AnuSu
Active member
ஆமாம் இரண்டுமே இதிகாசங்கள் மட்டுமே. அவற்றில் இருக்கும் தத்துவமும், நெறியும் மட்டுமே போதிக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ராமாயணம் ஆசிய மொழிகள் பலவற்றில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன். ஆராய்ந்தோமாயின் எத்தனை version இருக்கிறதென்று அறிந்துகொள்ளலாம். வால்மீகியும் ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதவில்லை. அது சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அம் மொழிக்கென்று புனிதத்துவம் வேறு கற்பிக்கப்பட்டு விட்டது. வட நாட்டவர் பாவம் தான். எளிதாய் மதத்தின் பெயரால் ஏமாற்றப்பட்டு விடுகின்றனர். வேடுவரான வால்மீகி மொழி மாற்றம் செய்யப்பட்டு, இனமாற்றமும் செய்யப்பட்டார். வள்ளுவரையும் மாற்றத்தானே முயற்சித்தனர். பாவம் முடியவில்லை.. இதைப்பற்றி விவாதித்தோமாயின் அது முடிவின்றி தொடரும். அது மட்டுமின்றி சிலரது உணர்வுகளைக் காயப்படுத்தவும் செய்யும். உயர்வு, தாழ்வு, வர்க்க பேதங்கள் நிறைந்து சமூகம் கட்டமைக்கப் பட்டுவிட்டது. இதில் வெள்ளைக்காரனின் பங்கும் இருக்கிறது. ஏற்றத் தாழ்வுகளை எல்லாச் சமூகத்தவரும் கைகோர்த்துக் களையவேண்டும். எங்கும் எப்போதும் தமிழன் தெளிவுடன் தான் இருக்கிறான். நாமே உதாரணம்மிக மிக அருமையாக புரிந்து வைத்துள்ளீர்கள். பிற நாட்டவர்களை விட தமிழனிடம் ஒரு விஷேஷம் உண்டு. தமிழன் முன்பு போர் புரிய செல்லும்போது அதில் மண்ணாசையோ, பெண்ணாசையோ பொன்னாசையோ இருந்ததில்லை. ஒரே ஒரு காரணம் தன வீரத்தை நிலைநாட்டுவதே. இது என்னிடம். என்னுடன் நீ மோதினால் சந்திக்கும் விளைவு எது என்பதை நிலை நிறுத்தவே அவன் போர் புரிந்தான். அதனால் அவனை வெல்வது மிக அரிதாக இருந்தது. இன்று வரை வடக்கில் இருப்பவர்கள் தமிழர்களை சற்று மிதிப்பதற்கு காரணமும் அதுவே. தமிழனின் பெயர் புகழ் உலகம் முழுவதும் பரவி இருந்தது. அதை அழிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. அதனால் எழுந்த இலக்கியங்கள்தான் இராமாயணம், மகாபாரதம். இரண்டு காப்பியங்களும் காட்டுவதற்காக படைக்கப்பட்டது. இராமாயணம் சற்று மேலே பொய், தாம் கடவுள் என்பது போலவும், தெற்கில் இருப்பவர்கள் வானரங்கள், ராட்சதர்கள் அப்படி என்றும் காட்டினார்கள். அது புரியாமல் அதை ஏற்றுக்கொண்டு ராமனை கடவுளாக வணங்குகிறோம். என்னத்தை சொல்ல. உலகம் அழிந்தாலும் தமிழனின் புகழ் வானளவாய் பரந்து பரவி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்று ஒரு மன்னன் தன்னை யோசிக்கவில்லை. தன்னை ன் நம்பிய தன மக்களை யோசித்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு அங்கே மதிப்பிருக்கவில்லை. தன மகனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் நியாயத்திற்கு மட்டுமே அவர்கள் பணிந்து சென்றார்கள். அன்றைய தமிழன் அப்படி இருந்தான். இன்றைய தமிழன்.