All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேணுகாதேவியின் "மனதோடுதான் நான் பேசுவேன்" - கதை திரி

Status
Not open for further replies.

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை டியர் ஃப்ரெண்ட்ஸ் வணக்கம், நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்

மனதோடுதான் நான் பேசுவேன் - அத்தியாயம் 7


' அடி உன்னால எவ்வளவு அடிக்க முடியுமோ அடி, உன்னை காயப்படுத்த எவ்ளோ அடியையும் தாங்கிக்குவேன்'

" நீ எத்தனைதடவ அடிச்சாலும் நான்
அப்படிதான் சொல்லுவேன் உன்னால என்னபண்ண முடியுமோ பண்ணிக்கோ" சீற்றத்துடன் சீறினாள் அந்த பாவை

அவள் முகத்தை சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், ரூமைவிட்டு வெளியேறிவிட்டான்

அவன் வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பிறகு ராஜியின் தாய் சித்ரா உள்ளே வந்தாள்
மகளின் வதங்கிய தோற்றம் கண்டு மனம் பற்றி எரியத்தான் செய்தது பெற்றவளாயிற்றே

டிபன் சாப்பிட ராஜியையும் சங்கரையும் அழைத்துவர மாடிக்கு வந்தவள் , ராஜி பேசியதும், சங்கர் அவளை அடிப்பதையும், கண்டு திகைத்து நின்றுவிட்டாள்

ரூமை விட்டு வெளியே வந்தவன் சித்ராவை கண்டவுடன் ஒரு நொடி சங்கடபட்டான் , பின் அமைதியாக அவளை கடக்க முயல

"நில்லுப்பா , உங்களுக்குள்ள என்ன சண்டைனு நான்
கேட்கமாட்டேன் , ஒரே நாள்ல அவ வாழ்க்கையே திசைமாறி போயிடுச்சு , இந்த நேரத்துல அவகிட்ட நீ கோபமா நடந்துகிட்டா அவளும் அப்படித்தான் துடுக்குத்தனமா பேசுவா , அது நமக்கு கோபம் வரும் தேவையில்லாத சண்டையில போய் முடியும் , இந்த பதினைந்து நாளைக்கு அவபோக்குல
விட்டுருப்பா, துடுக்குத்தனமாக பேசினாலும் ,குழந்தை தனமா இருப்பா கண்டிச்சுபேசு, கைநீட்டாதப்பா, ஒரே பொண்ணு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம் "
சித்ரா அவன் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்கவும் அவனுக்கே,தவறு செய்துவிட்ட உணர்வு ஒரு மாதிரி ஆகிவிட்டது

அவனின் இன்னொரு மனமோ 'இது சும்மா ட்ரைலர்தான் , மெயின் பிக்சர் இன்னும் ரொம்ப மோசமா இருக்கும் மனதில்
கூறிக்கொண்டான் '

"அவ போக்குல விட்டுட்டு பேசாம இருந்தா நடந்ததையே
நினைச்சுகிட்டு இருப்பா, இனி அவளோட வாழ்க்கை என்னோடதான் - என் வாழ்க்கை அவளோடதான், அத அவளுக்கு புரிய வைக்கணும் அத்தை அதனாலதான் அவள கோயிலுக்கு கூட்டிட்டு போலாம்னு வந்தேன் , இனி எல்லாமே அவளுக்கு நான்தான், இப்ப நடந்ததை நினைச்சு வருத்தப்படாதீங்க", நடந்தவற்றை சுருக்கமாக கூறி மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு,,,,

"அவளை கெளப்பி கூட்டிட்டு வாங்கத்தை, நான் வீட்டுக்கு போயிட்டு வந்தர்றேன் "

மனநிம்மதி பெற்றவளாக மகளின் ரூமிற்கு வந்தாள்
சித்ராவை கண்டதும்

"அம்மா ,,,,,,,"

அழும்மகளை கண்டதும் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் சித்ரா, அதுதானே தாய்மனம், மகள் இருக்கும் நிலையில் அவளுக்கு ஆறுதல் கூறுவதா, இல்லை கண்டிப்பதா என்று குழம்பி நின்றாள்

சங்கரின் கைவண்ணம் ராஜியின் கண்ணத்தில் பளிச் பளிச்சென மின்னியது,

"முரட்டு பய என் பிள்ளையை போட்டு எப்புடி அடிச்சிருக்கான் பாரு"

"வலிக்குதும்மா,,,,,"

"வினைய நீயே தேடிகிட்ட உங்க அப்பா என்ன சொன்னாரோ அதைத்தான் நானும் சொல்றேன் இனி பேசி எதுவும் ஆகப்போறது இல்ல, அவன் தான் உனக்குனு எழுதியிருக்கு அவனுக்கு ஏத்த மாதிரி நீ உன்ன மாத்திக்க அதுதான் உனக்கும் நல்லது உன் வாழ்க்கைக்கும் நல்லது, நம்ம குடும்பத்துக்கும் நல்லது"

"அவன் எனக்கு வேண்டாம், அவனோட நான்
வாழமாட்டேன் அதுக்கு பதிலா எனக்கு விஷத்தை வாங்கி கொடு, நிம்மதியா போயர்றேன் உனக்கும் உன் புருஷனுக்கும் , அப்புறம் எந்த பிரச்சனையும் இருக்காது"

இப்போது ராஜியிடம் எதையும் பேசி புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்தவள்,
அவள்பீரோவை திறந்து ரமேஷ் வீட்டில் அவளுக்கு எடுத்த நிச்சயபுடவை, மோதிரம், செயின் எல்லாத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்தாள்

"அந்த பையன் உனக்கு வேற எதுவும் வாங்கி கொடுத்தானா, வீட்டுக்கு வரும்போது
ரிங் வாங்கிட்டு வந்தானே அது எங்க "

அதிர்ச்சியுடன் தாயை பார்த்தவள்

"நான் என்ன சொல்றேன் நீ என்னம்மா பண்ற " விழிகள் சிவக்க கத்தினாள்

"அப்புறம் என்னடி பண்ணசொல்ற, ஒன்னு சொல்புத்தி இருக்கணும் இல்லையா, சுயபுத்தி இருக்கணும் உனக்கு ரெண்டுமே இல்ல, நீ சாகுறதுக்கா பெத்து இத்தனை வருஷம் உன்ன கண்ணுக்குள்ள வச்சு வளத்தோம் , கல்யாணம் எப்படி வேணாலும் நடந்து இருக்கலாம் ஆனால் அத நல்லபடியா அமச்சுகுறதும், நரகமாக்கிறதும் உன் கையிலதான் இருக்கு புரியுதா"

"அம்மா வேண்டாம் இதுக்கு மேல ஏன்
வாயகிளறின என்ன பேசுவேன் எனக்கே தெரியாது பேசாம போய்டு"

"நீயா பட்டு திருந்தனும்னு இருக்கு, சரி அந்த மோதிரத்தை குடு"

" அது என்கிட்ட இப்ப இல்லமா , கல்யாண மண்டபத்துல நடந்த சண்டைல எத எங்க போட்டேன் கூட தெரியல"

ராஜியை அதற்குமேல் கட்டாயப்படுத்தி கேட்க முடியவில்லை சித்தராவாள்,

" சங்கர் வீட்டுல குலதெய்வம் கோவிலுக்கு போகனும் சொல்லிருக்காங்க, கெளம்பிவாடா",
மகளின் தலையை வருடியவாறு கூறியவளுக்கு கண்கள் நீரை சொரிந்தது

"பணிஞ்சு போனவங்க யாரும் கெட்டுப் போனதில்லை, அம்மா உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன், தப்போ சரியோ கல்யாணம் நடந்துருச்சு ,உனக்கு அவன்தான்னு ஆகிப்போச்சு புரிஞ்சிக்க ராஜிமா, நீ சொன்னத கேட்டப்ப எனக்கே கோபம் வந்துச்சு, நடந்தத உன்னால இப்ப ஏத்துக்க முடியாதுதான், இனி இதுதான் நம்ம வாழ்க்கைனு புரிஞ்சுகிட்டு வாழ ஆரம்பிச்சுடினா, அப்பறம் எந்த பிரச்சினையும் இல்லடா"
தாய் கூறுவது சரி என்று புத்திக்கு உறைத்தாலும் மனது ஏற்க மறுத்தது அமைதியாக கண்களை
மூடி படுத்துக்கொண்டாள்

கிளம்பி வரட்டும் என்று நினைத்தபடி சித்ரா கீழே வந்து விட்டாள் , அங்கே சங்கர், தன் மாமனார்களிடம் செக்கை நீட்டிக்கொண்டிருந்தான்

"எதுக்கு மாப்ள இது, நாங்க குடுத்துக்குறோம் "

"மத்த பொருளை எப்படி குடுப்பீங்களா அது உங்க விருப்பம் ஆனால் நிச்சயம், முகூர்த்த புடவை இரண்டுக்கும் எவ்வளவு பணம் சொல்லுங்க"

" சொன்னா கேக்கமாட்டீங்க, சரி முகூர்த்தப் புடவைக்கு உள்ள பணத்தை மட்டும் நீங்க குடுங்க, நிச்சயப்புடவைக்கு உள்ள பணத்தை நாங்க கொடுத்துக்குறோம்"

சங்கர் மறுக்கவே விடாப்பிடியாக நின்றுவிட்டார் நடராஜன் ஆகையால், முகூர்த்த புடவைக்கு உள்ள பணத்தை மட்டும் செக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு

" கெளம்புங்க மாமா வீட்டுக்கு போய் கார் எடுத்துட்டு வந்தர்றேன் "

" நடராஜனும் ஆனந்தனும் அர்த்தத்துடன் பார்வையை பரிமாறிக் கொண்டனர் "

***************************************************


மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம்-8


"என்னத்தா பொங்கல் வச்சாச்சா இல்லையா நேரம் ஆயிட்டே இருக்கு "

"இதோ முடிஞ்சுடுச்சுப்பா அவ்ளோதான்" பாலா தந்தையிடம்

"நடுவுல்லவன் எங்கே"

"அண்ணன் குளிச்சுட்டு இருக்குப்பா இப்ப வந்துடும்"

"சீக்கிரம் வர சொல்லு "

பட்டுவேட்டி சட்டை, அடர்த்தியான மீசை நெற்றியில் திருநீறு, நீண்ட கழுத்தில் முறுக்கு செயின், மணிக்கட்டில் பிரேஸ்லெட் என்று சுற்றி இருப்போரின் கவனத்தை தன் புறம் திரும்பிப் பார்க்க வைக்கும் கம்பீரத்துடன் வந்து நின்றான் சங்கர்

தன் மகனின் கம்பீரத்தை பார்த்து மீசையை முறுக்கி விட்டார் முத்துச்சாமி

" ராஜி எங்கப்பா"

"இதோ வந்துடாங்க"
பாலா திரும்பிய திசையில் அனைவரும் தலையை திருப்ப, பச்சை வண்ண பட்டு உடுத்தி அதற்கு ஏற்றார்போல் காதணியும் கழுத்தணியும் பூட்டி , முகத்தில் முக்கோணப் பொட்டு வைத்து அதற்கு மேலே திருநீரும் கீழே அரக்கு நிற குங்குமம் அவளின் படர்ந்த முகத்திற்கு தனி தேஜஸ்சை கொடுத்தது 'மகாலட்சுமி மாதிரி இருக்கு பொண்ணு அதான் கல்யாணமேடை வரைக்கும் போய் புடிச்சுருக்கான் ' மனதிற்குள் நினைத்து கொண்டார் முத்துச்சாமி

பார்வையால் ராஜியை விழுங்கிக்கொண்டிருந்த சங்கரின் இடுங்கிய கண்களுக்கு, அவள் கன்னத்தில் தன் விரல்களின் அடையாளம் லேசாக தெரிந்தது, குற்ற உணர்வுக்கு பதில் அவள் பேசிய வார்த்தைகள் காதில் எதிரொளிக்க அவனின் மனமும் முகமும் பாறையாக ஆரம்பித்தது
'திமிராவாபேசுற , இன்னும் ரெண்டு சேத்து வச்சிருக்கணும், இருக்கட்டும் சாயந்தரம் வச்சுக்கிறேன் கச்சேரி'
நினைத்ததை காட்டும் பளிங்கு முகம் கொண்டவளுக்கு, அவளின் வெற்று பார்வையும் எதையோ, இழந்து விட்டது போன்ற சோக முகமும் அவன் பொறுமையை ஆட்டித்தான் பார்த்தது, சீற்றம் ஏறிக்கொண்டே போக சுற்றுப்புறத்தை உணர்ந்து தன் நிலைக்கு வர உள்ளங்கையை இறுக மூடிக்கொண்டான்

முத்துச்சாமி, பார்வதி, சங்கர் , பாலாஜி ஒருபுறம் நிற்க,
ஆனந்தன்,சித்திரா, கலாவதி மூவரும் மறுபுறம் நின்றனர்,

மஞ்சள் துணியில் காசு முடிந்து, சங்கரின் கையில் ஆனந்தனையும் ராஜியின் கையில் முத்துசாமியும் கட்டச் சொல்லிவிட்டு, மாலையை எடுத்து பொண்ணு மாப்பிள்ளை கையில் கொடுக்க சொன்னார் பூசாரி ஆனந்தனிடம் மாலையை வாங்கி,
ராஜியின் கழுத்தில் மாலையிட்டான் சங்கர்,
முத்துசாமியிடம் மாலையை வாங்கிய ராஜி சில வினாடிகள் அப்படியே நின்று விட்டாள்

"என்ன யோசனை பண்ணிட்டு இருக்க மாலைய போடு "
சித்ரா மகளின் தோலை இடித்தாள், "மாலைய போடுமா" என்ற ஆனந்தனை உயிர் இல்லாத பார்வை பார்த்துவிட்டு சங்கரின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் நடுங்கும் கரங்களால் அவன் கழுத்தில் மாலையிட்டாள் ராஜி,,,,,,,,,,,,,,,,

"ஹலோ "-சிவா

"ஹலோ"-ஆர்த்தி

"நல்லா இருக்கியா ஆர்த்தி"

"நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா ஆள காணோம் "

"வொர்க் அதிகமா இருந்தது அதான் பேச முடியல, அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க"

"நான் கொஞ்சம் வெளியில இருக்கேன் வீட்ல போய்டு பேசட்டுமா "

"எங்க இருக்க கடைவீதி வந்தேன் "

"வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பண்ணு "

"ஓகேனா"

இரண்டு மணி நேரம் ஆகியும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவனே திரும்ப கூப்பிட்டான், ஆனால் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு ரூமிலேயே வைத்துவிட்டாள்
பத்துமணிக்கு செல்லை எடுத்து பார்த்த பின்புதான் அவளுக்கு ஞாபகம் வந்தது ஐயையோ திட்டுவானே, செல்ல சைலன்ட்ல போட்டு ரூம்ல வச்சிட்டு போயிட்டேன் மெசேஜை தட்டிவிட்டாள்

"ஓகே நாளைக்கு கால் பண்றேன் இப்ப என்ன பண்ற சாப்டியா "என்ற மெசேஜ் அவனிடம் இருந்து அடுத்த நொடியில் வந்தது

" சாப்பிட்டேன் நீங்க எப்படி இருக்கீங்கனா ரொம்ப நாளாச்சு பேசி "

"வொர்க் ரொம்ப அதிகமா இருந்தது அதான் பேச முடியல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் "
இப்படியே இவர்களது உரையாடல் இரவு பன்னிரண்டு மணிவரை தொடர்ந்தது

"ஒரு மணி நேரமா உனக்கு கால் பண்றேன் பிஸி பிஸி னு வருது யார்ட்ட பேசிட்டிருந்த" எரிந்துவிழுந்தான் அவளிடம்

என்னோட ரிலேஷன்ட்ட பேசிட்டு இருந்தேன்,
யாரு?

" ராம், என் அத்தை பையன் துபாய்ல இருந்து கால் பண்ணான் சின்ன வயசுல இருந்தே நானும் அவனும் பிரண்ட்ஸ், அம்மா வேற பேசிட்டு இருந்தாங்க அதான் ரொம்ப நேரம் ஆயிடுச்சு ,அவன் பையனுக்கு வேற முடியலைன்னு சொல்லிட்டு இருந்தான் போய் பாக்கணும் அவள் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே போக ,,,,

"யார் பையன் "

'ஐயோ கடவுளே இவனுக்கு புரியவைக்க கொள்ளையும் '
"ராமோட பையன் தான் "

"என்ன படிக்கிறான் "

"ரெண்டு பசங்க அவனுக்கு பெரிய பையன் எயித்தோ நயன்தோ படிக்கிறான் , சின்ன பையன் சிக்த்து படிக்கிறான் "

" ஓஓஓஓஓஓஓஓஓ"

"ராமுக்கும் எனக்கும் பத்தொன்பது வயசு வித்தியாசம் இருக்கு , சின்ன வயசுல என்ன தூக்கி வளர்த்தவன், பிரண்ட்ஸ் மாதிரிதான் பேசிக்குவோம் சின்ன வயசிலிருந்தே டா போட்டு பேசி பழகிடுச்சு , நான் எயித்து படிச்சப்ப தான் அவனுக்கு மேரேஜ் ஆச்சு, என்னையும் பெரிய மனுஷி மாதிரி பொண்ணு பாக்க வேற கூட்டிட்டு போய்டுவாங்க , இவனுக்கு எவ்வளவு பொண்ணும் பாத்தோம் தெரியுமா மேரேஜ் முடியறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு அவள் சொல்லிக் கொண்டே போக ,,,,,,,,,,,,"

"என் காது வலிக்குதுடி போதும்"

"என்னது டி யா"

"ஆமாண்டி இப்ப என்னடி அதுக்கு "

"நீங்க என்ன ஓவரா டி சொல்றீங்கன்னா"

"சொன்னா என்னடி"

" நோ நீங்க என்ன டி சொல்லக்கூடாது"

" அப்படிதாண்டி சொல்லுவேன் "

"அப்ப நானும் உங்கள டா சொல்லிடுவேன்"

" சொல்லிக்கோ "

"என்ன சொல்லிக்கோ, பேர் சொல்லி கூப்பிடதுக்கே திட்டினவர்தானே நீங்க"

"முன்னாடியே உன்கிட்ட இதுக்கான ஆன்சர் சொல்லிட்டேன் ஃபர்ஸ்ட் நம்ம க்ளோசா பேசல, இப்போ க்ளோஸ் ஆகிட்டோம் ,
இப்ப நீ போடான்னு சொன்னாலும் எனக்கு கோவம் வராது புரியுதா "
' அப்படியா'
"சரிடா தூங்குமூஞ்சி , போடா போய் தூங்குடா தூங்கு மூஞ்சி "

" என்னது தூங்குமூஞ்சியா"

"ஆமா தூங்கு மூஞ்சி எப்ப பாரு நைட்டே பேசுறது , டெய்லி நான் தானே குட் மார்னிங் சொல்றேன், என்னைக்காவது ஒரு நாள் நீங்க சொல்லிருக்கீங்களா தூங்கு மூஞ்சி"

விடியற் காலை 6 மணியளவில் ஆர்த்தியின் போன் அலறியது இந்த நேரத்தில் யார் என்று பதறி அடித்துக் கொண்டு எழுந்து போனை பார்த்தவளுக்கு அதிர்ச்சி என்ன இந்த நேரத்துல கூப்புறான் யோசனையுடனே
"ஹலோ என்ன னா இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க "

" நீதானே என்னைக்காவது காலையில குட்மார்னிங் சொல்லி இருக்கீங்களான்னு கேட்ட , அதான் கால் பண்ணேன் "

"அட லூசு , அதுக்குன்னு இப்படியா நான் பயந்திட்டேன் தெரியுமா "

"தூங்கமூஞ்சி என்ன சொல்லிட்டு நீ இன்னும் தூங்கிட்டு இருக்கியா நீ தான்டி தூங்கமூஞ்சி "

"நான் இல்ல நீங்கதான் தூங்குமூஞ்சி"

" இல்ல நீ தாண்டி தூங்கமூஞ்சி"

"நீதாண்டா தூங்குமூஞ்சி போடா சரி சரி போன வை டா " சட்டென்று போனை கட் பண்ணிவிட்டாள்

"ஏன்டி கட் பண்ண"? (மெசேஜ்ஜில்)

"காலை போன் பேசி, அம்மா யாருன்னு கேட்டு , சிவான்னா பேசுதுன்னு சொல்லி, என்ன இந்த நேரத்துல பண்ணிருக்கான் அம்மா கேட்க, குட்மார்னிங் சொல்ல கூப்புடுச்சுமா சொன்னா நீங்கதான் திட்டுவாங்குவீங்க பரவாயில்லையா"

" அட அறிவு கெட்டநாயே"

நாயே என்றதும் ஆர்த்திக்கு கோபம் வந்நுவிட்டது
"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் " என்று அனுப்பிவிட்டு எரிச்சலோடு செல்லை சார்ஜில் போட்டுவிட்டு திரும்ப படுத்துக்கொண்டாள்
'. இவன நானா கால்பண்ண சொன்னேன், நல்லா பேசிட்டு இருக்கப்பவே ஏதாவுது சொல்லி டென்ஸன் பண்றான் இதே இவனுக்கு பொழப்பாபோச்சு '


மனதோடு மீண்டும் பேசுவோம்,,,,,,
-
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லைக் போட்டுட்டு போற நல்ல உள்ளங்கள் இரண்டு வார்த்தை பேசிட்டு போங்க, உங்களுக்காகத்தான் மனதோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்
உங்க மனசுல இருக்குற நிறைய சொல்லாடியும் குறையையாவுது சொல்லிட்டு போங்கலே,,,,, ்
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 9


பத்து நாட்களாகியும் சிவாவிடமிருந்து ஆர்த்திக்கு எந்த மெசேஜ்ம் வரவில்லை
பேசினா பேசுறான் பேசாட்டி போறான் நமக்கு என்ன வந்துச்சு மனதுக்குள் கெத்தாக நினைத்துக் கொண்டாலும்
அவனிடம் பேசாமல் இருந்தது என்னவோ போலிருந்தது செல்லை பார்ப்பதும் வைப்பதும்மாகவே இருந்தாள் ,
மனம் கேட்காமல் அவனுக்கு மெசேஜ் பண்ணி விட்டாள்

"நீங்க நாய்னு சொன்னதுக்கு நான் தான் கோபப்படும் நீங்க இல்லை "
என்று மெசேஜ் அனுப்பி விட்டாள்

அவனிடமிருந்து மறுநொடியே ரிப்ளை வந்தது

"நீ பேசாத, இனிமே எனக்கு மெசேஜ் பண்ணாத "

"ஏன்"

" உனக்கு பேச தெரியாது , பிரண்ட்ஷிப்பா பழகத் தெரியாது , சோ இனிமே நம்மளோட பிரண்ட்ஷிப் தேவையில்லை, இனிமே எனக்கு மெசேஜ் பண்ணாத "

அவன் அனுப்பியிருந்த பதிலை பார்த்ததும் ஆர்த்தியின் கண்கள் குளமாகியது,
அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவனிடமிருந்து கால் வரவும் பயத்துடன் யோசித்தபடி யோசித்தபடியே

"ஹலோ"

"என்ன திமிரா பேசுற, மைண்ட் யுவர் வேர்ட்ஸ்னு"

"நீங்க மட்டும் என்ன நாய்னு சொல்லலாமா"

"நாய்னு சொன்ன உடனே நீ நாய் ஆகிட்டியா"

ஆர்த்திக்கு கோபம் பொங்கியது
"தேவை இல்லாமல் பேச வேண்டாம் "

"முதல்ல பெரியவங்ககிட்ட எப்படி மரியாதையை பேசணும்னு கத்துக்க "

"மரியாதையா பேச எனக்கு தெரியும் மத்தவங்ககிட்ட எப்படி பேசணும் முதல்ல நீங்க தெரிஞ்சுக்கங்க "

"நேர்ல வந்தேன் அறஞ்சுடுவேன் சொல்லிட்டேன் "

" நீங்க அடிக்கிற வரைக்கும் என் கை என்ன பூவா படிச்சுக்கிட்டு இருக்கும் , உங்க சட்டையை கோத்துபிடிக்க எனக்கு எவ்ளோ நேரம் ஆகும்"

",,,,,,,,,,,,என்னமோன்னு நினைச்சேன்டி உன்ன, என் சட்டையை கோத்து பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் கேட்குற குட் , அந்த அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா"

"எதுக்கு தைரியம் இருக்கணுமோ அதுக்கு இருந்தே ஆகணும் "

"புரியல "

"என் மேல தப்பு இல்ல"

"அப்போ பயம் இல்லை"

"எதுக்கு பயப்படனும் பொய் சொன்னா பயப்படனும், தப்பு பண்ணா பயப்படனும் வேற எதுக்கு பயப்படனும் "

"என்னை யாரும் இப்படி பேசினதே கிடையாது தெரியுமா, எங்க வீட்ல கூட என்கிட்ட பேச பயப்படுவாங்க"

" எல்லாரும் உங்ககிட்ட ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, நான் எதுக்கு உங்களுக்கு பயப்படனும் உங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை , அப்படி பார்த்தா காலேஜ்ல என் பிரெண்ட்ஸ் கூட என்கிட்ட பேச யோசிப்பானுங்க நீங்க என்ன நாய்னு சொல்றீங்க, அப்ப எனக்கு கோபம் வராதா"

" நீ என்கிட்ட பேசாத என்றபடி போனை வைத்து விட்டான் "

'ஆர்த்திக்கு கோபத்தில் அவளது மூக்கு விடைத்தது , பெரிய பருப்பு இவன் , என்னை பேசு,பேசாதன்னு இவன் என்ன சொல்றது அதே கோபத்துடன் செல்லை எடுத்து

"என்ன பேசு, பேசாதன்னு சொல்ற உரிமை உனக்கு இல்லை"
என்ற மெசேஜ் அனுப்பிவிட்டு செல்லை அணைத்துவிட்டு படுத்து விட்டாள்

இரவு முழுக்க அவன் பேசியது தான் அவள் நினைவில் வந்து கொண்டே இருந்தது
' அவன் உன்ன நாய் சொன்னதுக்கு நீ மைண்ட் யுவர் வேர்ட்ஸ்னு சொல்லிட்ட அதோட முடிஞ்சு போச்சு , அவன் சட்டையை பிடிப்பேன்னு நீ சொன்னது தப்பு '
'அறஞ்சுடுவேன் அவன் மட்டும் சொல்லலாமா '
தேவை இல்லாத பேச்செல்லாம் வேண்டாம் ஆர்த்தி, ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க உரிமை இல்லாத இடத்தில் வர்ற கோபமும் பாசமும் என்னைக்குமே பிரச்சனையைத்தான் உண்டு பண்ணும், இனி அவனுக்கு மெசேஜ் பண்ணாத அதான் உனக்கு நல்லது '
அவளது மூளை எடுத்துரைத்ததை கர்மசிரத்தையாக இரண்டு நாட்கள் கடைபிடித்தாள், மூன்றாவது நாள்

"அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே டூ யூ "
என்ற மெசேஜை தட்டிவிட்டாள்,
நீ திருந்தவே மாட்ட அவள் மனம்
திட்டிக்கொண்டே இருந்தது, அதை கிடப்பில் போட்டுவிட்டு,
அவனிடமிருந்து எந்த ரிப்ளையும் வரவில்லையே செல்லையே பார்த்துகொண்டு இருந்தாள்,
ஒரு மணி நேரம் ஆகியும் அவனிடம் இருந்து பதில் வரவில்லை , மனது படபடவென்று அடிக்க ஆரம்பித்து விட்டது

''சாரி நான் பேசுனது தப்புதான் நான் உங்கள் அப்படி சொல்லியிருக்க கூடாது கோபத்தில் பேசிட்டேன் சாரி ''

என்ற மெசேஜை தட்டிவிட்டாள் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பிறகும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை

அன்று இரவு 12 மணிக்கு, மீண்டும் பிறந்தநாள் வாழ்த்து கூறி, மெசேஜ் அனுப்பிவிட்டு, சொல்லை சுவிட்ச் ஆப் பண்ணி விட்டு படுத்துவிட்டாள்

மறுநாள் அவனிடமிருந்து மெசேஜ் வரும் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது, இனி அவனிடம் இருந்து மெசேஜ் வராதோ என்று கவலையோடு இருந்தவளுக்கு இரவு 8 மணிக்கு அவனிடமிருந்து போன் வரவும் துள்ளிக்குதித்து செல்லை ஆன் செய்ய போனவளுக்கு திடீரென்று பயமும், பதட்டமும் வந்தது அதைவிட அவன் சட்டையை பிடிக்கிறேன்னு பேசிட்டு எப்படி அவன்ட்ட பேசுறது, தயக்கமாகவும் இருந்தது

"ஹலோ அவன் பேசும் முன்பே
மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே அண்ணா"

" தேங்க்ஸ்மா "

"எப்படி இருக்கீங்க அண்ணா "

"நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க"

"சாரி அண்ணா, நான் உங்கள அப்படி சொல்லிருக்க கூடாது, சாரி"

"ம்ம்ம் பரவால்ல விடு "

"இல்ல உங்களுக்கு இன்னும் கோவம் போகவேயில்ல"

"எப்படி சொல்ற"

" உங்க குரல் தான் சொல்லுதே"

" அப்படியா ம்ம்ம் அப்பறம் என்ன"

" நீங்கதான் சொல்லணும், பர்த்டே ட்ரீட் எப்ப தர்றீங்க "

"ஊருக்கு வந்த உன்ன கண்டிப்பா உனக்கு ட்ரீட் உண்டு"

****************************************************

ரமேஷ் வீட்டிற்கும் , தங்கள் குடும்பத்திற்கும் பொதுவான உறவினர் வீட்டிற்குச் சென்று , ரமேஷ் வீட்டில் ஆர்த்திக்கு போட்டிருந்த செயின் மோதிரத்தையும் நிச்சய புடவை, முகூர்த்தப் புடவைக்கான பணத்தையும் கொடுத்து அவர்களிடம் கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தார்

"என்ன கலா கோயில்ல எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா "

" நல்லபடியா நடந்துச்சு, நம்ம கோயிலுக்கு நாளைக்கு மாப்பிள்ளை கூட்டிட்டு போய்ட்டு வந்துருவோம் "

"சாய்ந்தரம் வரேன்னு சொன்னாரு பேசிக்குவோம் "
அதேபோல் ஆறு மணிக்கு மனைவியின்
வீட்டுக்கு வந்தான் சங்கர்

கோவிலுக்கு போவது பற்றி நடராஜனும் ஆனந்தனும் சங்கரிடம் பேசி முடிவு செய்தனர், அவர்களிடம் பேசி விட்டு ராஜியைகாண மாடி ஏற சென்றவனை தடுத்த கலாவதி

"ராஜி மேல இல்லப்பா இப்ப தான் கோயிலுக்கு கிளம்பி போனா"

அவன் முகத்தில் யோசனையை கண்ட சித்ரா உடனே கணவனிடம்

"கவிதா கோவிலுக்கு போறதா சொன்னாளாம், நானும் வரேன்னு இவளும் போயிருக்கா, செல்லையும் வீட்ல விட்டுட்டு போயிட்டா கவிதாவுக்கு போன்பண்ணி சீக்கிரம் வர சொல்லுங்க "

கவிதாவிற்கு போன் பண்ண போன ஆனந்தனை தடுத்து
"பொறுமையா சாமி கும்பிட்டு வரட்டும் மாமா நான் வெயிட் பண்றேன் " என்றபடி மாடி ஏறி சென்றுவிட்டான் சங்கர்
பொறுமையாக வரட்டும் என்று சொன்னவன் பொறுமையை மொத்தமாக இழந்து ராஜியை கொத்திக்குடிக்க காத்துக்கொண்டிருந்தான்

தன்னை வதைக்க ஒருவன் காத்திருக்கிறான் என்பதை அறியாமல் நடந்ததை நினைத்து கருமாரிஅம்மன் முன் தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் ராஜி

"நடந்ததை நினைச்சு அழாத , இனி நடக்கப் போறதை பற்றி யோசி", அந்த கருமாரியம்மன் கவிதாவின் மூலமாக அவளுக்கு அதை உணர்த்தினாள்,
கவிதாவின் கூற்றை அப்போது ராஜி உணர்ந்திருந்தால் பின்வரும் விளைவுகள் வேகத்தையாவது தடுத்து இருக்கலாம்,,,,,,,


மனதோடு மீண்டும் பேசுவோம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன்
அத்தியாயம் 10


"கவிதாவுக்கு போன் பண்ணுங்க " ஆனந்தனிடம் படபடத்தாள் சித்ரா,

" இப்பதான் கோயிலுக்குள்ளேயே போயிருப்பாங்க அதுக்குள்ள வர சொல்ற " கேள்வியுடன் மனைவியின் முகத்தை ஏறிட்டார்

அருகிலிருந்த நடராஜனை பார்த்து,
"மாமா உங்களுக்கு வாக்கப்பட்டு,
என்அக்கா இந்த குடும்பத்துக்கு வந்தது பத்தாதுன்னு, நான் வேணாம்னு சொன்னத நீங்களும் காதுலவாங்கல , என் அப்பா, பெரியப்பாவையும், என் விருப்பத்த கேட்கவிடாம பண்ணி, உனக்கு துணையாக அக்கா இருப்பா, அவளுக்கு துணையாக நீ இருக்கப் போற , என் தம்பி நல்லவன் , நாளையும் யோசித்து செயல்படுவான், திறமையானவன், கவர்மெண்ட் உத்யோகம்னு, சொல்லி என் வாழ்க்கையே பாலாக்கிட்டீங்க நான் அப்படி என்ன மாமா உங்களுக்கு பாவம் பண்ணேன் "
நடராஜனிடம் பொரிந்து தள்ளிவிட்டு ஆனந்தன் கையில் இருந்த மொபைலை வெடுக்கென பிடிங்கிக்கொண்டு சென்றாள்

" இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த குதி குதிச்சுட்டு போறா பாத்தீங்களாண்ணா,
அப்பவே சொன்னேன் பார்க்கவே திமிரா இருக்கா வேண்டாம், வேற பொண்ண பார்க்கலாம்னு சொன்னேன் கேட்டீங்களா, உங்களால இப்ப நான்ல அவஸ்தைபடுறேன் "
ஆனந்தன் மறுபுறம் பொரிந்து தள்ள

கடுப்பான நடராஜன் கையில் இருந்த பேப்பரை ஆனந்தன் மீது தூக்கி வீசிவிட்டு

"அடியேய் கலா, எனக்கு டிபனும் வேணாம் ஒண்ணும் வேணாம், கடைக்கு போறேன்"
கோபமாக வெளியேறப்போனவரை தடுத்த ஆனந்தன்,

"அவதான் லூசுமாரி உளறிட்டு போறானா,
நீ என் மேல கடுப்பகாட்டிட்டு சாப்பிடாம போற "

"டேய் வேண்டாம் என்வாயை கிளற, அவ்வளவு தான் சொல்லிட்டேன்
பொண்ணு திமிரா இருந்தாலும் அந்த திமிருதான் எனக்கு புடிச்சிருக்கு, கட்டுனா அவளைத் தான் கட்டுவேன்னு எந்த வாய்டா சொல்லுச்சு, சித்ரா பேசுறதக்கூட நான் பொறுத்துக்குவேன், அவ சொன்னதெல்லாம் உண்மை , சித்ராவை யோசிக்கவிடாம, கலாவை பேசவச்சு சம்மதிக்க வச்சேன், உன் மாமனார் கூட ஒன்னும் பிரச்சனை பன்னல ஒத்துகிட்டாரு, ஆனா என் மாமனார் எவ்வளவு பிரச்சனை பண்ணாரு தெரியுமா , ஒரே குடும்பத்துல ரெண்டு பொண்ண கொடுத்தா தேவையில்லாத பிரச்சனை வரும் அது,இதுன்னு சொல்லி தன் மச்சினன் மகனுக்கு சித்ராவ கட்ட பிளான் பண்ணாரு, அதெல்லாம் சமாளிச்சு, தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு என் மாமனாரையும் சம்மதிக்க வச்சு உன் கல்யாணத்த பண்ணப்ப சிங்கம் மாதிரி இருந்தேன்டா உன் அண்ணி என் கிட்ட ஏதாவது கேட்கணும்னா கூட, யோசிச்சு நேரம் பார்த்து பேசுவா , ஆனா சித்ரா பட்டாசுமாரி பொறிஞ்சுடுவா, கோபமோ சந்தோஷமோ மனசுல வச்சுக்காம அப்பவே படபடன்னு பேசிடுவா அந்த குணம்தான் சித்ராட்ட எனக்கு புடிச்சது, உனக்கும் பொண்ணு புடிச்சு போச்சுன்னு, யோசிக்காம கல்யாணத்த பண்ணிவச்சுட்டு இப்ப நான் அனுபவிக்கிறேன், வேற பொண்ணு
பாக்கசொன்னேன்னு வாய் கூசாம சொல்ற வேற பொண்ண நான் பாத்துட்டு வந்ததுக்கு மூக்கு சரியில்லை, முட்ட கண்ணாயிருக்கு, இது குரங்கு மூஞ்சியாயிருக்கு, நீ மட்டும் செவத்த பொண்ணா கட்டிக்கணும் எனக்கு இந்த கருப்பியானு என்ன எவ்வளவு பாடு படுத்தின"

" சரி விடுன்னா, பழைய குப்பை எல்லாம் இப்ப எதுக்கு"

"உன் மரமண்டைக்கு
ஞாபகப்படுத்ததான், வேற பொண்ணு பாருனு வேகமாக சொல்ற , தம்பியே வாயைத்திறந்து சொல்லிட்டான், இனி நாள் கடத்த கூடாதுன்னு, நான் நாய் மாதிரி ஊர் ஊரா சுத்தி பொண்ணு பாத்துக்கிட்டு இருந்தா, சித்ரா வீட்டுக்கு போய்,நைசா அவளுக்கு லவ் லெட்டர் கொடுத்துட்டு நீ வந்துட்ட, அந்தக் கிறுக்கி என்ன லெட்டர்னு கூட பாக்காம வாங்கி படிச்சுப்புட்டு, என்ன விட்டு கழட்டுறா, உங்க தம்பின்னு உள்ள விட்டதுக்கு லவ் லெட்டர் கொடுத்துட்டு போறாருன்னு, அன்னைக்கு வாங்க ஆரம்பிச்சதுடா, இருபத்தி மூணு வருஷமா வாங்குறேன், அவ என்ன திட்டுற மாதிரிதான் நீயும் நடந்துக்கிற, தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க , என் விசயத்துல அது பொய்"
பல வருடங்களாக தன் மனதிற்குள் குமுறியதையெல்லாம் கோபமாககொட்டிவிட்டு வெளியேற சென்றவரை

"இருனா சாப்பிட்டு போகலாம் "

"என் மகன் வீட்ல போய் நிம்மதியா சாப்பிடுகிறேன்டா "

ஆனந்தனுக்கும் நடராஜனுக்கும், பரம்பரைத் தொழிலே மளிகைக்கடை தான் அவர்களின் பெற்றோர் காலத்தில் மளிகை கடையாக இருந்ததை நடராஜனும் ஆனந்தனும் உழைத்து பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஆக மாற்றி இருந்தார்கள்
ஆனந்தனுக்கு படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் பொறியியல் பட்டம் பெற்று ஈபில் இன்ஜினியராக பணியாற்றினார்
லீவு நாட்களில் அண்ணனுடன் சேர்ந்து கடையில் இருப்பார்
நடராஜனுக்கு ஒரே மகன் வாசு, முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அவனுக்கு வியாபாரத்திலேயே நாட்டம் அதிகம் ஆதலால் கொள்முதல், மொத்த வியாபாரம் என கடைகுள்லே தன்னை
மூழ்கடித்துக்கொண்டான், ராஜியை விட
பதிமூன்று வயது மூத்தவன், பொறுப்புள்ள அண்ணன், தங்கையின் மேல் பாசம்அதிகம், ஆனால் ராஜி விளையாடும் வயதில் வாண்ணா விளையாடலாம் அழுது அடம் பிடிப்பவளை சமாதானப்படுத்திவிட்டு, கடைக்குச்சென்றுவிடுவான், தன்னோடு விளையாடி நட்பாக பழக வேண்டும் என்று எதிர்பார்த்த ராஜிக்கு ஏமாற்றம், ராஜியின் வயதிற்கு இறங்கி அவளுடன் பழக அவன் முயற்சிக்கவில்லை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வான், இருவரும் கோயில் ஹோட்டல் என்று போவார்கள் பாசத்தை காட்ட தெரிந்தவனுக்கு அவளுடன் நட்பாக பழக தெரியவில்லை, ராஜி கல்லூரியில் அடி எடுத்து வைத்த முதல் வருடம் வாசுவிற்கும் சித்ராவின் அண்ணன் மகள் நந்தினிக்கும் திருமணம் முடித்து அவர்கள் கடையின் அருகே வந்த இடத்தை வாங்கி அதில் வீடு கட்டி மகனையும், மருமகளையும் தனிக்குடித்தனமாக வைத்துவிட்டார் நடராஜன்,.

தற்பொழுது வாசுவிற்கு 7 வயதில் ஒரு மகனும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்

சித்ராவின் அண்ணன் மகன், நந்தினியின் அண்ணன் கிருஷ்ணனுக்கும்- ராஜிக்கும் திருமணம் செய்துவிட எண்ணி நடராஜனும் ஆனந்தனும் முடிவெடுத்து ஜாதகத்தை பார்க்கும் பொழுது இருவருக்கும் பொருத்தம் இல்லை, சொந்தத்தில் இந்த பொண்ணுக்கு அமையாது என்றும் ஜோசியர் உறுதியாக கூறிவிட்டார்

கிருஷ்ணன் சென்னையில் தன் நண்பனோடு சேர்ந்து கண்ஸ்டக்‌ஷன், எக்ஸ்போர்ட் கம்பெனி என நடத்தி வந்தான்
ராஜியும் கிருஷ்ணனும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள், அவன் கல்லூரி படித்தது எல்லாம் சென்னையில் ஆகையால் போக்குவரத்து குறைந்ததே தவிர அவர்களது நட்புறவு நல்ல முறையில் தொடர்ந்து கொண்டிருந்தது, ராஜியின் திருமணத்தின் போது தவிர்க்க முடியாத ப்ராஜெக்டில் கிருஷ்ணன் மாட்டிக்கொண்டான் ஆதலால் துபாயில் மூன்று மாதம் இருக்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான்
**********************

சித்ராவின் பதட்ட குரலைக்கேட்டு அடுத்த மூன்றே நிமிடத்தில் ராஜியை அவளது வீட்டில் கொண்டு வந்து சேர்த்துவிட்டாள் கவிதா
" என்னம்மா ரொம்ப பதட்டமா பேசி உடனே வர சொன்னியாம் என்னாச்சு"

"சங்கர் உனக்காக அரை மணி நேரமா காத்திருக்கான் என்னன்னு போய்கேளு போ"
சங்கர் வந்திருக்கான் என்ற உடனே ராஜிக்கு மனதில் கிலி உண்டாகியது
இப்ப எதுக்கு வந்துருக்கான்
'கடவுளே எனக்கு நிம்மதியே இல்லையா'

அறைக்குள் நுழைந்தாள்
கோவைப்பழம் என சிவந்திருந்த சங்கரின் விழிகளை கண்டவுடன் பயந்தவள், அவன் கையில் அவளுடைய மொபைலை பார்த்தவுடன் ராஜிக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது, தன் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது
நொடிக்குள் அவளருகில் வந்தவன் வேகமாக கையை ஓங்கவும்

"அம்மா,,,,,,,,, " என்று முகத்தை மூடிக்கொண்டாள்

அவன் அடிக்கவில்லை என்றதும், முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி பயத்துடன் அவனை ஏறிட்டாள்
அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளின் கூந்தலை அழுத்தமாக பற்றி
ராஜியின் செவ்விதழை சங்கரின் முரட்டு இதழ் வன்மையாக பற்றியது,,,,,,,,,,,,










மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 11


"இரவு 11 மணி சாப்பிட்டீங்களா அண்ணா" மெசேஜ்ஜில் - ஆர்த்தி

"நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டியா"- சிவா

" சாப்பிட்டேன் என்ன இன்னைக்கு ரொம்ப பிசியா "

"ம்ம்ம்ம்"

"என்ன ம்ம்ம்ம்"

"நீ என்ன லவ் பண்றியாடி" எதிர்பார்ப்புடன் கேட்டான் சிவா

" இல்ல நீங்க "

"அதான் இல்லைன்னு சொல்லிடல அப்புறம் ஏன் கேக்குற"

'நீ ஆமான்னு சொல்லிருந்தா கூட என்பதில் என்னவா இருக்கும்னு எனக்குத் தெரியலையே'

"அப்பறம் ஏன்டி மெசேஜ் பண்ணிட்டு இருக்க"

"நீங்க எனக்கு நல்ல நண்பன், உங்க கிட்ட எல்லாம் விசயத்தையும் ஷேர் பண்ணிக்கலாம்னு தோணுது அதான் பண்றேன்"

"சரிடி "

"இந்த டி ய விடவே மாட்டீங்களா"

" டி சொல்ல கூடாதுன்னு நீ சொல்ல சொல்ல தாண்டி எனக்கு டீ போட்டு பேசணும்னு தோணுது "

"டி அப்படிங்கிறது உரிமையை காட்ற எழுத்து என் ஹஸ்பெண்ட் தான் என்ன டி சொல்லணும் நீங்க சொல்லக் கூடாது புரியுதா"

"நான் அப்படி தாண்டி சொல்லுவேன் "

"உன்னை எல்லாம் திருத்தவே முடியாது போடா தூங்குமூஞ்சி"

" உங்க பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருந்து எனக்கு ஒருத்தர் பிரண்ட் request கொடுத்தாரு "

"யாரு "?

அவன் பெயரை சொன்னாள்
"பிரண்ட் request அக்சப்ட் பண்ணிட்டேன் "

"ஓ ,,,"

"பேசினேன் "

",,,,,,,,,,,,,,,,"

"உங்க ரிலேஷன்னு சொன்னாரு "

"ம்ம்ம்"

"பேசலாமா நல்ல டைப்பா"

"அவனோட request அக்சபெட் பண்றதுக்கு முன்னாடி நீ என்கிட்ட கேட்டிருக்கணும்,
இல்ல பேசுறதுக்கு முன்னாடி கேட்டுருக்கணும், எல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து கேக்குற பேசட்டுமா நல்ல டைப்பாண்ணு "

"சாரி"

"நல்ல டைப் தான் ரொம்ப பேச வேண்டாம் "

'ரொம்ப பேச வேண்டாமா, கடவுளே சின்ன வயசுல சைக்கிள் ஓட்டுனதுலயிருந்து ஃபேமிலி ஃப்ரண்ட் ஆன வரைக்கும் சொல்லியிருக்கேன், இப்ப சொன்னா திட்டுவானே, சரி சமாளிப்போம் '

"சரினா"

அடுத்த நாளே போனில் மண்டகப்படி வரும் என்று ஆர்த்தி எதிர் பார்க்கவில்லை,

"ஏண்டி அறிவு கெட்ட நாயே, யார்கிட்ட என்ன பேசணும், எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா அப்படியே சின்ன வயசுல இருந்து கதை சொல்லிருக்க"

"சொன்னதுல என்ன தப்பு உண்மையைத்தானே சொன்னேன், இதுல என்ன இருக்கு , ஏன் கத்துறீங்க, அம்மா,,,,, அம்மா கூப்பிட்டாங்க நான் அப்புறம் பேசுறேன்"

அரை மணி நேரம் கழித்து மெசேஜில் "சொல்லுங்கனா கத்துகிறீர்கள் அப்படி என்ன சொல்லிட்டேன் "

"நீ பேசாதடி யார்கிட்ட என்னை எப்படி பேசணும்னு அறிவு கூட உனக்கெல்லாம் இல்லை"

"அப்படி என்ன சொல்லிட்டேன் "

"சின்ன வயசு கதையெல்லாம் பேசிருக்க அதெல்லாம் உன்கிட்ட கேட்டானா அவன்"

" சொன்னதுல என்ன தப்பு "

"நீ யாருனு எங்க வீட்டுல கேட்டு இருப்பான் "

"கேட்டா சொல்லிட்டு போறாங்க இதுல என்ன இருக்கு இதுக்கெல்லாம் திட்டுறீங்க"

"உனக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது "

"எனக்கு புரியுற மாதிரி உனக்கு சொல்ல தெரியலன்னு சொல்லு, அதை விட்டுட்டு தேவையில்லாம என்கிட்ட கத்தாத
பேட் நைட் ,டெவில் ட்ரீம்ஸ் "

இரண்டு நாட்கள் இருவரும் பேசவில்லை
"என்ன மேன் ரொம்ப பண்ற பேச மாட்டியா"
'அவன்கிட்ட வாங்காம உன்னால இருக்க முடியாது'

"இன்னைக்கு மதர்ஸ் டே தெரியுமா, உன் ரிலேஷன் பையன் கூட எனக்கு விஷ் பண்ணான் தெரியுமா"

"மதர்ஸ் டே க்கு உனக்கு ஏன்டி விஷ் பண்ணனும் "

"பெண்களுக்கு இயற்கையாகவே தாய்மை உணர்வு இருக்கு , இயற்கையாகவே இளகிய மனம் படைத்தவர்கள் பெண்கள் அதனாலதான் ஆம்பளைங்க , என்ன பேசினாலும் பொறுமை, சகிப்புத்தன்மையோட இருந்து உங்க மேல அன்பையும் பாசத்தையும் காட்றாங்க அந்த தாய்மை உணர்வு இல்லைன்னா,,,,,, "

"ஏய் போதும் போதும் போதும்
ஹாப்பி மதர்ஸ் டே ஹாப்பி மதர்ஸ் டே"

"இந்த ஒரு வார்த்தை கேட்க இவ்ளோ பேச வேண்டியது இருக்கு உங்க கிட்ட,
உங்க ரிலேஷன் பையன் எவ்ளோ அழகா விஷ் பண்ணான் தெரியுமா, உங்கள விட நல்லா பேசுறான் "

"அப்ப அவங்க கிட்டயே பேசு, என்கிட்ட இனிப்பு பேசாத"

"நான் அவன் கிட்ட பேசுறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை "

'அட அறிவு கெட்ட நாயே எனக்கு பிரச்சனை இல்ல டி , உனக்கு தான் பிரச்சனை அதை ஏன் உன் மரமண்டைக்கு புரியவே மாட்டேங்குது'

"ஆமா பிரச்சனை தான் இனி நீ அவன் கிட்ட பேச கூடாது, அவன்கிட்ட பேசினா என்கிட்ட பேசாத முடிவு பண்ணு "

"ரொம்ப நல்ல பையன்னா "

" சரி அப்பா அவங்கிட்டயே பேசிக்க "

"ஏன் இப்படி பிரச்சனை பண்றீங்க "

" உன் பிரண்டு லிஸ்டுல இனி அவன் இருக்கக் கூடாது"

'இவன் ஏன் இப்படி இருக்கான் சே,,,'
"சரி னா"

"இப்ப நான் செக் பண்ணுவேன் "

"சரி பண்றேன் "

"இனிய பிரண்ட் லிஸ்ட்ல நீ இருக்க மாட்ட"

" ஏன்னா"

"அதுதான் நல்லது"

ஒரு வாரம் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை
"குட் மார்னிங் தூங்கு மூஞ்சி "

'மார்னிங் மார்னிங் என்னடி பண்ற"

" நான் ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவீங்களா "

"என்னடி "

"ஏன் அந்த பையன் கிட்ட பேச வேண்டாம்னு சொன்னீங்க "

"ஏண்டி "

" என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ் "

"இப்ப நீ அவன் கிட்ட பேசுவ, அவன் உன்ன பத்தி எங்க வீட்ல கேட்பான் உன் கிட்ட பேசுறது எங்க வீட்டுக்கு தெரியும் "

"சரி இதுல என்ன தப்பு , ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா தப்பா அப்படி பார்த்தா நம்ம ரெண்டு பேரும் பேசுறதும்தானே தப்பு"

"இனி என்கிட்ட பேசாதடி "

" பிளாக் பண்ணுங்க, நானும் இனி பேசல" கோபத்தில் ஆர்த்தி சொல்லிவிட அவனும் அவளை ப்ளாக் பண்ணி விட்டாள் இதை எதிர்பார்க்காத ஆர்த்தி கோபத்தில் வெடித்தாள்

மனதோடு மீண்டும் பேசுவோம் ,,,,,,,,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 12


சங்கரின் பல் பட்டு காயம்மாகியிருந்த தன் செவ்விதழ்களிலும், கன்னத்திலும் தேங்காய் எண்ணையை
தடவிக்கொண்டிருந்தாள் ராஜி

சங்கரின் கோரைப்பற்கள் ஏற்படுத்திய காயத்தின் வலியை விட , அவன் பேசிய வார்த்தைகளின் வலியைதான் அவளால் தாங்கமுடியவில்லை, நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது,
அவள் வீட்டின் ஆண்கள் யாரும் கெட்ட வார்த்தை பேசி அவள் கேட்டதில்லை

உடல் கூசும் அளவிற்கு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினான், ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் தன் காதுகளை மூடிக் கொண்டாள்,
அதற்கும் ஊசியாய் வந்து குத்தியது அவனின் அடுத்த வார்த்தை

"ஏன் அந்த கனடாகாரன் ரொம்ப டீசண்டா பேசுவானோ சொல்லுடி "
மீண்டும் அவள் இதழையும், கன்னத்தையும் காயப்படுத்திவிட்டு, அவளின் மொபைலை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் ,,,,,,,,,,,

இரண்டு நாட்கள் கழித்து முகூர்த்தப் புடவை எடுக்க ராஜியின் வீட்டில் உள்ள அனைவரையும் நேராக கடைக்கு வந்துவிட சொல்லிவிட்டான்
ராஜி - "நான் வரல நீங்க போங்க"

சித்ரா எவ்வளவு கூறியும் அவள் வர முடியாது என்று உறுதியாக மறுத்து விட்டாள்
"சங்கர் உன்கிட்ட பேசனுமா"

சித்ரா நீட்டிய போனை கடுப்போடு வாங்கி காதில் வைத்தவளிடம்

"ஹாய் பொண்டாட்டி "

",,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, "

" என்னடி பேசமாட்ற "

",,,,,,,,,,,,,,,,,,,,,,"

" காயம் எல்லாம் சரி ஆயிடுச்சா,
ரொம்பவலிக்குதா "
அக்கறை கலந்த கேலியோடு கேட்டான்

" ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,"

" காயம் ஆறிடுச்சுன்னா அடுத்த காயத்துக்கு அச்சாரம் போடலாம்ல அதான் கேட்டேன், இப்ப நீ வரலைனா அதுதான் நடக்கும், கண்டிப்பா அதான் ஓகே,
போன்ன அத்தைகிட்ட கொடு "

' பொறுக்கி பொறுக்கி'
தன் விதியை நொந்தபடி கடைக்கு
கிளம்பதயாரானாள்

மணமக்களின் இரு குடும்பமும்
மணமக்களோடு சேர்ந்து, அந்த பிரபலமான ஜவுளிக்கடையில் முகூர்த்தப் புடவையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்

அந்த ஜவுளிக்கடையின் வெளியே நிற்கும் பொம்மைபோல், ராஜி அமைதியாக நின்றாள், ஆனால் அவள் கணவன் விடுவானோ,

அவளை உரசியபடி வந்து நின்றான்,
"உனக்கு தாண்டி புடவை எடுக்க வந்திருக்கோம், என்னமோ எனக்கு எடுக்க வந்த மாதிரி , மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்க "

"ம்ம்ம்ம் உன் மூஞ்சிய புடிக்காமத்தான் "

அவள் காதில் அவன் ஏதோ ரகசியம் கூற

"ச்சீசீ,,, போடா பொறுக்கி ''
கடைசி வார்த்தை சற்று சவுண்டாக வெளியே வந்துவிட
சேல்ஸ் பெண்ணிற்கு கேட்டுவிட்டது இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சிரித்து விட்டாள்

' செத்தேன் இப்போ, இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை கோவப்படபோறான்' , மனதிற்குள் சங்கரை பயத்துடன் ஏறிட்டவளுக்கு ஆச்சிரியம், அவனோ, அவளைப் பார்த்து கண்சிமிட்டி, சிரித்தான்

'என்னடா இது, இந்த லூசு, கோவப்படாம சிரிக்கிறான், இவன் சிரிச்சாலே வில்லங்கம் ஆச்சே, சீக்கிரம் இங்கிருந்து கிளம்பனும் புடவையை புரட்டிக்கொண்டிருந்த சித்ராவிடம் நகர்ந்துவிட்டாள் ,

சங்கரே , தனக்கு பிடித்த வண்ணத்தில் புடவையை அவனே தேர்வு செய்து விட்டான் அவன் எடுத்த புடவையை யாராலும்
குறைசொல்ல முடியவில்லை, அனைவருக்கும் புடவை பிடித்துவிட்டது, ராஜியும் எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்

அவள் தலைஎழுத்தே மாறிவிட்டது இதில் புடவை அவளுக்கு பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன, எந்த நிறத்தில் இருந்தாளும் அவளுக்கு என்ன,,,,,

அனைவரும் கடையை விட்டு கிளம்பும்போது
"நடராஜனிடம் ராஜியோட கோவிலுக்கு போய்ட்டு சாயந்திரமா வரோம் மாமா "

ஒரு நிமிடம் ஆனந்தனை திரும்பிப்பார்த்துவிட்டு

"சரி மாப்ள, ராஜி பத்திரமா போய்டுவாங்க"

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நான் வீட்டுக்கு போறேன் "

சங்கரிடம் அடம் பிடித்தவளை,
சித்திரா அடக்கினார்
"தம்பி தான் கூப்பிடுதுல்ல போயிட்டு வா"
சாதாரணமாக சித்ரா கூறினாலும், போ என்ற கட்டளை இருந்தது

சித்ராவையை எரிப்பது போல் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் ,
சிறுசுகளை விட்டுவிட்டு முத்துச்சாமியின் குடும்பமும், நடராஜனின் குடும்பமும் கிளம்பி சென்றுவிட்டனர்


"ஏறுடி யோசிச்சுகிட்டே நிக்குற"
பைக்கில் அமர்ந்தபடி ராஜியிடம் எரிந்து விழுந்தான்

"எந்த கோவிலுக்குப் போறோம் "

" ஏன் சொன்னாதான் மகாராணி வருவீங்களோ "

",,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,"

"வெறுப்பேத்தாமே வந்து வண்டில உட்காரு"

"உன்னோட வர எனக்கு பிடிக்கல போதுமா"

சங்கரின் குத்தீட்டி போன்ற கூர்மையான விழிகள், அவளது பெரிய விழிகளை தாக்கியது,

'உன் பொந்துக்கண்ணுக்குகெல்லாம் நான் பயப்பட மாட்டேன் '
வெறுப்புடன் அவள் விழிகளை விலக்கிக் கொண்டாலும்
அவனது கூரிய பார்வை ஆழ்ந்து கொண்டே சென்றதில் ராஜியின் மனதில் திடீரென பயம் பிடித்துக் கொண்டது,
அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை அந்த பயத்தை அவளால் நன்கு உணரமுடிந்தது,,,,,

அவனோ அதே கூறிய விழிகளுடன் ஆக்சிலேட்டரை முறுக்க, அவனது கோபத்தை எவ்வளவு நேரம்தான் அது தாக்குப் பிடிக்கும் தன் இரைச்சலை அதிகப்படுத்தியது, சுற்றி உள்ளவர்கள் அனைவரும் அவர்களை பார்ப்பது போல் தோன்ற, அதை விட அவனது குத்தீட்டி விழிகளுக்கு பயந்தவள் அமைதியாக அவனது இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள் ஏறி அமர்ந்து கொண்டாள்

அவள் வண்டியில் ஏறி அமர்ந்ததுதான் தாமதம்

விருட்டென்று வண்டியை எடுத்தான்
அதில் அவன் முதுகின்மேல்
மோதிக்கொண்டுடாள்

புயல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தான்

"ஏன் இவ்வளவு ஸ்பீடா போறீங்க மெதுவாப் போங்க "
அவள் காற்றோடுதான் பேசினாள்

அவள் மெதுவாப் போங்க என்று கூற வேகத்தை அதிகப்படுத்தினான்
இதை உணர்ந்தவள் பேசாமல் இருப்பது நல்லது என தோன்றிவிட அமைதியாகிவிட்டாள்

என்ன நினைத்தானோ திடீரென்று ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி

"இறங்கு "

"ஏன்"

சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஒரே காடாயிருக்கு இங்கே ஏன் இறங்க சொல்கிறான் யோசித்தபடியே இறங்கினாள்
"இரண்டு பக்கம் கால் போட்டு உக்காந்துக்கோ"

"அது சரியாவராது"

" ஏன் "

" இந்த சுடி டாப்ல ஓபன் கிடையாது "

அவள் டாப்பினை பிடித்து இழுத்தான்
"ஏய் என்ன பண்ற நீ "
அவள் கோபத்தில் கத்த

"டாப் நீளமாதான்டி இருக்கு தாராளமா இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காரலாம் உட்காரு "

அவள் அழுத்தமாக
"என்னால முடியாது"

ஒரு நொடி அவளை உருத்து விழித்தவன் விருட்டென்று பைக்கை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்

"ஏய்,ஏய்ய்ய்,,,,நில்லுடா"

'ராஜிக்கு தூக்கிவாரி போட்டது
அய்யோ,,, என்ன இப்படி விட்டுட்டு போயிட்டான், கடவுளே, அதிர்ச்சியோடு அவனையே பார்க்க, அவனோ அவள் கண்களிலிருந்து புள்ளியாக தெரிந்து பின் மறைந்தும்விட்டான்
இப்ப என்ன பண்றது என்று திருதிருவென முழித்துக்கொண்டு நின்றாள்
'அப்படி என்ன சொல்லிட்டான், இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்னுதானே சொன்னான், உட்கார வேண்டியதானே, ஓவரா நீ பிகு பண்ணிக்கிட்ட
இப்போ அந்தரத்தில் விட்டுட்டு
போய்ட்டான்
அவன் தான் உனக்கு தாலி கட்டிட்டானே இனிமே உட்கார்ந்தாதான் என்ன,
ஒரு பொண்ணு வெளியில கிளம்பினா
அவ கையில ஃபர்ஸ்ட் பணம் இருக்கணும் உன் ஹேண்ட்பேக்கை கூட நீ எடுத்துட்டு வரனும்ங்குற அறிவு கூட உனக்கு இல்லாம போயிடுச்சு, அப்ப அவன்கிட்ட மிதி வாங்கித்தானே ஆகணும் வாங்கு' அவள் மனமே அவலை கழுவி ஊற்ற
அதைப் பொறுக்க முடியாமல்
"எனக்கு தெரியும் நீ வாய மூடிட்டு போ"

' உனக்கு தெரிஞ்ச லட்சணம்தான்
இப்போதெரிஞ்சு போச்சே நடுரோட்டில் நிக்குற' அவள் மனம் அவள் முன்னே எள்ளி நகையாடியது
ராஜிக்கு அவளுக்கோ அழுகையும் ஆத்திரமும்மாக வந்தது

ஐந்து டூவீலர்களும், ஒரு காரும் அவளை கடந்து சென்றது கடைசியாக டூவீலரில் வந்த ஒருவன் அவளை பார்த்து கண்ணடித்து சிரிக்கவும் ராஜி என் முகம் கடுமையானது கடுமையாகியது சட்டென்று அவன் பைக்கை நிறுத்திவிட்டு பைக்கை நிறுத்தி விட்டு போனை எடுத்துப் பேசுவது போல் "இங்கதான்டா நிக்கிறேன் ,
நீ எங்க இருக்க,
ஃப்ரீயா இருந்தா நான் வரியா,
வாடா ஒன்னும் பிரச்சனைஇல்ல,
நான் பாத்துக்குறேன் "

அந்த பைக் ஆரன் பேசப் பேச ராஜியின் முகமோ பயங்கரமாக மாறிவிட்டது
கோபம் பயம் படபடப்பு எல்லாம் சேர்ந்து கண்ணீராக வெளியேவர
துடித்துக்கொண்டிருந்தது

அப்போது தூரத்தில் புயலென அவள் அருகில் வந்து நின்றான், அவள் மனதை வெறுக்கச்செய்த அவளது மணாளன் ,,,,,,,,,,


மனதோடு மீண்டும் பேசுவோம்,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே,,,,
உங்களோட பேசி ரொம்ப நாளாச்சு,,,,,,,
நிறைய பேரோட கமெண்ட்ல ரெகுலரா குடுக்கல சொல்லிருந்தீங்க,,,

மறுக்கமுடியாத உண்மை
ரெகுலரா
எழுதமுடியலங்குற வருத்தம்
எனக்கு உங்களை விட ஒருபடி அதிகமாவே இருக்கு

Personal problem மன உளைச்சலில் வேதனையடைந்து அதிலேயே உழன்று கொண்டு இருந்தேன், மனம்ஒன்றி என்னால் கதையை தொடர முடியவில்லை அப்படியே டிராப் பண்ணிட்டேன்
கொஞ்சநாள் ,,,,,

இந்த கதையை திரும்ப எழுத, என்னை ஊக்கப்படுத்தி திரும்ப தொடர வைத்தது
வாசகியா அறிமுகமாகிய இன்று
என் அருமை தோழியான ,,,,
- திருமதி சுபா பாலா ,,, ,,,,,, ,,,,,,,


வாசகர் இல்லேன்னா
எழுத்தாளர்கள் இல்ல,
அப்படின்னு சொல்றதுக்கு இதுவே ஒரு பெரிய ஆதாரம்,,,,,,,


எப்படின்னு கேளுங்க ,,,,,,
அந்த புள்ள என்னை என்ன என்ன பாடுபடுத்துச்சு தெரியுமா,,,,

Fb ya ஓப்பன் பண்ணா டெய்லி
ஒரு மெசேஜ் ,,,,,,,,
என்னமா இன்னும் story போடல,,,,,

"எப்பதான் story போடுவ ",,,,,,,,,

கதை எல்லாம் முடிச்சுட்டு தான் ஸ்டோரி போட போறேன் அதனால கொஞ்ச நாளைக்கு எந்த யூடியும் கிடையாதுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம் பார்த்தேன் ஆனா


இது உங்களுக்கே நல்லா இருக்கா storyfulla முடிச்சுட்டு தான் போடுவேன் சொல்ற
நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சொல்லிட்டேன்

அடுத்த நாள் திரும்பவும்
எப்ப ஸ்டோரி போடுவ,,,,,,,,

கடவுளே நான் உனக்காகவாவுது
திரும்ப எழுதுறேன் சுபா டியர்னு உறுதிமொழி கொடுத்துட்டேன்
அப்புறம் தான் தெரிஞ்சிது
எலி வளைக்குள் மாட்டிக்கிட்டோம்னு

" இன்னைக்கு எத்தனை பக்கம் எழுதுன"

முருகா என்னப்பா இந்த பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை நெனச்சுக்கிட்டு
திரும்ப என் கதை பயணத்தைத் தொடர ஆரம்பிச்சுருக்தகேன்

ஆக இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு கேட்டு கேட்டு என்னை கதைக்கு இழுத்துக்கொண்டு வந்த என் டார்லிங்,,,,,,
என்னோட அன்பான சகோதரி ,,,,,,
மை ஸ்வீட் பிராண்ட் - சுபாக்கு என் மனமார்ந்த நன்றிகள்


Story கொஞ்சம் டல்லா போகுதுன்னு சொன்னீங்கன்னா - இராஜிசங்கர் கல்யாணத்தோட கதையை முடித்துவிடலாம் நீங்கதான் சொல்லணும் சொல்லிபுட்டேன்

அப்போ சரி கூட்டாளிகளே (friends)
எப்பி படிங்க ,,,,,
உங்க கருத்துகளை சொல்லுங்க,,,,
அடுத்த எப்பில பார்ப்போம் டாட்டா,,,,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 13


சிவாவோடு பேசி நேற்றோடு
ஒரு மாதமாகியிருந்தது
ஆர்த்தியின் மனநிலையை என்னவென்று அவளுக்கே புரியவில்லை
சிவாவோடு பேசவேண்டாம் என்று மனதின் ஒரு புறம் வலியுறுத்திக்கொண்டே இருந்தபோதிலும் அவளது சிந்தனை முழுவதும் அவனே ஆக்ரமித்திருந்தான், இதற்கு பெயர் என்ன ?

செல்லை தொட்ட உடனே
கைகள்தானாக fb யில் அவன் பிளாக் செய்திருந்த பக்கத்திற்கு சென்று விடுகிறது அவர்களது பழைய உரையாடல்களை படித்துப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்
அப்படி ஒரு நாள் அந்த பக்கத்தை ஓபன் செய்து பார்த்தவளுக்கு ஆச்சர்யம்
காத்திருந்தது,

கருப்பு நிறத்தில் இருந்த அவனது பெயர் இப்போது நீல நிறத்திற்கு மாறி இருந்தது unblock செஞ்சுட்டான் என்று புரிந்தது

அவனுக்கு செய்தி அனுப்ப விரல்கள் துடித்துக்கொண்டிருந்தது
மெசேஜ் பண்ணுவோமா, வேணாமா
யோசித்து யோசித்து அரைநாள் பொழுதைப் போக்கிவிட்டாள்,
மூளையை மனம் வென்றுவிட
அவளது மூளை சிவாவிற்கு செய்தி அனுப்பு என்று விரல்களுக்கு கட்டளையிட சட்டென்று மெசேஜ் டைப் பண்ண ஆரம்பித்து விட்டாள்

" என்ன சார் கோபம் போயிருச்சா unblock பண்ணிட்டீங்க போல"

" போனாப்போகுது சின்ன புள்ளை தெரியாம பேசுறான்னு விட்டுட்டேன் இன்னொரு தடவை ப்ளாக் பண்ண சொன்ன அப்புறம் ஜென்மத்துக்கும் unblock பண்ணவே மாட்டேன் சொல்லிட்டேன்

"ம்க்க்கும்"

"என்னடி ம்க்க்கும் வாய் வாய் இந்த வாயிதானே பேசுது, பேசுற வாய நல்லா கடிச்சு வைக்கணும் "

"போடா தூங்குமூஞ்சி"

" இந்த டா க்கும் சேர்த்துதான்டி கடிக்கணும்"

"என்ன மேன் உண்மையிலேயே கோபம் போயிடுச்சா"

"இல்லடி"

" அப்புறம் ஏன் unblock பண்ண"

" உன் கொழுப்ப அடக்கதாண்டி "

"எனக்கு கொழுப்பு இருந்தாலும் அது நல்ல கொழுப்புடா, உனக்கு இருக்கிறது எல்லாமே கெட்டகொழுப்பு அதுலயும் உனக்கு
வாய்கொழுப்பு ரொம்ப அதிகம், உன் வாய்க்கு சூடு போடணும்"

"போடு போடு உன் லிப்ஸ்ல சூடு போட்டா சூப்பரா இருக்கும்டி "

ஆர்த்திக்கு கோபம் வரவா,,,வரவான்னு கேட்டக, அந்த கோபத்தோடு

"போடா பொறுக்கி நாயே"

"ஊருக்கு வந்தோன்ன பொறுக்கிநாய் என்ன பண்ணுவான்னு காட்டுறேண்டி"

",,,,,,,,,,,,,,,,,,,,,,"

" லைன்ல இருக்கியா இல்லையாடி"

"நீங்க ரொம்ப மாறிட்டீங்க, உங்க பேச்சே சுத்தமா சரி இல்ல "

"ஏண்டி "

"ஒரு சிஸ்டர்கிட்ட பேசுற மாதிரியா
பேசுறீங்க, லவ்வர் கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க "

"சிஸ்டர்ரா நான் எப்படி உன்னை சிஸ்டர்னு சொன்னேன் "

"நான் உங்கள அண்ணன்தானே கூப்பிடுவேன் "

"மரியாதைக்காக அண்ணாணு கூப்பிடுற"

'அடப்பாவி'

"என்னடி அமைதியா இருக்க "

"ஒர்க் இருக்கு அப்புறம் பேசுறேன் "
இப்படி ஆர்த்தி கூறியது இதுவே
முதல் முறை

சிவாவின் பேச்சில் இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது
ஒவ்வொரு முறை அவன் பேசுவதை சகஜமாக எடுத்துக் கொண்டாலும் சில(பல) முறை ஆர்த்தி அதிகமாக
கோபப்பட்டுவிடுவதும் உண்டு

அதில் விளையாட்டாக என்று அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதை காயப்படுத்தியதுதான் அதிகம்

"ஆர்த்தி, நான் குழந்தை பெத்துட்டு அப்பறமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் நீ என்னடி சொல்ற "

"அது என்ன உங்க குடும்ப பழக்கமா" ராஜி நக்கலும் கோபமும்மாக கேட்டுவிட்டாள்

" நம்ம ரெண்டு பேரும் பேசுறப்ப எதுக்குடி குடும்பத்தை இழுக்குற, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ஃபேமிலி பத்தி பேசக்கூடாதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல "

அவன் முகம் அங்கே சிறுத்துவிட்டதை உணர்ந்து ஆர்த்தியின் முகத்தில் மென்நகை பூத்தது

'நீ என்னை என்ன வேணாலும் பேசலாம் நான் கேட்டுக்கணும் திரும்ப, ஒரு வார்த்தை உன்னை நக்கலா பேசியிருக்க கூடாது மூக்குக்கு மேல கோபம் வந்துருமே, வரட்டும், வரட்டும் அந்த மூக்க கண்டிப்பா ஒரு நாள் ஒடக்கிறேன் மனதுக்குள்
கருவிக் கொண்டாள் '

29 வயதின் நடுவிலிருந்த சிவாவிற்கு,
ஆர்த்தியின் வீட்டில் தனது வெளிநாட்டு பயணத்தை சொல்லிவிட்டு கெளம்புகையில் ஆர்த்தியின் மீது
இனம் புரியாத ஏதோ ஒரு சிறுஈர்ப்பு
அந்த நிமிடம் அவன் மனதில் தோன்றியது உண்மை,
திமிரு, அழுத்தம் கர்வம் அவன் கூடவே பிறந்தது
தன்னை ஒருவர் இழிவுபடுத்தினால்
ஆயிரம்மடங்கு அதற்கு
பதிலடிகொடுக்கும்விதமாக இருக்கும்


பிடிவாதத்திற்குகென பிறந்தவள் ஆர்த்தி தவறு என்று அவள் தாய் பொறுமையாக எடுத்துக் கூறினால் அதை புரிந்துகொண்டு
தவறைத் திருத்திக்கொள்வதோடு
மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டாள்

வார்த்தையிலேயே வால் வீசுபவன் அவன் சொல்லில் அம்பை எய்து எதிரில் உள்ளவரின் இதயத்தைக் குத்திக் கிழித்து விடுவான்

இவளோ சிறு சொல்லை கூட
பொறுக்கமாட்டாள்
இந்த இரு வேறு துருவங்களும்
எப்படி இணையும் ?

தான் செய்வது தவறு என்பதை உணரும்போது, காலம் கடந்து போகிறது அதுதான் ஆர்த்தியின் விஷயத்திலும் நடந்தது

( அதுதான் காதல் )

அவனது செயலும், பேச்சும் அவளை விழிக்கச்செய்தாலும்
மனதுக்குள் சிவாவின் மீது
ஏதோ ஒரு அன்பு இருந்து கொண்டேதான் இருந்தது


அழுத்தத்திற்கென பிறந்த சிவாவோ, ஆர்த்தியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதை காதல் என உணர்ந்து கொண்ட பின்பும் அவனது அழுத்தமும் கர்வமும் அவனது காதலை சொல்லவிடாமல் அதிகாரமாகவே காட்டவைத்தது

அன்பான அதிகாரம்தான் காதலிலும் வாழ்க்கையிலும் செல்லுமே தவிர வெற்று அதிகாரம் வெறுப்பைதான் தரும் என்பது அவனுக்கு தெரியவில்லை

காதலை மனதில் வைத்துக்கொண்டு வெளியே அதிகாரத்தை காட்டினான் அவளாகவே ,
தன்னை முழுமையாக அவள்
நம்பவேண்டும் ,
தன்னை விரும்பி அவள் வரவேண்டும்,
அவள் வாயிலாக காதலை சொல்ல வேண்டும்
என்று எதிர்பார்த்தான்


பிடிவாதத்திற்கென பிறந்தவளுக்கு
அந்த ஈர்ப்பை காதலாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

சிவாவின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவது போல்,
அவளின் கோபமும்,
ஆங்காரமும் வெடித்துக் கொண்டே இருக்கும்,

அவன் கோபத்திற்கு பயந்தாலும்,
ஒரு நிமிடம் எல்லை மீறினால் கூட அவனையே எதிர்த்து விடுவாள்

அவன் அதிகாரத்தில் அவள் மனம் மயங்கவில்லை ,,,

அவன் அன்பை சரியாக அவளுக்கு உணர்த்தவில்லை ,,

அவனுக்கு அன்பை அதிகமாகத்தான்
காட்டதெரியும் ,,,

அப்படி அவன் அன்பாக பேசினால் கூட
எதுக்கு இப்படி பேசறான், என்ன செய்ய போறானோ கடவுளே என்று அவளை விழிக்கச் செய்யும் அவனது பேச்சும் செயலும்

இருவருக்கும் ஈர்ப்பு இருந்தது ஆனால் இருவரும் அதை காதல் என அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வில்லை

சிவாவிற்கு ஈகோ,
தனக்கு கீழ் தான் எல்லாம் என்று நினைப்பவன் ,,,,

ஆர்த்தியை மட்டம் தட்டி பேசுவான்
அந்த பேச்சில்
ஆர்த்தியின் தன்மானம் தலை நிமிரும்

அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான்

அந்த கட்டுப்பாட்டிற்குள் அன்பாக அடங்குவேனே தவிர,
உன் வெற்று அதிகாரத்திற்கு, என்றும் அடங்கமாட்டேன் என்று தன் கூட்டிற்குள் நுழைந்து கொள்வாள்

செய்தால் தான் பாசம் என்பான் அவன்

செய்ய நினைப்பதே பாசம்தான் என்று வாதிடுவாள் இவள்

அவனது பேச்சும் செயலும் அவளை உதாசீனப்படுத்தும்,
சொல்ல முடியாத அளவிற்கு அளவிற்கு வேதனையைதந்தது ,,,,
அவனது பேச்சு அவளை அழ வைத்தது,,, கோபப்படுத்தியது ,,,,
சிந்திக்க வைத்தது ,,,,,,
செயல்பட வைத்தது ,,,,,
ஆனால் முழுமையாக அவனைப் பற்றிய தெளிவை மட்டும் அவளுக்கு தரவில்லை

அவன் மீது இருந்த ஈர்ப்பு, அன்பு,
அவனது எல்லை கடந்த உரிமையான பேச்சு ஆர்த்தியின் பொறுமைக்கு வேட்டு வைத்து வெறுப்படையச் செய்தது,
சிவாவிடம் பேச்சை குறைத்து அவனை தவிர்க்க ஆரம்பித்தால்


மனதோடு மீண்டும் பேசுவோம்
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 14


சங்கரின் குத்தீட்டி விழிகளில் தீயின் ஜுவாலை தெரிந்தது அதன் அனலை தாங்கமுடியாமல்

பைக்காரன், சங்கரின் முரட்டு
தேகத்தைகண்டு, கிளி போச்சே என்ற வருத்தத்துடன் கிளம்பிப்போனான்

அடுத்த நொடி
" இப்ப திருப்தியா உனக்கு"
வெடித்தாள் சங்கரின் அழகு மனையாள்

இப்ப வரியா இல்ல, நான் போகவா
என்பது போல் சங்கரின் பொந்துக்கண்கள் வினவியது

அவனின் தோள் பற்றி அமரப் போனவளை தடுத்தவன் , இரண்டு விரலை காட்டி ஆட்டினான் - இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார் சைகையில் அவன் சொன்னதை புரிந்து கொண்டவள்

'இவனோட பெரிய ரோதனையா போச்சு' கடவுளே என்று தலையில்
அடித்துக்கொண்டு, அவன் கூறியபடியே இரு புறமும் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்

அவளின் இரு கரங்களில் எடுத்து தன் இடையை சுற்றி இருக்க பிடிக்க பிடிக்க வைத்தான் , அதில் அவளின் நெஞ்சுப்பகுதி அவன் முதுகில் உராய்ந்தது
அதை உணர்ந்தவள் சட்டென்று
பின் நோக்கி நகர்ந்தாள்
அவனோ அவளது கைகளை இன்னும்
தன் இடையை சுற்றி இறுக்கினான்
அதில் மீண்டும் அவன் முதுகோடு வந்து ஒட்டிக்கொண்டாள்

"போறவரைக்கும் வரைக்கும் இப்படிதான் இருக்கணும் புரியுதா"
அவளிடம் கர்ஜித்துவிட்டு
புயலெனவண்டியை கிளப்பினான்

அவனது வில்லத்தனத்தை அறிந்துதான் அவனோடு பைக்கில் இருபுறமும்
அமரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தால் ராஜி
(இது தெரியாம நம்ம மக்கள் வேற உன்ன திட்டுறாங்க ராஜி )

அவனது புயல்வேக பயணத்தில்
ராஜியின் முடியும் , சாலும் திசைக்கு ஒரு பக்கம் பறந்தது

20 கிலோமீட்டர் பயணத்தில் அவனது சொந்த ஊரின் எல்லையை கடந்து சாலையின் இருபுறமும் வயலும், தென்னந்தோப்பின் நடுவே அமைந்திருந்த அந்த பண்ணை வீட்டின் விசாலமான போர்டிகோவில் வந்து பைக்கை நிறுத்தினான்

"யார் வீடு இது "
சந்தேகமாக கேட்டவளிடம்

" உன் புருஷன் வீடுதான் பயப்படாம வாடி உள்ள "

அவன் பயப்படாதே என்று சொன்னவுடன் அவளின் முகத்தில் பீதி கிளம்பியது

'அப்ப ஏதோ செய்யப்போறான் போறான்டி பீ கேர்புல் ராஜி '

மனம் கூறியதை அசட்டை செய்யாமல்
மனதிற்குள் அதீத பயத்தோடு வரவேற்பறையிலே நின்றுவிட்டாள்

இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் உள்ளே இருந்த வேலையாள் ஒருவர்
ஓடி வந்தார்

"வாங்க தம்பி, வாங்க வாங்க,வாங்கமா வாங்க"


ராஜி, வெளியே நிற்பதைப் பார்த்துவிட்டு

"ரொம்ப சீன் போடாதடி"
அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்

"நல்லா இருக்கீங்களா தம்பி "

"நல்லா இருக்கேன் முத்து அண்ணே,
நீங்க நல்லா இருக்கீங்களா, பொண்ணு இப்ப எந்த வருஷம் படிக்குது "

" எம்பிஏ கடைசி வருஷம்"

"இப்பதான் சேர்ந்த மாதிரி இருந்தது அதுக்குள்ள கடைசி வருஷம் வந்திருச்சா"

" ஏற்கனவே சொந்தத்தில் மாப்பிள்ளை இருக்குது கேட்டுக்கிட்டே இருக்காங்க
கட்டிக்கொடுத்தா கடமை முடியும் பாருங்க அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் தம்பி"

"கடமை முடியும்னு கல்யாணம் பண்ண நினைக்காதிங்கண்ணே, இரண்டு பேரும் சேர்ந்து வாழ போற வாழ்க்கை, படிக்கிற பொண்ணு அது விருப்பப்பட்ட வேலைக்கு அனுப்பிவைங்க, நல்ல மாப்பிள்ளையா நானே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் "

"ரொம்ப சந்தோசம் தம்பி,
ஐயா நேத்தே போன் பண்ணி இருந்தார்
இன்னைக்கு நைட்
வர சொல்லி இருக்கிறார் "

"ஆமாண்ணே உங்களுக்கு தேவையான டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு நைட்டே கிளம்பி வந்துருங்க
ரெண்டு நாளைக்கு வீட்டுக்கும் மண்டபத்துக்கும் வேலை சரியா இருக்கும் "

"பாப்பாவுக்கும் உங்களுக்கும் பொருத்தம் நல்லா இருக்கு , ஜோடி பொருத்தம் சூப்பர் தம்பி "

'ரொம்ப முக்கியம் 'ராஜி முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொள்ள ,
சங்கர் சிரித்துக் கொண்டான்

"இந்த ரூம்ல இளனி வெட்டிவச்சுருக்கேன், எடுத்துட்டு வரவா தம்பி "

"இல்ல வேண்டாண்ணே
நான் பார்த்துக்கிறேன்,
நீங்க இப்ப கிளம்பினால்தான், சரியா இருக்கும் அங்க போய் சேர "

"சரி தம்பி அப்ப நான் போயிட்டு வரேன் ராஜியிடமும், விடைபெற்றுக் கொண்டு தன் டிவிஎஸ் எக்ஸ்எல் ளில் பறந்துவிட்டார் முத்து"

" அப்பாடா,,,,,, என்று சோபாவில் விழுந்தான் என்னடி இவ்வளவு அன்பா பாக்குற"

" இல்ல நீ எப்போ இவ்வளவு நல்லவனா மாறின, நீ தானா இதுன்னு பார்த்துட்டு இருக்கேன் "

"இந்த வாய்பேச்சு தாண்டி உன்னையும், என்னையும் ஒண்ணா சேர்த்து இருக்கு, உன் புருஷன் எப்படி வீடு கட்டிருக்கான்னு பாத்துட்டு வா போ "

அவன் முன் நிற்பதை விட வீட்டை சுற்றிப் பார்ப்பது மேல் என்று தோன்றிவிட மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்

கீழே இரண்டு படுக்கை அறையும் மாடியில் ஒற்றை படுக்கைஅறையும் கொண்டிருந்தது, மொட்டைமாடிக்கு சென்ற பின்தான் தெரிந்தது பின்புறம் இருந்த கூரை வீடும், அதை ஒட்டி இருந்த மோட்டார் பம்புசெட்டும், அதை பார்த்தவுடன் குஷியோடு வேகமாக
படியிறங்கி வந்தவளை வியப்போடு பார்த்தவன்,போனில் பேசியபடியே பார்வையால் தன் மனையாளை பின்தொடர்ந்தான்

கொல்லைப்புற கதவைதிறந்து, துள்ளிகுதித்துக் கொண்டு சென்றாள்

அந்த கூரை வீட்டின் கதவை திறந்து உள்ளே போனவளுக்கு, சொல்லத்தெரியாத ஏதோ இனம்புரியாத ஒர் அமைதியை அங்கு உணர்ந்தாள்,
அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை

சற்றுப் பெரிய ஹால் அதை அடுத்து படுக்கையறை மறுபுறம் சமையலறை என்ற அமைப்பில் இருந்த அந்த கூரை வீடு அவளை மிகவும் ஈர்த்தது

படுக்கை அறைக்குள் சென்றவள் அங்கிருந்த இரும்பு கட்டிலை கடந்து அந்த அறையின் ஜன்னலை திறந்தவுடன் தென்றல் வந்து அவளை தழுவிக் கொண்டது
சுகமான தென்றல் வந்து தழுவிக் கொண்டது ,
நிதானமாக கண்ணை மூடிஅதை அனுபவித்தவளை பம்பு செட்டு தண்ணீர் தொட்டியும் வா வா என்று அழைக்க சிறு குழந்தைகளின் குஷியோடு வேகமாக தண்ணீர் தொட்டியை நெருங்கி, இருக்கைகளிலும் நீரை அள்ளி வீசி விளையாடிக்கொண்டிருந்தாள்

திடீரென தான் தள்ளப்படுவதை உணர்ந்து சுதாரிக்கும் முன் தொட்டிக்குள் விழுந்துவிட்டாள்

எல்லாம் அவள் மணாளன் சங்கரின்
சேட்டைதான், வெற்று உடலோடு அவனும் தொட்டிக்குள் குதித்தான்

"என்ன பண்,,,,,,,,,"

அவள் முடியை பற்றி தொட்டிக்குள் அமுக்கினான், அமுக்கி அமுக்கி எடுத்தான்

ராஜிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, பயத்தில் உடல் நடுங்கியது அவளை மேலே தூக்கி மீண்டும் அவளை நீருக்குள் அமுக்க முற்பட்ட போது அவனது வெற்று உடலை இறுக்கஅணைத்து கொண்டாள்

பட படவென வேகமாக அடித்த
அவளது இதயத்துடிப்பை உணர்ந்தவன் புன்னகையுடன்
அவளை மேலும் இறுக்கி
அணைத்து கொண்டான்

அவனது இறுகிய அணைப்பில், மேலும் மூச்சு விட சிரமப்படுவதை உணர்ந்து தன் இறுகிய அணைப்பை சற்றே
இழகச்செய்துவிட்டு,
அவள் முதுகை வருடிக்கொடுத்தான்

" ப்ளீஸ் வேண்டாம் அமுக்காத
மூச்சு விட முடியல "
சினுங்களுடனே கெஞ்சினாள்

" வாய் தாண்டி நீ வேற எதுக்கும் லாய்க்கு இல்ல "

சிறிது நேரம் அவன்
நெஞ்சிலேயே சாய்ந்திருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு

" பொறுக்கி நாயே, ஏன்டா இப்படி பண்ண, நான் பாட்டுக்குதானே விளையாடிட்டு இருந்தேன்
எருமை எருமை கொஞ்சம் கூட உனக்கு மனசாட்சியே இல்லையா"

' பொறுக்கி டிரெஸ் எல்லாம் நனைஞ்சு போச்சு , கடவுளே இவனோட என்ன
கோத்துவிட்டுட்டியே , தலையெழுத்து '

மெதுவாக முனுமுனுத்து கொண்டே தொட்டியை விட்டு வெளியேற போனவளை
இடையோடு சேர்த்து வளைத்து ராஜியின் ரோஜா பூ இதழ்களை
தன் அழுத்தமான இதழ்களால்
சிறைபிடித்துக் கொண்டான்
அவனது முரட்டு பிடியிலிருந்து
விடுபடமுடியாமல் தவித்தாள்
அவன் நெஞ்சில் கை வைத்து அடித்தால் எந்த பலனும் இல்லை
எவ்வளவு நேரம் அந்த சிறைபிடிப்பு நிகழ்ந்ததோ தெரியவில்லை
ராஜியின் கண்ணீர் சுவையை உணர்ந்து அவளை விலக்கி அவள் முகத்தை பார்த்து சுள்ளென்று கோபம் வந்தாலும்

அவன் மனதுக்குள் ஏதோ ஒன்று பிசைந்தது தொட்டியை விட்டு வெளியேறியவன்
அவள் வெளியேற, கையை நீட்டினான்

அமைதியாக கண்ணீர் வடித்தவள்
அவன் கையை பிடிக்காமல் தொட்டியின் சுவற்று கட்டையில் அமர்ந்துகொண்டாள்

அவளின் கோபத்தில் சிரிப்பு வந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல்

"உன்ன,,,,,,,,,,,,,,,,"
தன் இரு கைகளாலும் அவளை அள்ளி கொண்டு அந்த கூறிய வீட்டிற்குள் சென்றான்

ஒரு கவரை தூக்கி அவளிடம் நீட்டினான் அதற்குள் புது நைட்டி இருந்தது,

" டிரஸ் மாத்திக்க"
என்று கூறிவிட்டு, அவன் ஹாலிலேயே உடையை மாற்ற தொடங்க
அவள் தலையில் அடித்துக்கொண்டு ரூமுக்குள் சென்று கதவை
சாத்திவிட்டு தன் உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்

அதற்குள் தன் உடையை கொடியில்
காயப்போட்டுக் கொண்டிருந்தான் தன்னுடைய தன் ஈர துணியையும்
காயப் போட்டுக் கொண்டிருந்தவளின் மேனியை சங்கரின் கண்கள் வலம் வந்து கொண்டிருந்தது

அவன் எடுத்து வந்த கருப்பு நிற நைட்டி அவளுக்கு மிகவும் எடுப்பாகவும், அவளது அங்க லாவண்யங்களை எடுத்துக்காட்டி அவன் கண்களுக்கு
விருந்தாக்கிக்கொண்டிருந்தது

மோகமும் தாபமும் போட்டி போட்டுக்கொண்டு பொங்கி எழுந்தது
அதை கட்டுப்படுத்த முடியாமல்
கண்ணை மூட , மூளையிலிருந்த கேள்விகளும், காட்சிகளும் திடீரென
கண்முன் தோன்றியதும்
அதில் கோப வெறி தலைக்கு ஏறியது மோகம் , தாபம், கோபம் மூன்றும் போட்டி போட்டுக்கொண்டு வெளியேற,
வெறியோடு அவளை பின்னிருந்து அணைத்தான்
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு
உள்ள வா "
' என்ன செய்யப்போகிறானோ அடுத்த தாக்குதலுக்கு ரெடியாயிருடி ராஜி'

உண்மையும் , கேலியையும் உணர்ந்து சொன்னது ராஜியின் மனது

மனதோடு மீண்டும் பேசுவோம் ,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 15


ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்,,,,,,

ஆனந்தமாய் கேட்டுக்கொண்டிருந்த பாடலில் அபஸ்வரமாய் கேட்டது
சிவாவின் அழைப்பு

’கடவுளே இவன் எதுக்கு இப்ப கூப்பிடுறான் பேச்சே வேண்டாம்னு ஒதுங்கி இருந்தாலும் விடமாட்டான் போல '
வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறான் என்று தெரிந்தவர்மூலம் பேச்சுவாக்கில் அறிந்திருந்தாள் ஆர்த்தி

யோசனையுடனே போனை
காதிற்கு கொடுத்தாள்

" ஹலோ நான் சிவா பேசுறேன் "

"தெரியும் "

"இந்த நம்பர் உன்கிட்ட இருக்கா "

" சேவ் பண்ணிருக்கேன் சொல்லுங்க "

"நான் இப்ப ஊருக்கு வந்துருக்கேன் "

" தெரியும் "

"எப்படி "

"தெரிஞ்சவங்க சொன்னாங்க "

"நான் வந்து இருக்கேன்னு தெரியும்,
என் நம்பர் வச்சிருக்க, ஆனா போன் பண்ணனும்னு உனக்கு தோணல இல்ல"

",,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,"

" என்ன பண்ற "

"டிவி பாக்குறேன் "

"பாரு "
போனை வைத்து விட்டான் சிவா

'உன் சங்காத்தமே வேணாம்னு
இருந்தாலும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியாடா'
ஆர்த்தியின் மனம் மீண்டும் முருங்கை
மரம்ஏறி விட்டது

"சாரி "
என்று சிவாவிற்கு செய்தி அனுப்பினால்
சிறிது நேரத்தில் அவனிடமிருந்து
போன் வந்தது

"இப்ப எதுக்குடி மெசேஜ் பண்ற"

"நீங்க எதுக்கு கால் பண்ணிங்க "

" அதான் பேச தெரியாதவ மாதிரி டிவி பாக்குறேன் சொன்ன "

" நான் திருந்தாத ஜென்மம் ,
என்கிட்ட பேச உனக்கு பிடிக்கல , அப்ப
நல்ல ஜென்மமா பார்த்து பேச வேண்டியதுதானே "

"திமிரு புடிச்ச கழுதை
வாய் வாய் ஊருபட்ட வாய்யாகிப்போச்சு உனக்கு "

" எல்லாம் உன்கிட்ட இருந்து
வந்ததுதான் சகவாச தோசம் "

"உனக்கு காலேஜ் எத்தனை மணிக்கு முடியும் "

"ஏன் கேக்குறீங்க "

"உன்ன கடத்திட்டு போய் தாலிகட்டதாம் "

" அதுக்கெல்லாம் நீ செட்டாக மாட்டா"

" சொல்லுடி செட்டாகுறேன்னா இல்லையான்னு பார்த்துடலாம் "

விளையாட்டுக்கு பேசுறான் என்று நினைத்த ஆர்த்திக்கு
மறுநாள் கல்லூரி முடிந்து
வெளியேவந்தபோது பைக்கில்
சாய்ந்தபடி நின்ற சிவாவை கண்டதும்
தன் கண்கள் பொய்யுரைப்பது
போல்தான் தோன்றியது
கண்களை தேய்த்துக் கொண்டு
பார்த்தாலும் அவன் முகம்தான்
தெரிந்தது
தூங்குமூஞ்சி , பொந்துக் கண்ணு என்று பரிகாசம் செய்வாளே
அந்த கண்ணுக்கு சொந்தக்காரனே
அவள் முன் வந்து நின்றான்

அவனது லேசர் பார்வையால் காந்தமாய் அவளை இழுத்துக்கொண்டிருந்தான்

ஆர்த்திக்கு இதயம் வேகமாக
தடக் தடக் தடக் தடக் மெயிலை விட வேகமாக ஜெட் வேகத்தில் போனது

தோழிகளிடம் கூறி விட்டு அவனை நோக்கிச் சென்றாள்
அவன் பேசவில்லை
அவள்தான் பேசினாள்

" எப்படி இருக்கீங்க "

"நல்லாருக்கேன் , நீ எப்படி இருக்க "

"நல்லாருக்கேன் "

" ஒரு வருஷத்துல மாறவே இல்லடி அப்படியே இருக்க "

" நான் எதிர்பார்க்கவே இல்லை
காலேஜ்க்கு வருவீங்கன்னு "

" அதுக்கு எல்லாம் செட்டாகமாட்டேன்
சொன்ன அதான் வந்துட்டேன் "

"அதுக்குன்னு இப்படியா வந்து பயமுறுத்துறது
சரி இங்க எதுக்கு வந்திங்க "

"உன்ன கடத்திக்கிட்டு போகதான் "

"காமெடி சிரிச்சுட்டேன் "

"சிரிச்சது போதும் வண்டில ஏறு "

"என்ன விளையாடுறீங்களா "

' விளையாட ஆசைதான் ஆனா நீ
வந்துட்டு தாண்டி மறுவேலை பாப்ப'

" வெளியில போயிட்டு போகலாம்டி "

" அதெல்லாம் சரியா வராது
நீங்க போங்க "

"வாடிரொம்ப சீன் போடாம "

" அதெல்லாம் சரியா வராது
சொன்ன புரிஞ்சுக்கோங்க
கிளம்புங்க ஃபர்ஸ்ட் "

" வாடி கொஞ்ச நேரம் வெளியில் போயிட்டு போலாம் "

"ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க அதெல்லாம் சரியா வராது நீங்க கிளம்புங்க "

அவன் கண்களில் சிகப்பு ஏறியது
" இப்ப முடிவா என்ன சொல்ற
வர முடியுமா, முடியாதா "


"முடியாது "

பார்வையால் அவளை எரித்துவிட்டு புயலென பைக்கை எடுத்து கொண்டு
பறந்துவிட்டான்

சிவா காலேஜ் வந்ததை ஆர்த்தியால் இன்னும் நம்ப முடியவில்லை
அதைவிட, வா என்று உரிமையாக அவன் அழைத்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

போகலாம் என்று ஒரு நொடி நினைத்தாலும் மறுநொடியே மனமும் புத்தியும் வேண்டாம் என்று தடுத்து விட்டது,
அதனாலேயே உறுதியாக நின்று விட்டாள்

இருந்தாலும் அவன் முகம் சுருங்கி
போனதை கண்ட போது அவளையும் அறியாமல் ஒருபுறம் மனம்
துடிக்கத்தான் செய்தது

அதன் விளைவாக
ஆர்த்தியும் விடாமல் போன்
அடித்துகொண்டே இருந்தாள்
சிவா போனை எடுக்கவே இல்லை
எந்த மெசேஜ்க்கும் அவனிடமிருந்து
ரிப்ளை இல்லை

தன் அமைதியை ஆயுதமாக்கி
அவளை ஒரு வாரம் அலைக்கழித்தான்

'ஒன்னு பேசிக் கொள்ளுவான்
இல்ல பேசாம கொள்ளுவான்
இதான் இவனோட பாலிசி
இவனுக்கு இதே பொழப்பா போச்சு
இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் '


" சரி வெளியிலதானே போகணும் நான் வரேன் எங்க போலாம் சொல்லுங்க "

அப்படி, அவள் அனுப்பிய மெசேஜ்க்கும்
அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை அன்று விடிய காலையில் இருந்தே அவனுக்கு போன் அடித்துக்கொண்டிருந்தாள்

" இப்ப எதுக்குடி போன் பண்ற
அதான் எடுக்கலனு தெரியுதுல
அப்பறம் ஏன்டி விடாம அடிச்சுக்கிட்டே இருக்க அறிவில்ல உனக்கு "

"ஏன் நீ பேச மாட்டியா "

"ஏண்டி பேசணும் "

",,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,"

"சொல்லு ஏன் பேசணும் "

",,,,,,,,,,,,,,,,,,,,,,,"

"பேச வந்ததுக்குதான் நல்ல மரியாதை கொடுத்து அனுப்பிட்டியே இன்னும் எதுவும் பாக்கி இருக்கா "

" திடீர்னு வான்னு கூபிட்டா நான் எப்படி வருவேன் "

" வந்தா உன் தலையில் இருக்கும் கிரீடம் இறங்கிடுமா "

" ஏன் இப்படி என்ன புரிஞ்சிக்காமையே பேசுறீங்க "

"எதுக்குடி புரிஞ்சுக்கணும் "

",,,,,,,,,,,,,,,,,,"

"என் பேச்சை நீ கேட்கமாட்ட ,
நான் மட்டும் ஏன் உன்ன புரிஞ்சுக்கணும் சொல்லு ,,, சொல்லுடி "

" சும்மா சும்மா டி போடாதீங்க சொல்லிட்டேன் எப்ப பாரு டீ போட்டுக்கிட்டு "

" சொன்ன என்ன இவ பெரிய மகாராணி இவங்கள டீ போட கூடாது "

"ஐயோ,,,,,,,,, கடவுளே ஏன் இப்படி பேசுறீங்க
( டி )ங்குறது உரிமைக்கான வார்த்தை
நீங்க என்ன டி போட்டு பேசுறது எனக்கு பிடிக்கல "

" பிடிக்கலைனா என்கிட்ட நீ பேசாத
போதுமா "

" அப்ப நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க, எந்த உரிமைல என்ன டி சொல்றீங்க "

" நீ இனிமே என்கிட்ட பேசாத டி போதும் "


" இததவிர உங்களுக்கு வேற என்ன தெரியும்
என்னைக்காவது நீங்க அன்பா பேசி இருக்கீங்களா "


" ஒன்றரை வருஷம் கழிச்சு பார்க்க
வந்ததுக்குதான், ஓடி வந்து ஆசையா
பாசமழை பொழிஞ்சுட்டபாரு, உன் கிட்ட பேசவே எரிச்சலா வருது டி "

" அதை நான் சொல்லணும் "

"கேள்வி கேட்டா பதில் சொல்லு திரும்ப என்ன கேள்வி கேட்காத டி "

"இப்ப என்ன சொல்ல வரீங்க வரியா இல்லையா "

"இது,,,, இந்த அதிகாரமா பேசுறத மொதல்ல நிறுத்துடி"

",,,,,,,,,,,,,,,,,,,, "


அதிகாரமா பேசாமா ஃபர்ஸ்ட் பணிவா பேச கத்துக்க புரியுதா


",,,,,,,,,,,,,,,,,,,,,, "


" என்னடி லைன்ல இருக்கியா "


"நான் பேசுனது தப்புதான் வாங்க ப்ளீஸ் "


" இல்லடி நீ பெரிய மனுஷ தனமாக பேசுற அதெல்லாம் வேண்டாம்
நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு
நான் பாட்டுக்கு என் வேலையை
பாக்குறேன் "


"அப்படித்தானே நான் இருந்தேன்
நீ எதுக்கு இப்ப போன் பண்ண"


" தெரியாம பண்ணிட்டேன் போதுமா "

"நான்தான் சாரி சொல்றேன்ல
எப்ப பாத்தாலும் எனக்கு புடிச்ச
மாதிரி நடந்துக்க,
புடிச்ச மாதிரி நடந்துக்கோ பாட்டா,,,
பாடவேண்டியது ,
சரி வாங்கனு கூப்பிட்டா
அதிலேயே குற்றம் கண்டு பிடிக்கிறது இதான் உங்களுக்கு பொழப்பா போச்சு "


"ஏய் வேண்டாம் வாய் அகராதி "
( சிரித்துக்கொண்டான் )

" அப்புறம் என்ன நான் தான் சாரி சொல்லிட்டேன்ல அப்புறம் வந்தா என்ன"

"சரிடி வந்த என்ன தரப்போற "

"உனக்கு ஒரு கிப்ட் இருக்கு "

"என்னனு சொல்லு "

"வாங்க சொல்றேன் "

" சரி கிளம்பிட்டு போன் பண்ணு "
 

Devi Anand

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பயத்துடனே அறைக்குள் நுழைந்த ராஜிக்கு சற்று பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது ,
அவள் மொபைல், சங்கரின் கையில் அழகாக வீற்றிருந்தது

அதை பார்த்தவளுக்கு பாதி உயிர் போய்விட்டது
'கடவுளே,,,,,' என்று நினைத்தபடி அறையின் வாசலிலேயே நின்று விட்டாள்

"ஏன் உள்ள வர்றதுக்கு மகாராணிக்கு கால் வரலையோ "

அவள் கையை பற்றி கட்டிலில் தள்ளினான்

நிலை தடுமாறி விழுந்தவள் படபடப்புடன் எழுந்தமர்ந்தாள்

" இதாண்டி என்னோட கிப்ட் , புடிச்சிருக்கா பாரு "

என்றபடி அவள் கையில்
புதுமொபைலை திணித்தான் அதை என்னவென்று கூட பார்க்காமல் அவனது விழிகளையே கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்

" கேமரா எப்படி இருக்குன்னு பார்ப்போம்மா "
அவளைத் தன் கை வலைவிற்குள் அணைத்து செல்பி எடுத்தான்

"கேமராவை பாருடி "

அவள் முகத்தை உரசியபடி செல்பி எடுத்தான் ,,,,,
அதற்குமேல் முடியாமல் விருட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்

"பிடிக்கலை,,,,, சரி விடு , "

எடுத்த செல்பிகளை காட்டி

"நல்லாதானேடி இருக்கு
நம்ம ஜோடிப்பொருத்தம்,
இன்னொரு போட்டோவையும் காட்டுறேன் அதுல ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்குன்னு நீதான் சொல்லணும் சரியா "

அவள் கண்ணத்தை தட்டியபடி கூற

'ஏதோ பிரச்சனை பண்ண போறான் பண்ண போறான் மனதுக்குள் உதறல் எடுத்தது '

அவளது பழைய மொபைலை
எடுத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தவன் அவளை தன் அருகே வருமாறு சைகை செய்தான்

அவளோ பயத்தில் தள்ளியே அமர்ந்திருக்க , அவள் கையை பற்றி தன்னருகில் அமரவைத்து தோளோடு அணைத்துக்கொண்டு
ஏதோ ஒரு போல்டரில் ஒளிந்திருந்த அந்த நான்கு போட்டோக்களை எடுத்தான்

முதல் போட்டோவில் ரமேஷ் ராஜிக்கு மோதிரம் போடுவது போல் இருந்தது

"வாவ் என்கேஜ்மென்ட் போட்டோ சூப்பர் அப்படியே உன் கண்ணுல சந்தோஷம் பொங்கிவழியுது பாருடி "

ராஜிக்கோ அதிர்ச்சியில் இதயம் ஒரு நொடி நின்று பின் இயங்கியது

அடுத்த போட்டோவில் ராஜியும் ரமேஷும் சேர்ந்து நிற்பது போலிருந்தது ,
புதிய மொபைலில் எடுத்திருந்த செல்ஃபியையும் அருகே வைத்து


"எந்த ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கு சொல்லு "

அவள் முகத்தோடு முகம் உரசியபடி கேட்க , ராஜிக்கு முகம் வியர்த்து விட்டது

அடுத்த போட்டோவில் ராஜியின் கைபிடித்து ஒருகால் மண்டியிட்டு பூங்கொத்தை கொடுத்து
ரமேஷ் லவ் ப்ரொபோஸ் பண்ணுவதை போல் இருந்தது

" ஓஓஓ,,,,,,,,,,,லவ் ப்ரொபோஸ் வேறையா , ம்ம்ம் அக்சப்ட் பண்ணிட்டியா,,,,, பண்ணிட்டியா "
அவனது கர்ஜனையில்

ராஜியின் கண்களிலிருந்து நீர் வரவா வரவா என்றது,
ஆனால் மனமோ

' எப்பவோ பண்ணிட்டேன் டா '
வெளியே சொல்லதான் அவளுக்கு தைரியம் இல்லை அடிப்பான் , வார்த்தையால் சுடுவான் ,
என்ற பயம்தான்

அடுத்த போட்டோவில் ரமேஷின் நெஞ்சில் ராஜி சாய்ந்து இருப்பதுபோல் இருந்தது

தோளில் திடீரென வலி ஏற்பட்டதும் சங்கரின் முகத்தை பார்த்தாள் பாறை போல் இறுகிக் கொண்டே போக,,,,, அவளது தோளிலும் வலி கூடிக்கொண்டே போனது

அவன் கையை தன் தோளிலிருந்து எடுத்துவிடமுயல,
அவளது பழைய மொபைல் சுவரில் பட்டு இரண்டாக தெறித்து போய் விழுந்த நொடியில்

அவனது கோபசெல்கள் அனைத்தும் விழிப்படைந்து அவனை கொதி நிலைக்கு கொண்டு சென்றது
அவனது கோபத்தை உணர்ந்தவள் , அதை தணிக்கும் பொருட்டு
ஏதோ சொல்ல வாயைத் திறப்பதற்குள்

அவளின் பிடறியை பிடித்தவன்

" ஒட்டி உரசுனது மட்டும்தானா இல்ல , எல்லாம் முடிஞ்சிருச்சா "

" ச்சீ,,,விடு "

அருவுருப்பில் முகம் சுளித்தாள்
அவளது முக சுளிப்பில் ,
அவனுக்கு வெறி பிடித்துக் கொண்டது

"அவன் தொட்டப்ப இனிச்சுச்சு நான் தொட்ட ,,,ச்சீயா,,,, திருட்டு நாயே அவனோட எங்க, எங்க ஊர் சுத்திட்டு திரிஞ்ச "

அவளது சிவந்த லட்டு கன்னத்தில் அவன் விட்ட அறையில் பொறிகலங்கி கட்டிலில் சாய்ந்தாள் தீ போல் எரிந்த கன்னத்தை பிடித்துக்கொண்டவள் ,

" ஆமா , அவனோடதான் சுத்திகிட்டு இருந்தேன் , அவனோட எனக்கு எல்லாமே முடிஞ்சு போச்சு , நீ எதுக்கு என் கழுத்தில் திருட்டுத்தனமா தாலி கட்டுன "

அவனை காயப்படுத்தி விட வேண்டுமென்று வீம்பாகவே அந்த கேள்வியை கேட்டாள்

உடல் முறுக்கேற, மூளையில் நங்கென்று ஏதோ இடிப்பது போல் உணர்ந்தவன் வெறிகொண்ட வேங்கையாக மாறி அவள் மீது பாய்ந்தான்


ராஜியின் மான் விழிகள் இரண்டும் சிவந்து கலங்கியிருக்க, அவளது லட்டு கன்னங்கள் இரண்டிலும் சங்கரின் விரல் தடங்கள் அழுந்த பதிந்திருந்தது

அவனது அடியை பொறுத்துக்கொண்டவளுக்கு,
தன் கழுத்து வளைவில் பதிந்திருந்த அவனது பல் தடங்களை தாங்கமுடியாமல், தடுக்க முயன்று வெற்றிகரமாக அவனிடம் தோற்று கொண்டிருந்தாள், அதற்குப் பரிசாக அவன் எடுத்து தந்திருந்த புதிய நைட்டியின் கைப்பகுதி ஒருபுறம்பிரிந்து போய்விட்டது

கட்டாயமாக கட்டிய தாலியாக இருந்தாலும், அது ராஜியின் மார்பில் புரண்டிருக்க,
இதழோரம் வெற்றிக் களிப்புடன் அவளது எதிர்ப்பையும் மீறி அந்த நொடியே அவளை முழுமையாக
ஆண்டு விடவேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் மீது பின்னி படர்ந்தான்


அவனின் உடல் வலிமையை ஒருகணம் கூட தாங்க இயலாதவள் அவனோடு, போராடி, போராடி வெற்றிகரமாக தோற்றுக் கொண்டே இருந்தாள்,

ஒரு கட்டத்தில் அவனை எதிர்க்கும் சக்தியை இழந்திருந்தால், முழுமையாக அவள் அடங்கி விட்டாள் என்று எண்ணி தனது முரட்டுப் பிடியைத் சற்று தளர்த்தினான், அந்த வினாடியை பயன்படுத்தி கொண்டவள்
தன் அனைத்து பலத்தையும் ஒன்றுதிரட்டி அவனை உதறி
தள்ளி விட்டு, விலகி ஓடினாள்

கதவை நோக்கி ஓடியவளின்
தலைமுடியை பற்றியவன்

" எங்கடி போற, சொல்லு எங்கபோற " அவள் கன்னத்தில் ஒரு அரைவிட்டான்

அந்த அரையில் சுவற்றில் போய் மோதி கொண்டாள், அதில்
திடீரென்று ஆவேசம் கொண்டவள் போல் தீர்க்கமாக அவன் முகத்தை பார்த்தாள்


" நான் என்ன தப்பு பண்ணினேன் சொல்லு "
அவளது நேர்கொண்ட பார்வையும், தீர்க்கமான பேச்சும்
அவனை ஒரு நிமிடம் அசைத்துதான் பார்த்தது

" ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காதடி,
நீ எந்த தப்பும் பண்ணல,,,,, சரி , நம்ம ஒரு விஷயத்தை நெனச்சுட்டோன்னு வைய்ய்ய்யி, என்ன பண்ணியாவது அத அடஞ்சே தீரனும் ,
அப்படித்தான் உன் கழுத்துல
தாலி கட்டிருக்கேன், நீ என் கால்ல தாண்டி கடைசி வரைக்கும் விழுந்து கிடக்கனும் புரியுதா,,,,"

'இவன்னோட எப்படி வாழப் போறோம் இந்த வாழ்க்கை எதுக்கு கடவுளே ,,,,
ஒரே ஒரு தப்பு பண்ணேன்
அதுக்கு இவ்வலோ பெரிய தண்டனையா,,,,
தன் விதியை நினைத்து தானே நொந்து போனால் அந்த பாவை'
 
Status
Not open for further replies.
Top