Storyreader
Well-known member
I am convinced by this point of viewYes you are 100% right. And thank you so much dear. she never ever accept his money or his wealth.மிளிர் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அவளுடைய குண இயல்புகளையும் நீங்கள் புரிந்திருக்கும் விதத்தை வைத்து உண்மையாக பேருவகை அடைகிறேன். மிக மிக நன்றி. ஒரு எழுத்தாளருக்கு இதை விட மகிழ்ச்சி எதுவுமே இருக்க முடியாது. இதுதான் இக்கதையின் வெற்றி என்று கூட நான் சொல்லுவேன்.
அபயனின் பக்கத்து நியாயத்தை சொல்கிறேன்... (நான் இருவரின் பக்கம்தான்... இது ஒரு பட்டி மன்றம் போல. நீங்க அபயனுக்கு ஆதரவாக சொன்னால் மிளிரும் ஆதரவாக என் தரப்பு கருத்துக்களை சொல்லுவேன். எப்படி சொல்வதற்கு காரணம், அப்போதுதான் என் தவறு, நான் எங்கேயாவது என்னையறியாமல் பிழை விடுகிறேனா எனபதை சுய அலசல் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.)
அவன் வாங்கும் பொது, அவளை பற்றிய எந்த செய்தியும் தெரியாது... அவனுடைய மனதிருப்திக்கு வாங்கினான். வாங்கியபின் அதனால் ஏற்படும் விளைவுகள் அவனுக்கு தெரிந்தபின் திரும்பி வர முடியாத நிலைமை. point of no return. நிச்சயமா அது அவளிடம் போய் சேருமா, சேராதா என்பது கூட அவனுக்கு தெரியாது... போய் சேரனும் என்கிற வேண்டுதல் மட்டுமே. அவளை கண்டு அவளிடம் நீட்டினாள், அவன் மூஞ்சயில் எறிவாள் என்பது வேறு கதை. அவனுக்கும் அவளிடத்தே அனுபவம் இல்லையே... அவளுடனான நெருக்கம் வெறும் 24 மணி நேரங்கள் மட்டுமே. இப்பொது மீண்டும் சந்தித்த பொது அவளுடைய குணநலன்களை அவன் புரிந்து கொள்வான். அதற்கும் அவனுக்கு நேரம் வேண்டும். அவனை புரிந்து கொள்ளவும் நேரம் வேண்டும்.