Ramyasridhar
Bronze Winner
கார்த்தி அவன் ஜூஸ் மட்டும் தானப்பா குடிச்சான், என்னவோ அவங்க அண்ணன்களோட ஜூஸ்ஸையும் சேர்ந்து குடிச்ச மாதிரி சொல்றீங்களே ஸ்ரீ சிஸ். அவனுக அவங்க ஆளுங்களை சைட் அடிக்க முடியும். இவன் மட்டும் அவளை சைட் அடிச்சான் அப்புறம் அவ அவனை அடிச்சிடுவான், அதான் சமத்தா ஜூஸ் குடிச்சுட்டு இருக்கான்.அவளுக்கு வேற எதோ ஸ்பெஷல்லா தந்தாங்கனு பார்த்தா, அதுக்கு போய் இந்த சைத்து இப்படி பிளாக் மெயில் பண்றாளே அவனை நல்லா மாட்டிவிட்டுட்டு இந்த கெளதம் திரும்பி கூட பார்க்காம அவன் காரியத்துல கண்ணா இருக்கான் பா. சரி அவளுக்கு திருப்பி கொடுக்க மாடிக்கு போவோம்னு போனா, அங்கேயும் இவனுக வந்து கார்த்திக்கு பல்ப் கொடுத்துட்டானுக (அண்ணங்களடா நீங்க அவனுக்கு வில்லன்கள்டாடாடாடா.... ) அந்த ஒரு போட்டோ வெச்சுகிட்டு இவ படுத்துற பாடு இருக்கே, பாவம் கார்த்தி நீ கெளதம் உங்க அத்தைக்கு நீ உதவி பண்றதா இருந்தா பண்ண வேண்டியது தானா, எப்பப்பாரு கார்த்தியை கோர்த்து விடுறதே வேலையா வெச்சிருக்க (இதை விட்டுட்டு தயா கூட எப்படி பேசுறது னு உருப்படியா யோசி ) பெற்றோர்கள் மற்றும் புதுமணப்பெண்களின் உணர்வுகளை அற்புதமாக காட்டியிருந்தீர்கள். விக்ரமின் ஊடல், அதிதியின் சீண்டல், பின் இருவருக்குமிடையில் எதுவும் நிகழாதது போல் இயல்பான நிலை என அனைத்தும் அழகு உணவு வகைகளை காட்டி நம் நாவில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள். வேனில் உதயா கெளதம் அருகில் அமராமல் அம்மாவிடம் சென்று அமர்ந்துவிட்டாள், அவள் தான் அப்படியென்றால் இவனாவது அழைத்திருக்கலாம் ( இன்னுமென்ன தயக்கம்? ஸ்ரீ சிஸ், இவர்கள் உறவை சரி படுத்துவதற்குள் நீங்கள் ஒருவழியாகி விடுவீர்கள் ) சைத்து - தலையணை வைத்தது கார்த்தி மா, உங்க அம்மா இல்லை. எப்போதும் உன் மீது அவனுக்கு அக்கறை அதிகம். அவனறையில் அவள் உறங்கவும் அவன் செய்த சேட்டை கல்யாணத்தில் திருஷ்டியாக அப்பா, இப்போது ரிசெப்ஷனுக்கு மகளா அவன் அறியா வயசுல புரியாம விளையாட்டா சொன்னா, அதுக்கு நீ எப்பம்மா வந்து பதில் சொல்ற, அதுவும் அவன் திருமண வரவேற்பில் அவன் மனைவி அருகில் ( வெரி பேட் கேர்ள் ) ஜோ விற்கு கார்த்தி கொடுத்த பதிலடி எல்லாம் செம அதிலும் அவள் விட்டுவிட்டு போனால் காலில் விழுந்து கூட்டிட்டு வருவேன்னு சொன்னான் பாருங்க - இது தான் பா எங்க கார்த்தி மனசு சைத்ரா குறித்து அவன் பேசிய ஒவ்வொன்றும் இந்த சைத்து கேட்காமல் போய்விட்டாளே என்பது தான் என் வருத்தம் சைத்ரா மட்டும் தான் எனக்கு ஸ்பெஷல் என்று சொன்னானே கார்த்தி.... அவள் அளித்த பூங்கொத்தையும் திருப்பி தந்த விதம் காதலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், காதலை உணரும் தருணம் அதன் உச்சத்தை எட்டியிருப்பேன், செம கார்த்தி நான் ஏற்கனவே சொன்னேன் தான இவன் அடி வாங்குவான்னு அதே மாதிரி தான் ஆச்சு பார்த்தீங்களா ஸ்ரீ சிஸ். அவன் அவகிட்ட பேசுனது தெரியாம இப்படி அடிச்சுட்டாளே எப்படியோ இருவர் மனதிலும் உள்ள காதல் அவள் மூலம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது. அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சமாளித்து ஓடி விட்டாள் ( கவலை படாதே கார்த்தி, எங்க போயிட போறா... கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் ) ஹலோ ஜோ, கோவத்துல பார்த்து வண்டி ஒட்டு மா, எங்கயாவது போய் மோதிட போற பீச் நிறத்திற்கு வம்மி நிறம் என்ற தமிழாக்கத்தை உங்களால் அறிந்து கொண்டேன். அனைத்து சடங்குளையும் விளக்கியது அருமை. மூன்று முடிச்சிற்கும், கெட்டி மேளம் வாசிப்பதற்கான அர்த்தம் கூறியது சிறப்பு