Storyreader
Well-known member
Indha approach-um enakku romba pidichirukuநயனி மேடம், என்ன சொல்றீங்க???இன்னும் ஏழே update la கதைய முடிச்சிருவீங்களா???
மேடம், நான் ஃபின்லாந்துக்கு வந்து கரெக்ட்டா இன்னும் ஒரு மாசம் கூட முடியலை. எனக்குத் தெரிஞ்சு பக்கத்துல ஒரே ஒரு சாய் பாபா கோயில் தான் இருக்கு அதையும் வாரத்துல ஒரே ஒரு நாள் தான் திறந்து வைச்சிருப்பாங்க
இப்ப நான் அவசரமா எந்தக் கோயிலுக்கு போயி மிளிர் இவ்வளோ சீக்கிரமா அபயன மன்னிக்கக் கூடாதுன்னு வேண்டுவேன்
மிளிரோட கோபமாகிய நெருப்பில் கதையென்னும் குளிரைக் காய்வது நான் மட்டும் அல்ல மிகப் பலரும் தான்
இப்போ நான் என்ன பண்ணுவேன் ??? சரி, என்ன இருந்தாலும் மிளிரும் அபயனும் நம்ம வீட்டு (கதை) பிள்ளைங்க... "எங்கிருந்தாலும் வாழ்க" ன்னு பாடிட்டு வராத கண்ணீரை தொடச்சி விட்டுட்டு நயனிமாவினுடைய அடுத்தக் கதையைத் தேடிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வளவு நல்ல கதையை அழகுத் தமிழில் அருமையாக சொன்ன நயனிமா விற்கு, என்ன பரிசைத்தந்தாலும் அது இந்தக் கதையின் மதிப்பிற்கு ஈடாகாது என்றக் காரணத்தால் என் உள்ளத்து அன்பை உங்களுக்கு காணிக்கை ஆக்குகின்றேன். Really enjoyed this story mam and also Thamarai ma and other members' lovely comments and poetic statements..