Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொதுவாக ஒரு மனிதனின் இறப்பில் தான் அவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்று தெரியும். அதில், ஒருவகை மனிதர்கள் இறந்த பின்னும் வாழ்வர், இன்னொரு வகை வாழும் போதே இறந்து விடுவர். இதில் ராஜன் இரண்டாம் ரகம்.பொதுவாக ஒரு மனிதனின் இறப்பில் தான் அவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்று தெரியும். அதில், ஒருவகை மனிதர்கள் இறந்த பின்னும் வாழ்வர், இன்னொரு வகை வாழும் போதே இறந்து விடுவர். இதில் ராஜன் இரண்டாம் ரகம். இங்கு ராஜன் இறந்தது, தேவகி ஒருவரை தவிற வேறு யாரையும் பாதிக்கவில்லை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று கடந்துவிட்டார்கள்.
போற்றுவார் போற்றினாலும், தூற்றுவார் எப்போதும் தூற்றிக் கொண்டே தான் இருப்பர்.அதை கடந்து நம் வாழ்க்கையை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டியது தான் என மிக அழகாக ராணி அம்மா சொல்லிவிட்டார். தேவகி ராஜனிடம் பேசுவதற்கும், ராஜன் மக்களிடமும் தனக்கு எந்த கோபமும் இல்லை. அதே போல் எனக்கு அவர்களிடம் எந்த உரிமையும் இல்லை என அருமையாக சொல்லிவிட்டார். ஆனால் தன்னை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன் என்றும் தன் மனநிலையை தெளிவுபடுத்தி விட்டார்.
இங்கு யாரும் வலிமையாக படைக்கப்படுவதில்லை. அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதையே அவர்களை வலிமைப்படுத்துகிறது.
முற்றிலும் உண்மை, அருமையான வரிகள்
தனக்கென ஒரு உறவு வந்ததில் விஷ்ணுவின் முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது போலும். அண்ணனிடம் கூட உண்மையான காரணத்தை மறைத்து விடுகிறானோ வர்ணாவின் பொருட்டு
பள்ளிப்பருவத்தில் விஷ்ணுவை சந்தித்ததெல்லாம் இப்போது இனிமையான நினைவுகளாய் அவள் மனதில். ஆனால் அப்போதிருந்தே விஷ்ணுவை குறித்து ராணி அம்மாளிடம் மறைத்து தான் இருக்கிறாள்.
இப்போது அவன் கடைத்திறப்பு விழாவுக்கு அவள் ஆசையாய் வந்ததாய் நினைத்து மகிழ்கிறான். அவள் வந்தது அதற்கா இல்லை ராணி அம்மாளுக்கு தானும் துரோகம் இழைத்துவிட்டோம் என்னும் குற்ற உணர்வில் அவனை அவரிடம் மன்னிப்பு கோர சொல்வதற்காகவும் வந்திருக்கிறாளோ, அவளே அறிவாள்.
கவிதை வரிகளும், இணைப்பு தகவலும்
எவ்ளோ அழகான வரிகள் ரம்யா அக்கா...சூப்பர்செம்மையா சொல்லிட்டீங்க