Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma
உன் ஒற்றை வார்த்தைக்காக காத்திருக்கிறேன்...
உன் நேச விழியில் கரைய காத்திருக்கிறேன்.
ஜனித்த நொடியை உன் வாயில் இருந்து ஜனிக்கும் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன்...
கேட்டு பெற இது என்ன பண்டமா...கேட்டு பெற...
உற்றவர்களை மற்றவர்களையும் மறுத்தேன்...
உன் இதய மொழியை இனிய மொழியாக எல்லோரினும் முதல் மொழியாக கேட்க காத்திருக்கிறேன்.
என்னவென்று சொல்ல...என்னை நானே கண்ணீரீலே கரைத்து காத்திருக்கிறேன்......
என் கண்ணீரையும் உன் இதயம் தரும் இதத்தில் மறந்திருக்கிறேன்...
எனினும் என்னவனே....உன் ஒற்றை
வார்த்தைக்காக.ஒற்றை வாழ்த்துக்காகா....!!!
வாசு மா
//உன் ஒற்றை வார்த்தைக்காக காத்திருக்கிறேன்...
உன் நேச விழியில் கரைய காத்திருக்கிறேன்.//
அவர்களுக்கு பொருத்தமான வார்த்தை தேர்வு..
நேசத்தில் கரைந்தாலும் அவர்கள் வார்த்தையில் எதிர்பார்ப்பது தானே பிரச்சினை...
//ஜனித்த நொடியை உன் வாயில் இருந்து ஜனிக்கும் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன்...//
இந்த வரி எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு..செம்ம சூப்பர் sis
//கேட்டு பெற இது என்ன பண்டமா...கேட்டு பெற...
உற்றவர்களை மற்றவர்களையும் மறுத்தேன்...//.
பண்டமாக இருந்தால் கூட இவர்கள் கேட்பார்கள் என்பது சந்தேகம் தான் sis..
உற்றவர்களையும் மற்றவர்களையும் மறுத்தது உண்மை தான்..ஆனால் அதில் கூட நேசத்தின் பின்னுள்ள ஆழத்தை உணராதது தான் விந்தை..
//உன் இதய மொழியை இனிய மொழியாக எல்லோரினும் முதல் மொழியாக கேட்க காத்திருக்கிறேன்.
என்னவென்று சொல்ல...என்னை நானே கண்ணீரீலே கரைத்து காத்திருக்கிறேன்......
என் கண்ணீரையும் உன் இதயம் தரும் இதத்தில் மறந்திருக்கிறேன்...
எனினும் என்னவனே....உன் ஒற்றை
வார்த்தைக்காக.ஒற்றை வாழ்த்துக்காகா....!!! //
வாவ்...எவளோ அழகா சொல்லியிருக்க..படிக்கும் போதே ,நான் எழுதியதை அப்படியே இன்னும் சிறந்த கவிதை வடிவில் படித்த உணர்வு...
உங்கள் கவிதை அருமையோஅருமை sis..உங்கள் தமிழுக்கு
மிக்க நன்றி sis