Samvaithi007
Bronze Winner
தாமரைமா என்ன சொல்ல வலிகளை என்றும் வார்த்தை கொண்டு வடித்து வாதிட முடிந்ததில்லை...கதை பற்றி பேசும் போது நாயகன் நாயகியே பிரதானம் .. மா..
அவர்களின் தவறு தப்புக்களை.. உணர்தல் சரிசெய்தலில் தான் கதையின் ஜீவநாடி இருக்கிறது.
காந்திமதி நிலை சொல்ல.. ஆயிரம் பேர் ..
விக்னேஷ்வரனை திட்ட அனைவரும்..
ஆனால் பாவத்திற்கு பிறந்து.. பரிதாபமாய் வேட்டையாடப்பட்ட ம்ளிரை.. போற்ற வேண்டாம்..ஆனால் பலரும் கரித்துக் கொட்டியது விந்தையிலும் விந்தை.. அதனால் தான்.. நான் இந்த நிலை எடுத்தேன் மா..
அபயனுக்கு உருக கதை படிக்கும் அனைவரும்(நயனிமா வின் எழுத்து வலிமையின் காரணம் மட்டுமே..)
அதை விடுத்து.. அவன் செய்த செயல்களை நடுநிலையில் நின்று பார்க்க நீங்கள் தயாராக இல்லை..
சட்டத்தின் முன்பு.. நீதியின் முன்பு.. அவனின் செயல்கள் குற்றமே..
..
நிறைய விவாதங்கள்.. நிறைய பதில்கள்.. எக்கச்சக்கமான கேள்விகள்..
பண்ணியாச்சு...
நிஜமா.. ஃபீலிங் வெரி டயர்ட்..
யாரும்.. அவர்களின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனும் போது.. பேசுவது அர்த்தமற்றதாகத் தோணுது..
கற்பனையில் உயிர்த்து.. எழுத்து வடிவில் வந்த கதா பாத்திரங்களை விட.. எழுத்துக்களின் வடிவில் அறிமுகமாகி.. உயிராய் உணர்வாய் இருக்கும் உள்ளங்களை மதிப்பது.. பெரிதா தோணுது...
எனவே...
கதையின் நகர்வு சரியா இருக்கு...
திருப்தியா படிச்சுட்டு போவோம்...
ஹேப்பி எண்டிங் நயனிமா தருவாங்க..... லெட் அஸ் என்சாய்...
மீன லோசனி அம்மா...☺☺☺☺☺☺
உணர்வால் உயிரால் உணரப்பட வேண்டியவை....