All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அனைத்து ஜோடிகளையும் சேர்ந்த பிறகு கிருஷின் சதிராட்டம் ஆரம்பமான பதிவு..

பாண்டியனின் காத்திருந்த கலகலப்பான காதலை சரிதா புரிந்து அவளே அவனுக்கு ஏற்றார் போல் அடி எடுத்து வைத்து புரிய வைத்து மன்னிப்பையும் யாசித்து இருவரும் வாழ்க்கையை அழகாக ஆரம்பித்தது அழகு...

கண்ணன் தன் மென்மையான ரசிப்புத்தன்மையான அன்பில் ராது கலங்கி மனம் நொந்து இருக்கும் போது எதையுமே அவளிடம் விசாரிக்காமல் அவனுடைய அன்பையும் ஆறுதலையும் அவள் தனக்குரியவள் என்பதை காட்டிய விதம் அழகோ அழகு..

ராதுவின் தந்தை அவள் தாய் மேல் வைத்த காதல் அற்புதமானது.. அவர் ஆழமான காதல் பிரம்பிக்க வைக்கிறது... இறப்பினில் ஒன்று சேர்ந்து இவர்கள் அல்லவோ ஆத்மார்த்தமான காதலர்கள் என்று ஆச்சரியப்பட வைத்தவர்கள்... அற்புதம் ஸ்ரீ மேம்...

மணி தம்பதியினர் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைத்து இப்போதும் இச்செய்தியை தன் நண்பனான கிருஷ்ற்கே முதலில் தெரிவித்து இருவரும் நண்பர்கள் என்பதை தாண்டிய உறவு என்று நிரூபித்து அனைவரிடமும் வாழ்த்து பெற்று.. மகிழ்ச்சி ஒன்றே அவன் வாழ்வில் இனி...

ராதைக்கு குழந்தை வேண்டும் என்பதற்கு காரணம் கிருஷிற்காக... ஆனால் கிருஷிற்கு குழந்தை வேண்டாம் என்பதற்கு காரணம் அவள் காலைப் பற்றிய கவலையா? அளவற்ற அன்பின் முன் அனைவரும் மழலை ஆகி விடுகிறோம்... அற்புதமான காதலன் நம் கிருஷ்...

அனுவின் அம்மா, மாமா மற்றும் அத்தை கைதாகி விட்டார்களா? சொத்து ஏமாற்று, அறிவு கடத்தி கொலை முயற்சி என்று மூன்று குற்றங்கள்... கிருஷ் தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான்... ராதையின் இதற்கான எதிர் வினை என்ன? இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் தோன்றி பிரிய முற்படுவாளா? இல்லை அவளை கடத்தி வந்த நாட்களிலிருந்து கிருஷின் செயல்பாடுகளையும் அவன் வாரி வழங்கிய காதலையும் அன்பையும் அனுசரணையும் நினைத்து யோசித்து அவனுக்கு பக்கபலமாய் இருப்பாளா?

கவிதை வரிகள் அபாரம் ஸ்ரீ மேம்.. நிஜம் தான் கடத்தி வந்த போது ராவணனாகவும், பழைய திருமண நாளிலேயே மறுபடியும் ராதைக்கு தாலி கட்டி அவள் மட்டுமே மனைவி என்ற போது இராமனாகவும், ராதை மேல் காட்டிய எல்லையில்லா காதல் பத்மநாபனாகவும், தன் இலக்கே குறி என்று நினைக்கும் வீரனான அர்ஜூனனாகவும் மொத்ததில் எங்கள் அனைவரின் மனதையும் அள்ளி விட்டான் நம் கிருஷ்ணார்ஜூன்...

அசத்தலான பதிவு ஸ்ரீ மேம்..

வாழ்த்துக்கள்..


Shanthi akka eppadi irukeenga.. ennai naabagam irukirathaa?
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ மாம் எப்படி இருக்கீங்க???

நெடு நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்து திரிக்கு வருகிறேன். பாதி கதை நான் வாசிக்க வந்தால் அதற்குள் கதை எடுத்து விடுவீர்கள். இப்போது தான் கதை வாசிக்க முடிந்தது. நல்ல வேளை.

தலைப்புக்கு ஏற்ற கதை நடை. உங்கள் கதையில் கண்ணை மூடி கொண்டு நம்ம ஹீரோ வை நம்பலாம். எப்போதும் நாங்கள் ஹீரோ ஆர்மி தான்.

வாழ்த்துக்கள்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் நன்றாக இருக்கிறேன் மதி.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்களை எல்லாம் மறக்க முடியுமா?


Marakkamal irupathe periya santhosam. Naan nandraaga irukiren akka.
 
Top