All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.
எந்த ஒரு விஷயத்தையும் அழுத்தமாக பார்க்கும் யுக்தனும் எந்த ஒரு விஷயத்தை எதார்தமாக பார்க்கும் சமர்த்தியும் அவர்கள் தனது கண்ணோட்டத்தை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் இயல்பாக இருந்தது சூப்பர் சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘

அடுத்த பாகம் படிக்க ஆவல் சகோ
 

Lakshmivijay

Well-known member
அருமையான முடிவு நயனிமா சூப்பர் :smiley15::smiley15::smiley15:

சமர்த்தி உதி ரெண்டு பேருமே சேர்ந்தாச்சி மகிழ்ச்சி 🤩🤩🤩🤩🤩
இனி அவ்வி&விதற்பரை ரெண்டு பேருக்காக வெய்ட்டிங் நயனிமா 😍😍😍😍😍
சிக்கிரமே வந்துடுங்க நயனிமா :FlyingKiss:
 

Banumathi Balachandran

Well-known member
மிக மிக நன்றிபா, உங்கள் கருத்து என்னை மெய் சிலிர்க்க வைத்தது, பொதுவாக என் கதை நாயகன் நாயகி இருவரையும் மட்டுமே சுத்தி வரும் என்பதால், அவ்வாறு காதல் வெற்றிடம் தோன்றியிருக்கிறது என்று நான் யோசிக்கலை, அடுத்த முறை கவணத்தில் கொள்கிறனே், நிஜமா உங்கள் கருத்துப் பகிர்வு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது, முயன்றவரை விரைவாக வர முயற்சிக்கிறேன், :love::love::love:
🥳🥳🥳
 

Hanza

Bronze Winner
உத்தி.🔥🔥🔥
அவன் வரும் எல்லா இடங்களும் மாஸ் தான்.
முன்பாதியில் ஆக்ரோஷமான உத்தியையும் பின்பாதியில் அரவணைக்கும் உத்தியையும் எம்மால் பார்க்க முடிகிறது. இரண்டு பரிணாமதிலுமே அவன் score செய்கிறான். 😍😍😍
அவனது கோபங்களும் செயல்களும் 100% நியாயமானதே...
அவனுக்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தமும் உரையாடலும் மயிர்கூச்செரிய வைக்கின்றது. ❤❤❤
வெளி உலகிற்கு இரும்பு முகம் காட்டும் அன்பும் ஆதரவும் தேடும் குழந்தையே அவன். அவன் காதலை உணர்த்தும் விதமே தனி. (சொல்வது குறைவு செய்வது அதிகம்... செயல் புயல் நானடி..)


சதி.. 🤣🤣🤣
கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை தான். அவளது எண்ணம் சரியாக இருந்திருக்கலாம்... ஆனால் அதற்காக இல்லாத ஒன்றை இருக்கின்றது என்று கூறி மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிப்பது என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மை தெரிந்ததும் உத்தியிடம் முறையாக மன்னிப்பு வேண்டியிருந்தால் I would have saluted you. ஆனால் உத்தியிடம் வசமாக சிக்கிய பின் சப்பைகட்டு கட்டுவது எல்லாம் இவளோட சுயநலத்தையே காட்டுகிறது. அவனது காதலை வார்த்தைகளில் தேடுவதை விடுத்து செயல்களில் தேடியிருந்தால் அந்த விபத்தை தடுத்திருக்கலாம்..
ஒரு சாதாரண மனைவியாக சதியுடைய கோபம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனாலும் நம்பிக்கை ஒன்று இவளிடம் இல்லாது போய் விட்டது வருத்தமே.


புஷ்பா தயாளன் எல்லாம் நல்ல காணக்கிடைக்காத அரிய வைர மனிதர்கள்.😍😍😍

அவ்வி.. இவன் தான் இக்கதையின் Game Changer. சில இடங்களில் வந்தாலும் சதியின் மனமாற்றத்திற்கு இவன் பெரும் பங்கு வகிக்கிறான்.

ஜூலியட் உத்தியின் முன்னாள் காதலி இந்நாள் தோழி. இவளும் சில இடங்கிலே வந்தாலும் உத்தி சதி வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறாள்.

எந்தவொரு Antagonists மே இல்லை இக்கதையில். 😍😍👌🏻👌🏻(பின்னே... அனைத்து வில்லத்தனங்களையும் சதியே குத்தகைக்கு எடுத்துக்கொண்டால்... தனியே வேறு ஒரு வில்லி தேவையே படாது தான்.🤣🤣😜😜)

வாழ்த்துக்கள் நயனி மா... உங்கள் கதையில் எம்மை கட்டி வைத்து விட்டீர்கள். 😆😅🥰😍😘
அடுத்து அவ்வி விதுவின் கா(மோ)தலுக்காக me waintinggu....
 
Status
Not open for further replies.
Top