All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வனிதா கண்ணனின் ‘ ஜி(எ)த்தனின் சஹியிவள்’ - கதை திரி

Status
Not open for further replies.

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -5

தர்ஷினியிடமிருந்து தப்பி வந்த மூவர் கண்ணிலும் பட்டது அங்கே வாமிட் பண்ணி கொண்டு இருந்த சீனியர்கள் தான்.அதைக்கண்டு பதறிப் போன சஹி தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாய் கொப்பளிக்க கொடுத்தாள்.


ஏதும் பேசாமல் அவள் தந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி வாயில் சரித்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.


பின்னர் சீனியர் பெண் சஹியிடம் " எங்கே அந்த பொண்ணு?...." எனக் கேட்க அவள் வாய் திறப்பதற்கும் தர்ஷினி அங்கு பிரசன்னமாவதற்கும் சரியாக இருந்தது.


"ஏன்மா பரதேவதை! ....உன்னை குண்டுன்னு சொன்ன பாவத்துக்கு எங்களுக்கு என்டு(end) போட நினைச்சியே.... இதெல்லாம் அடுக்குமா?..." என்று அவள் சொன்ன விதத்தில் சஹிக்கும் விஷானுக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டு அங்கிருந்த அனைவரின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகினர்.


"அய்யோ!... சீனியர், அதுவந்து .... என்று பிரியா ஆரம்பிக்கும் போதே அந்த சீனியர் பெண் "அடச்சீ! எப்ப பாரு சீனியர்! சீனியர்!.... ன்னு சொல்லி கடுப்பேத்திக்கிட்டு மை நேம் இஸ் நிஷா... சோ கால் மீ நிஷா ... என்று கூறிய நொடியில் நிஷா என்று சஹி அழைத்து விட்டாள்.


உடனே பக்கத்தில் இருந்த விஷான் "ஏண்டி ? ஒரு பேச்சுக்கு பெயரை சொல்லி கூப்பிட சொன்னதும் எப்படா அப்படி கூப்பிட சொல்லுவான்னு எதிர் பார்த்த மாதிரி டக்குன்னு கூப்பிடுற ...." என்று சஹியின் காதில் கிசுகிசுத்தான்.


அதற்கு சஹியோ, "டேய்!...... அவளே பெயரை சொல்லி கூப்பிட சொல்றா நீ வேற இடையில் வந்து ஏதும் கோர்த்து விட்டுறாத நாயே!..... என்று பல்லை கடித்துக் கொண்டு மெதுவான குரலில் அவளும் கிசுகிசுத்தாள்.


ஹே!... அங்கே என்ன கிசுகிசுப்பு என்று சத்தம் போடவும்….


அது வந்து நிஷா…. எங்க தர்ஷினி அப்படி என்ன சமைச்சு கொண்டு வந்துருப்பான்னு தான் விஷூக்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்…… என்று சொல்லவும் நிஷா , அது என்னவென்று தின்று பார்த்த எங்களுக்கே தெரியல.. ஒரே கசப்பா சாப்பாடு இருந்துச்சு….உன் பிரண்ட் கிட்டயாச்சும் என்ன சாப்பாடு அதுன்னு கேட்டு சொல்லு….. என்று கடுப்பாக கூறினாள்.


உடனே தர்ஷினி, இங்க பாருங்க என் பிரண்ட்ஸ்காக தான் நான் டிபன் கட்டி கொண்டு வந்தேன்…. உங்களுக்காக ஒன்னும் இல்லை..

என்று கூறவும் சஹி, அப்படி என்ன சாப்பாடு தான்டி செஞ்சனு சொல்லி தொலைடி… என்று சத்தமிட… உடனே தர்ஷினி அது வேற ஒன்னும் இல்லடி.. உங்களுக்கு ஸ்பெஷலா பிரியாணி செய்யலாம்னு யுடியூப் பார்த்து "ஆவக்காய் பிரியாணி " செஞ்சி எடுத்துட்டு வந்தேன்… பிரியாணி செய்யும் போது தான் தெரிஞ்சது "ஆவக்காய்" வீட்ல இல்லன்னு அதுதான் இருக்கறத வச்சி செய்யலாம்னு வீட்ல இருந்த "பாவக்காய்" யூஸ் பண்ணி கொஞ்சம் டிபரெண்டா பாவக்காய் பிரியாணி பண்ணிட்டேன்… என்று கூலாக சொல்லவும் அதை கேட்டு அங்கே இருந்த அனைவரும் அதிர்வோடு பார்க்க…



பிரியா, மெல்லிய குரலில் சஹி மற்றும் விஷானிடம் " நல்ல வேளை அந்த நிஷா மட்டும் டிபன் பாக்ஸ் எடுத்து அவ பிரண்ட்ஸ்க்கு குடுக்காம இருந்திருந்தா நம்ம சோலி முடிஞ்சிருக்கும் " என்று சொல்லவும் இருவரும் அதை ஆமோதித்தனர்.


நிஷா, சஹியிடம் தர்ஷினியை காட்டி "தினமும் இவ கட்டிட்டு வர சாப்பாடு தான் நீங்க சாப்புடுறீங்களா" எனக் கேட்க அப்படியெல்லாம் இல்லை நிஷா, அவ "எங்களுக்கு டிபன் தர மாட்டேன்னு சொன்னால் தான் அவ சாப்பாடு சாப்பிடுவோம் வான்டெடா வந்து டிபன் பாக்ஸ் குடுத்தா அலெர்ட் ஆகி அவளையே சாப்பிட வைச்சிருவோம்" என்று தகவல் கூறினாள்….


அங்கே, கூட்டத்தில் நிஷாவின் அருகில் இருந்த பிரபு என்றவன் தர்ஷினியிடம் " அதெல்லாம் சரி, நீ செஞ்ச சமையல் எப்புடி இருக்கும்ன்னு தான் உனக்கு தெரியுமே ! பின்னே எதுக்கு டிபன் பாக்ஸ் குடுக்கறதுக்கு முன்னாடி அந்த சீன் போட்ட" என்று கேட்க தர்ஷினியோ," அது என் பிரண்ட்ஸ்க்குன்னு செஞ்சு எடுத்து வந்தேன்… அவங்க தான் முதலில் டேஸ்ட் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருந்துச்சா… அது தான் உங்க கிட்ட கொடுக்க யோசிச்சேன்….என்றாள்.


பிரபு, "இனிமேல் ஏதாச்சும் உங்ககிட்ட வாங்கி சாப்புடனும்ன்னு ஏதும் எங்களுக்கு தோணுமா" என்று தர்ஷினியிடம் சொல்ல அதற்கு விஷான் " என்ன சீனியர்! இப்புடி சொல்லிட்டீங்க"... இதுவாச்சும் பரவால்ல..! ஸ்கூல்ல எங்க சீனியர் பசங்களுக்கு "பால்டாயிலில் செஞ்ச காக்டெயில் புலாவ்" அப்படின்னு ஒன்னு செஞ்சு கொண்டு வந்து எல்லாருக்கும் குடுத்து "நாங்க ஸ்கூல் முடிக்கற முடியும் எங்கள் சைடே எட்டி பாக்காத மாறி பண்ணிட்டா"... என்று சொல்லி அவர்கள் வயிற்றில் புளியை கரைத்தான்…

சஹி அவன் கூறியதை கேட்டு சீனியர் முகம் போன போக்கை கண்டு சிரித்து கொண்டு இருந்தாள்….


அதே நேரம்…



மூர்த்தியோ, டெண்டர் கை விட்டு போனதில் கடும் கோபமாய் இருந்தார்.கதவை தட்டிவிட்டு ஜீவா உள்ளே நுழைகையில் அவன் முகத்திற்கு வெகு அருகில் அங்கிருந்த கிரிஸ்டலில் செய்யப்பட்ட யானை உருவம் உடைந்து சிதறி இருந்தது.


ஜீவா, அதிர்ந்து பார்க்கும் போதே அவனருகில் வந்து " எப்படி? எப்படி டெண்டர்ல கோட் பண்ண அமௌண்ட்ட விட கம்மி அமௌண்ட் அந்த அபிஜித் போட்டுருப்பான்….. முதல்ல அவன் யாரு? எங்கிருக்கான்? என்ன பண்றான்? அவன் மொத்த டீடெயில் மொத்தமும் கைக்கு வந்தாகனும்".... என்று ஜீவாவை நோக்கி கூறினார்.



ஜீவா, " நீங்க கவலை படாதீங்க… சித்தப்பா, அவனை பற்றி இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு தெரிய வரும்" என்று விடை பெற்று சென்றான்.


அவன் சென்றபின், அறையில் இருந்த கண்ணாடியில் " இந்த மூர்த்தியவே தோற்கடிக்க ஒருவன் இருக்கான்னு எனக்கு காட்டிட்ட அபிஜித்….. ஆனா என்னை தோற்கடிச்சவனை உசுரோட விட்டு வைப்பேன்னு நினைச்சியா… உன்னை எப்புடி தூக்கறேணு பாருடா...." என்று ஆக்ரோஷமாக கத்தினார். முதல் தோல்வி அவரை வெகுவாக பாதித்து இருந்தது..


அடுத்த அரை மணி நேரத்திலேயே ஜீவா, மூர்த்தியின் முன்னால் அபிஜித் பற்றிய தகவல்கள் அடங்கிய பைலை அவரிடம் நீட்டிருந்தான்.


அதை வாங்கி பார்த்த மூர்த்தி, அவன் பெயர் அபிஜித்…. தந்தை பெயர்… கபிலன், கே.ஜி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்.. தாய் பெயர்…. ஜீவிகா என்றும் ஊர் டெல்லி என்றும் குறிப்பிட்டு இருந்தது.


'ஓஹோ! இவன் டெல்லில இருந்து வந்து என்னை தோற்கடிச்சிருக்கானா…. அப்போ இவனை நான் உசுரோட விடக் கூடாதே!' என்று மனதினுள் பேசிவிட்டு ஜீவாவை அழைத்தார்.


" இங்க பாரு ஜீவா…. என்னப் பண்ணுவியோ, எப்படி பண்ணுவியோ தெரியாது…. ஆனால் இன்னிக்கு என்னை தோற்கடிச்ச அந்த அபிஜித்த நான் இனிமேல் பார்க்கவே கூடாது…. என்று சொல்லவும்


"அப்படினா? சித்தப்பா"… என்று இழுக்க….


"நீ நினைக்குறது சரி தான்… அவன் இந்த உலகத்துலேயே இருக்க கூடாது…. இந்த மூர்த்தி, ஜெயிக்க பிறந்தவன்.. யாரோ ஒரு பொடியன் கிட்ட தோற்கறதா… நெவெர்…தெரிஞ்சு மோதினாலும் ,தெரியாம மோதினாலும் என்கிட்ட மோதுறவன் உயிரோட இருக்க மாட்டான்னு மத்தவங்களுக்கு தெரியணும்…. சோ, அவனை முடிச்சிட்டு என்கிட்ட சொல்லு…" என்று சொல்லிவிட்டு வெளியேறவும் ஜீவா அவர் சொன்னதை நிறைவேற்ற போனான்.


ஆனால் அவன் மனத்திலோ ' நான் பி.ஏ. வேலை பார்க்க வந்தேனா இல்லை அடியாள் வேலை பார்க்க வந்தேனா மகேஸ்வரா…' என்று சொல்லிவிட்டு அபிஜித்தை போட்டு தள்ள பிளான் செய்து கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான்.


அபிஜித்தின் அறையில்… தன் பி.ஏ. கதிர் கூட ப்ராஜெக்ட் பற்றி விவாதிக்கும் முன்னே கதிர் முந்திக்கொண்டு, " டேய்… அபி ...சொன்னா கேளுடா… மூர்த்தி பார்க்க தான் ஆளு ....சாது மாறி இருப்பாரு… ஆனா இந்நேரம் அந்த ஆளு உன்னை போட்டு தள்ள பிளான் பண்ணிருப்பார்… எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கணும்டா நாம…." என்று சொல்ல, அபிஜித் வாய் திறந்து பேசும் முன் அவனது மொபைலில் டாடி காலிங்…. என்ற எழுத்துக்களை பார்த்தவுடன் தான் பேச வந்ததை நிறுத்திவிட்டு காலை சிறு சிரிப்புடன் அட்டெண்ட் பண்ணினான்.


எதிர்முனையில் கபிலன் மற்றும் ஜீவிகா இருவரும் ஒரே நேரத்தில் ஒரே குரலில் " கங்கிராட்ஸ் ஜித்தா" என்று உற்சாகமாய் சொல்ல அந்த உற்சாகம் இவனிடத்திலும் பரவி
" தாங்க் யூ , தாங்க் யூ மை லவ்லி கப்பில்ஸ், மாம் அண்ட் டாட் ...."என்று சிரித்தான்.



அந்த பக்கம் இருந்த ஜீவிகா " டேய் ஜித்தா… உங்க டாடி உன்கிட்ட என்னை பேச விடமாட்டுராருடா… முதல்ல அவர்ட்ட பேசிவிட்டு அப்பறம் என்கிட்ட பேசுடா …." என்று கணவரை முறைத்து பார்த்துக்கொண்டே கூறினார்.


" என்ன டாடி…. மாம் இப்புடி சொல்றாங்க… சீக்கிரம் பேசிட்டு மாம்கிட்ட குடுங்க … நானும் அவங்க கிட்ட நெறைய பேசணும் …." என்று சொல்லவும் உடனே அதை கேட்ட கபிலன் சிறு சிரிப்புடன் " சரிடா மை ஜித்தா…. ஒரே ஒரு பாராட்டு பத்திரம் வாசிச்சிட்டு தரேன் உன் மாம்கிட்ட.. ஓகேவா…" என்று டீல் பேசவும் அபிஜித்தும்" ஓகே …" என்று சொல்லியவுடன்


"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்கண் விடல்."


அப்படினா என்னான்னு தெரியுமாடா? என்று கபிலன் கேட்கவும் அபிஜித்தோ உதடு பிதுக்கி " தெரியாது டாட்… நீங்களே அதுக்கு விளக்கம் சொல்லுங்க …."


கபிலன் " ஹ்ம்ம்… அப்படியென்றால்….. இந்த தொழிலை இக்கருவியால் இவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்…இது தான் பொருள்… இப்ப எதுக்கு இதை உன்கிட்ட சொல்றேன்னு உனக்கு ஒரு டவுட் வரலாம்…. என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் ஜீவிகா மொபைலை பிடுங்கி " டேய் ஜித்தா… ஏதும் புரிஞ்சிதா" என்று சிறு சிரிப்புடன் கேட்க ….



அபிஜித்தோ "டாடி என்ன சொல்ல வராருன்னு நல்லாவே புரியுதுமா… நான் சின்ன பையன் இல்ல…" என்று சொன்னான்.


கபிலன் " என் புள்ளைடா …. " என்று மீசையை நீவி விட்டுக்கொண்டார்…. பின் அவனிடம் " நீ இதை வெற்றிகரமா செய்து முடிப்பியான்னு எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சுடா கண்ணா… ஆனா உன்னை நம்பி ஒப்படைச்சதுக்கு நீ அதுல ஜெய்ச்சிக்காட்டிட்ட… வாழ்த்துக்கள்டா" என்று சந்தோச கூச்சலிட்டார்.


ஜீவிகாவோ " ஜித்தா… சரியான டைமுக்கு சாப்பிடுடா…. என்று சொல்லிவிட்டு போனை வைக்க போக.. அவரின் கையை சட்டென்று பிடித்து " எதுக்கும் அந்த மூர்த்திக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு" என்று கூறவும்… அபிஜித் " நீங்க கவலை படாதீங்க டாட்… நான் பார்த்துக்குறேன் …" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு யோசனை ஆனான்.


******************************************


மூர்த்தியோ அங்கே அவரின் கன்ஸ்ட்ரக்ஷனில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.


அந்த நேரம் அவரின் மொபைல் ஒலிக்க …. எதிர்முனையில் ஜீவா இருந்தான்.


" சொல்லு ஜீவா… என்ன ஆச்சு? அவனை தூக்கியாச்சா….. என்று கேட்கவும் "இல்லை சித்தப்பா… அவன் எங்க கண்ணில் மண்ணை தூவிட்டு வேற கார்ல போய்ட்டான்…. என்று பம்மியவாறு சொல்லிக்கொண்டிருக்கையில் மூர்த்தியின் கார் அந்த பக்கம் உருளும் சத்தம் கேட்டது….


அதை பார்த்து கொண்டே….அபிஜித்" என்னை அவ்ளோ சாதாரணமாவ நினைச்சிட்டியே மூர்த்தி…" என்று சத்தமிட அதை கேட்டவாறே மூர்த்தி மயங்கினார்.


உடனே நடந்ததை யூகித்து ஜீவா ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்க மூர்த்தி ஆம்புலன்ஸ் வரும் முன்னே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அபிஜித்தின் உதவியால்….


ஜீவா, ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கும் முன்னே கங்காவிடம் தகவலை கூறவும், சஹியை கூட்டி கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார். அங்கே மூர்த்திக்கோ கையிலும் காலிலும் மட்டுமே அடி என்றும் இது அதிர்ச்சியினால் ஏற்பட்ட மயக்கம் என்பதால் இன்னும் சிறிது நேரத்தில் முழித்து

விடுவார் என்று மருத்துவர் கூறி செல்லவும் சஹியும், கங்காவும் ஆசுவாசமடைந்தனர்.


சஹியோ சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த ஜீவாவை நெருங்கி விபத்து பற்றி கேட்கவும் ….. காலையில் இருந்து நடந்ததை கூறி அபிஜித் தான் காரணம் எனக் கூற "அபிஜித் "என்ற பெயரை அடியோடு வெறுக்கிறேன்… அவனால தான் அப்பாக்கு இப்படி ஆச்சு... என்று ஜீவாவிடம் கூறினாள்.


அதை அந்த மருத்துவமனையின் ஓரத்தில் நின்றிருந்த அபிஜித் கேட்டுவிட்டு சின்ன சிரிப்புடன் ' இந்த அபிஜித்தையே உன்னை கல்யாணம் பண்ணிக்க வச்சி… என்னை உனக்கு பிடிக்க வைக்கல என் பெயர் அபிஜித் இல்லடி' என்று மனதில் சபதம் ஏற்றான்.


விருப்பு, வெறுப்பாக மாறும் நாள் வருமோ?

******************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6

சஹியின் ஒவ்வொரு முக பாவனைகளை அபிஜித் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் மனதில் ' என்ன நடந்தது? ஏது நடந்தது?ன்னு விசாரிக்காம என்னை வெறுத்து பேசும் உன் உதட்டை அப்படியே கடிச்சு வைக்க தோணுதுடி' என்று கோபமாக சொல்லிக்கொண்டான்.


மூர்த்தியை பரிசோதிக்கும் மருத்துவர் அன்றே அவரை டிஸ்சார்ஜ் செய்யவும் கங்காவும் சஹியும் நிம்மதியடைந்தனர்.


ஜீவா, கங்காவிடம் " அழுகைய முதலில் நிறுத்துங்க சித்தி…. பெருசா ஒன்னும் அடிப்படலை சித்தப்பாவுக்கு… இப்புடி நீங்க அழுதிங்கன்னா சஹி பயப்பட மாட்டாளா" என்று கடியவும் கங்கா தன் அழுகையை நிறுத்திவிட்டு சஹியை பார்த்தார். ஆனால் அவளோ தன் சிந்தனையை வேறு இடத்தில் வைத்திருந்தாள்.


கங்கா, சஹியிடம் " வாடா, அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க….. நீ போய் கார்ல வெயிட் பண்ணு, நானும் ஜீவாவும் அப்பாவை கூட்டிட்டு வர்றோம்…" என்று சொல்லிவிட்டு ஜீவாவுடன் சென்றார்.


சஹி, தன் அம்மா சொல்லி சென்றபடியே காரை நோக்கி போனாள். அப்போது அவள் நடந்து போகும் பாதைக்கு எதிர்திசையில் அபிஜித் அவளை பார்த்துக்கொண்டே வந்தான். ஆனால், அவளின் கவனம் வேறெங்கோ இருக்க… அவள் மீது நச்சென்று மோதி விட்டு அவள் கீழே விழும் முன்னே அவளை தாங்கி நிறுத்தினான்.


சஹியோ, நடந்ததை உணரும் முன்னே அவளை தாங்கி நிறுத்திவிட்டு சிறு சிரிப்புடன் அங்கிருந்து மறைந்தான்.


தன் கவனம் முழுவதும் அபிஜித்திடம் இருந்ததால் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தும் அவனை கவனிக்க மறந்தாள். பின் காரில் ஏறி அமரவும் கங்கா மற்றும் ஜீவா, மூர்த்தியை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.


அடுத்தநாள் காலை சஹியின் வீட்டில் விஷான்,தர்ஷினி, பிரியாவும் அவர்களின் பெற்றோர்களும் மூர்த்தியை நலம் விசாரிக்க வந்திருந்தனர்.



"எப்படி இருக்கீங்க? சார்…" என்று விஷானின் அப்பா கேட்க அவர் கூட சேர்ந்து மற்றவரின் அப்பாக்களும் நலம் விசாரித்தனர்.அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மூர்த்தி மெதுவாக தலையசைத்து "ஹ்ம்ம்… நல்லா இருக்கேன் சார்…" என்று பதிலளிக்க, பின் பொதுவான சில விஷயங்களை பேசிருந்து விட்டு அவரவர் வேலைக்கு கிளம்பினார்கள்.


அவர்களை கங்கா " என்ன அவசரம்? கொஞ்சம் இருங்க, எல்லாம் சாப்பிட்டு கிளம்புவீங்க…." என்று உபசரிக்க மற்றவர்களோ " இல்லைமா… நாங்க இன்னொரு நாள் சாப்புடுறோம், இப்போ ஆஃபீஸ்க்கு லேட்டாய்ச்சு …." எனவும் ...கங்கா, "கண்டிப்பா வந்து ஒரு நாள் சேர்ந்து சாப்புடலாம் …. இப்போ இந்த ஜூஸ்சாச்சும் குடிங்க…" என்று அவர்களுக்கு குடிக்க கொடுக்கவும் அவர்கள் ஜூஸ் அருந்தியபின் அங்கிருந்து கிளம்பினார்கள். பின் கங்கா சஹியின் நட்புகளை சாப்பிட அழைத்தார்.


"டேய் விஷு…." என்றழைக்க " மாமி!... நான் சாப்புட ரெடியா தான் இருக்கேன்… நீங்க எங்க அப்பா,அம்மாவை கூப்பிடவும் அவங்க சாப்புட்டு முடிச்சதும் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்…" என்று கூறவும் கங்கா சிறு சிரிப்புடன் டைனிங் ஹாலை நோக்கி சென்றார்.


தர்ஷினியோ, தன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க விஷானை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த சஹியோ, " என்னடி?... அவனை எதுக்கு இப்போ முறைச்சிட்டு இருக்க? என்ன பண்ணான் அவன்? என்று கேட்க …..


அதற்கு தர்ஷினி, " என்ன பண்ணனானா? இப்போ தான் என்கூட சேர்ந்து தோசையை மொக்கிட்டு வந்து இப்போ எதுவுமே தின்னாத மாறி பேசிட்டு இருக்காண்டி…" என்று கூறிக்கொண்டிருகையில் விஷான் அங்கிருந்து நழுவி டைனிங் டேபிள் முன் அமர்ந்திருந்தான்.


அதைக்கண்டு சஹியும், பிரியாவும் சிறு சிரிப்புடன் அவனருகில் அமர… தர்ஷினியோ மனதுக்குள் 'இவன் இப்புடி ஒரு பண்டார பரக்காவெட்டியா இருந்துட்டு என்னை உருண்டைன்னு ஏதாச்சும் சொல்லட்டும்… அவன் மேலேயே உருண்டு அப்படி தான்னு நிரூபிக்கிறேன்…' என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தாள்.


நால்வரும் சாப்பிட்டு கொண்டிருக்க கங்கா, சஹியிடம்….


"சஹிம்மா"… என்றழைக்க


"ஹ்ம்ம்… சொல்லுங்கம்மா… என்ன விஷயம்?


" அது இன்னிக்கு காலேஜ் லீவு தானே? நேத்து என்கிட்ட பர்ச்சேஸ் பண்ணனும்னு சொன்னியேடா… அப்படியே போய் உனக்கு எது பிடிக்குதோ... அதை வாங்கிட்டு வா …. அப்படியே நாலு பேரும் ஏதாச்சும் வாங்கிகங்க…" என்று கூறவும் தர்ஷினியும் பிரியாவும் கங்காவை அணைத்து கொண்டார்கள். விஷானோ" ஹை! சூப்பர் …. மாமினா மாமி என்று அவரின் தாடையை பிடித்து

ஆட்டினான்…..


நால்வரும் கங்காவிடம் சொல்லிவிட்டு வெளியே சென்ற அதே நேரம் மூர்த்தியின் மொபைலில் கால் வந்தது.


நம்பர் புதிதாக இருக்கவும் மூர்த்தி அதை அட்டெண்ட் செய்து காதில் அமைதியாக வைத்திருக்கவும் எதிர் புறத்திலும் அமைதியாக இருக்கவும் மூர்த்திக்கு சிறு கோபம் வந்தது.


"ஹலோ! மூர்த்தி ஹியர்…. "


" எஸ்… மூர்த்தி! நான் உங்களுக்கு கால் பண்ண நம்பர் கரெக்ட் போல அதுனால தான் நீங்க பேசறீங்க" என்று நக்கல் தொனிக்கும் குரலில் மறுபுறம் பேசவும்


"ஹேய்! காலையிலே யாரு? இப்புடி டென்ஷன் பண்ணாம யாருன்னு சொல்லுங்க…." என்று அவர் கத்தவும் அவரை இன்னும் கடுப்பாக்கும் எண்ணத்தில்


" ஹ்ம்ம்… உங்க வாழ்க்கையின் கேள்விக்குறி? அதாவது மிஸ்டர்.மூர்த்தி, இன்னுமா என்னை கண்டுபிடிக்கல.. நான் தான் அபிஜித்…. எப்புடி இருக்கீங்க? கொஞ்சமா காரை இடிச்சத்துக்கே இந்த அளவு ரெஸ்ட் எடுக்கிறீங்களே? அவ்ளோ வீக்கா உங்க பாடி? சோ சாட்… என அபிஜித் சிரிக்கவும்..


மூர்த்தி, "இனிமே தான் நான் எப்புடி பட்ட ஆள்ன்னு தெரிஞ்சிக்கிவடா…" என்றுக் கத்திவிட்டு அழைப்பை துண்டித்தார்.


அபிஜித்தோ சிரித்துக்கொண்டே "உன் மகள், அவளுக்காக மட்டும் தான் உன்னை உசுரோட விட்டேன்…. இல்லைனா நீ என்னை கொல்ல நினைச்சத்துக்கு நான் இந்நேரம் உன்னை கொன்றுப்பேன்…." என்று வெறி கொண்ட வேங்கையாக கர்ஜித்தான்.


அப்போது அவனின் கதவு தட்டப்படும் ஓசையில் நிதானமாகி " எஸ்… கம் இன்… என்று குரல் கொடுக்க….



கதவை திறந்து உள்ளே வந்த கதிர், " டேய்! என்னடா ? பண்ணி வச்சிருக்க… மூர்த்தி தான் ஏதோ பண்ணறாருனா நீயும் அவரை போல பண்ற…." என்று கடிந்து கொள்ள அபிஜித்தோ தோளைக் குலுக்கி கொண்டான்.


கதிரோ பல்லைக் கடித்துக்கொண்டு " டேய் அபி! அந்த மூர்த்தியை ரொம்ப உசுப்பேத்தி விடுறடா… எதுக்குடா அவரை காரோட இடிச்ச?... அவர் கன்ஸ்ட்ரக்ஷன் தான் எப்போவும் லீடிங்ல இருக்கும்… அவர்ட்ட போட்டி போட்டவங்களை அவரு காலி பண்ணாம விட மாட்டாருடா" என்று நைந்த குரலில் கூறினான்.


அபிஜித்தோ " கதிரு! என் பேருக்கு அர்த்தம் தெரியுமா … உனக்கு ?" என எதிர்கேள்வி கேட்க கதிரோ " தெரியாது" என்று பதில் சொல்ல, அபிஜித்தே சொல்ல ஆரம்பித்தான்.


"அபிஜித் என்றால் வெற்றி பெறுபவன் என்று அர்த்தம்டா… இந்த பேரை எங்க அம்மா எனக்கு பார்த்து பார்த்து வச்சது…. அவ்ளோ சீக்கிரம் இந்த பெயரை அப்பா சொல்ல மாட்டார் என்று எதையோ நினைத்து விட்டு அமைதியாக சில நிமிடங்கள் நின்றுவிட்டு கதிரின் புறம் திரும்பவும் கதிர் " புரிகிறதுடா… அந்த மூர்த்தியை ஜெயிக்க உன்கூட குடும்பம் மொத்தமும் ஆதரவா இருப்போம் " என்று அபிஜித்தின் கையை பிடித்து கொண்டு கூறவும் இருவரும் சிறு சிரிப்புடன் அந்த அறையை விட்டு வெளி வந்தனர்.


"இப்போ நாம எங்கடா போறோம்? என்று கதிர் கேட்க " போறோம்…. இல்லை போறேன்… நான் போய் என்னோட சஹியை பார்க்க போறேன்.... " என்று கூறிவிட்டு செல்ல தொடங்கினான்.


கதிரோ அவன் மனதுக்குள் ' உன்னோட சஹி உனக்கு கிடைக்க வாழ்த்துக்களடா ' என்று வாழ்த்தினான்.


திருச்சியில் இருக்கும் மிக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்…

அங்கே அனைத்து விதமான பொருட்களும், புட் கோர்ட்களும் இருக்கும். ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் இருப்பதால் சஹியின் நட்பு குழாம் இதை தேர்ந்தெடுத்து இங்கே வந்திருந்தனர்.


சஹி " ஹை! சூப்பர்டா.. விஷுக்குட்டி … எந்த அலைச்சலும் இல்லாம இங்கயே எல்லாம் பர்ச்சேஸ் பண்ணிக்கலாம்" என்று குதூகலமான குரலில் கூறிக் கொண்டிருந்தாள். விஷானோ அவள் கூறியதை காதில் வாங்காமல் தர்ஷினியை பார்த்து பல்லைக் கடித்து கொண்டிருந்தாள். சஹி, " அப்படி என்ன பார்த்துட்டு இருக்கடா?" என்று கேட்க அவன் தர்ஷினி இருந்த இடத்தை காட்ட அதை பார்த்து சஹியும் பிரியாவும் பக்கென்று சிரித்து விட்டனர்.


விஷான் விறு விறு நடையுடன் தர்ஷினி அமர்ந்திருந்த இடத்திற்கு போகவும், சஹியும் பிரியாவும் அவன் பின்னால் சென்று சேர்வதற்குள் அவன் தர்ஷினியின் தலையில் கொட்டிருந்தான்.


" டேய்! தடிமாடே…. எதுக்குடா என்னை கொட்டுன? " என்று அவள் கடுப்பாக கேட்க, அதற்கு விஷான் பதில் சொல்லுவதற்குள் பிரியா முந்திக்கொண்டு " இப்போ தானேடி ரெண்டு தடவை சாப்பிட்ட… அதுக்குள்ளேயும் மால் உள்ளே கால் வச்சதும் சாப்பிட இங்க வந்து உக்காந்துருந்தா, அவன் கொட்டாம உன்னை கும்புடுவானா? என்று பதிலுக்கு எகிறினாள்.


தர்ஷினி அவள் சொன்னதில் அசடு வழிந்து விட்டு பின் மூவரையும் பார்த்து " நான் என்ன பண்றது? ஸ்ரீரங்கத்துல இருந்து பஜார்க்கு கார்ல வந்தும் வண்டி குலுங்குன குலுங்குல வயித்துல இரைப்பை இடம்மாறி போச்சுப்போல, அதுதான் பசி வந்துருச்சு…." என்று சப்பை கட்டு கட்டவும் மூவரும் தலையில் அடித்து விட்டு அவளருகில் சென்று அமர்ந்தனர்.


விஷான், " சரி… இப்போ லைட்டா சாப்பிடுங்க …. அப்பறம் லஞ்ச்க்கு புல்லா சாப்பிடுக்கலாம்… ஓகே! என கேட்க, அவர்கள் சம்மதிக்க நால்வரும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தனர். விஷான், தர்ஷினி, பிரியா என மூவரும் மூன்று கப் ஐஸ் கேட்க சஹி மட்டும் கோன் ஐஸ் வாங்கி சாப்பிட்டாள்.


அவளை தவிர மற்ற மூவரும் வேகமாக சாப்பிட்டு முடித்திருக்க சஹி சாப்பிடும் கோன் மட்டும் முக்கால் வாசி இருக்கவும் அதை சாப்பிட்டு முடித்து விட்டு தேர்ட் ப்ளோர்க்கு வருமாறு கூறிவிட்டு விஷானுடன் தர்ஷினி மற்றும் பிரியாவும் சென்று விட்டனர்.


சஹியும் அவளின் நட்புகளும் மாலில் நுழைந்ததிலிருந்து அவளை அவன் பார்த்துக்கொண்டே அவள் செய்யும் சிறு சிறு சேட்டைகளையும் ரசித்துக் கொண்டிருந்தான்.அவன் இளஞ்செழியன்…..


சஹியின் ஐஸ்கிரீம் இப்போது பாதியாக இருக்க, அவளுக்கு விஷான் கால் செய்யவும் லிப்ட் நோக்கி நகரவும், செழியனும் அவள் பின்னால் சென்றான். இருவரும் அருகருகே நின்றிருந்தாலும் சஹிக்கு அவனை கண்டுக்கொள்ளவில்லை, ஏனெனில் அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை… ஆனால் அவனது பார்வையோ அவளை மட்டுமே வட்டமடித்து கொண்டிருந்தது.


அந்த லிப்ட் உள்ளே இவர்கள் இருவர் மட்டுமே நுழைந்தனர். சஹி தன் கையில் உள்ள ஐஸ்கிரீமை காலி செய்வதில் கவனமாக இருக்க, அப்போது அவள் போட்டுருந்த ஹீல்ஸ் வழுக்கி விடுமாறு இருக்க அதை சரிசெய்யும் நோக்கில் அவள் குனிய அவள் கையோ ஐஸ்கிரீம் கோனை செழியனை நோக்கி நீண்டிருந்தது.


ஒரு கணம் செழியன் அவளை பார்த்துவிட்டு பின் கோனை பார்க்க அவன் உதடுகளில் ஐஸ்கிரீம் படலாயிற்று. சிறு சிரிப்புடன் அதை தின்றுவிட்டு அவளைப் பார்க்க அவள் நிமிரும் வழியை காணோம்…. மறுபடியும் அவள் எச்சில் பட்ட ஐஸ்கிரீமை உண்ண ஆசை எழ இவன் வாய் திறந்த சமயத்தில் சஹி நிமிர்ந்து பார்த்து விட்டாள்.


அவளோ அதிர்ச்சியில் இவனைப் பார்க்க …. அவன் அவளைக் கண்டுகொள்ளாத பாவனையுடன் நின்றுக் கொண்டிருந்தான்.


சஹி " ஹலோ!… மிஸ்டர்…." என கூப்பிட செழியனோ " சொல்லுடி…" எனவும் அவனின் டி என்ற அழைப்பினில் அவன் யார் என்று உணர்ந்து கொண்டாள் அவள்.


" உங்களுக்கு வேற வேலையே இல்லையா? இப்புடி தான் எப்பவும் பிஹேவ் செய்விங்களா?... கொஞ்சம் கூட அறிவு இல்லையா?" என்று சரட்டு மேனிக்கு விளாசி தள்ளவும் …..செழியனோ, " இப்போ என்ன ஆச்சுன்னு இப்புடி சவுண்ட் விடுறடி…" என்று பதிலுக்கு அவன் எகிற… அவளோ "முதலில் உன் வாயில உள்ள ஐஸ்கிரீமை தொடைச்சிட்டு பேசுடா… பண்றது எல்லாம் அயோக்கியதனம், இதுல பேச்சு பெரிய பெட்ரோமாஸ்க் மாறி….ச்சீ! உன் எச்சில் பட்ட ஐஸ்கிரீமை நான் சாப்பிடுவேன்னு நினைச்சியா ? நெவெர்… என்று சொல்லிக்கொண்டே கீழே வீசப் போக அவள் கையில் இருந்த ஐஸ்கிரீமை அவன் வாயில் கவ்வினான்.


சஹியோ இதை பார்த்துவிட்டு சும்மா இருக்காமல் " அப்படியே நாலு காலு பிராணி மாறியே கவ்விருக்க…" அவனை நக்கலாக பார்த்துக்கொண்டே கூற அவன் லிப்ட்டை முன்னயே நிறுத்தி விட்டிருந்தான். திடீரென்று லிப்ட் நின்றதன் காரணம் தெரியாது அவள் புரியாமல் அவனை பார்க்க அவனோ அவள் சூதாரிப்பதற்குள் அவள் வாயில் தன் வாய்க்கொண்டு ஐஸ்கிரீமை உள்ளே தள்ளிருந்தான்.அவள் தீடிரென நடந்த விஷயத்தில் அவள் திமிற திமிற அவள் அந்த ஐஸ்கிரீமை முழுவதும் விழுங்கும் வரை அவன் அவளை விடாமல் பிடித்துக்கொண்டு தன் காரியம் முடியும் வரை அவளை விட்டு விலக வில்லை.


அவள் மூச்சுக்கு தவித்துக் காற்றை தேடுகையில் தான் அவள் நிலை உணர்ந்து அவளை விடுத்து அவளின் முதுகை நீவி கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினான். அவனின் செய்கை அவளுக்குள் ஒருவித நடுக்கத்தையும் ஒவ்வாமையும் ஏற்படுத்தியிருந்தது. அவள் தன் நிலைமை உணர்ந்து அவனை உதறித் தள்ளினாள்.


அதில் செழியன் சீற்றம் கொண்டு " இது மாறி இன்னொரு தடவை என்னை நீ உதறினால் இதே மாறி சில பல விஷயங்களை நீ காண வேண்டி வரும் என்று கூறிவிட்டு லிப்ட்டில் இருந்து சென்று விட்டான்.


நடந்த விஷயத்தை நினைத்து சஹிக்கு ஜீரணிக்க சில நிமிடங்கள் ஆக, இன்னும் அவள் மூன்றாம் ப்ளோர்க்கு வந்து சேரவில்லை ஆதலால் அவளின் நட்புகள் அவளை தேடி லிப்ட் நோக்கி வந்தனர்.


அப்போது சஹி இருந்த நிலையைக் கண்டு விஷான், தர்ஷினி, பிரியா மூவரும் அதிர்ந்து நின்றனர். ஏனெனில் சஹியின் உடை முழுவதும் ஐஸ்கிரீம் வழிந்துக் கொண்டிருந்தது.


"என்னடி… இது? என்று தர்ஷினி கேட்க சஹியோ என்னவென்று தெரியாமல் முழித்துவிட்டு " என்ன என்னடி?" என்று மறுக்கேள்வி கேட்க ….விஷான் " ஹ்ம்ம்…. ஐஸ்கிரீம் சாப்பிட்டா வாய்ல மட்டும் தான் சாப்பிடணும்…. இப்புடி கழுத்துல, கையில எல்லாம் அப்பி சாப்பிட்டு வச்சிருக்க " என்று கடிந்துக் கொள்ளவும் சஹி சட்டென்று குனிந்து தன்னைப் பார்த்துவிட்டு மனதுக்குள் ' ஐஸ்கிரீம் நான் சாப்பிட்டுருந்தா ஏன் இப்படி அப்பிட்டு சாப்பிடுறேன்…. எனக்கு ஒருத்தவன் ஊட்டிவிட்டுட்டான்டா ' என்று கடுப்பாக நினைத்துக் கொண்டாள்.


அவளின் முகபாவனைகளை சிறிதுநேரம் பார்த்துவிட்டு விஷான் சஹியை ரெஸ்ட்ரூம் சென்று ப்ரெஷ் ஆகி வருமாறு பணிக்க அவளுடன் தர்ஷினி, மற்றும் பிரியாவும் கூட சென்றனர்.


சஹி, ப்ரெஷ் ஆகி வரும் வழியில் அவளை நோக்கி வந்த செழியனோ கண்ணடித்து விட்டு " செழியன்டி" என்று வாயசைத்து விட்டு சென்றான்.


இப்பொது அவனை ஏதும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் தன் நிலையை நொந்துக்கொண்டு " இருடா…. எண்ணிக்காச்சும் என்கிட்ட வசமா மாட்டுவ…. அப்போ இதுக்கு பதில் திருப்பி தரேன்…. ஆளும், பேரையும் பாரு… செழியன்... செக்கு மாடுன்னுட்டு… என்று சத்தம் வராமல் முணு முணுத்துக் கொண்டாள்.


செழியன் " நீ நினைக்கிறது எல்லாம் நடந்துருமாடி? உன்னை கிஸ் பண்ணிருக்கான் ஒருத்தன்…. ஆனால், ஒரு ரியாக்க்ஷனும் இல்ல... அப்போ உன்னை என்னான்னு நினைக்கிறது? என்று அவளை திட்டிக் கொண்டிருந்தான்.


பாவம்! அவன்….. சஹி செய்யும் சிறு விளையாட்டினால் அவனின் ஏதும் செய்யாத கைகளுக்கும் கால்களுக்கும் தண்டனை கிடைக்கப் போவது தெரியாது அவளைச் சீண்டி விட்டுருந்தான்.


******************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -7

செழியன் சஹியை சீண்டி விட்டு கொண்டே இருக்க சஹியோ அவளின் மனதுக்குள் ' ஏன்டா! நீ இப்புடி எனக்கு சைக்கிள் கேப்ல ஐஸ்கிரீமை தின்னதுமில்லாமல் லிப் கிஸ் வேற குடுத்துட்டு எகத்தாளமாவா பார்த்து சிரிச்சிட்டு போற…. இதுக்கெல்லாம் நீ என்கிட்ட அனுபவிப்படா …. செக்கு மாடே!...' என்று சில பல நல்ல வார்த்தைகளில் திட்டுனாள்.

அதே நேரம்… அந்த மாலில் நால்வரும் மூன்றாம் ப்ளோர்க்குள் நுழைய அங்கே ஏற்கனவே அவர்களின் சீனியர்களான நிஷாவும், பிரபுவும் பர்ச்சேஸ் பண்ணிக்கொண்டிருந்தனர். அவர்களை முதலில் கண்டது தர்ஷினியே!

" இங்க பாருங்கடி…. நம்ம சீனியர் நீத்துப்போன நிஷாவும்,அவளின் பயணங்களில் கூடவே வரும் அண்ணன் பிரபுவையும் அங்கே நிக்குறத…." என்று ராகம் போட்டு சொல்ல, மூவரும் திரும்பி பார்த்தனர்.

அதற்குள் நிஷாவும் இவர்களைப் பார்த்து விட்டு பிரபுவையும் கூட்டிக் கொண்டு இவர்களை நோக்கி வந்தனர்.

நிஷா, " ஹாய்! கைஸ்… என்ன இந்த பக்கம்" என்று பார்மலாக கேட்க, தர்ஷினி" இங்க ஆடி ஆஃபர்ல பொறி உருண்டையும், கம்மங்க்கூலும் பிரீன்னு சொல்லவும் வாங்க வந்தோம்…" என்று நக்கலாக பதில் சொல்ல…. நிஷா அவளின் பதிலில் கடுப்பாக பார்க்க, சஹிக்கு சிரிப்பு வந்தாலும் இருக்கும் சூழ்நிலை கருதி அமைதியாக தர்ஷினியை பார்த்தாள்.

பிரபு, நிலைமையை கையில் எடுத்துக்கொண்டு " ஹாய் ஆல்… நைஸ் ஜோக் மா" என்று தர்ஷினியிடம் சொல்ல…. விஷான்," சாரி நிஷா… அவ பேசுனத தப்பா எடுத்துக்காதீங்க… " என்று மன்னிப்பு வேண்டும் குரலில் சொல்லவும்….நிஷா, " இட்ஸ்… ஓகே! விஷான்" என்று முடித்துக் கொண்டாள்.

பிரபு, " நீங்க பர்சேஸ் பண்ணிட்டீங்களா?"

விஷான், " இப்போ தான் வந்தோம்… இனிமேல் தான் வாங்கணும்"

நிஷா, " ஓஹோ! இன்னும் வாங்கலையா? நீங்க எல்லாரும் பர்சேஸ் பண்ண இந்த மால் சூஸ் பண்ணது யாரு? " என்றுக் கேட்க அவள் கேட்டதை புரிந்துக் கொள்ளாத விஷான் " இல்லை...நிஷா! சஹி, ஷாப்பிங் பண்ணனும்னு சொல்லவும் அதுதான் எல்லாம் ஒரே இடத்துல கிடைக்கிற இந்த மால்க்கு இவங்கள கூட்டி வந்தேன்" என்று தன்மையாகவே கூறினான்.

நிஷா… " ஓஹோ! சரியான இடத்திற்கு தான் இவங்களை கூட்டி வந்துருக்க விஷான்…" என்று புட் கோர்ட்டையும், தர்ஷினியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே வஞ்ச புகழ்ச்சியில் கூறவும் அவளின் எண்ணவோட்டதை அறிந்துகொண்ட நட்புக்கள் அவளிடம் சண்டைப் போட விருப்பமின்றி பிரபுக்கும், நிஷாவுக்கும் சிறு சிரிப்புடன் விடை கொடுத்து விட்டு அடுத்த ப்ளோர்க்கு நகர்ந்தனர்.

நிஷாவை விட்டு அடுத்த அடி எடுத்து வைக்கும் போதே தர்ஷினி, விஷானின் காலை ஓங்கி மிதித்திருந்தாள்.

"ஸ்ஸ்ஸ்.. ஆ!...அம்மா" என அவள் மிதித்த மிதியில் விஷான் அலற…. " ஏன்டா? அங்கே அந்த நிஷா என்னை அந்த நக்கலா பேசிட்டு இருக்கா? பதிலுக்கு அவளை கலாய்க்க விடாம இப்புடி நகர்த்திட்டு வந்தா… என்னடா அர்த்தம்? ஒரு பிரண்டா இருந்துட்டு இப்புடி பண்ணலாமா?" என்று எகிறினாள்.

அதற்கு விஷானோ " ஹே….லூசு! எப்பவாச்சும் தான் ஜாலியா நாம எல்லாம் சேர்ந்து ஷாப்பிங் பண்றோம்…. அதை ஸ்பாயில் பண்ண சொல்றியா?" என்றுக் கேட்கவும் தர்ஷினி அமைதியானாள்.

சஹி, " தர்ஸு, நீயும் கலாய்ச்ச, நிஷாவும் கலாய்ச்சா…. அதுக்கு இது சரியா போச்சுன்னு விடுடி…. " என்று நியாயத்தை தன்மையாக கூற தர்ஷினி சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு " ஓகே… கைஸ்!.. சில் " என்று கூறிவிட்டு தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிவிட்டு அப்படியே அங்கேயே சாப்பிட்டு வீடு திரும்பினர்.


இங்கு நடந்துக் கொண்டிருந்த கூத்தை இதழில் சிரிப்புடன் செழியன் கவனித்துக் கொண்டு இருந்தான். அவனின் மொபைலில் கால் வரவும் அதை மகிழ்ச்சியோடு அட்டெண்ட் செய்தான்.

******************************************

தென்காசி மாவட்டம்…

இது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருகில் அமைந்துள்ளதால் இது சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. தென்காசியின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவ பெருமான் தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னே இறந்து விடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை காட்டுமாறு ஆணையிட அதை மன்னன் பராக்கிரமப்பாண்டியனும் ஏற்று தென்காசி கோபுரத்தை கட்டினான். அந்த கோபுரத்தின் பெயரால் 'தென்காசி ' என்று அழைக்க படுகிறது. இங்கே பிறந்தால், இருந்தால், இறந்தால் அவர்கள் முக்தி அடைவர் என்று சிறப்பும் உண்டு. தென்காசியில் அமைந்துள்ள சிவயலாயம் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். இது உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரியகோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. இத்தலத்தின் மூலவர் காசி விஸ்வநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசிமகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.

அருவிகளுக்கு பெயர் பெற்ற ஊர் , அதுவும் குற்றால அருவி என்று சொல்லும் போதே உற்சாகம் பெருகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாக காணப்படும் வனப்பகுதி என்பதால் , குற்றாலம் என்னும் பெயர் பெற்றது. இதன் அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. அவை சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பலத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன.

அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த ஊரின் மத்தியில் மிதமான வெயிலில் தென்னை மர தோட்டத்தில் இருந்த தேங்காய்களை பறித்து சிலர் கீழே போட்டு கொண்டிருந்தனர்.

" ஏலேய்...இசக்கி, மரத்துல அமர்ந்துட்டு தூங்கிதியளோ…." என்று அங்கே வேலை பார்க்கும் இசக்கிமுத்துவை கடிந்து கொண்டு இருந்தார் அந்த தோட்டத்தின் உரிமையாளர் நாச்சியார். அவர் தான் இளஞ்செழியனின் ஆச்சி.அவனின் அம்மாவின் அம்மா.

அவர் இசக்கியை கடிந்துக் கொண்டு இருக்கும் போதே " ஆச்சி! இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீக?... அங்க அம்மா உங்களை சாப்பிட கூட்டிட்டு வர சொன்னாக… என்று வரும் போதே அவரை அழைத்துக் கொண்டே வந்தாள் வானதி. இளஞ்செழியனின் தங்கை.

" ஏட்டி! இங்கன நான் வந்து இவனுகள வேலை வாங்காம இருந்தா… இவனுங்க ஒழுங்கா தேங்காயை பறிக்காம பராக்கு பாத்துட்டு, கதை அலந்துட்டும் இருப்பானுக" என்று பேசிக்கொண்டே தோட்டத்தை நோக்கி கண்களை சுழற்றினார்.

அப்போது மரத்தில் அமர்ந்திருந்த இசக்கிமுத்துவின் கவனம் இங்கில்லாமல் எங்கோ இருக்க
" ஏலேய்! இசக்கி…. மரத்தை விட்டு இறங்குல…. " என்ற அதட்டல் போடவும் ,அதைக் கேட்டு இசக்கி " ஆத்தா... மன்னிக்கோணும்… புள்ளைக்கு உடம்பு சரியில்ல, அதான் நினைப்பு இங்க இல்லாம அங்கன இருக்கு…" என்று தலையைச் சொரிந்துவிட்டு நாச்சியார் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயத்துடன் பார்க்க, " ஏலேய்! நீ முதல்ல கிளம்புல.. நாளைக்கு வந்து வேலையை முடிச்சுப்பிடு…." என்று அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தன் பேத்தியைப் பார்த்தார்.

"ஏட்டி! நீ இங்கன என்ன பண்ற?"

"ஆச்சி! அம்மா உன்னை சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாக….."

"ஏனாம்?"

"அண்ணனை வீட்டுக்கு வர சொல்றாவ… அப்படியே நீங்களும் அண்ணாகிட்ட பேசணும்னு சொன்னிங்களாமா? அதான் விரசா வர சொன்னாவ? "

"அடியே! இதை இவ்ளோ மெதுவாவா சொல்லுவ? சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு" என்று சொல்லிக்கொண்டே பாதி தூரம் சென்றிருந்தார்.

ஆச்சி!சொல்லிட்டு கிளம்பாம இவ்ளோ தூரம் போனா நான் எப்புடி அவ்ளோ விரசா நடப்பேன்? என்று புலம்பினாள்.

அவளின் புலம்பல் சத்தம் நாட்சியார்க்கு கேட்டு விட்டது. அவர் தன் நடையை நிறுத்தி விட்டு " ஏட்டி! கிழவி நானே.. இம்புட்டு தூரம் வந்துட்டேன்… நீ குமரிப்புள்ள… என் நடைக்கு ஈடுக் குடுத்து வர மாட்டியலோ? என்று அவர் சத்தமிட வானதி விரசா நடந்து அவருடன் வீடு வந்து சேர்ந்தாள்.

அங்கே இளஞ்செழியனின் அம்மா பார்வதி இவர்களின் வருகைக்காக
வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நாச்சியார் வாசல் கதவை திறந்து வரவும், வாசலை நோக்கி விறு விறு நடையுடன் அவரை எதிர்கொண்டார்.

என்னம்மா! பார்த்து மெதுவாக வாடா? வாசல் வரை வந்த எங்களுக்கு வீட்டுக்குள்ளே வர வழி தெரியாதா?" என்று நாச்சியார் கடிய..." இல்லை அத்தை... செழியன் கால் பண்ணான்.... நீங்கள் வீட்டிலே இல்லை, தோட்டத்தில் இருக்கீங்கன்னு சொன்னதும் அவன் பத்து நிமிடம் கழித்து கால் பண்றேன். நாச்சி வந்தா தான் என் பேச்சு ஆரம்பிக்கும்...." அப்படி சொல்லிட்டு போனை வச்சிட்டான்.

"சரிடா... இப்போது அவனுக்கு போனை போட்டு கொடு"... என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பார்வதியின் போனில் இளஞ்செழியன் அழைத்திருந்தான்.

"ஹலோ... அம்மா ! நாச்சி வந்தாச்சா? "

"ம்ம்... வந்தாச்சு... நீ பேசு" என நாச்சியார் கையில் போனைக் கொடுத்து விட்டு அங்கிருந்து பார்வதியும், வானதியும் நகர்ந்து தூரத்தில் இருக்கும் ஃஷோபாவில் சென்று அமர்ந்தனர்.ஏனெனில் ஆச்சியும், பேரனும் பேசினால் அவ்வளவு சீக்கிரம் அவர்களின் பேச்சுகள் முடியாது.

"ஹாய்... நாச்சி! ஹௌ ஆர் யூ?

" ஐ அம் ஃபைன் பெர்ரி"

இவர்களின் உரையாடலை சிரித்த முகத்துடன் பார்வதியும், கடுத்த முகத்துடன் வானதியும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

வானதியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளை வெறுப்பேத்தும் விதமாக நாச்சியார்,
" ஐ மிஸ் யூ பெர்ரி.... நேரா நேரத்திற்கு சாப்பிடுறீகளா? " செழியன் " எஸ்.. நாச்சி! சாப்பிடுறேன். எல்லாரும் எப்படி இருக்காங்க? அம்மாட்ட போனைக் கொடு... நான் பேசணும்"... என்று சொல்ல நாச்சியார், பார்வதியிடம் போனைக் கொடுத்து விட்டு வானதி பக்கத்தில் அமர வானதி அவர்க்கு பழிப்பு காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"ஏட்டி... உம் முகத்த திருப்பிக்கிற ?" எனக் கேட்க, வானதி " ம்ம்.. ஏன்...ஆச்சி...? உம் பேரனை மட்டும் பெர்ரி, பொரின்னு பாசமா கூப்பிடுறீக? அதே சமயம் நானும் உங்கள் பேத்தி தானே... என்னை என்னிக்காவது செல்லப் பெயர் வச்சு கூப்பிட்டுருக்கீகளா?" என்றுக் கோபித்துக் கொண்டாள்.

"ஏட்டி! பேரனை சுருக்கி பெர்ரின்னு
கூப்பிடுறேன்... பேத்தியை சுருக்கி கூப்பிட்டா பேதின்னு ஆகிரும்ல… அதுனால தான் உன்னை செல்லமா கூப்பிட மாட்டுறேன் " என்று சிரித்து கொண்டே சொன்னார்.

அவரது சிரிப்பு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக வானதிக்கு கடுப்பை கிளப்பியது.

"ஏய்….கிழவி! என்னா லந்தா? பேதின்னு வேற கூப்பிட உனக்கு ஆசையா இருக்கும் போலயே? உன் கண்ணுக்கு டிக்ஷனரில பேபி,டால் இதெல்லாம் இருக்கறது தெரிலையா? உன் காதுல தான் அந்த வார்த்தைகள் எல்லாம் விழுந்ததே இல்லையா?" என்று கடுப்பில் எகிறினாள் வானதி.

" அடியே! என்னோட பெர்ரி..உன்னை மாறி தினமும் என்னோட இருக்கறது இல்ல... அவனே ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவைன்னு இங்க வந்துட்டு போறான்… வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கான். என்னோட ஏக்கம் அவன் இங்க வந்து நம்மக் கூட தங்க மாட்டானான்னு பார்த்துட்டு இருக்கேன். அவனை நேர்ல தான் கொஞ்ச முடியலை, அது தான் போன்ல கொஞ்சுறேன். உனக்கேண்டி பொறாமை?" என்று பொறுமையாகவே பதில் சொன்னார்.

"க்கும்… உன் பாசம் இப்புடி பாயாசம் மாறி வலியுறதப் பார்க்கும் போது உன் பேரன் மேல பொறாமை தானா வருது" என்றுக் கூறி விட்டு அங்கே இருந்த ஊஞ்சலில் சென்று உக்காந்து கொண்டாள்.

அதே நேரம் பார்வதியோ மகனின் நலத்தை விசாரித்து விட்டு நேரா நேரத்துக்கு சாப்பிட சொல்லவும் செழியனோ சிரித்துக் கொண்டே" அம்மா! எவ்ளோ பிஸியா இருந்தாலும் வயித்தை காயப்போட கூடாதுன்னு நீங்க சொன்ன மாதிரி நான் பாலோவ் பண்றேன் மா, நீங்க கவலையே படாதிங்க" என்றான்.

பார்வதியோ " என் மகனைப் பத்தி எனக்கு தெரியும். அவன் எங்களையே நல்லா பார்த்துக்கும் போது அவனையும் எங்களுக்காக பார்த்துக்குவான்" என்று பெருமையோடு சொல்லவும் தாயின் பெருமைக் கொண்டு செழியனும் புன்னகைத்து கொண்டான்.

"ஹ்ம்ம்… செழியா! நீ திருச்சில தானே இருக்க? அப்படியே ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவித்து விட்டு வந்துருப்பா, உன் ஜாதகத்தை காட்டுனதுல ஜோசியர் அங்க போய் பரிகாரம் பண்ண சொன்னாரு" என்று சொல்ல செழியன் மனதிற்குள் ' ஹ்ம்ம் நானே அங்கேயே தான் சுத்திட்டு இருக்கேன்' என்று நினைத்து விட்டு " ஹ்ம்ம்.. சரிம்மா" என்று சொன்னான்.

" சரிப்பா… இரு போனை உன் தங்கச்சிட்ட தரேன் … அவ முகத்தை தூக்கி வச்சிருக்கா… நீயே என்னான்னு கேளு" என்று போனை வானதியிடம் கொடுத்தார்.

" ஹலோ... அண்ணா"

"ஹாய் டா வானு! எப்படி இருக்க? ஏன் மூஞ்ச தூக்கி வச்சிருக்க?"

"நான் நல்லாயிருக்கேன் அண்ணா, எல்லாம் உன்னோட நாச்சி பண்ண வேலை தான், நான் மூஞ்ச தூக்கி வச்சுக்க காரணம், உன்னை மட்டும் செல்லமா கூப்பிடுதே, என்னை கூப்பிட மாட்டுத்தேன்னு கேட்டதுக்கு என்னைக் கலாய்ச்சி விட்ருச்சு " என்று தமையனிடம் கம்ப்லைன்ட் பண்ணினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு சிரித்து விட்டு " சரிடா… விடு… சும்மா உன்னை வம்பிழுத்துருப்பாங்க" என்று சமாதானம் பண்ணினான்.

அவர்கள் இருவரின் உரையாடலையும் பார்த்துக் கொண்டே இருந்த நாச்சியார், அவளை நோக்கி வரவும்… வானதி என்னவென்று பார்க்க அவளின் கையில் இருந்த போனை பிடுங்கி " ஹலோ….பெர்ரி, உன் பாசமலர்ட்ட பேசுனது போதும்" என்று சொல்ல வானதி வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.

செழியன் " வொய் நாச்சி? வானுக்குட்டியை வம்பிழுத்துக் கொண்டே இருக்க?"

" அதெல்லாம் எங்களுக்குள்ள இருக்குற ஒரு ஜாலி பெர்ரி… நீ கண்டுக்காத? அப்பறம் நீ போன விஷயம் என்னாச்சி? சக்ஸஸா?

" ஹ்ம்ம்… எங்க சக்ஸஸ்… எல்லாம் மோதல்லையே ஆரம்பிக்குது…அவளை எப்புடி வழிக்கு கொண்டு வரதுனே தெரில"

" பேசாம உண்மையை சொல்லிரு பெர்ரி…"

" நீ வேற நாச்சி, உண்மையை இப்ப சொன்னா அவ்ளோ தான், கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்…. ஆனா அவளைக் கல்யாணம் பண்ணிட்டு தான் வருவேன்… நீ கவலைப் படாதே" என்று வாக்களித்தான்.

"உடனேவா கல்யாணம் பண்ணப்போற?"

"நாச்சி! இப்போ அவள் படிச்சிட்டு இருக்கறா… சோ, அவ படிப்பு முடிஞ்சி தான் கல்யாணம்…. அதுவரை அவளைக் காதலிக்குறேனே... "

"ஆமா! நீ காதலைச் சொன்ன உடனே அவ அப்படியே உன்னை ஏத்துக்கிடுவா தான்… நீ பண்ண அழும்புக்கு உன்னை என்னப் பண்ண போறாளோ? கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ…அவ அமைதியா இருந்தாலே ஏதோ அலப்பறை பண்ண போறான்னு அர்த்தம்…" என்று எச்சரிக்கைப் பண்ணினார்.

" சரி… நாச்சி! நான் பார்த்துக்குறேன்… நீ அம்மாவையும், வானதி, கூடவே உன்னையும் சேர்த்துப் பார்த்துக்கோ… பை … லவ் யூ… "

"ஓகே.. பெர்ரி! நான் பார்த்துக்குறேன்.. லவ்வை என்ட்ட சொல்றத விட்டுட்டு அவகிட்ட சொல்லுலே … பை.." என்று அவனுக்கு கொட்டு கொடுத்து போனை வைத்தார். செழியனும் சிரித்துக் கொண்டே போனை வைத்தான்.

அதே வேளை மூர்த்திக்கு நடந்த விபத்தைக் கண்டு கங்கா, திருச்சியில் பேமஸ் ஆன் ஜோதிடர் முன் அமர்ந்திருந்தார். கங்காவின் முறை வந்ததும் அவர், மூர்த்தி மற்றும் சாஹித்யாவின் ஜாதகத்தைப் பார்க்க சொல்ல, ஜோதிடர்,அவர்கள் இருவரின் பலன்களை கணித்து நல்ல விஷயங்களைக் கூற, கங்கா முகத்தில் வெளிச்சம் பிறந்தது. பின் ஜோதிடர் சொன்ன ஒரு விஷயத்தில் முகம் இருண்டு போனது... ஏனெனில் அவர் சொல்லிய செய்தி சஹியின் உயிர் சம்பந்தப் பட்டது…..

******************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போன எபிக்கு லைக் குடுத்த சித்ரா மா, கவிதா, இலக்கியா, dafni, ums, சுகன்யா, ஜூலியட்,krishnav மற்றும் எல்லா சகோவுக்கும் நன்றிகள் பல... அப்படியே உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க சகோஸ்...


அத்தியாயம்- 8

அன்று காலையில் எழுந்ததிலிருந்து கங்காவின் மனம் மூர்த்திக்கு நடந்த விபத்தைப் பற்றியே அலைக் கழித்து கொண்டிருந்தது. சில நாட்களாகவே மூர்த்தியின் பிஸ்னஸில் சந்திக்கும் சறுக்கல் மற்றும் அவரது உடல் நலப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அவரது ஜாதகத்தையும்,சஹியின் ஜாதகத்தையும் ஜோதிடரிடம் காட்டி அதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? என்று கேட்கவேண்டும் என்று தர்ஷினியின் அம்மாவைத் துணைக்கு கூட்டிக் கொண்டு திருச்சியில் பிரபலமான அந்த ஜோதிடரைப் பார்க்க வந்திருந்தார்கள்.

தர்ஷினியின் அம்மா கௌரி, கங்காவிடம் " என்னாச்சு கங்கா? அவ்ளோ அவசரமாக இப்போ ஜோதிடரைப் பார்த்தே ஆகணும்கற அவசியம் என்ன?"

"இல்லை கௌரி, கொஞ்ச நாளாவே அவருக்கு கம்பெனில ரொம்ப பிரச்சினை, அதனோட அவருக்கு விபத்தும் ஆனதுல இருந்து மனசு சங்கடமா வேற இருக்கு.... அதற்கு தான் தீர்வு காண இங்கே வந்துட்டேன்"

"ஹே! உனக்கு தெரியாததா? ஒரு கம்பெனியை ரன் பண்ணணும் அப்படி என்றால் சில சறுக்கல்களைச் சந்திச்சு தான் ஆகணும்... அதெல்லாம் அண்ணன் சமாளித்து தான் நம்பர் ஒன்னா இருக்கிறார்.. நீ எதுவும் மனதைப் போட்டு உழட்டிக்காதே! டேக் இட் ஈஸி" என்றார் கௌரி.

கங்கா," நீ சொல்றது சரிதான்!... ஆனால் நம்மளை மாறிக் குடும்பத்தலைவியா இருக்கிறவங்க கடவுள் கிட்ட பொன்னு வேண்டும், பொருள் வேண்டும் என்று கேட்காமல் என் புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் தானே முதலில் கேட்போம். அவங்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் அதற்கு தீர்வு எப்படியாவது கண்டு பிடித்து அவங்களை இந்த இக்கட்டில் இருந்து மீட்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் இங்கே வந்துருக்கேன்" என்றார்.

கௌரி, " கண்டிப்பாக உன்னுடைய மனக் கஷ்டம் நீங்கும் கங்கா" என்று ஆறுதல் கூறவும் ஜோதிடர் இவர்களை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

" சொல்லுங்கம்மா... யாருக்கு ஜாதகம் பார்க்கணும்?..... திருமணப் பொருத்தம் பார்க்கணுமா? இல்லை பரிகாரம் ஏதும் பார்க்கணுமா? " ஜோதிடர் வினவவும்,

கங்கா, "எனக்கு தான் சாமி.... குடும்பத்துல கொஞ்ச நாள் எதும் சரியாய் இல்லை… அதனால என் கணவரோடதும் என் மகளோட ஜாதகத்தையும் கொண்டு வந்துருக்கேன்… கொஞ்சம் பார்த்து சொன்னிங்கன்னா, அதுக்கேத்தபடி பரிகாரம் கேட்டுட்டுப் போக வந்தோம்" என விளக்கினார்.

"சரிம்மா! பேஷா பார்த்துடலாம்… உங்க கணவர் ஜாதகத்தைக் குடுங்க" என்றுக் கேட்க அவரிடம் ஜாதகத்தை தந்துவிட்டு கங்கா, ஜோதிடரின் முகத்தை பயபக்தியோடு பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரது முகத்தில் தெரிந்த தவிப்பு கண்டு கௌரி, தன் கையை கங்காவின் கை மீதி வைத்து கண்களை மூடி அமைதிப்படுத்தினார்.

" உங்க மகளோட ஜாதகத்தையும் கொடுங்கோ"

"இந்தாங்க சாமி! "

அவர், சஹியின் ஜாதகத்தையும் வாங்கிக் கணித்துவிட்டு சொல்லத் தொடங்கினார்.

" இங்கே பாருங்க அம்மா, உங்க மகள் ஜாதகத்தைப் பார்க்கறப்போ ரொம்ப அமோகமான வாழ்க்கை வாழப் போறா,நல்ல மணவாளன், வசதியான வாழ்க்கை அமையும்" என்றுக் கூறி விட்டு கங்கா முகத்தைப் பார்க்க அவரின் முகத்தில் மகிழ்ச்சியும் கலக்கமும் ஒருங்கேத் தோன்றின.

அவரின் கலக்கம் கண்டு ஜோதிடர், மூர்த்தியின் ஜாதகத்தையும் பார்த்து மூர்த்தியின் கிரக பலனையும் சொல்ல ஆரம்பித்தார்.

" பாருங்க அம்மா, இப்போ உங்க கணவரோட ஜாதகத்தை வச்சி பார்க்கும் போது உங்க கணவர் முன்னே செய்த பாவம் இப்போ அவரைத் துரத்துது. இதனால் இந்த பாவம் உங்க கணவர் மூலமா உங்க மகளையும் தாக்கும். ஆனால் அதற்கு பரிகாரம் உங்க மகள் உங்களை விட்டு பிரிஞ்சிருவா" என்று நிறுத்திவிட்டு கங்கா முகம் பார்க்க, " நீங்க முழுமையும் சொல்லுங்க சாமி" என அவரை கங்கா உந்தவும் மீண்டும் சொல்லத் தொடங்கினார்.

"உங்க மகள் உங்க கணவரோட பாவத்துக்கு உண்டான பரிகாரத்தை செய்வா… அவ மூலமா தான் உங்க கணவர் உயிர் நிலைச்சி இருக்கும்… இனிமேல் அவ அனுபவிக்கிற மகிழ்ச்சியும் வருத்தமும் அவரால் மட்டுமே நடக்கும். உங்க கணவரால் மட்டும் தான் உங்க மகள் விரும்புறது ஒருத்தரை, மணக்குறது வேற ஒருத்தனையா இருக்க போகுது"

கங்கா, "இதற்கு வேற ஏதும் பரிகாரம் இருக்கா சாமி… கண்டிப்பா செய்றேன்".

"இது உங்க மகளோட விதி… இப்புடி தான் நடக்கணும்னு இருக்கு... உங்களுக்கு வரப் போற மருமகனால தான் அவள் சந்தோசமா இருக்க போறா, ஆனால் அதுக்கு கொஞ்சம் தடை இருக்கும், அதையும் தாண்டி சந்தோசமா இருப்பா" என்று சொல்லி விட்டு அமைதியா இருந்தார்.

"என் பொண்ணு கஷ்டத்துக்கு ஒரு தாயா தீர்வுக் காண வழி இருக்கா சாமி"

" இந்த உலகத்துல பிறந்த எல்லாரும் அவங்க விதிப்பயன் காரணமா கண்டிப்பா இந்த கஷ்டம் அனுபவிக்கணும்னு அவங்க தலையெழுத்து. அதை நம்மால் மாத்த முடியாது… அனுபவிச்சே ஆகணும்... அது தான் விதி! கடவுள் எவ்ளோ கஷ்டம் கொடுத்தாலும் நம்மளை கை விட மாட்டான். அது போல தான் உங்க மகளுக்கும், அவளை எந்த சூழ்நிலையிலும் கை விடாதவன் தான் மணவாளனா அமைவான்…. கவலைப் படாம போய்ட்டு வாங்க.. என்று கைக் கூப்பினார்.

கங்காவும், கௌரியும் அவரிடம் தட்சணைக் கொடுத்து விட்டு நன்றி கூறி வெளியே வந்தனர்.

கௌரி, "இப்போவாச்சும் உன் குழப்பம் உன்னை விட்டு போனதா? இல்லையா?"

"அதெல்லாம் இப்போ இல்லை.. ஆனால் நாங்க செஞ்சதுக்கு சஹி அனுபவிக்கணும்னு தலையெழுத்து… கடவுள் மேல பாரத்தை போட்டு இனிமேல் எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவாருன்னு இருக்க வேண்டியது தான்"

கங்கா தெளிவான மனநிலையில் நிதர்சனம் உணர்ந்து பேசுவதால் கௌரி ஏதும் பேசாமல் அவர் போக்கில் விட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கங்கா, ஜோதிடரைப் பார்த்து விட்டு வீட்டினுள் நுழைந்த போது மூர்த்தி ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து மொபைலில் ஜீவாவிடம் பேசிக் கொண்டே கங்காவை பார்த்துக் கொஞ்ச நேரம் கழித்து காபி எடுத்து வருமாறு சொன்னார்.
கங்காவும் சரி என்று தலையசைத்து விட்டு உடை மாற்ற சென்றார்.

மூர்த்தியோ, மொபைலில் ஜீவாவிடம் " இன்னைக்கு ஒரு நாள் முழுவதும் டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க... அதனால் நீ கம்பெனியை பார்த்துக்கோ... நாளைக்கு நான் கம்பெனிக்கு வரும் போது எந்த ஃபைலும் பெண்டிங்ல இருக்கக் கூடாது.‌‌... அப்படி இருந்தால் யார் அதற்கு பொறுப்போ அவங்களை யாரா இருந்தாலும், அது நீயாகவே இருந்தாலும் வேலையை விட்டு தூக்கிருவேன்னு சொல்லிரு என்று சற்று கறராகக் கூறினார்.

ஜீவா,"சரிங்க சித்தப்பா! நான் பொறுப்பா பார்த்துக்கிறேன் ... நீங்கள் வீட்டிலே நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.." என்று சொன்னான்.

மூர்த்தி,"ஹான்! சொல்ல மறந்துவிட்டேன் ஜீவா, அந்த அபிஜித் காலையில் எனக்கு கால் பண்ணி நக்கலா என்னோட நலத்தை விசாரிக்கிறான்... அவனால் தான் எனக்கு இப்படி ஆச்சு... அவனை விட்டு வைக்கிறது ரொம்ப ஆபத்து... அவனை எப்படியாவது முடிக்க பாரு...மீதியை நான் நாளைக்கு வந்து சொல்றேன்..." என்று சொல்லி விட்டு ஜீவா பதிலளிக்கும் முன் போனை வைத்து விட்டார்.

ஜீவாவோ, "யோவ்! சித்தப்பா... நான் படித்த படிப்புக்கும்,பார்க்கிற வேலைக்கும் சம்பந்தம் இல்லாம பண்றீயேயா?" ( வொய் பிளட்.., சேம் பிளட்... தம்பி) என்று சத்தமாக புலம்பினான்.

பின் அவனது மனசாட்சியோ ' அந்த அபிஜித் உங்களுக்கே ஒரு டெமோ காட்டிருக்கான்... இன்னும் அவனை உசுப்பி விட்டுட்டா அவன் நம்ம சோலிய முடிச்சு விட்டுருவானே!'
என்று கேலி செய்தது.

" அடேய் அபிஜித்து! எனக்குனே வருவிங்களாடா? இப்போ இந்த சித்தப்பா வேற உன் சோலி முடிக்க சொல்றாரு… அப்போ உன்னை முடிச்சிற வேண்டியது தான்... " என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியேறினான்.

கங்கா தன் உடையை மாற்றிவிட்டு மூர்த்திக்கு காபி எடுத்துக்கொண்டு வரவும் சஹியும் தன் பர்ச்சேஸ் முடித்து விட்டு வரவும் சரியாக இருந்தது.சஹி வீட்டுக்குள் நுழையும் போதே கங்கா அவளுக்கும் சேர்த்து காபி எடுத்துட்டு வந்திருந்தார்.

"வாடாம்மா, இந்த காபி எடுத்துக்கோ... , நீங்களும் காபி எடுத்துக்கோங்க!" என்று இருவரிடமும் தந்து விட்டு அவரும் காபி கப்புடன் மூர்த்தி அருகில் அமர்ந்தார்.

மூர்த்தி, சஹியிடம் " அப்பறம் பர்சேஸ் என்ன என்ன பண்ணிங்க? ஜாலியா இருந்துச்சா?"என்று வினவவும் சஹி, " டாடி! உங்களுக்கு இது வாங்குனேன்.. என்று மூர்த்திக்கு பை ஜாமாவும், மாம்! உனக்கு இது வாங்குனேன் என்று சுடிதாரை நீட்டவும் அதை வாங்கி பார்த்த கங்காவோ, " என்னடி ...இது? இதைப் போய் எடுத்துட்டு வந்துருக்க…. நானெல்லாம் இந்த சுடிதாரை போட மாட்டேன்… போ…" கங்கா பிகு பண்ணினார்.

"மாம்! உனக்கு சுடிதாரை எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?... ஆனால் நீங்க என்ன அவ்ளோ ஈசியா வேணாம்னு சொல்றிங்க… போங்க" சஹி கோபித்துக் கொண்டாள்.

சஹியும் கங்காவும் பேசிக்கொண்டதை பார்த்து மூர்த்தி சிரித்து கொண்டார். அவர் சிரிப்பதை பார்த்த கங்கா " என்ன சிரிப்பு வேண்டி கிடக்குது? நாம என்னமோ வயசு பிள்ளைங்க மாறி இவ ட்ரெஸ் எடுத்துட்டு வந்துருக்கா, இவ எடுத்துட்டு வந்துருக்க ட்ரெஸ்ஸ எங்க மாட்டிக்கிட்டு போவீங்க?... உங்க பொண்ணுக் கிட்ட சொல்லுங்க…" மூர்த்தியை சஹியிடம் மாட்டிவிட்டு கங்கா வேடிக்கைப் பார்க்க வந்தார்.

மூர்த்தியோ, 'அடிப்பாவி! இப்புடி என்னைக் கோர்த்துவிட்டிடியேடி…. இப்போ இந்த ட்ரெஸ் பத்தி சஹி லெக்சர் எடுப்பாளே!' என்று மனதுக்குள் புலம்பத் தொடங்கினார்.

அவர் நினைத்தபடியே சஹியும், " ஏன்? இந்த பைஜாமவுக்கும், சுடிதாருக்கும் என்ன குறைச்சல்? கலர், டிசைன் எல்லாம் நான் பார்த்து பார்த்து தான் செலக்ட் பண்ணேன். ரெண்டு பேரும் போய் இந்த ட்ரெஸ் போட்டு வாங்க… போங்க.. என்று விரட்டவும் இவள் விட மாட்டாள் என்று நினைத்த கங்கா, மூர்த்தியைப் பார்க்க தன் கண்களை மூடி "நான் பார்த்துக்கிறேன்" என சமாதானம் செய்தார்.

அவர் சஹியைப் பார்த்து ஏதோ சொல்ல வர சஹியோ," டாடி! இப்போ என்ன? உங்களுக்கு இப்போ முடியல.. அதனால உங்களால இதை போட முடியாது... நீங்க போடலனா மாமும் போட மாட்டாங்க… இதை தானே சொல்ல வரிங்க"

மூர்த்தியோ, " எப்படி டா… இவ்ளோ துல்லியமா நான் சொல்ல வந்ததை சொல்ற" என்று ஆச்சரியப்பட்டார்.

"ஹ்ம்ம்! உங்க ரெண்டு பேரோட மைண்ட் வாய்ஸ் இதுவா தான் இருக்கும்னு நான் உங்களுக்கு ட்ரெஸ் எடுக்குறப்போவே நான் புரிஞ்சிக்கிட்டேன்…" எனக் கூறி சிரித்தாள்.

அவள் சிரிப்பதை பார்த்த கங்கா, " நாங்க இதைப் போட மாட்டோம்னு தெரிஞ்சும் ஏன்டா? எடுத்துட்டு வந்த..? என வினவ, " சரி,சரி, சின்ன வயசுல இதெல்லாம் போட ஆசைப்பட்டு ஒரு வேளை போட முடியாம இருந்துருந்தா… நீங்க யார்ட்ட சொல்வீங்க? … அதான் நானே உங்க ஆசையை நிறைவேற்றலாம்னு இப்புடி வாங்கி வந்துருக்கேன்...சோ, நீங்க கண்டிப்பா எனக்கு இதை உடுத்திக் காட்டியே ஆகணும்… வேற பேச்சு இல்லை… டன்.. என முடித்துக் கொண்டாள்.

"உனக்காக எது வேணாலும் செய்வோம் டா… இந்த சின்ன ஆசைய செய்ய மாட்டோமா " என்று மூர்த்தி கூற கங்கா ஆமோதித்தார்.
"ஹை!சூப்பர்… தாங்க் யு டாடி,தாங்க் யு மாம்…" என குதூகலக் குரலில் கூறவும் மூர்த்தியோ, " என் பொண்ணு தாங்க் யு சொல்ற அளவு வளர்ந்துட்டாடா…" எனக் கேலிசெய்ய…. கங்காவோ இதைப் பார்த்து மனதுக்குள் 'கடவுளே! இந்த சந்தோசம் என் குடும்பத்துக்கு எப்பவும் இருக்கனும்' என வேண்டிக் கொண்டார். ஆனால் விதி? நாம் நினைப்பது போல அமைந்து விடுமா?இந்த காரியம் இப்படி இவளால் அல்லது இவனால் முடிக்கப்படும் என்று விதி இருந்தால் கண்டிப்பாக அது நடந்தே தீரும். இதை யார் கங்காவிற்கு சொல்லுவது?....

அபிஜித்தின் அறை….

"டேய்...அபி! காலையில் யாரைப் பார்க்க அவ்ளோ வேகமா போன…? நீ நிஜமாவே அந்த பெண்ணை விரும்புரியா? மூர்த்தி ஏற்கனவே செம்ம காண்டுல இருக்குறார்... இதுல இது வேறயா?" என்று அந்த அறையில் கூச்சலிட்டு கொண்டிருந்தான் கதிரவன்.

அவன் கத்தலைப் பொருட்படுத்தாத அபிஜித், கூலாக அவனைப் பார்த்து "ஆமாடா! நான் சாஹித்யாவை லவ் பண்றேன்… என்ன இப்போ அதுக்கு? எப்போ பார்த்தாலும் மூர்த்தி… மூர்த்தின்னு கத்திட்டு இருக்க? அப்படியே மூர்த்திக்கு தெரிஞ்சாலும் நான் ஒன்னும் கவலைப் பட மாட்டேன்… அவளை நான் அடையனும்னா கூட அவளை கடத்தக் கூட தயங்க மாட்டேன்…" என்று மென்மையாக தொடங்கி கோபத்தில் முடித்தான்.

கதிரவனோ, " நீ கடத்தி கொண்டு போறது எல்லாம் இருக்கட்டும்... முதல்ல அந்த பொண்ணுகிட்ட போய் முதல்ல லவ் சொல்லு… பொண்ணு வேற அழகா இருக்குன்னு வேற யாராச்சும் லவ் சொல்லிற போறாங்க…"

"டேய்! யாரை வேணாலும் சாஹித்யா லவ் பண்ணட்டும்… ஆனால் அவளைக் கல்யாணம் பண்ண போறது நானா தான் இருப்பேன்… அவளை நான் அவ்ளோ சீக்கிரம் விட்டு கொடுக்க மாட்டேன்…." என அபிஜித் தீவிரமாக சொன்னான்.

கதிருக்கு, அபிஜித்தின் தீவிரம் கண்டு பயம் வந்தது. அவனின் மனதிலோ ' கடவுளே! அந்த பொண்ணு சஹியை எப்படியாச்சும் இவன் கூட சேர்த்து வச்சிருப்பா…நானே அவங்க ரெண்டு பேரையும் உன் கோயிலுக்கு கூட்டிட்டு வந்து பாலாபிஷேகம் செய்றேன்' என்று வேண்டிக் கொண்டான்.இவன் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ, இல்லையோ அபிஜித்தின் அப்பா கபிலனுக்கு கேட்டுவிட்டது போல, கதிர், கடவுளிடம் வேண்டுதல் வைத்து முடித்த நேரம் கபிலன் அபிஜித்துக்கு கால் செய்திருந்தார்.

எப்போதும் கபிலன் வேலை நேரத்தில் அபிஜித்துக்கு அழைத்ததில்லை. அப்படி அவர் அழைத்தால் முக்கிய விஷயமாக, தள்ளி போட முடியாத வகையில் அந்த விஷயம் இருக்கும். அதனால் அபிஜித், யோசனையோடு கால் ஆன் செய்தான்.

" சொல்லுங்க… டாடி! ஏதும் முக்கியமான விஷயமா?..."

" ஆமா, ஜித்தா… எனக்கு இப்போ தான் கதிர் சொன்னான்… நீ மூர்த்தியோட பொண்ணப் பத்தி பேசுறது நினைச்சி கதிர் பயப்படுறான்... அதுதான் என்ன விஷயம்? அவன் பயப்புடுற அளவு நீ என்ன சொன்னடா…" என வினவ அபிஜித், ஹ்ம்ம் அது சஸ்பென்ஸ் டாடி… என்று சொல்லிவிட்டு கதிரை முறைத்துப் பார்த்தான்.

'அச்சச்சோ… அப்பா இவன்கிட்ட கேட்டுட்டாரு போலயே' என மனதுக்குள் நினைத்துவிட்டு அபியை பார்த்து அசடு வழிந்தான்.

அபியோ, " இருடா… உனக்கு இருக்கு கச்சேரி... " என்று உதடசைத்து கபிலனிடம் " டாடி... அப்படியே அவன் ரொம்ப பயந்தவன் தான் போங்க…." என்று சிரிக்கவும் கபிலனும் சிரித்து விட்டு " பொண்ணு எப்படி இருப்பா… உங்க அம்மாகிட்ட சொல்லி பொண்ணுக் கேட்க போவோமா?" என வினவவும் " அதுக்கு நேரம் இன்னும் வரலை டாடி!... அம்மாகிட்ட நானே சொல்லுக்கிறேன்... அதுக்கு முன்னாடி அவளை வச்சி தான் நான் நினைத்ததை நடத்திக் காட்டணும்…" என்று நிதானமாக சொன்னான்.

அவனின் நிதானம் எதையோ கபிலனுக்கு உணர்த்த அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு " சரிடா! நீ எப்போ டெல்லி வர? மாம் கேட்டுட்டே இருக்கா? சோ…. இந்த வீக்கெண்ட் கண்டிப்பா நீ வந்தே ஆகணும்… புரிஞ்சிதா?... டேக் கேர்.." என்று சொல்லிவிட்டு அபிஜித் மறுப்பு சொல்லுவதற்குள் அழைப்பைத் துண்டித்தார்.

அபிஜித் சிரித்துக்கொண்டே " டேய்! கதிரு …. உங்க அப்பா உஷாரா போனை வச்சிட்டாரு டா… அப்போ வர வெள்ளி ஈவினிங் போல டெல்லிக்கு பிலைட் டிக்கெட் புக் பண்ணிரு…" என்று கூறி விட்டு தொடங்கிய ப்ரொஜெக்ட்க்கு பிளான் செக் பண்ண ஆரம்பித்தான்.

அதே வேளையில் மூர்த்தியோ அவர் அபிஜித்தின் ப்ரொஜெக்ட்டை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.

******************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -9

கடந்த இரு நாட்களாகவே விஷான் அவசர அவசரமாக தனது தோழிகளுடன் கல்லூரிக்கு செல்லாமல் அவர்கள் மூவரையும் விட்டு விட்டு கல்லூரிக்கு தனியாக சென்று கொண்டிருந்தான்.இதை நட்புகள் யாவும் கவனிக்கவில்லை.

அன்று காலை வேளையில் சஹியின் வீட்டில் கல்லூரிக்கு சேர்ந்து செல்வதற்காக தர்ஷினியும், பிரியாவும்.. சஹி கிளம்புவதற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

"அடியே! இன்னும் எவ்ளோ நேரம்டி ஆகும்? -தர்ஷினி.

"ஹ்ம்ம்... பைவ் மினிட்ஸ்டி தர்ஷு - சஹி .

"க்கும்... இப்படியே சொல்லி சொல்லி நாங்க வந்து அரைமணி நேரம் ஆச்சுடி... பிசாசே! சீக்கிரம் வந்து தொலை.... என்று தர்ஷினி கடுப்பாக கத்தினாள்.

"ஹே விடுடி தர்ஷு! நாம தான் சீக்கிரம் வந்துருக்கோம்டி இன்னிக்கு… அவ வழக்கமா கிளம்புற டைம் தான் இது… ஆர்வத்தைக் கொஞ்சம் குறைச்சிக்கோ!... அப்படியே நீ சீக்கிரம் காலேஜ் போய் கேன்டீன்ல தான் உக்காந்துருக்க போற… அதுக்கு இந்த பில்ட் அப்பா?... ஹ்ம்ம் என்று கலாய்த்தாள் பிரியா.

"அடியே… இன்னிக்கு என்ன கிழமை ? புதன் கிழமை…. அப்போ இந்த கிழமைக்கு கேன்டீன்ல காலை உணவு என்னனு தெரியுமா இல்லையா?...." என்று தர்ஷினி கேட்க பிரியா " அதை தெரிஞ்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்? நீயே சொல்லு… " என்று சொல்லவும் " போடி… இதெல்லாம் ஒரு பொது அறிவுடி... ( ஹ்கும்…. உன் பொது அறிவுல தீய வைக்க ) இன்னிக்கு என்னோட பாவோரிட் ரசமலாய்… வச்சிருக்க நாளு… சீக்கிரம் போன தான் கிடைக்கும் … இல்லனா தீர்ந்துரும்… அதுனால தான் அவசர படுறேன்…" என்று கூறினாள்.

" த்தூ! நாயே! இது மாறி என்னிக்காச்சும் பிராட்டிக்கல் கிளாஸ்க்கு கிளம்பிருக்கியா… உன்னால தான் எல்லா கிளாஸ்லயும் திட்டு வாங்க வேண்டி இருக்கு…" என்று தர்ஷினியை பிரியா கழுவி ஊத்தினாள்.

அதற்கு பதில் குடுக்க தர்ஷினி வாய் திறக்கும் போது கங்கா இருவரையும் சாப்பிட அழைத்தார்.
அங்கே மூர்த்தியும் சாப்பிட அமர்ந்திருப்பதைக் கண்டு தர்ஷினியும், பிரியாவும் " ஹாய் மாமா! எப்படி இருக்கீங்க …" என்று கோரசாக கேட்கவும் மூர்த்தி சிறு புன்னகையோடு "ஹ்ம்ம் …. நல்லாருக்கேன் மா… வாங்க வந்து சாப்பிடுங்க…" என அன்போடு அழைத்தார்.

இருவரும் வேணாம் என்று கூறும் முன் சஹி தனது அறையில் இருந்து வெளியே வந்து இவர்களுடன் ஒன்றாக அமர்ந்தாள். கங்கா, நால்வருக்கும் தட்டை எடுத்து வைத்து வெண் பொங்கல், தோசை, உளுந்த வடை வைத்து சாம்பார், சட்னி ஊற்றவும் எல்லாரும் அமைதியாக உண்டனர்.

"இன்னும் கொஞ்சம் வச்சிக்கங்கடா" என்று கங்கா அன்போடு சொல்ல, " அச்சச்சோ, மாமி! இன்னிக்கு மட்டும் வேண்டாம்… இன்னொரு நாள் இதுக்கும் சேர்த்து சாப்புடுறோம்" தர்ஷினி, சஹி மற்றும் பிரியாவையும் கூட்டு சேர்த்து கொண்டாள்.

சஹியும், பிரியாவும் தன்னுடைய அனுமதி இல்லாமல் தர்ஷினி வேண்டாம் என்று கூறவும் அவர்கள் இருவரும் தர்ஷினியைப் பார்த்து பல்லைக் கடித்தனர்.

கங்கா அவர்களை கேள்வியாகப் பார்க்கவும் சஹி, " மாம்! டுடே கேன்டீன்ல ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் இருக்கும்… அதை சாப்பிடுறதுக்காக அவள் வேண்டாம்ன்னு சொல்லிட்டாமா" என்று சமாதானம் பண்ண, மூர்த்தி சிறு சிரிப்புடன் சாப்பிட்டு முடித்து கைக் கழுவ போக கங்காவும் அவர் பின்னால் சென்றார்.

அவர் அந்த இடத்தை விட்டு போன நிமிடம் சஹியும் பிரியாவும் தர்ஷினியின் தலையில் நங்கென்று கொட்டி இருந்தனர். "ஆஆஆ… அம்மா" என்று தர்ஷினி அலற அவள் வாயைப் பொத்திய சஹி, "ஆஆஆ…. அம்மா இல்லடி ஆஆஆ...ஆடு "என்று தானே டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க… அதுவே தப்பா சொல்ற… எனக் கூறிக் கொண்டே இன்னும் ரெண்டு கொட்டு தந்தாள். தர்ஷினி தலையைத் தடவிக் கொண்டே இருவரையும் துரத்த ஆரம்பித்தாள்.

மூர்த்தி கைக் கழுவி விட்டு வரவும் கங்காவும் அவர் பின் வந்தார். கங்காவிடமும் சஹியின் தோழிகளிடமும் விடைபெற்று கிளம்பும் போது ஹாலின் உள்ளே விஷானின் பெற்றோர்கள் வந்து கொண்டிருந்தனர்.

மூர்த்தி குடும்ப தலைவராக அவர்களை வரவேற்க கங்காவும் அவருடன் சேர்ந்து வரவேற்றார். "வாங்க அண்ணா, வாங்க அண்ணி... " என வரவேற்று அவர்களை அங்கிருந்த ஷோபாவில் உட்கார சொல்லி அவர்களுடன் மூர்த்தியும் எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

கங்கா, " இதோ வரேன்..." என்று கூறி விட்டு சமையலறை சென்று காபி போட்டு கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்து மூர்த்தி அருகில் அமர்ந்தார். அதே சமயம் சஹி தன் நட்புகளுடன் அங்கே வர அங்கு அமர்ந்து இருந்த விஷானின் அப்பா கிருஷ்ணன், அம்மா லதா ஆகியோரைப் பார்த்து சிரித்துக் கொண்டே தோழிகள் வரவேற்றனர்.
அவர்களும் தோழிகள் மூவரையும் பார்த்து சிரித்து விட்டு தான் வந்த வேலையை பற்றி கூறத் தொடங்கினர்.

"ஹ்ம்ம் சொல்லுங்க கிருஷ்ணன்… என்ன விஷயம்?... " மூர்த்தி கேட்க கிருஷ்ணன் " உங்களுக்கே தெரியும் நாங்க புதுசா வீடு கட்டிட்டு இருக்கறது…அதுக்கு இப்போ கிரகப்பிரவேசம் வச்சிருக்கோம். வர வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு… அன்னிக்கி நீங்க எல்லாம் வந்து கலந்துகிட்டு சிறப்பிக்கணும்…. என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் லதா ஒரு தாம்பூலத்தில் பழங்கள், வெத்தலை,பாக்கு, 2001 ரூபாய் நோட்டு, அதன் மேல் பத்திரிகை வைத்து மூர்த்தி மற்றும் கங்காவிடம் நீட்டினார்கள்.

மூர்த்தியும் கங்காவும் சேர்ந்து புன் சிரிப்போடு பத்திரிகை வாங்கிக் கொண்டு " இது நம்ம வீட்டு விசேஷம்…கண்டிப்பா நாங்க இல்லாமையா? ஜமாய்ச்சுடலாம்" என்று பதில் கூற கிருஷ்ணன் மற்றும் லதா மகிழ்ச்சியுடன் விடைப் பெற்றனர்.

சஹியிடமும் மற்ற இருவரிடமும் அருகே வந்த லதா " உங்களுக்கு கண்டிப்பா விஷான் சொல்லிருப்பான்… கண்டிப்பா வந்துருங்கடா எல்லாருமே... "என்று கூற "கண்டிப்பா மாமி!நாங்க வந்து எப்புடி சிறப்பிக்கிறோம்ன்னு பாருங்க"என்று தர்ஷினி கண்ணடித்து கூற லதாவும் " வாலு... "என்று செல்லமாக அவளது தலையில் கொட்டி பின் அவளிடம் "இப்போல்லாம் விஷான் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிருறான்… நீங்க இன்னும் கிளம்பலையா?"என்று வினவ " இல்ல.. மாமி! இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க"என சஹி சமாளித்து இருந்தாள்.

"இப்பல்லாம் இந்த விஷான் சீக்கிரமா காலேஜ் போறான்... ஆனால் இன்னும் நீங்க கிளம்பாமல் நின்னுட்டு இருக்கீங்க..." என லதா வினவ சஹி "என்ன மாமி? சொல்றீங்க... எதனால் அவ்வளவு சீக்கிரம் காலேஜ் கிளம்பி போறாராம்? "என பதிலுக்கு கேட்டாள். "அது காலேஜ்ல ஏதோ காம்ப்படிஷன் நடக்க போகுதாம் ... அதுல இவன் கலந்துகொண்டு இருக்குறதால தான் அவ்ளோ சீக்கிரம் போறான்... சரி நான் வரேன்..." என நிலைமை தெரியாமல் பேசி விட்டு தன் கணவனுடன் புறப்பட்டார்.

"என்னடி சொல்லிவிட்டு போறாங்க? காம்ப்படிஷன்ல இந்த விஷான் பக்கி கலந்துக்க போறானா? நமக்கு தெரியாமல் நம்ம காலேஜ்ல காம்ப்படிஷனா? " என பிரியா கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு தர்ஷினி " தெரியலையே... அவன் ரெண்டு நாள் நம்ம கூட சேர்ந்து வராமல் இருக்கவும் வீட்டில் உள்ள வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பான்னுல நினைச்சேன்... நமக்கே தெரியாமல் ஏதோ பொய் சொல்லி மாமியை ஏமாத்திருக்குடி... என பொங்கினாள்.

இருவரும் பேசுவதைக் கேட்ட சஹியோ ஏதோ சிந்தனையில் இருக்க "என்னடி? நாங்கள் இவ்ளோ பேசுறோம்...நீ என்ன யோசித்துட்டு இருக்க? "என தர்ஷினி கேட்க சஹி " அது ஒன்றுமில்லைடி... எல்.கே.ஜி.ல இருந்து ஒன்றுவிடாமல் நம்மக்கிட்ட எல்லா விஷயங்களையும் சொன்ன விஷூக்குட்டி... இப்ப மட்டும் நம்மக்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சு செய்யறானா ? அது என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்குடி..." என ஆர்வமாக சொல்லிவிட்டு அவர்கள் முகம் பார்த்தாள்.

"ஹ்க்கும்.... அதுக்கு என்ன சஹி, உன் ஆசையை நிறைவேற்ற வேண்டியது எங்க பொறுப்பு" என பேசிக் கொண்டே மூவரும் பஸ் நிறுத்தம் வந்திருந்தனர்.அவர்கள் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் ஏறி அவர்களின் கல்லூரி நுழைவாயிலை அடைந்த வேளையில் விஷானும் எதிர் பட்டான்.

ஆனால் இவர்களை கண்டு கொள்ளாமல் போகவும் தர்ஷினி " இந்த பக்கிக்கு உள்ள கொழுப்பை பாரேன்... நம்மளை கண்டுக்காத மாதிரி போறான்...."

சஹி, " நிஜமாகவே நம்மளை பார்க்கல போல... கிளாஸ் முடிஞ்சதும் என்ன ஆச்சுன்னு அவன்ட்ட கேட்கலாம்... இப்போ கிளாஸ்க்கு போகலாம்" என்று அவர்களை கூட்டிக் கொண்டு சென்றாள்.

கிளாஸ் தொடங்க ஐந்து நிமிடம் இருக்கையில் விஷான் இவர்கள் பக்கம் திரும்பாமல் கிளாஸை கவனிக்க... தர்ஷினி " என்னடி பெரிய இவன் மாதிரி பில்டப் பண்றான்... நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டுறான்... " என்று புலம்ப அவளின் இடது புறத்தில் அமர்ந்து இருந்த பிரியா "மச்சி! அவன் இப்போ எங்கேயிருந்து வந்தான்.. தெரியுமா? " என்று பீடிகை போட தர்ஷினியோ " ஏன் ரெஸ்ட் ரூம்ல இருந்து வந்தானா?" என நக்கலாக கேட்க அவள் தலையில் சஹி கொட்டினாள்.

"முதலில் பிரியா என்ன சொல்ல வருகிறான்னு கேளுடி..." எனக் கூறவும் தர்ஷினி "சரி... சொல்லும்...சொல்லித் தொலையும்.."
என்று வடிவேல் பாணியில் கூற பிரியா அவளை முறைத்து விட்டு "அவன் சீனியர்கள் கிளாஸ் பக்கம் இருந்து வந்தான்டி..." என சொல்ல சளியும் தர்ஷினியும் "என்னது?" என ஒரு சேரக் கூவினார்கள்.

சஹி, " மச்சி! ஒரு வேளை இவன் சீனியர் பொண்ண ஏதும் லவ் பண்றானோ? " என சந்தேகமாக கேட்க அதற்கு தர்ஷினி " உன் சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியும்டி... ஆனால் அதற்கு நீ கிளாஸ் முடியும் வரை வெயிட் பண்ணணும்..." என சொல்ல பின் மூவரும் கிளாஸை கவனிக்க ஆரம்பித்தனர்.

மாலை கல்லூரி முடிந்து தோழிகள் மூவரும் பேருந்து நிலையம் வந்த போது விஷான் அவர்களின் முன் பேருந்திற்காக நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் சஹி, இருவரிடமும் கண்ணைக் காட்ட அவர்களும் நாங்களும் அவனைப் பார்த்து விட்டோம் என்று கண் மூடித் திறந்தனர்.

அதே நேரம் விஷான் உறையூர் பேருந்தில் ஏறி அமர தோழியர் மூவரும் அவனுக்கு பின்னால் ஏறிக் கொண்டனர்.

"என்னடி? இவன் இந்த பஸ்சில் ஏறி இருக்கான்... " என சஹி வினவவும் தர்ஷினி " விஷயம் மட்டும் என்னன்னு தெரியட்டும்... இந்த பக்கியை கொன்னுட்டு தான் மறுவேலை..." எனப் பல்லைக் கடித்துக் கொண்டு கூற பிரியா " டென்ஷன் ஆகாதே...மச்சி !" என அவள் முதுகை தடவி விட்டாள்...

சஹியோ இருவரிடமும் " நம்மளை டிடெக்டிவ் ரேஞ்சுக்கு அலைய விடுறான்ல... இவனுக்கு கும்பிபாகம் மாதிரி ஏதாவது ஒரு தண்டனை நாம கொடுத்தே ஆகணும்... " என கடுப்பாக கூற அதை மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

விஷான் பஸ்ஸை விட்டு இறங்கும் முன் மூவரும் அவனுக்கு முன்னே இறங்கி இருந்தனர்.


பஸ்ஸை விட்டு தோழிகள் மூவரும் இறங்கிய நேரம் அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் மறைவாக நின்றுக் கொண்டனர். " எதுக்கு சஹி.. இங்கே நிற்கிறோம்?.. அவன் முன்னாடி போய் நின்று நாலு கேள்வி கேட்பன்னு பார்த்தா? இப்படி மறைஞ்சு நிக்க சொல்ற? "என தர்ஷினி ஆதங்கமாக கேட்டு கொண்டிருக்கும் போது விஷான் அவர்களைக் கடந்து சென்றான்.

"ஸ்ஸ்ஸ்... சும்மா இருடி தர்ஷூ! அப்படி யாரை இவன் பாலோவ் பண்றான்னு தெரிஞ்சிட்டு அவன் நம்மளை கண்டுக்காததுக்கு வச்சி செய்றோம்" என சொல்ல அதை மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

இவர்கள் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில் விஷான் ஒரு வளைவில் திரும்பி சென்றுக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு முன்னால் ஒரு பெண் நடந்து சென்றதைப் பார்த்து விட்டு சஹி, " மச்சி! அந்த பொண்ணு யாருன்னு தெரியுதா?" என்று கேட்க தர்ஷினியோ " இந்த உருவத்தை நம்ம காலேஜ்ல பார்த்துருக்கேன்... அப்படி யாரை பார்த்து இந்த பக்கி மயங்கியிருக்கும்?..." எனக் கேள்வியுடன் சஹியை பார்க்க அவள் பார்வை போகும் திசையில் இவளும் பார்த்து " அங்கே என்னடி பார்க்கிறாய்?... " என கேட்க சஹியோ " அங்கே பாருடி... நம்ம விஷூ.. யார்கிட்ட பேசுறான்னு... என்று பதில் சொல்லிக் கொண்டே அவள் முகத்தை திருப்பி அந்த காட்சியை காட்ட தர்ஷினியும் பிரியாவும் அதைப் பார்த்து அதிர்ந்தார்கள்...

அங்கே அவர்கள் கண்டது... அவர்களின் சீனியர் நிஷாவை தான். அவளிடம் தான் விஷான் மறித்து பேசிக் கொண்டிருந்தான்.

"இவன் ஏன்டி நிஷாகிட்ட பேசிக்கிட்டு இருக்கான்.. ஒரு வேளை நிஷாவோட ஏரியா பொண்ணை ஏதும் சைட் அடிக்கிறானா? "- சஹி.

தர்ஷினி, " ஹே! அதுக்கு ஏன் இவன் நிஷாகிட்ட பேசப் போறான்?..."

சஹி, " ஏதும் உதவி செய்ய சொல்லி கேட்பானோ? " என சந்தேகத்தோடு கேட்க அங்கே விஷானோ, நிஷாவிடம் தன் காதலை கவிதையாக சொல்லிக் கொண்டிருந்தான்.

"ஹே இங்க அவங்க ரெண்டு பேரும் பேசுறது ஒன்னும் கேட்கலடி… அங்க ஒரு மரம் இருக்கு பாருங்க… அங்க நின்னு கேட்கலாம்… வாங்க" என சஹி அழைக்க "சரிடி… போலாம்… போய் அந்த பக்கி எப்புடி பெர்போர்மன்ஸ் கொடுக்குதுன்னு பார்த்துட்டு அதை அப்படியே காப்பி பண்ணி நாளைக்கு அவன்கிட்ட பேஸ்ட் பண்ணி கலாய்ச்சி விட்டுறேன் பாரு…" தர்ஷினி சொல்ல மூவரும் விஷானை நோக்கி சென்றனர்.

இவர்கள் மூவரும் அரவம் ஏதுமின்றி விஷான் அருகில் இருந்த மரத்தடியில் சென்று நிற்க விஷானோ, கவிதை என்ற பெயரில் கடைசி வரியாக நிஷாவிடம்,

" அன்பே நிஷா! என் காதலுக்கு நீ
ஓகே சொன்னால் இருவருக்கும்
சேர்ந்து எடுப்பேன் விசா! "

எனச் சொல்லிகொண்டு இருந்தது தோழியர் காதில் விழ, சஹி மற்ற இருவரைப் பார்க்க அவர்களும் குபீர் என்று சிரித்திருந்தனர். உடனே வாயை மூடுமாறு ஒரு விரல் வைத்து சொல்லி விட்டு அங்கே நடப்பதை கவனிக்கலாயினர்.

விஷான், " இங்க பாரு… நிஷா! யெஸ்.. ஐ லவ் யு சோ மச்… ப்ளீஸ் அக்ஸப்ட் மை ப்ரொபோசல்" என நிஷாவின் கையில் தான் கைப்பட எழுதி வைத்திருந்த லெட்டரை குடுக்க முயல நிஷாவோ, " டேய்… நீ எனக்கு ஜூனியர் டா..நீ நல்ல பிரண்டா எனக்கு லைப் லாங் இருக்கலாம்… அதோட இதுல எனக்கு விருப்பமில்லை.. நான் வேற ஒருத்தரை விரும்புறேன்…" என முடித்துக் கொண்டாள்.

"அப்படியெல்லாம் சொல்லாத நிஷா… உன்னை பார்த்த நிமிஷம் எனக்கு உன்னை பிடிக்க ஆரம்பிச்சிருச்சு… நீ பேசும் போதும் சிரிக்கும் போதும் நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆனேன்... நான் லைப் லாங் உன் கூட உன் லைப்பா வரணும்னு ஆசைப் படுறேன்.."

இதைக் கேட்டு கொண்டிருந்த சஹி "ச்ச.. என்னமா பீல் பண்ணி லவ் சொல்றாண்டி… ஆனா இந்த நிஷா ஓவரா பிகு பண்ணுது…" என விஷானுக்கு சப்போர்ட்டாக சொல்ல அவளை கண்ணால் எரித்த தர்ஷினி, " என்னடி அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க… போயும் போயும் இந்த பிசாசுட்ட லவ் சொல்லாம வேற பொண்ணுகிட்ட லவ் சொல்லிருந்தா கூட நானே போய் சேர்த்து வச்சிருப்பேன்… நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணாதே"... எனப் பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்.

"மச்சி! நீ தப்பா நினைச்சிட்ட என்னை…. அப்படியே நிஷா , இவனுக்கு ஓகே சொல்லிருந்தா ரெண்டு பேரையும் இந்நேரம் பிரிச்சி விட்டுருப்போம்டி… டோன்ட் பீல்…! என சொல்ல தர்ஷினியும், பிரியாவும் அவளுக்கு ஹை-பை கொடுத்துக் கொண்டனர்.

அதே நேரம் நிஷாவிடம் தன் காதலை சொல்லிவிட்டு விஷான் நிமிர்ந்த நேரம் அவன் முன்னே நிஷாவின் தந்தை நின்றிருக்க, நிஷா பதட்டதோடு பார்க்க என்ன?..ஏது? என்று உணரும் முன்னே விஷானை கன்னத்தில் அறைந்து இருந்தார்.

"யார் சார் நீங்க? இப்படி ஒரு வயசுபையனை அறையிறிங்க?" என்று எகிறவும் "எது? நான் யாரா? நீ லெட்டர் கொடுத்தியே அவளோட அப்பாடா நான்…" என்று பதிலுக்கு எகிறினார்.

விஷானுக்கு விழுந்த அறையில் தோழியர் அதிர்ந்த நிலையில் நிற்க முதலில் சஹி அதிலிருந்து மீண்டு மற்ற இருவரையும் உலுக்க தர்ஷினி, " என்னடி இது ட்விஸ்ட்?... இவனை நாம பரோட்டா போடலாம்ன்னு நினைச்சா யாரோ ஒருத்தர் கொத்து பரோட்டா போட்டுட்டு இருக்காரு…" என சொல்லும் போதே அடுத்து விஷான் சொன்ன வார்த்தையில் அனைவரும் அதிர்ந்து நின்றனர். நிஷாவின் தந்தை உட்பட….

******************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் கதையை வாசிக்கிற ஒவ்வொரு சகோவுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். கதையை படிச்சுட்டு ஏதாச்சும் குறைகளை, அல்லது நிறைகளை சொன்னால் என்னை திருத்திக்குவேன். உங்க லைக், அண்ட் கமெண்ட்ஸ் தான் எங்களை மாறி writerku பூஸ்ட். நன்றி🙏🙏🙏
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -10


அடுத்த நாள் காலையில் கல்லூரி செல்வதற்கு சஹி ரெடியாகி கொண்டிருக்க தர்ஷினி மற்றும் பிரியா சஹியின் வீட்டில் நுழைந்த நொடி விஷானும் அவர்களுடன் நுழைந்தான். அவனை இருவரும் கண்டுக்காமல் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டு இருந்தனர்.
விஷானை அவர்கள் கண்டுக்காத போதும் விஷான் வலியக்க சென்று பேச்சுக் கொடுத்தான்.

"ஹாய்! இரண்டு பேரும் மொபைலில் என்ன பார்த்துட்டு இருக்கீங்க?" என்று கேள்வி கேட்க அதற்குள் அங்கே வந்த சாஹித்யா, " என்னடி இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டிங்க? ஏதும் சீக்கிரமா எழுந்துட்டீகளா?" என கேள்வியுடன் அவர்களை பார்க்க விஷானோ, " ஹே! சஹி.. நானும் தான் இங்கே நிற்கிறேன்...என்னையெல்லாம் உன் கண் நோக்காதா?" என வான்டடாக சஹியிடம் கேள்வி கேட்டான்.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சஹி, "ஹே! இது யாருடி?... தர்ஷூ! உங்கள் சொந்தக்காரரா? இவர் எதுக்கு இங்கே வந்துருக்கார்?"

"என்னடி சஹி, நக்கலா? உனக்கே இவரு யாருன்னு தெரியாதப்போ எனக்கு எப்படி தெரியும்? ஏதாச்சும் டொனேஷன் கேட்டு வந்துருக்க போறாரு..." என்று தர்ஷினி ஏகத்துக்கும் கடுப்போடு நக்கலாக பதிலளிக்க அவளின் பேச்சைக் கேட்டு சஹி மற்றும் பிரியாவுக்கு சிரிப்பு பீறிட்டு வர விஷானுக்கோ அவள் பேச்சு உசுப்பேத்தியது.

அவன் உக்கிரத்துடன் மூவரையும் பார்த்து "ஹேய் என்ன கிண்டலா? என்னை யாருன்னு தெரியாத மாதிரி இன்செல்ட் பண்ணிட்டு இருக்கீங்க... என்ன கொழுப்பா?" என்று எகிற தொடங்கினான்.

ஏற்கனவே தோழியர் மூவரும் பேசி வைத்தது போல இன்றைக்கு விஷான் தங்களிடம் நிஷாவின் விஷயத்தை மறைத்ததற்கு அவனை வைத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அதன் படியே அவன் எது பேசினாலும் கண்டுக்காமல் அவனை வெறுப்பேற்றும் விதமாக தர்ஷினி, சஹி, பிரியா மட்டும் பேசிக் கொண்டு இருந்தனர்.

'என்ன.. இதுங்க நம்மளை கண்டுக்க கூட மாட்டுதுங்க... ஒரு வேளை நிஷா விஷயம் எதுவும் தெரிஞ்சிருக்குமோ? ...' என ஒரு மனம் நினைக்க இன்னொரு மனமோ 'ச்சே... ச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இதுங்களுக்கு டிடெக்டிவ் மூளை கிடையாது ' (க்கும்... நீ அப்படியே துப்பறியும் சாம்பு தான்..த்தூ..) என்று நினைத்துக் கொண்டான்.

அவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட தோழியர் மூவரும் (பின்னே எப்போ எப்படி இவன் ரியாக்ஷன் கொடுப்பான் எந்த ஆங்கிளில் இவன் யோசிப்பான்னு எல்லாம் அத்துப்படி) அவனை ஒரு வழியாக்க முடிவு செய்தனர். அதன்படி தர்ஷினி முதலில் ஆரம்பித்தாள்.

" மச்சி! இந்த பாட்டு உங்களுக்கு தெரியுமா?"

"எந்த பாட்டுன்னு பாடிக்காட்டு மச்சி" - சஹி.

"நலம் தானா... நலம் தானா...
உடலும் உள்ளமும் நலம்தானா..."

என்று தர்ஷினி பாட விஷானோ 'இப்போ எதுக்கு இவ இந்த பாட்டு பாடி கடுப்பேத்துறாள்' என மனதுக்குள் நினைக்க அதற்குள் சஹி அடுத்த பாட்டை பாட ஆரம்பித்திருந்தாள்.

"கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா...."

என்று பாட அதைக் கேட்டு பிரியா "என்ன மச்சி! யாரை கும்முறாங்கன்னு இந்த பாட்டை பாடற? "

சஹி, ஓரக் கண்ணால் விஷானைப் பார்த்து விட்டு "அச்சோ... உனக்கு விஷயம் தெரியாதாடி? நேற்று உறையூர் பஸ் ஸ்டாண்டில சிகப்பு சட்டை போட்டு நம்ம விஷானு அடி வாங்கினதை தான் இப்படி சிம்பலிக்கா பாடிக் காட்டிட்டு இருக்கேன்" என்று விஷயத்தை போட்டுடைக்க அதைக் கேட்டு விஷான் ஓட எத்தனிக்க மூவரும் அவனை வளைத்து ஷோபாவில் அமர வைத்தனர்.

தர்ஷினி அவன் தலை நிமிராமல் இருக்கவும் மீண்டும் அவனை வெறுப்பேற்றும் விதமாக...

"எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்.....
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார்....
பாவை என் பதம் காண நாணமா?"

எனப் பாட சஹியும் , பிரியாவும் அவளுக்கு ஹை-பை கொடுத்தனர்.
அவர்களின் அழிச்சாட்டியம் கண்டு விஷான் கடுப்பாக " அடச்சீ! கொஞ்சம் அடங்குங்க? இப்போ எதுக்கு என்னை இப்படி வெறுப்பத்துறீங்க?"..... என்று கத்தினான்.

அவனை முறைத்தவாறே சஹி , "இப்படி எல்லாம் தாங்கள் எங்களிடம் பேசலாமா? நேற்று தாங்கள் வீறு கொண்டு சிங்கம் போல் நிஷாவிடம் சென்றதென்ன? பின் அவளின் தந்தையிடம் அசிங்கப்பட்டு நின்றதென்ன?" என செந்தமிழில் நக்கலாக பேசினாள்.

விஷானோ மனதுக்குள் 'ராட்சசிங்க!. பாலோவ் பண்ணி வந்து அங்கு நடந்ததைப் பார்த்துட்டு இப்போ ஓவரா கலாய்க்குதுங்க...' என்று நினைத்துக் கொண்டான்.

"ஏண்டா விஷூக்குட்டி!" என சஹி அழைக்க "என்ன?" என்று விஷான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டான்.

"அது எப்படிடா? நிஷா அப்பா உன்னை அந்த அடி அடிச்சுட்டு அப்புறம் சாரி கேட்டார்"- சஹி.

விஷான் பதில் சொல்வதற்குள் தர்ஷினி " விடுடி... சஹி! அதுக்கு இந்த நாய் ஏதும் தில்லாலங்கடி பண்ணிருக்கும்...." என்று நக்கலடிக்கவும் விஷான் அவளைப் பார்த்து " சோ ஃபன்னி யு ஆர்?" என்று அந்த ஃபன்னியில் அழுத்தம் கொடுத்து உச்சரித்தான்.

அதைக் கவனித்த சஹி , "அவள் ஒன்றும் பன்னி இல்லை.... நேத்து நிஷா அப்பா அடிச்சதுல நீதான் பன்னி மாதிரி உருண்டு விழுந்த" என கடுப்பாக கூற தர்ஷினி, " விடு... சஹி! யாரு சொன்னது நம்ம விஷூக்குட்டி...தானே? சொல்லட்டும்.. சொல்லிட்டுப் போகட்டும்..." என ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து கூறினாள்.

'இவள் அவ்வளவு நல்லவயில்லையே!' என விஷான் அவளை யோசனையாகப் பார்க்க தர்ஷினி அவன் எண்ணத்தை மெய்ப்பிக்கும் விதமாக "ஆனால் அதற்கு முன்னாடி நிஷா அப்பாக்கிட்ட இவன் அடி வாங்கிட்டு அப்படியே எஸ்கேப் ஆக நீங்க எனக்கு சித்தப்பா மாதிரின்னு சொன்னதை சொல்ல சொல்லு..." என்று கேட்டாள்.

விஷான் மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மனதுக்குள் ' ச்சை.. பிசாசுங்க.. ஒன்னு விடாம பார்த்துருக்குங்க… ஐயோ இப்போ நிஷா அப்பாகிட்ட எப்படி எஸ் ஆகினேன்னு சொன்னால் காறி துப்புங்க… அதை துடைச்சு விட்டுட்டு என்ன சொன்னாலும் சமாளிப்போம்' என்று அங்கே நடந்ததைச் சொல்லத் தொடங்கினான்.

விஷானிடம் வந்த நிஷாவின் அப்பா "ஏண்டா! பொம்பள புள்ளையை பெத்து பொத்தி பொத்தி வளர்த்து அதுக்கு நாலு விஷயம் தெரிஞ்சக்க நான் அவளை காலேஜ்க்கு அனுப்புனா நீங்க அவங்களுக்கு படிக்க உதவி செய்யலனாலும் பரவாயில்ல… இப்புடி அவ பின்னாடி தொடர்ந்து வந்து காதலிக்க சொல்லி எல்லாரும் பார்க்கிற மாறி அவ வீட்டு முன்னாடி நிக்கறியே… உன்னையெல்லாம் .. என்று பல்லைக் கடித்துக்கொண்டு இரு கன்னத்திலும் அறைந்தார்.

விஷானோ அவரிடம் அடிவாங்கி கொண்டிருந்த போது நிஷாவின் கையில் அவன் கொடுத்த லெட்டர் பறந்து நிஷா அப்பாவின் காலடியில் விழ அதை எடுத்து வாசித்த அவர் அந்த கடிதத்தை படித்துவிட்டு "ரொம்ப சாரிப்பா… நீ என் பொண்ணுக்கு தம்பின்னு தெரியாம என் பொண்ணுகிட்ட லவ் சொல்றன்னு நினைச்சி அடிச்சிட்டேன்…. இனிமேல் நீ கடிதத்துல எழுதின மாறி நிஷாவுக்கு நீ பாதுகாப்பா, அவளோட நிழலாவே இரு… " என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

விஷான் கதையை சொல்லி முடிப்பதற்குள் தர்ஷினி " அடேய்! நிறுத்துடா... எனக்கு ஒரு சந்தேகம்... எனக் கூறவும் , சஹியும் ...., " ஆமா.. மச்சி! எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கு" என்று கூறவும் விஷானோ மனதுக்குள் ' அய்யோ! கதையை முடிக்க விடாமல் சும்மா நொய்யி.. நொய்யினு கடுப்பத்துறாள்களே! ' என்று புலம்பினான்.

சஹி ,அவனைக் கேலியாக பார்த்துக் கொண்டே "ஆமா.. உன்னையை நிஷாவோட தம்பியா எப்படிடா அவர் சொன்னாரு? நீ லவ் லெட்டர் தானே நிஷாவுக்கு கொடுத்துருப்ப? அதைப் பார்த்துட்டுமா உன்னை விட்டுட்டாரு? அப்படி என்னத்தை எழுதுன? " என்று கேள்வி மேல் கேள்வி கேட்க தர்ஷினி " சபாஷ்... சஹி! சரியான கேள்வி" என்று மெச்சினாள்.

விஷானோ பல்லைக் கடித்து கொண்டு "ஹ்க்கும்.. அப்படியே இவங்க கேள்வியின் நாயகி ... அப்படியே கேள்வி எல்லாம் அவ வாயில அருவியாக் கொட்டுது... அதை இந்தம்மா அப்படியே சுருதி ஏத்தி விட்டு ஜால்ரா போடுது..."என்று கடுப்பான குரலில் கூறினான்.
அவனை கடுப்பாக்கியதில் தோழியர் மூவரும் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்தனர்.

"சரி..சரி.. நீ நிஷாவுக்கு எழுதுன கவிதைப் பத்தி சொல்லுவியா? மாட்டியா? "- சஹி.

விஷான், " சரி.. சொல்றேன்.. " என்று அவன் எழுதிய கவிதையைக் கூறத் தொடங்கினான். அந்த கவிதை பின்வருமாறு...

"அன்பே!... நிஷா....
உன் காலடியில் முத்தமிட்டு
தவழும் கடலலைகள் போல...
கனவில் உன்னை தழுவுகிறேன்...
எப்போதும் கண்ணின் மணிப்போல்
உன்னை பாதுகாக்க
நிழலாய் உன்னை தொடர்வேன்...
மலரினில் இருக்கும் மகரந்தமே
நீ எனக்கு...
அதைத் தேடி வரும் தும்பியே
நான் உனக்கு...
என்னை உன் உறவாக
ஏற்றுக் கொள்ளடி பெண்ணே!

இவ்வாறு அவன் கூறி முடிக்க தர்ஷினி, பிரியா இருவரும் கைத்தட்டிப் பாராட்டினர். சஹி, ஏதும் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க ஏதேச்சையாக அவளைப் பார்த்த பிரியா, "என்னடி?" என்றுக் கேட்க "கவிதை நல்லா தான் இருந்துச்சு... ஆனால் இதைப்பார்த்து நிஷா அப்பா எப்படி இவனை தம்பின்னு சொன்னாரு? "

அதற்கு பதிலை எதிர்பார்த்து மூவரும் விஷானை பார்க்க "அது.. அது... நான் எழுதும் போது தும்பின்னு எழுதுறதுக்கு பதிலாக தம்பின்னு எழுதிட்டேன்" என்று சொல்லிவிட்டு அசடு வழிந்தான். தர்ஷினி அவனை கலாய்க்க ஆரம்பிக்கும் முன் கங்காவும்,
மூர்த்தியும் அங்கு வந்தனர்.

கங்கா ," வாடா ...விஷூ! உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சே.. ரொம்ப பிஸி போல..."

விஷான் " ஆமா அத்தை... கொஞ்சம் ஸ்பெஷல் ஒர்க் இருந்துச்சு... " என்று சொல்லி விட்டு தர்ஷினியைப் பார்க்க அவளோ " ஆமா... ஸ்பெசலா தர்ம அடி வாங்கிட்டு பிசாசுக்கு பேச்சைப் பாரு..." என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தாள்.

மூர்த்தி, " என்ன விஷான்? வீட்டிலே பங்ஷனை வச்சிட்டு அப்படி என்ன ஸ்பெஷல் ஒர்க்? "

'அய்யோ! எல்லாரும் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டா நான் என்ன செய்வேன்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே சஹியைப் பார்க்க அவனை காப்பாற்றும் விதமாக சஹி " அவனை விடுங்கப்பா... நீங்கள் இரண்டு பேரும் எங்கே கிளம்பிட்டு இருக்கீங்க?" என்று கேட்க மூர்த்தி, "விஷான் வீட்டுக்கு தான் டா... அங்கே அம்மாவை விட்டுட்டு நான் கம்பெனிக்கு கிளம்பிருவேன்.." என்று பதிலளித்தார்.

" என்ன மாமி! எங்கள் வீட்டுக்கு திடீர் விஜயம்?" - விஷான் .

"அடேய்! உங்கள் வீட்டுல விஷேசத்தை வச்சிட்டு நாங்கள் ஏதும் பண்ணாமல் இருக்க முடியாது... அது தான் எல்லாரும் சேர்ந்து ஹோமத்துக்கு தேவையான பொருட்கள், அப்பறம் எல்லாருக்கும் டிரஸ் எல்லாம் எடுக்க வேண்டும்னு உங்கள் அம்மா சொன்னாங்க... நீங்கள் நாலு பேரும் சாயங்காலம் டிரஸ் எடுக்க வந்துருங்க... நாங்கள் கிளம்பறோம்..." என்று சொல்லிக் கொண்டே கங்கா மற்றும் மூர்த்தி விடைப் பெற்றனர்.

"சரிம்மா.."என்று சஹி கூறிவிட்டு கல்லூரியில் இருந்து ஷாப்பிங் செல்ல பிளான் பண்ணி விட்டு நால்வரும் கல்லூரிக்கு கிளம்பினர்.

****************************************

தென்காசியில் இதே நேரம் நாச்சியார் உணவு மேசையில் அமர்ந்திருக்க பார்வதியும், வானதியும் டைனிங் டேபிளில் காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். நாச்சியார் ஏதோ நினைவில் தனக்குள்ளே உழண்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு வானதி, தன் அம்மாவிடம் கண் ஜாடையில் காட்ட பார்வதி,
" என்னங்க.. மாமி? ரொம்ப நேரம் ஒரே யோசனையிலேயே இருக்கீங்க?" எனக் கேட்டார்.

நாச்சியார் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் வானதி அவரை வம்பிழுக்கும் விதமாக " என்ன நாச்சி? நீங்க ஓவரா திங்க் பண்ணறதை பார்த்தா தென்னை மரத்தில் தேங்காயை ஆளில்லாமல் பறிப்பது எப்படின்னு ஒரு புக் எழுத டிரை பண்றீங்கப் போல..." என்று நக்கலாக சிரித்தாள்.

அவளின் நக்கலை புரிந்து நாச்சியாருக்கு சிரிப்பு வந்தாலும் அவளை வெறுப்பேற்றும் விதமாக
" நான் யோசிக்கிறது எல்லாம் என் பெர்ரி பற்றி மட்டும் தான்... பிள்ளை சரியா தூங்குறானோ? இல்லையோ? நேரத்துக்கு சாப்பிடுறானோ? ... இதுமாதிரி தான் என் யோசனை இருக்கும்னு உனக்கு தெரியாதா? பார்வதி... என் சிந்தனை, சொல், செயல், எல்லாம் அவனே இருப்பான்... என்று சொல்லி விட்டு ஓரக்கண்ணால் வானதியை பார்க்க அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பார்வதியோ மனதுக்குள் ' காலையிலேயே இரண்டு பேருக்கிட்டையும் மாட்டிட்டேனே!' எனப் புலம்பினார்.

நாச்சியார், "சரி.. இன்னிக்கு என்ன காலை சாப்பாடு? "

"மாமி... உங்களுக்கு பிடித்த சோள பணியாரம், தக்காளி சட்னி, அப்பறம் இட்லி, சாம்பார் தான் பண்ணிருக்கேன்... என்று சொல்லி விட்டு தட்டில் சூடாக இட்லியை வைத்து இருவருக்கும் பரிமாற நாச்சியார் இன்னொரு தட்டில் இட்லியை வைத்து பார்வதியிடம் கொடுக்க.. அதைக் கலங்கிய கண்களுடன் வாங்கிக் கொண்டார். பின் நாச்சியாரிடம் " அன்றைக்கு இருந்து இன்றைக்கு வர நீங்க மாறவில்லை மாமி... நீங்கள் தான் என்னோட பலமே.." என்று உணர்ச்சி வசப்பட நாச்சியாரும் அந்த நாளை நினைத்து தன் மருமகளின் கையில் தட்டிக் கொடுத்தார்.

வானதி, "அடடடடா… என்ன ஒரு ஒற்றுமை… உங்களை இப்படி பார்க்கும் போது என் கண்ணே பட்டுடும் போல இருக்குதே " என்று கூறினாள்.

" ஏட்டி! என்னோட மருமகள் மேல நான் பாசத்தைக் காட்டாமல் வேறு யாரு காட்டுவா? உனக்கு எதுக்குடி அதுல பொறாமை?" என்று நாச்சியார் கேட்க...

வானதியோ, "ஹ்க்கும்... பொறையும் கிடையாது ஆமையும் கிடையாது.. மருமகள் மேலயும் பேரன் மேலயும் காட்டுற பாசத்தைப் பேத்தி மேலயும் காட்டுறது?..... இதெல்லாம் சரியில்ல கிழவி…" என்று பொங்கினாள்.

பார்வதியோ " ஹே.. வானுக்குட்டி, அப்பத்தாவை இப்படி பேசலாமா?..." என கடிந்துக் கொள்ள... நாச்சியார், அதைப் பார்த்துவிட்டு வானதிக்கு பதிலளிக்கும் விதமாக "நீ சொல்றது சரிதான் வானுக்குட்டி… என்னோட பேத்தியை விட பேரன் மேல கூடுதலா பாசம் காட்டுறேன்… அது உண்மையும் கூட… ஏனென்றால் என் பெர்ரி அவன் அம்மாக்காக அவன் குடும்பத்தையே தியாகம் பண்ணிருக்கான்… என்று வேதனையோடு கூற, பார்வதியோ பீறிட்டு வரும் விம்மலை தனக்குள் விழுங்கி கொண்டிருப்பதைப் பார்த்து வானதி இருவரையும் ஒரு சேர கட்டிப்பிடித்து " அச்சச்சோ… அம்மா, ஆச்சி என்னை மன்னிச்சிருங்க.. நான் சும்மா விளையாட்டுக்கு சீண்டிட்டேன்… இனிமேல் இப்புடி பண்ணமாட்டேன்" என்று மூக்கை உறிஞ்சினாள்.

நாச்சியார், " அட… என் பேத்தி எப்பவும் இப்புடியே என்னை வம்பிழுத்துட்டு சந்தோசமா இருக்கனும்… ஆனால் என் பெர்ரி கூட போட்டி போட கூடாது" என்று அறிவுரை வழங்க,பேத்தி அதை ஏற்றுக் கொண்டாள்.

அந்த நேரம் வானதியின் மொபைல் சிணுங்க, அந்த பக்கம் அவளின் அண்ணன் செழியன் " ஹலோ! வானுக்குட்டி… எப்படி இருக்கடா? சாப்டியா? "என கேள்வி மேல் கேள்வி கேட்க வானுவோ " ஹ்ம்ம் எல்லாம் நலம்… சாப்பிட்டேன்.. உன் நாச்சிகிட்ட பேசிட்டு வா முதல்ல.. அப்பறம் நான் பேசறேன்" என்று கூற நாச்சியோ "பெர்ரி உங்க அம்மா முக்கிய விஷயம் பேச இருக்கா.. நான் அப்பறம் பேசறேன்… " என்று போனை பார்வதியிடம் தந்தார்.

" அம்மா…" என்று காந்தகுரலில் செழியன் அழைக்க .. பார்வதியோ " செழிப்பா… எப்படி இருக்க? நேரத்துக்கு சாப்பிடுறியா கண்ணா?" என அன்பொழுக கேட்க செழியனோ மனதுக்குள்
' இதையெல்லாம் தான் நான் மிஸ் பண்ணறேன்மா… ' என சொல்லிக்கொண்டு " நான் நல்லா இருக்கேன் மா.. நல்லா தான் சாப்பிடுறேன்.. " எனக் குரலை செருமிக் கொண்டான்.

தாய் அறியாத சூலா… மகனின் குரலில் வருத்தம் அடைந்தாலும் "செழிப்பா… போன வாரம் சொன்னது ஞாபகம் இருக்கா?... மறக்காம பெருமாளை சேவிச்சிட்டு வந்துருப்பா…" எனக் கெஞ்சலாக கேட்க… செழியனோ " அம்மா… என்னமா? எதுக்கு இப்புடி கெஞ்சறிங்க… நான் எவ்ளோ பிஸியா இருந்தாலும் கம்பெனிக்கு லீவு சொல்லிட்டு போய் பெருமாளை பார்த்துட்டு வரேன் " என்று சமாதான படுத்தி விட்டு போனை வைத்தான்.

பார்வதியோ " பெருமாளே! என் பிள்ளைக்கு நீயே துணைக்கு நின்னு அவனை வழி நடத்தனும்… அவனுக்கு எந்த வித காயமும், ஆபத்தும் வர கூடாது" என மனமுருகி வேண்டினார்.

ஆனால் பெருமாள் அவரின் வேண்டுதலை கேட்கவில்லையோ? ஆபத்தும் காயமும் சஹியின் வடிவில் இருப்பதை அறியவில்லை அவர்…..
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -11

திங்கள் கிழமை….. காலைப்பொழுது.

பேரை கேட்டாலே உலகமே அதிரும்… ஏனோ? திங்கள் என்றாலே அலுவலகம் செல்வோருக்கும், பள்ளி செல்வோருக்கும் ஒரு வித பரபரப்பு உண்டாகும்… இருக்காதா பின்னே? வெள்ளிக்கிழமையும் வேலை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அது நெல்லிக்காய் தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால் எவ்வளவு இனிப்பாக இருக்குமோ அதே மாதிரி... எவ்வளவு வேலை இருந்தாலும் அதற்கு பின் வரும் விடுமுறை நினைத்து மனம் ஊஞ்சலாடும்.‌‌ திங்களோ பாகற்காயை தின்றுவிட்டு தண்ணீர் அருந்த அருந்த எவ்வளவு கசப்பு தெரியுமோ? அது மாதிரி… வேலைப் பளு அதிகமிருக்கும் ஒருநாள்.. ஆனால் இல்லதரசிகளுக்கோ எரிச்சலுடன் கூடிய மன உளைச்சலை கொடுக்கும் ஒரு கிழமை. எல்லாருக்கும் திங்கள் கிழமை என்றாலே வேப்பங்காயை வெறும் வயிற்றில் தின்ன எபெக்ட்.( எனக்கு திங்கள் பிடிக்காது சகோஸ்…..)

அப்படி ஒரு பெருமைகளைக் கொண்ட திங்களைக் கண்டால் சஹியும் அவள் நட்புகளும் வெறுப்பாவார்கள். ஆனால் இன்றோ அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மிகுந்த ஆரவாரத்துடனும், ஆர்ப்பாட்டமாக விஷான், தர்ஷினி, பிரியா மூவரும் சஹியின் வீட்டிற்கு கிளம்பி வந்துகொண்டிருந்த போது அவர்களை வழியிலேயே சஹி பார்த்து விட்டு கைகளை ஆட்டி "ஹோய்" என கூவினாள்.

அவளை மூவரும் ஆச்சரியமாக பார்க்க தர்ஷினி, " என்னடி! நீ தனியா வந்துருக்க… மாமி எப்படி விட்டாங்க…. " என கேட்க சஹி சின்ன சிரிப்புடன் " அது வந்து வீட்ல நான் பண்ண அலப்பறையை பார்த்து மாம் என்னை கிளம்ப சொல்லிட்டாங்க" என பதிலுரைத்தாள்.

விஷானோ, " என்னது? நீ பண்ண அலப்பறையை கொஞ்சம் சொல்லு… அது அலப்பறை தானான்னு நான் சொல்றேன்" என கிண்டலுடன் கூறவும் பிரியாவோ, தர்ஷினியின் காதில் " ரைட்டு… இவன் வான்டடா சும்மா போறதை சொறிஞ்சு விட்டான்" என்று முணுமுணுக்க தர்ஷினியும் "விடுடி… நம்மளுக்கு காலையிலேயே நல்ல எண்டர்டெயின்மெண்ட் கிடைக்க போகுது... என்ஜாய் பண்ணு" என்று பதிலுக்கு முணுமுணுத்தாள்.

இவர்கள் இருவரும் பேசுவதை சஹி கவனித்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.ஆனால் விஷான் இதைக் கவனிக்காமல் விட்டு விட்டான்.சஹி தன் தோழிகளை பார்த்து கண்சிமிட்டி விட்டு "இதோ நான் பண்ண அலப்பறையை சொல்லி உன் நேரத்தை வீணாக்க விரும்பல… இந்தா இதைப் பார்த்து தெரிஞ்சுக்கோ…" என்று கூறிக் கொண்டே அவன் கையில் ஒரு பேப்பர் ரோலை திணித்தாள்.

அதில் விஷான் வீட்டு பங்ஷனுக்கு எங்கே எங்கே பர்சேஸ் பண்ணுவது? என்று லிஸ்ட் போட்டுக்கொண்டு வந்திருந்தாள். அந்த பேப்பர் ரோலை பார்த்த விஷானோ மயக்கம் போட்டு விழாதக் குறையாக " ஹே என்ன சஹி! இது…" என்று குரல் கம்ம கேட்க " ஹ்ம்ம்.. பார்த்தா தெரியல.. உன் வீட்டு பங்ஷனுக்கு நாங்கள் ஷாப்பிங் பண்ண வேண்டாமா?" என எதிர்கேள்வி கேட்க விஷானோ லிஸ்ட்டில் கடைசியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானான்…..

அவனின் ரியாக்ஷனைப் பார்த்த சஹி , " என்னடா…. விஷூக்குட்டி நான் பண்ண அலப்பறையை பார்த்திட்டு எங்கம்மா துரத்தி விட்டாங்கன்னு சொல்லும் போதே நீ அலர்ட் ஆகிருக்க வேண்டாமா? இப்போ பாரு.. கரண்ட்ல கையை வச்ச மாதிரி முடி எல்லாம் நட்டுக்கிட்டு இப்படி ஃபோஸ் குடுக்குற? " என்று நக்கலாக விஷானைப் பார்த்துக் கேட்க தர்ஷினியும் பிரியாவும் அவள் கொண்டு வந்த லிஸ்ட்டில் அவன் எதைப் படித்து அதிர்ச்சியானான் என்று தெரிந்து கொள்ள லிஸ்ட்டை வாசித்துக் கொண்டு வர சஹி அவர்களை குறும்பு மிளிரும் கண்களால் பார்த்து கொண்டிருந்தாள்.

கடைசியாக அதில் "பட்டாபட்டி" என்று எழுதியிருக்க அதைப் பார்த்து முகத்தை சுழித்த விஷான் " என்ன இது ? கடைசில இப்படி எழுதியிருக்க? லூசு… யாரு இந்த காலத்துல இதை யூஸ் பண்றாங்க… இதெல்லாம் ஒரு லிஸ்ட்டா "என்று சொல்லிக்கொண்டே அதைக் கிழித்து வீசினான்.

சஹி அவன் செய்கையை சிறுசிரிப்புடன் பார்த்து விட்டு "என்னடா? இப்படி பண்ணிட்ட… என சோகமா முகத்தை வைத்துக் கொண்டுக் கேட்கவும் பிரியாவும் தர்ஷினியும் அவளை ஆவலாகப் பார்க்க விஷான் அவளை சந்தேகமாக பார்த்தான்.

"நாங்கள் எல்லோரும் கிரக பிரவேசம் அப்போ கலக்கலா புடவை கட்டி வரும் போது நீயும் வேட்டி சட்டைல தானே இருப்ப... அதுதான் உன் மானத்தை காக்க பட்டாபட்டி வாங்க போறோம்" எனக் கூறிக் கொண்டே இத்துடன் பேச்சு முடிந்தது என்பதுபோல் கிளம்பினாள்…. அவளை மூவரும் பின்பற்றினர்.

*********************************************
அந்த அறையே அமைதியாக யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் அதைப் பொய்ப்பிக்கும் விதமாக அந்த அறையை கிழித்துக் கொண்டு " டேய்! அபி? எங்கடா இருக்க? ஒழுங்கா போனை அட்டெண்ட் பண்றீயா? இல்லையா? " என கதிர் சத்தம் போட்டான்.

மறுபுறமிருந்து எந்த சத்தமும் வராத காரணத்தால் திறந்திருந்த அறையை எட்டிப் பார்க்க முற்படும் போது அவன் முகத்தில் தலையணை மோதிய வேகத்தில் தடுமாறி பின் சமாளித்து கொண்டு கீழே விழுந்த தலையணையை எடுத்து கோபத்துடன் அவனை நோக்கி எறிந்தான்.

அதை லாவகமாக பிடித்த அபிஜித், " என்னடா? அப்பாவும் அம்மாவும் உன்னை செம்மையா கழுவி ஊத்துனாங்க போல…" சிரித்துக் கொண்டே கேலிக் குரலில் கேட்டான்.

கதிர், கோபத்துடன் பதில் சொல்வதற்குள் அவனது போன் சிணுங்கத் தொடங்கியது. அவன் அதை ஆன் செய்வதற்குள் கட்டாகி விட்டது.

" இங்கே பாரு… அபி, அம்மாவும் அப்பாவும் நீ அங்கே ஊருக்கு வரேன்னு சொல்லிட்டு வராமல் இருந்ததுக்கு என்னையை அந்த திட்டு திட்டுறாங்க… நீ அவங்களுக்கு கால் பண்ணு … ஏன்? ஊருக்கு வரலைன்னு சொல்லு… புரிஞ்சுக்குவாங்க" என்றவாறே வெளியேறினான்.

அதேசமயம் அபிஜித் கையிலிருந்த போனில் வீடியோ காலில் 'மாம்' என்று மின்னியது. அதை சிறு சிரிப்புடன் அட்டெண்ட் செய்தவன் " சொல்லுங்க மாம்… எப்படி இருக்கீங்க…" என்று ஏதும் நடவாத மாதிரி கேஷூவலாக பேச ஜீவிகாவோ மறுமுனையில் அமைதியாக இருந்தார்.

அவரின் அமைதி அபிஜித்தை ஏதோ செய்ய அவரை சமாதானம் செய்யும் பொருட்டு " ஜீவி! என் ஜீவனே! என்று அழைத்ததும் " பேசாத டா.. ஜித்தா! இப்படியெல்லாம் பேசி என்னை சமாதானப் படுத்திடலாம்ன்னு நினைக்காத போ… " என்று கோபம் கொண்டார்.

"என்ன மாம்! இப்படி கோபப்பட்டால் நான் என் நிலைமையை எப்படி சொல்றது? " என்று அலுத்துக் கொண்டே கேட்க " ஆமாடா… என்னால உன் நிலைமையை புரிஞ்சிக்க முடியாது… இதோ! இங்கே என் பக்கத்திலிருக்கிற உங்க டாடிக்கிட்ட சொல்லு. அவர் புரிஞ்சுப்பாரு" என்று கடுப்பான குரலில் கூறிவிட்டு போனை கபிலனிடம் கொடுத்து விட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

"ஹலோ ஜித்தா… " என்று கபிலன் சொன்ன நொடி எதிர்முனையில் இருந்த அபிஜித் " என்ன டாடி நீங்களும் என் மேல கோபமா இருக்கீங்களா" என்று கேட்க அதற்கு பதிலளித்த கபிலன் "அப்படியெல்லாம் இல்லடா எனக்கு என் பையன பத்தி நல்லாத் தெரியும்… அவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவான்… ஆனா இன்னிக்கு அவன் சொன்ன சொல்லை காப்பாற்ற அம்மா அப்பாவை பார்க்க கூட வீட்டுக்கு வர முடியாமல் இருந்து இருக்கான் அப்படின்னா அவனுக்கு ஏதோ ஒரு பிரச்சினை வந்து இருக்குன்னு அர்த்தம் என்று என்னால புரிஞ்சுக்க முடியும்" என்று நிதானமாக சொன்னார்.

அவரின் புரிந்துக்கொண்ட பாவனையில் தந்தையைப் பெருமையாக பார்க்க அவரும் ' நான் இருப்பேன் எப்போதும் உன்னுடன்' என்று சொல்லும் விதமாக கண்மூடி திறந்தார்.

'டாடி!' அன்னைக்கு நான் வர முடியாமல் போன காரணம் என்னவென்றால் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல அதைக் கேட்டு கபிலன் கொதித்தெழுந்தார்… அவன் சொன்னதை உள் அறையிலிருந்து ஜீவிகா கேட்டுவிட்டு பதறிப்போய் "டேய் ஜித்தா!... உனக்கு ஒன்னும் ஆகலையே…நீ யார்ன்னு தெரியாதப்பவே உன்னை அவன் கொல்ல பார்க்கிறான்… நீ அங்கே இருக்காதா ஜித்தா… இங்கே இருந்து உன் பிஸ்னஸ் எல்லாம் பாரு" என்று ஒரு தாயாக பதறினார்.

அவரின் கதறலைக் கண்ட கபிலன் " ஹேய் ஜீவி அவன் என் புள்ளைடி! அவன் தோற்றுப் போய் கோழையாக திரும்பி வரமாட்டான்… இனி ஒருதரம் இப்படி நீயே அவனை குறைச்சி எடைப் போடாதே…" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினார்.

அவரின் கூற்றில் ஜீவிகா, கலக்கத்தோடு அபிஜித்தை பார்க்க " மாம்! உங்களைப் பற்றி தெரியாதா எனக்கு… நீங்க இதை நினைச்சி கவலைப்படாதீங்க! கூடிய சீக்கிரம் அந்தாள் பண்ண ஒவ்வொரு தப்புக்கும் அவர் பெற்ற மகள் தான் அனுபவிப்பாள்… அனுபவிக்க வச்சே தீருவேன்" என்று வன்மமான குரலில் உரைத்தான்.

அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் கபிலனும் ஜீவிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள தன்நிலை அடைந்த அபிஜித்தோ சிறு சிரிப்புடன் " கவலைப்படாதீங்க.. அதற்கு முன்னாடி முடிக்க வேண்டிய வேலை இருக்கு… பை டாட் அண்ட் மாம்" என்று அவர்கள் பதில் சொல்வதற்குள் போனை கட் செய்து விட்டான்.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த கதிர் கண்டது அபிஜித்தின் தீவிரமான முகத்தை தான். கதிரை திரும்பி பார்த்த அபிஜித் " கண்டிப்பா இந்த வாரம் டெல்லி போறோம்… டிக்கெட் புக் பண்ணு…" என்று சொல்லி அவனை கிளப்பினான்.

'வரேன் மூர்த்தி.. பகையை முடிக்க உன் பொண்ணை தூக்க' என்று மனதில் நினைத்து கொண்டே ஒரு பாடலை ஹம் செய்துக் கொண்டே வெளியேறினான்.

*********************************************

செவ்வாய் கிழமை இரவு நேரம் 7.30 மணியளவில் விஷானின் வீட்டில் சுற்றமும் நட்புகளும் நாளைக் காலையில் நடக்கும் கிரக பிரவேசத்திற்கு எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு இருந்தனர். ஒரு பக்கம் பரப்பரப்பாகவும் ஒரு பக்கம் சொந்தங்கள் கூடியதால் மகிழ்ச்சியான பேச்சு வார்த்தையாகவும் விழாக்கால கோலாகலமாக இருந்தது.

சஹியும் அவள் நட்புகளும் ஒரு ஓரமாக அமர்ந்து தேவையான உதவி செய்துக் கொண்டிருந்தனர்.
எல்லா ஏற்பாடுகளையும் திட்டமிட்டு செய்திருந்ததால் அனைவரும் உணவருந்தி விட்டு சீக்கிரேமே தூங்க சென்றிருந்தனர்.

விடியற்காலை 4.30 மணியளவில் கங்கா, விஷானின் அம்மா என பெரியவர்கள் அனைவரும் எழுந்து பங்ஷனுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தனர். நல்லநேரம் ஆறுமணிக்கு தொடங்குவதால் அதற்கு முன் கூட்டியே எல்லாம் தயாராகி கொண்டிருந்தனர்.

அதேசமயம் சாஹித்யா, தர்ஷினி, பிரியா என மூவரூம் கிளம்பி விஷானிடம் செல்ல அவனும் கிளம்பி ரெடியாக இருந்தான்.

சஹியோ, "ஹாய்டா….. குட் மார்னிங்!... என்று சொல்ல விஷானோ கிளம்பி இருந்தாலும் தூக்ககலக்கத்தில் கொட்டாவியுடன் " குட்மார்னிங் ஆல்…" என்றான். அதைக்கண்டு தர்ஷினி " எப்படிடா? சீக்கிரமே எழுந்து ரெடியாகிட்ட?" எனவும் விஷானோ " எல்லாம் மயிலு சவுண்ட் சர்விஸ் உபயத்தால் தான்… ஒரே பாட்டுல ஓஹோன்னு வாழ்க்கையில முன்னேறுற மாதிரி ஒரே பாட்டுல ஊரையே எந்திரிக்க வைச்சிட்டாரு…" என்று சலித்து கொண்டே சொன்னான்.

அதற்கு சஹி, "ஹே... லூசு! இன்னைக்கு நம்ம வீட்டு பங்ஷன்.. நாமளே சீக்கிரம் எழுந்து ரெடியாக வேணாமா?" என்று சிரிப்புடன் கேட்கவும் அதற்கு பதில் சொல்வதற்குள் "அய்யர் வந்துவிட்டார்…. எல்லாரும் உள்ளே வாங்க!" என்று விஷானின் அம்மா அழைக்க நால்வரும் எழுந்து சென்றனர்.

'கணபதி ஹோமம்' புதுமனை புகுவிழா செய்யும் போது நடத்தப் படும் பூஜை. அய்யர் ஹோமத்தின் முன் அமர்ந்து மந்திரம் சொல்ல விஷானும், அவனின் அம்மாவும் அவருக்கு தேவையானதை எடுத்துக் கொடுக்க நல்லபடியாக மந்திரம் ஓதி பசுமாட்டினை வீட்டுக்குள் நுழைய வைத்து சில சம்பிரதாயங்கள் செய்தனர்.

பின் விஷானின் அம்மா பாலைக் காய்ச்ச அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பின் பங்ஷனுக்கு வந்திருந்த அனைவருக்கும் பாலைக் கொண்டுப் போய் சஹியும் தர்ஷினியும் கொடுக்க விஷான் பந்தியை கவனிக்க சென்றான்.

பங்ஷன் எல்லாம் நல்லபடியாக முடிய வீட்டினர் எல்லாம் உணவருந்த சென்ற வேளையில் திருஷ்டி சுற்றி போடுவதற்காக விஷானின் அம்மா பூசணிக்காயில் குங்குமம், சில்லறை காசுகள் என அதனுள் வைத்து அதைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அதே நேரம் தன் நட்புக்களுடன் செல்ஃபி எடுக்க சஹி மற்றும் அவளின் தோழிகளும் வெளியே வந்தனர்.

விஷானின் அம்மா பூசணிக்காயை வீட்டை சுற்றி இட வலமாக மூன்று முறை சுற்றி முச்சந்தியில் உடைத்து விட்டு வீட்டினுள் சென்று விட்டார்.

சஹியோ பூசணிக்காயை உடைத்த இடத்தில் நின்று தன் மொபைலை எடுக்க அவளுடன் பிரியா மட்டுமே நின்றிருந்தாள். தர்ஷினியும், விஷானும் சிறு வேலையாக உள்ளே சென்றிருந்தனர். சஹி, தன் மொபைலில் வீடியோ மோடை (mode) ஆன் செய்வதை பார்த்த பிரியாவோ " ஹேய்! என்னடி பண்ற?" எனக் கேட்டாள்.

அதற்கு சஹி, " எந்த ஒரு விஷயம் பண்ணாலும் அதை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைக்கறதுதான் இப்ப டிரெண்ட்டி… இக்கட சூடு… "என்று கூறிவிட்டு

"அதாண்டா இதாண்டா
இந்த பூசணிக்காயை
உடைச்சது நான் தான் டா…."

என்று பாடிக் கொண்டே வீடியோ எடுக்க பிரியாவோ " சஹி! உன் அலப்பறை தாங்கலடி….என்று சொல்லி கொண்டே அவள் தலையில் செல்லமாக கொட்டிய வேளையில் 'அம்மா….' என்ற அலறல் சத்தம் கேட்க இருவரும் திரும்பி பார்த்து அதிர்ந்தனர்.

ஏனெனில், அங்கே விழுந்து கிடந்தது இளஞ்செழியன் தான்….. நாச்சியார், பார்வதியின் அறிவுரையின் படி ஸ்ரீரங்கரை தரிசனம் செய்வதற்காக அந்த அதிகாலை வேளையில் தன்னுடைய பல்சரில் விஷாலின் வீட்டைக் கடக்க முற்படும் போது அங்கே சற்று முன் சுற்றி போட்ட பூசணிக்காயில் இருந்த வழுவழுப்பானது அவனை நிலைதடுமாறி விழ வைத்தது.

விழுந்த வேகத்தில் சற்று சுதாரித்ததால் கை, கால்களில் சிறு சிராய்ப்புடன் எழுந்துக் கொண்டான்.அவன் எழுந்த வேகத்தில் பிரியா பயந்துகொண்டு வீட்டினுள் ஓடிவிட்டாள்.

அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் சஹி சற்று பயத்துடன் நின்றிருந்தாலும் அவளை நோக்கி வந்தவனை கண்டு கண் அசையாமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

"ஹேய்! அறிவுக் கெட்டவளே….." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறவும் சஹிக்கு தலையில் கோபம் சுர்ரென்று ஏறியது. " டேய்…. " என இவளும் எகிற, அவளின் அழைப்பில் "என்னடி?..... என்னடி நீ செய்றதெல்லாம் செய்துட்டு என்னைய டேய்ன்னு வேற சொல்றீயா" எனக் கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.

அவளும் சண்டைப் போடும் மும்முரத்தில் அவனை நெருங்கியிருந்தாள். அதை அவள் உணராமலிருக்க அந்த நெருக்கத்தை அவன் உணர்ந்திருந்தான்…

அவளின் மேனி அவனின் மேனியுடன் பட்டும் படாமலும் தொட்டும் தொடமாலிருக்க அவன் அவளை திட்டுவதற்காக வாயை திறக்க முற்படும் போதே…. சஹி "ஏன்டா டேய்… நீ பைக்ல ஜாகிங் மாதிரி வந்துட்டு வழில பூசணிக்காயை உடைச்சு வச்சிருக்கிறத பார்க்காமல் பராக்கு பார்த்துவிட்டு வந்ததும் இல்லாமல் இதுல என்னை வேற திட்டுறீயா" என்று அவனை பேச விடாமல் திட்டிவிட்டு வீட்டினுள் ஓடி மறைந்தாள். பட படவென அவள் பேசிய பேச்சில் சில வார்த்தைகளை சிதற விட்டு ஓடவும் இவன் அவளை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் அவனது மொபைல் சிணுங்க எடுத்துப் பார்த்தால் 'நாச்சி காலிங்' என் மின்னியது.அவன் அதற்கு பதிலளிக்கும் முன் அந்த பக்கம் நாச்சியார் " பெர்ரி… பரிகாரம் காலையில ஏழு மணிக்கு பண்ணிர வேணுமாம்… நீ இப்போ பரிகாரம் பண்ணிட்டு தான் இருக்கியா" எனக் கேட்க " இல்லை நாச்சி… இனிமேல் தான் போய் செய்யணும்" என்று கூறி போனை அணைக்க அவனின் கைகளிலும் பாதத்திலும் இரத்த கறையை கண்டு அருகே இருந்த குழாயில் கழுவி சுத்தப்படுத்திவிட்டு கோயிலுக்கு சென்றான்.

அங்கே அய்யர் சொன்ன பரிகாரத்தை சரியாக செய்து நாச்சியாருக்கு செல்ஃபி ஒன்றை அனுப்பினான். சில மணி நேரங்களில் மட்டுமே சஹியை மறந்தாலும் அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்கு வெறியேற்றிருக்கவும் உடனே அவன் மூளை திட்டம் தீட்டியது.

அதன்படி அன்றிரவே அவன் சஹியின் வீட்டில் அவளின் ரூமில் திருட்டுத்தனமாக சுவர் ஏறி குதித்திருந்தான். அதேசமயம் அபிஜித்தும் மூர்த்தியை தன் வழிக்கு கொண்டு வர அவரின் ரூமில் மெதுவாக நுழைந்து குளோரோபார்ம் தடவிய கர்ச்சீப்பை எடுத்து அவரின் மூக்கில் வைத்து அவர் மயங்கிய தருணத்தில் அவரை கடத்தியிருந்தான்.

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 12

காலையில் கண்விழித்த மூர்த்திக்கு ஒரே தலைவலியாக இருக்கவும் இரவில் நடந்த சம்பவம் வேறு நினைவா? அல்லது கனவா? என்று யோசிக்க வைத்தது.மூர்த்தியோ குழப்பமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அறையின் உள்ளே நுழைந்த கங்காவோ, "என்னங்க? ரொம்ப வொர்க் டென்சனா?" என்றுக் கேட்டுக் கொண்டே கையில் வைத்திருந்த காஃபி கப்பை நீட்டினார்.

கேள்வியாக தன் மனையாளை பார்த்த மூர்த்தியோ, " ஏன்?" என்று புருவம் சுருக்கிக் கேட்க " இல்லை… நேத்து பனிரெண்டு மணி ஆகியும் நீங்க தூங்க வரல. அதுதான் நீங்க ஆபீஸ் ரூம்ல இருப்பீங்க… தூங்க சொல்லலாம்னு வந்தேன்… ஆனால் அங்கே நீங்களில்லை. அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு வந்துப் பார்த்தால் ஹாலில் படுத்துருந்தீங்க…" என்று நிறுத்தி விட்டு மூர்த்தியை பார்க்க அவரோ " ஏதோ.. ரொம்ப டயர்ட்ல இருந்திருப்பேன்… இதெல்லாம் ஒரு சந்தேகமா வந்து கேட்டுட்டிருக்க " என்று சுள்ளென்று விழவும் கங்கா மனதுக்குள் ' இந்த மனுசனுக்கு என்னாச்சு? எப்போதும் இப்படி இருந்ததில்லையே' என்று நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியேறினார்.

மூர்த்தியோ நேற்று இரவு நடந்த நிகழ்வை நினைவுக்கு கொண்டு வர முயன்றும் ஒன்னும் நினைவில்லாமல் இருக்க… அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மறந்துவிட எண்ணி தன் கம்பெனிக்கு கிளம்ப ஆயத்தமானார்.

மூர்த்திக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் ஏதும் நினைவின்றியிருக்க அதை நடத்தியவனுக்கு நினைவில்லாமல் இருக்குமோ?

அந்த அதிகாலை வேளையில் தன்னை சுற்றிலும் ஏகாந்த மணம் வீற்றிருக்க அதன் நடுவே தன் துயில் களைந்து சிறு சிரிப்புடன் எழுந்தமர்ந்தான் அபிஜித்….. நேற்றிரவு நடந்ததை எண்ணி அவன் மனம் மிகுந்த மகிழ்ச்சியில் நிறைத்தது. 'இருக்காதா பின்னே? எத்தனை நாள் கனவு அது? சிங்கத்தை அதன் குகையிலே சந்தித்திட்டு வருவதென்றால் சும்மாவா? '

தன் பக்கத்தில் இருந்த மொபைலை எடுத்து மூர்த்திக்கு கால் செய்தான்.ரிங் போய்க் கொண்டே இருக்க சிறிது நேரம் கழித்து போனை அட்டெண்ட் செய்த அடுத்த நொடி " ஹாய் டார்லிங்! குட் மார்னிங்..‌. நேற்று நடந்தது ஞாபகம் இருக்கா" என்று எடுத்த எடுப்பிலேயே அபிஜித் கேட்க அந்த பக்கம் கேட்ட குரலில் இனிமையாக அதிர்ந்தான். ஏனெனில் அந்தக்குரல் சாஹித்யாவின் குரல்.

" ஹலோ! சார்… டாடி கீழே இருக்காரு… ஒரு ஃபைவ் மினிட்ஸ் கழிச்சு பேசுறீங்களா? நான் போய் டாடிக்கிட்ட கொடுக்கறேன்…." என்று போனை கட் செய்துவிட்டு தந்தையை நோக்கி சென்றாள்.

அதேசமயம் காதில் வைத்திருந்த போனை எடுக்கும் உத்தேசமின்றி அபிஜித், சற்று முன் கேட்ட குரலில் அவனின் மனதோ ' ஆஹா! இன்னிக்கு அருமையான நாளாக இருக்கும் போலேயே…என் ஆளுக்கிட்ட முதல் தடவை போன் பேசும் போதே டார்லிங்னு சொல்ல வைக்குதே… இந்த விதி?' என்று சந்தோஷப் பட்டான்.

அவ்வாறு அவன் சந்தோஷப் பட்டிருந்த நொடி மூர்த்தியிடம் இருந்து கால் வந்தது.

" ஹலோ! மகேஸ்வர மூர்த்தி ஹியர்….."

"ஹாய் மூர்த்தி!.... திஸ் இஸ் அபிஜித் ஹியர்…. குட் மார்னிங்…"

" ஹே...யூ… பிளடி… ஹவ் டேய் யூ?" என்று மூர்த்தி ஏகத்துக்கும் எகிற அவரின் கத்தலை சட்டை செய்யாமல் தன் அழுத்தமான குரலில் " ரிமெம்பர் வாட் ஹாப்பன்ட் லாஸ்ட் நைட்? " என்று நக்கல் பொதிந்த குரலில் கேட்டான்.

மூர்த்தி கடுமையான குரலில் " டேய் நீ யார் வீட்டினுள்ளே தைரியமா நுழைஞ்சிருக்க தெரியுமா? "

" ஹான்… என்ன மிஸ்டர்.மகேஸ்வர மூர்த்தி… நேற்று உங்க கண்முன்னாடி உங்க வீட்டுக்கு வந்து இரண்டு மணிநேரம் உங்களையே கடத்திப் போய்ருக்கேன்… இன்னுமா உங்களுக்கு சந்தேகம்?... ஹ்ம்ம்… " என்று அவருக்கு பதில் கொடுக்கும் விதத்தில் நக்கலாக உரைத்தான்.

" இன்னிக்கு தெரியும் மிஸ்டர் அபிஜித்… நீங்க பண்ண காரியத்தோட விளைவு " என்று மூர்த்தி எச்சரிக்கவும், அபிஜித்தோ " வெல்… மிஸ்டர்.மூர்த்தி! இப்ப தானே என் ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கேன்…. போக போக பார்ப்பீங்க… என்று சவால் விட்டு " தென்…. நீங்க லஞ்ச் என் கூட தான் இன்னிக்கு சாப்பிட போறீங்க…எந்த ஹோட்டல், எத்தனை மணிக்கு என்று நான் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்… பை… என்று போனை வைக்கப் போகும் முன் மூர்த்தி இடையிட்டார்.

" என்னடா! நினைச்சிட்டு இருக்க… நீ லஞ்ச்க்கு கூப்பிட்டா உடனே நான் வந்து அட்டென்ட் பண்ணுமா?" என்று எகிற தொடங்க " அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மிஸ்டர்… ஏனெனில் நீங்க எனக்கு பண்ணது தெளிவா எவிடென்ஸ் இருக்கு… சோ.. நீங்க வந்தே ஆகணும்… சம்ஜே?...." என்று போனை வைத்து விட்டான்.

'எவிடென்ஸ்… எப்படி இவன் கிட்ட மாட்டியிருக்கும்…' என்று யோசித்து கொண்டிருக்கும் போதே கங்கா அறையினுள் நுழைந்தார்.

"என்னங்க… ஜீவா வந்துருக்கான்…. உங்களிடம் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்… கீழே ரொம்ப நேரம் வெயிட் பண்றான்… சீக்கிரம் வாங்க…" என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்து இறங்கினார்.

தன் அறையை விட்டு வெளியே வந்த மூர்த்தி " வாடா ஜீவா… என்ன முக்கியமான விஷயம்… நான் ஆபிஸ் வரும்போது சொல்லக் கூடாதா?" என கேள்வி கேட்க ஜீவாவோ, " இல்லை சித்தப்பா…இது ரொம்ப முக்கியமான விஷயம்… அந்த அபிஜித்துக்கு அவனை நாம் ஆக்சிடென்ட் பண்ண எவிடென்ஸ் கிடைச்சிருக்கு…. ஆனால் எப்படி கிடைச்சதுன்னு தெரியவில்லை…" என்று தயக்கத்துடன் கூற அவன் தோளில் தட்டிய மூர்த்தி " விடு...அவனை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்… நீ அமைதியாக இரு… " என்று கூறி விட்டு ஆபிஸ் கிளம்பி சென்றனர்.
*********************************************
தன் அறையில் மிகுந்த மகிழ்ச்சியோடு பாட்டு பாடிக் கொண்டே தன் உடலில் மெலிதாக வாசனை வீசும் பர்பெரி பிராண்ட் பெர்ஃப்யூமை அடித்து விட்டு ஒரு தடவை முகத்தை கண்ணாடியில் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டிருக்கும் வேளை இளஞ்செழியனின் போன் அடித்தது.

'வானுக்குட்டி' என்ற எழுத்துக்கள் மின்ன அவனது முகம் இன்னும் மகிழ்ச்சியாக விரிந்தது. காலை அட்டென்ட் செய்து " ஹாய்… வானுக்குட்டி… என்ன அதிசயம், சீக்கிரம் எழுந்துட்ட? " என்று வினவினான்.

ஆனால் அந்த பக்கம் சிறிதும் தூக்கம் கலையாத குரலில் " ஹ்ம்ம்… எல்லாம் உன் நாச்சி பண்ற வேலை … தூக்கம் என்னைவிட்டு போச்சு…" என்று சலித்து கொண்டே "இருண்ணா! ஆச்சியும், அம்மாவும் உன்கிட்ட ஒன்னு கேட்கணுமாம்… அவங்க கிட்ட பேசு முதல்ல… " என்று போனை லௌட் ஸ்பீக்கரில் போட்டு அதை நாச்சியார் கையில் கொடுத்துவிட்டு தனது தூக்கத்தை தொடர்ந்தாள்.

அவளை செல்லமாக அடித்துவிட்டு அவளது அறையை விட்டு நாச்சியாரும், பார்வதியும் வெளியே வந்தனர்.

அவர்கள் வெளியே வரும்போதே இருவரின் முக மாற்றத்தையும் கண்டுவிட்டு இளஞ்செழியன், " ஹ்ம்ம்.. என்னாச்சு? இரண்டு பேரோட முகமும் ஒரு மாதிரியா இருக்கு… " என்று அவர்கள் முகத்தை கூர்ந்து நோக்கியவாறே கேட்டான்.

இருவரும் ஒரே நேரத்தில் கோரசாக " அதெல்லாம் ஒன்னுமில்லையே… " என்றனர். அவன் புருவம் மெலிதாக உயர்த்தி " சொல்லு நாச்சி…" என்று குரலில் அழுத்தம் கொடுத்து வினவவும் " "இல்லை பெர்ரி… உங்க அம்மா விடியக்காலையிலேயே உனக்கு அடிபடுற மாதிரி கனவு கண்டாளாம்…. அதான் நீ நல்லா தானே இருக்க? உனக்கு ஏதும் ஆகலை தானே! என்று இருவரின் தயக்கத்திற்கான காரணத்தை வெளிப்படையாக கூறவும் செழியனோ ' ஓ மை காட்! பிள்ளைக்கு ஏதாச்சும் ஆபத்துனா உடனே தாய்க்கு அது தெரியுங்கறது…' என்று மெய் சிலிர்த்தான்.

" என்ன பெர்ரி… அமைதியா இருக்க? "- நாச்சி.

"அம்மா எங்கே இருக்காங்க நாச்சி? அவங்க கிட்ட போனை கொடு…" என்று செழியன் பாசம் பொங்கும் குரலில் கூற " பார்வதி உன் குரலை கேட்டு அழுதுட்டுருக்கா… என்னன்னு நீயே கேளு.." என்று பார்வதியிடம் போனை கொடுத்து விட்டு ஓரமாக போடப்பட்டிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

" செழிப்பா!" என்று தன் ஒட்டு மொத்த பாசத்தையும் குரலில் தேக்கி செழியனை அழைக்க அவனோ அந்த அன்பில் கட்டுண்டு " என்னம்மா? எதுக்கு இந்த அழுகை… நீங்க நினைக்கிற அளவு ஒன்னுமில்லை… மனசைப் போட்டு குழப்பீக்காதிங்க" என்று அமைதியான குரலில் சொல்ல " சரிப்பா… ஒருதடவை வீடியோ கால்ல வாயேன்… முழுசா உன்னை பார்த்தா தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்" என்று திடீரென்று கூறவும் அவன் மனமோ ' அச்சச்சோ! நேற்று விழுந்த வேகத்தில் கை, கால் எல்லாம் பஞ்சராச்சே!... இப்ப எப்படி முகத்தை காட்டுவேன்' என்று அதிர்ந்தான்.

" அம்மா! என்னம்மா... நான் இப்ப வேலைக்கு கிளம்பிட்டிருக்கேன்… நான் இந்த வாரம் ஒருநாள் வந்து உங்க எல்லோரையும் பார்க்க வரேன்… அதுவரை எனக்காக காத்திருக்கவும்…." என சிறப்பு செய்திகள் வாசிக்கும் குரலில் கூற அதைக் கேட்ட பார்வதி சிரிப்புடன் "போடா...போக்கிரி.. எதையாவது சொல்லி சமாதானப் படுத்திடலாம்ன்னு பார்க்கற" என்று ஆதங்கத்துடன் கேட்கவும் " அம்மா! நிஜமா வந்து நிற்கப் போறேன்… அப்படியே ஷாக்காகி போகப்போறீங்க…"என்று பதிலுரைக்கவும் "வந்து நிக்கறப்ப பார்க்கலாம்….பத்திரமா இரு… பை" எனவும் இவனும் " பை" சொல்லிவிட்டு போனை வைத்தான்.

'ஸ்ஸ்ஸப்பா…. என்ன பண்ண போறே செழியா? இங்கே இருந்து அங்கே போறதும் அங்கே இருந்து இங்கே வரதும் முடியல…. இரண்டு வீடு இரண்டு இடத்தில இருந்து பார்த்தால் தான் என் கஷ்டம் என்னன்னு புரியும்? எவ்வளவோ சமாளிக்க வேண்டியிருக்கு' என்று கட்டிலில் ரிலாக்ஸாக தனக்கு தானே பேசிவிட்டு ஏதேச்சையாக கட்டிலில் இருப்பதை பார்த்தான். அதிலிருந்தது சஹியின் பதின்பருவ புகைப்படம். அதை சிறு சிரிப்புடன் பார்த்தவன் " வரேன் டி செல்லம்… இந்த மாமன் உன்னைப் பார்க்க " என்று சொல்லி கொண்டே அவளை பார்க்க அவள் கல்லூரிக்கு கிளம்பி விட்டான்.

அவன் சாஹித்யா படிக்கும் கல்லூரியில் கால் வைக்கும் நேரம் சஹியோ, தன் நண்பர்களுடன் கேண்டீனில் இருந்து வெளியே வந்துக் கொண்டிருந்தாள்.

அவளை கண்டவுடன் நேற்று நடந்ததை நினைத்து உடல் சூடேற அவன் மனதிலோ ' எப்ப நான் இவளைப் பார்த்தாலும் கேண்டீன் இல்லைனா ரெஸ்டாரெண்ட் உள்ளே இருந்தே வரா… ம்ம்!' என்று பெருமூச்சு விட்டான். 'இப்ப நான் இவக்கிட்ட தனியா பேசணுமே... என்ன பண்ணலாம் என்று யோசிக்க டக்கென்று ஐடியா ஒன்று மனதில் தோன்ற அதை செயல்படுத்த எண்ணிணான்.

சஹியும், அவள் நட்புகளும் இருக்கும் இடத்திற்கு செல்ல இவன் தன்னை நோக்கி வருவதை கண்ட சஹி முறைத்து பார்த்து விட்டு எச்சில் விழுங்கினாள்.

அவள் விழுங்கிய அழகில் இவன் அவளை பார்வையால் மென்று விழுங்க அவளோ 'ச்சீ..பொருக்கிபையன்' என்று உதடசைக்க அவனின் இதழின் கடையோரம் சிரிப்படக்கி கொண்டு அவளின் எதிரே போய் நின்றான்.

அவன் எதிரே வந்து நிற்பதை பார்த்த தர்ஷினி " ஹாய் அண்ணா! இன்னிக்கு என்ன பஞ்சாயத்து?" என்று சஹியை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு வினவ செழியனும் " இந்த நம்பர் உங்களில் யாருடையது?' என்று கேட்டான்.

"என்ன? எங்க நம்பர் எப்படி உங்ககிட்ட இருக்கும்" என்று கேட்டவாறே அவன் தங்கள் முன் நீட்டிய மொபைலில் சஹியின் நம்பர் இருக்க அனைவரும் அதிர்ந்துப் போய் நின்றனர்.

செழியனோ மனதுக்குள் ' இதுக்கே ஷாக்கானா எப்படி? இனிமேல் தான் சீனே ஆரம்பம்' என்று கூறிவிட்டு அவர்களை நோக்கி ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க சஹியோ அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்து கொண்டு "என் நம்பர் தான்…. ஏன்? " என்று மிடுக்கான குரலில் கேட்டாள்.

"ஓஹோ! அப்ப இந்த மெசேஜீம் நீ தான் அப்ப அனுப்பினியா?"என்று செழியன் கேட்க " ஹ்ம்ம் எந்த மெசேஜ்? நான் ஒன்றும் உங்களுக்கு மெசேஜ் அனுப்பலை...‌ அப்பறம் கண்டவனோட நம்பரையும் நான் வச்சிக்க வேண்டிய அவசியம் இல்லை…" என்று கடுப்பான குரலில் கூறினாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது என கூறும் விதமாக மணியடிக்கவும் சஹி, தன் கூட இருந்த தர்ஷினி, பிரியா, மற்றும் விஷானை வகுப்புக்கு போகுமாறும் சிறிது நேரம் கழித்து தான் வருவதாகவும் கூறினாள்.

மூவரும் அவளின் கூற்றில் தயங்கி நிற்கவும் " இவன் அப்படியே என்னை கடிச்சு தின்னுற மாட்டான்… நீங்க போங்க" என்று சொல்லி அனுப்பி விட்டாள்.

"ஓஹோ! எதுவும் பண்ண மாட்டேனா… நன்றி டி செல்லக் குட்டி…. என் மேல நீ வச்ச நம்பிக்கைக்கு…."என்று நக்கல் குரலில் கூறவும் " இப்ப என்னடா… வேணும் உனக்கு?..." என்று இவள் எகிறிக் கொண்டு கேட்க " என்ன கேட்டாலும் கிடைக்குமா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி சிரிப்புடன் இவன் கேட்கவும் " ஹ்ம்ம்… அதுக்கு வேற ஆளை பாரு…" என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

" அப்போ எதுக்குடி… இப்படி எனக்கு மெசேஜ் பண்ண? " என்று கோபமான முகத்துடன் எகிறவும் சஹியும்" என்னடா மெசேஜ் பண்ணேன்? காட்டுப் பார்க்கலாம்… என்று இவளும் கடுப்பான குரலில் கத்தினாள்.

"ஸ்ஸ்… கத்தாதேடி… நீ அனுப்புன மெசேஜை சத்தமா என் காதுக்கு மட்டும் கேட்குற மாதிரி வாசிக்கிற… என்ன வாசிக்க தெரியும் தானே உனக்கு?" என்று கண்ணடித்துக் கேட்க… சஹியோ மனதுக்குள் ' இருடா… சத்தமா உன் காது பஞ்சர் ஆகுற மாதிரி வாசிக்கிறேன்' என்று நினைத்து கொண்டே " அனுப்பின மெசேஜை காட்டுங்க‌…" என்று பவ்யமாக கூறவும் அவளின் நடவடிக்கைகள் எல்லாம் செழியனுக்கு அத்துப்படியாயிற்றே… ஆதலால் அவள் கண்முன்னே வாட்ஸ்அப் மெசேஜை எடுத்துக் காட்ட அவளும் யோசிக்காமல் சத்தமாக கூறிவிட்டாள்.

அப்படி யோசிக்காமல் வாசித்த வார்த்தை என்னவோ?

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 13

சத்தமாக கூறிய பின்னால் தான் சாஹித்யாவுக்கு தான் சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. அவள் தடுமாற்றத்துடன் செழியனின் முகம் பார்க்க அவனும் அவளுக்கு பதிலளித்தான். சஹியின் நினைவு பத்து நிமிடத்துக்கு முன் நடந்ததை நினைத்து பார்த்தது.

தன் முன்னால் நீட்டப்பட்ட மொபைலில் சஹி வாட்ஸ் அப்பில் அனுப்பியதாக இருந்த வார்த்தை ' ரியலி லவ் யூ டா மாமா' என்று தான்.

செழியன் சொன்னதற்கு எதிராக சொல்லப் போய் தற்போது அவன் முன்னால் காதலை சொல்ல வைத்த வி(ச)தியை நொந்து கொண்டு அவனை பார்க்க அவனோ இதழில் தோன்றிய முன் சிரிப்புடன் ஒற்றை புருவம் உயர்த்தி ' மீ டு ஐ லவ் யூ டார்லிங்' என்று அவள் சொன்னதற்கு பதிலாக சொல்லவும் அவனின் கூற்றில் அதிர்ந்தாள்.

" இங்கே பாருங்க… மிஸ்டர்…. நீங்க வாசிக்க சொன்னதை தான் வாசிச்சேன்.மற்றபடி உங்களுக்கு ஐ லவ் யூ… சொன்னதா நினைக்க வேண்டாம்…" என்று வேகமாக சொல்லிவிட்டு தனது வகுப்பை நோக்கி சென்றாள்.

போகும் வழியில் அவள் மனதினுள் ' இவன் நம்பர் நம்மக்கிட்ட எப்படி வந்துருக்கும்….. அதும் நம்ம நம்பர்ல இருந்து கரெக்டா எப்படி மெசேஜ் போயிருக்கும்… யார் பண்ண வேலை இது?' என்று புலம்பிக் கொண்டே வகுப்புக்குள் நுழைந்தாள். அவள் முகத்தை பார்த்த அவளின் நட்புகள் ' நடந்தது என்ன... பிறகு கேட்டுக் கொள்ளலாம் ' என்று அவர்களுக்குள் கண் ஜாடையில் பேசிக்கொண்டனர்.

அதேநேரம் செழியன், நேற்றைய இரவில் நடந்ததை நினைத்து பார்த்தான்.

நேற்றைய இரவில் சாஹித்யாவின் வீட்டிற்கு சென்ற செழியன், அங்கிருந்த செக்யூரிட்டிகள் தன் காவல் காக்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு செக்யூரிட்டி மட்டும் புகைபிடிக்க சற்று தூரம் சென்றதைப் பார்த்து விட்டு மேலிருந்து கீழ் வரை சென்ற பம்பின் வழியே அதன் அருகில் இருந்த அறையில் சற்றென்று குதித்து விட்டான்.

அங்கு அவன் குதித்த பின் நிமிர்ந்து பார்த்தால் அறையின் நடுவே ஆறுபேர் படுக்கும் அளவிற்கு பிரமாண்டமான தேக்கு மரத்தில் செய்யப்பட்ட கட்டிலில் சாஹித்யா, கையில் ஒரு தலையணையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உறங்கும் அழகில் ' தூங்கும் அழகி' கதை ஞாபகம் வந்தது.

தன் எண்ணம் போகும் திசையை கடினப்பட்டு திருப்பி, அவள் அருகில் சென்றான். அவளின் வலதுபுறம் கட்டிலின் ஓரத்தில் அவளது மொபைல் கிடைக்க அதை சிறு சிரிப்புடன் எடுத்துப் பார்த்தவன் அவளின் மொபைலில் பேட்டன் (Pattern) லாக் எடுத்துவிட்டு ( நாதாரி தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணுவான்) அவளின் வாட்ஸ்அப்பை ஓபன் செய்து தனக்கு தானே அவன் நம்பருக்கு சஹியின் நம்பரிலிருந்து 'ஐ லவ் யூ மாமா' என்று மெசேஜ் அனுப்பி விட்டு மொபைலை எடுத்த இடத்தில் வைத்து விட்டு அவளின் அருகில் அமர்ந்து சிறிது நேரம் அவளை பார்த்து கொண்டிருந்தான்.( இந்த இடத்தில் நாகார்ஜூனா ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பில்லை)

நேரம் போவது தெரியாமல் இவன் அமர்ந்திருக்க சஹி தூக்கக் கலக்கத்தோடு திரும்பி படுக்க இவனோ மெதுவாக ' இனிமேல் நம்ம வாழ்க்கையில திருப்பம் தான்டி… அதுக்கு முன்னாடி நாளைக்கு நீ தர ரியாக்ஷன் பார்த்துட்டு தான் அடுத்த கட்டத்துக்கு போகணும்… பைடி செல்லம்' என்று அவள் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தமிட்டு செக்யூரிட்டி கண்களில் படாதவாறு சென்று விட்டான். இப்போது அதை நினைத்து பார்த்து கொண்டே அவனது வேலையை பார்க்க சென்றான்.

அந்த இரவில் அபிஜித்தும், இளஞ்செழியனும் சந்தித்து இருந்திருப்பார்களோ? யார் கண்டது?

அபிஜித்தின் கம்பெனி….

தனது ரோல்ஸ்ராய்ஸ் காரிலிருந்து இறங்கி தன் பி.ஏ மற்றும் கார்ட்ஸ் பின் தொடர அபிஜித் தன் வழக்கமான கம்பீர நடையுடனும், கண்களில் கூர் வீசிடும் வாளாய் சுற்றுப் புறத்தை நொடியில் கூர்ந்து கவனித்து கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாம் தளத்தில் தனது அலுவலக அறை நோக்கி சென்றான்.

அவன் உள் நுழைந்ததும் அவனின் பி.ஏ.விடம் சிறிது நேரம் " கொஞ்ச நேரம் யாரையும் நான் கூப்பிடுற வரை உள்ளே விடாதீங்க… ஓகே? " என்று அதிகார தோரணையில் சொல்லவும் அந்த குரலில் பி.ஏ.வின் தலை தானாக ஆடியது.

அபிஜித்தை பொறுத்தவரை தனது வேலைகளிலோ அவனது தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டாலோ நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்து விடுவான்.அவன் பணிந்து செல்லும் ஒரு இடம் அவன் தாயிடம் மட்டுமே….

இன்று காலையில் சாஹித்யாவிடம் சிறிது நேரம் பேச வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அவன் கண்மூடி மிகவும் மகிழ்ந்திருந்த தருணம்… அவன் அறையை திறந்து கொண்டு கதிர் உள்ளே வர கண்ணை திறந்து எதிரே இருப்பவனை சீற்றமாக நோக்கினான்.

அவனின் உஷ்ண பார்வையில் ஜெர்க்கான கதிர் " சாரி சார்…. உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.அதனால அவசரத்தில உள்ளே அனுமதி கேட்காமல் வந்துட்டேன்… நம்மளை தேடி மித்ரன் வந்துருக்கான்" என்றவனின் பதிலில் சற்று நிதானமடைந்து அபிஜித் " சரி...அவனை உள்ளே வரச் சொல்" என்று கூற கதிர் வெளியே சென்று மித்ரனை உள்ளே அழைத்து வந்தான்.

மித்ரன், அபிஜித்தின் கல்லூரி தோழன்... மற்றும் கதிரின் சீனியர். தன் கட்டிடக் கலை படிப்பை அரியானாவில் இருந்த பிரபலமான கல்லூரியில் படிப்பதற்காக இருவரும் அங்கே சேர்த்திருந்தார். இருவருமே அப்போது ஒருவருக்கொருவர் அறிமுக மற்றவர்கள் .


கல்லூரி முதல் நாளன்று ராகிங் செய்துக் கொண்டிருந்த சீனியர் மாணவர்கள் அபிஜித்தை ராகிங் செய்ய நினைத்து கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு வந்த அவனை சொடக்கிட்டு அழைத்தவர்கள் "ஹே! கம் ஹியர்…. என்று அழைக்கவும் திரும்பி பார்த்த அபிஜித், அவர்களை நோக்கி செல்லும் போதே, அங்கே தயக்கத்துடன் அவர்கள் முன் சென்று நின்றிருந்தான் மித்ரன்.

ராகிங் செய்துக் கொண்டிருந்தவர்கள் தன் முன்னால் நின்ற மித்ரனை பார்க்க அவன் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நிற்க ' ராகிங் செய்வதற்கு பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறான்… ' என்று நினைத்து கொண்டே அவர்கள் அபிஜித்தை மறந்து விட்டு மித்ரனை பிடித்துக் கொண்டு அவனை ராகிங் செய்யத் தொடங்கினார்கள்.

மித்ரனிடம் இந்தியில் " தண்ணீர் நிறைந்த வாட்டர் பாட்டிலை தலைகீழாக இடுப்பில் சொருகி கொண்டு கல்லூரி மைதானத்தை சுற்றி வர சொல்லவும் மித்ரனோ மனதுக்குள் 'நல்ல வேளை ஓட தான் சொல்றாங்க .. அப்படியே ஓடிற வேண்டியதுதான்' என்று நினைத்துக்கொண்டே ஓட ஆயத்தமானான்.

அவன் இடுப்பில் வாட்டர் பாட்டிலை வைத்து ஓட துவங்கும் முன் வாட்டர்பாட்டிலின் மூடி கழண்டு அவன் பேண்ட்டை நனைத்தது. மித்ரன் செய்வதறியாது விழித்துக் கொண்டு அங்கிருந்த சக மாணவர்கள் முன் கூனிக்குறுகி நின்றிருந்தான்‌.

அவன் முன் சட்டென்று அபிஜித் வந்து நிற்க அவனை ஏறெடுத்துப் பார்த்த மித்ரன் கலங்கும் கண்களால் அவனிடம் உதவிக் கேட்கும் முன் அபிஜித் தான் அணிந்திருந்த ஷேர்ட்டினை கழட்டி அவன் முன் பக்கத்தில் கட்டி விட்டான்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சீனியர் மாணவர்கள் அபிஜித்தை கோபத்துடன் பார்க்க அதில் அந்த கூட்டத்தில் தலைவனாக யோகேஷ் என்பவனிடம் முறையிட அபிஜித்தை நோக்கி வந்தவன் சட்டென்று காலைத்தூக்கி உதைக்க எத்தனிக்க அதை நொடிப்பொழுதில் உணர்ந்த அபிஜித், தன் உடலை கொஞ்சமாக திருப்பி தனது வலதுகாலால் யோகேஷின் விலாவில் இமைக்கும் நேரத்திற்குள் உதைத்து விட்டான்.
அவன் உதைத்த உதையில் வலி தாங்காமல் கீழே விழுந்து கிடந்தவனை பார்த்து அங்கே இருந்தவர்கள் கொல்லென்று நகைத்தனர். அதில் யோகேஷ்க்கு அபிஜித்தின் மேல் வெஞ்சினம் உண்டாக்க, மித்ரனுக்கு அபிஜித் மேல் நல்ல நட்பை உருவாக்கியது.

இதையெல்லாம் நினைத்து பார்த்த மித்ரனின் முன்னால் காபியை நீட்டிய அபிஜித், " என்னடா… ஃபிளாஷ் பேக்கா? அப்படியே சிலை மாதிரி கூப்பிட கூப்பிட உட்கார்ந்திருக்க?... ஹ்ம்ம்…" என்று கேலியான குரலில் வினவினான்.அவள் கேலியில் மித்ரனை வெறுப்பேற்றும் விதமாக கதிர் சத்தமாக சிரிக்க மித்ரன் அவனை முறைத்தவாறே " இப்ப எதுக்குடா சிரிக்குற?.. இவன் என்னை கலாய்க்குறது உனக்கு சிரிப்பா இருக்கா?" என்று தன்னை கலாய்த்த அபிஜித்திடம் எகிறாமல் பக்கத்தில் அமர்ந்திருந்த கதிரிடம் எகிறிக் கொண்டிருந்தான்.

கதிர், " இருக்காதா பின்னே? எவ்ளோ நாள் கழித்து இப்படி நான் சிரிக்க வேண்டி இருக்கு…. " என்று ஓரக் கண்ணால் அபிஜித்தை பார்த்துக்கொண்டே நக்கலாக கேட்கவும் அவனின் கேலியை உணர்ந்த அபிஜித் " டேய்!.. இப்ப நீ இங்கே மித்ரன் எதுக்கு வந்துருக்கான்னு தெரியணுமா? வேண்டாமா? என்று மிரட்டலான குரலில் கேட்க உடனே கதிர் எதுவும் பேசாமல் அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டான்.

அபிஜித், மித்ரனிடம் திரும்பி அவன் கையைப் பற்றிக் கொண்டு " நீ இல்லனா என்னால அந்த மூர்த்தியை ஜெயிச்சிருக்க முடியாதுடா…இனிமேலும் அவன் ஜெயிக்க கூடாது….என்னை பழிவாங்குற வரைக்கும் அவன் ஓயமாட்டான்... அவனுக்கு நான் கொடுக்குற அடியில் தான் அவன் ஆணவம், எல்லாருக்கும் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு இருக்கற அவனோட கேரக்டர் முதற்கொண்டு அவனை அழிக்கணும்... இதுக்கு உன் உதவி நிச்சயம் தேவைடா மச்சான்…" என்று கூறிவிட்டு மித்ரனின் முகம் பார்க்க மித்ரனும் மூர்த்தியின் அடுத்த அடுத்த நடவடிக்கை பற்றி கூறியதை கவனமுடன் கேட்கலானான்.

மூர்த்தியின் அனைத்து விதமான நடவடிக்கைகளை கேட்ட அபிஜித் " ஓஹோ! மூர்த்தியோட வீக்னஸ் அவரோட மகளா?... அப்ப நான் அவளை தூக்கினால்?....." என்று புருவத்தை தூக்கி கண்ணடித்துக் கேட்டான்.

அதற்கு மித்ரனோ " நீ தான் சாஹித்யாவை தூக்குனன்னு அவளுக்கோ, அவ அப்பா மூர்த்திக்கோ தெரிந்தால் எதிர்காலத்துல உனக்கு மாமனார் வீடு இல்லடா…." என்று பதிலுரைத்தான். அபிஜித் அவனை முறைத்து விட்டு " நான் அவளை தூக்குனது அவளுக்கு தெரியாது... ஆனால் அந்த மூர்த்திக்கு தெரிய வைப்பேன்" என்று சொல்லி கொண்டே மித்ரனையும் கதிரையும் பார்க்க அப்போது டேபிளின் மீதிருந்த அபிஜித்தின் மொபைலில் 'மூர்த்தி காலிங்' என்று எழுத்துக்கள் மின்னியது.

அருகிலிருந்த மித்ரன் அதை எடுத்து அபிஜித்தின் கையில் கொடுக்கும் போது யார் காலிங் என்று பார்த்து விட்டு பதற்றத்துடன் " அச்சச்சோ… இப்ப இவரு எதுக்குடா கால் பண்றாரு…. நான் இங்கே இருக்கறது ஒரு வேளை கண்டுப்பிடிச்சிட்டாரா?" என்று கேட்டான்.

" டேய்… சும்மா இருடா… நான் தான் முக்கியமான எவிடென்ஸ் காட்டணும்னு ஹோட்டலுக்கு வர சொன்னேன்... அதனால நான் வந்துட்டேன்னு கால் பண்றார்… என்று அவனிடம் கூறிவிட்டு காலை அட்டென்ட் செய்து காதில் வைக்க அந்த பக்கம் மூர்த்தி பொரிந்து தள்ளிவிட்டார். தன் காதிலிருந்து மொபைலை எடுத்து தன் காதை தேய்த்து விட்டுக் கொண்டே " ஸ்ஸ்… கூல் டவுன் மிஸ்டர். மூர்த்தி… கூல் டவுன்…" என்று அவரை அமைதிப்படுத்த அதைக் கேட்ட மூர்த்தி இன்னும் அதிகமாக எகிறினார்.

"டேய்...என்னடா நினைச்சிட்டு இருக்க…? என்னை வர சொல்லிட்டு நீ இங்கே வரலைன்னா என்ன அர்த்தம்… இப்பவே நான் கிளம்பறேன்… உன்னை மாதிரி வேலை இல்லாமல் வெட்டியா நானில்லை…" என்று கத்தினார்.

" எது ... நான் வெட்டி‌யா இருக்கேன்... நீங்க அதைக் கண்டீங்க…. அப்படியே கொஞ்சம்
ரைட் சைடு திரும்பி பாருங்க…என்று சொல்லவும் மூர்த்தி திரும்பி பார்க்க அங்கே ஸ்டைலாக ஒரு காலை இன்னொரு காலில் போட்டு கொண்டு ஒரு காதில் போனை வைத்த மேனியாக கண்ணிலிருந்து கூலர்ஸை கழட்டியவாறே " ஹாய் மிஸ்டர்.மூர்த்தி…." என்று முகத்தில் கேலியோட கையாட்டினான்.

அவனை நோக்கி சென்ற மூர்த்தி " யு ஃபூல்…ஹெள டேர் யு… " என்று எகிற " ஸ்ஸ்… நீங்க ஒன்றை மறந்துட்டிங்க… நான் அனுப்பிய எவிடென்ஸ் மட்டும் தானே பார்த்தீங்க.. இதையும் பாருங்கள் கொஞ்சம்…." என்று அபிஜித் தனது மொபைலை காட்ட அதில் அபிஜித்தும்,சாஹித்யாவும் மிகவும் நெருங்கிய நிலையில் அபிஜித்தின் தோளில் தனது தலையை சாய்த்து நின்றிருந்தாள் சாஹித்யா. அதை மூர்த்தி அதிர்வுடன் பார்க்க ஏதேச்சையாக கதிரும் அதை எட்டி பார்த்து அதிர்ந்தான்.

" என்ன பார்க்கறீங்க மிஸ்டர்.மூர்த்தி… இது யாருன்னு தெரிகிறதா?.... நீங்க என்னை, என் தொழில் மேலே கை வைக்க நினைச்சப்பவே என்ன பண்ணிருக்கேன்னு பாருங்க… மறுபடியும் என்கிட்ட மோதினிங்கன்னா இது எப்படி வேணாலும் ரிப்ளெக்ட் ஆகலாம்… வரட்டா…" என்று கேலிப் புன்னகையுடன் சல்யூட் வைத்து விட்டு இரண்டடி எடுத்து வைத்து விட்டு பின் ஞாபகம் வந்தவனாய் " தி கேம் ஸ்டார்ட்…. மூர்த்தி… முடிஞ்சா நேருக்கு நேர் மோதுங்க…." என்று மட்டம் தட்டும் குரலில் கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான்.

அதே நேரம் சஹியும் அவளின் நட்புகளும் இன்றிரவு நிஷா வீட்டில் நடக்கும் அவளின் பிறந்தநாளை கொண்டாட அவளது வீட்டிற்கு செல்ல முடிவு செய்து நிஷாவிற்கு பரிசு வாங்க பஜாருக்கு வந்திருந்தனர். அவர்களை பின் தொடர்ந்து அடியாள் ஒருவன் வருவதை இருகண்கள் கவனித்து கொண்டிருந்தன.

பின் தொடர்ந்து வந்தவன் சஹியை தொடர்ந்து கொண்டே இருக்கும் போது ஒரு திருப்பத்தில் அவளை தவற விட்டிருந்தான். அவளை காணாமல் தேட முற்படும் போதே அவனது மொபைலில் 'பாஸ் காலிங்' என்று மின்னியது.

பவ்யமாக அதை அட்டென்ட் செய்து காதில் வைக்கவும் எதிர்முனையில் " டேய்… அவ மிஸ்ஸாகவே கூடாது… மீறி அவ என் கையை விட்டு போனால் நீ உயிரோடு இருப்ப... ஆனால் ஒரு உறுப்பும் செயல்படாத அளவு நீ இருப்ப…" என்று கூறிவிட்டு காலை கட் பண்ணியது.

அந்த அடியாளோ " அய்யோ" என்று தலையில் கைவைக்க அவனுக்கு நேர்திசையில் சஹி சென்று கொண்டிருக்க அதேசமயம் கணப்பொழுதில் அவளை கடத்தியிருந்தான் அந்த அடியாள்.

சஹியை வண்டியில் தள்ளியதை தூரத்தில் இருந்து பார்த்த விஷான் அவளைக் காப்பாற்ற செல்வதற்குள் வண்டி வேகமெடுத்து மறைந்திருந்தது.

விஷான் செய்வதறியாது நின்றிருக்கையில் தர்ஷினி தன் மொபைலில் கங்காவிடம் சாஹித்யா கடத்தப்பட்ட விஷயத்தை அழும் குரலில் கூறவும் கங்காவும் பதற்றத்துடன் போனை கையை விட்டு நழுவியது.இருந்தாலும் இது பதற்றமடைய வேண்டிய நேரம் இல்லை…என தனக்குள் கூறிக் கொண்டு தர்ஷினியின் காலை கட் செய்துவிட்டு உடனே தனது கணவருக்கு அழைத்தார்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட கங்கா பேச ஆரம்பிப்பதற்கு முன் மூர்த்தி பொறுமை இழந்த குரலில் " என்ன...கங்கா இப்ப எதுக்கு கால் பண்ணி நீயும் டார்ச்சர் பண்ற" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க கங்கா அதை கவனிக்காமல் " என்னங்க...நம்ம சஹியை யாரோ கடத்திட்டாங்களாம்…." என்று அழுகுரலில் சொல்லவும் மூர்த்தியோ அதிர்ச்சியுடன் " என்ன சொல்ற கங்கா…. எப்ப கடத்துனாங்க?... யாரு அதை பார்த்தது….. " என்று கேட்க கங்கா தர்ஷினி பேசியதை சுருக்கமாக கூற மூர்த்தி உடனே ஜீவாவிற்கு அழைத்து சஹி கடத்தப்பட்ட விஷயத்தை கூறி " இது எல்லாம் அந்த அபிஜித் தான் பண்ணிருப்பான்…. என்னைய ஏதும் செய்ய முடியலன்னு என் பொண்ணு மேல கைவச்சிருக்கான்… ராஸ்கல் " என்று சரட்டுமேனியாக வசைப்பாட தொடங்கினார்.

அவர் சொன்னதைக் கேட்டு ஜீவா சற்று அதிர்ந்தாலும் " ச்ச... ச்ச… அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது சித்தப்பா…. அபிஜித் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப நல்லவன் தான் நான் கேள்விப்பட்டவரை….." என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டே செல்ல மூர்த்தியோ " டேய்… உன்னை அவனுக்கு பாராட்டு பத்திரம் ஒன்னும் வாசிக்க சொல்லலை…." கடுத்த முகத்துடன் சொல்லிவிட்டு அபிஜித்திற்கு போனைபோட சொன்னார்.

அபிஜித் ஜீவாவின் அழைப்பை ஏற்று " ஹலோ" என்று கூற தொடங்க " ஒரு நிமிஷம்… எங்க சித்தப்பா பேசணுமாம்…." என்று ஜீவா மூர்த்தியின் கையில் போனைக் கொடுக்க " என்ன மிஸ்டர்.மூர்த்தி! இப்ப தானே மீட் பண்ணோம்... அதற்குள் என் ஞாபகம் உங்களை விட்டு போகலையா" என்று கிண்டலடித்தான்.

மூர்த்தியோ "டேய் பொறுக்கி ராஸ்கல்… எங்கடா கடத்திட்டு போற என் பொண்ணை…. நேருக்கு நேரா மோதணும்னு சொல்லிட்டு இப்படி கோழை மாதிரி என்னை வீழ்த்த என் பொண்ணு தான் கிடைச்சாளா… இதுக்கு எதுக்குடா உனக்கெல்லாம் மீசை…" என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தையை விட்டார்.

சில நேரங்களில் நாம் சொன்ன சொல்லையும் உதிர்க்கின்ற கண்ணீரையும் திரும்ப வாங்க முடியாது… அதேபோல் தான் சொன்ன சொல்லில் ஏற்பட்ட காயம் தழும்பாக மாறி காயம் பட்ட சிங்கமாக மனிதனை உருவாக்குகிறது. இப்போது மூர்த்தி, என்ன நடந்தது? யார் அதை செய்தது? எதையும் தீர விசாரிக்காமல் தன் பெண் மீது கொண்ட பாசத்தால் அவளையே அவனிடம் பலியாக்க தயாரானார்.

அபிஜித்தோ மிகவும் நிதானமாக "ரொம்ப வார்த்தையை விட்டுட்டிங்க மூர்த்தி…இதுக்கு பதில் உங்கள் மகளை திரும்ப உங்கள் முன் கொண்டு வந்து இப்ப பேசுன பேச்சுக்கு நீங்க மன்னிப்பு கேட்கும் வரை என்னோட வில்லத்தனத்தை பார்ப்பீங்க" என்று போனை பட்டென்று வைத்து விட்டான்.

இவ்வளவு நேரம் அவன் பேசுவதை கேட்டிருந்த ஜீவாவோ அபிஜித்தின் நிதானமான குரலில் மூர்த்தியை கண்டன பார்வை பார்த்துக்கொண்டே " என்ன சித்தப்பா… இப்படி பேசிட்டீங்க…அவன் பேசுவதை பார்த்தால் நீங்களே அவனுக்கு வாய்ப்பு வழங்கியது போல இருக்கு… கண்டிப்பாக இதற்கு ஏதாவது செய்ய போறான்…" என்று பயத்துடன் சொல்ல மூர்த்தியோ " அப்படி அவன் செய்யும் போது பார்த்துக்கலாம்" என்று விட்டார்.

அதுதான் அவர் செய்த தப்பு. சிறு முள் தானே என்ற அலட்சியமாக இருந்து விட்டார்.

*******************************************
 
Status
Not open for further replies.
Top