All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
சூப்பர் ud சசி கா.
இந்த நிர்மலாவை சரியான இடத்தில் தான் கொண்டு வந்து இருக்கீங்க......
இதுங்க ரெண்டும் ரெண்டு அகப்பை..... ரெண்டும் கழண்ட அகப்பை..... இப்போதைக்கு ராமும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்ல மாட்டான். ஆத்மியும் கல்யாணத்திற்கு சரி னு சொல்ல மாட்டாள்.
இடையில் ranveer வந்தது சரி தான்......
ஆனால் ஷப்னம்க்கு மட்டும் ராமை கேக்கட்டும் இந்த நிர்மலா.......நாங்களே வச்சு செஞ்சுடுவோம்...... நிர்மலாவை இல்லை...... உங்களை 🤭🤭

Then, app ல எப்போவும் ஒவ்வொரு uds போதும் நோட்டிபிகேஷன் வந்துடும். இந்த ud க்கு தான் நோட்டிபிகேஷன் எதுவும் வரலை கா.

நன்றி அம்மு :)
ஹா ஹா வர போற எபி படிச்சிட்டு வச்சு செய்ங்க 😉😉😉. அப்ல இன்னும் எபி அப்லோட் பண்ணலை. காலையில் இருந்து லேப்டாப் எடுக்கு முடியலை. இனி தான் போடணும்.
 

ஶ்ரீகலா

Administrator
அருமையான பதிவு ஶ்ரீமா..
இப்ப ராமை நினைக்க ஏனோ பாவமாக உள்ளது..
இந்த நிர்மலாக்கு என்ன வேண்டுமாம் தொழில் முறை போட்டிக்காக ஒரு திருமணம் அதுவும் ராமை பழிவாங்க..

இப்போது கடைசியில் பாதிக்க படுவது ஆத்மி மட்டுமே..

நன்றி கீர்த்தனா :)
ராம் பாவமான்னு போக போக தெரியும் 😜😜😜
 

ஶ்ரீகலா

Administrator
இந்த கொய்யாக்கா மண்டையனுக்கு ஓவர் குசும்பு தான் மேம் 🤭.. அதென்ன எப்போ பார்த்தாலும் செகண்ட் ஹீரோ டம்மியாவே இருக்கான் 🤷‍♀️.. ஹன்சா அக்கா படிச்சா வருத்தப்பட போறாங்க.. ஆவூன்னா இந்த ஹீரோ எல்லாரும் செகண்ட் ஹீரோ தொழில் மேல கை வைச்சிடுறாய்ங்க😏.. ராம் ஆத்மியை ரொம்ப சாதாரணமா எடை போடுறானா மேம்!? அவன் தத்தின்னு சொல்றது அழகா தான் இருக்கு.. ரசிக்கும்படியாகவும் இருக்கு 🤩.. ஆனால், சில நேரங்களில் அது அவளை மட்டம் தட்டுற மாதிரியும் இருக்கே.. இது தப்பு 😤.. உடல் ஏத்துக்கிட்டதை உள்ளம் ஏத்துக்கணும்னு வியாக்கியானமா சொல்லத் தெரியுதே.. அவன் அவளை மனசார ஏத்துக்கிட்டானா முதல்ல? ஆளும் மூஞ்சியும் 🤧.. ஏதோ காலுக்கு செருப்பெல்லாம் போட்டு விட்டதால மன்னிக்கிறேன் 😶.

ஐஸ்கிரீம் சீனெல்லாம் செம்ம மேம் 😉.. ஆத்மி அப்படி பேசுனதை ராமால் தாங்கிக்க முடியல தானே 🤭.. ரெண்டு பேரோட அன்பும் அவ்வளவு க்யூட்டா இருக்கு மேம் 💞.. என்ன ஒண்ணு அந்த அன்பை ராமின் பணவெறி ஓவர்டேக் பண்ணும் போது தான் எரிச்சல் வருது.. அவன் ஆத்மி ஆத்மினு ஆத்மி பின்னாடி சுத்துறதுக்கு வெயிட்டிங் 🙊.. ராம் காதல் பண்ணா எப்படி இருக்கும்னு படிக்க வெயிட்டிங் 😍😍.

இந்த நிர்மலா ஏன் இப்படி குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கு!? ஒருவேளை ராம் இந்த கல்யாணத்தை எப்படியும் நிறுத்திடுவான்.. அப்போ, ஷப்னத்தை கல்யாணப் பொண்ணா மாத்திடலாம்னு ப்ளான் பண்ணி பண்ணுதா அந்த அம்மா? அந்த அம்மாக்கு தான் அறிவில்லைன்னா ரன்வீர் உனக்கு ஏன்பா புத்தி புல்மேய போகுது? ராம் கொஞ்சம் மர கழண்ட கேஸூ.. ஆத்மி விரல்ல மோதிரம் போட்டதுக்காக உன் கையையே வெட்டினாலும் வெட்டிடுவான்.. புரிஞ்சுக்கோ பொழச்சுக்கோ 🤷‍♀️

நன்றி நிலா :)
ஹா ஹா நீங்க கவுண்டமணி சிஷ்யையா? கொய்யாக்கா மண்டையன் 😂😂😂 என்ன செய்ய சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி கதையில் செகண்ட் ஹீரோ இல்லை... கோட் போட்டுட்டு வந்து ரெண்டு டயலாக் பேச மட்டுமே உரிமை இருக்கு. ஹீரோயினை உரிமை கொண்டாட இல்லை. அவனது பணவெறி மறையும் போது அவள் மீதான அன்பு புரியும். அது எப்போ நடக்கும்ன்னு எனக்கு தெரியலை... ராம் காதல் பண்ணினால், ரொம்ப டெரரா இருக்குமோ 😉😉😉🙈🙈🙈 ஹா ஹா ராம் நீதிமன்றம் இனி தான் தவறு செய்தவர்களுக்கு தண்டனையை தீர்மானிக்கும். வெயிட் பண்ணுங்க.
 

ஶ்ரீகலா

Administrator
Ram இன்னும் ஆத்மி மேல உள்ள காதல இன்னும் புறின்சுகளா ஆத்மிக்கு ரொம்ப மோசமான situation எப்படி இதுல இருந்து வெளிய வரபோரங்க ud சூப்பர்

நன்றி இந்துமதி :)
 
Top