#அமரஞ்சலி
நிறைய இடங்களில் நான் திரும்ப திரும்ப பயன்படுத்திய வார்த்தை தான். பேரழகு
. கதையை ஒரே வார்த்தையில் சொல்ல வேற வார்த்தை கண்டிப்பா நம்ம தமிழில் இருக்கும்(ஆனா எனக்குத் தெரியாதே
). அஞ்சலியின் விழுதா படிச்சிட்டு இருந்த என்னை அமரின் அடிமையா மாற்றிய கதை
. அஞ்சலியின் ஆரம்பகால தைரியம், அவளுடைய வறுமை, வறுமையிலும் அவள் கடைபிடிக்கும் கொள்கை இதெல்லாம் பார்த்து உண்மையா அவளுக்கு விசிறியா தான் மாறிட்டேன் நான்
. யெஸ், அமருக்கு அவ துரோகம் பண்ணிட்டா தான். ஆனால், அஞ்சலியின் துரோகத்தை கூட நான் ஏத்துக்கிட்டேன். ஆனால், அமரின் பெண் சகவாசம் பத்தியும் அவனது பார்வையில் பெண்களுக்கு இருந்த மதிப்பையும் பார்த்து சத்தியமா செம்ம காண்டாகிட்டேன்
. அஞ்சலி பண்ண துரோகத்துக்காக அவன் வழி தவறி போனதை என்னால ஏத்துக்க முடியல
. அதேபோல ஒட்டுமொத்தமா அவன் பெண்கள்னு முத்திரை குத்துனதையும் என்னால ஏத்துக்க முடியல
.. அப்போலாம் விளையாட்டா கலாய்க்கிறது என்பதையும் தாண்டி அமர் கிட்ட இதெல்லாம் எனக்கு ஏத்துக்கவே முடியாத விஷயங்கள்
. பத்மினி நல்லவங்க.. கனி நல்லவ.. ஆனா உலகத்துல மத்த பொண்ணுங்க எல்லாம் கெட்டவங்க.. இந்த லாஜிக் அவன் சொல்றப்போ எல்லாம் அப்படியே எரிச்சலா வரும்
. இந்த தலைமுறையில்(இருபாலரும் தான்) நான் வெறுக்கும் ஒரு மனப்பான்மை அது. தன் வீட்டுப் பெண்களும் ஆண்களும் மட்டும் நல்லவர்கள்.. மற்ற எல்லாருமே சுயநலத்தின் உருவம்னு சிலபல மேதாவிகள் சொல்றப்போ எரிச்சலா வரும். அதோட பிம்பமா தான் அமர் எனக்கு தெரிஞ்சான்
. அதிலும் அஞ்சலியின் துரோகத்தால் தான் அவனது வாழ்க்கை பயணம் மாறிச்சுன்னு சொல்றப்போ எல்லாம் ஒரு நக்கல் சிரிப்பு, சிலநேரம் காது மேலயே ஒண்ணு போடுற அளவு எரிச்சல் தான் வரும்
. தன் தலையில் தானே மண்ணை அள்ளி வாரி போட்டுட்டு ரோட்டில் போற ஒருத்தியைக் கை காட்டுற மாதிரியான மனநிலைனு எல்லாம் கூட நினைச்சிருக்கேன். அதேசமயம் அஞ்சலியை பழிவாங்கும் அவனது முயற்சி எனக்கு ஓகேவா தான் இருந்துச்சு. அவளால அவன் பாதிக்கப்பட்டிருக்கான். மறப்போம் மன்னிப்போம்னு போடானு கண்டிப்பா சொல்ல முடியாது. ஆனால் என்ன அதுக்கு தேர்ந்தெடுத்த வழியும் எனக்குப் பிடிக்கல
. ஸ்விம் சூட் சீனெல்லாம் எனக்கு உச்சகட்ட ஆத்திரத்தை வரவைச்ச சீன்
.. சரியான சைக்கோனு நான் திட்டிய இடங்கள் அதெல்லாம்
. அஞ்சலியின் சூழ்நிலையையும் அவளது சுயநலமான உறவுகளையும் அமர் நல்லா யூஸ் பண்ணிக்கிறானு தான் தோனிச்சு. பொறுப்பே இல்லாத அம்மா, சுயநலத்தின் உருவமா அப்பா, அம்மா, அண்ணன், அக்கா இவங்களுக்கு நடுவில் அருணாவையும் தருணையும் பார்த்துக்கொள்ள அவள் போராடும் போராட்டம் உண்மையாவே அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு
. அதிலும் ஒரு சீன்ல பிரியாணி வாங்கிட்டு வந்துட்டு தம்பி, தங்கை, அம்மாவுக்கு மட்டும் கொடுப்பாளே.. அது எல்லாம் பக்கா மிடில் கிளாஸ் சீன்
. அஞ்சலி ஃபேஸ் க்ரீம் பாக்கெட்டை தடவி கண்ணீரோட "சாரி"னு சொல்றது, அப்புறம் சூர்யா வந்தப்போ ரெஸ்ட் ரூம்ல போய் உட்கார்ந்து அமரை நினைச்சு அழுறது, அப்புறம் அவ அப்பா அடகு வைச்ச வாட்சை மீட்குற சீன் இது எல்லாமே அஞ்சலியின் குற்றவுணர்வையும் அமரின் மீதான காதலையும் சேர்த்தே நமக்கு புரிய வைச்ச இடங்கள்
. அடுத்து அவன் பிரான்ஸ் கூட்டிட்டு போனது அங்கே லூசு மாதிரி நடந்தது எல்லாம் பத்தி எனக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல
.. செய்யுறதை எல்லாம் செஞ்சுட்டு மழை பெய்ஞ்சா அதுக்கு காரணம் அஞ்சலி, வெயில் அடிச்சா அதுக்கு காரணம் அஞ்சலினு பினாத்திட்டு அவளை வார்த்தையால் வதைக்கிறது எல்லாம் கோமாளித்தனத்தின் உச்சகட்டம்னு தான் தோனுச்சு
.. செஞ்ச தப்பை உணர்ந்து கிட்டத்தட்ட அன்றாட வாழ்க்கையை நடத்தவே செத்து பிழைக்கிற ஒருத்தி கிட்ட வந்து பழி வலினு பன்ச் பேசுறது எனக்குப் பிடிக்கல
.. செத்த பாம்பை அடிச்சுட்டு ஹீரோ நான்னு சாகசம் பேசுற மாதிரி தான் இருந்துச்சு. அவனை எப்படி ஹீரோவா ஏத்துக்க முடியும்
.. அதிலும் அஞ்சலி கிட்ட அவன் நடந்துகிட்ட முறையெல்லாம் பார்த்து பதறிட்டேன் தான். அவ வேற அமரை லவ் பண்ணிட்டு இருக்கா.. இந்த நேரத்தில் இவன் பழிவாங்குறேனு தொட்டால் அதை அவளால ஜீரணிக்க முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்சிருக்காது
. முதல் நாள் ஆறுதலா அவ அவன் மேல சாய்ஞ்சதுல தொடங்கி, கிச்சன்ல சூர்யா கூட வீடியோ காலில் பேசுறப்போ கிஸ் பண்ணது வரைக்கும் எல்லாமே அவன் மார்க் மைனஸ்ல போன இடங்கள்
. அதிலும் அந்த கடற்கரை சீன்ல நாலைஞ்சு பொறுக்கி பசங்க கிட்ட இருந்து காப்பாத்திட்டு அமர் நடந்துக்கிட்ட விதமெல்லாம் வொர்ஸ்ட்டு
. ப்யூர் வில்லன் மெட்டீரியல்.. டீனா கூட வெளியே போய்ட்டு வந்து எல்லாத்துக்கும் நீ தான் காரணம்னு பேசுனது எல்லாம் "உனக்கென்ன பா.. நீ பைத்தியம்.. என்ன வேணும்னாலும் பேசுவ" அப்படினு சொல்லிக்கிற அளவுக்கு இருந்துச்சு
. இவரு டீனா கூட போவாராம்.. ஆனா அஞ்சலி சஞ்சய் கிட்ட நட்பா கூட சிரிச்சு பேசக் கூடாதாம். பேசுனா கிளிஞ்சல் பொறுக்க விட்டு டார்ச்சர் பண்ணுவாராம்.. என்ன நியாயம் இதுன்னு கடுப்புகள் தான் வந்துச்சு
. அப்புறம் கனிஷ்காவின் வருகை
.. கதை அப்போ போய்ட்டு இருந்த ஃப்லோல ரொம்ப ஆறுதலான இடம்
. அரக்கன் கிட்ட இருந்து அஞ்சலி தப்பிச்சா அப்பாடானு ஆசுவாசம் தந்த இடமும் கூட
.. அப்படியும் அந்த அமர் பையன் அஞ்சலியை தண்ணில தள்ளி கொலை பண்ண பார்த்தான் தான்
.. அதை மறக்க முடியாது.. கல்நெஞ்சக்காரன்.. வித்தை காட்டுறேனு சொல்லி வீம்பு பிடிச்சவன் நினைச்ச மாதிரியே அஞ்சலியை பக்கத்துல வர வைச்சுட்டான். அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாம அவளைப் பக்கத்துல வர வைக்க அவன் தண்ணில தள்ளி விட்டதெல்லாம் படிச்சப்போ கதைக்குள்ளேயே போய் பளார் பளார்னு அறைய தோனுச்சு
. இடியட்
. ஒவ்வொரு இடத்துலயும் வேலைக்காரி தானேனு குத்தல் வேற
.. அவனுக்காக அஞ்சலி உருகும் போது கோபமா வந்தாலும் காதலுக்காக எந்த இடத்திலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காம அவ நிமிர்ந்து நின்னது உண்மையா மாஸ்
. இப்படிலாம் நான் அமர் மேல செம்ம காண்டுல சுத்திட்டு இருந்த டைம்ல கதை அப்படியே மாறிடுச்சு
. அதிலும் ஒரு இடத்துல சார் கெத்தா தலையை பிடிச்சு விடலைனா என் கண்ணைப் பார்த்துட்டு நில்லுன்னு சொல்லுவாரு.. கடைசியில் அஞ்சலியோட காதல் பார்வையைத் தாங்க முடியாம சார் தான் பல்பு வாங்கி போய்த் தொலைனு கத்துவாரு
.. அதெல்லாம் சிரிச்சுட்டே படிச்ச இடங்கள். அமர் ஸ்கோர் பண்ண ஸ்டார்ட் பண்ணிய இடமும் கூட ❤. அமரின் பிறந்தநாள் இன்னொரு திருப்பம். அவன் நிலை எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரக் கூடாத நிலை. அந்த இடத்தில் அஞ்சலியின் செய்கை நிச்சயமா நான் எதிர்பார்க்கலை.. அமர் மேல இவளுக்கு இவ்வளவு காதலானு ஆச்சரியமா இருந்தது. தன்னைக் கொடுத்து தன்னவனை மீட்பதெல்லாம் புதிய விஷயம் இல்லை தான். ஆனால், இதில் என்னை ஈர்த்த விஷயம், ஒண்ணு அஞ்சலி காதலிச்சாலும் அவளுடைய கொள்கையில் உறுதியாக இருந்தா.. அதில இருந்து அவ இறங்கி வர்றதா இருந்தா அமரின் மீதான அவளது காதல் எத்தனை ஆழமா இருந்திருக்கும்? ரெண்டாவது, அவங்க உறவு. கொஞ்சம் சறுக்கினாலும் அந்த இடம் அருவெறுப்பை தந்திருக்கும். ஆனால், அதை அவ்வளவு அழகா மேம் எழுதியிருந்தாங்க. அவன் வலிக்காக அவள் கதறும் இடங்களெல்லாம் அப்படியொரு அழுத்தம். அமரின் நிலையை அமரை விட அஞ்சலியின் கண்ணீர் தான என்கிட்ட ஆழமா பதிச்சதுன்னு நான் சொல்லுவேன். அடுத்தடுத்து அவள் அமருக்காக செய்த காரியங்களும் அப்படித்தான். எந்த இடத்திலும் தன் காயத்திற்காக தன் மனவேதனைக்காக பார்க்காமல் அமரின் மனநிலையை மட்டுமே யோசித்து அவன் முகம் பார்த்து நடந்துக்கிட்டது எல்லாம் வேற லெவல்
. சொல்லப்படாத நேசம் உணரப்பட்டு மொட்டு விட்டிருந்த சமயம் நான் நிறைய இடங்களை ரசிச்சேன். இந்தர்னு அவள் பெயர் சொல்லி கூப்பிட வந்தப்போ அமர் இப்போ வேணாம்னு சொன்னது, கார்ல கையில் எழுதுற சீன், பார்க்கில் ரொமான்ஸ் சீனை அஞ்சலி வேடிக்கை பார்க்கிறது அப்புறம் குழந்தைகள் கூட விளையாடியது, அப்புறம் கனி கல்யாணத்துக்கு புடவை எடுத்து கொடுக்கிற சீன், கோவில்ல குங்குமம் வைச்சு மனைவியா அங்கீகரிக்கிற சீன், அதன் பிறகான அவங்க மௌனம் இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம். அமர் அஞ்சலியை சீண்டுறதாக இருக்கட்டும் அவள் அவனிடம் திமிராகப் பேசுவதாக இருக்கட்டும் எல்லாமே சான்ஸ்லெஸ் தான். போட்டில் ஏறுறதுக்கு முன்பாக தூக்கிட்டு ஏறுனதுலாம் அவ்வளவு க்யூட். எல்லாமே நல்லா போய்ட்டு இருந்தது. ஒரு ஏழரை வந்து நீ அப்பா ஆகப் போறன்னு சொல்ற வரைக்கும்
.. அமரின் ஒட்டுமொத்த வலிக்கும் அஞ்சலி வலி நிவாரணி ஆகிய அழகான தருணம் அது
. அதுவும் மஹிமா கிட்ட சொல்லிட்டே அதை செஞ்சது பக்கா
.. அமரை மஹிமா கொடுத்த வலியிலிருந்து காப்பாற்ற அஞ்சலி தன்னையே கொடுக்கிறதும், மஹிமா கிட்ட இருந்து அஞ்சலியைக் காப்பாற்ற அமர் கண்கொத்திப் பாம்பாக அஞ்சலியை கவனிச்சபடியும் அவளுக்கு ஆதரவாவும் இருந்ததும் அவ்வளவு அழகு
. முதல் பகுதி முடியுற வரைக்குமே அஞ்சலியின் நிமிர்வு, அஞ்சலியின் காதல்னு அஞ்சலி மட்டுமே என்னை பிரமிக்க வைச்சா
.. யெஸ், அமரையும் நான் ரசிச்சேன் தான். அதுவும் கூட அஞ்சலியால் தான் (அப்போ). அமரின் வலிகளைச் சொன்னதில் அவனை விட அஞ்சலியின் கண்ணீருக்கு தான் பங்கு அதிகம்
. தனக்கு ஒன்று என்கையில் நிமிர்வாய் நிற்பவள், மஹிமா வந்து அத்தனை இளக்காரமாய் பேசிய போது கூட அதை ஒரு பொருட்டா மதிக்காமல் இருந்தவள் இந்த கதையில் அமருக்காக மட்டும் தான் அழுதிருக்கிறாள்
. கிட்டத்தட்ட முதல் பாக முடிவு தான் அமர் ஸ்கோர் பண்ண ஸ்டார்ட் பண்ணிட இடம். அடுத்து எல்லாமே அவனுக்கு ஏறுமுகம் தான். வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனையும் வலியும் மாற்றி மாற்றி வந்தாலும் அஞ்சலி மீதான அவன் காதல் நாளுக்கு நாள் அவனைப் பார்த்து பிரமிக்க வைச்சது தான் நிஜம். இரண்டாவது பார்ட்டில் அமரை அமருக்காக மட்டுமே பிடிக்க ஆரம்பிச்சது
. முதல் பிரிவின் போதுலாம் அஞ்சலியை ஊட்டியில் விட்டுட்டு கிளம்புறப்போ சிரிச்சுட்டே அழுதிருப்பான். அவனுக்காக அப்போ பரிதாபப்பட ஆரம்பிச்ச மனசு.. இரண்டாவது பார்ட் முடியுற வரை தொடர்ந்திடுச்சு
. சரி தற்காலிக பிரிவு தானேனு ஆறுதல் பட்டா வைச்சாங்க பாரு ஆப்பு அஞ்சலிக்கு அம்னீசியானு
.. அமருக்காக குரூப்பே இரத்தக்கண்ணீர் விட்ட பகுதி அதெல்லாம்.. அதிலும் அமரை விரோதியா அவள் பார்த்தது, சஞ்சய் கூட சுத்துனது இதெல்லாம் பார்த்து என்னடா இதுன்னு ஆகிடுச்சு
.. இங்குட்டு அமர் என்னடான்னா ஆத்மி கூட ஆனந்த யாழை மீட்டுகிறாய்னு பாட்டு பாடிட்டு இருக்கான்
. டேய் என்னடா நடக்குதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டா கடைசியில் சார் வழக்கம் போல தான் ஒரு ப்ளானிங் கிங் என்று நிரூபித்து சஞ்சயை தூக்கிட்டு அஞ்சலியின் மனசுல ஜம்முன்னு உட்கார்ந்துட்டான். அதிலும் ஆத்மி அந்த வயர்ஸை தொடுற சீனெல்லாம் என்னைப் பொருத்தவரை எவர்கிரீன் சீன்
.. ஆத்மியையும் சமாதானப்படுத்தி அஞ்சலியையும் சமாதானப்படுத்தி வேற லெவல்ல ஸ்கோர் பண்ணிட்டான். அஞ்சலியின் அமர் மீதான நம்பிக்கையும், அமரின் அஞ்சலி மீதான காதலும் தன் உச்சத்தைக் காட்டி கவர்ந்த பகுதி தான் அஞ்சலியின் அம்னீசியா பகுதி
. ஆத்மியின் அழுகை, அஞ்சலியின் முயற்சி, அடுத்து அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது இதிலெல்லாம் அஞ்சலி தான் ஸ்கோர் பண்ணுனா
.. அது பொறுக்காம அமர் ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. பொண்டாட்டிக்கு ஒரு அப்ளிகேஷனே டெவலப் பண்ணிக் கொடுத்து, அவளை திரும்ப மாடலிங் துறையில் உள் நுழைவித்த வரை எல்லாமே பார்த்து பார்த்து செய்து செம்மையா கவர்ந்துட்டான் ❤. எல்லாமே நல்லதா நடந்தா எப்படி? அமர் பிறந்தநாளில் மஹிமா என்றால் ஆத்மி பிறந்தநாளில் மிருதுளா
.. அஞ்சலியை மீண்டும் படுத்த படுக்கையில் தள்ளிடுச்சு
. அந்த இடத்தில் கூட அமர் இதை எப்படி தாங்குவான்னு தான் நான் மட்டுமல்ல பலரும் நினைச்சிருப்போம். அங்கே தெரியுது அவர்களின் காதலின் ஆழம்
. அஞ்சலிக்கு என்ன தான் ஆச்சுன்னு வர்ற ஃப்ளாஷ்பேக் முழுசா அமரஞ்சலியின் காதல் தான்
. ஆனால் அதையும் முழுசா என்ஜாய் பண்ண விடாமல் அஞ்சலியின் நோயைப் பற்றி சில சில க்ளூ கொடுத்து நம்மை படபடப்போடவே வைச்சிருந்தாங்க மேம்
.. அமர் ஒருத்தன் தான் நல்லா என்ஜாய் பண்ணியிருப்பான். பிறந்தநாளுக்கு வந்தது தொடங்கி அவன் பரிசு, அவள் பரிசு, அவளுடைய அதீத காதல் இப்படி எல்லாமே க்யூட்டு க்யூட்டு க்யூட்டு
.. காதல் எந்த அளவு இருந்ததோ அதே அளவு வலியும்
.. அமரின் கடந்தகாலம் பத்தி சொல்ற எபியெல்லாம், முன்னாடி நான் எதுக்காக எல்லாம் அமரைத் திட்டினேனோ அதையெல்லாம் ஒண்ணுமே இல்லாம பண்ணிடுச்சு.. உணர்வுகள் கலக்காம உடல் சங்கிமிக்கிற இடத்தில் அமரின் வேதனை எல்லாம்
.. அழுகையே வந்திடுச்சு
.. அதையெல்லாம் கடந்தும் அஞ்சலியைக் காயப்படுத்த நினைக்காம கனியை வரவைச்சது இதெல்லாம் ஜென்டில்மேன்னு சொல்ல வைச்சது
.. அமரை விட பத்மினி அம்மாவின் நிலை கொடுமை. அமருக்கு அஞ்சலி கிடைச்சுட்டா.. ஆனா அவங்களுக்கு? வாழ்க்கை இவ்வளவு தூரம் அவங்களை சபிச்சிருக்க வேணாம்
. அடுத்து பிரசவம் அப்போ நடக்குற ஹாஸ்பிடல் சீனெல்லாம் ஒருமாதிரி எமோஷனல்+க்யூட் சீன்ஸ் தான். நீ இல்லாத உலகத்தை நான் எப்படி பார்ப்பேன். என் வாழ்வும் சாவும் உன் கையில் தான் இருக்குன்னு சொல்றதுலாம் நெகிழ வைச்சிடுச்சு
. அமரை எந்த அளவுக்கு நான் திட்டினேனோ அதைவிட அதிகமா புகழ வைச்சிட்டாங்க மேம்
. அஞ்சலியின் இரண்டாவது மறுபிறவியிலும் அப்படியே.. நீ பிழைச்சு வந்து எனக்கு உயிர் பிச்சை போடுன்னு கேட்குறதெல்லாம் மெல்ட்டிங்
. ஆத்மி அஞ்சலியை எழுப்பும் காட்சியும் அப்படியே தான். அஞ்சலியின் அம்னீசியா இரண்டாவது தடவையா அவங்க வாழ்க்கைக்கு நன்மை செஞ்சிருக்கு
.. முதலில் அந்த சஞ்சய் ஏற்றிய விஷத்தை மறந்தது, அடுத்ததா மிருதுளா ஏற்றிய விஷத்தை மறந்தது.. இந்த இரண்டு விஷயங்கள் நடந்ததுக்காகவே இந்த நோயை அஞ்சலிக்கு கொடுத்த ஸ்ரீ மேமை மன்னிச்சுடலாம்
. வரிசையா கஷ்டம் மட்டுமே கொடுத்து போரடிச்சதால் என்னவோ மேம் மனசு இறங்கிட்டாங்க போல
.. அஞ்சலியின் மாடலிங் கனவை நிறைவேற்றி அவளுக்காக படம் பண்ணி.. ப்பாஆஆஆ வேற வேற மாதிரி
.. கடைசி எபி வரை அஞ்சலி மாறவே இல்லை.. அப்போ இருந்த மாதிரியே கடைசி வரை அமரின் முகம் பார்த்து நடந்துக்கிறதெல்லாம் மாஸ்
.. கோவில்ல மணியடிக்கிற சீன், ஆத்மி கிண்டல் பண்ற சீன் எல்லாமே செம்ம சூப்பர்
.. லாஸ்ட் மூனு எபியும் வலியில்லாத காதல் கொடுத்ததுக்கு மிக்க நன்றி மேம்
.. ரொம்ப சூப்பரா இருந்தது. மேடையில் சொன்ன டயலாக் எல்லாம் பெஸ்ட் ஒன்
. அஞ்சலிக்காக அமராகலாம்.. அமருக்காக அஞ்சலியாகலாம்
. . செம்ம லைன் மேம்
.. ஒரேயொரு டவுட்.. அந்த ராம் ராகவேந்தர் யாருன்னு மட்டும் சொல்லிடுங்கோ