All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
பெண் என்றும் பேய்!
மண்ணில் மாந்தர்க்கு நோய்!
கட்டிய பந்தம்
கயிறாய் இறுக்க...
மண்ணில் ஆடவர்க்கு
மதிப்பில்லா இழி வென்றால்...
தன் இல் வாழ்வதற்கு
விதியில்லா வலி!
பணமும் பகட்டும் உலகென்றால்
பழியும் பலியும் வழியாமோ..?
புதுக் குறள் பாடும்
புதுமை உலகில்...
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
திருக்குறள் எல்லாம்
தீதாய் போன...
அலங்கார உலகில்
அன்பின் அறம் தேடிய
மன்னவன் பாவியே!
தனக்காக வாழ
தடம் கண்ட அன்பில்...
தடையாய் வந்தது
தண்டனையா...?
சிறகடிக்க நினைத்தால்
சிறகொடிக்க நினைக்கும்
சிவனவன் நீதி இதுதானோ...?
வினை தீர்க்க
வினை ஆன விதியே!
பிறவிக் கடனோ...
பிறப்பின் கடனோ...
பட்டது போதும் என்று
விட்டு விட்டால் ஆகாதோ...
பட்ட காலிலே பட்டு
கெட்ட குடியே கெட்டு
கலிகால ஓட்டத்தில்
கலங்கும் மன்னனுக்கு...
கருணை மழையாய்
கரம் சேர வந்தவளை...
கரம் வைத்து
வைதைத்தல் சரியாமோ...?
காதல் ஒன்றே
கரை சேர்க்கும் என்று
காதல் வானில்
பறக்கும் மனங்கள்...
கை பிடிக்க காலம்
வரவில்லை என்றால்...
பட்டுத் தெரிய
முட்டுக் கொடுக்கும் விதியே...?
பிரம்மன் எழுதிய எழுத்தில்
பிரபஞ்சம் ஒழுகிய
வழக்கிதுவோ...?
அன்பில் அலைபாயும் நெஞ்சங்கள்
முடிவில் நிலையாகும் தஞ்சங்கள்!
சிரிக்க நினைக்கும் நேரம்
அழுக வைக்கும் கோரம்
தலை எழுத்தின் விசித்திரமே!
மனம் விதிர்க்க வைத்த நடை
பெண்ணவளின் இயல்பின் மாறாட்டத்தில்!
மனம் தவிக்க வைத்த நடை
பெண்ணவளின் இயல்பின் போராட்டத்தில்!
மனம் முதிர்க்க வைத்த நடை
பெண்ணவளின் இயல்பின் வேரோட்டத்தில்!
மனம் சிலிர்க்க வைத்த நடை
எழுத்தரசியின் எழுத்தின் நீரோட்டத்தில்!
அஞ்சலி என்பவள்
தனையே கொடுத்து
தன்னவனை காத்திட்டால்....
'அமரஞ்சலி' இது
அமர காவியம் தானே!
'பெண்ணதிகாரம்' இது
அமர காப்பியம் தானே!
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மஹிமாவிடமிருந்து விவாகரத்து கிடைத்தது மகிழ்ச்சி என்றால் அஞ்சலிக்கு என்னவாகுமோ என பதட்டப்பட வைத்த பதிவு..
மஹிமாவும் அவள் அம்மாவும் இந்த அளவிற்கு கொடூரவாதிகளா? ராம் குமார் செய்த துரோகத்திற்கு அவனை துரத்தியடித்ததே சரி... மஹிமாவும் அவள் அம்மாவும் செய்யும் செயல்களுக்கு தண்டனை என்னவோ? அமருக்கு விபத்து ஏற்படுத்தி அஞ்சலி அதை கேட்டு அவனிடம் ஓடி வரும் போது இருவரின் உறவை அம்பலப்படுத்த திட்டம் போடுகிறாள்... இதற்கு சஞ்சய் துணை நின்று அமரை முழுதாக போட்டு தள்ள முயல அவ்வளவு பெரிய விபத்தில் அமர் சிறு காயங்களுடன் மட்டும் தப்பித்தது அஞ்சலியின் பிராத்தனையும் மற்றும் கடவுள் செயல் தான்.
ஆனால் இந்த விபத்தை காணொளி மூலம் கண்ட அஞ்சலி நிலையோ.. அவளால் தாங்கி கொள்ள முடியுமா ஸ்ரீ மேம்? கழுத்தில் எல்லாம் ஏன் வீக்கம் அவளுக்கு... சாரதாம்மாவாவது அமரிடம் அஞ்சலிக்கு தெரியாமல் உண்மையை சொல்லி இருக்கலாம்... அவளுக்கு என்னதான் பிரச்சனை உடலில்?
டிஎன்ஏ டெஸ்ட் முடிந்து விவாகரத்து கிடைத்த பிறகு ஏன் மஹிமா அமரை பார்த்து இதற்கு பிறகு தான் உனக்கு இருக்குடா என்று நினைக்கிறாள்?ஒருவேளை அவன் தம்பி என்ற உறவில் சொத்தை கேட்பாளோ?
நிறைய நாட்களுக்கு பிறகு அமரும் அஞ்சலியும் சந்தித்தது கொண்ட போது அங்கே பேச்சிற்கு தான் இடம் உண்டோ? உரிமையான பார்வை தீண்டல்கள்... அற்புதம் ஸ்ரீ மேம்... ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண் முன் உயிர்பெற்று நடமாடி கொண்டிருக்கிறது...
அச்சோ! ஆசையோடு கேட்கிறான் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று.. ஆனால் அஞ்சலியின் பதில்...
என்ன மாதிரியான கவிதை இது... அஞ்சலி கூக்குரலா ஸ்ரீ மேம்? அப்படியென்றால் அவள் மரணத்தின் வாயிலில் உள்ளாளா? அச்சோ! அமரின் நிலை? அவள் இல்லையென்றால் அவன் இல்லையே.. இதில் வேறு அவள் வானவில்லை ஒப்பிட்டு பார்த்து ரசித்து மறைந்து... ஏன் ஸ்ரீ மேம்? அவனுக்காக ஒருத்தி வேற வருவாளாம்... எங்கள் மனம் புலம்புகிறது ஸ்ரீ மேம்... முடியவில்லை..
உங்கள் எழுத்து நடையில் நாங்கள் மனம் லயித்து ஒன்றி அதில் கரைந்து விட்டோம்..
அற்புதம் ஸ்ரீ மேம்.. வாழ்த்துக்கள்.
Enna solrathu mam சத்தியமா வார்த்தை ye illa... அந்த ராம்குமார் ah mirugathu la kuda sekka முடியாது athai விட கேவலமானவன்..... பதினாறு வயது அவன் அம்மா vuku அந்த வயசுல avanga annupavecha vethanai வலி துரோகம் romba romba athigam...... Sharmi avanga பொண்ணு illa அந்த ஆளு பொண்ணு மட்டும் தான் இது எல்லாம் therinji kitu thaan அந்த mahima அந்த ஆட்டம் aadalanaala..... இப்போ என்ன pannuva.... அந்த ஆள போட்டு thallitaan ah Super...... அஞ்சலி ellaathayum avanodaya vethanai ah manasukula vechi vechi ava உடல் நிலை ah பாதிக்க vechikira... Kuzhanthai பிறந்த avaluku எதாவது aaidumo nu தான் கல்யாணம் vendaam nu solli kitu இருக்கா.... Super Super mam... Very very emotional episode...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.