sivanayani
விஜயமலர்
wow wow wow What a spectacular review. I am impressed. Thank you so much my dear Hanza. நீங்க எல்லாம் இந்தக் கதைக்குக் கோடுதத்த முக்கியத்துவம் அளப்பரியது, நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது தவிக்கிறேன் நான், மனம் மகழ்ந்து நெகிழ்ந்து உருகி விட்டேன், உங்களால் வாழ்த்தப்பட்டும் விட்டேன்,உத்தி.
அவன் வரும் எல்லா இடங்களும் மாஸ் தான்.
முன்பாதியில் ஆக்ரோஷமான உத்தியையும் பின்பாதியில் அரவணைக்கும் உத்தியையும் எம்மால் பார்க்க முடிகிறது. இரண்டு பரிணாமதிலுமே அவன் score செய்கிறான்.
அவனது கோபங்களும் செயல்களும் 100% நியாயமானதே...
அவனுக்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தமும் உரையாடலும் மயிர்கூச்செரிய வைக்கின்றது. ❤❤❤
வெளி உலகிற்கு இரும்பு முகம் காட்டும் அன்பும் ஆதரவும் தேடும் குழந்தையே அவன். அவன் காதலை உணர்த்தும் விதமே தனி. (சொல்வது குறைவு செய்வது அதிகம்... செயல் புயல் நானடி..)
சதி..
கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை தான். அவளது எண்ணம் சரியாக இருந்திருக்கலாம்... ஆனால் அதற்காக இல்லாத ஒன்றை இருக்கின்றது என்று கூறி மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிப்பது என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மை தெரிந்ததும் உத்தியிடம் முறையாக மன்னிப்பு வேண்டியிருந்தால் I would have saluted you. ஆனால் உத்தியிடம் வசமாக சிக்கிய பின் சப்பைகட்டு கட்டுவது எல்லாம் இவளோட சுயநலத்தையே காட்டுகிறது. அவனது காதலை வார்த்தைகளில் தேடுவதை விடுத்து செயல்களில் தேடியிருந்தால் அந்த விபத்தை தடுத்திருக்கலாம்..
ஒரு சாதாரண மனைவியாக சதியுடைய கோபம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனாலும் நம்பிக்கை ஒன்று இவளிடம் இல்லாது போய் விட்டது வருத்தமே.
புஷ்பா தயாளன் எல்லாம் நல்ல காணக்கிடைக்காத அரிய வைர மனிதர்கள்.
அவ்வி.. இவன் தான் இக்கதையின் Game Changer. சில இடங்களில் வந்தாலும் சதியின் மனமாற்றத்திற்கு இவன் பெரும் பங்கு வகிக்கிறான்.
ஜூலியட் உத்தியின் முன்னாள் காதலி இந்நாள் தோழி. இவளும் சில இடங்கிலே வந்தாலும் உத்தி சதி வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறாள்.
எந்தவொரு Antagonists மே இல்லை இக்கதையில். (பின்னே... அனைத்து வில்லத்தனங்களையும் சதியே குத்தகைக்கு எடுத்துக்கொண்டால்... தனியே வேறு ஒரு வில்லி தேவையே படாது தான்.)
வாழ்த்துக்கள் நயனி மா... உங்கள் கதையில் எம்மை கட்டி வைத்து விட்டீர்கள்.
அடுத்து அவ்வி விதுவின் கா(மோ)தலுக்காக me waintinggu....