All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேணுகாதேவியின் "மனதோடுதான் நான் பேசுவேன்" - கதை திரி

Status
Not open for further replies.

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்ய்ய்ய் ஹலோ பிரண்ட்ஸ் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் வணக்கம்.


நான் உங்க தோழி் ரேணுகாதேவி next epiyoda வந்துட்டேன்.


முதல்ல உங்ககிட்ட நன்றியும், மன்னிப்பும் கேட்டுகுகிறேன்.

கதைய பக்கம் பக்கமா எழுதிட்டு போயிடலாம் பட் ஒவ்வொரு வார்த்தைகளையும் (ஒவ்வொரு வரிகளுக்கும் உயிர் இருக்கணும்) அந்த உயிரை எங்களுக்கு உணர்த்துறது வாசக நண்பர்கள், மற்றும் உங்களோட வாசிப்பும் கமெண்ஸ்சும் தான் "

உங்க கமெண்ட்ஸ் மூலமா நிறைய பேர் ஆதரவு கொடுத்து இருந்தீங்க. என் முதல் முயற்சி இவ்வளவு தூரம் வரும் நான் எதிர்பாக்கல ஆதரவளித்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மன்னிக்கனும் கமெண்ட்ஸ் பண்ணி இருந்த யாருக்குமே (sorry)ரிப்ளை பண்ண முடியல கமெண்ட் பண்ணுன அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்


முதல் எபி மட்டும் போட்டு சில சூழ்நிலை காரணமாக என்னால எழுத முடியல இப்பதான் டைப்பண்னேன் இனி தவறாமல் அடுத்த எபி கரெக்ட்டா குடுத்துறேன்.

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன story உங்களுக்காக share பண்ணிருக்கேன் அத படிச்சுட்டு யாரும் என்ன திட்டக்கூடாது சொல்லிட்டேன்,




*******
குட்டி கதை; (true story)

ரேணுவின் அத்தை ஊருக்கு போய் இருந்ததால் அன்று சமையல் ரேணுவின் பொறுப்பு. அவளுக்கு சாம்பார் வைக்க தெரியும்
ஆனால் எப்போதாவது ஒரு முறை செய்வதால்
அத்தைக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்

அவள் மாமா வெங்காயம் தக்காளி காய்கறிகளை நறுக்கி தட்டில் மூடி வைத்திருந்தார்

குக்கரை எடுத்து பருப்பை வேக போட்டு சாம்பார் வைத்தாள்

ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் மிதமாக வைத்து இருந்தாள்

உருளைக்கிழங்கு வருவளை முடித்துவிட்டு குக்கரில் இருந்து சாம்பாரை வேறு பாத்திரத்திற்கு மாற்றுவதற்கு குக்கரை திறந்தாள் சாம்பார் ரொம்ப கெட்டியாக இருந்தது

‘என்னடா இது நம்ம சரியா தானே வச்சிருந்தோம் இப்ப என்ன ரொம்ப கெட்டியாக இருக்கு’ என்று சிறிது தண்ணீர் சேர்த்து சாம்பாரை மீண்டும் கொதிக்க வைத்து இறக்கினாள்

பேங்குக்கு சென்றுவிட்டு வந்த அவள் மாமா “என்னம்மா சமையல முடிச்சுட்டியா?”

“முடிச்சுட்டேன் மாமா வாங்க சாப்பிடலாம்” என்று இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்

“முருகா காப்பாத்துபா” வேண்டியபடியே இலையில் இருவருக்கும் சாதத்தை எடுத்து வைத்துவிட்டு சாம்பாரை அவளுக்கு மட்டும் ஊற்றிவிட்டு ரேணுவை பார்த்து கொண்டிருந்தார்.

“என்ன மாமா என்னயே பாத்துட்டு இருக்க?”

“நீ சாப்புடு தங்கம் முதல்ல அப்பறம் பத்து நிமிஷம் கழிச்சு நான் சாப்புறேன்”

“மாமாமா” 😡😡😡😡😡

“நான் நல்லாருந்தானே உன்ன hospital கூட்டிட்டு
போக முடியும் அதுக்கு தான் தங்கம் சாப்பிடுங்க”

அவரை முறைத்துக்கொண்டாலும்
சற்று பயத்துடனே சாப்பிட்டாள்

“ம்ம்ம் பராவால நல்லாதான் பண்ணிருக்கேன் சாப்பிடலாம்” என்று தன் சமையலுக்கு தானே கேரண்டி கொடுத்தாள்

அப்படி இருந்தும் அவர் கொஞ்சமாக சாம்பார் ஊற்றி ஒர் உருண்டை பிசைந்து கண்களை மூடி ஊரில் உள்ள அணைத்து தெய்வங்களையும் துணைக்கு அழைத்து ஒர் வாய் விழுங்கினார்

“ரொம்ப பண்ணாத மாமா நல்லாதானே இருக்கு”

அவரோ கண்மூடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்

“என்ன மாமா நல்லாயில்லையா சொல்லு மாமா சொல்லு”

“ஏதோ இருக்கு அது சரி சாம்பார் வைக்க சொன்னா ஏன் இப்படி புட்டு கிளறி வச்சுருக்க”

“ஆன் அதான் மாமா நானும் யோசிக்குறேன் நான் சரியாதான் வச்சிருந்தேன் கொஞ்ச நேரத்துல கெட்டியாயிடுது” அதான் புரியல என்று யோசித்தவள்

திடீரென்று ஏதோ நினைவு வந்தது போல் ஒரு “நிமிஷம் மாமா” என்று எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்து கீழே இருந்த அந்த டப்பாவை திறந்துப்பார்த்தாள் பார்த்தாள்


“ஓமைகாட் மாமா மாமா, அத்தை சில்வர் சம்பட்டம் இரண்டு ஒரே மாரி வச்சுருந்துச்சா”

“ஆமா நீ ஆர்வகோளாறுல கல்ல பருப்பு போட்டு சாம்பார் வச்சுருக்க”



“ஆமா மாமா கெட்டியா இருந்நப்பவே எனக்கு சந்தேகம் வந்தது” என்றவள் திடீரென்று

“அய்யோ மாமா அத்தைக்கு வேற நான் வச்சது எப்படி இருக்கு டேஸ்ட் பாருங்கன்னு சாம்பார் குடுத்துட்டு வந்தேன்”

“கிழிஞ்சுது போ”

அவர் சாதத்தில் தயிரை ஊற்ற போக

“மாமா கல்லபருப்பு போட்டாலும் சாம்பார் நல்லாதான் இருக்கு ஒழுங்கா சாம்பார் போட்டு சாப்பிடு இவ்லோ சாம்பாரையும் என் தலைலயா எடுத்து ஊத்திக்கமுடியும்”

“உன் கல்யாணம் வரைக்கும் நல்லாருக்கணும் நினைக்குறேன் உன்ன கட்டிகுடுத்துருந்தா என்ன ஆனாலும் சரினுட்டு இத போட்டு சாப்புட்டுருவேன்”

“ச்சை” என்று போய்விட்டது அவளுக்கு

மறுநாள்

போனில் மனைவியிடம் “உன் புள்ள கல்லபருப்பு போட்டு சாம்பார் வச்சிருக்கு அவ போற இடத்துல நீ துப்பு வாங்க போறது உறுதி”

இதைக்கேட்ட ரேணு சாம்பாரையேவெறுத்து விட்டாள், மாடியிலாவது உலாவி விட்டு வருவோம் என்று மேலே சென்றாள் அங்கே பக்கத்து வீட்டு அழகு அத்தை மாடியில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள்

"அழகு அத்தை"

"என்ன ரேணு"

" நேத்து சாம்பாரு எப்படி இருந்துச்சு "

"நல்லா இருந்துச்சுடா நைட் தோசைக்கு தொட்டுகிட்டேன் சூப்பரா இருந்துச்சு"

" உண்மையாவா இல்லை எனக்காக பொய் சொல்றீங்களா "

"அட சத்தியமா நல்லா இருந்துச்சு ரேணு போகப்போக இன்னும் பார் கை நல்ல பழகிடும் உனக்கு வரப்போறவன் கொடுத்து வச்சவன்தான் "

"தேங்க்ஸ் அத்தை"

‘என்னடா இது இந்தஅத்தை இப்படி சொல்லறாங்க, இந்த மாமா லூசு சாப்புடாமயே நல்லாயில்லன்ருச்சே, அவரு பொண்டாட்டி சமையல் தானே அவருக்கு உசத்தி இருக்கட்டும் எனக்கும் ஒரு அடிமை சிக்கும் டேய்ய்ய் புரூஸ்ஸ்ஸ்ஸ் எங்கடா இருக்கக்கக
ஐ அம் வெயிட்டிங் பார் யூ டா டா டா டா டா” ❤❤ ❤ ❤ ❤



***********


கதை எப்புடி ,சின்ன புன்மறுவலாவுது உங்களுக்கு வந்துருக்கும் அந்த நிறைவுதான் எங்களுக்கு வேனும்.

********



"மனதோடுதான் நான் பேசுவேன் " அத்தியாயம்-2 கீழே...



படிங்க, கருத்துக்களை சொல்லுங்க, நிறை ,குறை உங்கள் எதிர்பார்ப்பையும் சொல்லுங்க, அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்
நன்றி,
எதிர்பார்ப்புடன் ,
உங்கள் தோழி , N.ரேணுகாதேவி,,..
 
Last edited:

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2..


கிரிங்ங்ங்ஙங்ங் பெல் அடித்தவுடன் அப்பாடி முடிஞ்சதுடா சாமி, தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு வருவலும் கண்முன் வந்து நிற்க சீக்கிரம் சாப்பிட போகணும் ஒரு நொடி சந்தோஷப்பட்டாலும் உருளைகிழங்க பார்த்தா இவளுக விடமாட்டாளுகளே யோசித்தபடியே லேபை விட்டு வெளியே வந்தாள் ஆர்த்தி

ஆர்த்தி... அவள் துறையின் விரிவுரையாளர் அழைத்தார்

' இந்தப் பூச்சிபய ஏன் நம்மள கூப்பிடுறான் நினைத்தவாறு அவர் அருகில் செல்ல '

"ஒரு புக்கை நீட்டி லைப்ரரில வித்யாமேம் இருப்பாங்க இந்த புக்க அவங்ககிட்ட குடுத்துடு "

'டேய்ய்ய்ய்..... தக்காளி சாதம் டா' 'உருளைக்கிழங்கு வருவல் டா'

"லைப்ரரிலையா சார்"

"ம்ம்ம்"

"இப்பவே போகனுமா சார்"

"ஏன் உனக்கு எதுவும் வேலை இருக்கா"

"ஆம் என்று தலையாட்ட சட்டென்று இல்லை என்று தலையாட்டிவிட்டாள்"

புக்கை அவள் கையில் திணித்து விட்டு ஸ்டாப் ரூம் சென்று அவர் லன்ச் பாக்ஸை ஓபன் செய்தார்

' அவரை முறைத்துவிட்டு டேய் பூச்சி நாலு நல்லி எலும்பசேத்தமாதிரி இருக்க உனக்கே கிரவுண்ட்ப்ளோர் போக சோம்பேறினா எப்படிடா நான் மட்டும் இரண்டுமாடி கீழ போயிட்டு மேல வருவேன் உன் பூனை 🐱 கண்ணுக்கு நான்தான் தெரிஞ்சேனா என் நேரம்டா தன்னைதானே நொந்தபடி புக்கை வித்யாமேமிடம் குடுத்துவிட்டு மாடி ஏறும்பொழுதுதான் மெதுவாக ஏறினாள் மணிக்கட்டை திருப்பி மணியை பார்க்க லஞ்ச் டைம்
பத்துநிமிடம் ஓடி விட்டுடிருந்தது. முருகா... என் தக்காளி சாதம் உருளைகிழங்கு வறுவல் ... அடுத்த மூன்றே நிமிடத்தில் கிளாஸ்ரூமில் இருந்தாள் ஆர்த்தி'

தோழிகள் ஆறு பேரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க ஆர்த்தியின் டிபன் பாக்ஸ் அவளுக்கென்று ஒரு இடம் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது

"எங்கடி போன எவ்வளவு நேரம்ஆச்சு
நந்தினி கேட்க"

"அதை ஏன்டி கேக்குற அந்த பூச்சிபய என்ன கிரவுண்ட் ப்ளோர் வரைக்கும் போக வச்சுட்டான்டி"

"எதுக்குடி"

"புக்கை குடுக்க சொல்லி என்ன மலை ஏறி இறங்க வச்சதுமட்டும் இல்லாம அவன் டிபன திறந்து சாப்பிட உட்காந்துடான்டி"

"உன் ஆதங்கம் புரியுது செல்லகுட்டி விடு உனக்காக உன் தக்காளிசாதமும்
உருளைகிழங்கு வறுவலும் ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்கு வா வா"

'டிபன்பாக்ஸை ஆசையோடு திறந்தபோது உள்ளே இருந்த உருளைக்கிழங்கு வறுவல் நாலு,ஐந்து பீஸ் இருந்ததைப் பார்த்து முகம் சுருங்கிவிட்டது ஆர்த்திக்கு'

"எங்களுக்குத் தேவையானதை எடுத்துகிட்டோம் நீ சாப்பிடு என்று தாமரை கூற "

"இதுக்குதான் வேகவேகமாக ஓடிவந்து இருக்கா எப்படி மூச்சு வாங்குது பாரு என்று விஜி கிண்டல் செய்தாள்"

'போங்கடி பிசாசுங்களா மனமாற தோழிகளை அர்ச்சனை செய்துவிட்டு தக்காளிசாதத்தையும்,
உருளைகிழங்கு வறுவலையும் ஆசையோடு ஒரு வாய் அள்ளி வைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டாள்'

"நீ கொஞ்சமா எடுத்து மெதுவா சாப்பிடுறது ஒர் அழகுனா அத ரசிச்சு ருசிச்சு சாப்புறபாரு அது இன்னும் அழகுடி விஜி கூற"

'அதைகேட்டு சிரித்தாலும் பசியும் ருசியும் அவளை பேசவிடவில்லை
தருப்தியா சாப்பிட்டுஎழுந்தாள்'

தாமரை அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தாள்

"என்னடி சாக்லேட்டு "

"அண்ணேன் சிங்கப்பூர்ல இருந்து வந்துருச்சு அதான் சாக்லேட் "

சிங்கப்பூரா உடனே அவள் நினைவுக்கு சிவா வந்தான்

ஆர்த்தி காலேஜ்கு செல்எடுத்து வரமாட்டாள்

"தாமர ஒரு மெசேஜ் பணண்னும் "

"யாருக்குடி "

"சிவா அண்ணா பேமிலி பிரண்டு இன்னைக்கு சிங்கப்பூர் கிளம்புறாங்க அவருக்கு அனுப்பனும்"

"செல்லை ஆர்த்தியிடம் நீட்டினாள் "

" உன் செல் உனக்குதான் சரியாவரும் லோட்டஸ்"

"சரி என்ன அனுப்பனும் சொல்லு"

" ஹாய் அண்ணா நல்லபடியா போய்ட்டு வாங்க உடம்ப பாத்துக்கோங்க போய்டு போன் பண்ணுங்க ஹாப்பி ஜர்னி
பை ஆர்த்தி"

"அவ்வளவுதானே நம்பர் கரக்டா பாத்துக்க"

"ஓகே லோட்டஸ் "

*****************************************

மணவறையில் எழுந்த
சத்தத்தைக் கேட்டு
சண்டையை சுற்றி நின்றவர்களின் கவனத்தை திருப்ப இங்க என்னடா நடக்குது என்று வாயைப் பிளந்தபடி அனைவரும் பார்க்க, மண்டபத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்

ரமேஷ் நின்ற இடத்தில் சிலை என உறைந்து விட்டான்

ஒரே ஊர் என்பதால் சங்கரை தெரிந்தவர்கள் அவன் தந்தைக்கு விபரத்தை தெரிவித்துவிட்டனர்

இனி நமக்கு இங்க வேலை இல்ல வா ரமேஷ்ஷின் தந்தை அவன் கையை பிடித்து இழுக்க

புயலைப் போல் மேடையேறிய ரமேஷ் சங்கரை வெறி கொண்டு தாக்கினான்

ரமேஷின் நிலையை உணர்ந்து அவன் தாக்குதலுக்கு பணிந்து நின்றான் சங்கர்

சங்கர்ருடன் வந்த நண்பர்களும் விக்னேஷ்சும் ரமேஷ்ஷை பிடித்து இழுத்தனர் அதற்குள் சங்கரின் தந்தை ஆட்களோடு வந்துவிட்டார்

நிறுத்தங்கலே,,,,,,,, என்ற சத்தம் கல்யாண மண்டபத்தில் இடி போல் கேட்டது முத்துசாமி போட்ட சத்தத்தில் அணைவரின் பார்வையும் அவர்புறம் திரும்ப மகனை நோக்கி சென்றவர் பளார் என ஒர் அரை விட்டார்.

அரை வாங்கியவனோ
தலைகுனியவில்லை,கண்களை
கீழே தாழ்தவில்லை, அடித்துவிட்டாரே என்று அடித்தவரை சினத்தோடும் பார்க்கவில்லை தான் செய்தது தவறு என்று தெரிந்தும் கர்வமும், திமுரும்,தெனாவெட்டும் அவன் கண்களில் தெம்மாங்கு பாட தவறில்லை

மகனை கூர்ந்து நோக்கிவிட்டு ஒரு நிமிடம் யோசித்தபடி நின்றார் முத்துசாமி

"என்ன யோசிக்கிறீங்க உங்க பையன் பண்ண தப்புக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம்னு யோசிக்கிறீங்களா என்ன ஏதுன்னு புரியாம சண்டை ஒரு பக்கம் அதுக்குள்ள உங்க பையன் எங்க பொண்ணு கழுத்துல
தாலி கட்டிபுட்டடான் என்ன பண்ண போறீங்க "

'அதிர்ச்சிக்கு மேல் வந்த அதிர்ச்சியைக் ஜீரணிக்க முடியாமல் நடராஜன் முத்துசாமியிடம் பாய்ந்தார் '

'மகள் இல்லாத குறையை தீர்த்துக்கொள்ள தம்பி மகளை தன் மகளாக பாசம்காட்டி வளர்ப்பார் அப்படிப்பட்ட மகள் இன்று கல்யாண மேடையில் மாலையும் கழுத்தும்மாக கலங்கியபடி சுவரோடு சாய்ந்து நின்றதையும் நிலைகுலைந்து இருந்த தம்பியை கண்டும் துடித்துப் போய் பொங்கி எழுந்துவிட்டார் நடராஜன் '

"உங்களுக்கு ஆல்பலம்இருக்குன்னா
எங்களுக்கும் ஆல்பலம் இருக்கு உங்க மகன் பண்ண காரியத்துக்கு,,,,,,"

"கொஞ்சம் பொறுமையாக இரு நடராசா மகன் செய்த தவறால் முத்துசாமிக்கு பேச தொண்டையை அடைக்கதான் செய்தது"

"எதுக்கு பொறுமையா இருக்க சொல்றிங்க உங்க பொண்ணு கல்யாணத்துல என் பையன் வந்து தாலி கட்டிடான்னா நீங்க பொறுமையா இருப்பீங்களா உங்கள் ஜாதி ஜனம் முன்னாடி அவமானப்பட்டு நிப்பிங்கல்ல இப்ப அதே நிலைமையிலதானே நாங்க இருக்கோம்"

'இவர்களின் வாக்குவாதம் ஒருபுறம் நடக்க'

மண்டபத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவில் இருந்த ரமேஷின் தந்தை அங்கிருந்து மகனை கிளப்பமுயன்றார்
தந்தையின் கையை வெறுப்போடு உதறிவிட்டு

"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அவ்வளவுதான்"

'ரமேஷ் போட்ட சத்ததில் முத்துசாமிக்கும் நடராஜனுக்கும் நடந்த வாக்குவாதம் கூட தடைபட்டு அனைவரும் ரமேஷ்ஷை பார்க்க'

'நேராக ராஜியிடம் சென்றான் '

'ராஜி
கலங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டு பாரத்தாள் '

"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல யார் தடுத்தாலும் நம்ம கல்யாணம் நடக்கும் ராஜி என்றான் அமைதியாக"

'அதுவரை முகத்தில் எந்த உணரச்சியும் காட்டாமல் இருந்த சங்கரின் கண்கள் வேங்கையின் சீற்றம் தெறித்தது'

"இந்தத் தாலியை கழட்டி இவன் மூஞ்சில வீசு, யார் தடுத்தாலும் நம்ம கல்யாணம் நடக்கும் "

'அக்னி விழிகளால் ரமேஷ்ஷை பார்த்து எரித்துக்கொண்டிருந்தான் சங்கர் '

'நடராஜன் ஏதோ பேசப் போக சட்டென்று அண்ணனின் கையைப் பிடித்து அழுத்தி விட்டு கண்களால் எதுவும் பேசாதே என்பது போல் ஜாடை காட்டி விட்டார் ஆனந்தன்'

'முத்துசாமியின் மீசை துடிக்கத்தான் செய்தது மகன் கட்டிய தாலியை கழட்டி அவன் முகத்திலேயே
வீசி விடுவதா என்று,,,,,
மகனை பார்த்தவர் எரிமலையே தனக்குள் அடக்கிக் கொண்டு இருக்கிறான் என்பதை அவன் கைகளை இறுக
மூடிக் கொண்டிருப்பதில்தெரிந்தது'

"ரமேஷ் புத்தி பேதலிச்சு போச்சாடா உனக்கு இந்த பொண்ண இனி நாங்க ஏத்துக்கமாட்டோம்"

தந்தை கூறியதை அவன் காதிலேயே வாங்கவில்லை

"நீ சொல்லு ராஜி யாராலயும் எதும் செய்யமுடியாது சங்கரை பார்த்தபடி கூறினான் உன் பதில்தான் எனக்கு முக்கியம் "

'ஷங்கரின் பார்வை இப்போது ரமேஷ்ஷிடம் இருந்து ராஜியிடம் நிலைத்திருக்க '

கலங்கிய கண்களோடு அவன் முகத்தை ஏறிட்டவள்

' மாங்கல்யத்தை ஒரு முறை பார்த்தால் மீண்டும் அவன் முகத்தை ஒரு முறை பார்த்தாள் மனதை கல்லாக்கிக் கொண்டு அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள் '

'அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ரமேஷ் இந்த முடிவைதான் எடுப்பாள் என்று ஓரளவு யூகித்திருந்தான் அதையே அவளும் அவளது ஓரே பார்வையில் உணர்த்திவிட்டாள் '

'ஆயிரம் ஊசி 💉 ஒரே நேரத்தில் அவ்விருவரின் இதயத்தை துளைக்க அதன் வலி அவ்விருவரின் கண்களிலும் தெரிந்தது'

"ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி திறந்தவன், நல்ல நண்பனா உங்களோட என்னைக்கும், எப்பவும் நான் இருப்பேன் நம்ம நட்ப யாராலயும் பிரிக்கமுடியாது ராஜி"

' சங்கரின் வெற்றிப் பார்வைக்கும்,
இதழோறப்புன்னகைக்கும் பதிலடி குடுத்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறும் போது

கடைசிமுறையாக ராஜியை திரும்பி பார்த்தான் என்னோட வந்துடு ராஜி

அவன் பார்வையில் இருந்த அழைப்பில் முற்றிலும் உடைந்துவிட்டாள்

ஒரு நொடி தாலியை கழட்டி அதை கட்டியவன் முகத்தில் வீசிவிட்டு ரமேஷ்ஷோடு சென்றுவிடு என்று மனம் சொன்னாலும்

இரும்பு குண்டுகளை காலில் கட்டியது போல் நின்ற இடத்தை விட்டு அவள் அசையவில்லை அடுத்த நொடி ரமேஷ் அங்கு நிற்கவில்லை'

"என்ன ஆரத்தி ரெடியா"

'இதொ வந்துட்டேன்னே சங்கரின் அத்தை மணமக்களாக வந்து நின்ற சங்கர்- ராஜி ஆரத்தி சுற்றி உள்லே அழைத்து சென்றாள் '

"கல்யாணத்துக்கு போயிருக்கன்னு பாத்தா இப்படி கல்யாணத்த பண்ணிட்டு வந்து நிக்கிறியேடா பாவி பாவி சங்கரின் அம்மா கத்த"

"பார்வதிதிதி,,, காதை கிழிக்கும்படி முத்துசாமி கத்தியதில்,
பூஜை ரூமில் ராஜியை விளக்கேற்றவைத்து பால் பழத்தை மகனிடம் நீட்டியிருந்தாள் பார்வதி "

"சங்கரின் அத்தை, அந்த பொண்ணுக்கும் குடுடா என்று சொல்ல "

'ஸ்பூனால் எடுத்து அவள் அருகே கொண்டு சென்றான் குனிந்த தலையும் வெறித்த பார்வையுமாக அமர்ந்திருந்தாள்'

மண்டபத்தை விட்டு ரமேஷ் வெளியேறிய பிறகு நடராஜனும், முத்துசாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட அது இருகுடும்பங்களின் வாக்குவாதமாக மாறியது

கடைசியில் சங்கரின் மனைவியாக அவன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள்

பெண்னை பெற்றவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை

அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை நடை பிணமாக நின்றவளை சங்கரோடு சேர்த்து நிற்க வைத்தார்கள், நின்றாள், அவள் நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் குங்கும் வைக்க சொன்னார்கள் அவனும் வைத்தான்,

இப்போதும் அப்படிதான் நடந்தது ஸ்பூனை அவள் பக்கம் கொண்டு சென்றான் அவலோ அவன் புறம் திரும்பவேயில்லை

ஏய்,,, அவன் அதட்ட போக அதற்குள் மறுவீடு அழைத்துச்செல்ல வாசு வந்துவிட்டான் (நடராஜன் மகன் )

ராஜியின் வீட்டில் எல்லா உபசரிப்புகளும் நடந்தாலும் அனைவரும் முக இருக்கத்துடன் இருந்தனர்

நடராஜனும் அவர் மனைவி கலாவும்தான் சகஜமாக இருந்தனர்

ராஜி தன் ரூமிற்கு சென்று கதவை அடித்து சாத்திவிட்டாள் அதை கவனித்த நடராஜன் சங்கரை அழைத்து கொண்டு மாடிக்கு சென்றார்

"ராஜி ராஜி கதவை திறமா "

"என்ன பெரியப்பா என்றபடி கதவை திறந்தவள் சங்கரை பார்த்தவுடன் திடிக்கிட்டாள் நடராஜனை அங்கு காணவில்லை

"ஹாய் மை டியர் ப்ராடு பொண்டாட்டி மாமனார் வீட்ல நல்ல விருந்து அப்புடியே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு பாத்தா கதவை சாத்திகிட்ட என் பெரிய மாமனாருக்கு பெரிய மனசுடி
ரெஸட் எடுங்கன்னு ரூம காட்டிட்டு போய்ட்டாரு "

இறுகிய முகமும்,வெறித்த பார்வையுடன் நின்றவள் ரூமை விட்டு வெளியேற முனைய, அவள் கையை முரட்டுதனமாக பற்றி இழுத்து கீழே தள்ளிவிட்டு, கதவை சாத்திவிட்டான்,

அவன் தள்ளியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்

'விழுந்தவளின் மனமும் கண்ணும் கலங்கியது '

அவள் தோளை பிடித்து தூக்கி சுவரோடு சுவராக சாய்த்து அவள் கண்களைப் பார்த்தான்

கலங்கியிருந்தது அதேசமயம்
அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து வெறித்த பார்வையுடன்
சுவரை பார்த்திருந்தாள்

அவன் கண்களில் அக்னியின் சீற்றம்,,,,

அவளின் வெறித்த பார்வையிலோ ஏமாற்றமும் வெறுப்பும் கலந்த கோபமும் ,,,,,,,,

"திருட்டு நாயே கல்யாணம் பண்ணிட்டு அவனோட கனடா போயிடலாம்னு நெனச்சில முடிஞ்வெறித்திருக்க, விடுவேனாடி
உன் திமிரு, அகம்பாவத்த அடக்கதான்ட இந்த கல்யாணமே "

'நீ என்ன வேணாலும் உளறிகொட்டு எனக்கென்ன N காது K காது என்ற ரீதியில் அவளின் பார்வை சுவற்றையே வெறித்திருக்க'

ப்பளார் என்ற சத்தத்தில் ராஜியின் காது ங்ங்ங்கொய்ய்ய்ய்ங்ங்ங்ங்
அதிர்ச்சியில் அவள் உடல்
தூக்கிபோட்டது அப்பொழுதும் அவள் பார்வை சுவற்றை நோக்கியேயிருக்க

அதை கண்டு வெறி கொண்டவன் அவளின் சங்கு கழுத்தைப் வலிக்கும் படி பிடித்து அவள் பார்வையோடு தன் பார்வையை கலந்து
"நீ வாழ்ந்தாலும் செத்தாலும் என்னோடதான்டி,,,,,,,,"

மனதோடு மீண்டும் பேசுவோம் ,,,,,,,,,,,,
 
Last edited:

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்.

எனக்கு இந்த சைட் கொஞ்சம் குழம்புது, அதான் எபியை கமெண்ட்ஸ் த்ரெட்ல போஸ்ட் பண்ணிட்டேன்.

இப்ப அதை டெலிட் பண்ணிட்டு இப்ப தான் இங்க போஸ்ட் பண்ணினேன்..

சோ நான் ஸ்டெடியா ஆகும் வரை கொஞ்சம் பொறுத்துகோங்க ப்ளீஸ்

இந்த எபி எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்கள். அடுத்த எபி விரைவில்


அன்புடன்
ரேணுகா தேவி...
 
Last edited:

Megala Appadurai

Well-known member
ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம் நான் உங்க புதிய தோழி் ரேணுகாதேவி, புதுக்கோட்டை பொண்ணு புதுசா வந்து இருக்கேன் உங்கள நம்பி, மனதோடு நான் பேசுவேன் மூலமா உங்களோட தொடர்ந்து பேச போறேன் அதுக்கு உங்களோட சப்போர்ட் வேணும் உங்க சப்போர்ட் இருந்தால்தான் next எபிசோட் என்னால் கொடுக்க முடியும் இதுல வரக்கூடிய நிறை குறைகளை மட்டும் இல்லாம உங்களோட எதிர்பார்ப்பையும் சொல்லுங்க அது படி கொடுக்க முயற்சி பண்றேன்
நன்றி
வாசக நண்பர்களின் கருத்துக்களை எதிர்ப்பார்த்து,,,,,,,,,,
என்றென்றும் நட்புடன்,
உங்கள் தோழி,
N.ரேணுகாதேவி.


கேட்டவுடன் வாய்ப்பளித்த சகோதரி திருமதி ஸ்ரீகலா அவர்களுக்கு நன்றி thanks akkkaaaaaa????

நான் எழுதுறதுறேன்னு சொன்னப்ப உன்னால முடியும் என்று சொல்லி ஊக்கப்படுத்திய என் நண்பர்களுக்கும் என் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள் ???

கதைசுருக்கம் ;

மனதோடுதான் நான் பேசுவேன்

ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு மனதோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறது, அதை இருமனமும் உணர்ந்து அன்பாலும் நேசத்தாலும் ஈர்க்கப்பட வேண்டும் அன்பான அதிகாரத்திற்கு மனம் கட்டுபடும், அன்பும் நேசமும் இல்லை என்றால் அந்த உறவு முறிந்துவிடும்
இங்கே விருப்பட்ட இரு மனம் சேரும் நேரத்தில் பிரிகிறது, வேண்டாம் என்று விலகிய உறவு வன்மத்தோடு வலுக்கட்டாயமாக சேர்கிறது வன்மம் மறைந்து அன்பும் நேசமும் அங்கு மலர்கிறதா என்பதை hero - சங்கர்
heroin - ராஜேஸ்வரி (ராஜி)
இவர்களின் மனதோடு நாமும் பேசி தெரிந்துகொள்வோம் வாருங்கள்



மனதோடுதான் நான் பேசுவேன் - 1


ராஜி.... ராஜி இங்க என்னபன்ற அப்பா உன்ன கீழ தேடிகிட்டு இருக்காரு

இன்னும் ரெண்டு நாளைக்கு தேடப்போரீங்க அப்பறம் ....

இப்படிஎல்லாம் பேசாத ராஜிம்மா சித்ராவுக்கு கண்கலங்கதான் செய்தது இன்னும் ரெண்டு நாளில் மகள் திருமணம் முடிந்து வேறு வீடு செல்லப்போகிறாள் மகள் திருமண சந்தோசத்திர்கு இணையாக மகளை விட்டு பிரியும் வருத்தம் பெற்றவர்களுக்கு இருக்கதானே செய்யும்

உன் அப்பா உனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டாரு
என் அப்பா இந்த மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சுருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை என்ன கேக்கல தெரியுமா


அந்த மனுசன் உன்கிட்ட அப்படி கேட்டுருந்தா என் வாழ்க்கை நல்லாருந்துருக்கும்டி

ஏன் இப்ப வாழ்க்கையில என்ன கொறஞ்ருச்சு கணவன் ஆனந்திடம் அக்னி பார்வையுடன் சித்ரா கேட்க

நம்ம பஞ்சாயத்துக்கு இப்ப நேரம் இல்ல ராஜிம்மா மாப்புள்ள உனக்கு போன்பண்னாரு கொஞ்சநேரம் கழிச்சு பண்னசொன்னேன் என்னனுன்னு கால் பண்ணு

அப்பா என்று கண்கலங்கியவளை நெஞ்சோடு அனைத்துக்கொண்டவர் அழாத ராஜிம்மா
இப்பதான் அழுகை எல்லாம் அப்பறம் என் வீட்டுக்கார் சாப்டாரோ
இல்லையோன்னு புருசனபாக்க ஓடிடுவிங்க


போங்கப்பா அப்படி எல்லாம் இல்ல அந்த நேரம் ஆனந்தன் கையில் இருந்த மொபைல் சினுங்கியது இந்தா மாப்புளதான்
சிரிப்புடன் போனை வாங்கிக்கொண்டு மறைந்துவிட்டாள் ராஜி


ஹலோ எப்படி இருக்கீங்க மேடம்?
என் ஒய்ப் மேடம் எப்படி இருக்காங்க?


உங்க ஒய்ப் மேடம்தான்
அழறாங்க


ஏன் என்னாச்சு?

அப்பா அம்மா பிறந்த இடத்தவிட்டு வரனும்ல,,, ,,,,,,

ஓ,,,,ஓஓ,,, என் மனைகிட்ட சொல்லுங்க அப்பா அம்மாக்கு மேல கணவனுக்கும் மேல நல்ல நண்பனா இருப்பேன்

இப்ப இப்படி தான் சொல்வீங்க கடைசிவறைக்கும் இந்த வார்த்தையை காப்பாத்திரிங்களான்னு பாக்குறேன், இப்ப எங்க இருக்கீங்க

எங்க இருக்கனுமோ அங்க
புரியல
கொஞ்சம் வெளில வந்து பாருங்க மேடம்


என்ன வெளிலயா யோசனையோடு வெளியே வந்தவள்

ஏய்ய்.... ரமேஷ் என்ன இப்படி சர்பிரைஸ்விசிட் நாளைக்கு வர்றதாதானே சொன்னீங்க

வாங்க மாப்பள்ள வாங்க வாங்க உள்ள வாங்க மாப்பிள்ளைய வெளிலயே நிக்க வச்சு பேசிட்டு இருக்க வாய் மொழியிலே மகளுக்கு கொட்டு வைத்துவிட்டு ரமேஷ்க்கு காப்பி கலக்க சென்றாள் சித்ரா

ஆனந்திடம் ராஜி க்கு கிப்ட் வாங்கிட்டு வந்துருக்கேன் மாமா அத குடுத்துட்டு போலான்னுதான் வந்தேன்....

அவன் இழுப்பதை புரிந்துகொண்டவர் ராஜி மாப்பிள்ளைய மாடிக்கு கூட்டிட்டு போ அம்மாவ காப்பி எடுத்துட்டு வரசொல்றேன்

என்ன கிப்ட் சார்?
அவள் விரலில் மோதிரம் மாட்டினான் அதில் RR என்றிருந்தது
ரமேஷ் - ராஜி பிடிச்சுருக்கா


ரொம்ப்பப்ப பிடிச்சுருக்கு இத நாளைக்கு மண்டபத்துலயே குடுத்துருக்கலாமே

குடுத்துருக்கலாம் பட் இன்னைக்குதான் இதகுடுக்கனும்

ஏன் புரியாமல் அவனைப் பார்ததாள்

நாளைக்கு நமக்கு என்கேஜ்மென்ட் அப்ப நீ எனக்கு பாதி மனைவியாயிடுவ அப்ப இந்த ரிங்கபோனடுறது பொருத்தமா இருக்காது

ஏன் ?

ஏன்னா இது நம்ம நட்புக்கு அடையாளம்மா இருக்கனும்
இத பாக்குறப்ப எல்லாம்
நான் நல்ல நண்பன்கிற எண்ணம் உன் மனசுல இருக்கனும் ஒகே,,,


அப்ப நம்ம நல்ல பிரண்ஸ்ஸாவே இருந்தர்லாமே ஏன் மேரேஜ் எல்லாம் வில்லான தன் ஒற்றை புருவத்தை தூக்கி கண்ணடித்து குறும்புடன் ராஜி கேட்கவும்

சுவருடன் அவளை தள்ளி தன் இரு கைகளுக்குள் அவளை சிறையிட்டவன் இதுக்கு பதில் நாளைக்கு இன்நேரம் தெரிஞ்சுக்குவ

இப்பவும் நான் உனக்கு நல்ல நண்பன் என்ற வார்த்தை வானோடு சென்ற அப்தரஸ்களின் சென்றடைந்த்தோ என்னவோ அப்படியே ஆகட்டும் என்று அவர்களும் வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார்கள்
************************************
வாங்கன்னா எப்படி இருக்கீங்க


நல்லாருக்கேன் ஆர்த்தி நீ எப்படி இருக்க

நல்லாருக்கேன்
உட்காருங்க அம்மாவ கூப்புரேன்
அம்மா சிவா அண்ணா வந்துருக்காரு வா


நீ போய் காபி போடு மகளை அனுப்பிவிட்டு
வாப்பா சிவா நல்லாருக்கியா அம்மா எப்படி இருக்காங்க


நல்லாருக்காங்க ம்மா

சாரதா நல்லாருக்கா

எல்லாரும் நல்லாருக்காங்க அடுத்த வாரம் சிங்கப்பூர் கெளம்புறேன் அதான் சொல்லிட்டு போலான்னு வந்தேன்

காபி எடுத்துக்கங்கன்னா ஆர்த்தி நீட்டிய டம்ளரை வாங்கியவனின் மனமோ பின்நோக்கி சென்றது
இரட்டை ஜடையில் கையில் புக்குடன் கௌனில்
எட்டு வயது ஆர்த்தி


கையில் பந்தை சுழற்றியபடி நின்ற பதினான்ங்கு வயது சிவாவிடம்
இங்க சாரதா மிஸ் வீடு


ஏன் கேக்குற?
மிஸ் புக்கு கேட்டாங்க



கையில் பந்தை சுழற்றியபடியே அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்
சாரதாமிஸ் உங்கள தேடி இந்த பொண்ணு வந்துருக்கு இந்த வீடுதான் ஆர்த்தியிடம் கூறிவிட்டு விளையாடச் சென்று விட்டான்


ஆர்த்தி திரும்பி வந்தபோது

மிஸ்ச பாத்துடீயா என்று கேட்டான்

ம்ம்ம் பூம் பூம் மாடு போல் தலையாட்டினாள்

எது உங்க வீடு

அந்த ப்ளூ கலர் காம்பௌண்ட் சுவர் தான் எங்க வீடு

இப்பதான் புதுசா குடிவந்த இருக்கீங்களா

திரும்பவும் பூம் பூம் மாடானாள்

காபியை குடித்துக் கொண்டே பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன் அவளைப் பார்த்து சிரித்தான்

என்னன்னா சிரிக்குறீங்க

இப்பவும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுரியா

இப்படிதானே என்று தலையை பரதநாட்டிய ஸ்டைலில் ஆட்டி காட்டினாள்

முன்னாடில்லாம் பேசமாட்ட இப்ப வாய் அதிகமாய்டுச்சு போல பேச்சிலே குட்டு வைத்தான்

பேசாம இருந்தா ஊமை குசும்புனு சொல்றீங்க பேசினா வாயாடி கட் அன் ரைட்டா பேசினா அழுத்தக்காரி ஒன்னு இரண்டு வார்த்தையோட முடிச்சுக்கிட்டா முசுடு அப்பறம் என்னதான் எங்கள பன்னசொல்றீங்க

அடேங்கப்பா,,, தேரிட்ட ஆர்த்தி தேரிட்ட
எப்பம்மா ஆர்த்திக்கு கல்யாணம் பண்ண போறீங்க


பண்ணனும்பா இந்த வருஷம் படிப்பை முடிச்ச உடனேயே பார்க்க சொல்லிட்டேன்

சும்மா இரும்மா நான் MPhil முடிச்சதுக்கப்பறம் கல்யாணத்தபத்தி பேசிக்கலாம்

அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாங்க சொல்றதை நீ கேட்டு நடந்தபோதும் இவளுக்கு ஒன்னும் தெரிய மாட்டேங்குது சின்ன புள்ள தனமா இருக்கா சிவா

சரிதான்மா

நீங்களுமான்னா ஆர்த்தி முகத்தை சுளித்தாள்

அம்மா சொல்றதும் சரிதான் ஆர்த்தி அவங்க எடத்துல இருந்து நீ யோசிச்சு பாரு
படிப்புமுடிஞ்சதும் மாப்புள பாருங்க சரியா இருக்கும் சரிமா நேரம் ஆச்சு நான்போய்ட்டுவர்றேன்


சரிப்பா பத்திரமா போய்ட்டு வா

அண்ணா உங்க நம்பர் குடுத்துட்டு போங்க நான் அப்பறம் கால் பண்றேன் நம்பர் கொடுத்து விட்டு
நல்லா படி நான் திரும்ப வர்றப்ப உனக்கு மேரேஜ் ஆனாலும் ஆயிருக்கும்


இப்ப என்ன அவசரம்ன்னா பொறுமையா பாத்துக்கலாம்
போய்ட்டு மறக்காம கால் பண்ணுங்க


ம்ம் பண்றேன் ஆர்த்தி வரவா

பைன்னா சிரித்த முகத்துடன் இவள் பை சொல்ல அவனும் சிரித்த முகத்துடன் பையை வாங்கிச்சென்றான்.

******************************
கல்யாண மண்டபம் கலகலப்பாய் இருந்தது


பேச்சுலர் பார்ட்டி பேச்சுலர் பார்ட்டின்னு கடைசியில் என்னை ஏமாத்திட்டியேடா ரமேஷிடம் புலம்பிக்கொண்டிருந்தன் விக்னேஷ் (ரமேஷ்ன் நண்பன்)

எல்லாருக்கும் ஹோட்டல்ல ரூம் போட்டுக் கொடுத்து அங்கேயே பார்ட்டியும் முடிஞ்சு போச்சு
உன்ன போக வேண்டான்னு நான் சொன்னேனா, ராஜி பிரண்டு கவிதாகிட்ட மொக்க போட்டுகிட்டு அவ பின்னாடியே சுத்திகிட்டு
நீ போகாம் இருந்ததுக்கு நான் என்னடா பண்ணுறது


பாத்தோன்ன அவள புடிச்சு போச்சு சரி உன் கல்யாணத்துலயே என் கல்யாணத்துக்கு ஒரு அச்சாரத்தை போடுவோம்னு அவகிட்ட பேசி வைச்சேன் அந்த நேரம் சிவ பூஜைல கரடியா வந்தது மட்டும் இல்லாம அவ முன்னாடி பார்ட்டிகிக்கு கூப்டா நான் என்னடா பண்ணுறது

சரி கல்யாணம் முடிஞ்சு உடனே பார்ட்டி தர்றேன் இப்போ போய் கதவை திற யாரோ கதவ தட்டிகிட்டு இருக்காங்க

கதவை திறந்த விக்னேஷ் ஓ மை ஸ்வீட் ஹார்ட் அவன் வாய் முணுமுணுத்தது

என்னது அதட்டியபடி கேட்டாள் கவிதா

இந்த சாரீயிலே ரொம்ப அழகா இருக்கீங்க அதைச் சொன்னேன்

தேங்க்ஸ் கொஞ்சம் வழிவிட்டா நல்லாருக்கும்

வழி விடலன்னா நல்லா இருக்காதா விஷமத்துடன் விக்னேஷின் கண்கள் கண்ணடிக்க

அதுசரி இவனுக்கு வாய்தான் வில்லங்கமா பேசுதுன்னா கண்ணும் வில்லங்கமா பாக்குதே

நீங்க வழியே விட வேண்டாம் ராஜி கிட்ட போயி நீ கொடுத்த கிப்ட்ட கொடுக்க முடியல விக்னேஷ் அண்ணா விக்னேஷ் அண்ணா ரொம்ப பெருமை பீத்துவீயே அந்த நொண்ணா நீ குடுத்த கிப்ட உன்ஆல்ட்ட குடுக்கவிடல நீயே போய் உன் கிப்ட குடுத்துக்கன்னு சொல்லியர்றேன்

ஓ... நோ...ஸ்வீட்டி என்றவனை முறைத்துவிட்டு

ஏய்,,,, ஸ்வீட் இருக்கும் அத சாப்பிட நீங்க இருக்கமாட்டிங்க சாரே என் அண்ணா பாக்ஸர் தெரியுமா

என் அண்ணா பேர் பாஸ்கர் தெரியுமா அவனும் அவளைப் மூக்கை விடைத்துக்கொண்டு சொல்ல
டேய் இங்க என்னடா பண்ற
இங்க பாருங்க அண்ணா ராஜி உங்களுக்கு இந்த கிப்ட கொடுத்து விட்டா அதை குடுக்க வந்தா உங்க பிரண்டு வழிவிடாம தகராறு பண்றாரு என்னன்னு கேளுங்க கவிதா ரமேஷிடம் ஞாயம் கேட்டாள்
விக்னேஷை உக்கிற பார்வை பாரத்துவிட்டு் நீங்க உள்ள வாங்க கவிதா
விக்னேஷை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்


கிப்டை சிரித்த முகத்துடன் வாங்கி பிரித்துப் பார்த்தான் உள்ளே ஒரு அழகான டைட்டன் வாட்ச் இருந்தது
சிகப்பு கலர் ❤ இதயவடிவத்தை நான்காக பிரிப்பது போல்
கோல்டன் கலரில் இரு புரமும் R அதை ஊன்றிப் பார்த்தால் தான் உள்ளே உள்ள R வடிவம் புரியும்


வாவ் வாவ் சூப்பராயிருக்குன்னா நைட் கூட கேட்டேன் என்னடி வாங்கிருக்கன்னு சொல்லமாட்டேன்னுட்டா

மச்சி சூப்பர் டேஸ்ட்டா சிஸ்டர்க்கு எக்ஸலன்ட்

தன் கையிலிருந்த வாட்ச்சை கழட்டிவிட்டு ராஜி கொடுத்த வாட்ச்சை கையில் கட்டிக் கொண்டான்
ராஜிக்கு கால் பண்னான்


என்ன மாப்பிள்ளை சார் வாட்ச் பிடிச்சிருக்கா

ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்ஸ் சொல்லவா

வெயிட் அதுல இன்னும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கு லெப்ட்சைடு்ல இன்னொரு பட்டன் இருக்கு பாருங்க அத பிரஸ் பண்ணுங்க
ரமேஷ் ரமேஷ்ஷ் ரமேஷ்ஷ்ஷ் டேய் ரமேஷ் என்னடா பண்ற
ரமேஷ் ராஜி கூப்புரா


இப்ப சொல்லுங்க மாப்ள சார் சஸ்பென்ஸ் புடிச்சிருக்கா

புடிச்சிருக்காவா
?????????????????
செல்லில் ரமேஷ் முத்தம் குடுக்க ஆரம்பித்ததும் காவிதா வெட்கப்பட்டுக் கொண்டு ரூமைவிட்டு வெளியேறிவிட்டாள்


டேய்ய்ய் நாங்கலெல்லாம் இங்க நிக்குறதா வேண்டாமா விக்னேஷ் கேட்டது காற்றோடு போனது அவனோ செல்லுக்கு கொடுக்கும் இதழ்ஒற்றலை இன்னும் நிறுத்தியபாடில்ல

கவிதாவின் பின்னோடு வந்த விக்னேஷ்

கவி கவி நில்லுங்க

Hello என் பேர் கவி இல்ல கவிதா

நான் செல்லாம கூப்டேன்

கவிதா சுற்றிமுற்றி கண்களை சுழலவிட்டாள்

யார தேடுறீங்க

சொல்றேன்,,,, அதோப அங்க பாருங்க

எங்க?

அங்க ஹைட்டா வெயிட்டா பாடிபில்டர் மாரி இருக்கான்ல

ஆமா இப்ப என்ன அதுக்கு?

அவன் தான் என் அண்ணன் வாங்க உங்கள introduce பண்றேன்

ஓ,,நோ,,,டைம் இல்ல கவிதா
ஐயர் மாப்பிள்ளைய கூட்டிடுவரசொல்லிட்டாரு நீங்கதான் துணை மாப்பிள்ளை ச்சீச்சீச் இல்ல இல்ல துணைப்பொண்ணு நான் துணை மாப்பிள்ளை நீங்க பொண்ண கூட்டிட்டு வாங்க நான் போய் மாப்பிள்ளைய கூட்டிட்டு வர்றேன் இப்ப போய் அவன கூப்டல போன்லயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சுடுவான் மேரேஜ் முடிஞ்சோன்ன உங்க அண்ணன்டபோய் நானே இன்ட்றோ ஆயிக்குறேன் கவிதாவின் பதில்லை கூட எதிர் பார்க்காமல் விருட்டென்று சென்றுவிட்டான்


????? கவிதாவிற்கு சிரிப்பை கட்டுப்படுத்த
முடியவில்லை மனதிற்குள் அவன் பேச்சோடு சேர்த்து அவனையும் சேர்த்து ரசிக்க ஆரம்பித்தாள்


ரமேஷை மணவறையில் அமரவைத்தான் விக்னேஷ் கவிதா,மற்ற தோழிகள் புடைசூழ பொன்சிலை என ராஜி அழைத்துவரப்பட்டாள்

ராஜியின் அழகை கண்களால் பருகியவன்

View attachment 1869 தன்னருகில் அவள் அமர வைக்கப்பட்டதும் யாருக்கும் தெரியாமல் அவள் கைகளை கிள்ளினான்

☺ வெட்கப் புன்னகையோடு அவன் புறம் திரும்பியவள் அவன் தொடையில் கிள்ளினாள்

திடீரென பெரும் சத்தம் என்ன ஏது என்று உணர்ந்துகொள்ளும் முன் பெரியதகராறாக மாரியது ரமேஷ்சும் ராஜியும் எழுந்துவிட்டனர் மாலையை கலட்டப்போன ரமேஷை தடுத்த விக்னேஷ் நீ இரு நான் போய் என்னன்னு பாக்குறேன்
விக்னேஷ்ஷின் தலை மறைந்த்தே ஓழிய அவனால் சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை
ரமேஷ் மாலையை கழட்டிவிட்டு கூட்டத்தை நோக்கி சென்றான் ராஜியின் பெரிய விழிகள் கலங்கி நின்றது அருகில் நின்ற கவிதாவின் கையை இருகப்பற்றிக்
கொண்டாள் மண்டபமே சண்டை நடந்த இடத்தை வேடிக்கை பார்த்ததுக் கொண்டிருந்தது
தனக்கு பின் ஒரு உருவம் வந்து நின்றதையோ அதன் கை தன் கழுத்தை நோக்கி வந்ததையோ அவளும் கவனிக்கவில்லை அங்கிருந்தவர்களும் கவனிக்கவில்லை
யதேர்சியாக திரும்பிய கவிதா என்ன பண்றீங்க அவன் கையை பிடிக்கப் போக அவளை தள்ளிவிட்டு அவன் தாலியை கட்டுவதர்க்கும்
கவிதா சத்தம் போட்டதில் என்ன என்று ராஜி திரும்புவதற்கும் சரியாக அமைந்துவிட்டது என்ன பண்றவிடு என்று ராஜி அலறினாள் மேடையில் நின்ற பெண்களும் ஆண்களும் அவனை பிடித்து இழுத்தனர் அவனோ ராஜியின் கழுத்தை தன் இரு கரங்களுக்குள் அடக்கி மூன்றாவது முடிச்சையும் போட்டுவிட்டான் சங்கர்



மனதோடு மீண்டும் பேசுவோம்,,,,,,,,,,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் எல்லாரும் நல்லா இருக்கீங்களா,

லாஸ்ட் எபிசோடு நிறைய பேர் லைக் கொடுத்து இருந்தீங்க நன்றி ,

இந்த எபிக்கு முன்னாடி கவிதைங்குற பேர்ல ஏதோ கிறுக்கி இருக்கேன் படிச்சுட்டு திட்டாதீங்க,

இந்த எபிசோட படிச்சிட்டு நிறை ,குறை, உங்களோட எதிர்பார்ப்புகளை கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க அதை அடுத்த எப்பில பூர்த்தி செய்ய முயற்சி பண்றேன்
தேங்க்யூ ,,,,,,,,,,

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து,
உங்கள் தோழி ,
ரேணுகாதேவி,,,,,,,,,,,


குட்டி கவிதை,,,,,,,

என்னவனே எங்கிருக்கிறாய் ,,,,
என்ன செய்து கொண்டு இருக்கிறாய் ,,,
எப்போது என்னை வந்து சேருவாய்,,,,,,
காத்திருக்கிறேன் உனக்காக ,,,,,

எனை காக்க நீ வருவாய் என்ற தைரியத்தோடு
காத்திருக்கிறேன்,,,,,

என் தைரியம் நீ
என் தன்னம்பிக்கை நீ
என் உணர்வுகளை எனக்கு உணர்த்தும் ஒளி நீ
என் திமுரும் நீ
என் பணிவும் நீ
என் கர்வத்தை அழிப்பவன் நீ
என் கர்வத்தை அளிப்பவன் நீீ
என் அழகை தருபவன் நீ
என் அழகை பறிப்பவன் நீ
என் மனதை திருடியவன் நீ
என் மனதில் உன் மனதை சேர்த்தவனும் நீ
என் வாழ்வின் துனை நீ
என்னை உன் துணையாக்கிக் கொள்ள
எப்போது வரப் போகிறாய்,,,,,,

உன் கை கோர்த்து தோழியாக நடந்து செல்ல
காத்திருக்கிறேன்,,,,,,,

டேய் பொறுக்கி செல்லமாக உனை அழைக்க
உன் காதலியாக காத்திருக்கிறேன்,,,,

உன் பசியாற்றி என் மடியில் தூங்கவைக்க
தாயாக காத்திருக்கிறேன்,,,,

நீ தவறே செய்தாலும் நல்வழி இழுத்து
சென்று மச்சான் நான் இருக்கேன்டா என்று
சொல்ல நண்பனாக காத்திருக்கிறேன்,,,,,,,

உன் மீசையை பிடித்து விளையாட உன்
பிள்ளையாக காத்திருக்கிறேன்,,,,,

உயிரோடும் உணர்வோடும் கலந்து, உனக்குள்
இருக்கும் சக்தியாக
உன் மனதோடு மனதாக
பேசிக்கொண்டிருக்கும் மனைவியாக
காத்திருக்கிறேன்,,,,,,,,

எப்போது என்னை சிறையிட்டு செல்ல
வரப்போகிறாய்,,,,,,,,

காத்திருப்பது சுகம் என்றால்,,,,
காத்திருக்கிறேன்,,,,,,,
என்
நண்பனுக்காக,,,,,

காத்திருக்கிறேன் காதலோடு எனை
ஆழப்போகும் நண்பனான கணவனுக்காக,,,,,,
காத்திருக்கிறாள்,,,,,,,,,,,,,,,,,,,
RD(Renugadevi),,,,,,.

*********************************



மனதோடுதான் நான் பேசுவேன் - 3



இருபுறமும் R என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட அந்த மோதிரத்தை பார்த்து ராஜியின் கண்கள் குளமாகி கொண்டிருந்தது

'இந்த ரிங்க பாக்குறப்ப எல்லாம் நான் நல்ல நண்பன்குற எண்ணம் உன் மனசுல எப்பவும் இருக்கணும் ரமேஷின் வார்த்தைகள் அவள் செவிகளில் ஒலித்தது '

"இங்க என்ன பண்ற என்ற கோபகுரல்", ராஜீயை திடுக்கிட செய்த்து

"அப்பா" ,,,,,,,,,,என்று கதறியவளை தோளோடு
அணைத்துக் கொண்டு அவரால் ஆறுதல் சொல்ல முடியவில்லை

"என்னால முடியலப்பா",,,,,,,,,,,, அந்த வார்த்தையில் ஆனந்தனின் மனம் உடைந்துவிட்டது

"ராஜிம்மா" ,,,,,,,,,
மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவராலும் பேசமுடியவில்லை

"அழாதம்மா இனி அழுது எதுவும் மாறப் போவது கிடையாது
நமக்கு நடக்குறதெல்லாத்துக்கும் நேரிடையாவோ, மறைமுகமாவோ நம்மளே காரணமா இருப்போம்,

கல்யாணம் நின்னதுக்கு நீ காரணம் இல்ல , ஆனா சங்கர் உன் கழுத்துல தாலி கட்டுனதுக்கு நீதான் காரணம்

கோபமாக ஆனந்தின் வார்த்தை ஒரு நொடி ராஜியை சுடதான் செய்தது

ராஜியின் மனம் கேள்வி கேட்டது
'அப்பா சொல்றதுல என்ன தப்பு?'
அதேசமயம்
'நம்ம மேல மட்டும்
என்ன தப்பு ?'
மனசாட்சி கொதிப்புடன் எதிர் கேள்வி கேட்டது

மகளின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாலும் அவரின் கோபம் அவர் முகத்தை இறுக்கத்தான் செய்தது, அந்த இறுக்கத்துடனே

"இனி யாரையும் குற்றம் சொல்லி ஆக போறது ஒன்னும் இல்ல, நடந்தது நடந்ததுதான் எதையும் மாத்த முடியாது , இனி அவனோடதான் உன் வாழ்க்கைனு ஆகிப்போச்சு அது நல்லபடியா அமைச்சுகுறது உன் கையிலதான் இருக்கு , தேவையில்லாத மனசுல கண்டதையும் போட்டு குழப்பிக்காத " பட்டுக்கத்திரித்தார் போல் பேசிவிட்டு சென்ற தந்தையை மனம் உடைந்து பார்த்தாள், அந்த பார்வைக்கு நான் இருக்கேன்டா என்று தைரியம் தர அவர் அங்கு நிற்க்கவில்லை

அவள் மீது அவருக்கு கோபம் இருந்தது, எங்கே அவளிடம் பேசும்போது தன்னை மீறி கத்திவிடுவோம் என்பதை உணர்ந்து மகளின் மனதை நோகடிக்க விரும்பாமல் கீழே சென்று சென்றுவிட்டார்

ராஜியின் மனம் கொதித்துகொண்டிருந்த்து, ஆனந்தனை நினைத்து

முடியலப்பா,,,,,,,, அழுதவளிடம் ,
அவனோட நீ வாழ வேண்டாம் உன் மனசுபடி இரு, என்றும் அப்படி சொல்லமாட்டார் என்பது அவளுக்கே நன்றாக தெரியும்

'இரு மனம் சேருவதுதான் திருமணம் என்று இன்றுவரை வார்த்தையில் மட்டுமே சொல்கிறோம்' ,,,,,,,,,,,,

'சேரும் மனமும் சேர்த்து வைப்போரின் மனமும் மனதை பற்றி யோசிப்பதில்லை ',,,,,,,,,,

'சேரும் மனமோ குணம் என்ற அழகை பார்க்காமல் வெளிதோற்றத்தின் அழகை மட்டும் பார்க்கிறது'

'சேர்த்து வைப்போரின் மனமோ அந்தஸ்தை பார்க்கிறது'


ராஜியின் பெற்றோர்கள்
எங்க பொண்ணு விருப்பம் தான் முக்கியம் என்று வெளியில் சொல்லி வைப்பார்கள் ,,,,,

இவன்தான் மாப்பிள்ளை என்று ஆயிரம் பேரை காட்டினார்கள் ,

அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்ற கேள்வியை மேலோட்டமாக கேட்டுவிட்டு பிடிச்சிருக்கு என்ற பதிலை அவள் வாயில் வரவேண்டும் வரவேண்டும் என்று பிடிச்சுருக்குன்னு சொல்லுடுடா, நெஞ்சில் பாசத்தையும் கண்களில் ஆவலையும் நிரப்பி கேட்பவர்களிடம் என்ன சொல்வாள் அவள் ,,,,

தன் மகளின் மனதில் உள்ளதை புரிந்துகொண்டு செயல்படும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்,

தன் மகளுக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்,

இதில் பாசத்தால் அவர்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா ?

பிள்ளைகளை எந்த முடிவையும் தன்னிச்சையாக சிந்திக்க வைத்து அவர்களையே அதை செயல்படுத்த வேண்டும் ,
எத்தனை பெற்றோர்கள் இதை செய்கிறார்கள் ?

சில பெற்றோர்கள் பிள்ளைகளின் மேல் உள்ள பாசத்தால் அதை செய்ய தவறி விடுகிறார்கள் , அதுவே அவர்களின் வாழ்வில் கேள்விக்குறியாகிவிடுகிறது இன்று ராஜியின் வாழ்க்கையிலும் கேள்குறியில் நிற்கிறது

பிள்ளை கீழே விழுந்து விட்டால் சட்டென்று போய் தூக்குவதுதான் தாய்ப்பாசம் அதை யாராலும் தடுக்க முடியாது ,,,,,,

ஒரு குறிப்பிட்ட பருவம் தாண்டி பிள்ளை கீழே விழுந்தால்
கூட ,அவனாவே முயற்சி செய்து எழுந்து வர வேண்டும் என்பதை அக்குழந்தைக்கு பழக்க வேண்டும்,

உனக்குள்ளே தன்னம்பிக்கை இருக்கு என்று அதை குழந்தைகளின் மனதில் விதைப்பது பெற்றோரின் கடமை,

பிரச்சனை என்றவுடன் கலங்கி நிற்காமல் அதற்கான தீர்வை உடனே தேட வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்,,,,,,,

பெற்றோரின் பாசமே - பிள்ளைகளை உயர்த்திபிடிக்கும், சிலநேரம் பலவீனமடையச்செய்யும்

அப்படி தான் இன்று ராஜியின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது

ஒற்றை பெண் என்று சித்ராவும்-ஆனந்தனும் ராஜியை செல்லமாக வளர்த்திருந்தாலும் அவர்களுக்கு கட்டுப்பட்டே வளர்ந்திருந்தாள்

உன் வாழ்க்கையை நீ தான் தீர்மானம் பன்ணனும் முடிவு உன் கையில்தான் என்று ஆனந்தனே கூறியிருந்தாலும், தன் வாழ்க்கையை தானே முடிவு செய்யும் திறன் அவளுக்கு இருந்திருக்காது
அதற்கு காரணம் அவள் பெற்றோறே

****************************************

"ஹலோ யாரு?"

" நீங்க யாரு ?"

"ஹலோ போன் பண்ணது நீங்க என்னை யாருன்னு கேக்குறீங்க ஹேய் ஹேய் சிவா அண்ணாதானே?"

" கண்டுபிடிச்சிட்டியே,,,, அதட்டல் எல்லாம் பலமா இருக்கு "

"பர்ஸ்ட் உங்க வாய்ஸ்ஸ கொஞ்சம் கண்டு பிடிக்க முடியலனா எப்படி இருக்கீங்க சிங்கப்பூர் எல்லாம் எப்படி இருக்கு"

"எல்லாம் சூப்பரா இருக்கு
நீ எப்படி இருக்க நல்லாருக்கியா"

"நல்லா இருக்கேன்னா"

" காலேஜ் எப்படி போகுது"


"எக்ஸாம் அது இதுன்னு
ரொம்ப போர்னா"

" சப்ஜட்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கா "

"ரெண்டு பேப்பர் கஷ்டமா இருக்கு "

"மெயில் ஐடி வச்சிருக்கியா"

" இருக்கு அண்ணா "

"அப்போ என்ன டாப்பிக் கஷ்டமா இருக்கு அத மெயில் பண்ணு எக்ஸ்ப்பலைன் பண்றேன் "

"வாட்ஸப் நம்பர் இல்லையானா "

"இப்ப நான் பேசுறது வாட்ஸப் நம்பர் தான் சேவ் பண்ணிக்கோ மெயில் ஐடி அனுப்புறேன் "

"ஓகே அண்ணா தேங்க்ஸ் "

"Fbல இருக்கியா நீ "

"இருக்கேன்னா "

"அப்ப எனக்கு
ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடு"

" ஓகேனா"

"அப்பறம் என்ன "

"ஒன்னும் இல்லன்னா "

" சமையல்லாம் நீயா அம்மாவா "

" அம்மாதான் பண்ணுவாங்க "

"உனக்கு அப்ப சாப்புட மட்டும்தான் தெரியும் சொல்லு "

"உங்களமாரிதான் "

"முதல்ல எதுத்து பேசாத "

",,,,,,,,,,,,,,,,,,,,,,,,, "

"சொன்னா அத கேட்டு செய்ய பழகு புரியுதா "

"ம்ம்ம்ம்ம் "

"ஒழுங்கா இப்பவே சமையல் கத்துக்க இல்ல பின்னாடி ரொம்ப கஷ்டம் "

" ம்ம்ம்ம்ம்"

"என்ன எல்லாத்துக்கும் ம்ம்ம்ம்ம் னா என்ன?"

"கத்துகுறேன்னா"

"குட் ,ஒர்க் இருக்கு அப்புறம் கூப்பிடுறேன் "

"ஓகே அண்ணா பை"

'கடவுளே இவன நானா போன்பண்ண சொன்னேன் ரொம்பதான் மிரட்டுறான்'

புதைகுழியில் காலை வைக்கிறோம், அது தன்னை விழுங்கபோவது அறியாமல்

ஹாய் சிவா அண்ணா
fb , வாட்ஸ்ஆப்பிலும் மெசேஜ் அனுப்பி விட்டாள்

அவ்வளவுதான் " என்ன பேர் சொல்லி கூப்புர மரியாத இல்லாம இதான் உங்க வீட்ல சொல்லிகுடுத்தாங்களா அவன் வெடிக்க "

'அடப்பாவி டைப்பன்ன சோம்பேறிபட்டுகிட்டு சிவ்வான்னு மெசேஜ் பண்னதுக்கு இவ்வளவு பாட்டா',,,,,,
சரியான மண்ட இவன்னு தெரிஞ்சும் மெசேஜ் பண்னது நம்ம தப்பு, தன்னைத்தானே திட்டிக் கொண்டவள் ,

சாரி அண்ணா இன்று அனுப்பிவிட்டு அமைதியாக இருந்துவிட்டாள்

சிறிது நேரத்தில் நல்லா இருக்கியா என்ற செய்தி அவனிடம் இருந்து வந்தது

Fine அண்ணா , என்ற செய்தியை அனுப்பிவிட்டு இவளும் அமைதியாக இருந்துவிட்டாள் அவனும் அமைதியாக இருந்துவிட்டான்

இவனுக்கு, பொண்டாட்டி ஊமையா இருக்கனும், அப்பதான் இவனோட காலம் தள்ள முடியும் திமிர் பிடிச்சவன் ச்சை,,,,

அதன் பின் ஆறு மாத காலம் இருவருக்கும், எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது

***********************************

முத்துசாமிக்கு ஒரு பொண்ணும் மூன்று மகனும் மூத்தவன் சேகர் , நடுவுள்ளவன் நம் ஹீரோ சங்கர் , இளையவன் பாலாஜி

முத்துசாமிக்கு பரம்பரை பரம்பரையாக இருந்த சொத்துக்கள் அதிகம்

அதை சேகரின் திருமணத்தின் போது , மகளுக்கும், மூன்று மகன்களுக்கும் பங்குகளை பிரித்துக் கொடுத்து விட்டார்

சங்கரின் மீது முத்துசாமிக்கு என்றும் பிடிப்பு அதிகம், தன் சொந்த உழைப்பில் , தனக்கென ஒரு தொழிலை அமைத்து நல்ல பேரையும் பெற்றிருந்தான் ,

அவன் உழைப்பின் மூலமே மெயினான ஏரியாவில் இடம் வாங்கி தன் விருப்பத்திற்கு ஏற்ப வீடு கட்டி இருந்தான்

பூர்வீக சொத்தில் அவனுக்கு ஒதுங்கியது செங்கல்சூளை பெட்ரோல் பேங்க் வீட்டுமனை அது இல்லாமல் சொந்த கிராமத்தில் அவனுக்கென ஒரு மாடி வீடு

பூர்வீக இடத்தில் வந்த வீட்டு மனையை விற்று விட்டு மெயின் பஜாரில் மல்டி காம்ப்ளக்ஸ் ஒன்றை கட்டி அதில் ஒரு கடையில் தன் தம்பி பாலாஜியுடன் சேர்ந்து
சங்கர் பாலாஜி ஏஜன்சிஸ் (மோட்டர் மற்றும் உதிரி பாகங்கள்) கடைவைத்துருந்தான்

இதையெல்லாம் தன் தந்தையிடம் இப்படி செய்யலாமா என்ற ஒரு வார்த்தை கேட்டு விடுவான் அவன் கூறியதில் ஒரு சிறுபிழை கூட அவரால் கண்டுபிடிக்க இயலாது ஆகையால் அவன் கூறும் திட்டத்தில் தன் யோசனையும் கருத்துக்களையும் மகனிடம் பகிர்ந்து கொள்வார் , அதே சமையம் தனிப்பட்ட அவன் செயல்களில் தலையிடமாட்டார் , தலையிட்டாலும் அவர் பேச்சுக்கு மதிப்பு இருக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும் , மீறி எதுவும் சொன்னாலோ, செய்தாலோ தன்னையே மகன் எதிர்த்துவிடுவான் என்பதை நன்கு உணர்ந்தவர் அவனது தனிப்பட்ட செயலில் என்றும் மூக்கை நுழைக்க மாட்டார்,

சங்கரின் இந்த திடீர் திருமணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை, மகன் மீது வந்த கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் மென்று முழுங்கி விட்டார் ,,,,,,,



"என்ன ராஜி இது மாப்பிள்ளை கீழ இருக்காரு , நீ் இங்க வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க"

நடராஜான் கேள்வியில் அவரை ஒர் நொடி பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள்

மாடியிலிருந்து இறங்கி வந்த ஆனந்தனை கண்டு

"என்னப்பா சொல்றா "

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அண்ணா, அழுதுகிட்டே இருக்கா "

"நீங்களே போய் பேசுங்க"

"நீ கோபமாய் எதுவும் அவகிட்ட பேசலையே"

"இல்லன்னா நீங்களே போய் பேசிப்பாருங்க"

முகத்தை திருப்பிய தம்பி மகளை பாசத்தோடு பார்த்துவிட்டு அவள் அருகில் சென்ற நடராஜன் ,
ராஜியின் தலையை வருடிவிட்டு

இதெல்லாம் நடக்கணும் இருந்து இருக்கு இப்ப என்னடா நடந்து போச்சு, சஙகர் தான் உனக்குன்னு அந்த ஆண்டவன் எழுதிருக்காரு போல அதான் கடைசி நேரத்துல மாப்பிள்ளை மாறி போயிருச்சுன்னு நான் நினைக்கிறேன் ,

வசதி வாய்ப்பு இருந்தா போற இடத்துல பொண்ணு
நல்லா இருக்கும் என்பதை மட்டும் யோசித்தார்(வசதி வாய்ப்போடவா உங்க மக குடும்பம் நடத்தப்போறா), ஜாதியை கூட பின் தள்ளி விட்டார் இன்றைய காலகட்டத்திற்கு முதலில் வசதிவாய்ப்பு அந்தஸ்து , பிறகுதான் ஜாதி என்று முடிவாகிவிட்டது அதையே தான் நடராஜனும் பார்த்தார் பையன் நல்லா உழைக்கிறான் உழைப்பாளி நல்ல சம்பாதிக்கிறான் ஆகையால் ஜாதியை கண்டும்காணாமல் விட்டுவிட்டார்

"சங்கருக்கு என்னம்மா குறை"

"ப்ளீஸ் பெரியப்பா இன்னும் கொஞ்சம் தனியா விடுங்க"

அவளின் மனநிலையை உணர்ந்தவர் அவளுக்கு தனிமை கொடுத்துச் சென்றார்

மறுநாள் சங்கரிடம் தனிமையில் பேசிய முத்துசாமி
"நம்ம உறவுமுறை, தொழில் வட்டாரத்திற்கு எல்லாம் சொல்லி ரிசப்ஷன் வச்சுருவோமாப்பா "


"ஒரு நிமிடம் யோசித்தவன் நான் சொல்ற மாதிரி பண்ணுங்க என்று கூறிவிட்டு"

"மகன் சொல்ல சொல்ல சரிப்பா அப்படியே பண்ணுவோம் "

நடராஜனிடம் ஆனந்தமும் கலந்து பேசி அன்றில் இருந்து பதினைந்தாவது நாள் சங்கருக்கும் - ராஜேஸ்வரிக்கும் திருமணம் என முடிவு செய்யப்பட்டது

அந்த பதினைந்து நாட்களும் ராஜி அவள் வீட்டிலேயே இருந்தாள்

"நடராஜன் சங்கரிடம் ராஜி அவர்களுடன் இருப்பதை பற்றி தன்மையாக கேட்டார் "

"சரி மாமா என்று சிரித்த முகத்துடன் கூறிவிட்டான் "

"ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை நீங்களும் இருந்தீங்கன்னா இன்னும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் "

"இருக்கட்டும் மாமா பக்கம்தானே என்று தங்குவதை பற்றி நாசூக்காக மறுத்து விட்டான் "

அந்த பதினைந்து நாட்களும் நான்கு வேலையும் அவன் வந்தாலும் ஒரு நேர உணவு கூட மனைவியின் வீட்டில் உண்ணவில்லை வெறும் காபி, டீயுடன் நகர்ந்துவிடுவான்

மறுவீடு வந்த அன்று அவளிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று மாடிக்குச்சென்றான்

பால்கனியில் எங்கேயோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்

"என்னடி உன் அப்பாவும் , பெரியப்பாவும் சொன்னதெல்லாம் காதுல வாங்குனியா இல்ல காத்தோட பறக்க விட்டுடீயா,,,,"

ராஜியின் காதில் நாராசமாக ஒலித்தது சங்கரின் குரல்

அந்தக் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் கால்கள் இடறி கீழே விழுந்து விட்டாள்

அவன் கையை ஊன்றுகோலாக அவள் பற்றி இருக்கலாம்

கீழே விழப்போனவளை விழவிடாமல் தாங்கி அவனும் பிடித்திருக்கலாம்

கீழே விழுந்தவளின் அருகில் அமர்ந்து அவள் தாடையைப்பற்றி தன் புறம் திருப்பியவனின் கண்களுக்கும் திரும்பியவளின் கண்களுக்கும் எல்லை இல்லா சீற்றம் தெரித்துக்கொண்டிருந்தது


மனதோடு மீண்டும் பேசுவோம்
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் , எல்லாரும் நல்லா இருக்கீங்களா,

கஜா புயலால் நாகப்பட்டினத்துக்கு அடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டம் புதுக்கோட்டை ,
60 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு மழையையும் காற்றையும் கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் சந்தித்திருக்கிறது
எங்க ஏரியால எட்டு நாள் கழிச்சி கரண்ட் வந்தது

எப்பவுமே எபிசோடு கொஞ்சம் லேட்டா தான் கொடுப்பேன் இந்த தடவ ரொம்ப ரொம்ப லேட் ஆயிடுச்சு சாரி பிரெண்ட்ஸ்

லாஸ்ட் எபிசோடு நிறைய பேர் லைக் , கமெண்ட், குடுத்துருந்தீங்க
ரொம்ப சந்தோஷம்

எப்பவும் போல நிறை , குறை இருந்தா சொல்லுங்க உங்களோட எதிர்பார்ப்புகளையும் சொல்லுங்க அடுத்த எப்பில கொடுக்க முயற்சி பண்றேன் இந்த வார்த்தையை நான் எப்பவுமே சொல்லுவேன்

நீங்க கருத்தை மட்டும் சொல்லாம, ஒரு கதை விவாதம் பண்றமாதிரி
கதையின் அடுத்த கட்டத்த இப்படி கொண்டு
வந்திருக்கலாம்ங்குற உங்களோட கருத்துக்களையும் சேர்த்து சொல்லுங்க
நன்றி ,,,,
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ,,,,,
உங்கள் தோழி,,,,,,
ரேணுகா தேவி...,,,,


மனதோடுதான் நான் பேசுவேன் - 4



"ஹாய் டியர் ,,,,,,,"

"என்னன்னா டியர் எல்லாம் சொல்றீங்க "

'அவன் பெயரைச் சொல்லி மெசேஜ் பண்ணதுக்கே கத்தினான், இவனே இப்ப டியர்னு சொல்றான் திரும்ப நம்ம பேசினா திட்டுவானோ'
என்ற பயத்துடன் பேசினாள் ஆர்த்தி

"இப்ப நம்ம க்லோஸ் ஆயிட்டோம்ல செல்லம் அதான் "

"நான் நேம் சொன்னதுக்கே திட்டுனீீங்க"

"இங்க பாரு ஆர்த்தி உன்ன விட வயசுல சின்ன பொண்னோ , பையனோ உன்கிட்ட அக்கா அக்கான்னு பேசிட்டு, திடீர்னு உன்னை பேர் சொல்லி கூப்பிட்டா கோபம் வராதா,,,,,"

"ம்ம்ம்ம்ம்ம்"

' ஒரே ஒரு தடவை நேம் சொல்லி மெசேஜ் பண்ணிபுட்டேன் நூறு தடவ சொன்ன மாதிரி பேசுறானே மூளை அவனை திட்டுவதற்கான வார்த்தைகளை அனுப்ப அதை பாதியிலே டெலிட் செய்து விட்டு '

"இப்ப நேம் சொன்னா திட்டுவீங்களா அண்ணா சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்டு வைத்தாள் "

'நீ திருந்தவே மாட்ட அவன்கிட்ட வாங்கிக்கட்டிக்க மூளை ஒருபக்கம் இடித்துறைத்தது அதை கிடப்பில் போட்டுவிட்டு'

"நீ சொல்லாம வேற யாரு செல்லம் சொல்லப்போறா சொல்லு செல்ல குட்டி"

"ஆஹா,,,,,,,,,அம்மா,,,,,"

"ஹேய் என்ன ஆச்சு ஆர்த்தி"

" கனவா நனவான்னு கிள்ளிப் பார்த்தேன்னா"

" கனவுல கிள்ளினாலும் வலிக்கும்டி லூசு "

"என்னது டி யா "
இன்றைய அடுத்தக்கட்ட அதிர்ச்சி ஆர்த்திக்கு

' அவன் லூசு என்று எப்போதாவது சொல்வான் ஆனால் முதன் முறை டி என்கிறானே, என்ன நினைச்சுகிட்டு இருக்கான் இவன் ஒரு நொடி கோபம் ஆர்த்தியின் மூக்கை விடைக்கதான் செய்தது'

"என்ன அண்ணா டி எல்லாம் சொல்றீங்க "

"நீ என்ன விட சின்ன பொண்ணுதானே சொன்னா என்ன "

"நோ நோ நோ நோ டி எல்லாம் சொல்லாதீங்க எனக்கு பிடிக்காது"

"சரிப்பா ஓர்க்கு இருக்கு ஆர்த்தி அப்புறம் கூப்பிடுறேன் பை"

"என்ன உனக்கு எவ்வளவு பிடிக்கும் " , அடுத்து fb யில் மெசேஜாக வந்தது

'என்னடா இது கேள்வியே அபத்தமா இருக்கு இப்படி இதுக்கு பதில் சொல்றது நிதானமாக யோசித்துவிட்டு'

" உங்க வீட்ல நீங்க மட்டும் தனி டைப் அண்ணா,
நல்ல மனுஷன் ஹெல்பிங் மைண்ட் உள்ளவர் அவ்ளோதான் எனக்கு தெரிஞ்சு "

"க்ளோஸ் ஃப்ரண்டு ஆனதுக்கு அப்புறமும் உனக்கு இவ்வளவுதான் தெரியுதா ".

"அண்ணா ஒரு பொண்ணுக்கு நல்ல க்ளோஸ் பிரெண்டு நல்ல நண்பனா ஆண் இருக்க முடியும் சொன்னா, முதல்ல அந்த பொண்னோட அப்பா, இன்னொன்னு அவளுக்கு வரப்போற கணவன் ,

அதே மாதிரி ஆணுக்கு நல்ல தோழியாக இருக்க கூடியது அவனோட அம்மாவும் அவனுக்கு வரப்போற மனைவியும்தான் நான் நினைக்கிறேன் "

"----------- "

**********************************

பெண்ணவளின் கயல்விழி கண்களில் அக்னியின் சீற்றம் என்றால் , அவள் மன்னவனின் கண்ணிலோ எரிமலையின் சீற்றம்

அவள் தாவாய்யை அழுந்தப் பற்றி கைய தட்டி விடுறது, முகத்தை திருப்பிக்குறது, திமிர் காட்டுறது, குரலஉயர்த்துறது, அதிகப்பிரசங்கித்தனம் பேசுறது , எல்லாத்தையும் இன்னயோட விட்டுறனும் புரியுதா செல்லம் , கொஞ்சம் வேலை இருக்கு காலைல வரேன் அவள் கண்ணத்தை லேசாக தட்டி விட்டு சென்றான் ,,,,,,,

அன்றிரவு உணவை மறுத்துவிட்டு மாடியில் உள்ள அறையில் தன்னை
முடக்கி கொண்டாள் ராஜி

ஆனந்தனும் அவளை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று மனைவியிடம் கூறி இருந்தான்

ராஜியின் மனம் முழுவதும் ரமேஷ்ஷிடமே இருந்தது

வந்துடு ராஜி அவன் குரல் காதில் ஒலிப்பது போன்ற பிரமை இன்னமும் அவளுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது


எப்படி எப்படி திருமணம் நின்றது இவன்தான் எதுவும் செய்திருக்க கூடும் சங்கரை உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தையாலும் திட்டினாள்,

திரும்பவும் நினைவு ரமேஷ் இடமே சென்றது யார் ரமேஷ் யார் யார் நம்மல பிரிச்சது விதியா ? ???
இல்ல
சங்கரோட சதியா???

மனதோடு மீண்டும் பேசுவோம் ,,,,,,,,,,,,,,,,


சின்ன விஷயம் உங்களோட கருத்தையும், விவாதத்தையும் jothinatarajan1992@gmail.com இந்த id மூலமா
fb ல என்னோட ஷேர் பண்ணுங்க, வெப்சைட்ல வர கருத்துக்களுக்கு என்னால ரிப்ளை பண்ண முடியல,


இந்த எபிசோடு கொஞ்சம் சின்னதாதான் குடுத்து இருக்கேன், கஜானால ரொம்ப ரொம்ப பிஸியா இருந்துட்டேன்

அடுத்த எபிசோடுல

ராஜி -ரமேஷ் கல்யாணம் எப்படி , யாரால நின்னது, அதற்கு என்ன காரணம் இதற்கான விடையை அடுத்த எப்பில பாப்போம், ,,,,,,,,

நீங்களும் இது யாரால
நின்ருக்கும் , என்ன ரீசனா இருக்கலாம்குறத என்னோட fb ல ஷேர் பண்ணுங்க

தொடர்ந்து உங்களோட ஆதரவை தாங்க டாட்டா,,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் எல்லாரும் நல்லா இருக்கீங்களா,

"மனதோடுதான் நான் பேசுவேன் "

அத்தியாயம் 5

அதிகாலை 6 மணி ஆர்த்தியின் போன் அலறியது எரிச்சலோடு போனை எடுத்தவள்,

சிவாவின் குரல் கேட்டு ச்சை,,,, இவன் எதுக்கு இந்த நேரத்துல போன் பண்றான் எரிச்சலோடு

" சொல்லுங்கன்னா "

"விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே"

குரலில் சுரத்தில்லாமல் "தேங்க்ஸ் அண்ணா"

"என்ன பண்ற"

"உங்க போன் வந்துதான் எழுப்பிவிட்டுறுச்சு "

'ஏன்டா,,,,,,,,, போன் பண்ணி என்னை எழுப்பிவிட்டு என் தூக்கத்தை கெடுத்த என்ற எரிச்சல் அவள் குரலில் அப்பட்டமாக தெரிந்தது '

"அம்மா எங்க அம்மா கிட்ட போனை குடு"

" நான் ரூம்ல இருக்கேன் அவங்க கிச்சன்ல இருக்காங்க "

அவனுக்கு கோபம் இப்போது மூக்கை தொட்டுவிட்டது, விஷ் பண்ணதுக்கு சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல, போன்ன குடுனா கிச்சன்ல, ரூம்லன்னு கதை சொல்றாலே, ஏன் இப்படி பேசுகிறாள் என்று யோசிக்க தோனவில்லை அவனுக்கு , கோபம் கோபம்,கோபம்,,,,,,,,

"கொண்டு போய்க் கொடு"
அவன் அந்த புரம் கத்த

'இவனோட பெரிய தொல்லையா போச்சு'

அவள் தாயிடம் சென்று "போன் "
கடுப்படித்துவிட்டு
சென்றாள் ,,,,,,

நேற்று இரவு அவளுக்கும் அவள் தாய்க்கும் சண்டை, சாப்பிடாமல் ரூமிற்குள் வந்து கதவை சாத்திக் கொண்டாள் அந்த கடுப்பில் சிவாவிடம் பேசி விட்டாள் , அவனோ ஒன்றை வாங்கினால் மூன்று மடங்காக திருப்பிக் கொடுப்பான் ,மறுவாரம் காதில் ரத்தம் வழியவழிய அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள் ,,,,,,,,,,,,,,

**************************

விதி சங்கரின் ரூபத்தில் வந்தது , சதி செய்த மனிதரிடம் ரமேஷ் தன் வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான் , ஆம் சதி செய்த மனிதன் ரமேஷின் தந்தை கணேசமூர்த்தி,

"மண்டபத்திலேயே தெரியும் நீங்க தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் நைட்டே அம்மா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாங்க "

மனைவி கனகாவை எரிக்கும் பார்வை பார்த்தார் கணேசமூர்த்தி

"அம்மாவ ஏன் மொறக்கிறீங்க, உங்க தங்கச்சி மக விஷம் குடிச்சிட்டான்னு, பெத்தபுள்ள கல்யாணத்தை நிறுத்திகாட்டி வீரமான தாய்மாமன்னு நெஞ்ச நிமிர்த்தி நிக்கவேண்டியதானே ஏன் தலை குனிஞ்சு உட்காந்திருக்கீங்க "

"நான் ஏன்டா தலை குனிஞ்சு உட்காரணும் ,கல்யாணத்துல பிரச்சனை வந்தது என்னமோ என்னால ஒத்துக்குறேன் , ஆனா திடீர்னு வேற ஒருத்தன் வந்து குதிச்சானே அது எப்படி?
அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்மந்தம் யோசிச்சியா,
அவதான் முக்கியம்னு கட்டின தாலியை கழட்டி போட்டுட்டு வான்னு கூப்பிட்டீயே , உன்ன முக்கியமா அவ நெனச்சிருந்தா உன்னோட வந்துருக்கனும்ல ஏன் வரல உன் கல்யாணம் நின்னதுக்கு நீ சந்தோஷப்படணும் ஒரு கழிசடைய உன் தலையில கட்டி வைக்க பார்த்தேன் நல்லவேல தன்னால நின்னு போச்சு "

"அப்பா,,,,,,, ,,,,,,, இன்னொரு தடவை ராஜியபத்தி பேசுனீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன், ராஜிய பத்தி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்ல மைண்ட்இட் "

அவன் கர்ஜித்ததில் வீடே அதிர்ந்தது

"எவளோ ஒருத்திக்காக என்னையவே எதுக்குறியா"

" தங்கச்சி பொண்ணுக்காக பெத்த மகன் கல்யாணத்தை நிறுத்தி புண்ணியம் சேர்த்துக்கிட்ட கேடுகெட்ட அப்பன்ன எதுக்குறேன்
இனி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை"

"டேய் என்னடா பேசுற தாய்மனம் பதறியபடி கேட்டாள் " கனகா

"இல்லமா இனி இவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை, நீங்க மட்டும்தான் எனக்கு "

அடுத்த அரைமணி நேரத்தில் ரமேஷ் கனடாவுக்கு பறந்துவிட்டான்,,,,,

*****************************
விடியற்காலை ஆறு மணி அளவில் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார் கலாவதி நடராஜனின் மனைவி, எதிரே வந்து நின்ற உருவத்தை கண்டு சற்று திகைத்தவர்,

"வாங்க தம்பி உள்ள வாங்க சித்ரா மாப்பிள்ளை வந்திருக்காரு பாரு"

அடுக்களையில் இருந்து வந்த சித்ராவிற்கு மருமகனை கண்டதும் திகைத்து நின்றுவிட்டார், கலாவதி சித்ராவின் தோலை இடிக்க, உணர்வுக்கு வந்தவர்

"வாங்க தம்பி ,ராஜி,, ராஜி அப்பா தூங்கிட்டு இருக்காரு இதோ எழுப்புறேன்",,,,,

"வேண்டாம் அத்தை ராஜிய பாக்கத்தான் வந்தேன் " கண்கள் ராஜியை தேட

"மாடில இருக்காப்பா கூட்டிட்டு வந்துர்றேன் , சித்ரா தம்பிக்கு காப்பி கொடு "

மாடிப்படிகளில் ஏற முயன்ற கலாவதியை தடுத்தவன்

"நீங்க இருங்க நான் போய் பார்த்துக்குறேன் "

கலாவிற்க்கு மறுபேச்சுக்கு வாய்ப்பளிக்காமல் விறுவிறு என்று படியில் ஏறி ராஜி அரை கதவுகளை மூன்று முறை தட்டிவிட்டான் எந்த பதிலும் இல்லை சற்று விடாமல் வேகமாக தட்டினான்

விடிய விடிய அழுது எப்போது கண்மூடினாள் என்று அவளுக்கே தெரியவில்லை தடதடவென கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் , பதறியபடி வேகமாக சென்று கதவை திறந்தவளுக்கு சப்தநாடியும் ஒடுங்கி நின்றது,,,,,,,,,,,



மனதோடு மீண்டும் பேசுவோம்,,,,,,,,,,,,


கருத்துக்களை எதிர்பார்த்து,
உங்கள் தோழி, ரேணூகாதேவி,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் எல்லாரும் நல்லா இருக்கீங்களா, லாஸ்ட் எபிசோடுக்கு நிறைய லைக்கும் கமெண்டும் வந்திருந்தது நன்றி ,,,,,,,,

வாங்க கதைக்கு போகலாம்

மனதோடுதான் நான் பேசுவேன் - அத்தியாயம் 6

"கதவை ஒடச்சுதான் உள்ள வரனும்னு நினைச்சேன் பரவால்ல நீயே திறந்துட்ட"

அவளை உற்று நோக்கினான், நேற்று அவன் தாலி கட்டிய புடவை,
அழுது வீங்கிய முகம் செக்கச்சிவந்த விழிகள்,இவை ஏதும்
அவனை பாதிக்கவில்லை

ஏளனச் சிரிப்போடு ,
"என்னடி நேத்து வரைக்கும் புருஷனா நெனைச்சுக்கிட்டு இருந்தவனோட நைட்டு புல்லா டூயட்டா, கண்ணெல்லாம் இப்படி சிவந்துகிடக்கு "

ராஜிக்கோ நினைத்ததை காட்டும் பளிங்கு முகம்
கோபத்தில் இப்போது அவள் முகம் ஜொலித்தது

"நாள் முழுக்க உன் முட்டக்கண்ணு பாசப் பார்வைய பார்த்துட்டே இரு நான் வேணாம்னு சொல்லமாட்டேன் , இப்ப பாக்குறதுக்கு டைம் இல்ல குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பு ", நிதானமாக கூறினான்

"எங்கயும் என்னால வர முடியாது அழுத்தமாகக் கூறினாள்", அவள்,வாழ்க்கையில் புயலாக அவன் நுழைந்த இந்த பதினெட்டு மணி நேரத்தில் அவனிடம் பேசிய முதல் வார்த்தை, முதல் தருணம் இதுதான் ,,,,

" அப்பாடா,,,,,,,, பேசிட்டியா இராஜிசங்கர் ஆனதுக்கப்புறமம் பேசமாட்டியோன்னு நெனச்சேன் பரவால்ல பதினெட்டு மணி நேரம் கழிச்சு பேசிட்ட , சந்தோஷம் பட் எனக்கு பிடிக்கிற மாதிரி பேசலையே , பேசின வாயை என்ன பண்ணலாம் " அவளை முறைத்துக்கொண்டே நெருங்கினான்

இம்முறை தன் பார்வையில் திமிரை காட்டி அவன் பார்வையை எதிர்த்து நின்றவளிடம்

" இந்த திமிரான பார்வையும் பேச்சும்தான்டி உனக்கும் , எனக்கும் முடிச்ச போட்டுருச்சு ,இன்னும் ரெண்டு நிமிஷம் இப்படியே நின்ன அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்ல சொல்லிட்டேன் "

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்ற அழுத்தமான பார்வையை அவன் மீது வீசிவிட்டு சுவற்றின் பக்கம் தன் பார்வையை
திருப்பிக்கொண்டாள் , நூத்தி இருபது நொடிகள்
டிக் டிக் டிக் கடந்த பின் நூத்தியிருபத்தி
ஒன்பதாவது நொடி டிக் என்றவுடன் , அவள் புடவையின் முந்தானை அவன் கையில் இருந்தது அவள் சுதாரிப்பதற்குள் பாதி புடவை அவன் கையில் இருந்தது

"ச்ச்சீசீ,,,,,என்ன பண்ற விடு"

" ச்சீ,,,,,யா" என்று வெகுண்டவன் அவள் மேனியில் ஒரு சுற்று இருந்த புடவையையும் உருவி விட்டான்

உடல் கூசிபோய் ஓர் நொடி நின்றவள் , அடுத்த நொடியே பாத்ரூமிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்

"ஏண்டி போய் ஒளிஞ்சிகிட்ட வரமுடியாதுன்னு திமிரா பேசின, இப்ப பேச வேண்டியதுதானே திமிரெடுத்த நாயே" என்றபடி தன் கோபத்தை , பாத்ரூம் கதவின் மேல் எட்டி ஒரே உதையில் காட்டினான் நல்லவேளை ஆனந்தன் சற்று கனமான மரக்கதவாக போட்டிருந்ததால் கதவும் தப்பித்து, கதவுக்கு பின் நின்று அழுதவளும் தப்பித்தாள்

" அஞ்சு நிமிஷத்துல திரும்பி வருவேன் குளிச்சிட்டு வந்து இருக்கணும் இல்ல" கர்ஜித்து விட்டு ரூம் கதவை அறைந்து சாத்திவிட்டு சென்றான்

ஹாலில் நடராஜனும் ஆனந்தனும், பேசிக்கொண்டிருந்தனர் சங்கர் வருவதை கவனித்து விட்டு

"வாங்க மாப்ள உக்காருங்க காபி எடுத்துட்டு வா கலா "

"தேங்க்ஸ் அத்தை என்றபடி காபியை மெதுவாக அருந்தினான் சூப்பர் காபி அத்தை இது மாதிரி உங்க பொண்ணு போடுவாளா" என்று கேட்டவுடன்

கலாவதிக்கு சிரிப்பு தாங்கவில்லை
"நல்லா போடுவா தம்பி அவளுக்கு நான்தான் காபி போடவே சொல்லி கொடுத்தேன் "

நடராஜன் வியப்பாக சங்கரை பார்த்தார்

அவரின் பார்வை உணர்ந்து "என்ன மாமா அப்படி பாக்குறீங்க"

" ஒன்னும் இல்ல மாப்ள உங்க அத்தைக்கி ஐஸ் வைக்கிறதா இருந்தால் தாராளமா வைங்க நான் வேணாங்கல ஆனால் கழணித்தண்ணிய நல்லா இருக்குனு சொல்றீங்களே அதான் என்னால தாங்க முடியல "

"என்ன மாமா உங்க பொண்டாட்டியை நீங்களே விட்டு கொடுக்கலாமா"
அப்பாவியாக சங்கர் கேட்டு வைக்க

"நேத்து கல்யாணம் பண்ண மனுஷன் பொண்டாட்டியை விட்டுக் கொடுக்கலாமான்னு கேட்கிறார் நீங்களும் இருக்கீங்களே "என்று கலாவதி தாவாயை இடித்துக்கொள்ள

முருகா இப்ப பேசினா எரிகிற தீயில் எண்ணெய் எடுத்துஊத்துன மாறி நம்ம வாய் சும்மா இருக்குதா என்று நொந்தபடி மனைவியின் புறம் திரும்ப அங்கே அனல் பறக்கும் பார்வை கலாவிடமிருந்து நேரடியாக சென்று அவரை தாக்கியது , பதிலுக்கு சமாதான பார்வையை பார்த்து வைத்தார் இவர்களது பார்வை பரிமாற்றங்களை கண்ட சங்கர் நமட்டு சிரிப்புடன் டம்ளரை அவளிடம் கொடுத்தான்

"பத்திரிக்கை எல்லாம் வந்துடுச்சா மாப்புள" மகளைப் போல் பதினெட்டு மணிநேரம் கழித்து சங்கரிடம் பேசினார் ஆனந்தன்

"நைட்டே நூறு பத்திரிக்கை வந்துருச்சு மாமா , இன்னைக்கு சாயந்தரம் எல்லா பத்திரிக்கையும் வந்துரும் , குலதெய்வ கோயிலுக்கு பத்திரிக்கை வைக்க போறோம் அதான் ராஜிய கூட்டிட்டு போலாம்னு வந்தேன் "

"நம்மளும் நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போய் பத்திரிகை வச்சிட்டு வந்துருவோங்க "சித்திர ஆனந்தனை பார்த்து கேட்க

ஆனந்தன் யோசனையாக அண்ணனை பார்த்தார்

"நடராஜனும் யோசித்துவிட்டு நாளைக்கு நீங்க ஃப்ரீயா மாப்பிள"

" உங்களுக்கு எத்தன பத்திரிகை வேணும் சொல்லுங்க மத்தியானம் கொண்டு வந்தரறேன் நாளைக்கு கோயில்ல வச்சுட்டு வந்துருவோம் "

சரி என்று ஒருமனதாக அனைவரும் முடிவெடுத்தனர்

" கிளம்பிட்டாளா பாத்துட்டு வந்தர்றேன் மாமா " அவர்களிடம் கூறிவிட்டு ராஜின் அறையை மறுபடியும் தட்டினான்

கண்ணீருடன் ஷவரில் நனைந்தாள் , கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் ஷவரில் நனைந்த உடன் இன்னும் அதிகமானது அழுகை

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டவுடன் வேகவேகமாக குளித்து விட்டு நைட்டிக்கு மாறி கதவைத்திறந்தாள்

"எவ்ளோ நேரம் தாண்டி குளிப்ப இன்னும் டிரஸ் கூட மாத்தாம நைட்டிலயே இருக்க "அவளை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்

அவள் பீரோவைத் திறந்து ஒரு புடவையை எடுத்து அவளிடம் குடுத்தான்

"கட்டிகிட்டு வா "

டிரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்றவள் பத்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் கதவைத் திறக்கவே இல்லை , இங்கேயோ சங்கரின் பொறுமை கற்பூரம் போல் கரைந்து கொண்டே வந்தது

"அடியேய் புடவை கட்ட தெரியுமா தெரியாதா பதினஞ்சு நிமிஷம் ஆச்சு என்னடி பண்ற உள்ள" கத்திக்கொண்டிருந்தான்

இருபது நிமிடம் கழித்து வெளியே வந்தவளை ஒரு நிமிடம் இமைக்க மறந்து அவள் அழகை ரசித்துப் பார்த்தான் அடுத்த நொடியே காட்டுக் கத்தலாக எரிந்து விழுந்தான்
"கூப்பிட்டா பதில் பேச மாட்டீங்களா மகாராணி"

"மகாராணி மகாராணி சுற்றி முற்றி அவள் கூப்பிட மகாராணி இங்க யாரும் இல்ல போலயே " அவளது கேலி அவனது வெறியை கெளப்பியது

கோபப்பட இது நேரமில்லை என்று உணர்ந்தவன் அவளிடம்

"அவன் உனக்கு வாங்கி கொடுத்த எல்லாத்தையும் எடுத்து கட்டில் மேல வை" கட்டளையிடும் தொனியில் சொன்னான்

"எவன் " (உனக்கு சலச்சவ இல்லடா நான் என்று நிரூபித்தாள்)

வேண்டுமென்றே கேட்கிறாள் என்பது புரிய "அதாண்டி நேத்து வரைக்கும் ஒருத்தன புருஷனா நெனச்சுக்கிட்டு இருந்தியே அவன்"

சங்கரை காயப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில்

"இப்பகூட நான் அவர்தான் என் புருஷனா நினைக்",,,,,,,,,

பளார்,,,,,கன்னத்தில் இடி என விழுந்த ஓர் அறையில் கட்டிலில் போய் விழுந்தாள்

"நெனப்படி நெனப்ப,இந்த சங்கர் கேனயனா இருந்த்திருந்தா இந்நேரம் அவனோட கெனடாவுக்கு பறந்துருப்ப,,,, கோவிலுக்கு போறப்ப பிரச்சனை வேண்டாம்னு பாக்குறேன், மரியாதையா எந்திரிச்சு நான் சொன்னதை செய்"

கட்டிலில் இருந்து
எழுந்தவள் அவன் கண்களை உற்று நோக்கி "எத்தனமுறை வேணாலும் சொல்லுவேன் ரமேஷ் தான் என் மனசுல இருக்காரு"

திரும்ப அறைந்தான்

"ரமேஷ்தான் என் புரு",,,,,,,,

மீண்டும் ஒரு அறை விழுந்தது

"ரமே",,,,,,

திரும்பவும் ஓர் அறை

மனதோடு மீண்டும் பேசுவோம் ,,,,,,,,

கருத்துக்களை
எதிர்பார்த்து ,,,,,

என்றென்றும் நட்புடன்,,,,, உங்கள் தோழி ,
ரேணுகா தேவி,,,,,,,,
 

Renugadevi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் ,
ரொம்ப நாளாச்சு வந்து கதையை தொடர்ச்சியாக தரமுடியாத சூழ்நிலை மன்னிக்கவும்,
இப்பதான் திரும்ப எழுத ஆரம்பிச்சிருக்கேன் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன டீசர்,
அடுத்த 3 பதிவுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்
நன்றி,,,,,



மனதோடுதான் நான் பேசுவேன் - அத்தியாயம் 7


' அடி உன்னால எவ்வளவு அடிக்க முடியுமோ அடி, உன்னை காயப்படுத்த எவ்ளோ அடியையும் தாங்கிக்குவேன்'

" நீ எத்தனை தடவ அடிச்சாலும் நான்
அப்படிதான் சொல்லுவேன் உன்னால என்னபண்ண முடியுமோ பண்ணிக்கோ" சீற்றத்துடன் சீறினாள் அந்த பாவை

அவள் முகத்தை சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், ரூமை விட்டு வெளியேறிவிட்டான்

அவன் வெளியேறி பத்து நிமிடங்களுக்குப் பிறகு ராஜியின் தாய் சித்ரா உள்ளே வந்தாள்

மகளின் வதங்கிய தோற்றம் கண்டு மனம் பற்றிஎரியத்தான் செய்தது பெற்றவளாயிற்றே

டிபன் சாப்பிட ராஜியையும் சங்கரையும் அழைத்துவர மாடிக்கு வந்தவள் , ராஜி பேசியதும், சங்கர் அவளை அடிப்பதையும், கண்டு திகைத்து நின்றுவிட்டாள்

ரூமை விட்டு வெளியே வந்தவன் சித்ராவை கண்டவுடன் ஒரு நொடி சங்கடபட்டான் , பின் அமைதியாக அவளை கடக்க முயல

"நில்லுப்பா , உங்களுக்குள்ள என்ன சண்டைனு நான்
கேட்கமாட்டேன் , ஒரே நாள்ல அவ வாழ்க்கையே திசைமாறி போயிடுச்சு , இந்த நேரத்துல அவகிட்ட நீ கோபமா நடந்துகிட்டா அவளும் அப்படித்தான் துடுக்குத்தனமா பேசுவா , அது நமக்கு கோபம் வரும் தேவையில்லாத சண்டையில போய் முடியும் , இந்த பதினைந்து நாளைக்கு அவபோக்குல
விட்டுருப்பா, துடுக்குத்தனமாக பேசினாலும் ,குழந்தை தனமா இருப்பா கண்டிச்சுபேசு, கைநீட்டாதப்பா, ஒரே பொண்ணு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம் "
சித்ரா அவன் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்கவும் அவனுக்கே,தவறு செய்துவிட்ட உணர்வு ஒரு மாதிரி ஆகிவிட்டது

அவனின் இன்னொரு மனமோ 'இது சும்மா ட்ரைலர்தான் , மெயின் பிக்சர் இன்னும் ரொம்ப மோசமா இருக்கும் மனதில்
கூறிக்கொண்டான் '

"அவ போக்குல விட்டுட்டு பேசாம இருந்தா நடந்ததையே
நினைச்சுகிட்டு இருப்பா, இனி அவளோட வாழ்க்கை என்னோடதான் - என் வாழ்க்கை அவளோடதான், அத அவளுக்கு புரிய வைக்கணும் அத்தை அதனாலதான் அவள கோயிலுக்கு கூட்டிட்டு போலாம்னு வந்தேன் , இனி எல்லாமே அவளுக்கு நான்தான், இப்ப நடந்ததை நினைச்சு வருத்தப்படாதீங்க", நடந்தவற்றை சுருக்கமாக கூறி மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு,,,,

"அவளை கெளப்பி கூட்டிட்டு வாங்கத்தை, நான் வீட்டுக்கு போயிட்டு வந்தர்றேன் "

மனநிம்மதி பெற்றவளாக மகளின் ரூமிற்கு வந்தாள்
சித்ராவை கண்டதும்

"அம்மா ,,,,,,,"

அழும் மகளை கண்டதும் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் சித்ரா , அதுதானே தாய்மனம் , மகள் இருக்கும் நிலையில் அவளுக்கு ஆறுதல் கூறுவதா, இல்லை கண்டிப்பதா என்று குழம்பி நின்றாள்,,,,,,
 
Status
Not open for further replies.
Top