All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Bigboss_1995

Well-known member
ஸ்பீச்லெஸ் ஶ்ரீ மேம்🤩🤩🤩🤩🤩🤩

அச்சோ என்ன எழுத்து!!!!!!!!!!

லாஸ்ட் ரெண்டு எபியும் தான் இந்த கதை ஆரம்பிக்கும் போதுல இருந்து நாங்க எதிர்ப்பார்த்த விஷயம்.... உங்க ஸ்டைல ஒவ்வொரு தவறுக்கும் விளக்கம் சொல்லி நிஜமா அப்படியே எனக்கு புள்ளரிச்சிட்டு🥺🥺🥺🥺(இதுக்கு தான் பெரிய ரைட்டப் உண்டுனு சொன்னேன்)

"அவள் வலியில் அவனுடைய வலியை உணர்ந்தான்" முந்தின எபி லைன் adipoli 🤩🤩🤩🤩🤩🤩🤩

இதோ இன்னைக்கு "ஆத்மார்த்தமான உறவில்" ஸ்ட்ரைக் பண்ணி "ஆத்மார்த்தமான காதல்" nu திருத்தி சொல்லும் இடம் எனக்கு அமர் அஞ்சலிய தாண்டி நீங்க யோசிக்கிற விதம் தான் பிரம்மிக்க வச்சிது💞💞😘😘....

கடைசி epi முழுக்க காதல் காதல் காதல் மட்டுமே❤️❤️❤️ அமர் இப்படி ஒரு காதல் மன்னன்னு எதிர்ப்பார்க்கல.... அஞ்சலி காதலுக்கு இவன் என்ன நியாயம் செஞ்சிட போறான்னு எதிர்பர்த்து இருந்தோம்...இவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொண்ணுல யும் கண்ணு வேர்க்குது🥺🥺🥺😥😥......

உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மேம்..... போன எபி படிச்சு பார்த்து டோட்டல் கிளோஸ் 🙊🙊🙊🙊🙊அமர் மேல ஒரு க்ருஷ் வந்துட்டு😍😍💐🙊🙊 ஹீரோ பக்கம் சாய்ஞ்சது நமக்குள்ள இருக்கட்டும் மேம்🤭🤭🤭 உண்மையெல்லாம் தனியா தான் சொல்லனும்னு மஹிமா சொல்லி கொடுத்துருக்கா🤭🤭அதான் சைட் பக்கம் வந்துட்டேன்....😜😜இதை அந்த டான் கிட்ட மட்டும் மாட்டி விட்டுடாதீங்க🤐🤐🤐.......
டான்கிட்ட தானே… நான் சொல்லமாட்டேன்…. 🤷🏻🤷🏻 அடிச்சி கேட்டா கூட சொல்லமாட்டேன்…. ஆனா யாருக்கு அடிப்பாங்கனுதான் தெரியல… ஒருவேள உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க ஜி 🤭🤭
 

Bigboss_1995

Well-known member
ஆத்தாடி அப்படியா????🙄🙄🙄🙄🙄
டான் எபி போடாம இந்த பக்கம் வரமாட்டாங்க... நான் சொன்னது அவங்க கண்ணுக்கு மாட்டாம எனக்கு அடுத்து வர்ற கருத்துக்கள் காப்பாத்திடும்😂😂... அதுக்கு சீக்கிரம் epiya கொண்டு வாங்க மேம் 😜
ஆமா ஜி… நானும் கமென்ட் பண்ணிருக்கேன் 🤷🏻 டான் பார்க்க வாய்ப்பில்லதான் 🤭
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இந்த சந்தோஷத்தை என்னவென்று சொல்ல? மிக மிக சந்தோஷத்துடன் கூடிய எங்களுக்கு விருப்பமான பதிவு...

அஞ்சலி அவள் பிறந்த நாளுக்காக அமரை எதிர்பார்த்து காத்திருக்க அவள் நினைவை பொய்யாக்காமல் வந்து விட்டான் தன்னவளை காண... அதுவும் அவன் அவள் பிறந்த நாளை கொண்டாட தேர்ந்தெடுத்த இடமோ அவளை கொள்ளை கொள்ள.. அவள் இயற்கையை ரசித்த து அழகு என்றால் அவன் அவளை ரசித்த து அழகோ அழகு... அதை விட அவன் பரிசு அழகு என்றால் அவள் பரிசோ அழகிலும் அழகு... அவள் பரிசை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த அமர் அவளிடமே சரண் அடைந்து அவன் அழுத து எங்கள் நெஞ்சை உருக்கி விட்டது.. எவ்வளவு வருத்தம் இருந்தால் இப்படி நடந்து கொள்வான்... அஞ்சலி பெயர் தேர்ந்தெடுத்தது அருமையிலும் அருமை...

அற்புதம் ஸ்ரீ மேம்... அப்படியே ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் உயிர் பெற்று எங்களை அதிலேயே மூழ்கடித்து விட்டீர்கள்...

ஆத்மார்த்த உறவில் என்பதை ஆத்மார்த்த காதல் என்று திருத்துவதில் தான் எத்தனை காதல்... ஒரு முறை அங்கீகாரம் இல்லாத உறவிற்காக அமர் வருந்த அஞ்சலி நிறைய வலியுறுத்தி அடுத்தது என்றால்... என்னவோ நினைத்து விட்டாள் அஞ்சலி...அதனால் தான் அதிக சந்தோஷம் அமருக்கு பயத்தை கொடுக்கிறதா ஸ்ரீ மேம்...

குழந்தை உருவானதை தாங்கள் வர்ணித்த விதம் அப்படியே மெய் சிலிர்த்து விட்டது.. அதில் ஆதார ஸ்ருதி போட்டி, சிருங்கார சீண்டலில், செல்ல சிணுங்களில் ஆலாபனை செய்து பேரின்பம் பாடியதில் உருவான ராகம் அவர்கள் மகவு.. உங்கள் எழுத்து நடையை கண்டு நான் வியக்காத நாளில்லை... அற்புதம் ஸ்ரீ மேம்...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.........avanga rendu perum meet pannikita athu therinji avanuku divorce கிடைக்காமல் poida poguthu nu தான் avana paakka வர vendaam nu solli promise vaangitaa la...... சூர்யா vuku எப்படி தெரியுது ava perganent ah irukarathu யாருமே தான் இவங்க sollalaye.... Phone la paathukutaanga பேசிகிறாங்க kuzhanthai kita பேசுறான்.... Kuzhanthai avanodaya குரல் ah ketta ஒடனே asaithu la semma very very emotional episode maa.... Evvallavu கஷ்டம் maa tharunam la paakka முடியும் துரத்தில் இருந்தும் paakka முடியாதா சுழல்...... Athuyum இந்த maari time la...... பொண்ணு oda கேவலம் theriji அந்த பேய் oda அப்பா seththu poitaara..... அந்த Rendu பேய் galum nadutheruvuku vanthutaanga..... அமர் romba payapuraa athunga rendu அஞ்சலி ah எதாவது செய்திட போறாங்க nu.... அவன் அவ்வளவு உஷாரா இருந்தும் avala என்னமோ pannitaalunga.... Super Super mam... Semma semma episode
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...


மனைவியிடம்
மயங்கும் மனம்
மலரும் உறவு
மாறிடும் காலம்
மாற்றிடும் உறவு
மருந்திடும் மகிழ்ச்சி
மறைக்கப்பட்ட நிலவாய்
மேகத்தின் பின்னே அவள்
மாற திரை விலக்க
மோதும் தென்றால் பகை
மட்டுமே முன் நிற்க
மன்னவனோ எதிரியை
மண்டியிட வைத்தானோ
மங்கையின் காதலை தனக்காய்
மன்றத்தில் ஏற்றி
மணாளனாய் கரம் பிடித்தான்
மகளோடு இந்த வாழ்வில்...


அருமை ஸ்ரீ மா...


SP பற்றிய இந்த எபியில் படிக்கும் போது அப்படி ஒன்றும் கோபம் வரவில்லை... அஞ்சலிக்காக அவன் எடுக்கும் முடிவு பற்றி படித்தால் இருக்கலாம் ஒருவகையில் அவன் அன்பும் சிறந்தது தான் என சிந்திக்கும் படி அவன் கதாபாத்திரம் அழகாக மாற்றிய பெருமை உங்களுக்கு தான் சேரும்...


அப்போ அஞ்சலி இந்த நிலைக்கு காரணம் எதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கு அதுக்கு யார் காரணம் தெரிய போகுது நினைக்கிறேன்....


அதற்கு துணை இந்த சஞ்சய் உதவி பண்ணி இருப்பானோ. இப்போ அவன் இல்லை தான் என்றாலும் மூளை ஒவர் டைம் வேலை பார்க்கிறது...


அமர் அஞ்சலி காதல் செம எபிக்கு எபி வேற லெவல் தான்... அருமை ❤️❤️❤️...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

இக்கரையில் அவன்
அக்கரையில் அவள்
நதியோட்டமாய் காதல்!

விலங்கான நிஜத்தில்
தவிக்கும் அவன்!
விலகாத நிழலில்
துடிக்கும் அவள்!
சதிராடும் காதலில்
விதிபோடும் மூட்டம்...
சதியோடு சேர்ந்தால்...
சுதி மாறுமோ...?

தான் என்ற அகம்
ஏன் என்ற யுகம்
புரியாத போது
மதியாத பெண்மை....
அன்பென்ற அகம்
பண்பென்ற யுகம்
அறிகின்ற போது
மதி மாறுமோ...?
தன்னவன் வேண்டும்
தங்கையின் உள்ளம்...
அன்னவன் வழியில்
தடுமாறும் வேளை...
தாளாத காதலில்
தடம் மாறுமோ...?

ஓன்றுக்குள் ஒன்றாய்
வித்திட்ட காதல்
ஒரு கூட்டில் வாழ
காலமும் வேண்டுமோ...!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top