All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sumigopi

Well-known member
Pothum sis pothum iniyum yennala Abi kastapattatha summa padikkamudiyala sis .....kannu rendum verthu verthu varuthu ......(comedy la solliten but nijama mudiyala) 😢😢 antha periods time pavam pa Abi.....I love you so so so so much Abi..... seekiram yenga thalaya intha milir purinjukkanum......
 

Nayaki

Bronze Winner
முழுதாக இரண்டு வருடம் தேவைப்பட்டது அவர்கள் பழைய மாதிரி மீண்டு வர'ன்னு அபயன் ஓரிடத்தில் சொல்லிருப்பான்😥
அவன் சொன்னதை வைத்து நான் ஓரளவு இப்படி எதிர்பாத்தேன் நயனி மா😥😥
ஆனால் இத்தனையை எதிர்பாக்கல😔😔😔😔

கஸ்தூரி மனநிலை பாதிக்கபட்டிருப்பார்..
அவரை வச்சுகிட்டு எப்படி வேலை செய்து கவனிச்சி காப்பாத்திருப்பான்னு மட்டுமே யோசிச்சேன்😰
அதுவும் பதினோரு வயசுலன்னு😥😥

ஆனா.. இயற்கை உபாதைகளை கூட அவன்தான் பாத்துக்கிட்டான்னு சொன்னப்ப.. நான் திகைச்சுட்டேன்😰

மாதவிடாய் சிலநேரம் பெண்களாலேயே அருவருக்கப்படுற ஒன்னு..
அதையே தன் வளர்ப்பு தாயான சகோதரிக்காய் கையாண்டிருக்கான்னு நெனக்கறப்ப என்ன மாதிரி ரியாக்ட் பண்ணன்னே நிஜமா புரியல😔😔😔

கூடவே கை குழந்தை,
அதற்கான தேவைகள், கவனிப்பு,
அத்தனைக்கும் மேலாய் அவர்களது அடிப்படை தேவைக்கான அவன் உழைப்பு நேரம்ன்னு எத்தனையெத்தனை அனுபவப்பட்டிருக்கான்..

அவன் வயசுக்கு சுமக்க முடியாத பாரம் அது..
ஆனாலும் அந்த வலிகளை கடந்து (அதை உணர விதி' நேரம் ஒதுக்கியிருந்தாதானே😏)
தைரியமாய் சூழலை கையாண்டிருக்கானே :):)(y)

நடந்த அத்தனையும் அபயன் சொன்னபிறகும், ஏற்கனவே விக்னேஷ்வரன் தன் வாயால் மிளிரிடமே தப்புகளை ஒத்துக்கொண்டும் அவர் அப்படி செய்திருக்க மாட்டார்ன்னு நம்புற மிளிரை என்ன சொல்ல:rolleyes::rolleyes: (கருத்து தெரிவிக்க விரும்பல)

நம்பக்கூடாத தந்தையை நம்புறவ நடந்ததையும் தன் வலியையும் சொல்லி..
உன்கிட்ட மன்னிப்பு வேண்டல..
மறக்க முயற்சி பண்ணுன்னு சொல்லுற அபயனை ஏன் நம்பி மறந்து வாழகூடாது🤔🤔

(பின்குறிப்பு.. மேலே உள்ளவை அனைத்தும் உள்நோக்கத்தோடு எழுதப்பட்டவை அல்ல.. தனிப்பட்ட என் ஆதங்கமே😌😌..
ஆர்மி ஆட்கள் யாரும் மிளிர்க்கு எதிராய் கருத்து சொன்னதாக போர்க்கொடி உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்😌😌)

இந்த ரணகளத்துலயும் உனக்கு குசும்பு போகலையான்னு யாரும் கட்டையை தூக்கறதுக்கு முன்னே மீ எஸ்கேப்☺☺🏃🏃🏃🏃🏃
புனிதா ஓர் ஹக்மா ...
 

sivanayani

விஜயமலர்
விஜிமா!
காதலுக்கு புது பரிமாணம் கொடுத்தவரே!
சாதலிலும் காதல்,
மோதலிலும் காதல்,
வாழ்தலிலும் காதல்,
வீழ்தலிலும் காதல்,
விழியில் காதல்,
பழியில் காதல்,
பலியில் காதல்,
வலியில் காதல்,
காமம் தாண்டியும் காதல்,
சோகம் தாண்டியும் காதல்.,
சதியில் காதல்,
விதியில் காதல்,
சண்டையிலும் காதல்,
மண்டை உடைந்தாலும் காதல்,
கண்டியிலும் காதல்,
கனடாவிலும் காதல்,
காதலிலும் காதல்!
இனிப்பு என்று எழுதினால் சுவைக்க முடியாது.
ஆனால் நீர் எழுதும் காதலை சுவைக்க முடிகின்றதே!
நெஞ்சம் வஞ்சம் மறந்து,
கொஞ்சம் அபயன் பால்,
லஞ்சம் கொண்டு,
தஞ்சம் அடைந்ததே!
அடடே ஆச்சரியக்குறி!

காந்திமதியின் சோகம் காணும்போது, மிளிரின் சோகம் பின் தள்ளப்பட்டு விட்டது.
மிளிரின் வாழ்வை அபயன் மலரச் செய்வான் என்பதால்,
மிளிர் மகள் மீது பாவம் தோன்றவில்லை. பரிகாரம் செய்ய அவன் இருப்பதால்....
ஆனால் காந்திமதிக்கு?
கேள்விக்குறியை நிமிர்த்த யார் வருவார்?
கேள்விக்குறியை நிமிர்த்த ஆயுதம் எடுத்தவன், இன்றோ நிராயுதபாணியாய்..
காந்திமதிக்கு ஒளிர், தருவாளா மிளிர்?
ஆராதனாவை ஆராதிப்பாளா?
சோதனை மேல் சோதனை!
wow wow wow... amazing paa.. காதல் காதல் காதல்... காதல் போயின் சாதல் சாதல் சாதல்... உலகில் எதையும் இல்லாதாக்கும் அழகான உணர்வு காதல்... எதையும் உருவாக்கும் உன்னத படைப்பும் காதல்... அது ஒவ்வொருத்தரின் உறவுக்கெப்ப பரிணமிக்கும்... அன்பு, உடமை, உரிமை, தேவை காமம், கோபம், உணர்வு என்று எல்லாம் உள்ளடக்கியதுதானே காதல்.. அதன் அழகுக்கு நிகர் என்ன இருக்க போகுது... ரொம்ப அழகா சொன்னீங்க மீனா.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... எஸ் காந்திமதியின் வலி, மிளிரை விட பயங்கரமானது... அதுதான் எப்போதும் ஒரு கோட்டை போட்டு அதற்கு பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை போட்டால் முன்னது சின்னதாகுமே... அதுபோலத்தான் காந்திமதியின் வழியும்... அவரை விட மிகப்பயங்கரமாய் தண்டிக்கப்பட்டது அபயன்... குழந்தை என்னதான் செய்வான்.. And I love you soo much pa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
View attachment 9353
ஒரு கதை சொல்லட்டா சார்...!!!

ஒரு காட்டில ஒரு.. கிளட்டு சிங்கம் இருந்ததுதாம்.. அது.. சீராட்டி பாராட்டி ஒரு.. குட்டி சிங்கத்தை வளர்த்துச்சாம்...

ஒரு நாள் .. அந்த குட்டி சிங்கம் மரண காயத்தோட வந்துச்சாம்..

என்னன்னதுக்கு.. அப்பா சிங்கம் செஞ்ச பாவத்தினால எனக்கு அடிபட்ருச்சு ....
இந்த காட்டு ராஜா.. எனக்கு தண்டனை கொடுத்திட்டாரு சொல்லிச்சாம்.


ஓ.. ஆமா.. நான் எவ்ளோ மான்களை வேட்டையாடி இருப்பேன்.. அதனால என் குட்டி உனக்கு அந்தப் பாவம் சேரட்டும்னு சொல்லிட்டு அந்த கிளட்டு சிங்கம் செத்து போச்சாம்.

சரிதான்னுட்டு.. அந்த குட்டி சிங்கம்.. தனக்குன்னு ஒரு வழி தேடி அமைதியா போயிடுச்சாம்.

வழில.. ஒரு எரிஞ்ச வனத்தை பார்த்தாம்.....

அதுல ஊனப்பட்ட.. ஒரு பெண் சிங்கமும்.. தன் தந்தை மாதிரியே இருக்குற குட்டி சிங்கத்தை பார்த்து திகைச்சுபோனதாம்...

'டேய் தகப்பா... இன்னும் நீ பற்ற வைத்த நெருப்பு அடங்கலியா..' ன்னு திரும்பி பார்த்தா..

காட்டூ ராஜா சிங்கம் எதிர்ல வந்தததாம்..

உன் தந்தை இட்ட நெருப்பு.. என் வனத்தை.. என் இனத்தைஅழித்த கோபத்தில உன்னை.. காயப்படுத்திட்டேன்..

மன்னிக்க வேண்டாம் ..முடியாது.. எனில் மறந்திருன்னு சொன்னதாம்..

வனத்தை சீரமைக்க..... அந்த சிங்கம் பட்ட பாடை அறிந்த.. பெண்சிங்கம்.. மறுகி நின்றதாம்... கண்ணீர் விட்டதாம்..

உடலை வருத்தி ... மனதை இறுக்கி.. அதுபட்ட பாடு அறிந்து..

தன் வலி.. கோபம் தொலைத்து.. உருகி நின்னதாம்..

இப்போ......!!!!

மன்னிப்பு கேட்டதனால் அது பெரிதா..

மன்னித்து.. மற்றவர் நிலையில் இருந்து யோசிக்கும் இது பெரிதா....

சொல்லுங்க விக்ரம் சார்....
ஹா ஹா ஹா தாமு... ஹா ஹா ஹா சிரிச்சிக்கிட்டிருக்கேன்பா.. முடியல... ஹா ஹா எப்படி தாமு.. இப்படி.. ஹா ஹா ஹா விக்ரம் சார் என்ன பதிலை சொல்ல போறாருன்னு தெரியல... ஆனா தாமரை செம செம செம.. வார்த்தைகள் இல்ல சொல்ல... அப்படியே நச்சுன்னு பொருத்தமா போட்டிருக்கீங்க... ஆனா அந்த சோகத்திலயும் கடைசில சொன்னீங்க பாருங்க.. "சொல்லுங்க விக்ரம் சார்...." பக்குன்னு சிரிச்சிட்டேன் தாமரை... அருமை அருமை.. என்ன சொல்லன்னு தெரியல... ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ப்பா.. எஸ் மன்னிப்பு கேட்டதால் அது பெரியதா, அவன் நிலையில் நின்று பார்ப்பதால் இது பெரியதா... நீங்க தான் சொல்லணும்பா. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice and emotional epi. Abayan romba pawem pa. Akka mele ewlo anbu irundha iwlo care eduthu pathupan. Abayan really great hero .😊 milir abayan koode happy a vaalredhe pake waiting.
Thank you so much ma. ithukku melayum kopaththa pudichu vachirunthaa enna ponnu ava... :love::love::love::love:
 

தாமரை

தாமரை
ஹா ஹா ஹா தாமு... ஹா ஹா ஹா சிரிச்சிக்கிட்டிருக்கேன்பா.. முடியல... ஹா ஹா எப்படி தாமு.. இப்படி.. ஹா ஹா ஹா விக்ரம் சார் என்ன பதிலை சொல்ல போறாருன்னு தெரியல... ஆனா தாமரை செம செம செம.. வார்த்தைகள் இல்ல சொல்ல... அப்படியே நச்சுன்னு பொருத்தமா போட்டிருக்கீங்க... ஆனா அந்த சோகத்திலயும் கடைசில சொன்னீங்க பாருங்க.. "சொல்லுங்க விக்ரம் சார்...." பக்குன்னு சிரிச்சிட்டேன் தாமரை... அருமை அருமை.. என்ன சொல்லன்னு தெரியல... ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ப்பா.. எஸ் மன்னிப்பு கேட்டதால் அது பெரியதா, அவன் நிலையில் நின்று பார்ப்பதால் இது பெரியதா... நீங்க தான் சொல்லணும்பா. :love::love::love:
படத்தில..இந்த கேள்விக்கு அப்புறமா
விக்ரம் சார் பதில் தேட ஆர்மபிப்பார்..

நம்ம வாசக விக்கிரமாதித்யன்கள்.. என்ன சொல்றாங்க.. மீ டூ வாட்சிங்..
நயனி மா..
 

sivanayani

விஜயமலர்
நயனிமா,
உண்மையிலே மிக கணமான பதிவு...
அபயன் என்ன மாதிரியான ஒரு மனிதன்...காந்திமதி மற்றும் மிளிருக்கு இவன் ஒரு வரம்..தாய் இல்லா குறையை போக்கிய தன் சகோதரிக்கு அவன் செய்த செய்யும் கைமாறுக்கு எதுவும் ஈடாகாது...பெண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கும் ஒவ்வொரு அன்னைக்கும் தெரியும், பூப்பெய்த நம் குழந்தைக்கு மாதாந்திர பிரச்சனைகளை கற்றுக் கொடுத்து அவர்கள் பழகும் வரை நாம் எவ்வளவு சிரம்ப்படுகிறோம் என்று, இந்த சூழ்நிலையை எதிர்கொண்ட அபயனை நினைத்தால் ரத்த கண்ணீர் வருகிறது.
ஓடி ஆடி நண்பர்களுடன் விளையாடி, கல்வி கற்கும் பருவத்தில் ஓர் உறுப்பை விற்றும் வயதுக்கு மீறிய வேலயை செய்து தன் தமக்கையையும், அவள் குழந்தையையும் காத்த அபனுக்கு ஓர் மிகப் பெரிய சல்யூட்.
மிளிர் ஆர்மி சண்டைக்கு வந்தாலும் ஓக்கே...இத்தன பிரச்சனைகளுக்கு நடுவில் அவன் மிளிரை அவள் அப்பனை போல கலட்டி விடாமல் அவள் மனமரிந்து நடப்பதற்கே அவள் கடைசி வரை அவனுக்கு காதலை அள்ளி அள்ளி வழங்க வேணும்...
இந்த மிளிர் ஒரு அவசர குடுக்கை, முட்டாள்.... நடந்த முன் கதை அனைத்தும் கேட்டுப்புட்டு கேட்டு பாரு ஓர் கேள்வி...இந்த நிலைமயில நீங்களும் எக்கப்பா மாதிரி நடத்திருப்பிங்களானு...நீ எப்பம்மா திருந்துவ... அயோகியதன காரிய பண்ணுண உங்கப்பாவ நம்புற...நீயெல்லாம் முடியல...அபயனை கை நீட்டி குற்றம் சுமத்துவதற்கு முன் தயவு செய்து அவன் நிலமையிலிருந்தால் நீ என்ன காரியம் பண்ணியிருப்பேனு யோசிம்மா..
மிளிர் அபயனை நீ உயிருக்கு உயிராய் காதலித்தவ...உண்மை காதல் என்றைக்குமே அவர்களுடைய நிறை குறைகளுடன ஏற்று கொள்வதே...அபயனுடைய மன உடல் காயங்களுக்கு உன் காதலால் குணப்படுத்து..
அப்பா இன்னும் இன்னும் அபயனை பாராட்ட தோணுது இருந்தாலும் இப்போதைக்கு இது போதும் என்ற முடிவுடன் நயனிமாவுக்கு ஓர் ஹக் & உம்மா
ah.. how sweet Nayaki.. Thank you so much ma. and big hug and Umma to you too paa... மிக அழகாக சொன்னீங்க.. எஸ்... அதுவும் ஒரு ஆணாய் அதுவும் விபரம் தெரியாத ஒரு குழந்தையாய் அவன் தலையில் சுமத்தப்பட்ட வலி ரொம்ப அதிகமானது, அழுத்தமானது... அதுவும் மனம் பாதிக்க பட்ட ஒரு பெண்ணை பராமரிப்பது... கூடவே அந்த குழந்தையை வளர்ப்பது... நினைத்து பார்க்க முடியாத சுமையே. என்ன ஒரு பெண் என்பதால் அவள் வலி போற்றப்படும். ஒரு ஆண் என்பதால், அவன் வலி தூற்றப்படும். நீங்க அதை அழகா சொன்னீங்க நாயகி... மிக மிக நன்றிப்பா. சந்தோஷமா இருக்கு. :love::love::love::love:
 
Top