இந்த கொய்யாக்கா மண்டையனுக்கு ஓவர் குசும்பு தான் மேம்
.. அதென்ன எப்போ பார்த்தாலும் செகண்ட் ஹீரோ டம்மியாவே இருக்கான்
.. ஹன்சா அக்கா படிச்சா வருத்தப்பட போறாங்க.. ஆவூன்னா இந்த ஹீரோ எல்லாரும் செகண்ட் ஹீரோ தொழில் மேல கை வைச்சிடுறாய்ங்க
.. ராம் ஆத்மியை ரொம்ப சாதாரணமா எடை போடுறானா மேம்!? அவன் தத்தின்னு சொல்றது அழகா தான் இருக்கு.. ரசிக்கும்படியாகவும் இருக்கு
.. ஆனால், சில நேரங்களில் அது அவளை மட்டம் தட்டுற மாதிரியும் இருக்கே.. இது தப்பு
.. உடல் ஏத்துக்கிட்டதை உள்ளம் ஏத்துக்கணும்னு வியாக்கியானமா சொல்லத் தெரியுதே.. அவன் அவளை மனசார ஏத்துக்கிட்டானா முதல்ல? ஆளும் மூஞ்சியும்
.. ஏதோ காலுக்கு செருப்பெல்லாம் போட்டு விட்டதால மன்னிக்கிறேன்
.
ஐஸ்கிரீம் சீனெல்லாம் செம்ம மேம்
.. ஆத்மி அப்படி பேசுனதை ராமால் தாங்கிக்க முடியல தானே
.. ரெண்டு பேரோட அன்பும் அவ்வளவு க்யூட்டா இருக்கு மேம்
.. என்ன ஒண்ணு அந்த அன்பை ராமின் பணவெறி ஓவர்டேக் பண்ணும் போது தான் எரிச்சல் வருது.. அவன் ஆத்மி ஆத்மினு ஆத்மி பின்னாடி சுத்துறதுக்கு வெயிட்டிங்
.. ராம் காதல் பண்ணா எப்படி இருக்கும்னு படிக்க வெயிட்டிங்
.
இந்த நிர்மலா ஏன் இப்படி குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கு!? ஒருவேளை ராம் இந்த கல்யாணத்தை எப்படியும் நிறுத்திடுவான்.. அப்போ, ஷப்னத்தை கல்யாணப் பொண்ணா மாத்திடலாம்னு ப்ளான் பண்ணி பண்ணுதா அந்த அம்மா? அந்த அம்மாக்கு தான் அறிவில்லைன்னா ரன்வீர் உனக்கு ஏன்பா புத்தி புல்மேய போகுது? ராம் கொஞ்சம் மர கழண்ட கேஸூ.. ஆத்மி விரல்ல மோதிரம் போட்டதுக்காக உன் கையையே வெட்டினாலும் வெட்டிடுவான்.. புரிஞ்சுக்கோ பொழச்சுக்கோ