அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
நினைவுகள் யாவும் நீங்கிப் போனால்
ஜடமாய் போகாதோ மானுடமே!
நினைவுகள் நித்திய சொந்தமாய்
நிரடும் நேரம்...
நனவுகள் சத்திய சித்தமாய்
இடறும் நாளும்!
நீங்காத நினைவுகளே
நிஜமாய் மாறும் நேரம்
தாங்காத நிறைவுகளே
நினைவாய் மாறும்!
மன்னவன் பாதையில்
மங்கை அவள் நடை பயில
கல்லோடும் முள்ளோடும்
வாழ்க்கை பாடம் பயின்ற மகள்....!
நேர் கொண்ட பார்வையில்
நிமிர்ந்து நின்ற நேரிழையே! - உன்
பருவங்கள் எல்லாம்
அருவங்களாய் உருவமானது
மன்னவன் கையிலென்றால்...
கடந்து போன வாழ்வில்
காதல் மட்டுமே கைகொண்ட பொக்கிஷமே!
நேர்மையின் பாதையில்
நெருடுகின்ற தாய்மையினை
நெருப்பாய் தள்ளிவிட்டு,
அடிமடியில் அன்னையாய்
துடித்திருக்கும் பெண்மையே! - உன்
காதல் ஒன்றே துணையாய்
கரை சேர்க்கும் வாழ்வினையே!
துரோகத்தின் பாதையில்
துலங்கினின்ற காதலினை
தூசியாய் தள்ளிவிட்டு,
உயிர் அடியில் அன்பனாய்,
துடித்திருக்கும் மன்னவனே! - உன்
காதல் ஒன்றே துணையாய்
கரை சேர்க்கும் வாழ்வினையே!
விதியதன் ஆட்டத்தில்
விலகி நிற்கும் காதல்...
மதியதன் ஓட்டத்தில்
மயங்கி நிலைக்குமோ காதல்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி