தாமரை
தாமரை
வணக்கம் அக்கா,
கிண்டிலில் ட்வுன் லோட் செய்து படித்து முடித்து ஐந்து நாட்களும் ஆகி விட்டன. இங்கு வந்து கருத்துச் சொல்லத்தான் நேரம் கூடி வரவில்லை. முக நூல் நம் நேரங்களை எல்லாம் முழுங்கி விடுகிறது. நாளின் இறுதியில் உருப்படியாக என்ன செய்திருக்கிறோம் என்று பார்த்தால் எதுவும் இல்லை.
இந்த கதையின் கருத்துத் திரி தேடினேன். கிடைக்கவில்லை.அதனால் இங்கேயே என் கருத்துக்களைப் பகிர்கிறேன்.
படித்த அன்றே கிண்டிலில் ரெவியூ மற்றும் ஸ்டார் ரேட்டிங்கும் கொடுத்து விட்டேன். ஆனால் அதில் ஆங்கிலத்தில் எழுதுவது மனதிற்கு அத்தனை நிறைவாக இல்லை. தமிழில் எழுதலாம் என்று சொல்கிறார்கள் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை.
கதையைப் பற்றி...
இது உங்களின் முதல் கதை என நீங்கள் சத்தியம் செய்தாலும் நான் நம்ப மாட்டேன். எழுத்தில் அத்தனை நேர்த்தி நடையில் அத்தனை நளினம்...எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது.
ஒரு சந்தேகம்...இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்து விட்டு கதையை உருவாக்கினீர்களா...அல்லது கதையை எழுதி முடித்த பின் தலைப்பு வைத்தீர்களா...ஏனெனில் கதைக்குத் தலைப்பு அத்தனை பொருத்தம்
எளிமையான குடும்பக் கதை...ஆனால் அதிலும் சின்ன சஸ்பென்ஸ் வைத்து கதையை அழகாக நகர்த்தி இருந்தீர்கள்.
பழைய கால எழுத்தாளர் மணியன் என்று ஒருவர் 60, 70 களில் ஆனந்த விகடனில் இவரது தொடர்கதைகள் மிக ப்ரசித்தம். என் அம்மா வீட்டில் இன்றும் அந்தக் கதைகளை பைண்டிங்க் புத்தகங்களாக வைத்திருப்பார்கள்...இவர் எழுதிய இதய வீணை எம் ஜி ஆர் நடிப்பில் படமாக வந்தது. அவர் எழுவதில் ஒரு பாணியை நான் கவனித்திருக்கிறேன்...அவர் கதையில் யாருமே கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள்...ஆரம்பத்தில் கெட்டவர்கள் போல் தெரிந்தாலும் இறுதியில் அவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள்...
அதைப் போல உங்கள் கதையில் வேத நாயகி கெட்டவரா என்று பார்த்தால் இல்லை...தன் மகன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து அவர் செய்கிறார். வேல்ராஜன் கெட்டவரா என்று பார்த்தால் அவரும் தன் தமக்கை வாழ்வுக்காகவே பார்க்கிறார்... சரி வடநாட்டு வில்லி போல என நினைத்தால் கௌரி மேத்தா அநியாயத்திற்கு நல்லவராக இருக்கிறார்...மருத்துவக் கல்லூரி ரேகிங்கில் நித்ய கௌரியைப் பார்த்ததும் வந்துட்டாடா வில்லி என சந்தோஷப்பட முடியாமல் அவளும் ஜூனியர் அஸைன்மென்டுக்காக நேரம், காலம், மழையைக் கூடப் பொருட்படுத்தாது உதவி புரியும் உத்தம சிகாமணியாக இருக்கிறாள்...இப்படி எல்லோரையும் நல்லவர்களாகக் காட்டினால் நான் யாரைத்தான் திட்டுவது?
jokes apart...கதையை நான் மிகவும் ரசித்தேன். இன்னும் பல கதைகளைப் படைத்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழத்த வேண்டுமென்ற விண்ணப்பத்துடன் விடைபெறுகிறேன்
உங்கள் முதல் கதைக்கு கடைசியாகக் கருத்துக் கூறிய ஆள் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்
இருந்தாலும் last but not least என்ற நம்பிக்கையுடன்
என்றும் உங்கள் நலம் நாடும் தோழி
தூரிகா
தூரிகா மா,
இந்த ரெவ்யூ..
Last இல்லை leastம் இல்லை
எப்போது கொடுக்கப் பெற்றாலும் மழைத்துளி போன்ற வார்த்தைகள் அடி வேருக்கு உயிர் கூட்டுமே ..அது போல..
உங்களின் அன்பிற்கு ஊக்கமூட்டும் பகிர்விற்கு முதலில் நன்றி டா..
நான் எப்பொழுதும் கதை பெயர் தான் முதலில் வைப்பேன்.. இந்த கதைக்குன்னு இல்லை , இப்போ எழுதிட்டு இருக்கிற கதைக்கும் அப்படித்தான்.. அப்போது பாட்டு வரிகள் வைப்பது வழமையாக இருந்தது..
இது முதல் கதை ,எழுதலாம் என்று எண்ணம் தோன்றியதும், காரில், ஏதோ கோவிலுக்குப் போகும் போது..திடீர்னு தான் ..
ஏதோ மோகம்.. பாடல்ல இந்த வரி ஏனோ எக்கோ ஆகுற ஃபீல் அப்படித்தான்.. இந்த தலைப்பை எடுத்தேன்.
அது வனக்கிளி யா.. வண்ணக் கிளியான்னு ஒரு குழப்பம் கூட வரலை.. பெயரை தேர்ந்தெடுத்திட்டு.. அப்புறம் அது வர்றது போல நாயகன் நாயகி பெயர்கள் தேர்ந்தெடுத்தேன்.
மணியன் ஐயா கதைகள்படித்ததில்லை..டா.
எனக்கு பொதுவா யாரையும் நேர்மறை சிந்சனைகளோட அணுகித் தான் பழக்கம். அன்பா பணிவா பேசினால் எப்பேர்பட்ட மனிதனும் உயிரும் நம்மிடம் நேர் மறை பதில் விளைவுதான் காட்டுவார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.
டெரர், என்று சொல்லப் படுபவர்கள் கூட என்னிடம் நன்றாகவே பேசுவார்கள் அதற்கு இந்த அணுகுமுறை காரணமாக இருக்கலாம்.
நல்லது கெட்டது கலந்து தான் மனிதர்கள், நாம் எதைப் பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது.. என்று தர்மன் துரியோதனன் கதை வைத்து ஒரு எண்ணப்பதிவு உள்ளே இருப்பது காரணமாக இருக்கலாம்.
ரசித்து படித்து இருக்கிறீங்க என்பது புரிந்தது.. சில குறைகள் இருந்திருக்கும்.. நான் படித்த போது உணர்ந்திருக்கிறேன்.. அடுத்தடுத்த கதைகளில் திருத்த முயன்றிருக்கிறேன் .. அதற்கு எனக்கு ஊக்கமளித்த எனது வாசிப்பாளர்கள் மட்டுமே காரணம்.
இன்று வரை தொடரும் அந்த அன்பர்களுக்கும்..
அருமையான நேரத்தை எனக்காக அளித்து வழங்கிய இந்த கருத்துக் கொடைக்கு மனமார்ந்த நன்றிகள் டா மா..