All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

சீர்கெட்ட வாழ்விலும்
நேர்பட்ட வாழ்வு தேடும்
அவள்...!

செய்திட்ட துரோகம்
சிந்தையைத் தூண்ட
விட்டுப்போன பந்தம்
விடுவிக்குமோ அந்தம்!

பேர்கெட்ட வாழ்விலும்
சீர்பட்ட வாழ்வு தேடும்
அவன்...!

மெய்கெட்ட துரோகம்
சிந்தையைத் தீண்ட
பட்டுப்போன சொந்தம்
படமெடுக்குமோ நிந்தம்!

பதினாறு வயது பருவ மொட்டு
புதிதாய் உதித்த வண்ணச்சிட்டு!
படபடக்கும் மூச்சில்
பரவசம் தொட்டு
பாழாக நின்றதோ
பாசம் கெட்டு!
தட்டிக் கேட்டால்
எட்டிப் போகும் வயது -இது
கட்டிப் போட்டால்
வெட்டிப் போனதோ...?

ஊருக்குள் உல்லாசி!
கூட்டுக்குள் விசுவாசி! - அவன்
வீட்டுக்குள் சன்யாசி!

நட்பின் மேன்மையில்
நாளும் உயிர்ப்பவன்,
நற்கதி இல்லா
நாதியற்ற வாழ்வில்...
நரகாசூரனாய்...
நானிலம் எரிப்பவன்...!
கல்லுக்குள் ஈரமாய்...
தாய்க்குத் தலைமகன்
தாய்மையைக் காப்பவன்
தாளாத சோகத்தில்
வீழாத ஆண்மகன்!

துரோகத்தின் ரோகத்தில்
ஆரோகணம் செய்யும் மனங்கள்! - இது
அமரஞ்சலின் ஆத்மார்த்த ராகங்கள்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

 

Subasini

Well-known member
அமரஞ்சலி...

செம யுடி ஸ்ரீ மா...
நீங்க ஸ்லீப்பர் செல் நிருப்பித்த யுடி.. இந்த டைம் சீலிப்பர் செல் வேலை யாருக்கு எப்பது தான் அழகே 😂😂😂😂

ஹீரோயினுக்கு எதிரான இந்த வேலை நினைச்சு சிரிச்சுட்டேன்...😂😂😂

ஆனா இந்த சிவாரிகா அப்படிங்கற கதையில் நீங்க தந்தது நான் இன்னும் மறக்கல ஸ்ரீ மா அதுனால உங்க மேல் உள்ள நம்பிக்கையில் இதோ என் பணியை இனிதே தொடருகின்றேன்😂😂😂

16 வயது... அழகான பருவம் சரி என்பது தவறாகவும், தவறு என்பது சரியாகவும் படும் வயது....

இதை புரிந்தால் தவறிழைக்கும் பிள்ளையை தண்டிக்காமல் கண்டித்து வழி நடத்துவாள் தாய்....

கண்டித்து நல்ல வழியை காட்டி அதில கூட பயணிப்பான் தந்தை...
இங்கு இரண்டு பேரும் தடம் புரண்ட தடங்கள் தான்...

என்ன இருந்த போதும் அவன் பெற்றோர் இடத்தில் இல்லாமல் 16வயதொத்த பெண்ணிற்கு நெற்றியில் அல்லாது பரிசு தந்த இடத்தில் முத்தம் பதித்து அவன் யாரென்று பதிய வைக்க முயன்ற உறவு...

இந்த உறவின் பின் வரும் எந்த நன்மையும் உணர முடியாத வயது தான் அவளுடைது என்ற போதும் ,அவள் தவறானவள் என நினைப்பது தவறு என்று கூறிக்கொள்ள கடமை பட்டு இருக்கேன்...

இந்த நிலையிலும் அவள் தன் தவறை ஏற்று மனதில் வருந்துகிறாள் என்றாள் அவள் மனதின் அழகை தான் ரசிக்க தோன்றுகிறது...

பெண்ணின் போதையை கடந்து வர அவன் பல பெண்ணிடம் போய் மன பிறழ முடியாமல் தவிப்பதால் அவன் சிறந்தவன் நல்லவன் என்றாகி வலம் வரவேண்டாம்...

நல்ல அன்னைக்கு பிறந்த இவன் நற்பண்புகள் எல்லாம் களைந்தவனை எதிர்காலத்தில் அவன் தவறுகள் முன் வந்து கேள்வி கேட்கும்போது ,தினரும் இந்த அமரேந்திரனை படிக்க மீ வெயிட்டிங்....

தவறானவனை காதலிக்கும் தங்கையை கண்டிக்காமல் அவன் தீயவன் என்று சொல்லி அவனை அழிக்கும் இவனை என்ன என்று நினைக்க தோன்றுகிறது... தங்கையை கண்டிததாலும்கேட்க மாட்டாள் ஏன்னென்றால் அவள் வயது அப்படி அப்படி தானே இந்த ஆண் மனம் நியாயம் கற்பிக்கும் 😂😂😂

கோபம்,பழி, எல்லாம் அடுத்த வீட்டு பெண்மேல் தான் போலும் ஏன்னெனில் அவன் நாயகன் 😂😂...

அவன் அம்மா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
மிஸ்டர் அமரேந்தர் நீங்களும் உங்க அம்மாவும் மோதும் காட்சி பார்க்க வெயிட்டிங் 😂😂😂

வேற லெவல் ஸ்ரீ மா சூப்பர் யுடி ❤❤❤
 

TM Priya

Well-known member
சூப்பர் மா...அமர் நல்லவன் தான் போல....அஞ்சலி தான் அவனுக்கு ஏதோ நம்பிக்கை துரோகம் பண்ணியிருக்க..அதுல சூர்யபிரகாஷ்ம் சம்மந்தப்பட்டிருக்கானா மா....ஷர்மி அவ அண்ணாவை ஓவரா பேசுற...அமர் ஓட அம்மா பத்மினி நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க போல..சூப்பர் கேரக்டர்..வெய்ட்டிங் ஃபார் அப்கம்மிங் அப்டேட்ஸ் மா..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode..... அஞ்சலி face cream ah paaru da appo அமர் இன்னும் avanodaya product ku இன்னும் ava per தான் vechi இருக்கான்..... Eppadi ivanga rendu perukum samantham..... Avanoda iruukum பொது தேவை இல்லமல் avan mela avvallavu kovaththai காட்டி இருக்கா......avanum ava kita avvallavu பொறுமை ah avan kuzhanthai maari thaan treat panni இருக்கான்.... Enna துரோகம் panninaa.... Avanuku பயந்து தான் இப்படி இருக்காளா.... அந்த watch ⌚ அவனுடைய gift ah athu thaan avvallavu pathiramaa vechi இருக்கா...... அவன் அம்மா ஏன் avanga குடும்பத்தை விட்டுட்டு vanthutaanga தனியா asharam vechi நடத்துறாங்க போல avangala paakka vanthu இருக்கான்.... அவன் அம்மா mela எவ்வளவு பாசம்..... Avanuku avangaloda ve irunthu டனும் nu இருக்கு.... Super Super mam
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நாயகன் நாயகி இருவரின் தவிப்பான உணர்வுகளை படம் பிடித்து காட்டிய பதிவு...

சுமை தாங்கியான அஞ்சலி தான் சம்பாதிக்கும் சொற்ப சம்பளத்தையும் வீட்டிற்காகவே செலவழித்து அவர்கள் மகிழ்ச்சியில் தன் நிறைவை காண்கிறாள்... அவள் பேரிலேயே பொருட்கள் இப்பவும் விற்பனையாகி கொண்டுள்ளது... அந்த ஷேம்புவை கண்டு தடவி மன்னிப்பு கேட்பதும் அவன் கட்டிய கை கடிகாரத்தை வருடி பழையவற்றை நினைத்து கண்ணீர் விடுவதும் பெரியதாக அமருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாளோ? ஓடி ஒளித்து கொண்டுள்ள அஞ்சலியை விரைவில் அமரிடம் வரவழைக்க செயல்கள் தீவிரமாக உள்ளதோ? துரோகத்திற்கு துரோகமே பதில் என்றால் அது தன்னலமற்ற அன்பில் மனசாட்சி கேலி கூத்தாகி விடாதோ?

அமர் வந்த பெண்ணை விரட்டி அஞ்சலியை நினைப்பது அஞ்சலி அதே நேரத்தில் அங்கே அவனை நினைத்து கொண்டிருப்பதாளா?

பார்த்து செய்யுங்க ஸ்ரீ மேம் இரண்டு பேருமே வருத்தப்படுவது மனதிற்கு கஷ்டமாக உள்ளது...

அமர் தங்கை ஷர்மி சூர்யாவை விரும்புகிறாள்... அது அவனுக்கு தெரியுமா? ஆனால் ஷர்மி அஞ்சலி கனியை பிச்சைக்காரர்கள் என்றது இந்த பணம் படைத்தவர்களை திருத்தவே முடியாதா? தங்கைக்கு கொடுத்த பதிலடி அதிரடி...

நிஜம் தான் அமர் அம்மாவான பத்மினியின் இரத்தம் அவன் உடம்பில் ஓடுவதால் மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ளவர்களுடன் அமர் எளிமையாக பழகவும் உதவி செய்யவும் முடிந்தது.. எவ்வளவு பெரிய பிசினஸ் மேனாக இருந்தாலும் தன் அன்னைக்கு சிறு குழந்தையே... அமர் தந்தையும் சரியில்லாதவர் போல... அமரின் வாழ்க்கை முறை அமர் அன்னை க்கு தெரிந்தால் அமரை வெறுத்து விடுவார்களோ இல்லை இதற்கான காரண காரியங்களை அலசி திருத்த முயல்வார்களோ?

காத்திருக்கிறோம் நிறைய கேள்விகளின் பதிலை எதிர் நோக்கி...
 

Banumathi Balachandran

Well-known member
அவனை நினைத்து அவளும் அவளை நினைத்து அவனும் வேறு வேறு கோணத்தில்

செய்த துரோகத்துக்கு வருந்தும் அவள் அதற்காக பலிவாங்க நினைக்கும் அவன்
 
Top