All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry:இனி அபயன் என்ன மாதிரி விபரீத முடிவு எடுக்கப்போறானோ.அபயன் நிலாவை பார்த்து அம்மாவை கூப்பிட்டு அழுகும் போது நான் அழுதிட்டேன்.கனமான பதிவு
Aamaam. avan vali mika kanamaanathe. apayan edukkum mudivu, avan iruthi makilchikku valivakukum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதி செய்த சதி ...வினையின் பயனை
அனுபவிக்கிறேன்...

ஆடு பகையானது ...குட்டி உறவானது....

ஆட்டை பழிவாங்கவே குட்டியை பலிகொண்டேன்..

கடைசியில் பழிவாங்கப்ட்டவனும் .நானே... பலி கொடுத்து நிற்பதுவும் நானே...

முட்டி மோதி மூச்சடக்கி முடிந்த வரை முயன்றுவிட்டேன்....

முயற்ச்சி முடிவில் வீழ்ச்சியே பரிசாய் கிடைக்கிறது...


என் கரங்களாலே என் கரங்களாலே என் வாழ்வை நான் அழித்து விட்டேன்...

அழகான அவள் காதலையும் ஆழ குழி தோண்டி அதிலேயே புதைத்து விட்டேன்...

அவள் ஆழ்மன காதலை கண்டுகொண்டேன்...

ஆனாலும் அவள் பக்கம் அண்டி போகையிலே தீயாய் தகிக்கும் அவள் வார்த்தையில் நான் வெந்தேன்....

இயன்ற வரை துன்பத்தை அனுபவித்து விட்டேன்...

எல்லாம் விழலுக்கு இரைத்த நீராய் போனது...

பட்ட வலியெல்லாம் பசுமரத்தாணிப் போல் பதிந்தே கிடக்கிறது..

கலங்கி தவிக்கிறேன்....பழைய பக்கங்களை புரட்டி புரட்டி பார்க்கிறேன்....

இருண்ட காலமது இதயத்தினுள்ளே...அமாவாசை இருட்டாய் என் எதிர்காலம்...

பெயர் தெரியா ஊரில் மொழி வழி தெரியாமல் தவிக்கிறேன்...

என்னை பெற்றவளே...பிறந்தவுடனே கிள்ளி எறிந்திருக்கலாம்...

அடுத்தடுத்த துன்பங்கள் அனைத்தையும் கடந்தேன்..

ஆனால் அவளின் இந்த தீரா கோபத்தை தாங்கவியலாத இதயம் வெடித்து சிதறுகிறேன்...

தாங்க முடியாத இந்த தருணத்தில் என் மனபாரம் இறக்கவே ..

.உன் மடி தேடுகிறன்..உருகி தவிக்கிறேன்...உயிர் குலைந்து போகிறேன்...

வாடி வதங்கி வெம்பி வெதும்பி சாவவோ இவ் வாழ்வு ....இருளில் மட்டுமே என் வாழ்வு...

நல்வினை நான் செய்யவில்லையோ ...நல்வாழ்வென்பதே எனக்கில்லையோ......!!!!
OMG Vaasuki... என்ன சொல்லனு தெரியல. சொன்னாலும் என் உணர்வுகளை சொல்ல முடியுமான்னும் தெரியல. நீங்கள் வடித்த கவிதை... அப்படியே என் மனதை உருக்கி பிழைக்கிறது... இதோ எழுதும்போதும் என் விழிகளில் கண்ணீர் துளிகள். அபயனின் வழியை நானே புரிந்து கொள்கிறேன். அவன் இந்த வலியையும் கடந்து சொல்வான். விரைவாகவே. இதுக்கு மேல சொல்ல எழுத்து வரல. அப்படியே உங்க கவியால கட்டி போட்டுட்டீங்க... உங்களுக்கு பெரிய ஒரு உம்மாஆ :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி,

ஆழ்மன ஏக்கத்தின்
ஆவேச மீறல்கள்...
அன்பு பாலம் அமைக்க அடிக்கல் நாட்ட....,
ஆழ்மனத் தாக்கத்தின்
துவேசக் கீறல்கள்...
துன்ப வேர் அசைக்க அடிக்கல் முட்ட...,
திசை மாறிய ஆனந்தத் தாண்டவம்
விசை மீறிய அகோரத் தாண்டவம்
எண்ணத்தின் ஏட்டில் எட்டிகாயாய்....
ஏற்றிய தீபம் எரிவதற்கு முன்னே
ஏமாற்றம் வந்தால் ஏக்கங்கள் தானோ...?

ஏக்கத்தின் தாக்கம் நோக்கமாய் ஆனால்
நோக்கத்தின் தாக்கம் தடை அகற்றாதோ...?

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
மரணத்தின் வலிக்கு தீர்வுகள் உண்டோ...?

தீர்வுகள் தேடும் காதலின் மொழிக்கு
தீர்ப்பெழுதிட்டால் தீருமோ தீயே...!

தீயாய் எரிக்கும் பாவத்தின் வேகம்
தாயாய் வரித்தால் தீருமோ தாகம்...!


வாழ்த்துக்கள் நயனி, நன்றி
ஆஹா.. ஆஹா. மித்ரா...
அழகோடு கவிபுனைந்து உணர்வுகளை வெளித்தெரிக்க எழுதும் காலை எனக்கு தெரிந்தால், ஆகா... என் வீடு முழுவதும் கவியாய் நிறைந்திருக்கு. உங்கள் அழகிய சொற்கோர்ப்பின் ஆழம்... என்ன சொல்ல... அப்படியே உள்ளம் தட்டி செல்கிறது. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலனின் உணர்வுகளை எடுத்துக்காட்டிய விதமும் அவன் தவிப்பும் துடிப்பும் மிகவும் கனமானதாக இருந்தது சகோ

மிளிர்மீதும் தப்புசொல்ல முடியாது அவள் பட்ட காயம் அப்படி

விதுலன் மிளிர் பேச்சை கேட்டு தவறான முடிவுக்கு போயிருவானா சகோ

எங்கள் நம்ப சொல்லி ஏமாத்திட்டிங்க சகோ
😥😥😥😥😪😪😪😪😫😫😫😫
Thank you so much Kavitha. vithulan thavaraaka mudiveduthaal, milirum thavaraakave mudiveduppaal... athanaal varutham kollaatheerkal sako :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜி மா!
நீங்க இப்படி பண்ணதுக்கு அபயன் மேல மறு படியும் குண்டு கூட போட்டிருக்கலாம்.

பழி வாங்கியவன் மனதிலும் காதல் இருக்கிறது.
பழிவாங்கப்பட்டவளின் மனதிலும் காதல் இருக்கிறது.
காதலைப் புடம்போட இப்படி நெருப்பில் இடலாமா?

தடம்மாறி இடம்மாறி சேர்ந்த இதயத்தை,
மாறி, மாறி, வச்சு செஞ்சுடீங்களே விஜி மா!

காதலில் கரைந்த எங்கள்அபயனை,
கண்ணீரில் கரைய வைத்து விட்டீர்களே!

அவன் தண்டனை கூடத்தை பார்த்தால்தான் அந்த மிளிர் ஆத்தா மலை இறங்குவாளா?

மறுத்தாள்,
வெறுத்தாள்,
வார்த்தைகளை உதிர்த்தாள்,
இனி அவன் உயிரைப் பறித்து உண்டு செரிப்பளா?

அவன் மெய்வழி கொடுமைப்படுத்தினான் என்றால்,
இவள் வாய்மொழி கொடுமைப்படுத்துவாளா?

பெண்ணே உன்னைக் களங்கப்படுத்திய அந்த ஆண்மையை,
உன் காலடியில் வீழ செய்தாய்.
போற்றினேன் உன் பெண்மையை.

உண்மையை அறியாமல் வன்மையாய்,
அந்த ஆண்மையை உயிரோடு மரிக்கச் செய்தாய்!
பெண்மையே உன் தாய்மையால்,
ஆண்மையை மேன்மையடையச் செய்வாய்!

தவறுக்கு தண்டனை,
தண்டனைக்கு தண்டனை,
போதும். முற்றுப்பெறட்டும் முற்றுப்புள்ளியோடு.

மணலில் மண்டியிட்ட மகராசா,
அம்புலியை அன்னையாய் வரித்தவனே,
கண்ணிரண்டும் கலங்குதய்யா,
நெஞ்சமோ பதறுதையா,
உன் கதறலை காற்றுதான் காதில் சொல்லுதே,
கல்லும் கரையும் உன் கதைக்கு,
கன்னி மனம் கரையலையே !
எண்ணி எண்ணி ஏங்காத,
உன் பொறப்பு குத்தமில்ல,
உனக்கு நீதி சொல்ல இங்க யாரும் இல்ல.

உன் விதி அந்த விஜிமா கையில,
இதுக்கு மேல நான் சொல்ல ஒண்ணுமில்ல.

கல்ல தூக்கி எறிஞ்சா அது கனடா போகுமோ தெரியல?
என்னப்பா இப்படி எல்லாம் கவிதை எழுதி என் பொறாமையா கிளறுறீங்க...

என்ன சொல்ல ஒவ்வொரு சொல்லும்... வாவ்.. இதை தவிர என்ன சொல்ல தெரியல. எனது கதையின் கனத்தை தவிர, உங்க கவியின் ஆழம், ரொம்ப அதிகமா இருக்குப்பா...

'அவன் மெய்வழி கொடுமைப்படுத்தினான் என்றால்,
இவள் வாய்மொழி கொடுமைப்படுத்துவாளா?' செம லைன் பா...

:love::love::love::love:
 
Top