Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
துரோகத்தின் பழி என்று
உரிமையை மீட்கப் போராட்டமோ...?
மன்னவனே!
உன்னவள் என்று உணர்ந்திருந்தால்
உயிர் போலக் காத்திருப்பாயே?
உணராமல் போன காலத்தில்
உயிர் குடித்த துரோகம்!
உணர்ந்து போன காலத்தில்
உயிர் குடித்த ரோகம்!
மோகமும் தாகமும்
கண்ணை மறைத்தாலும்
கருத்தை மறைக்காத கண்ணியம்!
பெண்ணவள் கண்ணில் கருத்தாய்
சின்னவள் உன்னில் உருத்தாய்
அன்னவள் தன்னில் நிலைத்தாய்!
காதலின் நேர்மையில்
காத்திருக்கும் கன்னியவள்,
மோதலின் பார்வையில்
பூத்திருக்கும் பெண்மையவள்,
உன்...
கூதலின் கூர்மையில்
கூடாகிப் போவாளோ...?
அக்கினிப் பரீட்சைக்கு
சீதை அவள் துணிந்து விட்டால்...
கைபிடிக்க ராமனாய்...
அவன் வருவானோ...?
ஆனால்...
ஏகபத்தினி விரதனின்
நேர் நின்ற நல்லாட்சியே...
பத்தினி அவள் பதிவிரதை
என்று நம்பாத உலகில்...
சித்தினி இவளுக்கு...
சிலை வடிக்குமா...?
நேர் கொண்ட பார்வையில்
சீர் கண்ட நேர்மையில்
வீறு கொண்ட வார்த்தைகள்
வீரியம் கொண்டால்...
அவன் ராமனே!
நேர் கொண்ட பார்வையில்
சீர் கண்ட நேர்மையில்
வீறு கொண்ட காதல்கள்
காரியம் வென்றால்...
அவள் சீதையே!
புண்பட்ட தத்துவத்தில் ஆண்
பண்பட்ட பக்குவத்தில் பெண்
கண்பட்ட மகத்துவத்தில் நாம்! - ஆம்
காதலில் பெண்
காவலில் ஆண்
காரிருளில் நின்றாலும்
நிலவு அவள் ஒளியில்
தன்னிறைவாய் அவன்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
இனிய தோழி,
துரோகத்தின் பழி என்று
உரிமையை மீட்கப் போராட்டமோ...?
மன்னவனே!
உன்னவள் என்று உணர்ந்திருந்தால்
உயிர் போலக் காத்திருப்பாயே?
உணராமல் போன காலத்தில்
உயிர் குடித்த துரோகம்!
உணர்ந்து போன காலத்தில்
உயிர் குடித்த ரோகம்!
மோகமும் தாகமும்
கண்ணை மறைத்தாலும்
கருத்தை மறைக்காத கண்ணியம்!
பெண்ணவள் கண்ணில் கருத்தாய்
சின்னவள் உன்னில் உருத்தாய்
அன்னவள் தன்னில் நிலைத்தாய்!
காதலின் நேர்மையில்
காத்திருக்கும் கன்னியவள்,
மோதலின் பார்வையில்
பூத்திருக்கும் பெண்மையவள்,
உன்...
கூதலின் கூர்மையில்
கூடாகிப் போவாளோ...?
அக்கினிப் பரீட்சைக்கு
சீதை அவள் துணிந்து விட்டால்...
கைபிடிக்க ராமனாய்...
அவன் வருவானோ...?
ஆனால்...
ஏகபத்தினி விரதனின்
நேர் நின்ற நல்லாட்சியே...
பத்தினி அவள் பதிவிரதை
என்று நம்பாத உலகில்...
சித்தினி இவளுக்கு...
சிலை வடிக்குமா...?
நேர் கொண்ட பார்வையில்
சீர் கண்ட நேர்மையில்
வீறு கொண்ட வார்த்தைகள்
வீரியம் கொண்டால்...
அவன் ராமனே!
நேர் கொண்ட பார்வையில்
சீர் கண்ட நேர்மையில்
வீறு கொண்ட காதல்கள்
காரியம் வென்றால்...
அவள் சீதையே!
புண்பட்ட தத்துவத்தில் ஆண்
பண்பட்ட பக்குவத்தில் பெண்
கண்பட்ட மகத்துவத்தில் நாம்! - ஆம்
காதலில் பெண்
காவலில் ஆண்
காரிருளில் நின்றாலும்
நிலவு அவள் ஒளியில்
தன்னிறைவாய் அவன்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
Last edited: