கவிதை வரிகள் மிக அருமை. ரயில்வழி பயணத்தை குறிப்பிடும் போது, அந்த இயற்கை காட்சிகளை ஒருமுறை பார்த்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்தாலே அந்த காட்சிகள் மனதில் வலம் வருமா
நினைத்தாலே இனிமையான பயணமாக தோன்றுகிறது
அந்த இயற்கை எழிலை இரசிக்காமல் இந்த கார்த்தியும் சைத்துவும் தூங்குகிறார்களே
விக்ரம் கார்த்தியை எழுப்ப தன் கைக்குட்டையை கொண்டு தும்மல் வரவைப்பது, கார்த்தி - கெளதம் சேர்ந்து விக்ரம் க்கு அதையே திரும்ப செய்வது, கடைசியில் சைத்துவை அனைவரும் சேர்ந்து எழுப்பியது என அந்த இடமே
பனியை பார்த்தவுடன் எனக்கு முதலில் செய்ய தோன்றுவது கார்த்தி - சைத்து தேர்ந்தெடுத்ததை தான். விக்ரம் - அதிதி பனியில் சறுக்கி விளையாடியது, கெளதம் - உதயா மிதிவண்டியில் பயணம் மேற்கொள்வது என அனைத்தும் அருமை. அவள் குளிருக்கு இவன் இதமாக, சரியாக வந்து சேர்ந்தார்கள் கார்த்தி, சைத்து
விக்ரம் சறுக்கி விழுந்ததை கார்த்தி கேலி செய்வது
பின் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டி வீசி விளையாடி அந்த இடத்தையே குதூகலமாக மாற்றி விட்டது
கெளதம் - உதயா இல்வாழ்வில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து விட்டார்கள். கவிதை வரிகள் கெளதம் மனதை அப்படியே உரைப்பதாக இருந்தது, அற்புதமான வரிகள் சிஸ்
இவர்கள் தாமதமாக விழிக்க, அதை வைத்து கார்த்தி போடும் சண்டை, இரசிக்க வைத்தது
சைத்துவை போல் இப்படி ட்யூப் லைட்டாக இருக்கிறானே என்றும் நினைக்க வைத்தது
ஆனால் அப்படியில்லை என்று அடுத்த நொடியே உணர்த்திவிட்டான்
விக்ரம் செம தெளிவாக நகர்ந்துவிட்டான்
ட்ரூத் ஆர் டார் விளையாட்டில், உதயா தன்னிடம் மட்டுமே ஐ லவ் யூ சொல்ல வேண்டுமென கெளதம் கொண்ட பொறாமை உணர்வால், பாவம் உதயா தான் மாட்டிக்கொண்டாள். சைத்துவை தூக்க முடியாமல் தூக்கி கடைசியில் இருவரும் கீழே விழுந்து விட்டார்கள்
பின் விக்ரம் - அதிதி இருவரும் சண்டையிட்டுக்கொள்ள, என்னடா இது
நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் உறவில் ஒரு விளையாட்டால் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்று ஒருநொடி நம்மை கதிகலங்க வைத்து விட்டீர்கள்
பின் பிறந்தநாள் முன்னிட்டு செய்த ப்ராங்க் என்றவுடன் தான் நிம்மதியானது
"சிரிப்பின் தித்திப்பிலும், கன்னம் தொட்ட
கண்ணீரின் சொர்க்க நிமிடத்திலும் " அருமை
ஐவரும் பிறந்தநாள் வாழ்த்தை ஐம்பூதங்களுக்கும் கத்தி சொன்னார்கள்
இவர்கள் இங்கு ஆனந்தமாக சுற்றி திரிகிறார்கள். அங்கு இவர்கள் தந்தை நெஞ்சை நீவி கொண்டு இருக்கிறார் என துயரத்துடன் முடித்திருப்பது வருத்தமாக இருக்கிறது
அந்த வில்லன் இவர்களை இங்கு அனுப்பிவிட்டு அங்கு என்ன செய்து வைத்தானோ
வழக்கம் போல் படங்களுடன் கூடிய இயற்கை வருணனைகளும், இணைப்பு தகவல் எல்லாம்