All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Hi Srikala Mam,

Enna solla epdi solla eppavum pola unga sory super oh super. appapppa enna oru kadhal amar odadhu.. konjam emotianal ah azhla vechitinga. kadhal ah uruga vechitingah, unarvugala pul arikka vechitingah..arumaioh arumai ana kadhai...
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் மேடம்,

அமர காவியம் என்று ஒரு பதிலில் குறிப்பிட்டிருந்தீர்கள்...அமரஞ்சலி காவியம் என்றால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்...உண்மையில் இந்தக் கதை ஒரு காவியம்தான். 👌👌👌

காதலில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அவரவர் காதலை அடுத்தவருக்குப் புரியவைத்து மற்றவர் காதலில் கரைந்து என இருவருமே ஸ்கோர் செய்து விடுகிறார்கள்.👏👏👏

அஞ்சலி...கதை ஆரம்பிக்கவும் எனக்கு அவள் ஒரு தொடர்கதை நாயகி சுஜாதாதான் ஞாபகத்திற்கு வந்தார்...அந்தப் படத்தில் வயதுப் பெண் என்று சொல்லி இருந்தாலும் சுஜாதாவின் முகத்தில் ஒரு முதிர்ச்சி தென்படும்...ஆனால் ராஷ்மிகாவை அஞ்சலியாகக் கற்பனை செய்து பார்க்கையில் குருவி தலையில் பனங்காயா என்று தோன்றியது...அத்தனை சின்னப் பெண் வரிசையாக எத்தனை துயரங்களை அனுபவிக்கிறாள் எனும் போது என்னையறியாமல் கண்கள் கசிந்து விட்டன. 😭😭😭

eclampsia பற்றிப் படித்திருந்தாலும் ஏதோ தெரிந்த ஒரு பெண் அந்தப் ப்ரச்சனையால் கஷ்டப்படுவது போல் படிக்கும் போது மனம் வருந்தியது...அதுவும் ஒரு பெண் தன் குழந்தை தொடர்பான நினைவுகளை இழப்பது என்பது கொடுமையிலும் பெரிய கொடுமை...நினைவுகளை இழந்தாலும் நனவாக அமர் இருந்து அவளைக் காப்பாற்றுகிறான் என்பது பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.🙂🙂🙂

அமரேந்தர்...அஞ்சலிக்கு சமமாக இவனும் துயரங்களை அனுபவிக்கிறான்...அதுவும் காதலாகிக் கசிந்துருகிய மனைவிக்கு அந்த நினைவுகள் மறந்து போவது என்பது அவளை விட அவள் கணவனுக்கு வார்த்தைகளால் விவரிக்க இயலாத தண்டனை...ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தன்னலம் கருதாது தன்னவளின் நலம் மட்டுமே கருதும் கண்ணாளன் கிடைத்தது அஞ்சலி செய்த பேறு...hats off amar

மகிமா போன்ற ஜென்மங்கள் குறித்துப் பேசுவதே பெரும்பாவம்🤐🤐🤐

ஆத்மிகாவும் ராம் ராகவேந்தரும் அடுத்த கதையில் தொடர்கிறார்கள்...சூப்பர் மேம்...வர வர உங்கள் கதைத் தலைப்புக்கள் எல்லாம் வேற...வேற லெவெல் மேம்.😍😍😍🥰🥰🥰

மனதை உருக்கிய கதை...அல்ல...காவியம் படைத்தற்கு நன்றி மேம்🙏🙏🙏

அமரும் அஞ்சலியும் என்றென்றும் நீங்காது நெஞ்சில் நிறைந்திருப்பார்கள்:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12


:smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1:
 

Sriraj

New member
ஹாய் ஸ்ரீமா,


ஸ்ரீகலாவின் அமரஞ்சலி

நாயகன் - அமரேந்தர்
நாயகி - அஞ்சலி


என்ன சொல்ல இவர்களைப் பற்றி வார்த்தைகள் கோர்க்க முடியாமல் வியந்து நிற்கிறேன்.இவ்வளவு அழகிய கதைக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐


அமரேந்தர் - இந்திரனாகிய அமரன். தாயுமானவனாகிய காதலன். அதீத அன்பும் - அரவணைப்பும் காட்டும் பாசமிகு சுந்தரன். உடையவளுக்கு சுவாசமாகிய அன்பன்.🥰

அஞ்சலி - வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவள். அன்பின் பேரு உவகை கொண்டவள். அதீத காதலுக்கு கட்டுப்பட்டவள். உடையவனுக்கு யாதுமாகிய சித்திர பாவை.🥰


அழகிய அழுத்தமான காதல் கதை.😊


🌹🌹அமரஞ்சலி🌹🌹

பழிவெறி போல் தொடங்கிய காதல்
ஆத்மார்த்த அன்பில் நெகிழ்ந்த காதல்...💞

துரோங்களால் வீழ்ந்த காதல்
தூய நேயத்தால் விழித்த காதல்...💞

தவிப்பால் ஆன காதல்
அரவணைப்பால் நிறைந்த காதல்...💞

மருந்தாக மாறிய காதல்
ரணங்கள் ஆறிட உதவிய காதல்...🥰


காதலை காதலால் வென்ற காதல்...
நானே நீயாய் மாறிய காதல்...
நீயே நானாய் மாறிய காதல்...💞💞

வலிகள் உணர்ந்த காதல்
வலிமையாய் மாறிய காதல்...💞

விதியை வென்ற காதல்...
உயிராய் நின்ற காதல்...💞

புறம் தோற்று
அகம் நிறைந்து
ஆண்மா நுழைந்து
உயிர் தீண்டி அன்பின் உயிர்மெய்யாய் மாறிய ஆக பெரும் அமரக் காதலே அமரஞ்சலியின் காதல் காவியம்...💞💞🌹🌹


அழகிய காவியத்தை அழகாய் கொடுத்த உங்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்....🌹🌹💐💐


மேலும் பல கதைகள் எழுதிட அன்பு வாழ்த்துக்கள்....💐💐


அன்புடன்
ஸ்ரீராஜ்

 

ஶ்ரீகலா

Administrator
Pls mam consider my request I want to read amar anjali story. kindly upload the story mam
Mam,comment pathu story padikkanum asaiya irukku.link kidaikkuma pls consider my request

Amazon la irukku…


 

Swathi85

Member
Hello sis story nalla interesting ah irukudu,☺️👏👏👏👏yen nirirhiteenga?? Re-run polaruku..but I'm new comer to the site .na ipo dan first time padikkaren..pls sis remaining episodes podunga
 
Top