All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அஞ்சலியிடம் தன் காதலையும் கேலியுடன் கூடிய அரவணைப்பையும் காட்டும் அமர் தனியே அவளை நினைத்து உருகி கரைகிற பதிவு...

கோபமும் சீண்டலும் எல்லை யில்லா காதலையும் அஞ்சலியிடம் காட்டும் அமர் தனியே இருந்து அவன் தவிக்கும் தவிப்பு இருக்கே அப்பப்பா! பல்வேறான உணர்ச்சிகளையும் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் ஸ்ரீ மேம்...

அஞ்சலிக்கு என்னவாயிற்று? அனைத்தையும் மறந்து விட்டாளா? இல்லை அவர்கள் சந்தோஷ நாட்களின் நினைவை மட்டும் இழந்து விட்டாளா? மஹிமாவிற்கும் அஞ்சலிக்கும் பெரும் போராட்டமே நடந்து இருக்கும் போல.. அதனால் தான், தான் இல்லையென்றாலும் அவள் பதிவு செய்த காணொளி அமரை வாழ வைக்கும் என்று நினைத்தாளா? அமரை என்ன சொல்வது அவன் கண் கலங்கும் போது எங்கள் மனத்திற்கும் என்னவோ செய்கிறது ஸ்ரீ மேம்...

அஞ்சலி யின் பார்வையில் அமர் தப்பு செய்தவன்.. மன்னிப்பை வேண்டி நிற்கும் அமருக்கு மனம் குழம்பி இருக்கும் அஞ்சலி தெளிந்து மன்னிப்பை வழங்குவாளா? சாரதம்மாவிற்கும் அனைத்தும் தெரியும் போல.. இருந்தும் அவர்கள் குழந்தையை வைத்து சொல்ல வந்ததை சொல்லியும் குழம்பி தவிக்கிறாளே? அடுத்து என்ன செய்ய போகிறான் அமர் அஞ்சலி அவனிடம் வர? குழந்தை தான் இருவருக்கும் பாலம்...

ஷர்மியை சூர்யா புரிந்து கொள்வது எப்போது?

நிறைய கேள்விகள் எங்கள் மனதில் இருந்தாலும் ஸ்ரீ மேம் அனைத்தையும் தெளிய வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் குழம்பாமல்...

அற்புதமான பதிவு தங்கள் பாணியில்..
 

JoRam

Active member
ஆப் டவுன்லோட் பண்ணியிருக்கேன் சிஸ். நன்றி உங்கள் அன்பளிப்புக்கு.
 

Shanthigopal

Well-known member
ஸ்ரீ மேம் சென்ற பதிவில் எங்கள் மனதை உருக்கிய கவிதை... அபாரம்.. எல்லா உணர்ச்சிகளுக்கும் தேவைகளுக்கும் அவள் வேண்டும் என்ற அவன், சேயாய் தாலாட்ட தாயாய் வர சொன்ன அவன் அவளுடைய முதல் மகன்...

அற்புதம் ஸ்ரீ மேம்... எங்கள் அனைவரின் நெஞ்சையும் கலங்க செய்து அந்த உணர்ச்சிகளை எங்களுள் ஊற்றிய பாங்கு... மெய் மறந்தோம்...
 

vijirsn1965

Bronze Winner
anjaliku enna aanathu ellavum avaluiku mananthu vittatha kuzhanthai adaiyaalam theriyavillaiyaa amarum elloridamaum athaiyoo avaluiku theriya veandaam entru solliyerukkiraan enna nadanthathu entru theriyavillai ud vegu arumai supera irunthathu mam(viji)
 

Deebha

Well-known member
அஞ்சலிக்கு விபத்து நடந்தது பழைய நிகழ்வுகள் மறந்துவிட்டதா ? ஆத்மி குட்டி அவங்க cuteness இல் score பண்ணினாங்க. இ‌ன்றைய கவிதையில் 'உன் பிம்பம் நானே (naano), என் கண்ணாடி நீயா (neeyo) ' என்ற வரிகள் மிக அருமை.
 
Top