All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
அபயனோட கடந்த காலம்...ரொம்ப கனமானதா இருக்கு.... அவனோட அந்த வயதுக்கு அவன் அனுபவித்த கஷ்டம் ரொம்ப ரொம்ப அதிகம்😥😥....

அத்தனையையும் தாண்டி பழிவாங்குறேன்னு... இன்னும் கஷ்டத்தை தான் இழுத்துகிட்டான்😔...

பழிவாங்கணும்னு.. உயிருக்கு ஆபத்தான போதை மருந்தை எடுத்திருக்கான்னா எவ்வளவு பழி வெறி.... அதுக்கு காரணமா.. எவ்வளவு மனவலியை அனுபவிச்சிருப்பான்😢..

ஒருவழியா தன்னோட காதலை.....தான் பட்ட கஷ்டத்தை சொல்லிட்டேன்.... ஆனா அவன் மேல இருந்த நம்பிக்கையை சிதைச்சதுக்கு அப்புறம்... அவன் அவனோட காதலை சொன்னா...மிளிரும் புரிஞ்சுகிறது கஷ்டம் தானே.... எது உண்மை எது பொய்னு குழப்பம் வர்றது சகஜம் தானே.... எல்லாத்தையும் தாண்டி எப்போ மிளிர் அபயனோட காதலை புரிஞ்சுப்பாளோ 😔😔....

இன்னும் மிளிர்... குழந்தைகள் பாதுகாப்புக்காக அபயன் என்ன நடவடிக்கை எடுக்க போறானோ?!...
 

Samvaithi007

Bronze Winner
Nan yosichuthan solurean...milir oda baby rendum 3 years old and kids bayanthu irukanga thaniya vitutu vanthu ipadi easy ah matikita and kids yaravathu oruthar amma Appa nu alutha kids um matipanga...thaniya kids vitutu vanthathu thapu...3 years old kids Ku enna maturity irukum athuvum bayathu than a closet la irukum...police ko illa friends ko ethachum information pass panitu vanthuruntha kuda okay...ethuvum panama closet la bayantha 3 years old kids ah vitutu vanthu helpless ah nikurathu mutalthanam than.... life la pregnancy face panurathu pengaluku kadavul kudutha gift athu natural ah varathu...critical situation la than ponunga main ah common sense use pananum athuvum amma va kids safety yosikanum Chinna closet la adaichu vachutu avanga sound Panama safe ah irupanga nu ethir parkamudiyathu
Yes neenga solrathu correct than .. but antha room sound proof room .... Vaelila irunthu sound ulla pogaathu and ulla irunthu sound vaelila vaaraathu .... Athanaala thaan ava ennachee thaeriyaama ...enna nadakuthunu thaeriyaama vaelila vanthutta...

Ava paananathu muttalthanam thaanam ... Innakku nijathilaiyum mukkal vaasi pengal muttal thanatha panraanga.. 5 manikku varaenu sonna hus 5.30 varaikkum varalainaalae 400 phone 48 nadai thaeruvukkum veetukkum nadapaanga. Ithuvum pengalukku irukkura menmaiyum pensaiyum kalantha paasathin and pathatrathin pirathipalipae...

Thaimai enbhathu pengalukku kidaikara gift and face panrathu natural thaan... Aana avalukku entha maathiri situationla antha gift kidaichuthu and ava kadanthu vantha paathai avalavu sulabhamaanathu illa. Namma samuga amaippu atha face panrathu and athuvum thaniyaa mental physical amd financial entha support kidaiyaathu.... Thalai suthinaa kooda thanni kodukka aal kidaiyaathu .... She struggle more thaan a normal pregnant lady.... varam eppozhuthum ellorukkum varamai amaivathillai..athukku thani will power mental strenght vaenum...
 

Storyreader

Well-known member
மரத்தை வெட்டியாச்சு..

மலையெல்லாம் உடைச்சு எடுத்தாச்சு..

நதிப்படுகைகளை எல்லாம் உரண்டி எடுத்தாச்சு..

எவ்ளோ பொல்யூட் பண்ணனுமோ பண்ணியாச்சு...😥😥😥😥😥😥😥😥


இப்போ மழை வேண்டி யாகம்.. poபுள்ளையாரைத் தூக்கி தண்ணிக்குள்ள வச்சுப் பூஜை.....



ஒற்றை மழைத்துளி வருமா.. காய்ந்து வறண்டு வெடித்து இருக்கும்
பூமி ... குளிருமா..

ஓடும் வெண்மேகமே... என்று.. கரு மேகமாய் மாறி கருணை செய்வாயோ😢😢😢😢😢😢😢😢😢😢


அபயனின் நிலை.....

பதினோரு வயதில்
வயதில் சிவப்பு வளையமிட்டாய் புகைப்படத்தில்...

அன்றே கருவளையத்தில்
சிக்கிக் கொண்டாயே...

என்வலி..
உன் தகப்பனுக்கு..
என் தமக்கை வலி... உனக்கு..
தீர்ப்பு எழுதினாய்...
எழுதிய பேனாவை உடைத்து.. கல் மனதாய் கடந்து போனாய்...

இன்று...
என்னைப் புரிந்து கொள் ..
என் தமக்கை வலி.. அறிந்து கொள்..

என கெஞ்சும் நீ....


அவளின் உணர்வை புரிந்து கொண்டாயா...

அவளை வேட்டையாடும் போது... ஏஞ்சல் டஸ்ட்.. மது..


அடுத்த நாள் கையெழுத்து கேட்டியே.. அப்போ சுயநினைவோட தானே இருந்த... படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுன்னு.. அகங்காரமா பேசினியே...

இராமனின் வில் குத்தி மரணவலி அடைந்த மண்டூகமாய் மிரள விழித்தாளே....

இப்போது தவறு செய்த குழந்தையாய் மருளும் வெருளும் நீ...


புரிஞ்சுக்கோ.. மன்னிச்சிடு..ன்னு.. கதறும் நீ..

உன்னைப் பார்த்து .. கண்ணீர் வருது விதுலா..

ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் தீர்வோ.. தண்டனையோ ஆகாது என்பதை... இன்றேனும் உணர்வாயா...


ஆதிகாலத்திலிருந்து அடித்து... படித்து சொல்லும் நீதி மொழிகளை... இனியேனும் புரிந்து
கொள்வாயா..

அவளின் மனதில் உனக்கான அன்பு..
வற்றாத ஊற்றாய்.. அது ஜீவநதியாய் மாறி..

ரணப்பட்ட உன் உடலும் மனமும் அமைதியுறும் நாளை எதிர் நோக்கி நாங்களும்.. கனத்த இதயத்தோடு காத்திருக்கிறோம் விதுலா..
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
Today's update is really a heavy one to read. In addition to that your comments with such unique and novel examples makes me feel all the more emotional.
Avan dhaan 'Neethi Mozhi' galai mathikkale. Indha ponnachu ' Inna seidharai oruthal avar naana nanayam seidhuvidal' kurala nenaichu parkalam. Nenaipa - Avan akkava nerla parkara pozhudhavadhu.
 

Storyreader

Well-known member
Very emotional update.
Abhayan Milir- vayirai katti kondu azhara kaatchi romba painful. Nejamave oru kuzhandai nilaiyila avan irukkura feel kedaichudhu.
Your words are undoubtedly powerful in giving a transition to the reader's mood. I mean about the view one would have on Abhayan and Milir so far and the change of view after reading today's update.
Eppada ava avana mannipa-nu nenaika vachuteenga.
 

Samvaithi007

Bronze Winner
அறியா வயதில் அடிபட்ட காயம் ரணமாய் நெஞ்சில் நிறைந்து புரையோடிப்போன புண்ணாய்.. பூமியில் இருக்கும் நெருப்புக் குழம்பாய் தேக்கி தன் உடல் முழுவதும் வன்மத்தையே ரத்தம் பாய்ச்சி இரை தேடும் சிங்கமாய் வன்மத்தை வன்மமாய் இறக்கி வைக்கும் நாளுக்கு காத்திருத்திருந்தான்...

காத்திருந்த காலம் கண் முன்னே....

நெருப்பு குமிழ்கள் எல்லாம் நீர் குமிழிகளாய் போன மாயம் தான் என்ன....

கூர் தீட்டி வைத்த ஈட்டியும் கூர் மழுங்கி போனதன் விந்தை என்னவோ...


மரத்துப் போன ரணமெல்லாம் மறைந்துபோக துடித்த காரணமென்னவோ....

மறை அழுக்காய் படிந்த கரையெல்லாம் காணாமல்
போக விழைந்தடி பெண்ணே....

கசக்கி எறிய துடித்த உள்ளம் உன்னை நெருங்கிய நொடி கசந்து போனது ஏனடி...

இது அத்தனையும் இழுத்து பிடித்து புரையோடிப்போன புண்ணுக்கு மருந்திட துடித்தேன்...ஆறாத ரணத்தை அளித்தவனுக்கு ஆயுள் முழுதும் மாறாத வடுயளிக்க நினைத்து உன்னையே பகடைக் காயாக்கினேன்....
பட்ட ரணங்கள் பாதை காட்டியது... ஆனால் உன் மீது கொண்ட காதலோ தடை போட்டது...

ம்மம்ம் அன்றும் நானே துவண்டேன்...
துவள்வதற்கான நேரமில்லை.... காரியம் கண் முன்னே நிற்க காரியமாற்ற ..என் உயிரை பணயம் வைத்தேன் உன் தந்தையின் உயிரை உருகுலைக்க.... மாதுவை தொட மதுவை நாடினேன்... நெஞ்சின் வஞ்சம் இறக்க உன் உயிர் அழிக்க என் உயிர் பறிக்கும் என்று தெரிந்தே நஞ்சை உண்டேன்....
இதில் விந்தை என்ன தெரியுமா பெண்ணே... அடிப்பட்ட போதும் எனக்கே வலித்தது.... அடித்த போதும் எனக்கே வலித்தது.... அன்றும் இன்றும் என்றும் வலிகள் மட்டும் என் வீட்டில் வாசம் புரிகிறது நேசமாய்....

இன்று என் மண்டியிடுகிற நேசம்... வேசமாய் உன்
முன்... துவேஷமாய் வெளி வருகிறது உன்னுள்ளிருந்து.....

ஆயிரம் காரணங்கள் அடுக்குகிறாய் அல்லல் பட்டதை கூறி கதறுகிறாய்... அப்படி தானே அவளும் படுவாள் என்று சிந்தித்திருப்பாய் என்று வாதிடுகிறாய்.... கடந்து வந்த பாதைகள் கண்முன் பாறையில் செதுக்கிய கல்வெட்டாய் காட்சியில் தெரிய என் காதல் எல்லாம் கானல் நீராய் தெரிகிறது...
விதைத்த வினையை அறுக்க விழைகிறேன்...
ஊறு செய்தேன் உழல்கிறேன்....
ஏற்கவே எண்ணி என்னையே தண்டித்து கொண்டும் தண்டனையை தாங்கி கொண்டும் தவிக்கிறேன்..
உன் அன்பெனும் மழையில் நனையவே ஏங்குகிறேன்...
பிள்ளையாய் உன் மடி சாய்ந்து பிதற்றுகின்றேன்...

உன்னை கொல்லாமால் கொன்று புதைத்தவன் தான் ....
ஆனால் நான் ஏற்கனவே புதைக்கப்பட்டவன் என்பதை எப்பொழுது நம்புவாய் பெண்ணே....

பாவம் என்று தெரிந்தே பழி எடுத்தேன்...
கதறி துடிக்கிறேன்.... நீ என் மீது வைத்த காதலுக்காக அல்ல ...நான் உன் மேல் வைத்த காதலுக்காக ...காலம் கனிய காத்திருக்கிறேன்...
துன்பத்தை மட்டுமே துணையாக கொண்டு எதிர்நீச்சல் போட்டு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ... என்னோடு கரம் சேர்த்து என்னுள் கரையும் நாளுக்காக....
 

தாமரை

தாமரை
Today's update is really a heavy one to read. In addition to that your comments with such unique and novel examples makes me feel all the more emotional.
Avan dhaan 'Neethi Mozhi' galai mathikkale. Indha ponnachu ' Inna seidharai oruthal avar naana nanayam seidhuvidal' kurala nenaichu parkalam. Nenaipa - Avan akkava nerla parkara pozhudhavadhu.
நன்றி அனு மா😍😍😍😍😘😘😘😘😘

ஹா ஹா.. அவளும் நீதி மொழிகள் அறிந்திருக்கா..

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு..



முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

தெய்வமே.. மன்னிப்பதில்லை அனுமா.. நின்று கொல்லும்னு சொல்றாங்க.. செய்த தீவினை வாட்டும்.. உணர்ந்து திருந்தி வருந்தும் போது.. தண்டனை கிடைத்து பின்பே.. மன்னிப்பும் புதுவாழ்வும் கிட்டும்..

அவனை சொல்லிட்டு அவ ஒன்றும் குதூகலமா இல்லியே.. அவளின் வலி குறைய.. கொஞ்ச நாள் ஆகுமே.. அதுவரை..

இருவருக்கும் கடினமான காலகட்டம் தான்.


... தங்கம் தீயிலிப் படுவது புடம் போடுவதற்கே..

அவர்களின் குற்றங்களும் கஷ்டங்களும்.. இந்த வாட்டலில் .. சாம்பலாகட்டும்..
எதிர்காலம் மிளிரட்டும்..
மிளிரும் அனு மா..
 
Top