அனைவருக்கும் வணக்கம்...!
உங்கள் விமர்சனத்தில் ,உங்களது வார்த்தைகளில், உங்கள் அன்பில் நெகிழ்வாய் நான்..
இத்தனை இத்தனை ஒரு கதாபாத்திரத்தை உறவாக என்ன முடியுமா என எண்ண வைத்து உள்ளீர்கள்.
கார்த்திக் - இந்த மனிதனை இணையாக, தம்பியாக, நண்பனாக மற்றும் மகனாக கேட்கும் நேரங்களில் நான் என் செய்வேன் ! கண்களில் விழி நீர் தேங்கி நிற்கிறது...
ஒரு குடும்பத்தில் வாழ்ந்த உணர்வு, இந்த குடும்பத்தை மிஸ் செய்வோம் என்பன போன்ற வார்த்தைகள் என்னை சிலிர்க்க செய்கிறது...
நான் இத்தனை பாராட்டை எதிர்பார்க்கவில்லை...
எனது கான்செப்ட் வெகு சிறியது.
உலகில் பல வித மனிதர்கள்.பல கோணங்கள் ,பல பார்வைகள்.ஆனால், பொதுவாக இம்மூன்று வகையில் பிரிக்கலாம் என்று என் சிற்றிறவு தட்டிச் சொல்லியது..
கோணங்கள் வேறு என்றாலும் ,அனைவருக்கும் தனித்துவம் உண்டு.இருந்தும், அவரவர் பார்வையில் மற்றவர் தாண்டி நமக்கான எண்ணங்கள் என்ன ? என்பது மிக பெரிய கேள்வி..இப்படி நிறைய நிறைய சிந்தனைகள் .அப்பொழுது , படார்னு(
) ஒரு கான்செப்ட் , நம்ம ஏன் மூன்று வகை குண நலன்களை ஒரே இடத்தில் காட்டக் கூடாது என்பதில் விளைந்த கதையே ,
" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " - இதில் இணைந்த காதல் மோதல் எல்லாம் இந்த கருவை கொண்டு உருவானது தான்..
Introvert : ( gowtham - udhaya )
Introvert பெரும்பாலும் அமைதியான மற்றும் சிந்தனைமிக்க தனிநபராக கருதப்படுகிறார். அவர்கள் சிறப்பு கவனம் அல்லது சமூக ஈடுபாடுகளைத் தேடுவதில்லை, ஏனெனில் இந்த நிகழ்வுகள், அவர்கள் எண்ணத்தின் படியில்லை என்றால் மிகுந்த சோர்வடைவர்
Extrovert : ( kaarthik - chaithu )
இந்த ஆளுமை வகையைக் கொண்ட நபர்கள் சமூக, நடைமுறை, பாசம், முறைசாரா, நல்ல உரையாடலாளர்கள், சுறுசுறுப்பான மற்றும் கலகலப்பானவர்கள்.
Ambivert : ( vikram - adhidhi )
ஒரு ஆம்பிவர்ட் என்பது இருவரின் குணாதிசயங்களைக் கொண்ட ஒருவர்., அதாவது அவர்கள் ஒரு extrovert - இன் உறுதியையும் ஒரு introvert -இன் சிந்தனை திறனையும் கொண்ட மனிதர்கள்.
கதை என்பதால் கதையாக மட்டுமே காட்டி இருந்தேன்..எந்த இடத்திலும் உளவியலை குறிப்பிட்டு சொல்லவில்லை..ஆனால், அவர்களது ஸ்விஸ் பயணத்தின் துவங்கி எல்லா இடத்திலும் மேலோட்டமாக அவர்களது குணநலன் இதன்படி வெளிப்படும்..இது எல்லாம் எனக்கு தெரிந்த அளவு மட்டுமே..
இவை எல்லாம் சொந்த கதை..கூடவே,கதையின் கதை..
இப்பொழுது நன்றி நவிலல் :
நெஞ்சம் எல்லாம் உங்களது வாழ்த்துகள்,
கண்களோ கண்ணீரை தடுக்கிறது,
இதழ்களோ புன்னகையில் விரிகிறது
கால்களோ உணர்ச்சி மிகலில் கரை தேடி அலைகிறது,
கரங்களோ உங்களது விமர்சனங்களை ஸ்பரிசித்து பார்க்கிறது.
வேறென்ன வேண்டும்..உங்களது மகிழ்வில் வாழ்வது தாண்டி..
நன்றி என்ற வார்த்தை சில நேரங்களில் சிறிதாகி போகும் போல..
வார்த்தைகள் தேடி தவித்துக் கொண்டிருக்கிறேன்
நான் கற்ற ஆக சிறந்த பாடம்,
" இங்க ஒரு விஷயத்தை நல்லா செஞ்சா மட்டுமில்லை, நல்லா செய்ய முயற்சி செஞ்சாலே நம்மை தட்டி தர நிறைய பேரு இருக்காங்க " - என புரியுது..
என்னை தட்டி தந்தவர்களுக்கு நன்றி.பிழைகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு மிக்க நன்றி..கண்டிப்பாக இப்போதைய பிழையை அடுத்த முறை திருத்திக் கொள்வேன்..
கதை துவங்கிய நாளிலிருந்து என்னுடன் இணைந்து பயணித்த நண்பர்களுக்கு
சற்று சோர்ந்த போதெல்லாம் கருத்தின் மூலம் என்னை உயர செய்த நண்பர்களுக்கு
கதையை படித்தது மட்டுமில்லாது உங்களது நேரத்தை எடுத்து விமர்சனம் செய்தவர்களுக்கு, கருத்து சொன்னவர்களுக்கும்
எல்லாருடைய பெயரையும் குறிப்பிட ஆசை, ஆனால் தவறுதலாக யாரையேனும் ஒருவரை விட்டுவிட்டால் என்ற பயம் என்னை தேக்கி விட்டது..ஆக, அனைவருக்கும் நன்றி ❤
நான் எப்போது எல்லாம் ஏதேனும் தெரியாது முழிக்கிறேனோ,தவறு செய்து குழம்புகிறேனோ அப்பொழுது எல்லாம் என்னை தன்னுடன் இணைத்துக் கொண்டு நல்வழி படுத்தும் : கூகிள், யூட்யூப்- ற்கு நன்றி ( சிரிக்காதீங்க மக்களே ,இது உண்மையான நன்றி கடன் )
Refreshing partner : meeeeeee
@marry ,shalu ma
@Shalini M
,samyu baby
@Srisamyuktha
,Ammu kutty
@Ammubharathi , Vasu ma
@Samvaithi007 , Ramya sis
@Ramyasridhar ,Fathi
@fathima nuhasa and Chitra sis
@Chitra Balaji
இப்பொழுது தான் கற்றல் நிலையில் இருக்கும் எனக்கு, இத்தனை ஊக்கம் தந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி
❤
இத்துடன் விடைபெறுகிறேன்..
நன்றி
ஸ்ரீஷா