேட்டாள் பிரியா......(( அவளின் மனதுக்குள் ஆம் என்று சொல்லக்கூடாது என்ற தவிப்பு இருந்தது))

பிரியா இப்படி கேட்டதும் அரவிந்திற்கு அன்று தெரிந்த உருவம் கண்முன் வந்தது இன்றும் அதன் முகத்தை மனக்கண்ணில் பார்க்க நினைத்தான் முடியவில்லை.....

இவனின் அமைதி அவளை வெகுவாக பாதித்தது......

அரவிந்தும் "ஆமாம் என்று சொன்னால் கல்யாணத்தை நிறுத்திடுவியா".....என்றான்.....


இதைக் கேட்டதும் கலங்கிய தன் கண்களை அவனுக்கு காட்டாமல் "நான் வருகிறேன்" என்று கூறி குனிந்த தலை நிமிராமல் அவன் கூப்பிட கூப்பிட திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.......

அவளின் கலங்கிய விழிகளை அரவிந்த் பார்த்து விட்டான் அவன் மனதுக்குள் ஏதோ ஒரு பாரம் ஏறிக்கொண்டது...... அவள் ஒன்றும் கூறாமல் சென்றது ஒரு பக்கம் குற்ற உணர்ச்சியாக இருந்தது......

அரவிந்தும் இனி நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக விட்டான் ......

தன் தங்கையின் முகத்தை பார்த்தே சத்தியன் ஓரளவிற்கு யூகித்து விட்டான்......

அவளிடம் ஒன்றும் கேட்காமல் அமைதியாக அவளை கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வந்தான்......

இங்கு கிருஷ்ணவேணியின் வீட்டில் கிருஷ்ணனின் அக்காவின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.....

அவர்களை எந்தக் குறையுமின்றி வேணி நன்றாக பார்த்துக் கொண்டார்......

பிரசாத் வரவில்லை..... அவன் கடைசி நாள் திருவிழா அன்று வருவதாக சொன்னார்,,,,,கிருஷ்ணனின் அக்கா நீலவேணி.....

பிரசாத் வராதது நந்தினிக்கு சிறு ஏமாற்றம் தான்...... ஆனாலும் அதை அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை...

கிருஷ்ணவேணி அன்று அவர் கணவர் சொல்லி சென்றபின் யோசித்தார்....

சத்யா மகாவை விரும்புவது தெரிந்தும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொடுத்தால் நந்தினியின் வாழ்க்கை கண்டிப்பாக நல்லா இருக்காது... அது மட்டுமில்லாம அவள நினைச்சுகிட்டு நம்ம பொண்ணோட வாழ்க்கையும் வீணாகிவிடும் அதைவிட பிரசாத் எவ்வளவோ மேல் பிடிக்காத கல்யாணத்தை பண்ணி அதுல பொருந்திப் போற கஷ்டம் நம்ம பொண்ணுக்கு வேண்டாம் என்று ஒரு தெளிவான முடிவை எடுத்தாள்.







அந்த முடிவோடு கிருஷ்ணிடம் வந்து நம்ம பொண்ணை பிரசாத்துக்கு கல்யாணம் பண்ணிக்குடுக்கலாம்.... இதுல எனக்குப் பரிபூரண சம்மதம்.... என்றார்....

கிருஷ்ணனும் நமக்கு கல்யாணம் நடந்ததிலிருந்து உன்னோட விருப்பத்திற்கு மாறாக நான் எதுவுமே செஞ்சதில்லை இந்த ஒரு தடவை நான் ஏன் செய்கிறேன்னு புரிஞ்சுகிட்டு நம்ம பொண்ணோட வாழ்க்கை முக்கியம்னு விட்டு கொடுத்தத நெனச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு வேணி........

எப்பவும் போல் கணவரின் புகழ்ச்சி யால் வெட்கம் கொண்டாள்.... ஆம் கல்யாணம் ஆன புதுசில் கிருஷ்ணனை சற்று வெறுத்தாள் ........கிருஷ்ணனோ தன்னை பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணி கொண்டாள் என்று நினைத்து அவளின் மனம் மாறி தன்னை விரும்பும் வரை பொறுமையாக காத்திருந்தார்..... அவரின் பாசத்தினால் கிருஷ்ணவேணியை கொஞ்சம் கொஞ்சமாக வென்றார்......

கிருஷ்ணவேணி யும் தங்கதுரை என்ற ஒருவனை விரும்பினதையை சுத்தமாக மறந்து விட்டாள்......ஆனால் என்றாவது தமயந்தியை பார்க்கும்போது மட்டும் ஒரு பொறாமை உணர்வு அவள் மனதில் வரும்......

இரண்டு நாட்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக நகர்ந்தது......

மூன்றாம் நாள் ராஜவேலு லட்சுமியுடன் தங்கதுரையின் வீட்டிற்கு சென்றார்.....

அவர்களைப் பார்த்ததும் அரவிந்தும் வரவேற்றான்......

ஒருவேளை பிரியா கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க மாட்டாளோ அத சொல்ல வந்திருப்பார்களோ என்று நினைத்தான்......

ஆனால் வந்தவர்களோ ரெண்டு திருமணத்தையும் ஒரே மேடையில் வைச்சுக்கலாமா துரை என்று கேட்டார் ராஜவேலு....... இதை சற்றும் எதிர்பார்க்காத அரவிந்த் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றான்.........

அரவிந்துக்கு பிரியாவின் மேல் பயங்கர கோபம் வந்தது......இவ்வளவு தூரம் சொல்லியும் கல்யாணத்தை நிப்பாட்டாமல் அமைதியாய் இருக்காளே ......என்று...

சத்யனுக்கு தங்கை ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பதும் அரவிந்தும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருப்பதும் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது .....ஆனால் அன்று பிரியா வரும்போது முகம் சரி இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தான்......

பிரியாவோ எதுவாயிருந்தாலும் அவங்களே முடிவு பண்ணட்டும்....என்னால எல்லாம் கல்யாணத்தை நிப்பாட்டமுடியாது.... பிடிக்கலன்னா அவங்க தான் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லனும்.... இல்ல அவங்க விரும்புற பொண்ண கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே....... எதுக்கு என்கிட்ட சொல்றாங்க என்று வருத்தப்பட்டாலும்..... கல்யாணத்தை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை........

மகாவிற்கு நன்றாக தெரிந்தது அண்ணனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று..... ஆனால் இதை சத்யனிடம் சொல்லவும் கொஞ்சம் தயக்கம்..... சொன்னா எங்கே என் தங்கச்சிக்கு என்ன குறை என்று உங்க அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறான் என்று கோபப்படுவார் என்ற பயம் .......அதனால் நடப்பது நடக்கட்டும் என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு அமைதியாக இருந்தாள்.......

துரையும் அதுக்கு என்ன வேலு தாராலமா வச்சுக்கலாம்...... திருவிழா முடிந்து பங்காளிங்க விருந்து அப்போ சின்னதான நிச்சயதார்த்தம் வீட்டிலேயே வெச்சுக்கலாம்...... என்றார்....

மறுநாள் நல்ல முகூர்த்தநாள் தான்.... அன்னைக்கு கல்யாணத்த வச்சிக்கலாம்..... என்றார்......



இவர்கள் ரெண்டு வீட்டின் சொந்தங்களும் அந்த ஊர்தான் திருவிழாவிற்கு எங்கு இருந்தாலும் தன் ஊருக்கு அனைவரும் வருவார்கள் ஆகையால் திருவிழா முடிஞ்சதும் கல்யாணம் என்றால் எல்லாரும் இருப்பார்கள் என்ற முடிவோடு திருமணத்தை அன்றே வைத்தனர்.......

அரவிந்தருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை....

தமயந்தியும் அப்படினா இன்னும் ஏழு நாள் கூட முழுசா இல்ல ..... அதற்குள் புடவை தாலி வாங்கணும் ஏகப்பட்ட வேலை இருக்கு....,.. திருவிழா வேற வச்சுக்கிட்டு அதெல்லாம் செய்ய முடியுமா..... என்றார் தயங்கி தயங்கி...,.

பின் தங்கதுரை அவளைப் பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டாள்........

ராஜவேலு அதைப் பற்றி நீ ஏன்மா கவலைப்படற..... அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ......நாளைக்கே போய் முகூர்த்த புடவை தாலி எடுத்துட்டு வந்தரலாம்.... ஐந்தாம் நாள் ஜல்லிக்கட்டை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது ......அதனால நாளைக்கு எல்லா வேலையும் முடிச்சுடலாம் என்றார்.......





அரவிந்த் இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாமல் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாகி விட்டான்....

மறுநாள் ஜவுளி எடுக்க இரண்டு குடும்பமும் டவுனுக்கு சென்றது..... அவர்கள் அன்று சென்ற அதே கடைக்கு...

அந்த கடைக்குள் சென்றதும் முதலில் பிரியாவின் கண்கள் அந்த புடவை இருந்த பக்கம் தான் சென்றது இன்றும் அந்த புடவை அங்கு இல்லாமல் இருக்க ஏமாற்றத்தோடு நின்றாள்.....

கடைக்குள் வந்ததும் பெரியவர்கள் நீங்க நாலு பேரும் போயி உங்களுக்கு பிடிச்ச புடவை பாருங்க ......நாங்க மத்த சொந்த பந்தங்களுக்கு துணி எடுக்கனும்.... நீங்கள் புடவை புடிச்சிருந்தா எடுத்து தனியாவைங்க நாங்க வந்ததும் பார்த்துட்டு பணம் கொடுக்கலாம் என்று விட்டு சென்றனர்...

அவர்கள் சென்றதும் சத்தியனும் மகாவும் துணி எடுப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர்...

சத்யனும் மகாவும் சின்னச்சின்ன சந்தோஷங்களை கூட அனுபவிக்காமல் இருந்தனர்...

இதனை பார்த்த அரவிந்த் மற்றும் பிரியா அன்று துணிக்கடைக்கு வந்த இருவரும் சேர்ந்து துணியெடுத்ததை நினைத்துக் கொண்டிருந்தனர்...

மெதுவாக பிரியாவிடம் வந்தவன் பிடிக்குதோ பிடிக்கலையோ நம்ம கல்யாணம் மகா மற்றும் சத்யனுக்காக தான்.. நம்மலால அவங்களோட சின்னச் சின்ன சந்தோஷங்கள் கெட்டுபோறதில் எனக்கு விருப்பமில்லை என்றான்...

அதைப் புரிந்து கொண்ட பிரியாவும் உடனே புடவை எடுப்பதில் அதிக கவனம் காட்டினாள்...அதுமட்டுமில்லாமல் மகாவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு இந்த புடவை உனக்கு நல்லா இருக்கும் வச்சு பாரு என்று அவள் தோளில் இவளே வைத்துவிட்டு தன் அண்ணனிடம் அண்ணா இங்க பாரு இந்த புடவை நல்லா இருக்கா என்று கேட்டு சத்தியனின் கவனத்தையும் திருப்பினாள்......








அதுமட்டுமில்லாமல் அரவிந்தனையும் எனக்கு இந்த புடவை நல்லா இருக்குமா கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்று அவனையும் அவர்களின் பேச்சில் இழுத்தாள்.......

பிரியா அரவிந்தனிடம் கேட்டதும் சத்யனும் மகாவும் அவனை பார்த்தனர்.... இவர்கள் பார்ப்பதை புரிந்து கொண்ட அரவிந்தும் ஒன்றும் சொல்லமுடியாமல் ப்ரியாவின் பக்கத்தில் வந்து அவள் மேல் இருந்த புடவையை எடுத்து விட்டு பக்கத்திலேயே மாம்பல நிறத்தில் அரக்கு கரை வைத்த புடவையைப் பார்த்து எடுத்து கொடுத்தான்.... அவள் முதலில் எடுத்த சிகப்பு நிற புடவையை விட இந்த புடவை அவளுக்கு பொருத்தமாக இருந்தது.... சத்யனுக்கு மக்காவிற்கும் ஒரே ஆச்சரியம் ஆகிவிட்டது....

இதே சந்தோஷத்துடன் சத்யனும் மகாவிற்கு பச்சை நிறத்தில் ரோஸ் கலரில் பார்டர் வைத்த புடவை தேர்ந்தெடுத்து கொடுத்தான்...... மகாவின் நிறத்திற்கு ரொம்ப பொருத்தமாக இருந்தது..... இப்படியே ஒவ்வொருவரும் புடவை தேர்வு செய்துவிட்டு தங்களின் பெற்றோர்களுக்காக காத்திருந்தனர்..

லக்ஷ்மி ராஜவேலு தங்கதுரை தமயந்தி நால்வரும் சொந்த பந்தங்களுக்கு எடுக்கவேண்டிய துணிமணிகளை எடுத்துவிட்டு இவர்களிடம் வந்தனர்... இவர்களின் முகூர்த்த புடவை பார்த்ததும் லட்சுமிக்கும் தமயந்திக்கும் மிகவும் திருப்தி ஆகிவிட்டது......

பின் சத்யன் மற்றும் அரவிந்தருக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை எடுத்தார்கள் கூடவே கல்யாண புடவை நேரத்தில் இவர்கள் இருவருக்கும் சட்டை எடுத்தனர்....

பின்பு இரண்டு குடும்பமும் தாலி வாங்க அவர்கள் எப்போதும் நகை செய்யும் ஆசாரியிடம் சென்றனர்.....தாலிக்கு சொல்லிவிட்டு அவர்கள் காத்திருந்த நேரத்தில் சாப்பிட்டுட்டு வந்துடலாம் என்று ராஜவேலு சொல்லவும் நால்வரும் உணவகத்திற்கு சென்றனர்..



அனைவரும் சாப்பிட்டு விட்டு திரும்பவும் நகைக்கடைக்கு சென்று தாலியை வாங்கினர்.....

அந்த ஆசாரி தாலியை சாமியின் பாதத்தில் வைத்து திருமணம் ஆகப்போகும் ஜோடிகளின் கையில் தனித்தனியாக கொடுத்தார்..... முதலில் சத்யன் மற்றும் மகான் கையில் அந்த தாலியை கொடுத்தார் .....அவர்கள் சாமியை வணங்கி விட்டு கையில் வாங்கிக் கொண்டனர்.....

அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் மற்றும் பிரியாவை அழைத்து அவர்களின் கையில் அந்த தாலியை கொடுத்தார்...... இருவருக்கும் அந்த தாலியை வாங்கும் போது இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு உருவானது.........

பின்னர் இரண்டு குடும்பமும் ஊரை நோக்கி பயணம் செய்தனர்......

வண்டியில் வரும்போது மறுநாள் ஜல்லிக்கட்டை பற்றி ராஜவேலு துரையிடம் பேசிக் கொண்டு வந்தார்..... அப்போது ராஜவேலு அவர்களின் காளையைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்..... இத்தனை வருஷத்துல எங்க காளையை இதுவரைக்கும் யாருமே அடக்கினது இல்லை..... அந்த காளையின் பெயர் கருப்பன்.....

ப்ரியாவிற்கும் கருப்பனை நினைத்து ஒரே பெருமை .......ஆகையால் அவளும் தன் அமைதியை உதறிவிட்டு,,,, ஆமாம்பா இத்தனை வருஷத்துல கருப்பனை அடக்குவதற்கு ஒரு வீரன் கூட நம்ம ஊர்ல இல்ல .......இந்த வருஷமாவது யாராவது இருக்கிறார்களா பார்க்கலாம்..... என்று வேண்டுமென்றே அரவிந்த் பார்த்து சீண்டிக் கொண்டிருந்தாள்......

அரவிந்தோ தனக்கும் இந்த பேச்சுக்கும் சம்மந்தமில்லாத போல் அமைதியாக வந்தான்..........

நாளை ஜல்லிக்கட்டில் கருப்பனை யாராவது அடக்குகிறார்கள் என்று பார்ப்போம்?????


தொடரும்................
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends

நான் கார்த்திகா. (கைப்புள்ள🤣🤣🤣)

💖 உன்னுள் தொலைந்தேனே 💖

அத்தியாயம் 5 கொடுத்துள்ளேன்....சென்ற அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி......🙏🙏🙏


படித்துவிட்டு தங்களின்‌ கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇
 
Top