மில்க்கி மேம்,
அபயனுக்கு ******* எல்லாம் இருக்கு.
அவன் ஒரு முறை செய்த அநியாயத்திற்கு, பலமுறை பழி வாங்கப்பட்டான். ஆண்மைக்கு இழுக்கு என்றாலும் பெண்மை முன் மண்டியிட்டான்.
இளகிய இதயம் இறுக எத்துனை நொடி பிடிக்கும்.
ஒரு கொலைக்கும் அதே தண்டனை தான்.
பத்து கொலைக்கும் அதே தண்டனை தான்.
அவன் நியாயத்திற்க்காக அநியாயம் செய்தான்.
மீண்டும் அதை செய்தால் அவன் அபயன் அல்ல அரக்கன்.
நீங்கள் சொன்ன ******* வைத்து,
அவளை வசப்படுத்த நிமிடம் ஆகாது. அவன் வசப்படுத்த நினைப்பது அவள் காதல் மனதை.......
சீதையின் ராமன் என்பாள்..
நெருங்கினால் சிதையில் இடுவாள்.
கண் ஒன்று பேசும்.
கை ஒன்று பேசும்.
உண்மையென உருகினால்,
நெக்குருகி நிற்க வைப்பாள்.
துடிக்கும் இதயம் வெடிக்கும் மட்டும் சொல்லியாயிற்று காதலை...
அந்த பாறையை வெடிக்க வைக்க இயலவில்லை.
என்ன நெற்றி கண்ணை திறந்தாலும்,
ஈசா.......
அழிப்பது மட்டும் உன் செயலானால்,
தன் நிலை இறங்கிய தலைவனுக்காய்,
காதல் மனதை மறைத்து,
இறங்கிய உள்ளத்திற்கு இரங்காத அவள் இரும்பு இதயத்தை பொசுக்கி இளக வைத்து விடு......
மிளிருக்கும், அபயனுக்கும் ஒன்று.
கை பொருளை இழக்கும் போதுதான், அதன் அருமை புரியும்.