All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வனிதா கண்ணனின் ‘ ஜி(எ)த்தனின் சஹியிவள்’ - கதை திரி

Status
Not open for further replies.

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 14

"கோபப்படுபவனை விட அமைதியாக இருப்பவன் ஆபத்தான எதிரி…" இது சாணக்கியரின் சொல்லடை.

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்... அதேபோல் தான் மூர்த்தி சொன்ன சொல் எந்த ஆண்மகனையும் பதம் பார்க்க வைக்கும். எந்த விஷயத்தையும் ஆராயாமல் பேசும் போது நாவடக்கம் தேவையான ஒன்று. நாவடக்கம் இல்லையெனில் நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் அது ஆபத்தாக முடியலாம். இப்போது மூர்த்தி கோபத்துடன் விட்ட வார்த்தைகள் யாருக்காக அவர் அதை சொன்னாரோ? அவளை அது தாக்கப் போவதை அறியாமல் போனது அந்தோ பரிதாபம்.

மூர்த்தியுடன் பேசிவிட்டு தனது அடர்ந்த ஊதா நிற ஜாகுவாரை கிளப்பிய வேகத்தில் அபிஜித்தின் கோபம் அவனின் அருகில் அமர்ந்திருந்த கதிருக்கு உதறல் எடுத்தது.

" டேய் அபி... கொஞ்சம் மெதுவா போடா…. பயமா இருக்கு…"

" அப்படி பயம் இருக்கிறவன் வண்டியில ஏறியிருக்க கூடாது… என் சஹி எங்கே என்ன ஆகிட்டு இருக்காளோ? இதுல இந்த ஆளு என்ன பேச்சு பேசுறான்…." என்று பொரிந்து தள்ளிக் கொண்டே தனது காரை வலப்புறமாக திருப்பிய வேகத்தில் கதிர் அவன் மேல் விழுந்து எழுந்தான். அபிஜித்தோ வண்டியை ஓட்டிக் கொண்டே கதிரை முறைத்து பார்க்க அவனோ மனதிற்குள் ' ஆத்தி! இவன் ஏதாச்சும் இப்ப அசடு வழியுற மாதிரி சொல்லுவானே!...' என்று சொல்லி முடிப்பதற்குள் அபிஜித் கோப பார்வை பார்த்துக்கொண்டே " சீட் பெல்ட் போடுடா ஒழுங்கா…" என்று மட்டும் சொன்னான். கதிரும் சீட் பெல்ட்டை போட்டு விட்டு அவன் ஒருபக்கமும் அபிஜித் மறுபக்கமும் பார்த்துக் கொண்டே வந்தனர்.

திடீரென்று கதிர் அபிஜித்தின் கையை சுரண்ட ஏற்கனவே தன்னவளுக்கு என்ன ஆனதோ ஏதானதோ என்று சிறு பதட்டத்துடன் கண்களை சுழற்றியவாறு வண்டியை ஓட்டிக் கொண்டிந்த அபிஜித் எரிச்சலுடன் திரும்பி பார்க்க கதிர் அவனது முகத்தை பார்த்து விட்டு" இல்லை… நீ ஏற்கனவே அந்த பொண்ணை கடத்தணும்னு சொல்லிட்டு இருந்த…ஒருவேளை எங்ககிட்ட சொன்ன மாதிரியே கடத்திட்டியோ" என்று அறிந்து கொள்ளும் குரலில் கேட்டான்.

அவனை கொலைவெறியுடன் ஏறிட்டு பார்த்த அபிஜித்தோ " ஏன்டா… அவளை நான் கடத்தணும்? அவளை என் மனசுல நான் கடத்தி ரொம்ப வருஷம் ஆச்சு…. இன்னொரு தடவை கேள்வி கேட்கிறேன்னு கேட்ட காரிலிருந்து எட்டி விழுவ…. அவளை கடத்துனவன் மட்டும் யாருன்னு தெரியட்டும்… அவனுக்கு நரகத்தை காட்டுறேன்" என்று முகம் கடுகடுக்க கூறினான். பின் திரும்பி கதிரை பார்த்து " நீ முதலில் காரை விட்டு இறங்கு" என்று கூற அதிர்ந்து போய் பார்த்த கதிரிடம் " நீ வேற கார்ல தேடிப் பாருடா…. இரண்டு பேரும் ஒரே இடத்தில் தேடுவதை விடுத்து தனித்தனியாக தேடினால் என் சஹி இரண்டு பேருல யார் கண்ணிலயாச்சும் படுவா " என்று கூற அவன் சொல்வதும் சரி என்று கதிருக்கு பட அவன் வேற கார் வரவழைத்து மறுபக்கம் தேட சென்றான்.

அவன் போன பின் தன் நிலையை நொந்து கொண்டு அபிஜித் மனதுக்குள் ' நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான்டி உன்னை கடத்தி உங்க அப்பனுக்கு பாடம் கற்பிக்கலாம்னு நினைச்சேன்… ஆனால் அவ்ளோ தைரியமா இந்த அபிஜித்தோட லவ்வர் மேல் கைவைக்க யாரு துணிந்துஇருக்கா? வரேண்டி…. உன்னை தேடி.. அதுவரை உனக்கு ஏதும் ஆகிடக்கூடாது… ' என்று மனதுக்குள் சஹியுடன் பேசும் போதே அவன் நினைவில் வேறொருவனின் முகம் வந்து போனது.

தொழில் என்று வரும் போது அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் சில நேரங்களில் எறும்பை போன்று சுறுசுறுப்பாகவும் குதிரையை போன்று அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். அதேசமயம் நம் பலம் எது பலவீனம் எது என்று தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும். தனது பலத்தை விட எதிரியின் பலத்தை அவனை விட இருமடங்காக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது உலக நியதி.

அபிஜித் தனது காரை ஒரு வளைவில் திருப்பும் போதே அவனது மொபைலில் அழைப்பு வர அவனுக்கு தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்திருந்தது. அவன் யோசனையுடன் அழைப்பை ஏற்று காதில் வைக்க அந்த பக்கம் சிரிப்புடன் " என்ன அபிஜித்? உன் காதலியை தேடுற போல" என்று நக்கலாக கேட்க அபிஜித் அந்த குரலை அடையாளம் கண்டு கொண்டான்.

********************************************* பச்சை நிற குவாலியர் கார் சமயபுரம் ஹைவேயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரில் இரண்டு பேர் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க பின்னிருக்கையில் சஹி மூர்ச்சையாகி படுக்க வைக்க பட்டிருந்தாள்.

கார் ஒரு இடத்தில் சற்று குலுங்கலுடன் நிற்கவும் அதில் சற்று மயக்கம் தெளிந்த சாஹித்யா மெதுவாக இமை பிரித்து பார்க்க முதலில் இருட்டாக தெரிய தொடங்க மெதுவாக தலையை உலுக்கி எந்த இடம் என்று பார்க்க அது ஒரு ஹைவே ரோடு. தன்னை கடத்தி வந்த இருவரும் சற்று ஓரமாக ஒதுங்கி இருந்தனர். அவர்கள் திரும்பி வருவதற்குள் அவர்கள் கண்ணில் படாதவாறு தொலைதூரத்திற்கு சென்று விடவேண்டி காரில் இருந்து மெதுவாக இறங்கினாள்.

'அச்சச்சோ… இது என்ன ஆள் நடமாட்டமே இல்லாம இருக்கு…' என்று மனதில் நினைத்து கொண்டே " ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கையும் எதையும் எதிர்நோக்கும் துணிச்சலும் இருந்து விட்டால் அவளுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் தனியாக சமாளிக்க முடியும்…" என்று என்றோ ஒருநாள் தன் அம்மா கங்கா சொன்னது ஞாபகத்திற்கு வர கடவுளை மனதில் நினைத்து விட்டு அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்.

அவள் ஓடும் போதே காருக்கு வந்த அடியாள் இருவரும் காரில் அவள் இல்லாததை கண்டு திகைக்கும் வேளை அவர்களில் ஒருவனுக்கு அவனது பாஸிடம் இருந்து அழைப்பு வர அவனோ நடுக்கத்துடன் எடுத்து 'ஹலோ பாஸ்….' என்று சொல்ல எதிர்பக்கம் பாஸ் என்று அடியாளால் அழைக்கபட்டவன் பேசத் தொடங்கினான்.

"என்னடா அந்த பொண்ணு முழிச்சிட்டாளா…."

"ஹ்ம்ம்… முழிச்சிட்டாங்க...பாஸ்" என்றான் தயக்கத்துடன்…

"என்னது? அதற்குள் முழிச்சிட்டாளா?... சீக்கிரம் அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிருக்குனா நீங்க ஹெவியா கொடுத்துருக்க மாட்டிங்க போல…. இதுதான் நீங்க வேலை பார்க்கும் லட்சணமா?" என்று கடிந்து கொண்டான்.

" சா…..சாரி…. பாஸ்"

" சரி... இன்னும் கொஞ்சம் ஹெவியா மருந்தை அவளோட மூக்குல வைச்சு விடு " என்றான்.

" பா….பா….பாஸ்…" என்று அடியாள் நீட்டி முழக்க

" என்னடா திக்கிட்டு இருக்க...எனிதிங் ராங் ?" என்று பாஸ் சந்தேகமாக கேட்க

"பாஸ்... அந்த அந்த பொண்ணு தப்பிச்சிருச்சு பாஸ்…" என்று அவன் என்ன சொல்வானோ என்று தயக்கத்துடன் நிறுத்தினான்.

" யூ பிளடி ராஸ்கல்…. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...அவ எனக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா? இப்ப அவ என்கிட்ட வந்தே ஆகணும்...என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ ? புரியுதா?" என்று கடுங்குரலில் கூறிவிட்டு போனை பட்டென்று கட் செய்துவிட்டான்.

அடியாள் இருவரும் தன் பாஸிடம் திட்டு வாங்க வைத்த சாஹித்யாவின் மேல் அதிக கோபம் கொண்டனர். அவள் இந்த இருட்டில் ரொம்ப தூரம் சென்றிருக்க மாட்டாள். ஆதலால் அவளின் வேகத்தை விட இருமடங்காக வண்டியை ஓட்டினால் அவளை கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்து சஹியை திட்டிக் கொண்டே வண்டியை எடுத்தனர்.அவர்கள் ஓட்டிய வேகத்தில் தூரத்தில் கீழே விழுந்த தன் துப்பட்டாவை எடுத்துக் கொள்ளாமல் ஓடிய சஹியை அடைந்து விட்டனர்.

சாஹித்யா அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் அடியாள்கள் இருவரும் காரிலிருந்து இறங்கி வருவதற்குள் அவர்களை தாண்டி ஓடும்போது அடியாளில் ஒருவன் சஹியின் கையை பிடிக்க போகும் போது அவள் ஓட எத்தனிக்க அவளின் ஒரு கைத்துணி அடியாள் இழுத்த இழுபறியில் இரண்டாக கிழிந்தது. அதேநேரம் சாஹித்யா இரண்டடி முன்னால் சென்று விழுக அவளை இரு வலிய கரங்கள் அணைத்து பிடித்திருந்தது.

அந்த கரங்களில் இருந்து துள்ளித் துடித்த சாஹித்யாவை "ஸ்ஸ்… கொஞ்சம் துள்ளாம இருடி… நான் தான்…" என்று ஆண்மையின் கம்பீரமான குரலில் கூறியவனை விழிகளில் திகைப்புடன் பார்க்க அங்கே ஆக்ரோஷமாக தனது முழு உயரத்திற்கும் நின்றிருந்தான் இளஞ்செழியன்.

அவனைப் பார்த்ததும் சாஹித்யாவிற்கு மயக்கம் வந்து விட்டது. அதை அவன் உணர்ந்ததும் தன் காரினுள் ஏசியை முழுவதும் வைத்து விட்டு அவளை பின் இருக்கையில் கிடத்தினான்.தனது காரில் இருந்த டேஷ் போர்டில் இருந்த துண்டினை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டு அந்த அடியாளை நோக்கி திரும்பி புருவத்தை கேள்வியாக உயர்த்தி என்ன என்று வினவினான்.

அந்த அடியாள்களோ " டேய் யார்டா நீ? மரியாதையா அந்த பொண்ணை எங்ககிட்ட கொடுத்துட்டு போயிரு…." என்று மிரட்டலான குரலில் சொன்னார்கள்.

செழியனோ, " எது? நான் யாரா? அவ இந்த கதை ஹீரோயின்னா, இந்த கதை ஹீரோ நான் தான் டா? வேணும்னா ரைட்டர் கிட்ட கேளு" என்று ரைட்டரையும் அந்த அடியாளிடம் கோர்த்து விட்டான்.( நல்லா இருடா ராசா)

"நீ யாரா வேணாலும் இருந்துக்கோ… இப்ப அந்த பொண்ணை எங்கக்கூட அனுப்பிரு... தேவையில்லாமல் எங்க முன்னாடி ஹீரோயிசம் காட்டி உடம்பை புண்ணாக்காதே! "
என்று அடியாள் செழியனை எச்சரித்தான்.

செழியனோ நக்கலான குரலில் " பார்டா… என் மேல் தங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு நன்றி!" என்று கூற அவனின் பேச்சில் கடுப்படைந்த அடியாளோ செழியனை தாக்க வர இரண்டடி பின்னால் சென்று தன் வலது காலை தூக்கி அடியாளின் விலா எலும்பில் எட்டி மிதிக்க அவன் வலிதாங்காது மல்லாக்காக வீழ்ந்தான்.

மற்றொரு அடியாளோ தனது சகா அடிவாங்கி வீழ்ந்து கிடைப்பதை பார்த்து செழியனை நோக்கி கத்தியுடன் ஆவேசமாக வர செழியன் அவன் கையைப் பிடித்து முறுக்கிய விதத்தில் அவன் பிடித்திருந்த கத்தி கீழே விழ அடியாளின் கழுத்தை ஒரு கையிலும் அவனின் கையை மறுகையிலும் பிடித்திருந்த செழியன், அவனை கீழே குனிய வைத்து தனது வலதுகால் முட்டியால் ஒரு எத்து விட அடியாளுக்கு மூக்கிலும் வாயிலும் இரத்தம் கொட்டியது.

இதையெல்லாம் பயத்துடன் மயக்கம் தெளிந்து பார்த்து கொண்டிருந்த சஹி," வீட்டுக்கு போகனும்…" என்று மெல்லிய குரலில் சொன்னாள். அந்த மெலிதான குரலும் செழியன் காதில் விழ உடனே காரின் அருகில் வந்து " போலாம்டி…ரொம்ப பயந்து போயிருக்க என் கையை பிடித்துக் கொண்டு முன்னால் வந்து உட்காரு…" என்று அவளின் கண் பார்த்து சொல்ல அவளும் அவனுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

அவனின் அருகே அமரும் போதே சஹிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வர அவளின் கண்ணீரைக் கண்ட செழியன் " ஏய்... லூசு அதுதான் ஏதும் ஆகவில்லையேடி…அப்பறம் ஏன்டி அழுகுற " என்று சொன்னவன் அவள் முகத்தை தொட்டு திருப்ப அவளோ தன் கண்களால் பின் இருக்கையை காட்ட அவனோ என்னது என்று பார்க்கவும் அங்கே காரின் பின்னிருக்கை முழுவதும் இரத்தக் கறையாக இருந்தது.

அவளை இழுத்து அணைத்து கொண்டவன் " நானும் தங்கச்சியோட பிறந்தவன் தான்டி... அதிர்ச்சியில் இப்படி ஆகிருக்கும்…. இரு பக்கத்துல ஏதாவது கடை இருக்கான்னு பார்க்கிறேன்…" என்று காரை ஓட்டிக் கொண்டே இடப்புறம் வலப்புறமாக பார்த்து கொண்டே ஓட்ட அங்கே சின்னதாக மளிகை கடை ஒன்று இருக்க வண்டியை அங்கே நிறுத்தி விட்டு அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுக்க அவளோ சங்கடத்துடன் அவனிடம் இருந்து வாங்கி கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க அவளின் நிலை புரிந்தவனோ அந்த மளிகை கடையிலே போய் ரெஸ்ட் ரூம் பத்தி விசாரித்து அவளை மாற்றி வர சொல்ல அவளின் மிரண்ட முகத்தை கண்டு துணைக்கு சற்று தூரம் தள்ளி நின்றான்.சஹி, தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வரவும் காரைக் கிளப்பும் முன் சஹியின் கையைப் பிடித்து " என் வாழ்வின் கடைசி வரை உன்னை பாதுகாப்பா, மகிழ்ச்சியாக வைத்துக்கணும்னு உன்னை பார்த்த நாளிலிருந்து தோணுதுடி…எனக்கு நீ வாழ்க்கை வரம் தருவாயா…" என்று அவளின் கண் பார்த்து கேட்க சாஹித்யா தடுமாறினாள்.அவளின் தடுமாற்றம் கண்டு செழியனோ அவளை பார்த்து சிறு புன்னகையுடன் " ஹே ரிலாக்ஸ்…. டேக் யுவர் ஓன் டைம்…" என்று சொல்லியவாறே சஹியின் வீட்டிற்கு காரை செலுத்தினான்.

காரில் பயணித்து கொண்டிருந்த அபிஜித் சில மணி நேரங்களுக்கு முன் நடந்த நிகழ்வை யோசித்து கொண்டிருந்தான்.

" என்ன அபிஜித்… உன் காதலியை தேடுற போல…" என்று நக்கல் குரலில் கேட்க போனில் பேசினாலும் அந்த குரலை அடையாளம் கண்டு கொண்டான் அபிஜித்.

"டேய்...யோகேஷ்…. பன்னாடை பயலே! " என்று கோபமாக பேச அவனின் குரலில் " ஸ்ஸ்… சவுண்டு விடாதீங்க.. மிஸ்டர்.அபிஜித்… உங்க லவ்வர் இருக்கற இடம் தெரியணுமா? வேண்டாமா?".... என்று குழந்தை குரலில் மிமிக்ரி செய்ய அபிஜித் சட்டென்று நிதானமானான்.

ஒரு சிலரிடம் நமக்கு தேவையான விஷயங்களை வாங்க வேண்டுமென்றால் சில நேரங்களில் நாம் அவசரபடாமல் மீனுக்காக காத்திருக்கும் கொக்கினைப் போன்று காத்திருந்து காரியத்தை சாதிக்க வேண்டும். அபிஜித்தும் சாஹித்யா இருக்கும் இடம் யோகேஷ்க்கு தெரிந்த காரணத்தால் அமைதி காத்தான்.

யோகேஷூம் ஒரு விஷயத்தை கூறும் போது எதிராளியின் குரலில் அவன் குதுகலமடைந்து விஷயத்தை இழுத்து மற்றவர்களை கலவரப்படுத்தி அதில் குளிர் காய்வான். அபிஜித் தும் இவனை பற்றி அறிந்து வைத்திருந்ததால் அமைதியாக அவனை பேசவிட்டடான்.

" உன் முகத்தை பதற்றத்துடன் பார்க்கறப்ப இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?..." என்று கேலியோடும் குரலில் கேட்க அபிஜித்தோ " வந்து நேர்ல பாருடா…உனக்கு தில்லிருந்தா" என்று திருப்பி கொடுத்தான்.

"வரேன் டா...வந்து உன் முன்னாடி நிற்கிறேன்... அதற்கு முன் இதையும் நல்ல கேட்டுக்கோ…. கட்டுமான உலகில் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் அபிஜித்தின் காதலி… செல்வி. சாஹித்யா ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் அரிய காட்சி இதோ…" என்று சொல்லி அபிஜித்துக்கு வீடியோ ஒன்றை அனுப்பினான்.

அதை பதைபதைக்கும் நெஞ்சோடு பார்த்த அபிஜித் பல்லைக் கடித்துக் கொண்டே " பொருக்கி ராஸ்கல்… என் சஹிக்கு மட்டும் எதாச்சும் ஆகட்டும்… உன் முன்னாடி எமனா வந்து நிற்பேன் டா…." என்று நிதானமாக கூறினான். அவனின் நிதானம் எப்போதும் யோகேஷிற்கு பயம் தரும் ஒன்று.

யோகேஷ் அனுப்பிய வீடியோவில் சஹி சென்னை ஹைவே ரோட்டில் சென்று கொண்டிருப்பதை கணித்த அபி காரை விரைவாக ஓட்டினான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து சாஹித்யா தன் தாய் கங்கா, தந்தை மூர்த்தி, அவளின் நட்புகள், நட்புகளின் பெற்றோர் முன் முழுமையாக வீட்டுக்கு அபிஜித்தால் அழைத்து வரப்பட்டிருந்தாள்.

சாஹித்யா ஓரளவு ஆசுவாசமடைந்திருந்தாள். கண்ணில் கண்ணீருடன் ' அம்மா' என்ற அழைப்புடன் கங்காவை கட்டிக் கொண்டு கூறும் போது " ஆயிரம் அணைப்பில் வராத ஆறுதல் தன் தாயின் அணைப்பில் வரும் " என்பது சரியாக புரிந்தது. அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை...அவளை தர்ஷினி, பிரியா, விஷான் மூவரும் ரூமிற்கு கூட்டிச் சென்று கங்கா சூடாக கொடுத்த பாலை அருந்தி விட்டு படுக்க வைத்து அவளை சிரிக்க வைத்து அவளுடனே அருகில் படுத்துக் கொண்டனர். அதேநேரம் கங்கா, மூர்த்தியை தவிர அனைவரும் விடைபெற்று கிளம்பினர்.

கங்கா " என்னங்க" என்று மூர்த்தியின் நெஞ்சில் சாய்ந்து அழுக "ஸ்ஸ்.. ஒன்னுமில்லை கங்கா…. இது என்னை மிரட்ட என் பொண்ணை கடத்திருக்காங்க…. நீ ஏதும் பயப்படாதே… இதோட மறந்துட்டு சஹியை தேற்றும் வழியைப் பாரு…." என்று கங்காவின் கன்னத்தில் தட்டி அவரை தூங்க அனுப்பி விட்டு அபிஜித்துக்கு போனை போட்டார்.

அந்த பக்கம் அபி எடுத்தவுடன் மூர்த்தி ஹலோ சொல்லும் முன் " என்ன மிஸ்டர்.மூர்த்தி… சொன்ன மாதிரி உங்க பொண்ணை கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்திட்டேனா?..." என்று கர்வமான குரலில் கேட்க மூர்த்தியோ " நீயே கடத்திட்டு போய் நீயே கொண்டு வந்து விடுறது...என்ன பொழைப்போ…." என்று அருவருப்பான குரலில் கூற அபிஜித்தோ மனதுக்குள் ' எல்லாம் என் நேரம் யா.. வருங்கால மாமனாராச்சேன்னு கொஞ்சம் அடக்கி வாசிச்சா நீ ரொம்ப பண்ற மேன்' என்று புலம்பினான்.

"சரிங்க மிஸ்டர்.மூர்த்தி… இப்ப நான் என்ன பண்ணனும்?"

" தைரியம் இருந்தால் என்கிட்ட தொழிலில் மோதி என்னை ஜெயிச்சுக்காட்டு….".

" மிஸ்டர்.மூர்த்தி…. இப்போதைக்கு எல்லா முக்கிய பிராஜெக்ட்டும் என் கம்பெனி வசம்…. உயரப் பறந்தாலும் கீழே இறங்கி தான் ஆகனும்… உங்களை ஜெயிக்க வரையறை இருக்கா என்ன? என்று நக்கலாக கேட்டான்.

" வரையறை தானே… இருக்கு. எப்பவும் கட்டுமான தொழிற்துறையை பொருத்தவரை கடந்த இருபத்தைந்து வருஷமா பெஸ்ட் ஆர்க்கிடெட் அவார்டு என்னோட எம்.எம்.கம்பெனி தான் வாங்கிட்டு இருக்கேன். இந்த தடவை அதை உன் கம்பெனி வாங்கிட்டால் என் பொண்ணை உனக்கு கட்டி தரேன்…" என்று பழம் நழுவி பாலில் விழுந்தது மாதிரி மூர்த்திக்கு தெரியாமலே அபிஜித்துக்கு சஹியை அடையும் வாய்ப்பை வழங்கினார்.

அபிக்கு அவரின் சவாலில் புன்னகை வந்தாலும் " சரிங்க மிஸ்டர்.மூர்த்தி… உங்க சவாலில் நான் ஜெயிச்சா உங்க பொண்ணை எனக்கு அடுத்த நாளே கட்டி வைக்கணும்…" என்று அபி பேசி அதை ரெக்கார்ட் பண்ணிக் கொண்டான். அதே சமயம் மூர்த்தியும் ரெக்கார்ட் செய்தார்..

கடவுள் ( ரைட்டர்) அபிஜித்துக்கு சாஹித்யாவை தான் ஜோடி போட விரும்பிவிட்டால் யாரால் அதை தடுக்க இயலும்.

அதேநேரம் தூங்கிக் கொண்டிருந்த சாஹித்யாவிற்கு கனவில் இளஞ்செழியன் சிறுசிரிப்புடன் வந்து " என்னை பிடிச்சிருக்கா " என்று கேட்க அவள் பதறி எழுந்து பார்க்க அங்கே யாரும் இல்லாமல் தன் நட்புகள் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவளோ கனவில் அவனுக்கு பதிலளிக்காமல் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யார் காதிலும் விழாது " பிடிச்சிருக்கு" என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-15

*கன்னிப்பெண்ணிண் மனதிலே
காதலும் புகுந்து விட்டால்
அங்கே கனவு வர காத்திருப்பதும்
கனவிலே கட்டியணைப்பதும்
கள்வெறி கொள்ளும் ‌…..
காளையவனைக்கண்டால் எண்ணங்கள் உன்மத்தமாகும்…..*

எந்த ஆணிடம் ஒரு பெண் பாதுகாப்பை உணர்கிறாளோ அவனே அவளுக்கு ஏற்றவன். தன் அப்பா, அண்ணன், தம்பி இவர்கள் யாவரும் இரத்த சம்பந்த முடைய வர்கள். அவர்களிடம் பாதுகாப்பு உணர்வு இருப்பது சகஜம். அவ்வாறு இரத்த சம்பந்தமில்லாமல் இருக்கும் ஆணிடம் பாதுகாப்பை உணர்வது அதிசயம். அது நண்பனாக , கணவனாக கூட இருக்கலாம்.


சஹி கடத்தப்பட்டு ஒரு மாதம் ஓடிந்திருந்தது. சஹிக்கு இப்போதெல்லாம் செழியனின் நினைவாக இருந்தது. முன்பெல்லாம் அவனை எதிர்பாராமல் சந்தித்த நிகழ்வுகள் எல்லாம் இன்று அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமானது. அவன் அணைப்பில் எத்துணை ஆசுவாசமாக, வீடு சேர்ந்த பறவையாக உணர்ந்தாள்.அதை நினைக்கும் போதே மனம் ரகசியமாக மகிழ்ந்தது. தினமும் அவன் நினைவாகவே இருந்தது.அவனை காணாமல் எப்போது அவனை காண்போமென்று அவளின் வீட்டின் மொட்டை மாடியில் நிலாவை பார்த்துக் கொண்டிருக்க தட்டென்று சத்தம் கேட்டது.

அவள் யாரென்று பார்க்க கங்கா மாடிக் கதவை திறந்து வந்துக் கொண்டிருந்தார். "அம்மா… நீங்களா?"... என்று சஹி கேட்க கங்காவும் " ரொம்ப நேரம் தனியா நிற்காதேடா…. எதையும் யோசிக்காம இரு…. " என்று அக்கறையாக சொல்லவும் சஹி பதற்றத்துடன் " எ….எதை…. பற்றி யோசிக்கறேன்னு சொல்றீங்கம்மா… என்று தன் காதல் எதுவும் தெரிந்து விட்டதா? என்று படப்படப்புடன் கேட்டாள்.

அவளின் குரலில் கங்கா "இல்லடா… இன்னும் அந்த இன்சிடென்ட் பத்தி யோசிக்கிறீயோன்னு தான் கேட்டேன்…" என்று சொல்லவும் மெல்ல ஆசுவாசமானாள்.

"ச்ச..ச்ச… அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன் மா…" என்று பதிலளிக்கவும் அந்த பதிலில் கங்கா அவளின் தலையைக் கோதி விட்டு "சீக்கிரம் கீழே வா…" என்று சொல்லி சென்றார்.

சஹி, அங்கே போடப்பட்டிருந்த ஷோபாவில் அமர்ந்து சில நொடிகள் " என்னடி… ரொம்ப ஹாப்பியா என்னைப் பார்க்காம இருக்கப் போல…" என்று காதருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு முன்னே விழப்போன சஹியை தாங்கி அவள் முகத்தை பார்த்து " ஹேய்... பயப்படாதே...நான் தான்டி.." என்று சிரித்த முகத்துடன் அங்கே நின்றிருந்தான் செழியன்.

"நீங்களா… நீங்க எப்படி இங்கே வந்தீங்க…" என்று கலவரமாக சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே கேட்க அவளின் பயத்தை ரசனையோடு பார்த்து விட்டு " நீ பயப்பட தேவையே இல்லைடி…. யாரும் பார்க்க மாட்டாங்க…" என்று சொல்லி கொண்டே நெருங்கி அமர்ந்தான்.

அவனின் நெருக்கத்தில் ஒருவித மாயம் உடம்பில் நிகழ்ந்தாலும் " ப்ளீஸ்…. யாராச்சும் பார்த்துற போறாங்க… போயிருங்க…" என்று கெஞ்சினாள்.

"ஹ்க்கும்… சாஹித்யா வீட்டில மாடில என்ன நடக்குதுன்னு தான் பார்த்துட்டு இருக்காங்களாக்கும்….. போடி…" என்று அவளை இன்னும் நெருங்கினான்.

அவன் நெருங்க சஹி இம்சை தாங்காது சட்டென்று எழுந்து விடவும் " ஏன்டி...இது மாதிரி நாம் இருவரும் நெருங்கி அமர்ந்தது இல்லையா?"என்று புருவம் உயர்த்தி கேட்க சஹியோ காரில் அவனை அணைத்து ஆறுதலளித்தது நினைவு வந்து முகம் வெட்கத்தில் சிவந்தது. அவளது சிவந்த முகம் செழியனை முத்தமிட தூண்ட அவளது கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டு விட்டான்.

அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க அவனோ " ஜஸ்ட் சீக் கிஸ் ஒன்லி" என்று அசால்டாக சொன்னான்.

அவளோ போலிக்கோபத்துடன் " ஹௌ டேர் யு டு கிஸ் மீ? " என்று தள்ளிவிட அவனோ " ஹேய்… பொய் சொல்லாதடி…. நான் கிஸ் பண்ணது உனக்கு பிடிக்கலையா…. எங்கே என் முகத்தை பார்த்து சொல்லுடி" என்று சிறு சிரிப்புடன் சவாலாக கேட்டான்.

" அதெப்படி... நான் இன்னும் உங்களுக்கு பதில் சொல்லல... உங்களை எனக்கு பிடிச்சிருக்கா?பிடிக்கலையா..? என்று ஒன்னுமே சொல்லலை… அப்படி இருக்கறப்போ… எப்படி என்னை நீங்க கிஸ் பண்ணலாம்…? ஹ்ம்ம்…" என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே வெளியே முகத்தை கடுமையாக வைத்து கேட்டாள்.

" எப்படி கிஸ் பண்ணேன்" என்று அவன் யோசிக்கிற மாதிரி பாவ்லா பண்ணிவிட்டு " இதோ...இப்படி தான் "என்று அவளின் சிவந்த உதட்டில் தனது பருத்த சிவந்த உதடுகளை வைத்து அழுத்தினான்…. முத்தமிட்டு கொண்டே அவளின் இடுப்பை அழுத்தி பிடிக்க அவளுக்கு அது உடும்பு பிடியாக வலித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் அவனின் சட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து தன்னிலை உணர்ந்த செழியன் சஹியை பார்க்க அவள் இருந்த கோலம் அவளை மீண்டும் முத்தமிட அழைத்தது.

இருந்தாலும் அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறதா... இல்லையா…. என்று அவள் வாய்மொழியாக கேட்க ஆசைக் கொண்டு சஹியை விட்டு விலக சஹி அவன் முகம் பார்க்க வெட்கங்கொண்டாள்.

" ஹேய்… இப்பவாவது என்கிட்ட சொல்லுடி…."

" என்ன சொல்லணும்…. "என்று தெரியாத மாதிரி கேட்டாள்.

"நிஜமா நான் சொல்றது புரியலையா? இல்லை..என்னை கெஞ்ச வைக்கிறீயா..?" என்று சந்தேகமாக கேட்டான்.

" நிஜமா புரியல…." என்று அவன் முகம் பார்த்து சொல்லி விட்டு தலைகுனிந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவன் சிறு கடுப்புடன் " ஓபனாவே கேட்கறேன்டி…. என்னை உனக்கு பிடிச்சிருக்கா…?என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?" என்று கேட்டான்.

அவளோ அவனை இன்னும் சோதிக்கும் நோக்கத்தில் " ஹ்ம்ம்" என்று யோசித்து விட்டு " பிடிக்கல… போடா…" என்று ஓட எத்தனிக்க அவளை ஓட விடாமல் பிடித்தவனின் கை அவளின் நைட் ட்ரஸ்ஸில் பிடிக்க போய் அது கிழிந்து அவன் கையோடு வந்துவிட்டது. அவன் கிழித்த இடத்தை இருவரும் பார்க்க அவன் தர்மசங்கடமாகவும் அவள் அதிர்ச்சியாகவும் பார்த்தனர்.

இருவருக்குமே அந்த சூழ்நிலையை கடக்க சில நிமிடங்கள் ஆனது.

முதலில் சுதாரித்த செழியன் " உன்னை யாருடி...ஓட சொன்னது…. இப்ப பாரு ட்ரெஸ் கிழிஞ்சிருச்சு" என்று அவளை சகஜமாக்கும் பொருட்டு வம்பிழுத்தான். அவன் எதிர் பார்த்த மாதிரியே சஹியும் " ஏன்டா...பண்றது எல்லாம் பண்ணிட்டு பழியை தூக்கி என் மேலயா போடுற…. " என்று உட்கார்ந்திருந்தவனின் காதைப் பிடித்து திருக உட்கார்ந்திருந்தவனுக்கோ அவளின் கிழிந்து இருந்த இடம் அவன் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. சரியாக அவளின் நாபிக்குழல் தெரிய அந்த இரவு உடை கிழிந்திருந்தது.

அவனின் பார்வை போகும் இடம் கண்டு " பிராடு பயலே!... கண்ணை நோண்டிருவேன்… பாத்துக்க…" என்று மிரட்டலாக சொல்ல அவனோ சட்டென்று அவளின் நாபியில் முத்தமிட்டு விட்டான்.

சஹியோ அவனின் செய்கையில் "பளார்" என்று அறைந்து விட அவனோ அவளடித்த கன்னத்தை தடவிக்கொண்டே " ஏன்டி அடிச்ச? ஹார்மோன் ஓவரா சுரக்குதுடி… அதோட எஃபெக்ட் தான் இது…" என்று பாவமாக கூறவும் பக்கென்று சிரித்து விட்டாள்.

அவளது சிரிப்பை பார்த்து "சாரிடி… இனிமேல் இப்படி நடக்காது… ரியலி ஐ கான்ட் கண்ட்ரோல் மை ஃபீலிங்ஸ்… " என்று கூறிவிட்டு சஹியின் முகம் பார்க்க " சாரி… நானும் அடிச்சிருக்க கூடாது…" என்று மன்னிப்பு கேட்க அவளின் அந்த குணத்தை கண்டு ஏதேதோ எண்ணங்கள் தோன்ற தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டான்.பிறகு சஹியிடம் " சரி...நீ போடி… வந்து ரொம்ப நேரம் ஆச்சு…" என்று அவள் கீழே போகும் வரை பார்த்து விட்டு கிளம்பினான்.

இரவு உணவு உண்டுவிட்டு சஹி தனது அறைக்கு சென்று விட மூர்த்தி கங்காவிடம் தான் அபிஜித் திடம் விட்ட சவாலைப் பற்றி கூறலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருக்க கங்கா அவர் தோளைத் தொடவும் யோசனை கலைந்து என்னவென்று அவர் பார்க்க கங்கா " என்ன யோசனைங்க? எப்போதும் இப்படி இருக்க மாட்டிங்களே… எதுவும் பிரச்சினை யா…?" என்று கேள்வி கேட்க மூர்த்தி " பிரச்சினை எல்லாம் இல்லைமா…. எனக்கு நீ பதில் சொல்லு… முதலில் நான் கேட்கிற கேள்விக்கு …. " என்று தயக்கத்துடன் கேட்க அவரின் தயக்கம் கங்காவிற்கு புதிதாக இருந்தது.

ஏனெனில் மூர்த்தி எதிரே இருப்பவரின் மனதை பற்றியெல்லாம் ஏதும் யோசிக்காமல் பட்டென்று பேசிவிடுபவர். அப்படிப்பட்டவர் தயங்குவதைப் பார்த்தால் கங்காவிற்கு மயக்கம் வராத குறைதான்.

" முதலில் நீங்கள் கேளுங்க… அதைக் கேட்டுட்டு நான் அப்பறம் பதில் சொல்றேன்" என்றார் கங்கா.

" அது...அது…" என்று இழுத்து விட்டு " உனக்கு நான் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும்… என்று நம்புகிறாயா?" என்று முகம் பார்க்காமல் கேட்க கங்கா " இதுல என்ன உங்களுக்கு டவுட்… நம்ம குடும்பம் நல்லாயிருக்கணும்னு தானே நீங்கள் ஆயிரம் தடவை யோசிச்சு முடிவு எடுத்துருப்பீங்க…" என்று பெருமையாக சொன்னதை கேட்டு மூர்த்தியோ மனதுக்குள் ' அந்த நொடி யோசிக்காமல் வார்த்தையை விட்டதை எண்ணி நொந்து கொண்டார்'. பின் சுதாரித்து விட்டு கங்காவிடம் " அது அடுத்த வருஷத்துகுள்ள நம்ம சஹிக்கு கல்யாணம் பண்ணிறலாம்னு யோசித்து வச்சிருக்கேன்…" என்று நயமாக சொன்னார்.

கங்கா அதை ஆமோதிக்கவுமில்லை...எதிர்க்கவுமில்லை… இப்ப என்ன அவசரம் என்ற கேள்வியை கண்களால் கேட்கவும் அதைப் புரிந்து கொண்டு மூர்த்தி, "இல்லை… எனக்கு தெரிஞ்சவங்க சஹியைப் பொண்ணு கேட்டுருக்காங்க…. அதுதான் அவளுக்கு அடுத்த வருஷம் பண்ணிடலாமேன்னு ஒரு எண்ணம் " என்று சொல்லி சமாளித்தார்.

"எங்க… இதுக்கு முதல்ல உங்க பொண்ணு சம்மதிப்பாளா…." என்று நக்கலாக கேட்க

" அவ என் பொண்ணு… எப்படியிருந்தாலும் அவளை சம்மதிக்க வைச்சிருவேன்…." என்று மூர்த்தி அவருக்கு பதிலளித்தார்.

" அப்ப எனக்கு பொண்ணு இல்லையா?" என்று கங்கா எகனைக்கு மோகனையா கேட்க அவரை கடுப்பாக பார்த்த மூர்த்தி " ஏன்டி… இப்படி சோதிக்கிற…" என்று பாவமாக கேட்டார்.

" இல்லைங்க…. உங்க பொண்ணு காலேஜ் முடிச்ச பிறகு வேற கம்பெனியில வேலை பார்க்கற ஐடியா ல இருக்கா…. இதுல கல்யாணம் அப்படின்னு வரும் போது சம்மதிப்பாளா…" என்று சந்தேகமாக கேட்க மூர்த்திக்கு இந்த விஷயம் புதிது… ஆதலால் அவர் அதிர்ச்சியாக " என்ன வேற கம்பெனிக்கா…. ஏன்? நம்ம கம்பெனில பொறுப்பெடுத்துக்க மாட்டாம… வேற எங்கே போய் வேலை பார்க்கிற ஐடியா? " என்று கோபத்துடன் கேட்க கங்காவோ பீறிட்டு வரும் சிரிப்பை வாய்க்குள்ளே அடக்கி " ஹ்ம்… வேற நல்ல கம்பெனில வேலை பார்ப்பாளாக்கும் …" என்று கிண்டலாக சொல்லிவிட்டு ரூம்க்கு ஓடி விட்டார். மூர்த்தி அவர் சொல்லி சென்றதை கிரகித்துக் கொள்ள " அடிக்கழுதை…. என்னைய கலாய்ச்சிட்டியே…" என்று தன் மனைவியின் கிண்டலை ரசித்து கொண்டே உறங்கச் சென்றார்.

இரவு பத்து மணிக்கு சஹியின் மொபைலில் டிங் என்று சத்தம் வர உறங்காதவளோ அதை எடுத்து பார்க்க செழியன் தான் மெசேஜ் பண்ணிருந்தான்.

"வாட் டூ யூ டூயுங்?.... "என்று அவன் அனுப்பிருக்க சஹிக்கு அவனின் நம்பர் தெரிந்திருந்தாலும் அவன் டென்ஷனாகி பார்க்க ஆசைக் கொண்டு " எக்ஸ்கியூஸ் மீ…. மே ஐ நோ யுவர் நேம்?" என்று பதில் அனுப்பினாள்.

அவள் அனுப்பிய அடுத்த நொடியே அவனிடம் இருந்து " உன்னோட வருங்காலம்…." என்று பதில் வந்திருந்தது.

அதை புன்சிரிப்புடன் இரண்டு தடவை மனதில் தோன்றிய மகிழ்ச்சியுடன் வாசித்து விட்டு "ஓஹோ… குடுகுடுப்பைக்காரனா?" என்று கேட்டு அனுப்பியிருக்க அவளின் பதிலில் அவனுக்கு ரசனை வந்தாலும் மனதுக்குள் ' ராட்சசி…. இவளுக்கு உள்ள கொழுப்பை பாரேன்' என்று சிரித்துவிட்டு அவளுக்கு வீடியோ கால் பண்ணினான்.

சஹி அவன் வீடியோ காலில் அழைக்கவும் மிகவும் படப்படப்பாக உணர்ந்தாள். மெதுவாக அதை ஆன் செய்து பார்க்க அந்த பக்கம் செழியன் கையில்லாத டீசர்ட்டும் ஷார்ட்ஸ்ம் அணிந்து தோரணையாக ஷோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

" என்னங்க மேடம் உங்க வருங்காலம் கண்ணுக்கு தெரிகிறேனா"

" நல்லாவே தெரியுது மிஸ்டர்ர்ர்…. என்று இழுக்க அவள் குறும்பு தனத்தில் அவன் " என்ன தெரிகிறது…?" என்று இவனும் கிண்டலில் இறங்க " ஹ்ம்ம்… தெரியுது...தெரியுது…" என்று பதிலளித்தபின் " எதுக்கு இந்த நேரத்தில் போன் பண்றீங்க…" என்று கேள்வி கேட்க செழியன் " இல்லை… என் நம்பர் உன்கிட்ட இருக்கு தானே.." என்று கேட்க " ஆமாம்… எனக்கு தெரியாமலே உங்க நம்பர் என் மொபைலில் கான்டெக்ட் லிஸ்ட்ல இருக்கு… யாரு ஏத்திருப்பாங்கன்னு தெரியல…" என்று கூறவும் இவனுக்கு உண்மை தெரியுமாதலால் "அதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கு இல்லை" என்று சிரிப்புடன் கூற அவள் முறைத்து பார்த்து விட்டு " எனக்கு தூக்கம் வருது" என்று கூற அவன்
பாட ஆரம்பித்தான்…

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை...
கண்களை....
இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை...
மூன்றாவது ....
முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே.
முத்தத்தை…

அவனின் சிறிதும் பிசிறில்லாத குரலில் சஹி மயங்கி போனாள்…. அவன் அவளின் கண்களை பார்த்து கொண்டே " என்னடி...கண்ணு சொக்குதா… குட் நைட்... "என்று பறக்கும் முத்தம் வைத்தான்.

அவளும் " குட்நைட்…ஐ லவ் யுவர் வாய்ஸ்…"என்று கண்ணடித்து வைத்து விட்டாள்.

செழியனோ " அடியே! லவ் யூ சொல்லாம லவ் யுவர் வாய்ஸ்னு சொல்லிட்டியே" என்று தூங்க போனான்.

அதே இரவு நேரத்தில் அபிஜித் மூர்த்தியின் வாக்கை எப்படியாவது நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். அப்போது அவன் தந்தை கபிலனிடம் பேசினால் மனம் தெளிவாக இருக்கும் என்று அவருக்கு கால் செய்தான். அடுத்த நொடியே கால் அட்டென்ட் செய்த கபிலன் " சொல்லுப்பா…. இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்க… ஏதும் முக்கியமான விஷயம் இல்லாமல் கால் பண்ண மாட்டியே…" என்று அவனை புரிந்து கொண்டு கேட்க அவனும் தன் தந்தையை மனதினுள் மெச்சிக்கொண்டே புன்சிரிப்புடன் " எஸ்...டாடி… முக்கியமான விஷயம் தான்…" என்று சொல்லி "ஹ்ம்... சொல்லுப்பா…" என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தார்.

அபிஜித்தும், சஹி கடத்தலில் ஆரம்பித்து மூர்த்தி பேசியதையும் பின் அவரின் சவால் பற்றியும் சொல்ல அதை முழுவதும் கேட்ட கபிலன் " வாய்ப்பு அதுவா வருது… இதுல உன்னோட ஹார்டுவொர்க் தான் ரொம்ப முக்கியம்… எவ்ளோ அழகா பிஸ்னஸை ஹான்டில் பண்ற … இதுல எதுக்கு டென்ஷன் ஆகுற... ஹ்ம்ம்.." என்று கேட்க " இல்ல டாடி… கண்டிப்பாக மூர்த்தி எப்படியிருந்தாலும் பெஸ்ட் ஆர்க்கிடெட் கம்பெனி அவார்டு நான் வாங்க கூடாதுன்னு கடைசி நிமிடம் வரை போராடுவாரு..." என்று சொல்லி கொண்டிருக்கையில் கபிலனோ, " மூர்த்தி கடைசி நிமிடம் வரை போராடுனா நீ கடைசி நொடி வரை போராடு…" என்று கபிலன் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜூனனுக்கு போதித்த கீதை மந்திரம் போல சொல்ல அதை மனதில் வாங்கினான்.

" டாடி…. என்னைய என்கரேஜ் பண்ண ஒரு திருக்குறள் எப்போவும் சொல்லுவீங்களே ! இப்ப ஒன்னு சொல்லுங்க ப்ளீஸ்…" என்று கேட்கவும் தன் பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற திருக்குறள் சொல்லி அதற்கு அர்த்தமும் கற்பித்தார் கபிலன். அந்த குறள்….

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற….

இதற்கு அர்த்தம் என்னன்னா, ஒரு தொழிலின் திட்பம் (உறுதி) என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் உறுதியே ஆகும்.மற்றவை எல்லாம் வேறானவை… என்பது தான் இதனோட பொருள்.

"நீ எத்துணை உறுதியா ஒரு விஷயத்தில் இறங்கிறியோ அந்த விஷயத்துக்கு நீ எவ்ளோ விடாமுயற்சி பண்றீயோ… கண்டிப்பா அந்த விஷயம் உன்னை கைவிட்டு போகாது…. உன்னை நம்பு… உனக்கு கைக் கொடுப்பான் இறைவன்…. ஆல் தி பெஸ்ட்… " என்று சொல்ல அபிஜித் " தாங்க்யு டாடி… தாங்க்ஸ் ஃபார் ஆல் யுவர் லவ்லி வேர்ட்ஸ்… குட்நைட்…" என்று கூறிவிட்டு தூங்கிப் போனான்.

கபிலனும் திருப்தியுடன் பேசிவிட்டு வைக்க ஜீவிகா அவருக்கு பால் கொண்டு வந்து தந்துவிட்டு "யார்க்கிட்டங்க இவ்வளோ நேரம் ரம்பம் போட்டுட்டு இருந்தீங்க…." என்று கிண்டலாக கேட்டார். அதற்கு கபிலனும் சிரித்துக் கொண்டே " ஹ்ம்… வேற யார்? உன் பையன் கிட்ட தான்…" எனவும் " எது… ஜித்தா கிட்டயா? நானும் பேசிருப்பேன்ல…. "என்று ஆதங்கப்பட்டார்.

"ஹே! அவனுக்கு கொஞ்சம் டென்ஷன் டி… அதுதான் என்கிட்ட பேசினான்… உன் கிட்ட நாளைக்கு பேசுவான்…" என்று கூறிவிட்டு அபிஜித் பேசியதை முழுதாக கூறினார்.

அனைத்தையும் கேட்ட ஜீவிகா " என் புள்ள ஜெய்ப்பான்ங்க… இதுல என்ன டவுட்" என்று தாயாக பெருமையுடன் சொன்னார்.

அடுத்த நாள் காலை…

ஜீவா மூர்த்தியின் வருகையை எதிர்பார்த்து அவரின் கம்பெனியில் காத்திருந்தான்… ஏனெனில் நேற்று இரவே அபிஜித் திடம் மூர்த்தி பேசியது , அவனிடம் சவால் விட்டது என்று அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான். மூர்த்தி கம்பெனியில் நுழைந்த அடுத்த நொடியே அவரின் ரூமிற்கு சென்று கதவை தட்டாமல் உள்ளே நுழைய அவனை புருவம் சுருக்கி பார்த்தார்.

அவரின் பார்வையை புரிந்து கொண்டு " என்ன சித்தப்பா… இப்ப இந்த சவால் தேவையா? உங்களுக்கு அபிஜித் பற்றி தெரியுமா? தெரியாதா?.... இதெல்லாம் அவன் அசால்டாக ஜெயிக்க கூடியவன்… அவனுக்கு நீங்க லட்டு மாதிரி சஹியை கல்யாணம் பண்ணி வைங்க…என்னமோ போங்க…" என்று பொரிந்து கொட்டினான்.

அவனின் பேச்சு மூர்த்திக்கு சற்று எரிச்சலை தந்தாலும் " என்னடா… எப்ப பாரு அவன் புகழைப் பாடிட்டே இருக்க… அவன் ஜெயிக்க அவ்வளவு சீக்கிரம் விட்டுருவேனா? அதுக்கெல்லாம் கடைசி நிமிஷம் வரை பிளான் வச்சிருக்கேன்… அதை எல்லாம் எப்படி தகர்க்கிறான்னு நானும் பார்க்கிறேன்…. இப்ப இன்னிக்கு என்ன என்ன பிராஜெக்ட் இன்னும் பெண்டிங்ல இருக்கு? போய் அதைக் கொண்டு வா…. போ" என்று அவனை வேலை ஏவினார்.

அவரின் அறையை விட்டு வெளியே வந்த ஜீவா தனது கேபினில் நுழைந்து வாய் விட்டே " யோவ்.. சித்தப்பா... இங்க என்ன மகாபாரதமா நடக்குது… பெத்த பொண்ணு… அதும் ஒத்த பொண்ணை அவ அனுமதி கேட்காமல்… என்ன பண்ணி வச்சிருக்க… சஹிக்கு நியூஸ் தெரியும் போது இருக்கு உனக்கு… அய்யோ… என் தங்கச்சி பாவம்… என்று புலம்பிக் கொண்டே மூர்த்தி
கேட்ட பிராஜெக்ட் ஃபைலை எடுத்துக் கொண்டு போனான்.

சஹி லேட்டாக எழுந்து அவசர அவசரமாக காலேஜிற்கு அவள் கிளம்பும் நேரத்தில் மெசேஜ் சவுண்ட் வரவும் அதைப் பார்த்து கொண்டே கங்காவிடம் விடைபெற்று கிளம்பினாள்…

அதேவேளை செழியனிடமிருந்து " ஐ அம் வெயிட்டிங் பார் யூ இன் பஸ் ஸ்டாண்ட்…. கம் பாஸ்ட்…" என்று வந்திருந்தது…..

இருவர் ஆடும்
பரமபத விளையாட்டில்
மாட்டிக் கொண்டு
இரு உயிர் பிழைத்திடுமோ?
இல்லை பிரிந்திடுமோ?

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோஸ்!
ஒரு டவுட் வந்துச்சு இப்ப... நான் கதை எப்படி எழுதறேன்... கொஞ்சம் படிக்கிறவங்க வந்து சொல்லிட்டு போங்க... ப்ளீஸ்...
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 16

செழியன் சஹியிடம் தினமும் போனிலும் நேரிலும் காதல் செய்து கொண்டிருக்க நாட்களும் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன. சஹி, செழியனிடம் பேசுவது அனைத்தும் ஸ்வீட் நத்திங்ஸ் தான்..

ஒருநாள்…. செழியன் காலேஜ் பக்கத்தில் இருக்கும் பிரபலமான காஃபி ஷாப்பில் சஹியை வர சொல்லிருங்க… சஹியும் தன் நட்புகளை சமாளித்து கொண்டு அவன் சொன்ன இடத்தில் வந்து நிற்க அவனைக் காணாமல் சுற்றும் முற்றும் பார்க்க அவளின் கையைப் பிடித்து அவன் ரிசர்வ் செய்த டேபிளுக்கு கூட்டி சென்றான்.

"என்ன செழியன்… அப்படி என்ன அவசரம்….. அங்கே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சந்தேகமா பார்க்கிறாங்க…."

" இல்லடி… ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"

"அதை போன்லயே சொல்லலாமே…. நேர்ல வந்து சொல்ற அளவுக்கு அது அவ்ளோ முக்கியமான விஷயமா?"

"ஆமாடி… ஒரு இரண்டு, மூன்று தடவை தான் என்னை பார்த்திருப்ப…. அப்பறம் ஒரு சந்தர்ப்பத்தில தான் உன்னை காப்பாற்றி உன்கிட்ட லவ்வும் சொன்னேன்… ஆனால் என்னைப் பற்றி இதுவரை எதுவும் கேட்கல… ஏன்? என் மேல அவ்ளோ நம்பிக்கையா… சஹி?" என்று கரகரத்த குரலில் கேட்டான்.

அவனின் குரல் அவளை இளக வைத்தாலும் அவனின் கேள்விக்கு
பதில் சொல்லும் நோக்கில் " காதலென்பது யாரு...எவருன்னு தெரியாம வர்றது…. ஒருத்தரை பார்த்த உடனே காதல் வரும்… பார்க்காம கூட காதல் வரும்.. ஆனால் எப்போ எப்படின்னு வரும்னு சொல்ல முடியாது. உங்களை நான் பார்த்த முதல் நாளிலிருந்து நமக்குள்ள சண்டை தான் போட்டுருக்கோம்…. ஏதோ ஒரு நொடியில் உங்க மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கு…. அது உங்ககிட்ட பாதுகாப்பா இருந்தது கூட காரணமாக இருக்கலாம்" என்று ஒரு நீண்ட விளக்கம் அளித்தாள்.

" தேவுடே…. " என்று தலையில் கைவைக்க அவனின் செய்கையில் அவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர பக்கென்று சிரித்து விட்டாள்.

சிரித்துக் கொண்டே சஹி, "ஹ்ம்ம்… இப்ப எதுக்கு இந்த ரியாக்ஷன் கொடுக்கறீங்க…." என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவளின் கன்னத்தை கிள்ளிவிட்டு " ஏன்டி…. நம்பிக்கை என் மேல இருக்கா? இல்லையான்னு கேட்டா நீ என்னடி.. டூ மார்க் கொஸ்டினுக்கு ஃபைவ் மார்க்ல பதில் சொல்ற ஹ்ம்ம்… இப்படி தான் எக்ஸாமும் எழுதுவியாடி…. என்று செல்லமாக தலையில் கொட்டினான். தன் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே சஹி அவனைப் பார்த்து "இப்ப என்ன? உங்கள் மேல் எனக்கு முழுசா நம்பிக்கை இருக்கு… போதுமா? " என்று கூறினாள்.

அவளின் வார்த்தையில் அவன் பெருமிதம் அடைந்தாலும் "சரி… நான் என்னை பற்றி சொல்றேன்… அதைக் கேட்டுக்கோ… ஓகே…" என்று செழியன் சொல்ல சஹியும் " இவ்வளோ நாள் உங்களை பற்றி கேட்க மறந்துட்டேனே…" என்று கூறி அசடு வழிந்தாள்…

"ஹே! நாம லவ் பண்ணி இப்ப ஒரு மன்த் தான் முடிஞ்சிருக்கு... மெதுவாக நம்மளை பத்தி தெரிஞ்சிக்கலாம்…ஒன்னும் பிரச்சினையில்லை…" என்று சமாதானம் செய்துவிட்டு அவனின் குடும்பத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தான்…

ஆர்டர் பண்ண டர்கீஷ் காஃபி வரவும் அதை அருந்தியவாறே தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கினான்.

"ஹ்ம்ம்… என் பெயர் இளஞ்செழியன்...அப்பா பேரு நெடுஞ்செழியன்… அம்மா பேரு..பார்வதி… ஆச்சி பேரு நாச்சியார்... எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா… அவ பேரு வானதி… நான் ஏ.ஜெ.கன்ஸ்ட்ரெக்ஷன்ல வேலை பார்க்கிறேன்… அய்யா தான் அங்க எல்லாமே…" என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

அவன் சொல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியாகவும் அதேவேளை அவன் குடும்பத்தை பற்றி சொல்லியதை கேட்டு அதிக கவனத்துடன் கேட்டுக் கொண்டே வந்தவள் " வாவ்! உங்களுக்கு தங்கச்சி இருக்காங்களா? அவங்களுக்கு என் வயசா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க செழியனும் சிரித்துக் கொண்டே "ஆமா வானுக்குட்டி இப்ப செகண்ட் இயர் படிக்கிறா... உன்னை விட ஒரு வயசு கம்மி…" என்று சொல்லி அவளுக்கும் நாச்சியாருக்கும் இடையே நடக்கும் சண்டைகள், அவளின் குறும்பு தனத்தை பற்றி சொல்ல சஹிக்கு வானதியிடம் பேச ஆசை பிறந்தது.அதை அவனிடம் சொல்ல "ஒருநாள் கண்டிப்பா உன்னை அவளிடம் பேச வைக்கிறேன்… அப்பறம் என்னைப் பற்றி ஒரு முக்கியமான விஷயம்…" என்று பீடிகையுடன் தொடங்க அவனின் கம்பெனியில் இருந்து அழைப்பு வர அதை அட்டெண்ட் செய்து மறுப்பக்கம் சொன்ன செய்தியைக் கேட்டு முகம் இறுக " கம்மிங்...கம்மிங்…" என்று கட் பண்ணினான்.

சஹி கேள்வியுடன் பார்க்க " சாரிடி...ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு…. நான் அடுத்த மீட்ல சொல்ல வந்ததை சொல்றேன்… பை..டேக் கேர்…"என்று பில்லை கட்டி விட்டு கிளம்பினான்…

சஹியும் அவன் வேலையின் அழுத்தம் பற்றி புரிந்து அவனை வழியனுப்பி வைத்தாள். பின் கல்லூரி நோக்கி போக அங்கே அவளின் நட்புகள் அனைவரும் கேண்டீனில் அமர்ந்திருந்தனர். அவள் அவர்களை நோக்கி போக அனைவரும் அமைதியாக அமர்ந்து வெறித்த பார்வை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

"என்னாச்சு… ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க…" என்று பொதுவாக கேட்க தர்ஷினியும் விஷானும் அமைதியாக இருக்க பிரியா வாயை திறந்து " அது ஒன்னுமில்லை சஹி… நம்ம கேங்ல ஒரு லூசுக்கு லவ் வந்துருக்கு… " என்று சொல்ல சஹியோ மனதுக்குள் அதிர்ந்து தன் காதல் பற்றி தான் சொல்லாமல் அவர்கள் கண்டுபிடித்த குற்ற உணர்வுடன் " எப்... எப்படி தெரியும்?..." என்று திக்கிக் கொண்டு கேட்டாள்.

அவளின் திக்கலை வித்தியாசமாய் பார்த்த பிரியா, " ஹே..ஏன்டி நீ திக்குற… அந்த காதலை சொன்ன புறா யாரு தெரியுமா?... யார்கிட்ட சொன்னாங்க தெரியுமா?... " என்று கேள்வி கேட்க சஹி, "தெரியலையே… நீயே சொல்லுடி…" என்று படப்படப்பாக சொல்ல பிரியா அவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு " இதோ இவள் தான்…இவ தான் லவ் பண்றாளாம்… " என்று தர்ஷினியை நோக்கி கைக் காட்ட சஹி அதிர்ந்து போய் சில நொடிகள் நின்றாலும் பின் சுதாரித்து விட்டு தர்ஷினியை நோக்கி " காங்கிராட்ஸ் தர்ஷூ! யாரு அந்த கேண்டீன் ஓனரா?" என்று கிண்டலாக கேட்டாள்.

தர்ஷினி சஹியை பார்த்து " ஹ்க்கும் கேண்டீன் ஓனரா லவ் பண்ணிருந்தா இந்நேரம் வித விதமா ஸ்னாக்ஸ் கிடைச்சிருக்கும்…. நான் லவ் பண்ணது…." என்று நிறுத்தி விட்டு விஷானை பார்த்து கொண்டே " அது ஒரு காக்கா…."என்று தலையில் தட்டிக் கொண்டாள்.

சஹி குழப்பத்துடன் "எது? காக்கா வா? என்னடி சொல்ற… ஒன்னும் புரியலயே! " என்று குழப்பமாக கேட்க விஷானோ அவளைப் பார்த்து " சஹி! இவ என்கிட்ட லவ்வை சொல்லிட்டா…" என்று கண்ணைக் கசக்க அவனை அதிர்ச்சியுடன் பார்த்த சஹி " ச்ச! அவளுக்கு அவ்ளோ மட்டமான டேஸ்ட் இல்லை" என்று நண்பன் என்றும் பாராமல் காலை வாரி விட்டாள்.

சஹி சொன்ன விதத்தில் தர்ஷினியும் பிரியாவும் சிரித்தனர் என்றால் விஷானோ முறைத்து கொண்டிருந்தான்.

சஹிக்கு அவனின் முறைப்பில் சிரிப்பு வந்தாலும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு " எதுக்கும் மறுபரிசீலனை பண்ணுடி…" என்று தர்ஷினியை பார்த்து கண்ணடித்தாள்.

விஷான் இவர்களின் உரையாடலை கடுப்பாக பார்த்து விட்டு " இப்ப… எதுக்கு லூசு இது மாதிரி பேசிட்டு இருக்க… அவளை எனக்கு பிரெண்டா பிடிக்கும்… ஆனால் இவளை கனவுல கூட காதலியா ஏத்துக்க முடியாது… குண்டு பூசணி…ஆளைப்பாரு… என்று முகத்தில் அடித்தது போன்று சொல்லிவிட்டு சென்றான்.அவன் சொன்னதைக் கேட்டு தர்ஷினி விக்கித்துப் போக சஹியும் பிரியாவும் அவன் இப்படி சொல்லி விட்டு செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் அதிர்ந்த முகமே சொல்லியது.

அவர்கள் இருவரும் திரும்பி தர்ஷினியை சமாதானப் படுத்த நினைத்து அவளின் தோளில் கைவைக்க அவளின் முகம் இறுகிப் போய் இருந்தது.

" ஹே.. தர்ஷூ அவன் கிடக்குறான்… நீ ஏதும் ஃபீல் பண்ணாத.." என்று சமாதானம் சொல்ல தர்ஷினியோ " அவனுக்கு என் காதலை மறுக்க உரிமை இருக்கு… ஆனால் என் உடல் வாகை விமர்சனம் பண்ண உரிமையில்லை… இனிமேல் தான் அதிகமா சாப்பிட போறேன்…. நான் எப்படி இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்…. கண்ட பன்னாடை முடிவு பண்ணக்கூடாது. ஏதாச்சும் டயட் பத்தி பேசட்டும்...அப்போ இருக்கு அவனுக்கு… போய் சமோசா இருக்கான்னு பாக்கலாம் வாங்க" என்று கூறிவிட்டு கெத்தாக நடந்தாள். அவளது ஆட்டிடியூட் கண்டு சஹியும் பிரியாவும் புன்னகைத்துக் கொண்டனர்.

அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது. அதனுள் நுழையும் போதே சிறு வெளிச்சம் தெரிய கண்கள் திறந்து பார்க்க இருட்டு கொஞ்சம் பழக்கமாக கண்களை மூடி மறுபடி திறக்க அந்த அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.என்ன என்று உணரும் முன்னே அவனை கட்டி வைத்திருந்த நாற்காலி ரோடு பறந்திருந்தான் அவன்- யோகேஷ்.
அவன் முன்னே ஆக்ரோஷமாக அபிஜித் நின்றிருக்க அவனருகில் கதிரும் மித்ரனும் நின்றிருந்தனர்.

அவன் உதைத்த வேகத்தில் யோகேஷிற்கு தலை தரையில் மோதியதில் இரத்தம் பீறிட்டு வர அவனை தூக்கி நிறுத்தினர் கதிரும் மித்ரனும். அவர்கள் இருவரும் இருட்டில் நின்றிருந்தனர்.

தலையில் ஒழுகும் இரத்தத்தை துடைக்க முடியாமல் ஏதும் செய்ய முடியாத நிலையை நினைத்து கோபமாக " டேய்… கையை அவுத்து விடுடா….பிளடி… கட்டிப் போட்டு அடிக்கிறது எல்லாம் ஒரு வீரமா?... த்தூ… " என்று துப்பினான். அவன் பேசிய பேச்சு மற்ற இருவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது... ஆனால் அபிஜித் வெகு நிதானமாக பார்க்கவும் யோகேஷ் பேச்சை நிறுத்திவிட்டு கண்களில் சிறு பயம் மின்ன பார்த்தான்.

அபிஜித் அவன் கண்களை உற்று நோக்கி உச் கொட்டி " என்ன யோகேஷ்… இப்படி அவசரப் பட்டுட்டியே… இதுக்கும் சேர்த்து கொடுக்க வைக்கறீயே! "என்று நக்கலாக கேட்டு விசிலடித்தான்.

" இங்கே பாரு அபிஜித்… அதுதான் உன் ஆளு முழுசா திரும்பி வந்துட்டாளே…. இதோட விட்டுடு… அதான் உனக்கு நல்லது…" என்று கெஞ்சிக் கொண்டே மிரட்டினான்.

அவனை கேலியுடன் பார்த்த அபிஜித், " இதோடா…. என் வீட்டுப் பெண் மீது நீ கை வைப்ப… அவ திரும்பி பத்திரமா வந்துட்டானு உன்னை நான் விட்டுரனுமா? நல்லாயிருக்கே… இந்த டீல்… நீ கை தானே வைச்ச… நான் காலே வைப்பேன் டா… என்று யோகேஷின் நெஞ்சில் மிதித்து கொண்டேயிருக்க அவனை மித்ரன் " டேய்.. டேய்… விட்டுடு டா… செத்துற கித்துற போறான்…" என்று இழுத்தனர்.

இதில் அபிஜித் முகம் மட்டுமே யோகேஷ் பார்த்திருக்க அவனால் இருட்டில் கதிரையும் மித்ரனையும் காண முடியவில்லை…

"இவனை இன்னுமா விட்டு வைக்க சொல்றீங்க.. இந்த ஜென்மத்தில் இவனெல்லாம் திருந்த மாட்டான்… விடுங்க என்னை " என்று அபிஜித் திமிற அவனை அங்கேயிருந்து கூட்டிச் சென்றனர் மித்ரனும் கதிரும்.

தரையில் கிடந்த யோகேஷோ 'டேய்...அபி… யாருக்காக என் மேல கையை வைத்தாயோ… அவளை உன்கிட்ட இருந்து பிரிச்சு என் கூட வாழவைக்கல.. என் பேரு யோகேஷ் இல்லைடா…' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

*********************************************

அபிஜித் டெல்லி கிளம்பி கொண்டிருந்தான். டெல்லியில் இருக்கும் அவனது பெற்றோரை பார்க்க அன்று அதிகாலையிலேயே விமான நிலையத்திற்கு சென்றிருந்தான். அவன் அவனது தந்தையை காண்பதற்கு மட்டும் செல்லவில்லை… அவனது டெல்லி கிளையிலிருக்கும் கன்ஸ்ட்ரக்ஷனில் டெல்லியில் இருக்கும் முக்கிய தொழிலதிபருக்கு சுமார் எழுநூறு கோடி செலவில் ரிசார்ட் ஒன்று கட்டப்பட வேண்டி அதை கட்டுவதற்கு பிளான் ஒன்று ரெடி பண்ணி காட்ட வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பு கேட்டு ருந்தார்.. அவர் மட்டும் அபிஜித் கம்பெனிக்கு இந்த ஆஃபரை வழங்கி விட்டால் அபிஜித் கம்பெனி பல வெற்றிகளைப் பெறும். இதை மற்றவரின் பார்வைக்கு விட அவனுக்கு துளியும் விருப்பமில்லை... ஆதலால் அவனே நேராக தன்னோடு கதிரைக் கூட்டி சென்றான்.

அவன் விமானத்திற்கு காத்திருந்த வேளை மித்ரனிடம் இருந்து அந்த நேரத்தில் கால் வரவும் அபிஜித் யோசனையுடன் எடுத்தான்.

" என்ன மித்து... இந்த நேரத்தில் கால் பண்ணிருக்க...எனி இம்பார்ட்டென்ட் நியூஸ்?" என்று கேள்வி கேட்க " எஸ்டா… இட்ஸ் வெரி இம்பார்ட்டென்ட் … மூர்த்தி டெல்லிக்கு போயிருக்கார்…" என்ற தகவலை கூற " அது எல்லா கன்ஸ்ட்ரக்ஷனுக்கும் தான் ரிசார்ட் பிளான் ரெடி பண்ணி கொண்டு வரச் சொல்லிருக்காங்க…அதுக்காக தான் வந்துருப்பார்…" என்று கூறினான்.

" டேய்... மூர்த்தி டெல்லி வந்ததுக்கு இதுவும் ஒரு காரணம் தான்... ஆனால் அவரை டெல்லிக்கு இன்வைட் பண்ணது யாருன்னு தெரியுமா?"என்று எதிர் கேள்வி கேட்க " டேய்… இந்த நேரத்தில் என்னையை டென்ஷன் ஏத்தாதே… முதலில் விஷயத்தை சொல்லு" என்று கடுப்பாக கூறினான்.

" டேய்… மூர்த்தியை தனியா யாருக்கும் தெரியாமல் அந்த யோகேஷ் மீட் பண்ணிருக்கான்டா…" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.

அபிஜித்திற்கு இந்த விஷயம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் " என்னடா… சொல்ற மூர்த்தியோட பி.ஏ.க்கு கூட இந்த விஷயம் தெரியாம செய்றாங்கன்னா விஷயம் நான் கெஸ் பண்ற மாதிரி இருக்குமோ? " என்று சஞ்சலத்துடன் கேட்டான்.

" மச்சி! நீ டெல்லி போய் அந்த டெண்டரை கைப்பற்றி வா...முழு டீடெயில்ஸ் பத்தி உனக்கு சொல்றது என் பொறுப்பு…" என்று கூறிவிட்டு போனை மித்ரன் அணைக்க அபிஜித்தும் போனை அணைக்கவும் விமான அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

டெல்லி- பல சுல்தான்களின் கோட்டையாகவும் ,கோட்டைகளின் நகரமாகவும் விளங்கியது. ஆனால் இன்றைய நவநாகரீகத்திலும் சில கோட்டைகள் இன்றும் பெயர் பெற்று விளங்குகிறது.அதேபோல் இந்தியாவிலேயே காசு மாசுபாடு அதிகம் காணப்படும் நகரம் இதுவாகும்.

அபிஜித்தும் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போதே அங்கு அவனுக்காக கபிலனும் ஜீவிகாவும் காரில் காத்திருந்தனர்.
அவனுக்கு அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்க தந்தையை அணைத்து கொண்டவன் தாயிடம் போக அவனைக் கண்டு கொள்ளாமல் ஜீவிகா கதிரிடம் பேசிக் கொண்டிருந்தார்….

அபி தன் தந்தையை பார்க்க அவரோ தன் நெற்றியை நீவிக்கொண்டே 'எல்லாம் விதி மைசன் 'என்று மேல் நோக்கி கைக் காட்டினார்.

கபிலன், " என்ன ஜீவி! அபியை பார்க்க தானே வந்த? இப்ப அவன்கிட்ட பேசாம இருந்தா எப்படி?"என்று பேச ஆரம்பிக்க உடனே ஜீவிகா " யார் சொன்னா? நான் கதிரைப் பார்க்க தான் வந்தேன்… பாருங்க புள்ளைய கவனிக்கறதே இல்லை இந்த கடங்காரன்" என்று அபிஜித்தை
திட்டினார்.

கதிரை அபிஜித் உக்கிரமாக பார்க்க " அய்யோ மம்மி! நான் நல்லாதான் சாப்பிடுறேன்.. நீங்க அண்ணன் கிட்ட கேளுங்க" என்று கூறி தப்பிக்க ஜீவிகா " ஹ்க்கும்" என்று கூறிவிட்டு இடப் பக்கமாக காரில் ஏற அவரைத் தொடர்ந்து அபி அவருக்கு நடுவிலும் வலது புறத்தில் கபிலனும் அமர முன் சீட்டில் கதிர் அமர்ந்திருந்தான்.

"இப்போ உங்களுக்கு என்ன கோபம்... காலையிலேயே மூஞ்ச தூக்கிட்டு வரிங்க" என்று அபிஜித் கேட்க ஜீவிகா அவனின் காதைப் பிடித்து திருகி " ஏன்டா…. எல்லாம் பண்ணிட்டு தெரியாத மாதிரியா கேட்குற…."என்று கேட்க அபி " அம்மா வலிக்குது… " என்று பொய்யாக அலறினான்.

இப்படியே ஜாலியாக பேசிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். ஜீவிகா எல்லோருக்கும் காபி தந்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்க சொல்ல அபி தனது அறையை நோக்கி செல்லும் போதே " மாம்… எய்ட் ஓ கிளாக் வந்து எழுப்புங்கள்" என்று சொல்லி சென்றான். அவனுடன் கதிரும் தன் அறையை நோக்கி சென்றான்.

செல்லும் இருவரையும் ஜீவிகா கண்கலங்க பார்த்து விட்டு கபிலனிடம் "இரண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருப்பாங்களாங்க " என்று கேட்க " அதுல என்ன உனக்கு சந்தேகம்" என்று அவர்களின் அறைக்கு கூட்டி சென்றார்.

*********************************************

அந்த அறையே மிகவும் பிரமாண்டமாக இருந்தது. பல கன்ஸ்ட்ரக்ஷனில் இருந்து பல பேர் ரிசார்ட் பிளான்களை கையில் வைத்து கொண்டு பரபரப்புடன் சலசலத்து கொண்டிருந்தனர். அங்கே அமர்ந்து இருந்தோரையும் சிசிடிவி கேமராவில் பார்த்து கொண்டிருந்தார் அந்த தொழிலதிபர் ஆச்சார்யா.

நான்கு நாற்காலிகள் வட்டமான அமைப்பில் போடப்பட்டிருக்க இந்தியாவிலேயே டாப் டென் கன்ஸ்ட்ரக்ஷனில் இருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் வரை எல்லாருமே இந்த வாய்ப்பை நழுவ விட கூடாது என்று வந்திருந்தனர்.

பிராஜெக்ட்டின் மதிப்பை காட்டிலும் அதிகமான லாபம் வர வாய்ப்பு அதிகம்.ஏனெனில் ஆச்சார்யா டெல்லியில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் ரிசார்ட் தொடங்க இருப்பதாகவும் இந்த டெல்லி பிராஜெக்ட்டை யார் வெற்றிகரமாக முடிப்பவருக்கே அடுத்த பிராஜெக்ட் தயாராக இருக்கும். ஆதலால் பெருத்த லாபம் அடையும் டெண்டரை கைப்பற்றும் கன்ஸ்ட்ரக்ஷன்.

ஆச்சார்யா தன் அறையில் இருந்து வந்திருப்போரை கவனிக்க அவரின் பி.ஏ மூலமாக அனைவருக்கும் கூல்ட்ரிங்ஸ் தரப்பட்டது. காலை பத்து மணிக்கு அறிவிக்க இருக்கின்ற டெண்டருக்கு பத்து முப்பது ஆகியும் வராமலிருக்க இரு இளைஞர்கள் மட்டும் ஒன்பது முப்பது முதலே காத்திருக்க அவர்கள் வந்த நொடி முதல் அவர்களின் சுறுசுறுப்பிலும் அவர்கள் தங்கள் தொழிலின் மீது வைத்திருக்கும் பங்களிப்பையும் பார்த்து கொண்டேயிருந்தவர் அவர்களை பற்றி தன் பி.ஏ.விடம் விசாரித்தார்.

எல்லோரும் வந்து சேர பதினொரு மணிக்கு டெண்டரை அறிவிப்பதற்கு முன் இரண்டு பிளான்கள் திருப்தியாக இருந்தது ஆச்சார்யாவுக்கு. அந்த இரண்டு கம்பெனிகள் பற்றி விரிவாக தெரிந்து கொண்டு மேடையில் பேச ஆரம்பித்து இருந்தார்.

" குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்…. என் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். உங்கள் பிராஜெக்ட் பிளானையும் அதற்குரிய பட்ஜெட்டையும் பார்த்து எனக்கு திருப்தியாக அமைந்தது இரண்டு கன்ஸ்ட்ரக்ஷன்களின் பிராஜெக்ட். அந்த இரு கன்ஸ்ட்ரக்ஷன்களின் பெயர்கள்" என கூறத் தொடங்கும் போதே மூர்த்தியின் பக்கத்தில் வந்தமர்ந்தான் யோகேஷ்.

முன்னிருக்கையில் மூர்த்தி அமர்ந்திருக்க மூன்றாவது வரிசையில் கடைசி ஓரமாக அபிஜித் அமர்ந்திருந்தான். அவனை நக்கல் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு யோகேஷ் மூர்த்தியின் காதில் ஏதோ சொல்ல அதற்கு திரும்பி பார்த்தவர் சிரித்துவிட்டு யோகேஷிடம் கைக் குலுக்கினார்.

இதைக் கவனித்த கதிர் அபியை பார்க்க அவன் கண்மூடி திறந்தான். அதற்குள் ஆச்சார்யா "இரண்டாவது கன்ஸ்ட்ரக்ஷனின் பெயர் எம்.எம்.கன்ஸ்ட்ரக்ஷன்...‌ முதல் கன்ஸ்ட்ரக்ஷன் பெயர் ஏ.ஜெ.கன்ஸ்ட்ரக்ஷன்….." என்று அறிவிக்க பலத்த கைதட்டல் அரங்கில் அதிர்ந்தது.

அதைத் தொடர்ந்து பேசிய ஆச்சார்யா… "எப்பவும் ஒன்றை விட இன்னொன்று பெரிதாக தான் தெரியும்… இரு பிராஜெக்ட்களும் அருமையாக இருந்தாலும் என் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் அருமையான விளக்கத்துடன், எல்லாரும் தனது உதவியாளரை அனுப்பி பேசிருந்தாலும் தன்னை ஒரு எம்.டி.யாக நினைக்காமல் தானே பொறுப்பாகவும் நேரம் தவறாமை குணம் உடையவராக இருப்பவருமான ' தி யங் பிஸ்னஸ் மேன் 'அபிஜித்திற்கு இந்த பிராஜெக்ட் டை அளிப்பதில் ஆச்சார்யா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிவிட்டு அபிஜித்தின் கையில் டெண்டரை ஒப்படைக்க மூர்த்தியும் யோகேஷூம் திகைப்பில் நின்றிருந்தனர்.
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 17

டெண்டர் அபிஜித் கையெழுத்து போட்டு உறுதி செய்ய அதை கையலாகா தனத்துடன் மூர்த்தி மற்றும் யோகேஷ் பார்த்து கொண்டிருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு பஃபே முறையில் வழங்கப்பட்டது.
ஆச்சார்யா, அபிஜித், கதிர் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூர்த்தி, யோகேஷ் இருவரும் அவர்களை நோக்கி வரவும் ஆச்சார்யா புருவம் தூக்கி பார்த்தார்.

மூர்த்தி ஆச்சார்யாவிடம் கைக்குலுக்கி " ஹலோ சார்! ஐயம் மூர்த்தி…எம்.டி. ஆப் எம்.எம்.கன்ஸ்ட்ரக்ஷன்" என்று தன்னை அறிமுகப்படுத்த அதற்கு மெலிதாக சிரித்த ஆச்சார்யா " ஐ நோ மிஸ்டர்.மூர்த்தி… ஐ நோ ஹூ யு ஆர்… " என்றவரிடம் மூர்த்தியோ " எனக்கு ஒரு சந்தேகம்… அதை நீங்கள் கிளியர் பண்ண வேண்டும்" என்று பதவிசாக கேட்க அவரோ " கோ..அகெட்" என்று தலையசைத்தார்.

அவர்களின் சம்பாஷணைகளை அபிஜித் சுவாரசியமாக பார்க்க அவனை முறைத்த மூர்த்தி அவனின் புறம் கைநீட்டி " எதனால் என் பிராஜெக்ட் பிளான் ரிஜெக்ட் பண்ணீங்க… இவனோடதை செலக்ட் பண்ணீங்க" என்று முகத்தில் சிறு எரிச்சலுடன் கேட்டார்.

அதற்கு உடனே விளக்கம் சொல்லாது அவரை சில நிமிடம் கூர்ந்து பார்த்த ஆச்சார்யா " உங்கள் முதல் கேள்விக்குரிய பதில்… "என்று நிறுத்தி அவரை பார்த்து " எனக்கு உங்க பிராஜெக்ட்ல திருப்தி தான்… ஆனால் எப்பவுமே நேரம் தவறாமை எனக்கு முக்கியம்" என்று சொல்லி கொண்டே மூர்த்தியை பார்த்தார்.

மூர்த்தி குழம்பி போய் " நேரத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் "என்று கேட்டார். அவரை அபிஜித் " அட பைத்தியமே… " என்று பார்க்க ஆச்சார்யா பொருள் விளங்காத பார்வை பார்த்துவிட்டு " என்னை பொறுத்தவரை நேரத்துக்கு சீக்கிரம் வரவங்க… நேரம் தவறாமையை கடைப் பிடிக்கறவங்க கண்டிப்பாக அவங்களுக்கு கொடுத்த வேலையை சொன்ன நேரத்திற்கோ, அதற்கு முன்னதாகவோ முடிச்சு கொடுப்பாங்க… காட் இட் மூர்த்தி " என்று கூறிவிட்டு அபிஜித்துடன் உணவருந்த சென்றுவிட்டார்.

ஆச்சார்யாவிடம் கைக்குலுக்கி அபிஜித் விடைபெற்று வரும் போது மூர்த்தியும் அவர் கூடவே யோகேஷூம் நின்றிருக்க அவரைப் பார்த்து அபிஜித் " என்ன மிஸ்டர்.மூர்த்தி… எல்லா நேரத்திலும் கவனமா இருக்கணும்… அதுவும் எதிரியோட மோதும் போது அதிகவனமா இருக்கணும்… ஒரு சின்ன விஷயத்துல இப்படி கோட்டை விட்டுட்டிங்களே" என்று புருவத்தை கேலியாக உயர்த்தியவாறே கூறினான்.

அவன் கூறியதன் அர்த்தம் புரிந்தாலும் அவன் முன் ஒத்துக் கொள்ள மனம் வராமல் திமிராக பார்த்தார். அவரை சிறிது நேரம் பார்த்து விட்டு நக்கலுடன் " சரி...சரி… பெரிய பிராஜெக்ட் கிடைச்சிருக்கு… அதுக்கான வேலையை பார்க்க போகணும்... அதுவும் ஆச்சார்யா என் மேல நம்பிக்கை வைத்து ஒரு வருஷத்துக்கு டயம் கொடுத்துருக்காரு… அந்த நம்பிக்கையை காப்பாத்தணும்… நம்பிக்கை தானே வாழ்க்கை" என்று சொல்ல யோகேஷ் " பிராஜெக்ட் கிடைச்சா மட்டும் போதாது… அதை நீ எக்ஸிகியூட் பண்ணாம கூட போகலாம் " என்று புதிராக சொன்னான்.

அவனை அசால்டாக அபியோ " ஹ்ம்ம்…. நான் உன்னை மாதிரி அப்பன் சம்பாதிச்ச சொத்துல வளர்ந்தவன்னு நினைச்சியா தானா வளர்ந்தவன்டா… பிரச்சினை உருவாக்கவும் தெரியும்... அந்த பிரச்சினையில இருந்து மீண்டு வரவும் தெரியும்…" என்று கடுமையாக சொன்னான்.

பிறகு மூர்த்தியை பார்த்து " லுக் மிஸ்டர்.மூர்த்தி நாம் யாரை பக்கத்தில் வைச்சிக்கறமோ அவங்க தான் நம்ம வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமா இருப்பாங்க…" என்று அறிவுரை கூறினான்.

அவனின் பேச்சு மூர்த்திக்கு கடுப்பை கிளப்பியது. அவனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டே " இப்ப என்ன நான் தோற்றுட்டேன்னு சொல்லணுமா… அப்படியெல்லாம் கனவுல கூட சொல்ல மாட்டேன்...நீ கிளம்பலாம்"என்று சொல்ல அபிஜித் கேலி தவழும் புன்னகையுடன் " உங்கள் பி.ஏ. இருந்த வரை எல்லாமே உங்களுக்கு வெற்றி தான்… ஆனால் " என்று நிறுத்தி விட்டு யோகேஷை நக்கலாக பார்த்து விட்டு " பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்னு சொல்லுவாங்க…. இவன் கூட சேர்ந்து நீங்க எப்படி ஜெயிப்பீங்க… யார் நமக்கு தோள் குடுப்பார்? யார் நம்மை தேளாய் கொட்ட காத்திருப்பார்னு உங்களுக்கு புரிய நேரம் வரும்… அப்ப தெரியும்" என்று கூறிவிட்டு கதிருக்கு கண் காட்ட அவன் காரைத் திறக்க அபி அதில் ஏறிச் சென்று விட்டான்.

அபிஜித் சென்றவுடன் மூர்த்தி யோசனையாக நின்றிருக்க அவரின் அந்த நிலைமை கண்டு யோகேஷ் மனதுக்குள் 'அய்யோ… இந்த ஆளை யோசிக்க விடக்கூடாதே… 'என்று நினைத்து
மூர்த்தியின் " என்ன அங்கிள் யோசனை?" என்று கேள்வி கேட்டான்.

மூர்த்தி அவனை குழப்பத்துடன் நோக்க " ஐ ஹேவ் அ டவுட் யோகேஷ்"என்று கூறினார்.

" வாட் அங்கிள்?… "

" வொய் ஆர் யு ஹியர்?" என்று கேட்க

" அங்கிள்… நான் யாருன்னு சொன்னேனே … என்னை நம்பலையா? " என்று கேட்டான்.

" அது எனக்கு தெரியும்… டெல்லி தொழிற்துறை அமைச்சரோட பையன் மட்டும் தான் தெரியும்.. ஆனால் டெல்லியில் இருந்து என்னைப் பார்த்து எனக்கு ஹெல்ப் பண்ண வான்டட்டா வந்து உதவி செய்றது தான் எனக்கு குறுகுறுப்பா இருக்கு" என்று ஆங்கிலத்தில் சொல்ல யோகேஷ் அவரை கேள்வி கேட்க விடக்கூடாது என்று நினைத்து " உங்களுக்கு எப்படி அபிஜித் தொழிலில் எதிரியோ… அப்படிதான் எனக்கு பர்சனலா எதிரி " என்று அபிஜித் தன் கல்லூரி பருவத்தில் தன் கேர்ள் பிரண்ட் முன் அசிங்கப் படுத்தியதை நினைத்து கொண்டே சொன்னான்.

"ஓஹோ…. அப்ப அவனுக்கு இப்ப ரெண்டு எதிரி" என்று யோகேஷிடம் ஹை-பை கொடுத்தார்.

ஆனால் மூர்த்தி தான் கேட்க நினைத்ததை யோகேஷிடம் கேட்டே விட்டார்.

" இன்னிக்கு மட்டும் நீ என்னை பார்க்க வரலைன்னா இந்நேரம் எனக்கு பிராஜெக்ட் கிடைச்சிருக்கும்… அந்த ஆச்சார்யா சொன்ன நேரம் தவறாமையை எப்போதும் கடைப் பிடிப்பவன் நானு… ஆனால் நீ வந்ததால வர லேட் ஆகி இப்ப பிராஜெக்ட் கை விட்டு போயிருக்காது" என்று நொந்து கொண்டார்'.

யோகேஷ் அவர் தோளில் கைவைக்க மூர்த்தி அவனை என்னவென்று பார்க்க " விடுங்க அங்கிள்… பிராஜெக்ட் அவனுக்கு கிடைச்சா என்ன?...அவனை அதை முடிக்க விட்டா தானே? நாம அவனை இந்த தடவை தோற்கடிப்போம்…" என்று கூறிவிட்டு அவருடன் கிளம்பினான்.

இளஞ்செழியனுக்கு அன்று முடிப்பதற்கு இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒன்று திருநெல்வேலிக்கு சென்று தன் குடும்பத்தினரிடம் சஹியை விரும்புவது பற்றி நேரில் சென்று பேசுவது… இரண்டாவது இப்போது வேலை செய்யும் கன்ஸ்ட்ரக்ஷனில் புது பிராஜெக்ட்க்கு தீயாக உழைக்க வேண்டும் என்பதால் சஹியை இனித் தொடர்ந்து பார்க்க இயலாது...என்பதை சஹியிடம் கூற வேண்டும்… என்பதேயாகும்.

முதலில் சஹியை சந்திக்க வேண்டி அவள் கல்லூரிக்கு சென்றவன் அருகிலுள்ள காஃபி ஷாப்பில் காத்திருப்பதாக மெசேஜ் செய்ய சஹியும் ஃப்ரீயாக இருந்ததால் காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தாள்.

அவளை நோக்கி கைக் காட்ட அவளும் செழியனை நோக்கி சென்றாள். செழியனுடன் நலம் விசாரித்தவள் " சொல்லுங்க செழியன்… என்ன விஷயம்?" என்று கேட்க செழியனும் புது பிராஜெக்ட் தொடங்கயிருப்பதால் வேலைகள் நிறைய இருப்பதாகவும் இந்த பிராஜெக்ட் தனது திறமையை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதால் , தன்னால் இனி தினமும் வந்து உன்னை காண இயலாது என்பதை சொல்ல சஹிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவனது முன்னேற்றத்தை நினைத்து " சரிங்க செழியன்… நானும் இது ஃபைனல் இயர்ங்கறதால படிப்பில் கான்சென்ரெட் பண்றேன்… அதோட எனக்கும் கேம்பஸ் இன்டர்வியூ , பிராஜெக்ட் என்று பல வேலை இருக்கும்… இரண்டு பேரும் ப்ரீயாக இருந்தால் மீட் பண்ணலாம்….இல்லையென்றால் போனில் பேசிக் கொள்ளலாம்…" என்று முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் கூற செழியன் அவளது முகத்தை பார்த்து சட்டென்று அணைத்துக் கொண்டான்.

" என்னடி…கஷ்டமா இருக்கா… "

" கஷ்டம் தான்… ஆனால் வீக்லி ஒன்ஸ் ஆர் மன்த்லி ஒன்ஸ் மீட் பண்ணலாம்ல…" என்று கேட்கும்போதே அவளுக்கு சட்டென்று கண்ணீர் வர அதைத் துடைத்து விட்டு செழியன் " கண்டிப்பாடி… ஏன் இந்த அழுகை… உன்னை ஏமாத்திட்டு போயிடுவேன்னு நினைக்கிறீயா? " என்று கேட்டான்.

அதற்கு இல்லையென்று தலையாட்டிய சஹி " அப்படி இல்லை… உங்க மேல நம்பிக்கை இருக்கு… அப்படியெல்லாம் பண்ண மாட்டிங்கன்னு…" என்று கூற அவளின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று அவன் நினைக்க விதியோ அவனை பார்த்து சிரித்தது.

" சரி சஹி… டயம் ஆச்சு… நீ கிளம்பு " என்று அவளுக்கு விடைக் கொடுக்க அவனை அணைத்து விட்டு விறுவிறுவென வெளியேற செழியனும் கிளம்பினான்.

செழியனை சஹி அணைக்கும் போதே அவளைத் தேடி வந்த அவளின் நட்புகள் அவள் யாரோ ஒருவனை அணைத்து கொண்டு இருப்பதை பார்த்து ஷாக்கானார்கள். அவளுக்கு நேர்புறத்தில் நின்றதால் அவர்களுக்கு செழியனின் பின்புற தோற்றம் மட்டுமே தெரிந்தது… ஆகையால் செழியனை அவர்கள் அறியவில்லை... காஃபி ஷாப்பை விட்டு வெளியே வந்த சஹி எதிரே நின்றிருந்த தனது நட்புகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் யாரும் யாருடனும் பேசவில்லை…

கல்லூரி முடிந்து அனைவரும் வெளியேற சஹி, விஷான், தர்ஷினி, பிரியா மட்டும் கேண்டினுக்கு செல்லும் வழியில் நின்றிருந்தனர். மூவரும் சஹியின் முகம் பார்க்க அவளுக்கோ மாட்டிக் கொண்டு தர்மசங்கடமாக நின்றாள்.

மூவரும் " சொல்லு… இது எத்தனை நாளா நடக்குது… யாரது ? பேரு என்ன? ஊரு என்ன?" என்று கோரசாக கத்திக் கேட்டனர்.

அவர்களின் போட்ட சத்தத்தில் காதை மூடிக்கொண்ட சஹி ஒரு கண்ணை திறந்து பார்க்க விஷான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு " என்ன சஹி இதெல்லாம்? எங்ககிட்ட கூட சொல்லாத அளவு காதலா? " என்று நிதானமாக கேட்டான்.

சஹி அழுதுவிடுபவள் போல முகத்தை வைத்து கொண்டு நிற்க தர்ஷினி கடுப்பாகி " இப்ப சொல்றீயா? இல்லையா? " என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க சஹி " அவர் பெயர் இளஞ்செழியன்… காலேஜ் முதல் நாள் நான் அவர்கிட்ட தெரியாம வம்பு பண்ணேன்ல…" என்று செழியனை பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறினாள்.

விஷானோ , " ஆனால் இப்போ நாங்க பார்த்ததுனால நீ உங்க லவ் பத்தி சொல்ற? இதே பார்க்காமல் இருந்திருந்தால் நீ சொல்லியிருக்க மாட்ட அப்படிதானே?"

சஹி " அப்படியில்லை விஷூ! என்று மறுக்க பிரியா " இத்தனை வருஷம் பழகினோம்… உண்மையா தானே பழகினோம்… எல்லாத்தையும் தானே ஷேர் பண்ணோம்? இதை மட்டும் ஏன் எங்ககிட்ட மறைச்ச? எங்களை யாரோன்னு தானே நினைச்சி சொல்லல…" என்று கேட்டாள்.

தர்ஷினி சஹியை ஆழ்ந்து பார்த்து விட்டு அவள் தோளில் கைவைத்து " நீ லவ் பண்ணது தப்பில்லை… எங்ககிட்ட மறைச்சது கூட தப்பில்லை.. அது உன் பிரைவஸிக்காக பண்ணிருப்ப… ஆனால் ஏமாந்துறாத… "என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர அவளுடன் விஷான் மற்றும் பிரியாவும் நகர எத்தனிக்கும் வேளை தர்ஷினி சஹியைப் பார்த்து " இப்ப வர்றீயா இல்லை இங்கேயே நிற்க போறீயா? " என்று அவளையும் இழுத்து கொண்டு செல்ல சஹியின் முகத்தில் புன்னகை வந்தது.

செழியன் திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டின் கதவை அதிகாலைப் பொழுதில் தட்ட கையை எடுத்த வேளை கதவு தானாக திறக்க இவன் யாரென்று நிமிர்ந்து பார்க்க வானதி தூக்க கலக்கத்தில் கையில் விளக்குமாறுடன் கொட்டாவி விட்டபடி நிற்க அவளின் பின்னால் பார்வதி அவளை விரட்டிக் கொண்டிருந்தார்.

" காலையிலேயே பெண்பிள்ளை வாசல் தெளித்து கோலம் போடாம தூக்கம் என்ன தூக்கம்? போ.. போய் குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடு…" என்று சொன்னார்.

இதை செழியன் சிரிப்புடன் பார்த்தவாறே நின்றிருக்க வானதி தன் அம்மாவை முறைத்து பார்த்து கொண்டே முன்னால் நின்றிருந்தவனின் மேல் மோதிக் கொண்டாள்.

"ஆஆஆஆ... என்று கீழே விழும் போதே அவளை பிடித்து நிறுத்தி "அம்மா" என்று அழைக்க பார்வதி அக்குரலைக் கேட்டு " செழிப்பா… வந்துட்டியா…என்று கூறிக் கொண்டே அவனை அணைக்க அவனும் தங்கையுடன் அம்மாவையும் அணைத்து கொண்டான்.

" வானுக்குட்டி… எப்படியிருக்க?.." என்று கேட்க வானதி " நான் நல்லாயிருக்கேன்ணா … இரு போய் கோலம் போட்டு வரேன்" என்று வெளியேற பார்வதி அவனை உள்ளே கூட்டிச் சென்றார்.

அவனின் முகத்தை பார்த்து விட்டு " என்னப்பா.. எதுவும் பிரச்சினையா.. ஏன் முகம் இப்படி இருக்கு.." என்று கவலையாக வினவ செழியன் சிரித்துக் கொண்டே " இல்லைமா… உங்கள் எல்லார்கிட்டயும் பேசணும்.. அதுக்கு தான் வந்தேன்" என்று சொல்ல " சரி.. சீக்கிரமே கிளம்பியது டயர்டா இருக்கும்.. தூங்கிட்டு வா… பொறுமையா பேசலாம்…" என்று அவனை அனுப்பி வைத்தார்.

செழியன் ரூமிற்குள் நுழையவும் நாச்சியார் அவர் ரூமிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. பார்வதி செழியனின் ரூமையே பார்க்க நாச்சி" என்னடா.. அங்கேயே பார்க்கிற.. பெர்ரி ஞாபகமா?" என்று வினவ பார்வதி பதில் சொல்லும் முன்னே கோலத்தை முடித்து வந்த வானதி "எதே… ஞாபகம் ஏன் வருது..அதான் அண்ணனே வந்துருக்கே… அப்ப அங்கே தானே அம்மாவோட கண்ணு பார்க்கும்...ஹான்" என்று நக்கலாக கூறினாள்.

செழியன் வந்தது நாச்சிக்கு தெரியாதலால் வானதி அவரை கேலி செய்ய பார்வதியோ " ஸ்ஸ்.. என்ன வானதி இது… ஆச்சிக்கிட்ட இப்படி பேசலாமா?" என்று கடிந்து கொண்டார்.

நாச்சியார், " விடுடா...பெர்ரி வந்துட்டானா? சந்தோஷம்… அவனுக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு செய்.. அவன் கூட சேர்ந்து சாப்பிடலாம்"என்று சொல்லி சமையல் வேலையை பார்க்க சென்றனர்.

பத்து மணி வாக்கில் செழியன் குளித்து முடித்து வரவும் அவன் உணவு மேஜையில் வந்து அமர அவனுடன் அனைவரும் அமர அவர்களின் அன்பை எண்ணி பெருமிதம் அடைந்தான். எல்லாரும் உணவு உண்டபின் செழியனுடன் பேச ஆரம்பித்தனர்.

நாச்சியார், " இப்ப தான் எங்களை பார்க்க தோணுச்சா…?" என்று கேள்வி கேட்க செழியன் " ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் உங்ககிட்ட"என்று பீடிகையுடன் தொடங்க "ஏதா இருந்தாலும் சொல்லு செழிப்பா" என்று பார்வதி சொல்ல செழியன் " அம்மா.. நான் சாஹித்யாங்கிற பொண்ணை விரும்பறேன்" என்று அவளின் குடும்பம் , அவளின் மொத்த கதையை பற்றி சொல்ல அனைத்தையும் கேட்ட பார்வதியோ " என்னால் இதற்கு ஒத்துக்க முடியாது செழிப்பா.. " என்று கூறிவிட்டு விறுவிறுவென தன் அறையை நோக்கி செல்ல அவரை வழிமறித்த செழியன் " அம்மா… என்னை நம்புங்க மா… இதில எந்த பிரச்சனையும் வராது… ப்ளீஸ்" என்று கெஞ்ச பார்வதி யோசனையுடன் நிற்க அவரின் அருகில் வந்த நாச்சியார் " சரின்னு சொல்லுடா… அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்குவான்…" என்று ஆறுதலாக சொல்ல பார்வதியும் சரியென்று தலையாட்டினார்.

செழியன் தன் குடும்பம் தன் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை நினைத்து சந்தோஷமடைந்து அதை சஹியிடம் தெரிவிக்க கால் பண்ணினான்.

சஹி கால் அட்டெண்ட் செய்ததும் " ஹாய்டி… " என்று குதுகலமாக சொல்ல சஹியோ " ஹலோ " என்று சுரத்தை இல்லாமல் சொல்ல அதைக் கண்டு கொண்ட செழியன் " என்னடி ஆச்சு… ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு" என்று கேட்க அவள் அன்று தன் நட்புகளிடம் நடந்த நிகழ்வை சொல்ல செழியன் " இப்ப என்ன என் குடும்பத்தில் உள்ளவங்க கிட்ட பேசுறியா? " என்று கேட்க அவள் "ம்ம் " என்று சொல்ல வானதியையும், நாச்சியாரையும் வீடியோ காலில் அவளிடம் பேச வைத்தான்.

அவர்களிடம் சம்பிரதாயமாக பேச ஆரம்பித்து படிப்படியாக நல்ல ஒரு நட்புடன் பேச ஆரம்பித்து இருந்தனர்.பின் இருவரும் பேசி முடித்ததும் செழியன் " என்னடி… இப்ப சந்தோஷமா?" என்று கேட்டான்.

" ரொம்ப சந்தோஷம்" என்ற சஹி முதல் முறையாக அவனுக்கு வீடியோ காலில் முத்தம் கொடுத்தாள்… அவனும் பதிலுக்கு கொடுத்து விட்டு போனை அணைத்தான்.

அபிஜித் சஹியை தன் கண்பார்வையில் வைத்து கொள்ள திட்டமிட்டு இருந்தான். அதை கதிரின் மூலம் செயல்படுத்த தொடங்க, மூர்த்தியை வைத்து யோகேஷ் அபிஜித்தை வீழ்த்த திட்டம் தீட்டினான்.

அதன்படி அபிஜித் ஆச்சார்யாவின் பிராஜெக்ட்டை டெல்லியில் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியிருந்த நிலையில் யோகேஷ் தனக்கு தெரிந்த அடியாளின் மூலமாக கட்டிடத்தின் ஒரு பக்கம் இடிந்து விழ செய்திருந்தான்.



*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 18

சஹி தற்போது கல்லூரியில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தாள்…. செழியனுடன் காதல் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது படிப்பில் கவனத்தை செலுத்தி முதல் மாணவியாக திகழ்ந்தாள்…

அன்று கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு சில குறிப்பிட்ட கம்பெனியிலிருந்து பிராஜெக்ட் டிசைன் செய்து தரும் படியும் எந்த மாணவருடைய பிராஜெக்ட் நன்றாக இருக்கிறதோ அந்த பிராஜெக்ட்க்கு அந்த மாணவர்களுக்கு அந்த கம்பெனியில் வேலை வாய்ப்பும் வழங்குவதாகவும் அறிவிப்பை தாங்கி வந்தது.அதில் கலந்துக் கொண்டு வேலை வாய்ப்பை பெற்றிட மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பிராஜெக்ட் தயார் செய்ய சஹியுடன் மற்ற மூவரும் பிராஜெக்ட் தயார் செய்ய ஆரம்பித்தனர்.

தர்ஷினி " ஏன் சஹி… நீ உங்க கம்பெனில ஜாயின் பண்ணாம வேற கம்பெனிக்கு அப்ளை பண்ற " என்று கேட்க சஹியோ " அது ஒன்னும் இல்லைடி... நான் எங்க கம்பெனில வேலை பார்த்தா ஏதாவது தப்பா பண்ணிருந்தாலும் அதை தைரியமா சொல்லமாட்டாங்க… அனுபவம் இல்லாமல் ஒரு தொழிலில் இறங்குறதுக்கு பதில் அந்த அனுபவமிக்க ஆளா நிறைய கத்துக்கிட்டு எங்க கம்பெனிக்கு அப்பறம் போறேன்…" என்று நிறுத்தி " கொஞ்ச நாள் வேற கம்பெனில நான் நானாகவே வேலை பார்க்க விரும்புகிறேன்… எங்க அப்பா பெயரை முன்னிறுத்தி எதுவும் செய்ய பிடிக்கலை" என்று சொல்லி விட்டு பிராஜெக்ட் டிசைன் பண்ண ஆரம்பித்தாள்.

மூவரும் அவளை பெருமிதமாக பார்த்து விட்டு அவர்களும் பிராஜெக்ட்டை டிசைன் பண்ண ஆரம்பித்தனர்.

நால்வரும் லஞ்ச் பிரேக்கில் சாப்பிட கேண்டீன் செல்லும் வழியில் தர்ஷினி சஹியிடம் பேச வேண்டி அவளின் முகம் பார்க்க சஹி அவளின் முகம் பார்க்க அதைக் கண்டு தர்ஷினி தலைக் கவிழ என ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடந்தது.

பின் சஹி பொறுமையிழந்து " என்னடி… என் மூஞ்சை பார்க்கிற… அப்பறம் தலையைக் கவிழ்ந்துக்கற " என்று கேட்க தர்ஷினி பதில் சொல்வதற்குள் விஷான் முந்திக்கொண்டு " இல்லை சஹி… அது உன் பர்சனல்… அதுனால தான் கேட்கலாமா? வேணாமா?ன்னு ஒரே தயக்கமா இருக்கு" என்று மென்று விழுங்கினான்.

சஹி அவர்களைப் பார்த்து " எது? பர்சனலான விஷயம் எனக்கு உங்ககிட்ட இருக்கா? அப்படியே ஏதாவது இருந்தாலும் என்கிட்ட கேட்க உரிமை இருக்கு.. ம்ம் கேளுங்க.." என்று சொன்னாள்.

விஷான் கண்ணை மூடித் திறந்து " உன் ஆளுக்கூட இப்பல்லாம் பேச மாட்டுற? ஏன்? என்னாச்சு? " என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சஹி அவனை அதிர்ச்சியுடன் பார்த்து " எதுக்கு இப்ப இந்த கொஸ்டின்?" என்று வினவ விஷான் " முன்னெல்லாம் போனும் கையுமா இருப்ப? இப்ப படிப்புல தான் கவனம் செலுத்துற ? அதனால் கேட்டேன்… " என்றான்.

சஹி அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு " நீ சொல்றது சரிதான் விஷூ! காதல்னு வரும் போது நம்ம கண்ணுக்கு யாரையும் தெரியாது… அவங்க கூட பேசுறது மட்டுமே நமக்கு முக்கியமா தெரியும்… இதே வாழ்க்கைன்னு வரும் போது நாமளும் முன்னேறி நமக்கு வர்றவங்களும் முன்னேறி வாழ்க்கையில் இணையிறது பெஸ்ட்ன்னு தோணுச்சு… அதனால் தான் இப்ப செழியன் கிட்ட எப்பவாவது பேசறேன்" என்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

தர்ஷினி பேச்சை மாற்றும் பொருட்டு " ஹே! உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயம் தெரியுமா? நாம் செய்யற பிராஜெக்ட் டிசைனை ஏதாவது ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி தான் செலக்ட் பண்ண போறாங்களாம்…. அவங்க செலக்ட் பண்ணி ஆஃபர் லெட்டர் த்ரீ வீக்ஸ்ல அனுப்புவாங்களாம்" என்று தகவல் சொன்னாள்…

அதைக் கேட்ட மற்ற மூவரும் ஆளாளுக்கு ஒரு யோசனையில் மூழ்கினர்.

விஷான் மனதுக்குள் ' கடவுளே ! நாங்க நாலு பேரும் ஒரே கன்ஸ்ட்ரக்ஷன்ல வேலை பார்க்கணும்' என்று வேண்டினான்.

பிரியா' எனக்கு நல்ல கன்ஸ்ட்ரக்ஷன்ல வேலை கிடைக்கணும்… என் குடும்பத்தை உயர்த்த வேண்டும் 'என்று அவள் மனதினுள் வேண்டினாள்.

அதே வேளை சஹி தன் மனதுக்குள் " கடவுளே! என் செழியன் வேலை பார்க்கிற அதே கன்ஸ்ட்ரக்ஷன்ல அந்த எம்.டி. அபிஜித்துக்கு நான் செய்த பிராஜெக்ட் பிடிச்சிருக்கணும்… அங்கேயே எனக்கு வேலை அமையணும்' என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.

எல்லோரும் விதவிதமாக வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் பாவம் அவரும் என்ன செய்வார்? நமது வேண்டுதல் யாரையும் பாதிக்காத பட்சத்தில் கண்டிப்பாக அதை நிறைவேற்றுவார்.அவர் அதை செயல்படுத்த சிறிது கால அவகாசம் எடுப்பாரேயன்றி நிறைவேற்ற தவறமாட்டார்… இவர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்…

அன்று அபிஜித்தின் அலுவலகமே பரப்பரப்பாக இருந்தது…காரணம் பல கோடி மதிப்புள்ள பிராஜெக்ட்டில் சிறு பிழை ஏற்பட்டாலும் எல்லாமே பிழையாகிவிடும்… இப்போது கட்டிய கட்டிடம் இடிந்து விழுந்தது என்றால் எங்கு தவறு நடந்தது என்று ஆராய்ந்து அதை சரி செய்ய வேண்டும்… அதற்காகவே அன்று சீக்கிரமே அபிஜித் கம்பெனிக்கு வந்து விட்டான்… வந்ததிலிருந்து உறுமும் புலியாக எல்லாரையும் பாய்ந்து கொண்டிருந்தான்…

கதிர் அபிஜித்திடம் வந்து போனை நீட்ட அவனோ 'என்ன' என்ற பார்வையுடன் பார்க்க அவனுக்கு பதில் சொல்லும் விதமாக " மித்ரன் கால் பண்ணிருக்கான்… உன்கிட்ட அர்ஜென்ட்டா பேசணுமாம்…" என்று போனை கொடுக்க அதை வாங்கியவன் " சொல்லுடா மச்சி! நீ அவனை கண்டுபிடிச்சிட்டியா" என்று கேட்க மித்ரன் அவனிடம் சொல்லிய விஷயத்தை கேட்டு அபிஜித்துக்கு கோபத்தில் கண்சிவந்தது…

அதே கோபத்துடன் மித்ரனிடம் " விடு மச்சி! அவனை டீல் பண்ண வேற ஒரு வழி இருக்கு…இப்ப அந்த இடிஞ்ச கட்டடத்துக்கான அமெளண்ட் அதை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அதை சரி செய்ய வேண்டும்… சொன்னபடி பிராஜெக்ட் முடிச்சிடணும்.. ஆச்சார்யா சார் நம்ம மேல் வச்சிருக்கிற நம்பிக்கையை காப்பாற்றனும்" என்று எமோஷனலாக சொன்னான்…

அபி பேசும்போதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த கதிர் அமைதியாக அபியை பார்த்துக் கொண்டிருந்தான். மித்ரனிடம் சில தகவல்களை கேட்டு அதை செயல்படுத்த அபிஜித் நினைத்திருந்தான்.

மித்ரன் அபியிடம் " ஏன்டா… மச்சி! காலேஜ் படிக்கும் போது எதா இருந்தாலும் வர்றது வரட்டும்னு அசால்டா டீல் பண்ணுவ… தொழில்னு வரும்போது நிதானமா முடிவு பண்ணி ஜெயிப்ப… ஆனால் இப்போ இந்த ஆச்சார்யா பிராஜெக்ட்ல மட்டும் எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற…" என்று கேள்வி கேட்டான்.

மித்ரன் பேசியதைக் கதிரும் கேட்க நேர்ந்ததால் அபிஜித் பதிலைக் கேட்க இருவரும் ஆர்வமாக இருந்தனர்.

கதிரை ஏறிட்டு பார்த்த அபிஜித் தன் கண்களை மூடித் திறந்து " எனக்கு என்னோட சஹியை அடைய ஒரு சான்ஸ் வந்திருக்கும் போது என்னால் அதை விட முடியாது… மூர்த்தியை பழிவாங்க எனக்கு காரணம் இருக்கு.." என்று நிறுத்தி கதிரை பார்க்க கதிரோ அவனுக்கு தண்ணீர் குடிக்க குடுத்து விட்டு அவன் தலையை கோதிவிட அவனின் செய்கையை கண்டு சிரித்த அபி தொண்டையை செருமி மித்ரனிடம் " எனக்கு சஹி வேணும் மச்சி! அவளை பார்த்த நிமிஷத்தில் இருந்து காதலிக்கிறேன்… அப்ப அவ யாருன்னு எனக்கு தெரியாது… ஆனா யாரா இருந்தாலும் அவளை விட்டு கொடுக்க முடியாது…" என்றான்.

அதைக் கேட்ட மித்ரனோ " சரி… சரி.. நீ ஒன்னும் என் தங்கச்சியை விட்டு தர வேண்டாம்…ஆனால் அவளை எப்படி பார்த்த? உங்க முதல் சந்திப்பை இன்னும் கதிர்கிட்ட சொல்லவேயில்லை " என்று கேட்க கதிரும் அதை ஆமோதிக்க அபிஜித்தோ " டேய்... இங்க என்ன பிராப்ளம் போய்க்கிட்டு இருக்கு.. இப்ப இந்த கதை முக்கியமா? என்று கேள்வி கேட்டான்.

மித்ரனோ " இப்ப விட்டுட்டா உனக்கு சொல்ல நேரம் இருக்காது… சொல்லுடா" என்று கேட்க அபிஜித்திற்கு சஹியை கண்ட நொடி காட்சியாய் விரிந்தது…

நான்கு வருடத்திற்கு முன்பு…

அது டிசம்பர் மாதம்… திருச்சியில் இருக்கும் மித்ரனின் வீட்டிற்கு மாலை ஐந்து மணி அளவில்அபிஜித் வந்திருந்தான்.. அவனின் வீட்டிற்கு முதல் தடவை வருவதால் வீடு எங்கே என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்தான். ஏனெனில் டிசம்பர் மாதத்தில் பனி அதிகம் பெய்யும் சமயம் சீக்கிரமே இருட்டி விடுமாதலால் அபிஜித்திற்கு மித்ரனின் வீட்டைக் கண்டு பிடிக்க சிறிது நேரம் ஆனது.

அவன் ஒரு வீட்டைக் கடந்து காரை நிறுத்தப் போகையில் அந்த வீட்டினுள் இருந்து வெள்ளை நிறத்தில் பட்டு தாவணி அணிந்து வந்த பெண்ணொருத்தி குத்துவிளக்கைக் கையில் ஏந்தி கொண்டு வெளியே வந்தாள்.

அவளின் நீண்ட கைவிரல்கள் குத்து விளக்கின் ஒளியில் நகப்பூச்சுடன் மின்ன, அபிஜித் அதை வியந்து பார்த்து விட்டு சட்டென அந்தப் பெண்ணின் முகத்தை பார்க்க நீண்ட கண்களில் மையிட்டு, எந்தவொரு அலங்காரமுமின்றி தன் நீண்ட கூந்தலை பின்னி பூ சூட்டி அழகாய் மடிப்பெடுத்து தாவணி அணிந்து, கலகலக்கும் கை வளையல்களுடன் வெளியே வந்துக் கொண்டிருந்தாள்…

அவளை மெய்மறந்து பார்த்துக் கொண்டேயிருந்த அபிஜித் தான் வந்த வேலையை மறந்துவிட்டு அந்த தாவணிப் பெண்ணை கண் அசையாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

சட்டென்று அவனின் கைப்பேசி சிணுங்க எடுத்துப் பார்த்தால் மித்ரன் தான் அழைத்திருந்தான். எடுத்து காதில் வைக்கவும் மறுமுனையில் மித்ரன் " ஏன்டா எவ்ளோ நேரம் டா வெயிட் பண்றது… மூணு வீடு தள்ளி நின்னுகிட்டு இருக்க… சீக்கிரம் வாடா… கால் வலிக்குது" என்று கத்தினான்.

அபிஜித்தோ அதிர்ந்து போய் " டேய்… என்னடா சொல்ற… இந்த கலர் வீடு தானே சொன்ன? முன்னாடி கார்டன் எல்லாம் நீ சொன்ன மாதிரி இருக்குன்னு தான் இங்கே நிற்கிறேன்…" என்று சொல்லி அந்த தாவணிப் பெண்ணை பிரிய மனமில்லாமல் காரை எடுத்தான்.

மித்ரனின் வீட்டிற்கு செல்லும் போதே அவளை நினைத்து அவன் மனதில் கவிதை எழுதி விட்டான். இருந்தாலும் அதை அவளிடம் நேரில் சொல்ல வேண்டும் என்று முடிவு பண்ணி மித்ரனின் வீட்டில் காரை நிறுத்தினான்.

அபிஜித் வீட்டினுள் நுழையும் போதே அவனை மித்ரனின் பெற்றோர் உபசரிக்க பின் அவனுடைய ரூமிற்கு அபிஜித்தை அழைத்து சென்றான்.

மித்ரன் " டேய்...அபி.. சீக்கிரம் ப்ரஷ் ஆகிட்டு கிளம்புடா… இங்கே ஒரு காம்ப்பெடிஷன் நடக்க போகுது… அதுல எல்லாரும் கலந்துப்பாங்க… போய் பார்க்கலாம்.." என்று அழைக்க அபிஜித் சலிப்புடன் அவனை பார்த்து " டேய்... ரொம்ப டையர்டாக இருக்குடா… நீ வேணா போய் பார்த்து விட்டு வா… நான் ரெஸ்ட் எடுத்தேன்" என்று கூறினான்.

மித்ரனோ " டேய்…இன்னிக்கு கார்த்திகை தீபத் திருநாள்…" என்று கூற அபிஜித் சட்டென்று அவனைப் பார்த்து "ஓஹோ! அதுக்கு தான் எல்லா வீடுகளும் ஜொலிக்குதா… "என்று எதிர் கேள்வி கேட்டான்.

" டேய்.. அபி..படுத்தாதடா…கிளம்பி வா... இன்னிக்கு பாட்டு போட்டி, டான்ஸ் என எல்லாருமே கலந்துக்குவாங்க... ஜாலியா இருக்கும்…" என்று கெஞ்சினான்.

அபி தன் மனதுக்குள் ' அப்போ அவளும் வருவா போல… இதை சாக்காக வச்சி அவளை இன்னொரு தடவை பார்த்துற வேண்டியது தான்…' என்று நினைத்து மித்ரனிடம் " சரிடா… நான் உன்னுடன் வரேன்.. இரு.." என்று ப்ரஷ்ஷாகி கிளம்பி வர இருவரும் சேர்ந்து போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

அங்கே இவர்கள் போவதற்கு முன்பாகவே நிகழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருந்தன. அடுத்து நடனம் ஆட வருபவர்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவிக்க மூன்று பெண்களின் பெயர்களை கூற அபிஜித் அவர்களின் பெயர்களை கவனிக்காமல் விட்டு விட்டான். ஆனால் மித்ரனோ வாய்விட்டே " அட நம்ம பட்டாசு புள்ளைக" என்று கூற அவனை அபிஜித் விசித்திரமாக பார்த்து " எது பட்டாசா" என்று கேட்க மித்ரனோ மேடையை பார்க்க சொன்னான்.

அங்கே இருட்டாக இருக்க கையில் அகல் விளக்கை கையில் ஏந்தி மூன்று பெண்கள் நின்றிருந்தனர்.
பாடல் ஆரம்பிக்க அவர்களும் ஆட ஆரம்பித்தனர்.

"
அழகிய கார்த்திகை தீபங்களாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
கன்னியர் கண்களில் வாழ்த்துக்கள் பாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
இந்த மங்கையர் கொலுசுகள் மங்கல மேளம்
தநநந நநநந தநநம்
சுப ராகங்கள் கேட்கையில் விடியும் ஜாமம்
தநநந நநநந தநநம்
இனி புதிய உறவில் இதயம் முழுதும் மகிழும்
தநநம் தநநம் நம் நம் நம் நம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
ஆ..
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
நிஸ நிஸ கஸ மத பம நிப கம பா
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
…"

பாடலுக்கு ஏற்றவாறு பெண்கள் மூவரும் நடனமாட அபிஜித்தின் பார்வை நடுவில் ஆடிய பெண்ணின் மீதே பதிந்தது… நடனம் முடியும் நேரம் மித்ரன் அபிஜித்திடம் " டேய் இங்கேயே இருடா.. நான் பட்டாசை போய் வாழ்த்திட்டு வரேன்…" என்று கூறிவிட்டு செல்லும் போதே அபி " நானும் வரேன்டா… " என்று சொல்லி அவனுடன் சென்றான்.

மித்ரன் அங்கே நின்றிருந்த பெண்ணை " ஹோய்...பட்டாசு… " என்று அழைக்க அந்த பெண் திரும்பி பார்க்க அபிஜித் மித்ரனின் காதில் "அவங்க பெயரை சொல்லி கூப்பிடுடா…" என்று அவளின் பெயரைத் தெரிந்துக் கொள்ளும் பொருட்டு கேட்டான்.

மித்ரனோ அவனை ஒருமார்க்கமாக பார்த்து விட்டு " என்னடா விஷயம்? ஆர்வமா பொண்ணு பெயரையெல்லாம் கேட்கற ? " என்று சந்தேகமாக கேட்க அந்த பெண் அண்ணா என்ற அழைப்புடன் மித்ரனை நோக்கி வந்தாள்.

"ஹாய் டா தியா…. சூப்பரா உன் ஃப்ரெண்ட்ஸ் கூட டான்ஸ் ஆடுன, கண்டிப்பா பரிசு உங்களுக்கு தான்" என்று கூற அவளோ சிறு சிரிப்புடன் அதை ஏற்றுக் கொண்டு தலையாட்ட மித்ரன் அபிஜித்தை காட்டி " இவன் என் பிரண்ட்… அபி...என்று அறிமுகப்படுத்த அவள் அபிஜித்தைப் பார்க்க அவன் ஹலோ சொல்ல இவளும் பதிலுக்கு ஹலோ சொன்னாள்.

மித்ரன் அபியை பார்த்துக் கொண்டே " இவ என் தங்கை… பெயர்… சாஹித்யா… சுருக்கமா சஹி" என்று அறிமுகப்படுத்த அதற்குள் அவளுக்கு பரிசு கொடுக்க கூப்பிட அவளும் சென்று விட்டாள்…

அபிஜித் " மச்சான்! அவ உனக்கு தங்கச்சினா நான் உனக்கு மாப்பிள்ளை டா" என்று குதுகலமாக கூற மித்ரனோ " என்னடா சொல்ற?… " அதிர்ச்சியில் நெஞ்சை நீவி விட்டு கேட்க அபி , " ஹ்ம்...அவளை பார்த்த உடனே லவ் பத்திக்கிச்சு...ஆமா அவ எந்த காலேஜ்? நாளைக்கு அவளை போய் பார்த்து பேசணும்…" என்று சொல்ல மித்ரனோ நக்கலாக " ஹ்ம்...அவ இப்ப தான் ப்ளஸ்டூ படிச்சிட்டு இருக்கா" என்று கேஷூவலாக சொல்ல இப்போது அபிஜித் நெஞ்சை பிடித்துக் கொண்டு " என்னடா சொல்ற…பார்க்க காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி இருந்தா…" என்று கேட்டான்.

பின் அவனே தொடர்ந்து " சரி...அவ படிப்பு முடிந்ததும் அவள்கிட்ட என்னோட விருப்பத்தை சொல்லிக்கிறேன்… இப்ப எனக்கு அவக்கிட்ட இதை மட்டும் என் சார்பாக நீயே கொடுத்துட்டு… என்று தான் அணிந்திருந்த மோதிரத்தை கொடுத்தான். மித்ரனோ ஏதும் சொல்லாமல் மறுநாள் சஹியிடம் அந்த மோதிரத்தை கிஃப்ட்டாக கொடுக்க முதலில் மறுத்த சஹி அண்ணன் சென்டிமெண்டில் வாங்கி கொண்டாள்… இதையெல்லாம் அபி தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தான்…

அவன் மனதுக்குள்ளோ " இன்னிக்கு அடுத்தவங்க மூலமாக கிஃப்ட்டை தரேன்… கூடிய சீக்கிரம் உரிமையா வந்து உனக்கு எல்லாம் நான் செய்ய ஆசைப் படுகிறேன் டார்லி…." என்று சொல்லும் போது அவர்களுக்கு பக்கத்தில் சிவப்பு நிற ஆடிகார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய மூர்த்தியை கண்டு மித்ரன் மரியாதை நிமித்தமாக சிரிக்க சஹி அவரை "அப்பா" கட்டியணைத்திருந்தாள்…

அபிஜித்துக்கு மூர்த்தியை பார்த்த அந்த நொடி ஜீரணிக்க முடியாமல் போக படப்படக்கும் இதயத்துடன் " இவன்… இவன் மகளா? சஹி…" என்று வாய்விட்டு கூறிக் கொண்டே தலையை பிடித்து கொண்டான். பின் நிதானத்துக்கு வர அவனுக்கு சில நொடிகள் ஆனது..

சஹியையும் , மூர்த்தியையும் பார்த்து கொண்டே மனதில் ஒரு வன்மம் தோன்ற " உன்னை ஆண்டவன் என் கண்ணுல காட்டாமலே இருந்துருக்கலாம்டி…. இப்ப உன்னை வேதனைப் படுத்தி தான் உன் கூட சேரணும்னு இருக்கு நம்ம விதி… வரேன் மூர்த்தி… நீ செய்ததை இரண்டு மடங்காக திருப்பி தர திரும்பி வரேன்" என்று மனதில் கூறிவிட்டு மித்ரனிடம் கூட சொல்லாமல் கிளம்பி விட்டான்…

அவன் கிளம்பியதை அறியாமல் மித்ரன் அவனை தேட அபி அதே நேரத்தில் அவனது மொபைலுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

" டேய் அபி எங்கடா இருக்க… சஹிக்கிட்டே உன் மோதிரத்தை கொடுத்துட்டேன்… அவளும் வாங்கிகிட்டா…. ஆனால் அது நான் கொடுத்த மாதிரி தான் கொடுத்தேன்… பார்த்தியா அதை?" என்று ஆவலாக கேட்க "ஹ்ம்ம்.. பார்த்தேன் டா" என்று பதிலளிக்கவும் அவன் குரலின் பேதத்தை அறியாமல் மித்ரன் " சரி… நீ எங்கே இருக்க… சீக்கிரம் இங்கே வா …. வந்து டீரிட் வை…" என்று ஆவலுடன் கேட்டான்.

அபியோ " சாரிடா… நான் இப்ப ஏர் போர்ட்ல இருக்கேன்… இப்படியே டெல்லிக்கு போறேன்… விதி இருந்தா கண்டிப்பாக சஹியை கல்யாணம் பண்ணிப்பேன்… அவ படிப்பு முடியற வரை காத்திட்டு இருப்பேன்… அவள் நிழலாக நான் இருப்பேன்… அதுவரை அபிஜித்தின் காதலோ, அவன் பேரோ அவளுக்கு தெரியாதிருக்கட்டும்…" என்று சலித்து கொண்டே சொன்னான்.

"டேய்… என்ன ஆச்சு? சஹியை பார்க்க ஆவலா வந்தியே? ஏன் இப்படி பாதியிலேயே விட்டுட்டு போற… சம்திங் ராங்…" என்று இழுக்க அபியோ அதையெல்லாம் கண்டுக்காமல் " மித்து.. நான் இப்பவே டாடியை பார்த்து பேசணும்… ரொம்ப முக்கியமான விஷயம்… இதை இப்ப அவர்கிட்ட சொல்லலைனா எது வேணாலும் நடக்கலாம்… மீதியை நான் டெல்லி போயிட்டு சொல்றேன்… வந்த இடத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்துருக்கு… பை டா" என்று கூறிவிட்டு காலை கட் செய்தான்.

அவன் நல்ல விஷயம் என்று கூறியது அபி சஹியை பார்த்ததை என்று மித்ரன் நினைக்க அபியோ நெடுநாள் கழித்து மூர்த்தியை பார்த்ததை நினைத்து தான் அப்படி கூறியிருந்தான்.

அபிஜித் டெல்லி சென்றவன் தன் தந்தை கபிலனிடம் திருச்சியில் மூர்த்தியை பார்த்தது, சஹியிடம் காதலில் விழுந்தது என ஒன்று விடாமல் சொல்ல கபிலன் அனைத்தையும் கேட்டு விட்டு அவனை இப்போது தொழிலில் கவனம் செலுத்துமாறும் சில வருடங்களுக்கு பின் மூர்த்தியை எதிர்த்து நிற்க அவனுக்கு உடல் பலத்தோடு மட்டும் அல்லாது முழு பலமும் வேண்டும்… அதாவது பண பலமும், மன நலமும் வேண்டும் என அறிவுரை கூறினார்…

தனது இருபத்தி மூன்றாவது வயதில் தொழிலில் இறங்கிய அபிஜித் மீண்டும் சஹியை காண ஆவல் கொண்டு திருச்சி வர முடிவு செய்த நேரத்தில் விதி வேறு விதமாக மூர்த்தியும் டெண்டர் விஷயமாக மோத நேர்ந்தது.

அபிஜித் மித்ரனிடமும் கதிரிடமும் தனது காதல் கதையை சொல்லி விட்டு கதிரின் முகம் பார்க்க கதிர் ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வியாக அபியை பார்க்கவும் " என்னடா" என்று கேட்க அதற்கு சிறு சிரிப்புடன் கதிர் " இல்லை… அண்ணியை பார்த்த காதலில் விழுந்த… அதெல்லாம் ஓகே… அந்த காதல் கண்ட நொடியை அனுபவிக்காமல் அண்ணியோட அப்பனை ஆண்டவன் உனக்கு காட்டுனதை நினைச்சேன்… நீயும் இன்னும் அந்த மூர்த்தியை பழி வாங்க ஒன்னும் பண்ணலையேன்னு யோசிக்கிறேன்" என்றான்.

மித்ரனோ இடையிட்டு " டேய் கதிர்…. அவன் பண்ணிட்டு இருக்க வேலை மூர்த்திக்கு தெரியலை… அவருக்கு தெரிஞ்ச உடனே இருக்கு நாம எல்லாருக்கும் " என்று கூற அபியோ " மித்து! எனக்கு தெரியும் டா… நீ என்ன பண்ற… மூர்த்தி என்ன பண்றாருன்னு...எல்லா நியூஸூம் எனக்கு அப்டேட் வந்துட்டே இருக்கும்" என்று சொல்லி முடிக்கையில் அபிஜித்திற்கு வந்த நியூஸில் அவன் அதிர்ச்சி அடைந்தான்.

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 19

அபிஜித்தின் அதிர்ந்த முகத்தை பார்த்து மித்ரன் " என்னாச்சு டா" என்று கேட்க அவன் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவும் கதிரோ அவனின் தோளில் கைவைக்க சட்டென்று நிதானத்துக்கு வந்தவன் இருவரையும் பார்த்து " மூர்த்தி, யோகேஷை சஹிகிட்ட பேச கூப்பிட்டு வீட்டுக்கு அழைச்சிட்டு போயிருக்காராம் " என்று கூறி விட்டு யோசனையானான்.

"என்னடா… இது அதிசயமா இருக்கு.. மூர்த்தி அவரது பிஸ்னஸ் விஷயத்தை வீட்டில் கூட சொல்லாதவர்… இப்ப இவனை அழைச்சிட்டு போறாரு… என்னவா இருக்கும்.‌..எதுவும் உன்னைப் பத்தின உண்மை தெரிஞ்சிருச்சோ…" என்று சந்தேகமாக மித்ரன் கேட்டான்…

அபிஜித் அவன் கூறியதை மறுத்து "இல்லைடா… இன்னும் அந்த மூர்த்திக்கு என் கடந்த காலம் பத்தி தெரியலை… நான் அதை உறுதியாக சொல்லுவேன்… ஆனால் எனக்கு சஹியை கல்யாணம் செய்து வைக்க கூடாதுன்னு யோகேஷை முதலில் இன்ட்ரோ கொடுத்துட்டு அப்பறம் என்னை சவால்ல தோற்கடித்து சஹிக்கு அவனை கல்யாணம் பண்ற ஐடியாவா இருக்கலாம்… " என்று கூறிவிட்டு மூச்சை இழுத்துவிட்டான்.

அவன் நிதானமாக பேசிய பேச்சு மித்ரன் மற்றும் கதிரை யோசிக்க வைத்தது… மித்ரனோ " டேய்… மச்சி! உண்மையை சொல்லு… யோகேஷ் சஹிக்கிட்ட பேச போறான்னு சொல்லியும் நீ நார்மலா டென்ஷன் ஆகாம இருக்கன்னா ஏதோ பிளான் பண்ணிட்ட போல…" என்று கேட்க அபிஜித் இருவரையும் பார்த்து கண்ணடித்து சிரித்தான்…

அவர்கள் இருவரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு மூர்த்திக்கு கால் பண்ண மித்ரனோ பதறி போய் " ஏன்டா இப்ப அவருக்கு கால் பண்ற" என்று கேட்டான்.அவனுக்கு தன் உதட்டின் மீது ஒற்றை விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி காட்ட அதற்குள் மூர்த்தி அந்த பக்கம் காலை அட்டெண்ட் செய்திருந்தார்.

" ஹலோ… மூர்த்தி ஹியர்…"

" ஹ்ம்ம்… உங்க நம்பர்ன்னு தெரிஞ்சு தான் கால் பண்ணேன்… மிஸ்டர்.மூர்த்தி! திஸ் இஸ் அபிஜித் ஹியர்" என்று கிண்டலாக சொன்னான்.

"என்ன விஷயம்" என்று அவர் சுருக்கமாக கேட்க அதை விட சுருக்கமாக " பேசணும்" என்று பதிலளித்தான்.

" இங்கே பாருங்க மிஸ்டர்.மூர்த்தி… நான் நேராகவே சொல்றேன்… நமக்கிடையே நடந்துட்டு இருக்கற டீல் உங்களுக்கு நல்லாவே தெரியும்… அதை நீங்க சீரியஸா எடுத்துக்காமல் உங்க இஷ்டத்துக்கு வேற வேலைப் பார்க்கிற மாதிரி இருக்கே" என்று கேட்க அவன் கேட்ட தோரணை மூர்த்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது…

" ஹே! லுக்…நான் என்ன பண்றேன்… ஏது பண்றேன்னு எனக்கு தெரியும்… நீ ஒன்னும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்…இன்னும் நீ ஜெயிக்கலல…. கடைசி நிமிடம் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம்… நீ ஜெயிக்க நான் விடுவேன்னு நினைச்சியா " என்று ஆக்ரோஷமான குரலில் கேட்டார்…

அபிஜித் அதைக் கேட்டு நகைத்து விட்டு பின் நிதானமாக " சொன்ன சொல்லை காப்பாற்றாமல் அதைக் காற்றுல விடறப் பழக்கம் தான் உங்களது பிறவிக் குணம் ஆச்சே… இன்னும் மூன்று வாரங்களில் நான் உங்களுக்கு எப்படி பதில் சொல்றேனு பாருங்க…அதுவரை இதையும் கொஞ்சம் பாருங்க… மறந்துட்டிங்க போல… " என்று சஹியுடன் அவன் இருக்கும் போட்டோவை அனுப்பினான்….

அதைக் கண்ட மூர்த்தி " டேய்" என்று அழைக்க அபிஜித்தோ " ஸ்ஸப்பா…. என் காது டேமேஜ் ஆகுது…" என்று காதைக் குடைந்து கொண்டே " நீங்க சொன்னது சரிதான் மூர்த்தி… கடைசி நொடி எதுவும் நடக்கலாம்… ஆனால் என் சஹயோட விருப்பம் எனக்கு முக்கியம்… அவளுக்கு யோகேஷை பிடிக்காது… கண்டிப்பாக யோகேஷை பார்க்க அவளுக்கு பிடிக்காது…"என்று அடித்துக் கூறினான்…

அதைக் கேட்டு மூர்த்தி நக்கலாக " அவ என் பொண்ணு… அவளுக்கு எது பிடிக்கும்… பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்… கண்டிப்பா என் மாப்பிள்ளை யோகேஷ் தான்… என் பொண்ணு நான் யாரைக் கைக் காட்டுறேனோ அவனை தான் கட்டிப்பாள்…." என்று உறுதியான குரலில் கூறினார்.

அபிஜித் " அப்படியா…. அந்த போட்டோ பார்த்துமா நீங்க இப்படி சொல்றீங்க… ஓ...காட்…" என்று கிண்டலடிக்க மூர்த்தி " ஷட்... அப்… பிளடி.. ராஸ்கல்…" என்று கத்திவிட்டு போனை அணைத்தார்…

அவருக்கு அந்த போட்டோ கொஞ்சம் உறுத்தியது… ஏனென்றால் அபிஜித்தின் முகம் மிகவும் பரிச்சயமான முகமாக அவருக்கு தெரிந்தது… மறுபடியும் அவனின் முகத்தை ஜூம் செய்துப் பார்க்க அவனின் முகம் அவருக்கு குழப்பத்தை தந்தது…

அதே நேரம் அபிஜித் தின் போட்டோவை நாச்சியார் பார்த்து கொண்டிருக்க செழியனின் போட்டோவை ஜீவிகா பார்த்து கொண்டிருந்தார்….

அபிஜித் மூர்த்தியிடம் பேசிய பின் ஆச்சார்யாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர அவன் அதை அட்டெண்ட் செய்த நொடி ஆர்ப்பாட்டமான குரலில் " ஹாய்… யங் மேன்…" என்று சொல்ல அபிஜித்தும் " ஹலோ சார்…" என்று அமைதியாக கூறினான்..

அவன் குரலின் பேதத்தை வைத்து
" என்ன யங்மேன்… ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு… வாட் இஸ் ஹாப்பனிங்?... எனிதிங் சீரியஸ்…" என்று வினவினார்…

" நத்திங்….. சார்… எவ்ரிதிங் கோயிங் குட்" என்று முயன்று வர வழைத்த உற்சாகமான குரலில் கூறினான்… ஆனால் அனுபவசாலியான ஆச்சார்யா அதைக் கண்டு கொண்டாலும் இதில் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்து அபிஜித்தை விட உற்சாகமான குரலில் " ஓகே… யங்மேன்… இப்ப நான் உனக்கு கால் பண்ணது … ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான்… நாளைக்கு பத்து மணிக்கு என் வீட்டுக்கு வா…. அங்கே உனக்கு சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன்"என்று கூறிவிட்டு போனை வைக்க அபிஜித் யோசனையுடன் தன் கையில் இருந்த போனை‌ வெறித்தான்…. பின் ஆச்சார்யா விஷயத்தை ஒதுக்கி வைத்து தன் வேலையில் கவனம் செலுத்தினான்….

அன்று மதிய உணவு இடைவேளையின் போது சஹிக்கு மூர்த்தியிடம் இருந்து அழைப்பு வர சஹி குழப்பத்துடன் போனை எடுத்து காதில் வைக்க "ஹலோ டாடி…" என்று சிறு பதட்டத்துடன் கேட்க மூர்த்தியோ " சஹிம்மா…. ஒன்னுமில்லை… உனக்கு இது லஞ்ச் ஹவர் தானே டா…. நான் லொக்கேஷன் ஷேர் பண்ற இடத்துக்கு வந்துருடா… என் பார்ட்னர்கிட்ட உன்னை இன்ட்ரோ கொடுக்கணும்" என்று கூறிவிட்டு சஹியின் பதிலுக்கு காத்திருக்க சஹியோ தந்தையின் சொல்லை கேட்டு குழம்பினாள்….

ஏனெனில் மூர்த்தி யாரிடமும் தனது மகளை அறிமுகப் படுத்த விரும்ப மாட்டார்… அப்படியிருக்கையில் இன்று மூர்த்தியோ யாரிடமோ அறிமுகப் படுத்த விரும்புகிறார் என்றால் அவர் தனது தந்தைக்கு எவ்வளவு முக்கியமானவராக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்து மூர்த்தியிடம் " சரிப்பா… உங்க பார்ட்னரை பார்த்து விட்டு நான் காலேஜ்க்கு வந்துடுவேன்… " என்று கறாராக கூறினாள்…

மூர்த்தி, " என்னம்மா…. இப்படி சொல்லிட்ட… அவர் யார் தெரியுமா? அவர் உயரம் என்ன தெரியுமா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சஹியோ " ஏன்? அவர் கின்னஸ் ரெக்கார்ட் வாங்குற அளவு ரொம்ப உயரமாப்பா?" என்று நிலைமை தெரியாமல் கிண்டலடிக்க மூர்த்தி " என்னம்மா… இப்படி பொறுப்பு இல்லாமல் ஒருத்தவங்களை பத்தி கிண்டல் பண்ற… நீ ஒன்னும் சிறு பெண்ணில்லை… மெர்ச்சூடா நடந்துக்கோ…." என்று கடிந்து கொண்டார்…

சளியும் தன் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்க " எதையும் முழுமையாக தெரியாமல், ஆராயாமல் பேச கூடாது… இது தான் தொழிலின் மந்திரம் … அண்டர்ஸ்டாண்ட்…." என்று விளக்கம் கொடுக்க சஹியும் மன்னிப்பு வேண்டி அவரைக் காண அவர் அனுப்பிய லொக்கேஷனுக்கு காரில் சென்றாள்…

அவள் அங்கு சென்ற அடுத்த நொடி மூர்த்தி நின்றிருக்க சஹி தயக்கத்துடன் மூர்த்தியை ஏறிட்டு பார்க்க அவளின் முன்னால் வந்து " வாடாம்மா… ரிசர்வ் பண்ண டேபிளுக்கு போகலாம்.." என்று கூறிவிட்டு அவர் முன்னே செல்ல அவளைப் பார்த்துவிட்டு அமர்ந்து இருந்த யோகேஷ் மூர்த்தியிடம் வந்து கைக்குலுக்க அவனின் பார்வை அவளின் மீதே இருக்க சஹி அசௌகரியமாக உணர்ந்தாள்….

" ஹ்ம்ம்… சஹிம்மா… மீட் மை பார்ட்னர் யோகேஷ்…." என்று அவனை அறிமுகப்படுத்த சஹியோ மனதுக்குள் ' இவனை நான் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே' என்று நினைத்து அவனின் நீட்டிய கையை பற்ற போக எதேச்சையாக யோகேஷிற்கு பின்னால் சற்று தள்ளி அவளால் புரிந்து கொள்ள முடியாத பாவத்துடன் செழியன் நின்றிருந்தான்.

மூர்த்தியும் யோகேஷூம் சஹியின் முகம் பார்த்து நின்றிருக்க அவர்களுக்கு பின்னால் செழியன் நின்றிருந்ததால் அவனை இவர்கள் கவனிக்கவில்லை… அதனால் சஹி மட்டுமே செழியனைக் காண நேர்ந்தது.

அவனைக் கண்டதும் சஹிக்கு அவனது தோற்றம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை...கவனித்திருந்தால் பின்னால் நடக்க போகும் விபரீதங்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம்….

அவளின் கவனம் முழுவதும் செழியனிடம் இருந்ததால் மூர்த்தி யோகேஷை அறிமுகப் படுத்தி " மீட் மை பார்ட்னர்…அண்ட் யுவர் லைஃப் பார்ட்னர்…" என்று அறிமுகப்படுத்த சஹியும் அவர் சொன்னதை முழுமையாக கவனிக்காது மூர்த்தி கடைசியாக சொன்ன பார்ட்னர் என்ற வார்த்தையை மட்டும் கேட்டு யோகேஷிடம் கைக் குலுக்கி விட்டு சேரில் அமர, அதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ணது வரவும் சஹி மூர்த்தியிடம் வாஷ் ரூம் செல்வதாக கூறிவிட்டு செழியனைத் தேட அவனோ அவள் தேடலைக் கண்டு அவளின் கையை பிடித்தான்.

யாரோ என நினைத்து அவள் அவனின் கையை தட்டி விட " நான் தான்…" என்று அழுத்தமான குரலில் செழியன் கூறவும் சஹி மகிழ்ச்சியாக அவன் முகம் பார்க்க அது இறுகியிருந்தது.

" என்னாச்சு செழியன்" என்று அவள் கேட்க

" என்ன நடக்குதுடி… இங்கே… எவன் கையையோ பிடிச்சிட்டு நின்னுக்கிட்டு இருக்க? உங்கப்பா வேற அவனை மாப்பிள்ளைன்னு கூப்பிடுறாரு?...என்ன என்னை கழட்டி விட பார்க்கறீயா? " என்று நிதானமாக கேட்டான்…

சஹியோ அவனின் கேள்வியில் அதிர்ந்து பார்க்க அவனோ அதைக் கண்டு கொள்ளாமல் " இப்படி பார்க்காத டி…. எனக்கு வெறி ஆகுது…. இப்பவே உங்க அப்பாக்கிட்ட சொல்லட்டா… நீயும் நானும் விரும்புவதை…" என்று கேட்டான்…

சஹியோ " வேண்டாம் செழியன்…. எங்கப்பாக்கிட்ட இப்ப சொல்ல வேண்டாம்… எனக்கு கொஞ்சம்ம் டைம் குடுங்க...‌ நான் அப்பாக்கிட்ட பேசி நம்ம காதலுக்கு சம்மதம் வாங்கறேன்…."என்று பதற்றத்துடன் கூறினாள்.

ஆனால் தன் அப்பாவிடம் பேச முடியாது போகும் சூழ்நிலை உருவாகும் என்று அப்போது அவள் அறிந்திருக்க வில்லை….

செழியன் " நான் சொல்றதை சொல்லிட்டேன் சஹி!... எது வேண்டுமானாலும் நடக்கலாம்…. ஏன் உனக்கு திருமணம் நடக்கும் சூழ்நிலை கூட உருவாகும்… " என்று அவன் சொல்ல அதை சஹி மறுக்கும் விதமாக பேச தொடங்கையில் அவளின் முகத்திற்கு நேராக கையை நீட்டி நிறுத்துமாறு சைகை செய்து செழியன் " இது முற்றிலும் உண்மை… இது தான் நடக்கும்… ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… நான் விரும்புன பொண்ணை அடுத்தவனுக்கு தாரை வார்த்து கொடுப்பேன்னு கனவுல கூட நினைக்காதே" என்று அவளிடம் கோபமாய் எச்சரிக்கை செய்து விட்டு சென்று விட்டான்…

அதற்குள் மூர்த்தி சஹியை காணாது தேடி வர யாரையும் பார்க்காது சாப்பிட்டேன் என பேருக்கு கொறித்து விட்டு காலேஜ்க்கு செல்வதாக கூற மூர்த்தி , அவளிடம் ஏன்? லீவு போட தானேமா சொன்னேன்... என்று கேள்வி கேட்க அவளோ தனது பிராஜெக்ட் கைடு சீக்கிரம் வர சொல்வதாக அவருக்கு பதில் கூறிவிட்டு யாரிடமும் சொல்லாமல் காலேஜ் கிளம்பி விட்டாள்...

அன்றிலிருந்து செழியன் சஹி கால் செய்தால் அவனது கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பளு அதிகம் இருப்பதால் தன்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது எனவும் கன்ஸ்ட்ரக்ஷன் எடுத்திருக்கும் பிராஜெக்ட் வெற்றிக்கரமாக முடிந்தவுடன் தான் நேராக பெண் பார்க்க வருவதாகவும் கூறி காலை கட் செய்தான்…

செழியன் கொடுத்த வாக்கை காப்பாற்றுவான் என சஹிக்கு தெரியுமாதலால் சஹி மிகுந்த நம்பிக்கையுடன் அவன் சொல்வதை நம்பினாள்….

அதே வேளை அபிஜித்திற்கு இந்த வருட சிறந்த தொழிலதிபர் விருது வழங்க இருப்பதாக அவனது பி.ஏ கதிருக்கு தகவல் வர கதிர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அபிஜித்தை தேடி அவனது கன்ஸ்ட்ரக்ஷனுக்கு வந்த நொடி அவன் தேடி வந்தவனோ அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான்…

கதிர் , "அபி… ஒரு குட் நியூஸ்…"

அபிஜித், " டேய்… சீக்கிரம் கிளம்பு… ஒரு முக்கியமான விஷயம் பேசணும் னு மொத்த ஃபேமிலியும் வெயிட் பண்றாங்களாம்…" என்று கூறிவிட்டு லிப்டில் ஏற கதிரும் ஓடி வந்து ஏறினான்….


"என்ன தீடீர்னு வந்துருக்காங்க… சொல்லிட்டு வந்துருந்தா நல்லா இருந்துருக்கும்ல…. " என்று கதிர் கேட்க அதற்கு பதிலளித்த அபிஜித் நக்கலாக " இதை அவங்ககிட்டயே கேளு" என்று சிரிப்புடன் கூற கதிரோ அலறினான்…

" எது? நான் கேட்கணுமா? " என்று அதிர்ச்சியுடன் வாயை பிளக்க அவனது வாயை மூடிய அபிஜித் " வாயை மூடுடா…. மூக்கு வழியா மூளை தெரியுது" என்று மறுபடியும் நக்கலடித்தான்…

அதற்குள் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்ததும் இருவரும் வேகமான எட்டுக்களுடன் அந்த அறையை திறக்க அங்கே அபிஜித் பெற்றோர் ஒரு ஷோபாவில் வீற்றிருக்க மறுபக்கம் இருந்த ஷோபாவில் செழியனின் அம்மா, ஆச்சி, அவனின் தங்கை வானதி மூவரும் அமர்ந்திருந்தனர்.

அபிஜித் அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தாலும் இரு சாராரிடமும் புன்னகைத்து விட்டு நடுவில் அமர அவனருகில் கதிர் அமர்ந்தான்.

கபிலன் தொண்டையை கனைக்க அபிஜித் " டாட்… இப்ப எதுக்கு என்னை இங்கே வர வைச்சிங்க… எனக்கு முக்கியமான வேலை இருக்கு… சீக்கிரம் சொன்னால் நல்லாயிருக்கும்…" என்று கூறிவிட்டு அவர் முகம் பார்க்க கபிலனோ எதிரில் அமர்ந்திருந்த பார்வதியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்…

அவரின் முகத்தில் வேதனையைக் கண்டு அபிஜித் பேச்சிலந்தாலும் " யாராவது சொல்லுங்க… " என்று குரலை உயர்த்தினான்…

கபிலன் " உனக்கு பொண்ணு பார்க்க நாங்க போறோம்… " என்று பட்டென்று கூறினார்…

அபிஜித் தயங்கி கொண்டே " டாடி… நான் சஹியை காதலிக்கும் போது வேற பொண்ணை எப்படி என்னால் கல்யாணம் பண்ண முடியும்?" என்று கேட்க அவனருகில் வலதுபுறமாக அமர்ந்திருந்த பார்வதி " அப்போ செழியனுக்கு என்ன பதிலை சொல்லப் போறப்பா?" என்று அவரும் கேள்வி கேட்க அபிஜித் இருபுறமும் பதிலளிக்க திணறினான்….

கபிலன் அவனிடம் " எனக்கு அந்த மூர்த்தியோட பொண்ணை மருமகளா ஆக்குறதுல விருப்பம் தான்… ஆனால் அந்த பொண்ணு உன்னை விரும்புமா? உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுமா?" என்று சந்தேகமாக கேட்க அபிஜித்தோ " டாடி… சஹிக்கு என்னை பிடிக்கும்…கண்டிப்பாக அவளை தவிர வேற எவளையும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன்" என்று உறுதியான குரலில் கூறினான்.

அவனின் உறுதி பார்வதிக்கும், நாச்சியாருக்கும் கலக்கத்தை தந்தாலும் நாச்சியார் அவனிடம் " செழியன் சாஹித்யாவை விரும்புறான்னு எனக்கு தெரியும்… அவன் விருப்பம் தான் என் விருப்பம்…. என் பெர்ரி எதுலயும் தோற்க கூடாது… அதுக்கு நீ செழியனுக்கு …"என்று இழுக்க அபிஜித் கைநீட்டி " லீவ் இட்… அவள் செழியனோட சஹி இல்லை …. இந்த ஜித்தனோட சஹி " என்று நிதானமான குரலில் உறுதியாக கூறிவிட்டு வெளியேறினான்….

அவனைத் தொடர்ந்து கதிரும் வெளியேற இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வதி " என்ன நினைச்சிட்டு இப்படி பேசுறான்?" என்று பதிலுக்கு சத்தம் போட அவரை சமாதானப் படுத்தினர் நாச்சியாருடன் சேர்ந்து ஜீவிகாவும், கபிலனும்…

பின் நால்வரும் இணைந்து பேச பேச ஒரே களேபரமாகி பின்னர் அனைவரும் ஒரே மனதாக அபிஜித்திற்கு சஹியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்…

அவர்கள் நால்வரும் பேசியபடி அந்த மாதத்தில் மூன்றாம் வாரத்தில் இருமனம் ஒருமனமாய் இணையும் பந்தமான திருமணத்தில் அபிஜித் முகம் இறுக்கமாகவும் சஹியின் முகம் தெளிவில்லாமலும் ஒரே மேடையில் அமர்ந்திருக்க அங்கே அபிஜித் சஹியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கிக் கொண்டான்….

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன் கழுத்தில் ஏறிய தாலியை திகைப்புடன் பார்த்து கொண்டிருந்த சஹியை உற்றுப் பார்த்த அபிஜித் அவள் தோளில் கை போட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைக்கவும் சஹி அவனை குழப்பத்துடன் திகைத்து பார்க்க அவளை பார்த்து கொண்டிருந்தவனோ கண்சிமிட்டி உதடு சுழிக்க அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது…

அவள் மனமோ "என்ன நடக்குதுன்னே புரியலையே" என்று புலம்பிக் கொண்டிருந்தது…

அவளையேப் பார்த்து கொண்டிருந்த அபிஜித்திற்கு அவளின் மனம் புரிந்தாலும் அவள் புறம் குனிந்து கடுமையான குரலில் " இப்ப இந்த நொடியில் இருந்து என் பொண்டாட்டி ஆன சந்தோஷத்தை முகத்தில் காட்டுற… இல்லை நீ இப்படியே முகத்தை வைச்சிப்பேன்னா உனக்கு பதில் உங்கப்பாவை தான்…." என்று நிறுத்தி விட்டு அவளைப் பார்க்க அவளும் அவனைப் பார்க்க அவன் பல்வரிசை தெரிய சிரித்து விட்டு அவளின் காதருகே குனிந்து " உங்கப்பாவை தான் அழுக வைப்பேன்" என்று காதருகே சீறினான்…

மணமக்களாய் மேடையில் வீற்றிருந்தவர்கள் குனிந்து பேசுவதை பார்த்து கீழே அமர்ந்திருந்தவர்கள் அவர்களிடையே ஓடும் சம்பாஷணைகளைக் கண் சிமிட்டாமல் பார்க்க அவர்கள் ரொமான்ஸ் செய்வதாக நினைத்து கொண்டிருந்தனர்….

ஆனால் இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் மூர்த்தியோ, கங்காவோ இல்லை… அவரவர் மனநிலை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது….

கங்காவோ மூர்த்தி சொன்னதை நினைத்து பார்த்தார்….

இரண்டு நாட்களுக்கு முன்…

தீடிரென்று வீட்டுக்கு வந்த மூர்த்தி கங்காவை அருகில் அமர்த்தி " நான் இதுவரை உனக்கோ, நம்ம பொண்ணுக்கோ ஏதாவது கஷ்டம் தர மாதிரி பண்ணிருக்கேனா?" என்று கேட்க கங்காவோ அவரிடம்" இல்லை" என்று தலையாட்டி விட்டு மனதுக்குள் ' ஆனால் அடுத்தவர்களுக்கு மட்டும் செஞ்சிட்டீங்களே' என்று பெருமூச்சு விட்டு " எதுக்குங்க? இப்ப இதை கேட்கறீங்க…" என்று கேட்க மூர்த்தி அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் நீர் அருந்திவிட்டு " நான் சொல்றதை நீ கவனமா கேளு… வர வெள்ளிக் கிழமை நம்ம சஹிக்கு கல்யாணம்… இதை அவகிட்ட சொல்லி இந்த கல்யாணத்துக்கு ரெடியா இருக்க சொல்லு" என்று கூறிவிட்டு நகர அவரின் கையைப் பிடித்து கங்கா " படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைக்கிற அளவுக்கு இப்ப என்ன நடந்துச்சு? அவளுக்குன்னு ஒரு ஆசை இருக்காதா? இதை என்னால அவக்கிட்ட சொல்ல முடியாது…. அவக்கிட்ட நீங்களே சொல்லுங்க"என்று கோபமாக கூறிக் கொண்டிருக்கும் வேளை கல்லூரி முடிந்து வந்த சஹியும் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்…..

"என்ன டாடி? இவ்வளோ சீக்கிரம் வீட்டுக்கு வந்துருக்கீங்க… மம்மி ஞாபகமா? " என்று மூர்த்தியிடம் கூறிவிட்டு கங்காவை பார்த்து கண்ணடித்தாள்… கங்காவோ மனதினுள் ' ஹ்க்கும்..இவ வேற எந்த நேரத்தில இப்படி சொல்றா.. பாரு' என்று மனதினுள் நினைத்து கொண்டே " அதை உங்க அப்பாகிட்ட கேளு" என்று நழுவினார்.

சஹி, மூர்த்தியை பார்க்க அவரோ மனதுக்குள் ' அடியே! என்னை கோர்த்து விட்டுட்டியேடி….' என்று நொந்து கொண்டார்.

" டாடி! எதுவும் முக்கியமான விஷயமா?"

"ஆமாடா… கொஞ்சம் பேசணும் உன்கிட்ட…"

" ஓகே..டாடி! ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்"என்று சஹி செல்லவும் கங்கா கையில் காஃபி முன் வர மூர்த்தி அவரை முறைத்து பார்க்க " என்ன முறைப்பு வேண்டிக் கிடக்கு? நீங்களே நான் இல்லாமல் முடிவு பண்ணியது தானே? அப்ப நீங்களே உங்க பொண்ணு கிட்ட பேசி சம்மதம் வாங்குங்க" என்று கூறினார்…

அதற்கு பதிலளிப்பதற்குள் சஹி வரவும் " சொல்லுங்க டாடி! " என்று கங்கா கொடுத்த காபியை பருகிக்கொண்டிருந்த மூர்த்தியிடம் சொல்ல இவளுக்கும் காபியை கையில் திணித்தார்…

மூர்த்தி சொன்னதை கேட்டு காபி பருகிக் கொண்டிருந்த சஹிக்கு புரையேற அவளின் தலையில் தட்டிய கங்கா "பார்த்து குடிமா… " என்று சொல்ல மூர்த்தி " நான் முடிவு பண்ணிட்டேன்… வர வெள்ளிக்கிழமை உனக்கும் அபிஜித்திற்கும் கல்யாணம்… நீ அதற்கு ரெடியா இரு" என்று சொல்லிவிட்டு சஹி மறுமொழி பேசும் முன்னே அங்கிருந்து கிளம்பினார்….

அதேநேரம் சஹியின் மொபைலுக்கு புதிய எண்ணிலிருந்து கால் வர அதை ஏற்றவள் " ஹலோ" என்று சொல்ல
மறுபுறம் கம்பீரமான குரலில் " ஹாய் டார்லிங்… ஆர் யு ரெடி டூ மேரி மீ" என்ற கேட்க சஹி மனதில் அதிர்வுடன் ' இப்ப தான் அதிர்ச்சி குறைஞ்சு ஐந்து நிமிஷம் கூட ஆகலை… அதற்குள் இன்னொரு அதிர்ச்சியா?' என்று மைண்ட் வாய்ஸில் யோசிக்க மீண்டும் " டார்லி… ஆர் யு தேர்? " என்ற குரலில் நிதானத்துக்கு வந்த சஹி "ஹ்ம்.. ஐ அம் ஹியர் !" சொல்லுங்க… யார் நீங்க? தெரியாத பொண்ணு கிட்ட இப்படி தான் டார்லிங்… டார்ஜிலிங்னு சொல்லுவீங்களா? ஏகப்பட்ட கடுப்புடன் கேட்க அந்த பக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது…

"ஹ்ம்ம்… நான் யாருன்னு சொல்ல மறந்துட்டேன்ல… ஐ அம் அபிஜித்…"என்று ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க " இருக்கட்டும்… அது என்னைய கேட்டா பேரு வச்சாங்க? தாங்கள் அழைத்ததன் நோக்கம் என்னவோ? " என்று படு நக்கலாக கேட்டாள்….

" ஹான்! நமது திருமண நாளாம் நாளை மறுதினம் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கும் தங்களின் எதிர்காலம்" என்று பதிலுக்கு அபிஜித்தும் படுநக்கலாக பதிலளித்தான் ….

அவன் குரலின் பேதத்தை உணர்ந்த சஹி தனது உதடு கடித்து " சாரி…. சார்.. நான் ஏதோ சிறுபிள்ளைதனமா பேசிட்டேன்… ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லணும்" என்று தன்மையாக சொன்னாள்….

அபிஜித்தும் 'நீ குழந்தை தான்டி' என்று மனதில் நினைத்தாலும் அவளை சீண்டிப் பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது... ஆதலால் அவளிடம் " என்னது? சாரா?... கமான் டார்லிங்…நம்ம வாழ்க்கை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க போகுது…நமக்குள் எந்த பார்மாலிட்டியும் வேண்டாம்…" என்று சொல்ல சஹியோ " அதை அப்பறம் பார்க்கலாம் சார்… நான் ஒருத்தரை விரும்பறேன்…அவரை தான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்…அப்பா என் கல்யாண பேச்சை எப்படியும் மூன்று அல்லது ஐந்து வருஷம் கழிச்சு எடுப்பாருன்னு தான் இருந்தேன்… அதுல நானும் அவங்களும் நல்ல ஸ்டேஜ்க்கு வந்துட்டு அப்பாகிட்ட என் லவ் பத்தி சொல்லலாம்னு இருந்தேன்…"என்று கடகடவென மூச்சு விடாமல் கூறினாள்…

" ஓஹோ.." என்று தன் தாடையை தட்டிக் கொண்டே அபிஜித் " அதுக்காக எல்லாம் நான் உன்னை அடுத்தவனுக்கு விட்டு தரமாட்டேன்… இது என்னோட பலநாள் கனவு… இது நிறைவேறியே ஆகணும்… கெட் ரெடி"

சஹி மறுத்து பேசும் முன்னே அபிஜித்தே " இங்கே பாரு டார்லிங்! நீ எதுக்கும் இதை பார்த்துட்டு பேசு…" என்று அவளுக்கு மூர்த்தி சவால் விட்டதையும் அதற்கு சவாலில் ஜெயித்தால் சஹியை கல்யாணம் பண்ண சம்மதித்ததும் அந்த வீடியோவில் ஓடிக் கொண்டிருந்தது… சஹி" இதெல்லாம் பார்த்தால் நான் உங்களை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறீங்களா? நெவர்…" என்று உறுதியான குரலில் கூறினாள்…

அவளின் உறுதியைக் கண்டு அபிஜித் வியந்தாலும் " ஓகே.. டார்லிங்! மீட் யூ சூன்… பை" என்று சிரித்துக் கொண்டே போனை வைக்க அடுத்த நிமிடமே சஹி இளஞ்செழியனுக்கு அழைக்க அதுவோ ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது…சஹியோ தன் விதியை நொந்து கொண்டு ' கடவுளே! எனக்கு ஏன் இந்த சோதனை' என்று மனதில் கதறினாலும் விடாமுயற்சியாக மறுபடியும் செழியனுக்கு அழைக்க அதுவோ ஒரே அழைப்பில் கட்டாகியது… அவளோ பொறுமையின்றி அவனுக்கு உடனே பேசவும் என்று மெசேஜ் செய்ய அவன் சிறிது நிமிடம் கழித்து அழைத்திருந்தான்….

" சொல்லு சஹி… நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்….ஏதும் முக்கியமான விஷயமா? இல்லைனா அப்பறம் பேசறேன்…" என்று சோர்ந்து போன குரலில் பேச சஹியின் கவனத்தில் அது பதிந்தாலும் சொல்ல வேண்டிய அவசியத்தால் அவள் அதை ஒதுக்கி " செழியன்…எனக்கு வீட்டுல கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க…" என்று மெல்லிய குரலில் கூற அவனோ எந்த வித பதட்டமுமின்றி " வாழ்த்துகள் சஹி… கல்யாணத்துக்கு கண்டிப்பாக வரேன்… பிரியாணி சாப்பிட.." என்று சாதரணமாக கூறினான்…

அவனின் கூற்றில் சஹிக்கு சுர்ரென்று ஏற "என்ன அவ்ளோ சாதாரணமா பேசுற…அப்போ என்னை எதுக்குடா விரும்புன? காதலிச்ச பொண்ணை இப்படி அடுத்தவனுக்கு விட்டு தர எதுக்குடா உனக்கு லவ்வு?ச்சீ… " என்று கோபமாக கேட்டு விட்டு பட்டென்று போனை வைத்துவிட்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்...

மறுபக்கம் இருந்த இளஞ்செழியனோ போனை வெறித்து பார்த்து " என் மேல் உனக்கு கடைசி வரை நம்பிக்கை இல்லையேடி…நான் உன்னை ஒரு நாளும் விட்டு தரமாட்டேன்… செழியனும் ஜெயிப்பான்…. அபிஜித்தும் ஜெயிப்பான்…" என்று சத்தமாக சொல்லிக் கொண்டான்…


தனது அறையில் அழுது கொண்டிருந்த சஹிக்கு கதவு தட்டப்படும் ஓசையில் முகத்தை அழுந்த துடைத்து விட்டு கதவை திறக்க அங்கே அவளின் நட்பு பட்டாளம் மூவரும் நின்றிருக்க அவர்களை சோர்வுடன் வரவேற்க அதே சமயம் மூர்த்தி சஹியை சம்மதிக்க வைக்க இது தான் சரியான தருணம் எனக் கருதி உள்ளே நுழைய அனைவரும் அவரைக் கண்டவுடன் எழுந்து நின்றனர்…

மூர்த்தி, " என்ன இது … மரியாதை மனசுல இருந்தா போதும்… உட்காருங்க"

விஷான் " சொல்லுங்க அங்கிள்… என்ன விஷயமா பேச வர சொன்னீங்க?

"ஹான்… உங்கள் எல்லோருக்கும் ஷாக்கிங் நியூஸ்…நம்ம சஹிக்கு நாளை மறுநாள் கல்யாணம் நடக்க போகுது… நீங்க எல்லாம் கண்டிப்பாக வரணும்" என்று கூறி விட்டு மூர்த்தி இதுதான் முடிவு என்பதை அழுத்தமாக உரைத்து விட்டு சஹியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்….

தர்ஷினி " என்னடி...சஹி! இதுக்கு நீ ஒத்துக்கிட்டியா.. அப்போ உன் லவ்? அதை வீட்டுல சொல்லிருக்கலாமேடி…கண்டிப்பாஅங்கிள் அதை கேட்டுருப்பாரே?"

சஹியோ " இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பாக நான் சம்மதிக்க தான் வேணும்… எங்கப்பாவை எங்கேயும் தலைக்குனிய விடமாட்டேன்…" என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள்…

அப்போ நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குறீயா? - தர்ஷினி..

" ஆமாம்! எது நடக்கணும்னு இருக்கோ அது யார் தடுத்தாலும் நடந்தே தீரும்… இனி செழியன் என் வாழ்க்கையில் இல்லை…அப்பா சொன்ன மாப்பிள்ளைக்கு ஓகே சொல்ல நினைக்கிறேன்.." -சஹி.

" சரி! உன் முடிவு அது தான் என்றால் ஒன்னும் இல்லை… ஆமா உங்க அப்பா பார்த்துக்கிற மாப்பிள்ளை பெயர் என்ன?யாரு அவரு?அவரோட போட்டோ எதும் பார்த்தீயா?" என்று தர்ஷினி கேட்க சஹி " அவன் பேரு அபிஜித்... டெல்லியை பெரிய பிஸ்னஸ் மேனாம்… இதுதான் டி எனக்கு தெரியும்" என்று சொல்ல மூவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு விஷான் சஹியிடம் " என்ன சஹி.. இப்படி சொல்ற.. போட்டோ கூட பார்க்காம.. எப்படி சம்மதித்த இதுக்கு? " என்று கோபப்பட்டான்…

" கிணற்றுல விழுகறதுன்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம் அதுல நல்ல தண்ணீர் இருந்தால் என்ன? உப்பு தண்ணீர் இருந்தால் என்ன? எதுவும் பிரயோஜனம் இல்லை... குதிச்சிற வேண்டியது தான்"என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டே போக விஷான் அவளின் மனதை மாற்றும் பொருட்டு " சரி... எல்லாம் கிளம்புங்க...எங்கேயாச்சும் போயிட்டு வரலாம்..நம்ம மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்…" என்று எல்லோரையும் கிளப்பினான்…

மூர்த்தி மற்றும் கங்காவிடம் சொல்லிவிட்டு நால்வரும் கிளம்ப அவர்கள் போனதை பார்த்து விட்டு கங்கா " ஏங்க.. நீங்க எதுக்கும் ஒரு தடவை உங்க முடிவை கன்சிடர் பண்ணுங்க..அவ குழந்தை.."என்று கெஞ்சலாக கேட்டார்… மூர்த்தி அவரை கடுமையாக பார்த்து " இது என்னோட கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம்...இது நடக்கல என்னை நீ உயிரோடு பார்க்க முடியாது… கொடுத்த வாக்கை காப்பாற்றியே ஆகணும்.."என்று சொல்லும் போதே " அதுக்கு என் பொண்ணு தான் கிடைச்சாளா… இனி என்கிட்ட பேசாதீங்க…" என்று விறுவிறுவென சென்று கதவை அடைத்தார்…

****************************
அபிஜித்தின் வீட்டில்…

"நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கீயா?" என்று கபிலன் கேட்க அபிஜித் அங்கே இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு "ஆம்" என்று தலையாட்டினான்…

"இப்ப என்னடா அவசரம்? அந்த பொண்ணு இப்போதான் படிச்சிட்டு இருக்கா? படிச்சி முடிச்சதுக்கு அப்பறம் கல்யாணத்தை வச்சிக்கலாமே" என்று விடாமல் வாதாட தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன் " டாடி! என்னை கல்யாணம் பண்ணதால அவளுக்கு படிப்பு கெட்டுப் போகாது... அதெல்லாம் யோசிச்சு தான் அந்த மூர்த்திகிட்ட சவால் விட்டேன்… அந்த ஆளு நினைச்சி கூட பார்த்துருக்க மாட்டான்.. நான் ஜெயிச்சிருவேன்னு….ஏன்னா அவன் கடைசி வரை எனக்கு அவார்ட் கையில் கிடைக்கிற வரை அதை தடுக்க எந்த எல்லைக்கும் போனான்…..ஒன்னு தெரியுமா டாடி! எந்த ஒரு விஷயத்துக்கு எதிர்ப்பு அதிகமாக வருதோ அந்த விஷயத்தை முடித்தே ஆகணும்ன்னு வெறி வரும்...எப்பாடு பட்டாவது ஜெயிச்சே ஆகணும்ன்னு தோணும்... இப்ப நான் ஜெயிச்சிட்டேன்…அவன் கொடுத்த வாக்கை நிறைவேத்துறான்…." என்று கண்கள் மின்ன சொன்னான்…

"இதையெல்லாம் கேட்கறதுக்கு நல்லாயிருக்கும்.. ஆனால் வாழ்க்கையை இருவரும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல தொடங்காம பார்த்துக்க அபி.. ஒரு வாழ்க்கை போனா வராது…உன் அம்மாகிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேளு…. சஹி மருமகளா வர சம்மதமான்னு? " என்று அவர் ஜீவிகாவை பார்க்க அபியோ " எப்போதும் எங்க அம்மா எனக்கெதிராக எதுவும் சொல்ல மாட்டாங்க…" என்று கேட்க அபிஜித் அம்மாவும் மெதுவாக தலையசைத்தார்..

அதற்கு பின் அபிஜித்தின் திருமண வேலைகள் தங்கு தடையின்றி இரண்டாம் நாள் குடும்ப உறுப்பினர்கள் , முக்கிய விருந்தினர் முன்னிலையில் நடைபெற்றது…

மணமேடையில் கம்பீரமாக சிறு திருநீறு கீற்று டன் பட்டு வேட்டி பட்டு சட்டையில் அமர்ந்திருந்தவனை சஹி பார்க்காது இருக்க அவனோ ஐயர் சொன்ன மந்திரத்துடன் அருகே அமர்ந்திருந்தவள் இடுப்பில் யாரும் அறியாது கிள்ளிவிட அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனை ஏறிட்டு பார்த்த அந்த நொடி இன்னும் அதிர்ந்தாள்… அவளது பேச்சற்ற பார்வை உணர்ந்து அவளை இயல்புக்கு கொண்டு வர அபிஜித் அவளை சீண்டினான்…

" என்னை பார்த்து மயங்கிட்டியா?..டார்லிங்.. அதை அப்பறம் செய்... இப்ப ஐயர் சொல்றதை செய்" என்று நேராக அமர்ந்தான்…

சஹியோ மனதுக்குள் ' இவன் என்ன எல்லோரும் இருக்கறப்ப கிள்ளி வைக்கிறான்' என்று சங்கடமாக நினைத்தாள்….

தாலியெடுத்து ஐயர் "கெட்டி மேளம், கெட்டி மேளம்" என்று சொன்ன நிமிடம் அபிஜித் கண்களை இறுக மூடி திறக்க அவன் கையில் இருந்த மாங்கல்யத்தை சஹி ஒருவித தவிப்போடு பார்க்க, அபிஜித் தன் கரங்களில் ஏந்திய தாலியோடு அவளிடம் குனிந்து " என் கண்ணை பாருடி‌.. இந்த நிமிடம் முதல் உனக்கு எல்லாமாக நான் இருப்பேன்…உன் தேவையை நான் நிவர்த்தி செய்வேன்... எப்போதும் உன்னை விட்டு தரமாட்டேன்"என்று கூறிக்கொண்டே மூன்று முடிச்சி போட அவன் கைகளை தடுத்த இன்னொரு கை இன்னொரு முடிச்சை போட்டது...அது அவனின் தங்கையின் கை… நாத்தனார் முடிச்சை நான் தான் போடுவேன் என்று…

எல்லாம் முடிந்து பெற்றவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முதலில் மூர்த்தி மற்றும் கங்கா காலில் அபிஜித்தும் சஹியும் விழ மூர்த்தி அவனை வெறுப்பாக பார்த்தாலும் தன் சொல்லுக்கு கீழ் படிந்த மகளை ஆதுரமாக பார்த்து " பதினாறும் பெற்று சிறப்பாக வாழுங்க" என்று வாழ்த்தினார்…

அதேவேளை கபிலன்- ஜீவிகாவின் காலில் இருவரையும் கங்கா விழச் சொல்ல அவரின் பின்னால் நின்றிருந்த மூர்த்தியை அபிஜித் ஒரு பார்வை பார்த்துவிட்டு " கண்டிப்பாக அத்தை… என்னை பெத்தவங்க, என் நலம் விரும்பிகள் காலில் விழுகலனா எப்படி?" என்று கேட்டுவிட்டு கபிலனை நோக்கி சென்று இருவரும் காலில் விழுந்தனர்...

"ஒரு நிமிஷம்.. மிஸ்டர்.மூர்த்தி!"என்று அவரை அழைத்தவன் அவர் அவனைப் பார்க்க " இன்னும் ஒருத்தவங்க காலில் விழுகணும்.. அவங்களையும் மேடைக்கு வரச் சொல்லலாமா? " என்று போலி பணிவுடன் கேட்க மூர்த்தி அதை அறியாது " என் பொண்ணுக்கு எல்லாருடைய ஆசிர்வாதமும் வேணும்... வரச் சொல்லுங்க அவர்களை" என்று கூறினார்…

அபி, " ஹ்ம்.. அவங்க மேடைக்கு வர்றதுக்கு முன்னாடி.. அவங்களை நீங்க பார்க்கிறது இன்னும் பெட்டர்" என்று பீடிகையுடன் சொல்ல மூர்த்தி அவர்கள் யாரென்று பார்க்க அபிஜித் ஒரு ஓரமாக கவனத்தில் பதியா வண்ணம் நின்றிருந்தவர்களை பார்த்து " வாங்க " என்று சிறு தலையசைப்புடன் அழைத்தான்…

வந்தவர்களை பார்த்த மூர்த்தி " நீயா?" என்று அதிர்ச்சியாக கேட்க கங்காவோ ஆனந்த கண்ணீரில் பேச்சற்றுப் போய் நின்றிருந்தார்…

"வெல்… இவங்க என் அம்மா பார்வதி...இவங்க என் ஆச்சி நாச்சியார்.. இது என்னோட தங்கச்சி வானதி.‌‌..அப்பறம் இன்னொன்று நான்...என்னோட முழுப்பெயர்.. அபிஜித் இளஞ் செழியன்...சன் ஆஃப் நெடுஞ்செழியன்.." என்று கம்பீரமான குரலில் சபை நடுவே தன் உயரத்திற்கும் நிமிர்ந்து உரைத்தான்…

மூர்த்திக்கு இதைக் கேட்ட உடன் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்து தன் தலையில் இடி விழுந்த உணர்வுடன் நின்றிருக்க..சஹி அவனின் அந்த கூற்றில் அதிர்ச்சியுடன் மயங்கி விழுந்தாள்…..

*********************************************
 
Status
Not open for further replies.
Top