All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
அருமை அருமை.... திட்டலில் ஆரம்பித்து கைதட்டலில் முடிக்க வைத்து விட்டான் அமர்... 😍😍👌👌👌

காவ்யாஞ்சலி பார்த்திருக்கேன்.... புஷ்பாஞ்சலி பார்த்திருக்கேன்.... கீதாஞ்சலி கூட பார்த்திருக்கேன்.....
முதன் முறையாக உங்கள் கைவண்ணத்தில் அமரஞ்சலி.... 💥💥💥💥

வட்டத்துக்கு வெளியே இருந்து பார்க்கும் போது அமர் கெட்டவன்... அவர்களது காதல் வட்டத்தினுள் சென்று பார்த்தால் அவனை போல் நல்லவனில்லை... 😍😍😍😍

அமரஞ்சலியின் சுக்கானே அமர் தான்... 👌👌❤❤❤

ஆனால் ஒன்னு mam... இனிமேல் உங்களை நம்பி யாரையும் support பண்ண மாட்டேன்... 😭😭😭😭
எப்போ நல்லவனை கெட்டவனா காட்டுவீங்க... கெட்டவனை நல்லவனா காட்டுவீங்க னு தெரியாது... 🤣🤣🤣🤣

ஆனாலும் personally அமரஞ்சலியுடனான பயணம் அருமையாக இருந்தது... 😍😍😍😍
 

Srisuri

Bronze Winner
Hi sri mam 😍😍

Iru manamgal enainthaal pothum atharku thadaikal illai yendru entha kathaiyil moolam thaangal azhagaaga unarthi viteergal🥳🥳...

Anjali vaitha pulliyal Amar pala chikkalana sathigalai yethir kondu pala valaivu suzhivugalil thikku mukkadi mudivil oru azhagaana kolamaaga ooruvaakiya entha Amaranjali ku en 🙏🙏🙏🙏🙏🙏

Ungalin adutha kaithai Athmaragam kaaga aavaludan kaathu ullorgalil nanum oruthi 🙈🙈🙈
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்?

ஆத்மார்த்தமான காதலை கண்டு மெய் சிலிர்த்து அமர் அஞ்சலியை விட்டு பிரிய மனமில்லாமல் நிதர்சனத்தை புரிந்து மனதை சமாதானப்படுத்தினாலும் முடியாமல் மனதில் அவர்கள் காதலை நினைத்து நினைத்து மகிழ்ந்த காவியம்... அற்புதமான ஆத்மார்த்தமான காதல் காவியம்.. மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் ஸ்ரீ மேம்... என்ன சொல்ல? எப்படி சொல்ல?

அமர் முதலில் அஞ்சலியை பழி வாங்குவதாக அறிமுகமாகி அவளின் தவிப்போடு கூடிய காதலில் அந்த பழி வெறியை தள்ளி வைக்க... ஒரு கட்டத்தில் அவள் பெண்மையை சூறையாட நினைக்க அவள் தவித்த தவிப்பில் தன்னை கண்டான்... இந்த இடத்தில் அமரோட பெண்கள் சவகாசத்தால் அவன் கதறி அழுதது அவன் அஞ்சலியை பழி வாங்க என்ற சொல்லே அடிப்பட்டு காணாமல் போய் விட்டது... மஹிமாவின் துரோகத்தை தாங்க முடியாமல் அழும் அமரை அஞ்சலி தன்னையே கொடுத்து அரவணைக்க... அன்றிலிருந்து அவள் இல்லையெனில் அவன் இல்லை என்று ஆத்மார்த்த காதலர்கள் ஆகி அதற்கு பரிசாக ஆத்மிகா... தன் நோயை மறைத்த அஞ்சலி பிரசவத்தில் அனைத்தையும் மறக்க தன் முதல் குழந்தையையும் தன் குழந்தையையும் தாயுமானவனாய் தாங்கி அமர் பட்ட வேதனை சொல்லிலடங்கா... சஞ்சய் செய்த சதியால் அமரை அஞ்சலி பிரிய மறுபடியும் அவளிடம் வரவழைக்க அமர் பட்ட துன்பம்.. தன் குழந்தை ஆத்மிகாவை அவன் கவனித்து கொண்ட விதம்... அப்பப்பா! எங்களுக்கும் இது போல் தந்தை இல்லையே என்று ஏங்க வைத்து விட்டான்...

அஞ்சலி மறுபடியும் அவனிடம் வந்த பிறகும் விதி சதி செய்ய அனைத்தையும் மறந்த அஞ்சலியின் நினைவில் தன் இரு குழந்தைகள் மட்டும் அச்சில் ஏற்றது போல்... அஞ்சலி அமர் காதலைப்பற்றி என்ன சொல்ல? எங்கும் காதல்... எதிலும் காதல்.. அஞ்சலி தன் நினைவை இழந்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று அவள் இல்லையேல் தான் இல்லை என்று ஆத்மிகாவிற்கு அப்போதே சொத்துகள் பிரிந்து எழுதி... அபாரம் ஸ்ரீ மேம்... அமரஞ்சலியாகிய இருவரும் காலத்தால் எங்கள் நினைவில் அமரராகிய காவியம்...

அஞ்சலியைப்பற்றி என்ன சொல்ல? பதினெண் வயதில் அமருக்கு தான் செய்த துரோகத்தால் மனம் நொந்து அவள் கனவையே உதறி தன் எளிமையான வாழ்க்கைக்கு செல்ல... அமரால் அவனிடம் வரவழைக்கப்பட்ட அஞ்சலி அவன் மேல் உள்ள காதலில் கசிந்துருகினாலும் அவன் பழி வாங்கும் செயலை தெரிந்து கொண்டதால் தன் தன்மானம் காக்க அமரிடம் தன் காதலை மறைக்க.. மஹிமா செய்த துரோகத்தால் தவிக்கும் அமரை அரவணைத்து தன்னையே கொடுக்கும் அஞ்சலி... உரிமையில்லாத உறவு என்றாலும் அவர்கள் இருவரின் ஆத்மார்த்தமான காதலால் அவ்வுறவு அங்கீகரிக்கப்பட்டு அக்காதலை எங்களுள் ஊற்றி ரசிக்க வைத்து உணர வைத்து மெய் சிலிர்க்க வைத்து... அற்புதம் ஸ்ரீ மேம்.. நினைவுகள் மறந்தாலும் இந்தரை மறக்காமல் தன் காதலால் அவனை திக்கு முக்காட செய்து.. அப்பப்பா! அப்பட்டமான காதல் காவியம் எங்கும் எதிலும்... தன் நெற்றியிலிருந்து அவன் நெற்றிக்கு பரிமாறப்படும் குங்குமம் எங்கள் மனதில் எப்போதும்...

அமர் அஞ்சலியாகவும் அஞ்சலி அமராகவும் மாறி தன் மனைவிக்கு கொடுத்த அங்கீகாரம் இருக்கே மிஸ்டர்.அஞ்சலியாய் மாறிய தருணம்.. பெண்மையை போற்றி தன் மனைவிக்கு அவள் கனவினை நிஜமாக்கிய அமர்...
அற்புதமானவன்...

சஞ்சய் மஹிமா ராம்குமார் மற்றும் மிருதுளாவை போல் கீழ்தரமானவர்கள் உலகத்தில் உண்டா என நினைக்க வைத்தவர்கள்... அவர்கள் மனம் போல் அவர்களுக்கான முடிவும்...

பத்மினி அவள் கணவனால் பட்ட வேதனை எப்பெண்ணிற்கும் வர கூடாதது...

ஷர்மிளா சூர்யா தம்பதியினர் அஞ்சலி அமர் வாழ்க்கை சீராகியவுடன் தங்கள் குற்றவுணர்வும் கலைந்து ஆத்மார்த்தமான ஜோடிகளாயினர்...

கனி அசோக் ஜோடி அற்புதமான தம்பதிகள்... கனி அசோக்ஐ பால்வாடி என கிண்டல் செய்வதும் அவன் செய்யும் குறும்புகளுக்கு தலையில் கொட்டுவதும் இருந்தாலும் அசோக் தன் காதலால் கனியை தன்னையே மறக்க செய்து அவனை என்றும் தன்னையே நினைக்க வைத்து...

நிஜம் தான் ஸ்ரீ மேம் இக்காவியத்தில் எங்கும் எதிலும் காதல் சார்ந்த ஆழ்மார்த்தான உறவு மட்டுமே... இல்லை இல்லை ஆத்மார்த்தமான காதல் மட்டுமே..

அபாரமான படைப்பு தங்கள் பாணியில் அற்புதமாய் ஸ்ரீ மேம்... எங்கள் மனதில் இக்காவியம் நீக்கமற நிறைய செய்து விட்டீர்கள்... அற்புதம்... வாழ்த்துக்கள்... நன்றி.
 

Lakshmivijay

Well-known member
அருமையான அழகான காதல் காவியம் ஸ்ரீமா :love::love:😘😘😘😘😘
அமர் அஞ்சலி ரெண்டு பேரின் காதல் அழகு 🥰🥰🥰🥰🥰
 
Top