அமரஞ்சலி...
மனைவியாய் அவள்...
ஏதோ மனதின் ஓரம் அவள் கோபம் ஏன் என்ற கேள்விக்கு அவன் தான் பதில் தர வேண்டும்...
அது நல்லா தெரியுது...
ஒரு தாயாக இருந்த போதும் கணவனை மட்டுமே சிந்திக்கும் மனைவியாய் அவள்...
அந்த அளவுக்கு காதல் அவள் கண்களை மறைக்கிறது...
இந்த காதல் தான் அவனை அவள் பின்னே சுற்ற வைக்கிறது...
அவள் உடல் சீர்கெட காரணம் என்ன அப்படி என்ன வியாதி அவளுக்கு என்ற கேள்வி மனதில் குடைந்தாலும்...
இனி வரும் எபியில் படித்த தெரிந்து கொள் மனமே என அமைதி படுத்தி இருக்கிறேன் ஸ்ரீ மா மூளையை
...
சொல் என்பதை
சொல்லி கேட்க
அதன் வீரியம்
மனதை தைக்கும்...
காதல் என்பதை
மனதில் விதைக்க
அதன் புனிதம்
கண்களில் தெரியும்
சினம் என்பதை
இதயத்தின் திறக்க
அதன் வேகம்
மூளையை முடக்கும்
கணவனாய் அவன்
சொல் அவளின்
சினத்தை தீண்ட
மனைவியாய் அவள்
தாயென்பதை மூளை
மறக்க இதயமென்றும்
காதலை பிதற்ற ஒரு
தாயாய் தோற்று
மனைவியாய்
காதலை அவனுள்
விதைக்கிறாள்
அவனை சிறந்த
மனிதனாய் செதிக்கி
முழு ஆண் மகனாய்
வைரமென மின்னுகிறான்...
செதுக்கும் நேர உளி
மழுங்கியது
போன்று பெண்ணும்
இங்கே சறுக்கி தான்
போனாள் ஒரு தாயாக
தன்னவனை தாயாக்கி
அவனுக்கே தாயாக
நின்றாள் அவன் தவறை
திருத்தி இதோ கலங்கம்
இல்ல முழு பௌர்ணமி
நிலவாய் அவன் இருண்ட
வாழ்விலும் அவன்
ஜொலிக்கிறான் தங்கமென...
ஸ்ரீ மா என்ன பண்ணீங்க அவளை...
அவள் மனதில் ஆழமாக பதிந்த சில விஷயங்கள் என்ன என தெரியவில்லை...
ஆனால் பல பெண்களோட உறவாடியவன் என்று தெரிந்து தான் அவனோடு வாழ தொடங்கினாள்...
ஆனால் மீண்டும் அதே பிரச்சினை அவள் சொல்லி சண்டை போடுகிறாள் என்றாள் அவள் ஆழ்மனதில் தன் காதலுக்கும் பாசத்திற்கும் உரியவன் தவறு அவளை நன்றாக பதம் பார்த்து இருக்கிறது...
அவள் காதலுக்கு அவன் எங்கேயோ நியாயம் செய்ய வில்லை என்ற சினம் தான் அவனை அவள் படுத்தி எடுக்கறாளா ????
என்ற கேள்வியோடு
சுபி
அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா....