உன்னுள் தொலைந்தேனே
அத்தியாயம் 7
மறு நாள் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது.. இங்கு கிருஷ்ணனின் வீட்டில் கிருஷ்ணவேணியும் நீலவேணியும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். காலை உணவிற்கும் பணியாரம் மற்றும் இட்லி செய்துகொண்டிருந்தனர், நந்தினியும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் அப்போது, நீலவேணி நந்தினியிடம் "பிரசாத் எழுதிருச்சிருப்பான் இந்த காப்பி தண்ணிய எடுத்துட்டு போய் குடு " என்றார்.
நந்தினியும் " நானா நான் போல நீங்களே போய் கொடுங்க" என்றாள். "அட என்ன இப்படி வெக்கப் படுற நாளைக்கு நீ தானே இதெல்லாம் அவனுக்கு செய்யணும் இப்போதிலிருந்தே பழகிக்கோ, போ அவன் எந்திரிச்சதும் காபி கேட்பான் போய் கொடு" என்று அனுப்பி வைத்தார் நீலவேணி .
நந்தினி சென்றதும் கிருஷ்ணவேணியும் நீலவேணியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். கிருஷ்ணவேணிக்கோ மகள் வாழ்க்கை நல்லபடியா இருந்தா போதும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார்.
'சத்யனை விட பிரசாத் தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இரவு கல்யாண பேச்சு எடுக்கும் போது அவன் முகத்தில் வந்து போன ஒளியே சொன்னது'.
அங்கு பிரசாத்தின் அறைக்கு நந்தினி காப்பியை , உள்ளே எடுத்துட்டு போக தயங்கிக்கொண்டே வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள். பிரசாத்தை அவன் அறையில் காணவில்லை. 'காலையிலேயே எங்க போய் இருப்பாங்க' என்ற குழப்பத்தோடு அவள் நன்றாக எட்டிப்பார்த்தாள்.
இவனோ அவள் கையில் காபியோடு வரும்போதே தெரிஞ்சுகிட்டான் தனக்கு தான் கொண்டு வருகிறாள் என்று உடனே கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.
நந்தினி எட்டி பார்க்கவும் வேகமாக அவளை உள்ளே இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு காப்பி அவன் மேலேயே கொட்டியது.
அதைப் பார்த்ததும் நந்தினிக்கு ஒரே பயம் . காப்பி வேறு சூடாக இருந்தது அவன் முகத்தைப் பார்க்கவும் அவனும் ஒரு நிமிடம் கோபப்பட்டாலும் தன் முட்டாள்தனத்தை நினைத்து ஒன்றும் சொல்லாமல் அமைதியாக குளியலறைக்குள் சென்றான்.
உள்ளே குளியலறையில் 'உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல பிரசாத் அவர்தான் கைல காப்பி டம்ளர் வைச்சிருந்தத பார்த்தியே அப்புறம் ஏன் வேகமாக இழுத்த ' என்று தன்னையே நொந்துக்கொண்டு காபி கொட்டிய சட்டையைக் கழட்டி விட்டு மேலே ஒரு துண்டை மட்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.
வெளியே , அவள் சென்று இருப்பாள் என நினைத்து வந்தான். அவளோ அங்கேயே இருக்கவும் என்ன என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான். அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் "ஒன்னும் இல்ல காபி ரொம்ப சூடா இருந்துச்சு நல்லா சுற்றுச்சா என்று தயங்கி தயங்கி கேட்டாள்".
"ஆமா ஆமா ரொம்ப எரியுது வந்து எனக்கு மருந்து தேச்சு விடு "என்று கண்கள் சிரிக்க சொன்னான்.
அவன் அப்படி சொன்னதும் இவளோ முழித்தாள்.
அப்புறம்தான் அவளுக்கே புரிஞ்சது அவர் வேகமா இழுத்ததால் தான் நம்ம விழுந்தோம் என்று.
"உடனே என்னை ஏன் அப்படி இழுத்தீங்க அதனால் தான் உங்க மேல கொட்டிட்டேன் , அதனால் மருந்து போட முடியாது நீங்களே போட்டுக்கோங்க" என்று சொல்லி வெளியே போக திரும்பினாள்.
அவள் திரும்பவும் அவள் போக முடியாதபடி அவள் கையை பிடித்தான்.
உடனே நந்தினியும் வெட்கப்பட்டுக்கொண்டே "என்ன பண்றீங்க விடுங்க, நான் போகணும் கீழே அம்மாவும் அத்தையும் சமைச்சுட்டு இருக்காங்க " என்று கையை உருவ முயன்றாள் ஆனால் அவளால் முடியவில்லை.
" சரி நான் விடனும்னா எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ".
" என்ன பதில் சொல்லணும் " என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டே.
"என்ன உனக்கு புடிச்சிருக்கா" என்றான்.
" பிடிக்காமல்தான் நீங்க என் கைய புடிச்சிருந்தும் நான் அமைதியா இருக்கேனா " என்று சொல்லி விட்டு கையை உருவிக் கொண்டு ஓடிவிட்டாள்.
முதலில் அவள் சொன்னது புரியாமல் பின்பு அவள் சம்மதத்தை புரிந்து மகிழ்ச்சி அடைந்தான்.
அதே மனநிலையோடு திருவிழாவிற்கு கிளம்பினான்.
தமயந்தி குடும்பமும் நீலவேணி குடும்பமும் ஒரே தெருவில் தான் உள்ளார்கள்..
நீலவேணிக்கு தமயந்தி என்றால் பிடிக்கும் , ஆனால் கிருஷ்ணவேணிக்கு பிடிக்காத காரணத்தினால் ஊருக்கு வந்தால் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார். அவ்வளவாக பேசிக் கொள்ள மாட்டார், ஆனால் பிரசாத்தும் அரவிந்தம் நல்ல நண்பர்கள்.
பிரசாத் குளித்துக் கிளம்பி கீழே வந்தான் . அவன் வரவும் இவர்கள் காலை டிபன் வைக்கவும் சரியாக இருந்தது. டிபனை சாப்பிட்டு விட்டு ,"அம்மா நான் போய் அரவிந்த்தை கொஞ்சம் பார்த்துட்டு வரேன்". என்றான் அரவிந்த் என்றதும் கிருஷ்ணவேணியின் முகம் சுருங்கியது. அதை பார்த்த நீலவேணி , "அண்ணி அரவிந்தும் பிரசாத்தும் சின்ன வயசுலருந்தே நல்ல நண்பர்கள்". என்றார்.
கிருஷ்ணவேணி ஒன்றும் கூறாமல் அமைதியாக உள்ளே சென்றார்.
பிரசாத் நேராக அரவிந்த் வீட்டிற்கு வந்தான். அவனைப் பார்த்ததும் தமயந்தி ,"வா பிரசாத் ஏன் வெளியவே நிக்கிற உள்ள வா மோர் குடிக்கிறியா" என்றார்.
"இல்லத்த இப்பதான் டிபன் சாப்பிட்டு வந்தேன் அரவிந்த் எங்க" என்று கேட்டான்..
"அவன் இப்பதான் சத்யனை பார்க்க அவன் வீட்டுக்கு போனான், நீ வரேன்னு சொல்லி இருந்தா இருந்திருப்பானே, சொல்லலையா?,".
" இல்லத்த நான் நைட்டு தான் வந்தேன் அவனுக்கு போன் பண்ணனும்னு நெனச்சேன் பண்ணல நான் அங்க போய் அவனைப் பார்க்கிறேன்" என்று விட்டு சென்றான்..
அவன் சென்றதும் மகாவிடம் வந்த தமயந்தி "என்ன பன்ற காலையில இருந்து இன்னும் குளிக்கலையா , சீக்கிரம் கிளம்பு எல்லாரும் கோயிலுக்கு போயிட்டு இருக்காங்க, உங்க அப்பா வந்தா அவ்வளவுதான் இன்னும் கிளம்பலையா கொச்சிப்பாரு சீக்கிரம் கிளம்பி வா" என்றார்..
"மா என்ன பாத்தா குளிக்காத மாதிரியா இருக்கு , நான் குளிச்சு ஒரு மணி நேரம் ஆச்சு . ஒரு மணி நேரமா இந்த பிளவுஸ் ஓட போராடிக்கிட்டு இருக்கேன். நான் கொடுத்த அளவு தைக்காம டைட்டா தட்சிட்டாரு அந்த டெய்லர்.. வர ஆத்திரத்துக்கு என்ன பண்றதுனே தெரியல நீ போம்மா நான் இந்த பிளவுஸ் பிரிச்சு போட்டுட்டு வரேன் அப்பா வர்றதுக்குள்ளே கிளம்பி இருப்பேன் நீ கத்தாதே". என்றாள்..
தமயந்தியும் , "அதுக்குதான் அவசரமாக தைக்க சொல்லி வாங்க கூடாதுன்னு சொல்றது இந்த திருவிழாவிற்கு இல்லாட்டி வேற ஃபங்ஷனுக்கு கட்டி இருக்கலாம் . அவசர அவசரமாக அதை தைக்க சொல்லி வாங்கி காசுக்கு காசும் போய் உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம , நீ எப்படித்தான் போற இடத்தில இருக்க போறியா என்னையே தான் திட்டுவாங்க போற இடத்துல என் பேரு கொஞ்சம் காப்பாத்து".
"அதெல்லாம் அத்த என்ன நல்லா பாத்துப்பாங்க . நான் பொறுப்பா தான் இருப்பேன்.. திருவிழாக்கு வாங்கின புடவை திருவிழாக்கு தானே கட்ட முடியும்.. எனக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு போயி நீசீக்கிரம் கெளம்பு, நான் கிளம்பி வந்து விடுவேன்" என்றாள்..
மகாவின் குணம் இதுதான் 'அவளுக்கு ஒன்னு வேணும் என்று நினைத்தா அதை எப்படியாவது வாங்கி விடுவாள். அதே மாதிரி யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ரொம்ப பிடிவாதம் பிடிப்பது . கோவம் வந்துட்டா அடுத்தவங்க சொல்றது எதையுமே காதில் வாங்க மாட்டாள். சின்ன வயசுல இருந்து அண்ணனும் அப்பாவும் பயங்கர செல்லம் அவளுக்கு' .
இந்தப் பிடிவாத குணத்தினால் அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கமாட்டார்களோ என்னவோ அவள் அண்ணனும் அப்பாவும்.
தங்கதுரை வீட்டிற்குள் வரும்போதே "கிளம்பிட்டியா இல்லியா எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க நீங்க ரெண்டு பேரும் தான் இன்னும் வரவே இல்ல, என்றார்.
" நான் கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு உங்க மக தான் இன்னும் ரூமை விட்டு வெளியில் வரல, போய் என்னன்னு பாருங்க" என்றார்.
"வந்ததும் என்ன போட்டு கொடுக்கிறதே உனக்கு வேலை நான் ரெடிப்பா அம்மா சும்மா சொல்றாங்க" என்று வந்த தன் மகளின் அழகை பார்த்து வியந்தார்..
தமயந்தியும் அவளின் அழகில் மெய் மறந்து அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தார்..
"தமயந்தி வந்ததும் மகளுக்கு சுத்தி போடு ஊரு கண்ணே நம்ம பொண்ணு மேலதான் இருக்கும் " என்றார்..
அதைக் கேட்டதும் மகாவிற்கு வெட்கமாகிவிட்டது "போங்கப்பா" என்று சொல்லி வெளியே ஓடிவிட்டாள்..
'அட என் பொன்னுக்கு வெக்கம் எல்லாம் படுதே' என்று அதிசயித்தார்..
அங்கே பிரசாத் அரவிந்தை பார்த்ததும் அவனை கட்டிப் பிடித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.
அரவிந்தோ "என்னடா ஆச்சு உனக்கு , என்றான்.
நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட பல நாள் கனவு நிறைவேறப் போகுது.
அப்படி என்னடா சந்தோஷமான விஷயம் சொல்லு நானும் சந்தோஷப்படுவேன் நந்தினி உன் லவ்வை அக்சப்ட் பண்ணிட்டாங்களா ?, இந்த வருஷமாவது உன் லவ்வ அவங்ககிட்ட சொல்லிட்டியா?, இல்லையே நேத்து நைட்டு தானே வந்த அதுக்குள்ள நீ பேசி இருக்கவே மாட்டியே?" என்றான்.
அப்போது வெளியே வந்த சத்தியனும் அவன் முகத்தை பார்த்து "என்னடா முகம் பயங்கர பிரகாசமா இருக்கு ?என்ன விஷயம்?" என்று வம்பு இழுத்தான்.
"ஆமாடா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அதுக்கு காரணம் எங்க மாமாதான்".
" என்னடா சொல்லுற மாமாவா அப்படி என்ன பண்ணாரு உன் சந்தோஷத்துக்கு ? நந்தினியை கல்யாணம் பண்ணித்தறேன்னு சொல்லிட்டாரா ? என்றான்..
"ஆமாண்டா கரெக்டா சொன்ன! நந்தினியை எனக்கு கல்யாணம் பண்ணித்தர மாமா கேட்டாரு , அத்தைக்கும் இதில முழு சம்மதம் சொல்லிட்டாங்க!.அத்தை அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்கனு நான் நினைக்கவே இல்ல". என்றான்.
"அது மட்டும் என் சந்தோஷத்துக்கு காரணம் இல்லை, நந்தினிக்கும் என்ன ரொம்ப பிடிச்சிருக்கு! அவகிட்ட நேரடியாவே கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டு, அவ சம்மதத்தை கேட்டு தான் இங்கே வரேன் ,எனக்கு அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்குடா" என்றான்.
அரவிந்த்க்கும் சத்யனுக்கும் அவனை நன்கு தெரியும் .அவன் நந்தினியை எவ்வளவு விரும்பினான் என்று ,, ஆனால் சத்யனுக்கு மனதில் சிறு நெருடலாக இருந்தது ,, அத்தை நந்தினியை தனக்கு பேசினாள், அப்பாவிடம் எப்படி மகாவை பற்றி பேசி சம்மதம் வாங்க வைப்பது? என்று ஆனால் இப்போது எல்லாருடைய ஆசையும் நிறைவேறப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான் . ஆனால் அதில் ஒரு சின்ன குறை அரவிந்த்க்கும் ப்ரியாவிற்கும் வாழ்க்கை எப்படி போகும் என்று..
பின்பு சத்யன் " உனக்கும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும் டா ,எங்க அப்பா எனக்கும் மகாவுக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க! திருவிழா முடிஞ்சு வர முகூர்த்தத்தில் கல்யாணம் ". என்றான்.
"என்னடா சொல்ற இன்னும் ரெண்டு நாளில் கல்யாணமா என்றான்" ஆச்சரியமாக..
அது மட்டும் இல்ல அரவிந்துக்கும் ப்ரியாவிற்கும் திருமணம்,! ஒரே மேடையில் இரண்டு திருமணம் என்று முடிவு பண்ணி இருக்காங்க" என்றான்..
இதைக்கேட்டதும் பிரசாத் அரவிந்தனை பார்த்தான் . அரவிந்தனும் அவன் தன்னைப் பார்ப்பதை தெரிந்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டான் . சத்யனை இவர்கள் இருவரையும் பார்த்து கண்டும் காணாமல் இருந்தான்...
அரவிந்த் பார்க்காத வண்ணம் சத்யன் பிரசாத்திடம் கண் ஜாடை காட்டிவிட்டு , "மச்சான உள்ள போயி போன் எடுத்துட்டு வரேன் " என்று சென்றான்..
அவன் உள்ளே சென்றதும் அரவிந்திடம் "என்னடா நடக்குது இங்க, உனக்கும் பிரியாவுக்கும் கல்யாணமா ? உனக்கு தான் அவளை பார்த்தாலே பிடிக்காதே, அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன? அவளை பழிவாங்க நினைச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா?, அப்படி ஏதோ உன் மனசுல இருந்துச்சுன்னா இப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்திரு ஏன்னா இதுல உன் தங்கச்சியோட வாழ்க்கையும் இருக்கு" என்றான்..
அதற்கு அரவிந்தோ, " என்னடா நினைக்கிறீங்க என்னை பத்தி, என்ன என்னவோ வில்லன் ரேஞ்சுக்கு பேசுற , எனக்கும் பிரியாவுக்கும் ஒத்துவராது தான், அதெல்லாம் அப்ப, இப்போ அவ தான் என் பொண்டாட்டினு அப்பா முடிவு பண்ணினாரோ அப்போதிலிருந்து என் மனசை கொஞ்ச கொஞ்சமா மாத்த முயற்சி பண்ணிட்டு இருக்கிறேன். அவளை பழிவாங்கலாம் நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல , அவ என்ன பழி வாங்கம இருந்தா போதாதா". என்றான்..
" இந்த ஜென்மத்துல அவதான் என் மனைவி,, அவளை நான் விரும்பிலாம் கல்யாணம் பண்ணிக்கல,,அதே மாதிரி என் தங்கச்சிக்காகவும் கல்யாணம் பண்ணிக்கல.. ஆனா என்னோட வாழ்க்கை இனிமே அவளோட தான்னு முடிவு பண்ணிட்டேன். அதனால இத பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம் . இது அவனுக்கும் தான், சொல்லு அவன் உன்ட்ட கண்ன காமிச்சது எனக்கு தெரியாதுனு நினைக்கிறான். அதுவும் தெரியும் அவன் ஃபோன எடுக்க உள்ள போகலைன்னு தெரியும் அவனை முதல்ல வெளியில வர சொல்லு"..
உள்ளிருந்து இதையெல்லாம் கேட்ட சத்யனோ வந்து வேகமாக அவனை கட்டி பிடித்து "என்னை மன்னிச்சுடுடா ,, எனக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது ஒரு அண்ணன்னா என்னுடைய தவிப்பு புரிஞ்சுக்கோடா" என்றான்..
" டேய் மச்சான் எனக்கு புரியுதுடா இருந்தாலும் என்னை பத்தி தப்பா நெனைச்சது தான் வருத்தம்மா இருக்கு.. என்றான்..
"டேய் போதும் இந்தப் பேச்சு ,, இதோட விட்டுவோம் ,, நம்ம மூணு பேருக்கும் கல்யாணம் ..திருவிழா முடிஞ்சி.. அதை மட்டும் நினைச்சு பார்த்துட்டு சந்தோஷமா இருப்போம் .. சத்தியா நீயும் எதுக்கும் வருத்தப்படாத,, அரவிந்தும் பிரியாவும் சீக்கிரமே ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.. எனக்கு நம்பிக்கை இருக்கு நம்ம ரெண்டு பேரோட அவங்க தான் இந்த கல்யாணம் லைஃப நல்லா என்ஜாய் பண்ணுவாங்க,, என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ..அதனால இனிமே உன் தங்கச்சியை பற்றி கவலைப்படுவதை நிறுத்து" என்றான் பிரசாத்..
மூவரும் சந்தோஷமான மனநிலையுடன் திருவிழாவிற்கு சென்றனர்...
அடுத்த பதிவில் திருமணத்தோடு வருகிறேன்...
தொடரும்....