All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வணக்கம் ...நான் ஸ்ரீஷா 😍

Shalini M

Bronze Winner
" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " - கதையோடு பயணித்த வரிகள் உங்கள் மனதோடும் பயணித்ததில் மகிழ்ச்சி

இதோ கதையில் வந்த உள்ளத்து வரிகளை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ..
👇


அதிதி டூ விக்ரம் :

அதீதங்களும்
அடிப்பட்டுப் போகும்
அன்பனின்
ஆர்ப்பரிக்கும் காதல் முன் !

கெளதம் டூ உதயா :

காற்றிடம் சொல்லிவிடு,
இனி உன்னைத் தீண்டும் உரிமை
எனக்கு மட்டுமென.
உன் காதோரம் கொஞ்சி விளையாடும்
உன் கற்றை குழலிடம் சொல்லிவிடு,
உன்னை ஸ்பரித்து கொஞ்சம் உரிமை
எனக்கு மட்டுமென..
ஆழமாய் பதிந்து போன உன் நெற்றிப்
பொட்டின் அழுத்தத்தில் சொல்லி விடு,
இனி என்னிதழ் மட்டுமே அங்குத் தஞ்சம் கொள்ளுமென...


சைத்ரா டூ கார்த்திக் :

சிரிப்பதும் ரசிப்பதும் தாண்டி
ரட்சிப்பது தான் காதலா !
சிலிர்ப்பதும் சிதறுவதும் தாண்டி
சிக்கித் தவிப்பது தான் காதலா ?

சங்கர் :


அவர்... !

உடல் தந்த உயிர்,
உயிர் காத்த மனிதன்,
மனிதம் சொல்லித் தந்த ஆத்மா,
ஆத்மார்த்தமாக நேசிக்க கற்றுத் தந்த
அவர், எங்கள் தந்தை ..!


சங்கர் :

வாழ்வென்றால் எண்ணற்ற வண்ணங்களா ?
அவரது விழிகள் எங்களுக்கு,
ஏழ் வண்ணங்களை மட்டுமே காட்டியிருந்ததே !

தோல்வியென்றால் அழுக வேண்டுமா ?

அவர் வார்த்தை எங்களுக்குத்
தன்னம்பிக்கை மட்டுமே
தந்துள்ளதே !

நோய் பிணி என்றால் அன்னையைத்
தேட வேண்டுமா ?
அவர் தான் எங்களுக்குத் தாயுமானவனாக
இருக்கிறா(ந்தா)ரே !

கௌதம் டூ உதயா :

என்னைப் பிடிவாத காதல்

செய்யடி பெண்ணே

உன் காதலின் சுவாசத்தில்

நொடி நொடியும் புதிதாய்

உயிர்த்தெழுந்து காதல் மோட்சம் பெறுகிறேன் ..'

உதயா - கௌதம் :


பேராசை கொள்ளச் செய்கிறாய் கண்ணே.. !
உனது சிறு நொடி இமை சிமிட்டலும்
சிறு கண இதழ் விரிவதும்
எனக்கே எனக்கென கேட்கும் பேராசை
ஏற்படுத்துகிறாய் ..!
காதல் பித்தம் தலைக்கேற்ற செய்கிறாய் அன்பே.. !
உனது நொடி நொடி ரசிப்பும்
சிறு சிறு லயிப்பும் எனக்காக மட்டுமாக இருந்திடக் கேட்கும் காதல் பித்தம் தலைக்கேற்றுகிறாய் என் ஆருயிரே ..!

சைத்து டூ கார்த்திக் :

விழிநீர் தாங்காத நான்
உனக்கான கண்ணீரிலும் ஆனந்தம் கொண்டு நிற்கிறேன்.

நீடித்த அமைதி பிடிக்காத நான்
உன்னுடனான மௌன துளிகளில் உயிர் சிலிர்த்துச் சிவக்கிறேன்.


மணம் வேண்டாம் என்று சொன்னேன்,
உனது மனதால் என்னுடன் இணைந்து கொண்டாய்.

நேசம் வேண்டாம் என்று
சொன்னேன்,
உனது சுவாசம் கொண்டு என்னை நிரப்பினாய்..


காதல் வேண்டாமென சொன்னேன்,
உன் கண்ணசைவில் என்னையே பெருங்காதல் கொள்ளச் செய்தாய்.


அனைத்தும் வேண்டாமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாக நின்றாய்.

இப்பொழுது வேண்டுமெனக்
கேட்கிறேன்...

உன் கவனத்தை...
உன் காதலை...
உன் சுவாசத்தை..
உன் தீவிரத்தை..

இதில் எதை நான் கேட்பின்

உனையே தருவாய் என் காதல்காரா...!



சைத்து டூ கார்த்திக் :

எண்ணற்ற மன போராட்டகளுடன் நான்,
அத்தனைக்கும் பதிலாய் உன் அணைப்பு..
வார்த்தையில் விளக்க முடியா
உணர்வு குவியலாக நான்,
வார்த்தைகளே தேவையில்லை
என உணர்த்தும் உன் பார்வை
நொடிகள்..

சிக்கித் தவிக்கும் என்னை, அன்பால்
வதம் செய்யும் வசியகாரன் நீ கார்த்திக்..!

கௌதம் - உதயா :

இருக்கை இணைகையில் உணர்ந்திடாததை,
உன் ஓர விழி பார்வையில் உணர்கிறேன்.
இருந்தும் கஞ்சமேன் ?
மொத்தமாய் ,மிக மொத்தமாய்
உன் பார்வையில் என்னை
ஆயுள் கைதியாகச் சிறையெடு !
வாழ்ந்து பார்க்கிறேன் உன் விழிகளுடனாவது !

கௌதம் - உதயா :

மறுத்துப் பேசும் உன்னிதழ்களில்
தஞ்சம் கொள்ளத் தவிக்கிறேன்.
சில கணமாவது மோட்சம் கொடு.!
தள்ளி நிற்கும் உன் வீம்பில்,
என்னையே உணர்கிறேன்.
அப்பொழுதாவது என்னை மீட்டு,
உன்னுடன் சேர்த்து விடு.. !

கணம் தவித்து ,இதழ் இணைத்து,உயிர் நிறைக்க வரம் கேட்கிறேன்.

எக்கணம் என்னை உனதாக செய்வாய்..

நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக
எதை நான் கேட்பின் உனையே தருவாய் என் பிடிவாத பிம்பமே ..!

சைத்து டூ கார்த்திக் :

நான் சிரிக்க,
எனை மறக்க,
உனை நினைக்க,
உன் காதல் தந்தாய்.

நான் ரசிக்க,
எனை நிறைக்க,
உன்னில் பித்து கொள்ள,
உனையே தந்தாய் என் பெருரகசிய
பெட்டகமே !


இனி ஒரு பிறவியென்றாலும் உன்னின் நான் .
நான் மட்டுமே ...
காதலாகவும் ,உன் உடமையாகவும்.



@prikar sis..Inga add பண்ணியிருக்கேன்.. 😍

நன்றி
ஸ்ரீஷா😍
ஸ்ரீ thank யூ.......😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❣️❣️❣️
 

Srisamyuktha

Bronze Winner
" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " - கதையோடு பயணித்த வரிகள் உங்கள் மனதோடும் பயணித்ததில் மகிழ்ச்சி

இதோ கதையில் வந்த உள்ளத்து வரிகளை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ..
👇


அதிதி டூ விக்ரம் :

அதீதங்களும்
அடிப்பட்டுப் போகும்
அன்பனின்
ஆர்ப்பரிக்கும் காதல் முன் !

கெளதம் டூ உதயா :

காற்றிடம் சொல்லிவிடு,
இனி உன்னைத் தீண்டும் உரிமை
எனக்கு மட்டுமென.
உன் காதோரம் கொஞ்சி விளையாடும்
உன் கற்றை குழலிடம் சொல்லிவிடு,
உன்னை ஸ்பரித்து கொஞ்சம் உரிமை
எனக்கு மட்டுமென..
ஆழமாய் பதிந்து போன உன் நெற்றிப்
பொட்டின் அழுத்தத்தில் சொல்லி விடு,
இனி என்னிதழ் மட்டுமே அங்குத் தஞ்சம் கொள்ளுமென...


சைத்ரா டூ கார்த்திக் :

சிரிப்பதும் ரசிப்பதும் தாண்டி
ரட்சிப்பது தான் காதலா !
சிலிர்ப்பதும் சிதறுவதும் தாண்டி
சிக்கித் தவிப்பது தான் காதலா ?

சங்கர் :


அவர்... !

உடல் தந்த உயிர்,
உயிர் காத்த மனிதன்,
மனிதம் சொல்லித் தந்த ஆத்மா,
ஆத்மார்த்தமாக நேசிக்க கற்றுத் தந்த
அவர், எங்கள் தந்தை ..!


சங்கர் :

வாழ்வென்றால் எண்ணற்ற வண்ணங்களா ?
அவரது விழிகள் எங்களுக்கு,
ஏழ் வண்ணங்களை மட்டுமே காட்டியிருந்ததே !

தோல்வியென்றால் அழுக வேண்டுமா ?

அவர் வார்த்தை எங்களுக்குத்
தன்னம்பிக்கை மட்டுமே
தந்துள்ளதே !

நோய் பிணி என்றால் அன்னையைத்
தேட வேண்டுமா ?
அவர் தான் எங்களுக்குத் தாயுமானவனாக
இருக்கிறா(ந்தா)ரே !

கௌதம் டூ உதயா :

என்னைப் பிடிவாத காதல்

செய்யடி பெண்ணே

உன் காதலின் சுவாசத்தில்

நொடி நொடியும் புதிதாய்

உயிர்த்தெழுந்து காதல் மோட்சம் பெறுகிறேன் ..'

உதயா - கௌதம் :


பேராசை கொள்ளச் செய்கிறாய் கண்ணே.. !
உனது சிறு நொடி இமை சிமிட்டலும்
சிறு கண இதழ் விரிவதும்
எனக்கே எனக்கென கேட்கும் பேராசை
ஏற்படுத்துகிறாய் ..!
காதல் பித்தம் தலைக்கேற்ற செய்கிறாய் அன்பே.. !
உனது நொடி நொடி ரசிப்பும்
சிறு சிறு லயிப்பும் எனக்காக மட்டுமாக இருந்திடக் கேட்கும் காதல் பித்தம் தலைக்கேற்றுகிறாய் என் ஆருயிரே ..!

சைத்து டூ கார்த்திக் :

விழிநீர் தாங்காத நான்
உனக்கான கண்ணீரிலும் ஆனந்தம் கொண்டு நிற்கிறேன்.

நீடித்த அமைதி பிடிக்காத நான்
உன்னுடனான மௌன துளிகளில் உயிர் சிலிர்த்துச் சிவக்கிறேன்.


மணம் வேண்டாம் என்று சொன்னேன்,
உனது மனதால் என்னுடன் இணைந்து கொண்டாய்.

நேசம் வேண்டாம் என்று
சொன்னேன்,
உனது சுவாசம் கொண்டு என்னை நிரப்பினாய்..


காதல் வேண்டாமென சொன்னேன்,
உன் கண்ணசைவில் என்னையே பெருங்காதல் கொள்ளச் செய்தாய்.


அனைத்தும் வேண்டாமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாக நின்றாய்.

இப்பொழுது வேண்டுமெனக்
கேட்கிறேன்...

உன் கவனத்தை...
உன் காதலை...
உன் சுவாசத்தை..
உன் தீவிரத்தை..

இதில் எதை நான் கேட்பின்

உனையே தருவாய் என் காதல்காரா...!



சைத்து டூ கார்த்திக் :

எண்ணற்ற மன போராட்டகளுடன் நான்,
அத்தனைக்கும் பதிலாய் உன் அணைப்பு..
வார்த்தையில் விளக்க முடியா
உணர்வு குவியலாக நான்,
வார்த்தைகளே தேவையில்லை
என உணர்த்தும் உன் பார்வை
நொடிகள்..

சிக்கித் தவிக்கும் என்னை, அன்பால்
வதம் செய்யும் வசியகாரன் நீ கார்த்திக்..!

கௌதம் - உதயா :

இருக்கை இணைகையில் உணர்ந்திடாததை,
உன் ஓர விழி பார்வையில் உணர்கிறேன்.
இருந்தும் கஞ்சமேன் ?
மொத்தமாய் ,மிக மொத்தமாய்
உன் பார்வையில் என்னை
ஆயுள் கைதியாகச் சிறையெடு !
வாழ்ந்து பார்க்கிறேன் உன் விழிகளுடனாவது !

கௌதம் - உதயா :

மறுத்துப் பேசும் உன்னிதழ்களில்
தஞ்சம் கொள்ளத் தவிக்கிறேன்.
சில கணமாவது மோட்சம் கொடு.!
தள்ளி நிற்கும் உன் வீம்பில்,
என்னையே உணர்கிறேன்.
அப்பொழுதாவது என்னை மீட்டு,
உன்னுடன் சேர்த்து விடு.. !

கணம் தவித்து ,இதழ் இணைத்து,உயிர் நிறைக்க வரம் கேட்கிறேன்.

எக்கணம் என்னை உனதாக செய்வாய்..

நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக
எதை நான் கேட்பின் உனையே தருவாய் என் பிடிவாத பிம்பமே ..!

சைத்து டூ கார்த்திக் :

நான் சிரிக்க,
எனை மறக்க,
உனை நினைக்க,
உன் காதல் தந்தாய்.

நான் ரசிக்க,
எனை நிறைக்க,
உன்னில் பித்து கொள்ள,
உனையே தந்தாய் என் பெருரகசிய
பெட்டகமே !


இனி ஒரு பிறவியென்றாலும் உன்னின் நான் .
நான் மட்டுமே ...
காதலாகவும் ,உன் உடமையாகவும்.



@prikar sis..Inga add பண்ணியிருக்கேன்.. 😍

நன்றி
ஸ்ரீஷா😍
Sri ma super.... semma💜💞💞💕💕💕❣️❣️💓💓💓🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩💗💗💗💗💖💖
 
Top