All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன மட்டும் விட்டுட்டாங்க ஸ்ரீ 😥😥😥😥
நல்லா கேளு ஷாலு ,meeeeeee வரவர நீங்க சரியே இல்லை.உங்க பிள்ளைங்க mela உங்களுக்கு பாசமே இல்லை ☹️☹️🤷🤷🤷
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super 3 uds serththu padiththean ganamana paythivukal uravukkul ezhum chikkal kadai vegu arumai azhuththamana kadaiyaaha irukkum enna ninaikirean
superb mam aduththa pathivuiku aavaludan waiting mam(viji)

ஹாய் விஜி மா,


ஆமா உறவுகளுக்கு மத்தியில் இழையோடும் சிக்கல் தான் கதை.போக போக கதையின் காரம் குறையும். கனமும் இலகும்.

உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி விஜி மா.மிக்க நன்றி 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராணியம்மாவின் வரவிற்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்த உயிர், அவர் தன்னை காண மறுத்துவிட்டார் என விஷ்ணு கூறியபோதும் அவர் தன்னை குறித்து அப்படி கூறியிருக்க மாட்டார் என சரியாகவே கணிக்கிறது, அவ்வளவு ஆழமான நட்பு !!
மகவை ஈன்றாள் தான் தாயா !! அவனை தன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் மனதில் சுமந்த இவரும் அன்னையே ! அத்தகைய அவரின் ஆசையை நிறைவேற்ற முடியாததின் ஆதங்கம் அவர் மேலே கோபமாக வெடிக்க வைக்கிறது மகனை.. பிள்ளை கோபமெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டாகுமா.... கடைசி நிமிடங்களில் தன் மகன் எல்லா சந்தோஷத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்திவிட்டே விடைபெறுகிறார்.அவரின் கரம் அவனை வருடியதில் முகமலர்ந்து அவரிடம் தஞ்சம் புக நினைத்தவனின் மலர்ந்த முகம் கதறலாக மாறிய நிலை அந்தோ பரிதாபம் 😭😭😭

' உலகில் பிரியமானவர்கள் பக்கமிருந்தால் குறை கூட நிறையாகவே தெரியுமாம் '
அற்புதமான வரிகள் சிஸ் 👌😍

அவனிடம் சண்டையிட வந்த ஈஸ்வர் மனதினை கூட மென்மையாக்கி விடுகிறது இவனின் இரணம்.

'உணர்வுகள் உண்மையானால் எதிரியாக இருப்பவருக்கும் உதவி செய்ய முடியுமா? '

முடியும் என நிரூபித்திருக்கிறான் ஈஸ்வர். இல்லையேல் அவனுள் இருக்கும் மனிதம் அல்லவா மறித்து போயிருக்கும்.

அன்பிற்கு ஏங்கும் தேவகி ராஜனிடம் பேசுவதில் ஆச்சர்யமில்லை. 'எனக்கு என் அப்பா வேணும், இது ஒரு மகளோட கண்ணீர் உனக்கு புரியாது ' என்பதில் அவரின் ஏக்கம் அப்பட்டமாக தெரிகிறது.

கஜாவின் மரணம் ராணி பாட்டியை நிலைகுலைய செய்கிறது. தோழியை வழியனுப்ப அவர் மிதிக்க விரும்பாத வாசற்படியை கூட மிதிக்கிறார். தன் தோழியை நினைத்து அவர் பாடும் பாடல் மனதை உறுக்கிவிட்டது 😭

துக்க வீட்டில் செல்வம் தொடங்கி வைத்த குத்தல் பேச்சு, ராணி பாட்டி, ஈஸ்வர், விஷ்ணு இவர்களை மாறி மாறி பேச வைத்து, ராணி பாட்டி மற்றும் விஷ்ணுவின் மனதில் உள்ள வடுவை கீறிவிட்டுவிட்டது. அதோடு மட்டுமில்லாமல் தன் தாய் குறித்த தவறான பேச்சில் எந்த மகனுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் வயதையும் பொருட்படுத்தாமல் அவனை கை உயர்த்த வைத்து விட்டது. வர்ணா மட்டும் இடைபுகாமல் இருந்திருந்தால் அங்கே சூழல் இன்னும் மோசமாக மாறியிருக்கும். நிதானமடைந்த பின் தான் அவன் செய்ய துணிந்த காரியம் எத்தனை கீழானது என குமைகிறான்.


வலி ஒரு நொடியில்
அவனின் இயல்பை மாற்றி,
நிதானத்தை இழக்க செய்து,
அறத்தையும் மீற துணிந்ததெனில்
அந்த வலி எத்தகையதாக இருக்கும்.... !!!


நூலிழையில் அவள் இடைபுகாமல் இருந்திருந்தால் அந்த அறத்தையும் மீறி இருப்பான்.

வலிக் கொண்டு அவன்,
நேர்மையாக அவர், இடையில்
பெண்ணவள்.......

👌👌😍😍


டிஸ்லிபிடீமியா குறித்த தகவல் உடல் எடை அதிகம் உள்ளவர்களை தங்கள் உடல் நலனை குறித்து கவனம் கொள்ள வைக்கும் சிஸ் 👌😍

ரம்யா sis ❣️

//ராணியம்மாவின் வரவிற்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்த உயிர், அவர் தன்னை காண மறுத்துவிட்டார் என விஷ்ணு கூறியபோதும் அவர் தன்னை குறித்து அப்படி கூறியிருக்க மாட்டார் என சரியாகவே கணிக்கிறது, அவ்வளவு ஆழமான நட்பு !!
மகவை ஈன்றாள் தான் தாயா !! அவனை தன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் மனதில் சுமந்த இவரும் அன்னையே ! அத்தகைய அவரின் ஆசையை நிறைவேற்ற முடியாததின் ஆதங்கம் அவர் மேலே கோபமாக வெடிக்க வைக்கிறது மகனை.. பிள்ளை கோபமெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டாகுமா.... கடைசி நிமிடங்களில் தன் மகன் எல்லா சந்தோஷத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்திவிட்டே விடைபெறுகிறார்.அவரின் கரம் அவனை வருடியதில் முகமலர்ந்து அவரிடம் தஞ்சம் புக நினைத்தவனின் மலர்ந்த முகம் கதறலாக மாறிய நிலை அந்தோ பரிதாபம் 😭😭😭 //


ரொம்ப அழகா அந்த காட்சியை சுருக்கி சொல்லியிருக்கீங்க.அவ்வுணர்வுகள் உங்களை அடைந்ததில் மகிழ்ச்சி ரம்யா மா.


//' உலகில் பிரியமானவர்கள் பக்கமிருந்தால் குறை கூட நிறையாகவே தெரியுமாம் '
அற்புதமான வரிகள் சிஸ் 👌😍//

😍😍உங்களுக்கு இவ்வரி பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis 😍😍


//அவனிடம் சண்டையிட வந்த ஈஸ்வர் மனதினை கூட மென்மையாக்கி விடுகிறது இவனின் இரணம்.

'உணர்வுகள் உண்மையானால் எதிரியாக இருப்பவருக்கும் உதவி செய்ய முடியுமா? '

முடியும் என நிரூபித்திருக்கிறான் ஈஸ்வர். இல்லையேல் அவனுள் இருக்கும் மனிதம் அல்லவா மறித்து போயிருக்கும். //

மிக சரி.. எத்தனை எதிரி என்றாலும ,நியாயமானவன் என்றால் உணர்வுகள் நிறைந்த போராட்டத்தை கண்டு வெறுமனே கடந்திட முடியாது.அதிலும் ஈஷ்வரின் எண்ணங்களும் சிந்தனைகளும் அந்த குடும்பத்தை காப்பது மட்டுமே.மற்றபடி அவனுக்கே தனிகோபம் இதுவரை இல்லை..



//அன்பிற்கு ஏங்கும் தேவகி ராஜனிடம் பேசுவதில் ஆச்சர்யமில்லை. 'எனக்கு என் அப்பா வேணும், இது ஒரு மகளோட கண்ணீர் உனக்கு புரியாது ' என்பதில் அவரின் ஏக்கம் அப்பட்டமாக தெரிகிறது. //.
.
எஸ் ரம்யா sis 😍 intha புள்ளியில் தான் முடிவுறாத கணக்குகள் புதுப்பிக்கப்பட போகிறது .


//கஜாவின் மரணம் ராணி பாட்டியை நிலைகுலைய செய்கிறது. தோழியை வழியனுப்ப அவர் மிதிக்க விரும்பாத வாசற்படியை கூட மிதிக்கிறார். தன் தோழியை நினைத்து அவர் பாடும் பாடல் மனதை உறுக்கிவிட்டது 😭//

😦😦😭 உண்மையான வலிகள் வலிக்கும் போல 😭😭

//துக்க வீட்டில் செல்வம் தொடங்கி வைத்த குத்தல் பேச்சு, ராணி பாட்டி, ஈஸ்வர், விஷ்ணு இவர்களை மாறி மாறி பேச வைத்து, ராணி பாட்டி மற்றும் விஷ்ணுவின் மனதில் உள்ள வடுவை கீறிவிட்டுவிட்டது. அதோடு மட்டுமில்லாமல் தன் தாய் குறித்த தவறான பேச்சில் எந்த மகனுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் வயதையும் பொருட்படுத்தாமல் அவனை கை உயர்த்த வைத்து விட்டது. வர்ணா மட்டும் இடைபுகாமல் இருந்திருந்தால் அங்கே சூழல் இன்னும் மோசமாக மாறியிருக்கும். நிதானமடைந்த பின் தான் அவன் செய்ய துணிந்த காரியம் எத்தனை கீழானது என குமைகிறான். //

மிக தவறான விஷயம்.அதுவும் அத்தனை பெரியவரை.இந்த செயலே அவனை இன்னும் கேள்விக் கேட்கும்.அவனது எண்ணங்களுக்கும் தடையாகும்.


//வலி ஒரு நொடியில்
அவனின் இயல்பை மாற்றி,
நிதானத்தை இழக்க செய்து,
அறத்தையும் மீற துணிந்ததெனில்
அந்த வலி எத்தகையதாக இருக்கும்.... !!!


நூலிழையில் அவள் இடைபுகாமல் இருந்திருந்தால் அந்த அறத்தையும் மீறி இருப்பான். //


அறம் மீறா விட்டாலும், அந்த செயலின் தாக்கம் யார் மனதிலும் மறையாது.காயஙகளின் வடு மறையும் நாட்களே நோக்கி இக்கதையின் பணி இனி.


//வலிக் கொண்டு அவன்,
நேர்மையாக அவர், இடையில்
பெண்ணவள்.......

👌👌😍😍//

❤️❤️


//டிஸ்லிபிடீமியா குறித்த தகவல் உடல் எடை அதிகம் உள்ளவர்களை தங்கள் உடல் நலனை குறித்து கவனம் கொள்ள வைக்கும் சிஸ் 👌😍//

ஆமா sis.சாதாரணமா அவங்க உடல் நலத்தை சுய பரசோதனை செய்து பேணி வந்தாலே நீண்ட ஆரோக்யம் பெறலாம்.அது தான் இங்க மிகுந்த குறையாகி போகிறது.

மிக்க நன்றி ரம்யா sis 😍.திருத்தமான கருத்து, கதையின் உணர்வுகளை உங்களது பதிவில் கண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி 😍❣️
 
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
உறவுக்குள் துரோகம் மிகவும் கொடுமையானது சகோ அதை அனுபவித்த ராணியம்மாள் பாவம் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
 

Shalini M

Bronze Winner
நல்லா கேளு ஷாலு ,meeeeeee வரவர நீங்க சரியே இல்லை.உங்க பிள்ளைங்க mela உங்களுக்கு பாசமே இல்லை ☹☹🤷🤷🤷
ஆமா ஸ்ரீ பாசமே இல்ல 😣😣😣😣😣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
உறவுக்குள் துரோகம் மிகவும் கொடுமையானது சகோ அதை அனுபவித்த ராணியம்மாள் பாவம் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

ஆமா மா, துரோகம் எப்பொழுதும் வலிக்க செய்யும் விஷயம் தான்.ராணி மீண்டு வந்தார் அதற்கான பகுதியை இன்று பதிந்து விட்டேன் sis 😍
மிக்க நன்றி 😍❣️
 
Top