All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode mam..... அமர்... Anjali... அம்மு oda உணர்வு போராட்டம் enna solla Chace ah illa.... அழ veikiranga..... Avaluku daily daily nadakurathe naranthuduthu polaye.... Appadi enna நடந்தது theriyalaye avaluku..... Kudave irukaravanga la dailyum paakarathu naala நியாபகம் vechikira nu ninaikiren.... சஞ்சய் athuku thaan avala dailyum paakka varaano... ஆனா அமர் pathina thappaana ஆதாரம் eppadi நியாபகம் vechi இருக்கா............ Aruna avalaala முடிஞ்ச அளவு எடுத்து sollita...... இனிமேல் ava தான் thelinji வரணும்...... Doctor enna solraaru theriyala ava நிலமை ah pathi... அமர் முகமே மாறிடுச்சு அவன் அம்மா avala pathi கேக்கும் பொது..... Shooting பத்து naala வெளிய தங்க poraangala.... Ore santhosham avanuku.... Kutty kum அம்மா va paakka poorom nu குஷி..... Avaluku ava kuzhanthai ah kuda நியாபகம் இல்ல யாரோ kuzhanthai nu ninaikira... Amar ah பாத்த ஒடனே தான் avanga kuzhanthai nu therinji avvallavu அதிர்ச்சி.... Semma semma episode mam.... Super Super Super
 

Banumathi Balachandran

Well-known member
சூர்யா ஷர்மியை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டான்

அஞ்சலிக்கு அவள் குழந்தையை கூட ஞாபகம் இல்லையா

அவளுக்கு என்ன பிரச்சினை
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

சிட்டுக் குருவிகள்
சிறகடிக்கும் நேரம்
சிறகொடித்த விதியே!

பருவத்தில் இணைத்து
பரவசத்தில் கதைத்து
துரோகத்தில் உதைத்து
விரோதத்தில் விதைத்து
பழியில் பகைத்து
மொழியில் வதைத்து
விழியில் நனைத்து
காதலில் குழைத்து
கூதலில் நுழைத்து
மோதலில் களைத்து
சாதலில் புதைத்து
புதிதாய் முளைத்து
சதியாய் மறைத்து
பதியாய் பதைத்து
நதியாய் ஓடும் நீரலை போல்...
நிலை மாறி தடம் மாறி
எதிராய் நிற்க வைத்த நீ...
குருவிக் கூட்டில்
கல்லெறிந்த காலனாய்
களவாடிய சந்தங்கள்
சின்னச் சிட்டின் மழலையில்
உறவாடிய பந்தங்களாய்
உயிர்க்கவிட்ட மதியாய்
கைசேர விடுவாயோ... கதியே!

பாவப்பட்ட பரிதாப நெஞ்சங்கள்
காயப்பட்ட கனமான நெஞ்சங்கள்
காதல் ஒன்றே பிடியான
இணைக்கும் பாலத்தில்...
அக்கரையும் இக்கரையும்
இருகரையாய் இருந்தாலும்
இணைக்கின்ற நீரலையாய்
மழலை மயக்காதோ...!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில புதிர்களுடன் தாயையும் மகளையும் அமர் ஒன்று சேர்த்த பதிவு...

அஞ்சலியின் சஞ்சலங்கள் குழம்பி தவிக்கும் தவிப்புக்கான விடை தான் அவர்கள் குடும்பமான அமர் அஞ்சலி ஆத்மிகா போல... ஸ்ரீ மேம் அதை எவ்வளவு அழகாக உருவகப்படுத்தி உள்ளீர்கள்.. அமைதியான நீலவானம் அமர்; ஆர்ப்பரிக்கும் கடலலை அஞ்சலி; இணைக்கும் புள்ளியான ஆதவனாய் அவர்கள் குழந்தை... அற்புதமான உருவகம்...

அஞ்சலியை விளம்பத்திற்காக தனியே அழைத்து வந்து அவர்கள் மகளையும் அஞ்சலியையும் ஒன்று சேர்த்துள்ளான் அமர்...

அஞ்சலி செத்து பிழைத்தாளா? பிழைத்ததே அபூர்வம் என்கிறானே அமர்? நேற்று பார்த்த குழந்தை முகம் ஞாபகம் வரவில்லை.. அவள் அணியும் ஆடையிலிருந்து இன்று விளம்பரத்திற்கு செல்ல வேண்டும் என்பதை கூட மறந்து விட்டாள் என்றால்... என்ன சொல்ல? இது விதியின் சதியா? இல்லை வஞ்சகர்களின் சூழ்ச்சியா?கண்டிப்பாக அந்த கணம் அமருக்கும் மறு ஜென்மமே... இதில் பிறந்த குழந்தையை வேறு பார்க்க வேண்டும்... எப்படி தவித்து துடித்திருப்பான்... அமர் சொன்னது போல பிரம்மன் அவன் விதியை எழுதும் போது நிறைய கோபத்தில் இருந்திருப்பார் போல... அவள் தவிப்பை கண்ட அமர் அவளுக்கும் தாயுமானவனானான்... அற்புதம்...

ஷர்மியிடன் கோபத்தை காட்டிய சூர்யா... இனி மேலாவது அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுமோ? அஞ்சலி இது போல் ஆனதற்கு இந்த தம்பதிகள் மூலமாக மஹி ராட்சசி ஏதாவது செய்து விட்டாளோ? இருந்தாலும் அஞ்சலி சொல்லி தானே சூர்யா ஷர்மியை திருமணம் செய்ததாக... அச்சோ! மண்டை குழம்புகிறது ஸ்ரீ மேம்... நிறைய புதிர்கள் மற்றும் கேள்விகள் எங்கள் மனதில்...

அபாரமான கவிதை... அவளுக்கு செய்ய நினைக்கும் அனைத்து செயல்களும் உணர்வுகளும் அவனுக்கே என்பது... நிஜம் தான் கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பமே இருவரும் நாம் என்ற ஒருவருவராக... அற்புதம் ஸ்ரீ மேம்...
 
Top