All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow.... Wooooooooow.... Semma semma lovely lovely episode mam...... Rendu perum ethir paaththa avanga kalyanam romba romba santhoshama romba romba காதல் ah நடந்து mudinjidichi.... Rendu perukum appadi ஒரு நிறைவு மனநிம்மதி ethanai varusham காத்திருந்த avanga காதல் ku கிடைச்ச அங்கிகாரம்...... Semma mam.... Aathmika vuku avvallavu santhosham..... Romba romba arumai ah na episode... I really enjoyed.....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

காதலின் மோகனங்கள்
காவிய ராகங்களாய்....
காதலின் கண்ணியங்கள்
காப்பிய மேகங்களாய்...
காதலின் காருண்யங்கள்
காணாத சுகங்களாய்...
கவிபாடிய அழகில்
மதியாடிய நினைவில்
அலையாய்ந்த நெஞ்சங்கள்
நிலையான அந்தங்கள்
ஆத்மீக பந்தத்தில்
ஆத்மார்த்த பந்தங்கள்!

காதலின் கூட்டில்
காவியம் பாட,
காதலர் ஏட்டில்
ஓவியம் போட,
ஆறாத காதலில்
தாளாத மனங்கள்...
ஆற்றுப் பட்டு
அடங்கும் நாதம் - இது
மாமாங்கம் கேட்கும்
ஏகாந்த கீதம்!

மெய் தீண்டும் காதல்
நனவான நேரம்...
இலை மறையான
உயிர்வலி எல்லாம்...
தலை மறைவான
சொந்தங்கள் வந்தால்...
தலைவிரித்தாடும் காயங்கள் கண்டு
நிலைகுலைந்தாடும் நியாயங்கள் உண்டு!

கைபிடித்த காரிகை
தாயாய் நின்று
இந்திரன் அவனை
அரவணைப்பாளோ...!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Banumathi Balachandran

Well-known member
பல இன்னல்களை கடந்து அமர் அஞ்சலியின் கழுத்தில் தாலி கட்டிவிட்டான். இனி அவர்கள் வாழ்வில் அடுத்த அத்தியாயம் அவளுக்கு இனி பழைய ஞாபகங்கள் வருமா
 

vijirsn1965

Bronze Winner
romba romba inimaiyaana arumaiyaana pathivu thirumanam azhagaha nadanthuvittathu surya sharmi vazhkaiyum sariyaahivittathu anjaliku enna nadanthu than ninaivukalai maranthuvittaal aduththa udiku aavaludan waiting mam(viji)
 

JoRam

Active member
அருமை, அருமை, நல்ல படியா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சஞ்சய் செய்த சதி வேலையா இருவரும் பிரிந்தது ?? இப்பவாவது அஞ்சலிக்கு நிம்மதியான வாழ்க்கை அமைந்ததே.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பல நாட்கள் காத்திருந்து அவர்கள் கைக்கு வந்து சேர்ந்த சொர்க்கமாய் இருவரின் திருமணம் நடந்த பதிவு... சந்தோஷத்தின் உச்சம் இப்பதிவு...

அஞ்சலி திருமணத்திற்கு சம்மதித்தவுடன் மூன்றே நாட்களில் அமர் ஊடகங்களை அழைத்து சொல்லி விட்டான்.. அனைவரையும் அழைத்து விட்டான்... ஓரே கலரில் மூவர்க்கும் கல்யாண ஆடையை எடுத்து விட்டான்... அமரின் அகமும் முகமும் மலர எங்கும் எதிலும் சந்தோஷத்துடன் கூடிய பூரிப்பு... தன்னவள் அருகில் இருந்தால் அந்த உற்சாகத்தில் இரட்டிப்பாய் வேலை செய்வான் போல...

அஞ்சலி அவனுக்கு சளித்தவளா? ஆடை எப்படி இருக்கிறது என்று கேட்டால் அவன் விழியில் தெரிந்த விருப்பத்துடன் கூடிய உற்சாகத்தில் பிடித்ததை சொல்ல அங்கே ஓர் அழகிய பரிமாற்றம்... அற்புதம் ஸ்ரீ மேம்... ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் உயிரோவியங்களாய்...

Maine piyar kiyaவில் mere rang mein song எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்... அருமையான தேர்வு இந்த இடத்தில் அந்த பாடல் அப்படியே பொருந்தி காதல் வழிகிறது... அந்த பாடலுக்கு கல்யாண ஜோடிகள் ஆடியது அழகென்றால் நம் ஆத்மிகா ஆடியது அழகோ அழகு...

அமர் மந்திரங்களை தமிழ் வார்த்தைகளை உச்சரித்து தன் கை பிடித்தவளுக்கு மங்கள நாணை பூட்டியது அழகோ அழகு... சொர்க்கத்தின் உச்சம்... அபாரம்...

ஆம் நிஜம் தான் ஸ்ரீ மேம்... சில பேர்களுக்கு நிம்மதியை தருகிறது என்றால் மறதி கூட நல்லதற்கே... சூர்யாவின் புண்பட்ட மனமும் ஷர்மியின் காத்திருந்த காதலும் ஒவ்வொருக்கொருவர் உணர்ந்து நடந்து கொண்டது ஆத்மார்த்தமான அழகான தாம்பத்தியம்...

கவிதை வரிகள் அற்புதம்.. சத்தியம் இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா? எங்கே தான் வார்த்தையெல்லாம் தேர்ந்தெடுக்கிறீர்களோ? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி ஸ்ரீ மேம்..
 
Top