ராதைக்கேற்ற ராவணன்....
பேருரிமையுடையவன்.... அருமையான விளக்கம்....
இந்த சமூகத்தில் ஆண் தன்னை சில வஞ்சக பெண்ணிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்றால்.... பெண்ணோ ஆண் பெண் இருவரிடமும் தன்னை காத்துக்கொள்ள போராட வேண்டும் என்பது விக்னேஷ் மற்றும் அபிராமி தான் உதாரணம்....
தன் காதல் தோல்வி, தனக்கான வாழ்கையில் ஏமாற்றம் எல்லாம் வேறொருவர் காரணம் என எண்ணி கொடுமை செய்வதெல்லாம் அவரின் குணம் எப்படி என சிந்திக்க தொன்றும், இவருக்கு காதல் என்ற மெல்லிய உணர்வு எப்படி வந்தது என்பது தான் ஆச்சரியம்.... இவரின் தவறை அழகாக சரி செய்த சிவசங்கரனுகாவது நேர்மையக இருந்து இருக்கலாம்.
பெண்ணின் நிலை தான் பரிதாபத்திற்கு உரியது....பெண் அரண்டு , பயந்து கட்டுபடும் அவலம் என்பது அவள் மானம் தான் என்பது இங்கேயும் உறுதியாகிறது....பெற்ற தாய் துரோகியாக இருக்கும் இந்த சூழலில் வேற எதுவும் பேச இயலாது....
தன்னை காத்துக்கொள்ள அவள் பேசிய வார்த்தைகளை கொண்டு தொடங்கிய கதை களம் பழி பழி என உறுமிய நாயகனை காதல் காதல் என பிதற்ற வைத்து அவளுக்காக எதையும் செய்ய துணியும் மனம் வந்து அவளை காத்து நி்கும் அரனாக மாறிய காதலனாக மாறும் இந்த கிருஷ்னார்ஜூன் தான் கதை களம்....
நாயகியை காக்க அவள் கணவனிடமே போராடும் அவள் மித்ரனாக எந்த சூழலிலும் அவளை கை விடாது தோள் கொடுத்த கண்ணனின் நட்பை புரிந்து கொள்ளும் இடத்தில் இந்த ஹீரோ score பண்ணறான்...
தன் தங்கைக்கு நீதி வழங்கிய போது அவன் பால் காதலால் வழுக்கியது ராதையின் நெஞ்சம்.... கணவனுக்கு நியாயம் செய்ய துடிக்கும் அவள் குற்றவுணர்வை காதலாக மாற்ற அவன் செய்தது பெண்ணுக்கு மரியாதையை அது அவளை அவனிடத்தில் வீழ்த்தியது தான் உண்மை....
பெரியவர்கள செய்யும் பிழை அவர்கள் பிள்ளைகள் வாழ்க்கையை பதம் பார்க்க அதை வலியோடு கடந்து வரும் இந்த கதையின் ஹீரோ ஹீரோயின் தங்கள் காதலை அதில் செதுக்கு கொள்வது தான் அழகு...
பாண்டியன் தன் மனதின் அழகால் காதலை ஜெயித்தான் என்றால், மணி மாறன் தன் நட்பால் காதலை உயர்த்தினான்....
புரிதல் என்பதும் ,விட்டுக்கொடுத்தல் என்பதும் , காத்திருப்பதும்,காதலின் சிறப்பு என்பதை ராதிகாவின் காதல் உறுதிப்படுத்துகிறது....
கதையில் காதல் மட்டும் அல்ல நட்பு, விஸ்வாசம், புரிதல், காத்திருப்பு,குடும்பம் என எல்லாம் நிறைந்து உங்கள் ஸ்டைலில் கதையை தந்து எங்களை மகிழ்ச்சி படுத்துட்டிங்க ஶ்ரீமா.... வாழ்த்துக்கள்....
பழி என ஆற்பறித்தான்...
காதலில்லை என இறுமாத்திருந்தான்...
உணர்வுகளை மீட்டெடுக்க போரிட்டான்...
உறவுகளை பகைத்திருந்தான்....
நட்பிடமும் மறைத்திருந்தான்...
சமூகத்தின் நாயகனாகினான்
பத்தினியிடம் ராவணனகி எள்ளி நகையாடினான்...
அவள் குற்றவுணர்வில் குன்றிபோனான்...
நாளேட்டின் பக்கங்களில் அவளுக்காய் வருந்தினான்...
அவளுக்காய் அவளாகவே அவனான்...
அவள் மனதில் ராமனாகியவளை ஆராதித்தான்...
பெண்ணின் காதல் அவனை கொண்டாட
ஆணின் காதல் அவளை மரியாதை செய்ய
ராதைக்கான இந்த அர்ஜூனன் என்றும்
கிருஷ்னார்ஜூன்னாக ....
இந்த ராவணனுக்கேற்ற ராதை இவளே என்று அவளை கொண்டாடும் காதல் கணவன்.......