AnuSu
Active member
செழுமை. நிறைய சொல்லணும். ஆனா எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல, சரித்திரக்கதைன்னு சொன்ன உடனே ஆர்வமா ஆரம்பிச்சேன். வாழ்ந்த கரிகால சோழனும், அவரது நண்பனும்னு சொன்ன உடனே என்ன பெருசா நடந்திருக்கப்போகுது பிறகு வாசிப்போம்னு ஒதுக்கிவச்சிட்டேன். குறிப்ப பாகுபலி போஸ்டர்ஸா பாத்ததும் அட போங்கப்பா ஏற்கனவே 2 படம் பாத்தாச்சு இன்னொரு தடவையான்னு தோனுச்சி. என் எண்ண ஓட்டத்தை ரெண்டு அத்தியாயத்துல உடைச்சிட்டிங்க. பின்பு பாகுபலி கதாபாத்திரங்களை இந்த கதையில அருமையா பொறுத்த முடிஞ்சுது.
தமிழை பிடிச்சி படிச்ச நாம இதை வரி வரியா ரசிச்சி வாசிக்கணும்னு நிதானமா வாசிச்சேன். வாசிக்க வாசிக்க பிரமிப்பா இருந்தது. சில நேரத்துல புல்லரிச்சது. அநபாயன் சிறையிலிருந்து தப்பும் காட்சி பிரம்மாண்டமாய் கண்ணில் தெரிந்தது. வாள் பயிற்சியை செய்கையில் பூங்கோதைக்கு லவ் பொங்கிச்சோ இல்லையோ நமக்கு அநபாயன் மேல கிரஷ் வந்துடுச்சி. நீங்க வாள்வீச்சு, வீரம்னு ரொம்ப வர்ணிக்கிறீங்க. அதனால தப்பு என்னோடதில்லை.
சோதையன் ஜெயபாலசிங்கன் இருவரும் சேர்ந்த அன்று இப்போதான் சேர்ந்து சதி செய்வதுபோல் கோபம் வந்தது. தூக்கமே வரல ரெண்டு நாள். நல்லவேளையாக ஜெயபாலசிங்கன் குறுக்கு வழியில போகலை. அப்போ அவன் மேலயும் மதிப்பு வந்தது..
ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் உயர்ந்து நிற்கிறது. நண்பன் நண்பனுக்காய் யோசிக்கிறான். ரெண்டு பொண்ணுங்களும் போட்டி போட்டு வாழ்க்கையை விட்டு குடுக்குறாங்க. நிறைவா இருந்தது. அநபாயன் மறக்கவே முடியாத ஆளுமை
நட்ட நடு ராத்திரியில கொட்ட கொட்ட முழிச்சி விமர்சனம் எழுதுரேன், இது போன்ற கதைக்கு எந்த நேரமும் பக்கம் பக்கமாய் எழுதி பாராட்டலாம். .
இது உங்களின் முதல் கதைன்னு போட்ருந்திங்க. என்னே உங்களின் கதைத்திறம். தெள்ளிய சிந்தனை. கூரிய பார்வை. எழுத்தாளுமை எல்லாமே சிறப்பு. அந்த கால கட்டத்துக்கே போயிட்டு வந்தோம். நிறைய எழுதுங்க.. என் தாழ்மையான வேண்டுகோள் மத்த கதையை எடுத்துட்ட மாதிரி இந்த கதை திரேட்-ட எடுத்துறாதீங்க. இது போன்ற கதையை நிறையபேர் வாசிக்க வேண்டும்.

Last edited: