All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘மாயம் செய்தாயோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 24 ❤

❤ கதைகள் பேசும்
உன் விழிகளில்..
கரைந்திட விளையும்
என்னை தவிர்த்தே..
கண்டு மறையும்
மதியென..
மறைவதும்
பின் உதிப்பதும்
என்ன மாயமோ..❤

பாதையில் கண்கள் பதிந்திருந்தாலும் கருத்து ஆபிஸில் நடந்த நிகழ்வை தான் ஒளியை சுற்றும் விட்டில் பூச்சியென சுற்றிக்கொண்டிருந்தது.

எதிரில் நின்றிருந்த வினோதை பார்த்த ரம்யாவிற்கு திக் என்றது.

அதுவும் "கண்ணாமூச்சி முடிஞ்சதா.." என கேட்டது வேறு, இவ்வளவு நேரம் அவன் பார்வையில் இருந்து அவள் தப்பித்து ஓடியதை அவன் அறிந்திருக்கிறான் என்பதையும் சொல்லாமல் சொன்னது.

சட்டென கைகளிரண்டாலும் முகத்தை மூடிக்கொண்டவள் வினோத் குனிந்து பார்க்க முயல அவனை தள்ளி விட்டு அங்கிருந்து வேகமாக ஓடி விட்டாள்.

"ஹே இரு.." வினோத் அவள் பின்னால் ஓட அவனது அவசரம் புரியாது அவனை தடுத்து நிறுத்தினாள் வினிதா.

"டேய் என்னடா நடக்குது இங்க.." வினிதா ஆச்சரியமாய் கேட்க..

"அய்யோ அதெல்லாம் உனக்கு புரியாது வழிய விடு முதல்ல..அவ போயிர போரா.." வினோத் பதற.."அதெல்லாம் முடியாது நீ சொல்லு பர்ஸ்ட்டு.." என நிற்க..

"வி ஆர் இன் லவ்.." கூறிவிட்டு வினோத் ஓட.. வினிதாவோ.. யாரு வி ஆர்.. என சீரியாசாக யோசித்துக்கொண்டிருந்தாள்.

வினோத் கூறிய பதில் தெளிவாய் ரம்யாவின் காதில் விழ சிரிப்புடனே அவன் வரும் முன் லிப்டினுள் சென்று கதவை மூடினாள்.

லிப்ட் கதவுகளோ இன்றைக்கு மட்டும் பார்த்து பிடிவாதமாய் மெதுவாக மூடுவது போல் தான் ரம்யாவிற்கு தோன்றியது.. அதுதான் உண்மை என்பது போல சிரிய இடைவெளியில் உள்ளே நுழைந்திருந்தான் வினோத்.

இதை எதிர்பார்க்காத ரம்யா பதட்டமாய் வெளியில் செல்ல பட்டனை அழுத்த போக சட்டென அவள் கையை பற்றி தடுத்தான் வினோத்.

ரம்யாவிற்கு அந்த மெல்லிய தீண்டலும் சிலிர்த்தது. பேசாமல் தலையை குனித்து கொண்டவளையே இமைக்காது பார்த்திருந்தான் வினோத்.

அவன் என்ன நினைத்தானோ மெதுவாய் அவளை நெருங்க ஆரம்பிக்க அதே நேரம் லிப்ட் கதவும் திறக்க பட்டென அவனை தள்ளி விட்டு ஓடினாள் ரம்யா.

இப்போது நினைத்தாலும் இலேசாக நடுங்கியது. சிரிப்புடனே தன் ஸ்கூட்டி பக்கமாய் நடந்தாள்.

அவளுக்கு ஏதோ ஒரு இனம் புரியா உணர்வுக்குள் சிக்குண்டது போல் இருந்தது. வினோத் என்றால் ரம்யாவிற்கு கண்டது முதலே காதல் என்பது போல் தான். ஆனால் சொல்ல நினைத்ததும் இல்லை சொல்ல வேண்டும் என்ற உந்துதலும் வந்ததில்லை.

சாருவை பற்றியே அவன் கதைக்கும் நேரங்களில் மனம் வலித்தாலும் அவனுக்கு பிடித்த பெண்ணுடன் அவன் வாழ்க்கை அமைந்தால் தானே சந்தோஷம் என ஏற்றுக்கொண்டாள். ஆனால் இன்று வினோத் உடைந்து போய் இருப்பதை பார்த்தவளுக்கு அவளை மீறியே உனக்கு நான் இருக்கிறேன் எப்பவும் என்பதை காதலை சொல்லியதன் மூலம் உணர்த்தி விட்டாள். கூறிய பின்தான் உணர்ந்தவளுக்கு ஏனோ கூறாமலே இருந்திருக்கலாம் என மனம் அடித்துக்கொண்டது உண்மை. அதனால் தான் அவனை பார்ப்பதையும் தவிர்த்தே இருந்தாள். இந்த மனநிலை லிப்டினுள் அவன் வந்த நொடி வரை தான்.

அவனது பார்வை செய்கை என அனைத்திலும் வித்தியாசத்தை உணர்ந்தாள் ரம்யா. அது தெளிவாய் அவனிற்கும் அவளை பிடித்திருக்கிறது என்பதை காட்டியது. மனதில் குழப்பம் அகல இப்போதோ ஒரு இனம் புரியாத உணர்வு தான் நிலவியது. தானாக சிரித்துக்கொண்டே நடந்தாள் ரம்யா.

"மெதுவா மெதுவா எங்க ஓடிற போகுது" எங்கே நிமிர்ந்தாலும் அந்த ஐஸ்க்ரீம் காணாமல் போய் விடுமோ என்பது போல் மும்முரமாய் மூன்றாவது கப்பை காலி செய்து கொண்டிருந்தவளை பார்த்து கேட்டான் சக்தி.

பதிலென தலையை எல்லா பக்கமும் ஆட்டி விட்டு அவள் வேலையை தொடர.. இதை இல்லை என்று எடுப்பதா ஆம் என்று எடுப்பதா என அவளை பார்த்தான்.
எதற்கோ ப்ச் என சலித்துக்கொண்டவள் இவ்வளவு நேரம் சாப்பிட்டுக்கொண்டிருந்த கரண்டியை அங்கிருந்த காலி கப்பினுள் வைத்து விட்டு கையால் உண்ண ஆரம்பித்து விட்டாள்.

"ஹே என்ன பன்னுற.." சக்தி சிரிப்புடனே கேட்க..

"சார் இந்த கரண்டி குட்டியா இருக்கு.. இதால சாப்பிட்டா நீங்க நாளைக்கு வர இங்க தான் உட்கார்ந்திருக்கனும்.."தலையை நிமிர்த்தாமலே கூறிவிட்டு அவள் சாப்பிட..

"நீ சாப்பிடுற பார்ஸ்ட்டுக்கு எந்த குட்டி கரண்டியால சாப்பிட்டாலும் அஞ்சு நிமிஷம் கூட போகாது.." சக்தி கூறிவிட்டு போன் வர அதை எடுத்து பேச தொடங்கி விட்டான்.

பேசி முடித்து விட்டு அவனது ஐஸ் க்ரீமை சாப்பிடலாம் என தேட அங்கு அந்த கப் இல்லை. இருக்குமோ என்ற எண்ணத்தோடு சாரு லைனாக வைத்திருந்த கப்பை எண்ணி பார்க்க அங்கு ஆறாவது இன்னொன்று முளைத்திருந்தது.

அவன் கண்டுபிடித்து விட்டான் என்பதை அறிந்த சாரு.." இல்லல்லலல சார் நீங்க சாப்பிடல்லயா..இங்க வேற எறும்பு எல்லாம் சுத்திட்டு இருக்கா.. எதற்கு வீணாக்கனும்னு தான்.." என இழுக்க..

"கொஞ்சம் மெல்ட் ஆகினா நல்லா இருக்குமேன்னு வச்சேன்.. அத சாப்பிட்டுட்டு நல்லா கதையா சொல்லு.. சரி வா போகலாம்.." சக்தி எழ முயல.. சாருவோ விழித்துக்கொண்டு கைகளை பார்க்க..

"என்ன.." என்றான் சக்தி.

"கழுவனும்ல.." என்றாள் அவள்.

"டிஷு இதோ இருக்கே.."

"சார் இந்த டிஷுவ இந்த கையால எடுத்து அந்த கைய துடைச்சா இந்த கையில உள்ள ஐஸ் டிஷுல பட்றும்ல.. அப்படி இல்லாம அந்த கையால எடுத்து இந்த கைய.." சாரு கூறிக்கொண்டே போக.. அவளை போதும் என தடுத்தான் சக்தி.

அங்கிருந்த டிஷுவை எடுத்தவன்..
"கையை நீட்டு.."என்றான். சாருவும் நீட்ட.. மென்மையாய் கைகளை பற்றி துடைத்து விட்டான் சக்தி.

அவன் துடைத்து விட்ட பின்.. கைகளை ஒட்டி பார்த்தவள்.." பிசு பிசுன்னு இருக்கு சார்.. எனக்கு தண்ணில கழுவனும்.. " என்று மீண்டும் ஒரு பிரச்சனையை அவள் ஆரம்பிக்க.. கஷ்டப்பட்டு சமாளித்து அழைத்து சென்றான் சக்தி.

அங்கு நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த இருவருக்குமே பொறுமை எல்லையைக் கடக்க ஆரம்பித்தாலும், அதில் ஒருவர் பொங்கி எழுந்த கோபத்தை அடக்க முடியாமல் மேசையின் மீது வைத்திருந்த தண்ணீர்க் கண்ணாடி கோப்பையை தள்ளி விட, அது துகள் துகளாக உடைந்த சத்தத்தில் அங்கே சட்டென அமைதி நிலவியது.

வரும் வழி எங்கும் கதை கதையாய் கூறிக்கொண்டே வந்தாள் சாரு. சக்தியும் அமைதியாய் கேட்டுக்கொண்டே வர.. ஒரு வேள சும்மா உம் சொல்றானோ என சந்தேகம் சாருவிற்கு எழ..

"சார்.."

"ம்ம்.."

"காயத்ரிக்கும் எனக்கும் வந்த சண்டைக்கு அப்புறம் நான் அவகிட்ட எத்துன நாள் கழிச்சி பேசினேன் சொல்லுங்க.."

சந்தேகத்தை தீர்க்கவென தான் கூறிய கதைகளில் இருந்து ஒரு கேள்வியை அவள் கேட்க..

"என்ன சொல்வது.." என யோசித்த சக்தி.. வாய்க்கு வந்த.."நாலு.." என்ற எண்ணை கூற அவ்வளவு தான்..

"நான் சொன்ன கதை எதுவுமே நீங்க கேட்கல்ல..இல்லனா பத்து எப்படி நாலு ஆகும் சொல்லுங்க..பேசாதீங்க சார் நீங்க.." முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு திரும்பி அமர்ந்து கொண்டாள் சாரு..

இறங்கி வந்து சமாளிப்பது என்ற ஒன்றே இதுவரை அறிந்திராத சக்தியோ எப்படி சமாளிப்பது என தெரியாமல் நிமிடத்திற்கு ஒரு முறை அவளை திரும்பி பார்த்துக்கொண்டு வந்தான். இதற்குள் வீடும் வந்து விட டக்கென அவனுக்கு முன்னதாகவே இறங்கி உள்ளே சென்றாள் சாரு.

உள்ளே நுழைந்த சக்தியும் சாருவிற்கு பின்னாலேயே செல்ல..அங்கு நேரதிரே சாவித்ரி வருவதை கண்டதும் யூ டர்ன் போட்டவன் படிகளில் ஏற ஆரம்பித்து விட்டான்.

"வாம்மா சாரு.. ட்ரெஸ்ஸெல்லாம் என்னடா.."

"சக்தி சார் ஐஸ் க்ரீம் வாங்கி கொடுத்தாங்கம்மா அது சாப்பிடும் போது பட்டிரிச்சி" சாரு கூறிவிட...

சக்திக்கு தானே தெரியும் இந்நேரம் அனைவரது பார்வையும் படிகளில் திரும்பி நின்றிருந்த அவனை மொய்த்திருக்கும் என.

"தள்ளுங்க சார் படியிலே இருந்துட்டு கனவு காணாம.." அவனை இடித்துக்கொண்டு வேறு ஏறிச்சென்றாள் சாரு.

"இந்த குட்டி சாத்தான் எல்லாத்தையும் உலறி வக்கிறது..அப்புறம் வர வர பயம் கூட இல்லாம போயிரிச்சி..அத திட்ட கூட முடியல..சக்தி என்னடா பன்ன போற நீ.." நொந்து கொண்டான் அவன்.

*************

மாயா வீட்டிற்கு வர அங்கு மதன் இருக்கவில்லை. சாரதா தான் சோகமாய் அமர்ந்திருந்தார்.

"ம்மா என்ன மகன் போன கவலையோ.." விளையாட்டாய் கேட்டுக்கொண்டே வந்து அவர் அருகில் அமர்ந்தாள் மாயா.

"என்னடாம்மா பன்ன.. ஆண் பிள்ளையா இருந்தா இப்படிதான்.. கூட இருக்க ஒரு பொண்ண கூட எனக்கு கொடுக்கல்லையே கடவுள்.." சாரதா அழுகையை அடக்கிக்கொண்டு கூற.. அவர் பேசும் வழியிலே பேசினாள் அழுது விடுவார் என உணர்ந்தவள் அவரது மனநிலையை மாற்ற எண்ணி.. முகத்தை கோபமாய் வைத்துக்கொண்டு திரும்பி அமர்ந்து கையை கட்டிக்கொண்டாள்.

"என்னடா கேவிச்சிட்ட.."சாரதா அவள் நாடியை பற்றி திருப்பிக்கொண்டே கேட்க..

"பின்ன நீங்களே சொல்லிட்டீங்களே நான் உங்க பொண்ணு இல்லைன்னு.."

"நான் எப்போடா சொன்னேன்.." சாரதா பதறிக்கொண்டு கேட்க..பின்தான் அவள் எதற்கு அப்படி கூறுகிறாள் என்பது புரிய..அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டார் சாரதா.

பதிலுக்கு மாயாவும் இறுக்கமாய் அணைத்துக்கொள்ள..அவள் தலையை வருடிக்கொண்டே.. "கடவுளே மாயாவ மட்டும் என்கிட்ட இருந்து பிரிச்சிராத.." என வேண்டிக்கொண்டார். ஆனால் அவருக்கு தெரியவில்லை அந்த நேரம் அவரது வேண்டுதல் கடவுளுக்கு எட்டாமலே போக போகிறது என்று.

____________________________________________

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 25 ❤

❤ பதிலின்றி நிற்கிறேனடா
நீ இதழ்களை முற்றுகையிட்ட
அந்நொடி..
உன் இதயத்தோடு ஓர்
உரையாடல் என் இதயம்
நிகழ்த்திட..
இதுதான் உன் மாயமா
உரைந்து நின்றேன்
ஓயாத நேரம்.. ❤

அன்று சக்தியின் ஆபிஸில் முக்கியமான ஒரு ஆடரை செய்து முடிக்க வேண்டிய கடைசி நாளாக இருக்க.. அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். அனைவரையும் கலைத்தது வினிதாவின் அழைப்பு.

"ஹேய் சக்தி சார் எல்லாரையும் சீக்கிரம் மீட்டிங் ரூம் வர சொன்னாரு.. கம் ஆன்."

அடுத்த ஆறாவது நிமிடம் அனைவரும் அந்த நீண்ட அறையின் நடுவில் நடுநாயகமாக அமைந்திருந்த நீண்ட மேசையில் அமர்ந்திருந்தனர்.

அனைவரும் வந்துவிட்டனரா என ஒரு முறை சரி பார்த்து விட்டு சக்தியை அழைக்க குடுகுடு என ஓடினான் டேவிட்.

சக்தியின் வருகையை எதிர்பார்த்து அனைவரும் அமைதியாய் இருக்க..அதாவது இருக்க முயன்றனர், சாரு அவளது பக்கத்திலிருந்த ராஜேஷ் கையிலிருந்த ஸ்மார்ட் வாட்ச் பற்றி தொண தொண என கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருந்தாள்.

அவளது மறுபக்கம் அமர்ந்திருந்த வினோத் எங்கே இமைத்தாலும் ரம்யாவின் விம்பம் காணாமல் போய் விடுமோ என்பது போல் தன் எதிரே அமர்ந்திருந்த ரம்யாவையே வெறித்துப்பார்த்திருந்தான். ரம்யா நெளிந்து கொண்டே பக்கத்திலிருந்த வினிதாவை தட்டி வினோதை காட்டினாள்.

"டேய் வினோத் அவள எதுக்குடா இப்படி மொறக்கிர நீ.." வினிதா அவனை இடித்துக்கேட்க..

"ஸ்ஸ் ஏன் அடிக்கிற..ஏது நான் மொறக்கிறேனா.. உனக்கு ரொமன்ஸ் லுக்குக்கும் மொறக்கிறதுக்கும் வித்தியாசம் தெரிலனா தெரில சொல்லு.."

"ஆமா அப்படியே இவர் ரோமியோ.. போவியா..சார் வந்து கேப்பாரு இப்போ இதைதான் உன்கிட்ட.. ச்சீ அந்த பக்கம் திரும்பு.." என வினிதா காலால் தட்டி விட ரம்யா சிரித்து விட முகத்தை இழுத்துக்கொண்டே மறுபக்கம் திரும்பிக்கொண்டான் வினோத்.

சட்டென அனைவரும் அமைதியாகிட கதவை திறந்து கொண்டு கம்பீரமாய் உள்ளே நுழைந்தான் சக்தி.

அந்த நீண்ட மேசையின் முன்னால் தனித்து இருந்த கதிரையில் அமர்ந்து அனைவரையும் ஒரு முறை ஆழ நோக்கியவன் பார்வை சாருவிடம் பதிந்ததும் சட்டென இளக ஒரு மென்னகை பூத்தது.

இதை சாருவின் கண்கள் நோட்டமிடவில்லை எனினும் அங்கிருந்தவர்கள் உணர தவறவில்லை.

"எஹ்ம் எஹ்ம்.." என வினோத் வேண்டுமென்றே இறும.. சட்டென சக்தி பார்வையை அவள் பக்கம் இருந்து திருப்பி விட்டு மீடிங்கை ஆரம்பித்தான்.

ஒவ்வொரு வேலை பற்றிய தகவல்களையும் அலசி ஆராய்ந்து அவற்றில் முடிக்க வேண்டியவை, புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டியவை என பிரித்து ஒவ்வொருவரிடம் ஒப்படைத்து விட்டு என சில பல திட்டுக்களோடும் கடந்திருந்தது முப்பது நிமிடங்கள்.

வினோதின் பார்வை தன்னைவிட்டு இம்மியளவு கூட நகராது நிலைத்திருப்பதை ரம்யாவிற்கு பார்வை சக்தியிடம் இருந்தாலும் உணர முடிந்தது.

"இவன் ஒருத்தன்.." என முணுமுணுத்து விட்டு ரம்யா திரும்பி வினோதை பார்க்க அதற்காகவே தவமிருந்தவன் போல முகம் முழுக்க சிரிப்போடு ஒற்றை புருவத்தை வினோத் உயர்த்த.. ரம்யாவிற்கு இருந்த கோபமெல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை. தன்னை மறந்து அவளும் அவனை பார்த்திருக்க..

"மிஸ். ரம்யா.." என்ற சக்தியின் மூன்றாவது சற்றே கோபமான அழைப்பில் தான் சட்டென தன்னிலை உணர்ந்து..

"சார்.."என எழுந்தே நின்று விட்டால் ரம்யா.

"சிட் டவுன்.. கூப்பிட்டது கேட்கலயா ?" வழக்கத்திற்கு மாறாக அமைதியாய் ஒலித்தது அவன் குரல். அனைவருக்கும் ஆச்சரியம் தான். என்ன இவன் சக்திதானா என்று சந்தேகமும் தான்.

"இல்ல சார் கேட்கல..சாரி.."ரம்யா என்ன கூறுவானோ என்ற பயத்தோடு இழுக்க..

"சரி மெடிரீயல் எடுக்க எப்ப போறதா இருக்கீங்க.."

சக்தியை இந்த கோணத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சக்தி மட்டுமே அறிந்தது ஏற்கனவே அவன் கவனித்து விட்டிருந்த வினோத் ரம்யாவிற்கு இடையிலான காதல் தான் அவனை தணிந்து போக செய்தது என்று. இப்போதெல்லாம் இந்த காதல் என்ற வார்த்தையே சக்தியின் பலவீனமாகிட்டது போல உணர்ந்தான் அவன்.

"சார் இன்னைக்கி ஈவ்னிங் த்ரீக்கு வந்து எடுத்துக்க சொல்லியிருக்காங்க.."

"ஓகே ரம்யா.. என்ட் ஒகே காய்ஸ் யூ மே லீவ் நவ்.. " கூறிவிட்டு சக்தி சாய்ந்து அமர்ந்து கொள்ள அவனது கண்களிரண்டும் சாருவிடம் நிலைத்திருந்தது.

அதை கவனித்து விட்ட சாரு.. " எதுக்கு இப்படி பார்க்குறாரு.. ஒருவேள நேத்தைய ஐஸ்க்ரீம்க்கு காசு கேட்ருவாரோ.." யோசித்தவண்ணம் இயன்றளவு அனைவருடனும் சேர்ந்தே வெளியேறிவிட முயல.. கதவு வரை அவளை செல்ல விட்ட சக்தி..

"ஒன் மினிட்.." சக்தியின் குரல் கேட்டு அனைவரும் நிற்க.. யாரை அழைத்தானோ அவள் மட்டும் திரும்பாமலே நின்றாள்.

"நீங்க எல்லாம் போகலாம்.. சாரு.. நீங்க கொஞ்சம் இருங்க.." என்றான்.

அனைவரும் சென்றுவிட, சாரு திருதிரு என விழித்தவண்ணம் அவன் எதிரே நின்றிருந்தாள்.

"உட்காரலாமே.." சக்தி இழுக்க..

"இல்ல சார் பரவால.. நான் அவசரமா போகனும்.." சாருவின் பதட்டம் எதற்கு என அவனும் அறிந்தது தானே..

"போகலாம் சாரு.. நேத்தைய ஐஸ் க்ரீம்க்கு காச எடுத்து வச்சிட்டு நீ போகலாம்.." என்றான் சக்தி. "ஐயோ கேட்டுட்டாரே அப்போ உண்மையிலே சார் நேத்தைக்கு காசு கொடுக்கல்லயா.." என நோந்து கொண்ட சாரு..

"எந்த ஐஸ்கிரீம் சார்.."

"ஓஹோ அப்படி கேட்குற.. அப்போ நீங்க மறந்துட்டீங்க..?"

"என்ன சார் பேசுறீங்க புரியல.." என்றாள் புரியாத போன்ற பாவனையை முகத்தில் நிறைத்துக்கொண்டு..

"சாரு நீ நேத்தைக்கு சாப்பிட்டதுக்கு நீ காசு கொடுத்தா தான் அந்த கடைக்கு கொடுக்க முடியும் இல்லனா இன்னைக்கு அந்தி வர அவங்க பார்ப்பாங்க இல்லையா உன் பேர் தான அங்க இருக்கு நேரா போலீஸ்க்கு போயிடுவாங்க..அப்புறம் நான் சொல்ல தேவையில்ல" சக்தி கூற கூற அவள் முகத்தில் தோன்றிய பயம் சிரிப்பை வர வைத்தாலும் காட்டிக்கொள்ளாமல் அழுத்தமாய் அவளை பார்த்திருந்தான்.

"சார் என்ன சார் ஒரு ஐஸ்கிரீம்க்கு போய் போலீஸெல்லமா.."நம்பாதவளாய் கண்ணை விரித்து பயந்தவாரே அவள் கேட்டாள்.

"சாரு அது உனக்கு தான் ஜஸ்ட் ஐஸ்க்ரீம்.. யோசி அவங்களுக்கு அது பிஸ்னஸ்.. உன்ன போல டெயிலி ஒரு பத்து பேர் திருடி சாப்பிட்டா.."

"சார் நான் ஒன்னும் திருடி சாப்பிடல.." இடையே குறுக்கிட்டாள் சாரு.

"சரி சரி சாப்பிட்டுட்டு காசு கொடுக்காம டீசன்ட்டா வந்த நீ.. இப்போ சரியா.." சக்தி கேட்கவும் வெகுளியாய் தலையை அசைத்தாள் சாரு.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே..
"ஒரு நாளைக்கு பத்து பேர்னா மாசத்துக்கு அப்போ முந்நூறு பேர்ல.."

"என்கிட்ட காசு இல்ல இப்போ.." சாரு தரையை பார்த்துக்கொண்டே கூறினாள்..

"இத பர்ஸ்ட்டே சொல்லிருக்கலாம்ல சாரு நான் கொடுத்திருப்பேன்ல..சரி நான் கொடுக்குறேன் ஆனால் அதுக்கு நீ ஒன்னு பன்னும்.." சக்தி கூறவும்..

"சார் என்னன்னாலும் சொல்லுங்க நான் செய்யுறன்.." பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டே கேட்டாள் சாரு.

"என்னன்னாலும் செய்வதான.. அப்புறம் முடியாது சொல்ல கூடாது.. " சக்தி பேச, மாட்டேன் என அவசரமாக தலையை ஆட்டி வைத்தாள்.

சக்தி நிதானமாய் எழுந்து நின்று அவள் எதிர்பார்க்காதவாறு சட்டென அவள் கை பற்றி அவன்பக்கமாய் இழுக்க.. இதை எதிர்பார்க்காத சாரு நிலைதடுமாறி அவன் மீதே மோதி நின்றாள்.

சாரு அதிர்ந்து சக்தியை நோக்க..
"சாரு.. இங்க ஒரு கிஸ் கொடு போதும்.."என்றான் அவன் இதழ்களை தொட்டுக்காட்டி.

சிறிது நேரம் அவன் கூறியதை கண்களை விரித்து பார்த்து உணர்ந்தவள் பட்டென அவன் பிடியிலிருந்து விலகி நின்றாள்.

"என்ன சாரு.. என்னனாலும் செய்வ முடியாது சொல்ல மாட்ட சொன்ன இப்போ என்னாச்சி" சக்தி நிதானமாய் அவளை பார்த்து கேட்டான்.

அவனை திரும்பி பார்த்து முறைத்து வைத்தவள்.."இது எல்லாம் தப்பு.. அன்னைக்கும் இப்படிதான் பன்னீங்க..நான் ஜெயிலுக்கே போய்க்கிறேன் விடுங்க.." கூறிவிட்டு திரும்பி அவள் நடக்க முன்னால் வந்து வழியை மறைத்த சக்தி..

"சரி நீ பன்னாதான தப்பு.. நான் பன்னா இல்லல.." என்று குனிந்து அவள் இதழ்களில் தன் உதடுகளை பட்டும் படாமல் உரசிவிட்டு நிமிர்ந்து அவளை பார்த்தான்.

சாருவுக்கோ மின்சாரம் தாக்கியது போன்ற ஒரு உணர்வு அசைவின்றி நின்றிருந்தாள். அழகாய் புன்னகைத்து விட்டு அவள் கன்னத்தில் தட்டி விட்டு அந்த அறையிலிருந்து வெளியேறிச்சென்றான் சக்தி.

அன்றைய நாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் என நேரம் யாருக்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

வினோத் ரம்யாவை தேடி களைத்தது தான் மிச்சம் அவளோ கண்ணில் பட மாட்டேன் என்ற பிடிவாதத்தோடே சுற்றிக்கொண்டிருந்தாள். மறுபக்கம் சக்தியின் கண்கள் வேலையில் பதிந்திருந்தாலும் கருத்தோ சாருவை தான் சுற்றி சுற்றி வந்தது. சாரு இன்னும் அதிர்ச்சியில் இருந்து நீங்காதவளாய் சக்தி இருக்கும் பக்கம் மறந்தும் போகாதவாறு தன்னை பார்த்துக்கொண்டாள்.

மாலை நான்கு மணி அளவில் கடிகாரத்தில் மணி அடிக்க அதே நேரம் சக்தியின் போனும் ஒலித்தது.

அழைப்பை ஏற்று இவன் காதில் வைக்க..மறுபுறத்தில்..

"ஹலோ சார் உங்க கம்பனியில வேல பார்க்குற ஒரு பொண்ணுக்கு ஏ
எக்ஸிடன்ட்..ரொம்ப சீரியஸ்..உங்க கம்பனி ஐடி இருந்தது அதான் கால் பன்னினம்.**** ஹாஸ்பிடல் சார்."

சக்திக்கு யார் என்று ஒன்றும் புரியவில்லை..எப்படியும் சாரு போயிருக்க மாட்டாள் என மனம் கூற ரம்யாவா இல்லை வினிதாவா என்ற குழப்பத்தில் பார்க்கிங் வந்து காரை எடுத்தான்..அந்நேரம் வினோத்தும் அந்த பக்கமாய் வர கார் கதவை திறந்து விட்டவன்.."வினோத் சீக்கிரம் ஏறு.." என்க சக்தியின் குரலில் இருந்த பதற்றம் ஏதோ அவசரம் என உணர்ந்து கொண்டவன் சட்டென ஏறி அமர்ந்தான்.

____________________________________________

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 26 ❤

❤ முடிவற்ற மாயங்களின்
மாயவள் நீ என்றாய்..
முடிவென என்னில்
விலகிட ஏனோ சென்றாய்..
ஒரு வரம் கொடு போதும்
மாயவள் உன்னை
ஏந்திடுவேன்
முப்பொழுதும்..❤

சக்திக்கு வந்த அழைப்பில் கேட்ட செய்தியில் ஆடிப்போய் இருந்தான் அவன். பார்வை பாதையில் இருக்க கைகள் காரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இருந்தும் சக்தியின் மனம் அடித்துக்கொண்டு தான் இருந்தது. வினோதிற்கு என்ன என்று புரியாவிட்டாலும் சக்தி வாகனத்தை ஓட்டும் விதத்தில் என்ன என்று கேட்கவும் முடியாமல் அமர்ந்திருந்தான்.

போகும் வழியில் ஓர் இடத்தில் பாதையில் வாகனங்கள் எல்லாம் நிற்க..பலமாய் ஹார்ன் அடித்தவன் அங்கிருந்த ஒருவரை அழைத்து என்ன என்று கேட்டான்.

"அந்த பள்ளத்துல ஒரு விபத்துல வண்டி விழுந்திரிச்சி தம்பி.. நல்ல வேள பொண்ண காப்பாத்திட்டாங்க.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க." என்று விட்டு நகர்ந்தான். நல்லவேளை என சக்தி நினைக்க வினோதும் ஆச்சரியமாய் தலையை நீட்டி பார்த்தான் அப்பெரிய பள்ளத்தை.

ஒருவாரு வாகனங்கள் நகரத்தொடங்க இவர்களும் அடுத்த அரைமணிநேரத்தில் வந்தடைந்தனர் ஹாஸ்பிடலை. இங்கு எதுக்கு என்று விழித்துக்கொண்டே சக்தியின் பின்னால் நடந்தான் வினோத்.

அங்கு வரவேற்பில் இருந்த பெண்ணிடம் சென்ற சக்தி... ரம்யா அல்லது வினிதா என்ற பெயரில் யாரும் அட்மிட் ஆகி இருப்பதாக கேட்டான்.. கணினியில் தட்டி விட்டு திரும்பியவள்..
" ஆமா சார் ரம்யா ன்னு அட்மிட் பன்னி இருந்தாங்க..ஆனால் இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவங்க அம்மா வந்து டிஸ்ச்சார்ஜ் பன்னி கூட்டிட்டு போனாங்க."அவள் கூறியதில் சக்தி செய்வதறியாது இருக்க இவன் கேட்டது புரியாது வினோத் மெதுவாக சார் என்றான்.

அப்போதுதான் வினோத்திடம் கூறவில்லை என நினைவு வந்தவனாக.."வினோத் ரம்யாக்கு எக்ஸிடன்ட்னு கால் வந்தது.. ஆனால் அதுக்கு முன்னாடி அவங்க அம்மாக்கு தகவல் சொல்லி கூட்டிட்டு போய்ட்டாங்க போல.." என்றான் பார்வையை அங்கும் இங்கும் அலைய விட்டபடி.
அவனை ஜீரணிக்கவே சில நேரம் எடுத்துக்கொண்ட வினோத் சட்டென.."அப்போ சாரு.." என்றான்..

"சாரு கம்பனில இருக்கா."என்றான் சக்தி.

"இல்ல சார் ரம்யாவோட சாருவும் தான் வந்தா.."

"வாட் என்ன சொல்லுற.." சட்டென மீண்டும் வரவேற்பில் இருந்த பெண்ணிடம் வந்தவன்.."ரம்யாவோட சாரு என்று ஒரு பேஷன்ட் அட்மிட் பன்னிருக்காங்களா?"

கணினியில் தேடுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டவள்.."இல்ல சார் சாரு என்று யாரும் இல்லை." அவள் கூறிவிட்டு தன் வேலையை தொடர..சக்தி சட்டென கண்கள் நனைய வினோத்தை பார்த்தான்.
தன் மனநிலையிலும் இப்போது சக்தியின் மனநிலையை புரிந்து கொண்டவன்." சார் டென்ஷன் ஆகாதீங்க..சாரு ஒருவேளை ரம்யாவோட வந்திருக்க மாட்டா..இருங்க வினிதாக்கு கேக்குறன்.." என்று அழைப்பை ஏற்படுத்தி காதில் வைத்தான் வினோத்.

கொஞ்சம் தூரமாய் சென்று பேசி விட்டு வந்தவனையே தவிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சக்தி அருகில் வந்த வினோத்.."சார் சாரு கூடதான் வந்ததா சொல்லுறாங்க." என்றான்.

மீண்டும் வரவேற்பு பெண்ணிடம் சென்ற சக்தி.."ப்ளீஸ் கொஞ்சம் மறுபடியும் பார்த்து சொல்லுங்க..சா..சாரு பெயர் இருக்கும் கண்டிப்பா..இல்லன்னா ஒருவேள இங்க புக் பன்னாம உள்ள கொண்டு போயிருக்கலாம்ல" என்று அவன் சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.. சக்தியை இப்படி ஒரு மனநிலையில் பார்த்திராத வினோதோ திகைத்திருக்க..."சார் கண்டிப்பா இதுல பதியாம உள்ள கொண்டு போயிருக்க முடியாது. நீங்க விபத்து நடந்த இடத்துல போய் கேளுங்க வேற ஹாஸ்பிடல் கூட கூட்டிட்டு போயிருக்கலாம்." என்றாள் வரவேற்பு பெண்.

அவனுக்கும் அதுவே சரி என தோன்ற உள்ளே சென்று பிதற்றிக்கொண்டிருந்த சக்தியை அழைத்து வந்து காரில் அமர வைத்து விட்டு விபத்து நடந்த இடம் நோக்கி காரை செலுத்தினான்.
அங்கு இன்னும் பொலிஸுடன் சில மக்களும் கூடியிருக்க..சக்தியை உள்ளேயே இருக்க கூறி விட்டு அங்கு சென்றான்.

"சார் இங்க விபத்து நடந்தப்ப அந்த பைக்ல இரண்டு பெண்கள் தான் இருந்தாங்க..ஆனால் ஹாஸ்பிடல்ல ஒரு பெண் ரம்யாவ மட்டும் தான் அட்மிட் செய்திருக்காங்க..." மேலே என்ன சொல்வது என்று வினோத் இழுக்க இவன் கூற வருவது புரிந்த அந்த பொலிஸ் மேலதிகாரி..

"இப்ப தான் அத பற்றி நாங்க விசாரிச்சிட்டு இருந்தம். பைக்கோட வந்து மோதினது அந்த கிளைப்பாதையில இருந்து லோட் ஏத்திட்டு வந்த லாறி ஒன்று. பைகோட பக்கவாட்டுல அடிபட்டதால சரியா இந்த பள்ளத்துல விழுந்திருக்கு பொது மக்கள் வாரப்போ ஒரு பொண்ணு தான் இங்க பள்ளத்துல பிடிச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா மயங்கிட்டு இருந்திருக்கா. அவளோட நல்ல நேரம் காப்பாத்திட்டாங்க..."
அவர் கூறிவிட்டு அமைதி காக்க.."அப்போ சார் மத்த பொண்ணு.?" வினோத் பயத்துடனே இழுக்க..

"சாரி சார்.. அவங்க பைக்ல இருந்ததே இந்த சிசிடிவி வீடியோ பார்த்த அப்புறம் தான் தெரியும்.. பாடிய கூட எடுக்க முடியுமா தெரியல்ல.." அவர் கூறி முடிக்கவும்...

"மதி..." என்று அலறியவாரே பள்ளத்தை நோக்கி ஓடினான் சக்தி.

அவனை பிடிப்பதா இல்லை தன்னவளை அழைத்துச்சென்றது யார் என்பது பற்றி தேடுவதா..இல்லை சாரு.. சாருவைப்பற்றி..அதற்கு மேல் யோசிக்க முடியாமல் வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தான் வினோத்.

சக்தியை ஒருவாரு வீட்டிற்கு அழைத்து வந்து ஓய்வெடுக்க வைத்து விட்டு.. வினிதா ராஜேஷ் வினோத் மூவரும் ஏதாவது ஒரு ஹாஸ்பிடலில் கூட சாரு இருக்க மாட்டாளா என்ற ஓர் தவிப்பில் தேடிக்கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட சிட்டியில் உள்ள அனைத்து ஹாஸ்பிடல்களையும் பார்த்தாகிவிட்டது இருந்தும் சாரு என்ற பெயர் எங்கும் இல்லை. இந்த கோணத்தில் யோசித்தால் அந்த பள்ளம் தான் மனத்திரையில் முடிவென ஓடுவது போல் இருக்க சட்டென தலையை உலுக்கிக்கொண்டான் வினோத்.

ரம்யாவை போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தவிப்பாய் மனதில் இருக்க இருந்தும் சாருவை இன்னும் தேடலாம் என்ற எண்ணம் தான் மனதை ஆட்கொண்டிருந்தது. வினோதிற்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரது எண்ணமும் அதுவாக தான் இருந்தது.

ஒரு பெருமூச்சோடு பைக்கை பக்கமாய் நிறுத்த சொல்லி முன்னால் சென்று கொண்டிருந்த ராஜேஷிடம் சைகை காட்டினான் வினோத். பின் வினிதாவிடமும் "வினி முன்னாடி வண்டிய நிறுத்து.." என்றான்.

வினிதா வண்டியை நிறுத்த பின்னால் அமர்ந்திருந்த வினோத் இறங்கி அங்கிருந்த மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டான். வினிதா ராஜேஷ் இருவருக்கும் அவனது மனநிலை புரிய அவனருகில் வந்து அமர்ந்தனர்.

ராஜஷ் வினோத் தோளில் ஆறுதலாய் கை வைத்து.. "வினோ பர்ஸ்ட் வா போய் ரம்யாவ பார்த்துட்டு வரலாம்.. அவளும் நம்மள தேடிட்டு இருப்பா.. அவகிட்ட சாரு பற்றி இப்போவே எதுவும் சொல்ல வேணாம்.. "

வினோத் அமைதியாய் குனிந்திருக்க..

"வினோ அவள எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னிருக்காங்க.." வினிதா கேட்க..

"அவள அவ அம்மா கூட்டிட்டு போய்ட்டதா சொன்னாங்க வினி.. வீட்டுக்கு தான் போய் பார்க்கனும்.. " என்றான் வினோத்.

"வாட்..என்ன சொல்ற வினோ" வினிதா அதிர்ச்சியாய் கேட்க.. என்ன என்று புரியாமல் ராஜேஷும் வினோதும் அவளை பார்த்தனர்.

************

கொஞ்ச நாளாகவே மாயாவிற்கு திடீர் தலைவலியும் மயக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்க அவளை பரிசோதித்த டாக்டர் பயப்படதேவையில்லை எனவும் அவளுக்கு பழையது எல்லாம் நினைவு வருவதற்கான அறிகுறிதான் எனவும் கூறியிருந்தார். ஆனால் சாரதா தான் அதைக்கேட்டதும் மிகவும் பயந்து போனார். இதைக்கவனித்த மாயாவோ மிகவும் குழப்பத்தில் இருந்தாள். அன்றும் பாடசாலைவிட்டு வரும் வழியில் திடீரென தலைவலி அதிகரிக்க கொஞ்ச நேரம் அங்கு நின்று தன்னை நிதானப்படுத்திக்கொண்டு ஒருவாறு வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டினுள் நுழையும் போதே ஹாலில் இருந்த சாரதா.."வாம்மா மாயா என்ன டயர்ட்டா இருக்க.." எனவும் அவர் அருகில் வந்தவள் மடியில் தலைவைத்துப்படுத்துக்கொண்டாள்.

"என்ன செய்யுது மாயா.." பதறியவண்ணம் சாரதா எழவும் அவரை தடுத்தவள்.."லைட்டா மயக்கமா வருதும்மா.."என்றவாறே மயங்கினாள்.

அவளை கட்டிலில் கொண்டு வந்து படுக்க வைத்தவர் டாக்டர் பயப்பட தேவையில்லை என கூறியே இருந்ததால் அருகில் அமர்ந்து அவள் தலையை தடவிக்கொண்டே அவள் எழும் வரை காத்திருந்தார்.

மாலை ஆறு மணியளவில் முணகிக்கொண்டே அவள் கண்திறக்க அதுக்காகவே காத்திருந்தது போல் அவள் அருகில் வந்த சாரதா தலையை வருடிக்கொண்டே "எப்படிடா இருக்கு இப்போ..?" அவளருகில் அமர்ந்தார்.

மாயா ஏதோ ஒன்றை நினைத்து பயந்து விழிக்க சாரதாவிற்கோ அதற்கும் மேலாக பயம் கவ்விக்கொண்டது..கைகள் நடுங்க தன் தலை மேல் இருந்த சாவித்ரியின் கையை பற்றியவள் அவர் திகைத்து நோக்க சட்டென கையை தன் கைகளோடு பிணைத்துக்கொண்டாள் மாயா..

இருந்தும் சாரதாவால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. அவள் கூறும் வரை அமைதியாய் இருந்தார். "ம்மா எனக்கு..எனக்கு ஏதோ விபத்து..என்னோட ஒரு பொண்ணு இருந்தா அவளுக்கு..என்னால யோசிக்க முடியல்ல அதுக்கு மேல..நான் பைக்ல.." அவள் தன்னை வருத்திக்கொள்வதைக்கண்ட சாரதா அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.

" மாயா உன்ன நீ ரொம்ப கஷ்டப்படுத்திக்காத.. கொஞ்சம் கொஞ்சமாதான் உனக்கு நினைவு வரும். இதுதான் பர்ஸ்ட் டைம் நினைவு வந்திருக்கு. உனக்கு யோசிக்க முடியலன்னா விட்டுடுடா." அவர் கூற அவளும் தலையாட்டியவாறு அவருடன் ஒன்றிக்கொண்டாள்.

சாரதா தான் சொல்லமுடியாத நிலையில் இருந்தார். முழுதாக நினைவில் வந்து விட்டால் இந்த பாசம் நிலைக்குமா அவள் தன்னை நம்புவாளா என சிந்தித்தவண்ணம் அவளை இறுக்க அணைத்துக்கொண்டார்.

____________________________________________

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 27 ❤

❤ஏன் தேவி இன்று நீ
என்னைக் கொல்கிறாய்..
முள் மீது ஏனடி
தூங்கச் சொல்கிறாய்..
உன்னைத் தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது..❤

அன்றைய நாள் அழகாக விடிந்திருந்தது அவர்கள் இருவருக்கும், முக்கியமாக அவளுக்கு. ஆனால் அந்த அழகிய என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவருக்கும் பின் இருந்த காரணம் வேறு தான்.

"செம்மயா பன்னிட்டயே வேலு.. நான் கூட உனக்கு பேச்சு மட்டும் தான் நினைச்சேன்.. " தீக்ஷா தன் முன் கைகட்டி நின்றிருந்த வேலுவை பார்த்து மெச்சுதலாய் பேச..

"நன்றி மேடம் நன்றி.."என அவனும் நெளிந்து கொண்டிருந்தான்.

"சரி அந்த லாறிய என்ன பன்ன.."

"அது பத்தி நீங்க கவலையே பட வேணாம்.. ஆக்ஸிடன்ட் ஆனதும் நம்ம பய அங்கேயே வண்டிய நிறுத்திட்டான். நம்ம ப்ளான் பன்னாத ஒன்னு சிக்னல்ல அந்த பொண்ணு வண்டிய நிறுத்தாதது அதுனால தப்பும் நம்ம பய மேல இல்ல அதே நேரம் ஆக்ஸிடன்ட் மாதிரியே நம்மளுக்கு நினைச்சதையும் செய்ய முடிஞ்சது மேடம்.." வேலு கூற கூற தீக்ஷாவின் வெற்றி சிரிப்பு மேலும் கூடிக்கொண்டே போனது.

"மேடம்.." தீக்ஷா அமைதியாய் இருக்க மெதுவாய் அழைத்துப்பார்த்தான். அவள் நிமிர.. "நீங்க சொன்னது போல செஞ்சாச்சி.. இப்ப உங்க ரூட்டும் க்ளியர்.. நான் பேசினது கொடுத்தீங்கன்னா..நான் என் வழியில போயிட்டே இருப்பேன்.."வேலு தலையை சொறிந்து கொண்டே கூறினான்.

"ராகுல்.." என தனக்கு கொஞ்சம் தொலைவாய் நின்றிருந்த அவளது பி ஏ வை அழைத்தாள். எங்கே நடந்து வந்தாலும் மேடம் சாலரியை வெட்டி விடுவாளோ என ஓடி வந்து அவள் முன் நின்றான். தனது கையால் இரண்டு என காட்டி வேலுவை காட்டினாள்.

அவனும் புரிந்து கொண்டு தலையாட்டி விட்டு உள்ளே சென்று ஒரு பையோடு வந்து அதை வேலுவிடம் கொடுக்க அவன் கண்களை அவனுக்கே நம்ப முடியவில்லை. ஐம்பது லட்சம் தான் அவன் கேட்டது ஆனால் அங்கிருந்ததோ கட்டு கட்டாய் ஐம்பதையும் தாண்டிய பணக்கட்டுக்கள்.

"மேடம்.." வேலு நம்ப முடியாமல் இழுக்க.. பதிலுக்கு சிரித்து விட்டு ராகுலை கையாலே சைகை காட்டி போகச்சொல்லி விட்டு.. "இதுல இரண்டு கோடி இருக்கு.. " வேலு தொடர்ந்து ஏதோ பேச வர கையசைவால் தடுத்தாள்.

"உனக்கு நான் சொன்னது நினைவிருக்கும் நினைக்கிறேன். இனிமே என் வழில நீ வர கூடாது.. ஏதாவது இந்த விஷயத்தில நீ மாட்டினாலும் என் பக்கம் உன் கை நீள கூடாது.. அதுக்கெல்லாம் சேர்த்து தான் நீ கேட்டதுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கேன்.. புரிஞ்சதா ? இல்ல புரியலன்னா உனக்கு வேற பாஷையில சொல்லனுமா" தீக்ஷா பேச பேச வேலு அவசர அவசரமாய் தலையை ஆட்டினான். பின் அவன் ஏதோ கூற வரவும் கை நீட்டி தடுத்தவள் தன் வாயில் கை வைத்து பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்து விட்டு அவனை போகச்சொன்னாள்.

வேலுவும் சரி என்று அந்த பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர..
"வேலு ஒன் மினிட்.." என்று மீண்டும் அவனை அழைத்தாள்.

திரும்பி பழைய இடத்திற்கே ஓடி வந்து கைகட்டி நின்றான் வேலு. "என்ன மேடம்.."என்றான் பணிவாய்.

"இப்போவே எந்த முயற்சியும் வேணாம். கொஞ்ச நாள் போகட்டும்.. பொலீஸும் இப்போ ரொம்ப தீவிரமா இருப்பாங்க.. " தீக்ஷா பேச வேலுவும் எப்போதும் போல் தலையை ஆட்ட, அவளது கை அசைவிற்கு காத்திருந்து விட்டு அது கிடைத்ததும் பணப்பையை அள்ளிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் வேலு.

*******

மயக்க மருந்தின் வீரியத்தில் தன் புலம்பல்களை நிறுத்தி விட்டு அவன் அறையில் கண்ணயர்ந்திருந்தான் சக்தி. இருந்தும் முனகிக்கொண்டே இருந்தவன் அருகில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான் வினோத்.

அவன் அருகில் வந்து தோள் பற்றிய வினிதா.." வினோ நீ கேட்ட எல்லாம் இதுல இருக்கு.." என்றவாறு அந்த கவரை அவனிடம் கொடுத்தாள். ஓர் நன்றியுடன் அதனை வாங்கிக்கொண்டவன் முதலாவதாய் அந்த சிசிடிவி வீடியோவை கொண்டிருந்த பென்ட்ரைவை லேப்டாப்பில் இணைத்து அதனை பார்வையிட வினிதாவும் ராஜேஷும் சேர்ந்துகொண்டனர்.

பைக் வருவது தெரிய அதன் போதே கண்ணிமைக்கும் நொடியில் வந்து மோதியது லாறி.. மோதிய வேகத்தில் மறுபக்கம் திரும்பிய பைக்.. அதில் ரம்யாவின் தலை பலமாக தரையில் மோதுவதும் தெளிவாகத்தெரிய அதற்கு மேல் பார்க்க முடியாமல் தலையை மேசையில் கவிழ்த்துக்கொண்டான் வினோத். அவன் குலுங்குவதே அவன் அழுவதை உணர்த்த ஆறுதலாய் அவனை பற்றிக்கொண்ட வினிதா ராஜேஷை பார்க்க அவனும் கண்ணீரைத் துடைத்ததுக்கொண்டு கவரில் இருந்த ரம்யாவின் ரிப்போர்ட்டை பார்வையிட தொடங்கினான்.

" ரிப்போர்ட்ல என்ன இருக்கு?" என்றாள் வினிதா.

"ஹ்ம் ரம்யாவுக்கு தலைல பலமா அடிபட்டிருக்கனால அவளுக்கு உடனடியா ஒரு ஆப்ரேஷன் பன்ன இருந்திருக்கு சொன்னாங்க ரம்யாவுக்கு ட்ரீட் பன்ன டாக்டர். ஆனால் அதுக்கு அந்த ஹாஸ்பிடல்ல வசதிகள் இல்ல..அதுனால சார் போற வரை வெய்ட் பன்ன வேண்டிய கட்டாயம்.. அப்போ தான் ஒரு அம்மா வந்து ரம்யா தன்னோட மகள்ன்னு சொல்லி உடனே கூட்டிட்டு போயிருக்காங்க.. ஆனால்.."

"எல்லாம் சரி ராஜேஷ் ஆனால் அவங்கதான் ரம்யாவோட அம்மான்னு இவங்க எப்படி நிரூபிக்காம அனுப்பலாம் சொல்லு..கேட்டியா நீ..?" வினோ ஆவேசமாய் எழுந்து வினவ.."அப்போ இருந்த நிலமையில டாக்டர்க்கு அதெல்லாம் தோணல்ல.. ஒரு உயிர்தான் முக்கியமா தெரிஞ்சது.. அதுனால அம்மான்னு யாரும் பொய் சொல்ல மாட்டாங்கன்னு அனுப்பிட்டாங்க.. ஆனால் அவங்கள பார்த்தா தப்பா தெரியல்ல சொன்னாரு.. எப்படியாவது ரம்யாவ காப்பாத்திரனும் என்ற தவிப்பு மட்டும் தான் அவங்ககிட்ட இருந்ததாம்."

மீதி வீடியோவில் பைக் பள்ளத்திற்குள் சாருவுடனே சென்று விழுவதும் தெரிந்தது. வீடியோ முடிந்தவுடனும் கூட நீண்ட நேரம் அறையினுள் மௌனமே ஆட்சிபுரிய.."சாருவோட.. சாரு.. பாடி கிடைச்சிதா?" எப்படி கேட்பது தெரியாமல் திக்கி திக்கி வினவினான் வினோ..பதிலுக்கு இல்லை என்று தலையசைத்தான் ராஜேஷ்.

"அது என்ன..? என்றாள் வினி..ராஜேஷ் கையிலிருந்த மற்றுமொரு பைல்லை பார்த்து.

"இது ரமி அவளோட மூன்று வயதில இருந்து அனாதை இல்லதுல தான் வளர்ந்தா என்பதற்கான ஆதாரம்."

"வினோ இப்படி செய்யலாமே..இந்த பைல் எல்லாம் கொண்டு போய் பொலீஸ்ல ஒரு கம்ளைன் கொடுக்கலாம்.. இது கடத்தலா இருக்கலாமே.. அப்படி இல்லன்னாலும் அவங்க எப்படி ரமிய பொய் சொல்லி கூட்டிட்டு போகலாம்?"
வினி கேட்க மறுப்பாய் தலையசைத்தான் வினோத்.

"இல்ல வினி..ரமி கூட நாம இப்ப ஒரு மூன்று வருஷமாகதான் இருக்கோம்.. அதோடு அவளோட மூன்று வயதிற்கு முன்ன என்ன நடந்தது இதுவும் எங்களுக்கு தெரியாது.. நாம இத மட்டும் கொண்டு போய் கொடுத்த இது கடத்தலா இருக்கலாம் என்று கம்ளைன் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கல.. இதுக்கு சப்போர்ட்டா அந்த டாக்டரும் வர மாட்டாரு காரணம் இதுல அவர் சைட்டுலயும் தப்பு இருக்கு சோ வந்தா அவர் ஹ்ஸ்பிடலுக்கு தான் கெட்ட பெயர். அதேநேரம் எங்களோட சைட்டுலயும் தப்பு இருக்கு.. நாங்க அங்க போன டைம்ல ரமிய அவங்க கூட்டிட்டு போயிருக்கால்லன்னா அவள் உயிர்க்கு கூட ஆபத்து தான். பேப்பர்ல அவ போட்டோ போட்டு தேடலாம் ஆனால் அது ரமிக்கு பாதுகாப்பு இல்ல.. ரமி நல்லா தான் இருப்பா.. எங்கள தேடி வருவா.. இல்லன்னா கண்டிப்பா நாங்க அதுக்குள்ள அவள கண்டுபிடிப்பம்.." பேசிவிட்டு மனதினுள் நினைத்து கொண்டான்..காதல் நிச்சயமாக என்கிட்ட சேர்க்கும் அவள..
காதல் சொல்லி அவன் உணர்ந்து முழுதாக மூன்று நாள் கூட தாண்டி முடியவில்லை அதற்குள் தன்னவளை இழந்து நிற்கிறோமே என மௌனமாய் கதறியது அவன் இதயம்.

இரண்டு நாட்கள் இவ்வாறே கழிய சாருவின் வீட்டிற்கு தகவல் சொல்வதா வேண்டாமா என்ற பெரிய குழப்பத்தில் இருந்தார் சாவித்ரி. சாருவின் இழப்பு அனைவரையுமே கலங்கச்செய்திருந்தது.. பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவளை இங்கே நல்லது செய்வதாக எண்ணி கூட்டி வந்தது தன் தவறு என குற்ற உணர்வில் தவித்துக்ககொண்டிருந்தார் சிவா. சதீஷும் நிலாவும் ஒரு பக்கம்..சக்தி மறுபக்கம் கொஞ்சமாய் தேறி வந்திருந்தான்.

முதல் நாள் அவனை முழுவதுமாகவே மயக்க மருந்தின் பிடியிலேயே வைத்திருந்தனர். பின் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிய வைத்து அவனை தெளிய வைத்தனர். இருந்தும் யாரிடமும் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை.. அவன் நிலை பார்க்க பொறுக்காது ராஜேஷ் வினிதா.. வினோதும் கூட தன் சோகமும் மறந்து அவனை தேற்ற முயன்று கொண்டிருந்தார்கள்.

சாருவின் உடல் கிடைக்காமலே போக அதனால் இறுதி சடங்குகள் என்ற எண்ணம் கூட யாருக்கும் தோன்றவில்லை..அவள் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தது அனைவருக்கும்.
ரம்யா பற்றி தனக்கு தெரிந்தவரையில் தேடிக்கொண்டிருந்தான் வினோ. அவள் நலமாகத்தான் இருப்பாள் என்பது மட்டும் அவனுக்கு உறுதியாய் இருந்தது.
____________________________________________

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 28 ❤

❤ இருளை பிரிந்த
நிலவென..
உதிர்ந்த மலர்களின்
மணமென..
விடியல் உதிர்ந்த
வானமாய்..
கண்ணீரில் கரையும்
கானலாய்..
இங்கே நான்
உனக்காய்..❤

அன்று அனைத்தும் நடந்து முடிந்து நான்காவது நாளாகியிருந்தது. அந்த வீடே ஜீவனைத் தொலைத்து மயான அமைதியில் இருக்க உள்ளே நுழைந்த வினோ ராஜேஷ் மற்றும் வினி மூவரும் நேராக சக்தி அறைக்கு சென்றனர்.

இப்பொழுதெல்லாம் அவர்களுக்கும் சக்திக்கும் இடையில் கம்பனி உறவை தாண்டிய ஒரு நட்பும் வளர்ந்திருந்தது. சக்திக்கும் அந்த புதிய நட்பு இதமாய் தான் இருந்தது. ஆனால் அவ்வப்போது ஓரிரு வார்த்தை பேசுவதோடு சரி ஏதோ அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கும் என்பதை அவ்வப்போது ஏன் கண்விழித்திருந்த நேரம் எல்லாம் உணர்ந்து கொண்டு தான் இருந்தான் எனலாம்.

அங்கு அறை திறந்தே இருக்க ஜன்னல்புறம் வெளியில் வெறித்துக்கொண்டிருந்தான் சக்தி.

"சக்தி.." ராஜேஷ் அழைக்க..

"ம்ம்.." என்ற பதில் மட்டும் திரும்பாமலே வந்தது.

மேலே என்ன பேசுவது என மூவரும் அமைதியாய் இருக்க சக்தியே பேச்சை தொடங்கினான்.

"நானே அவள கொன்டுடேன்ல.. "

"சக்தி அப்படிலா எதும் இல்ல.. " வினோத் பேச அதை கேட்கும் மனநிலையில் சக்தி இல்லை.

அவ்விடம் வந்த நிலா மூவரையும் பார்த்து விட்டு சக்தி அருகில் சென்று அண்ணா என அழைத்தாள். அவன் காதில் விழுந்ததன் அடையாளமாய் அவள் புறம் திரும்ப.." கீழ யாரோ வந்திருக்காங்க..." என்றாள் தயங்கியவாறே.

யோசனையில் நெற்றியை சுருக்கியவன் "போ வாரன்.." என்று விட்டு இவர்கள் புறம் திரும்பினான்..

"சாரு.." என இழுக்க..அவனது வழமையான கேள்விதான் இவர்களும் வழமை போலவே இல்லை என தலையாட்ட ஒரு பெருமூச்சுடன் "கீழ போய்ட்டு வாரன்" என்றவாறு நகர்ந்தான்.

உள்ளே சென்றிருந்த கண்கள் அதனை சுற்றி கருவளையம்.. சவரம் செய்யவே மறந்து போன முகம்..தலைமுடி என சக்தி ஆளே மாறிப்போயிருந்தான். நான்கு நாட்களில் இவ்வளவு இழைத்திட முடியுமா என்ற கவலையில்.. படியிறங்கி வந்துகொண்டிருந்த சக்தியை பார்த்துக்கொண்டிருந்தார் சாவித்ரி.

"வாங்க மாப்பிள்ளை.." கூடிக்குழுமியிருந்த சொந்தங்களிடையே நடுநாயகமாக திகழ்ந்தவர் சக்தியை வரவேற்கும் முகமாக அழைக்க..அங்கிருந்தவர்களை கண்களால் அலசியவனின் பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தியது..அவன் பார்வையை கண்டு கொண்டவள் கண்களால் கொஞ்சிக்கொண்டே நெளிந்து வளைந்து நடந்து வந்தாள் அவள்.

இவனை நெருங்கி வந்தவள்.."என்ன டார்லிங் இப்படி இருக்க..தலை முடி எல்லாம் வளர்ந்து..சரி சரி வா நானே உன்ன பத்து நிமிஷத்துல தயார் பன்னிட்ரன்.." என்று கொஞ்சி பேசியவள் அவன் கைபற்றி இழுக்க நிதானமாக அவளை பார்த்தவன்.."எடுடி கைய.."என்றான் பற்களிடையே.

"அதான் உன் பொண்டாட்டி செத்து போய்ட்டாலே அப்புறம் என்ன டார்லிங் நான் பிடிச்சா.."

அப்போதும் அவள் முன்னேற.."கைய எடுடி சொன்னேன்ல.." என்று கர்ஜித்தவாறே அவள் கன்னத்தில் அறைந்தான் சக்தி தன் கோபம் முழுவதும் காட்டி..

தூரப்போய் விழுந்தவள் தானும் சலைத்தவள் அல்ல என்பது போல் எழுந்து வேகமாய் அவன் அருகில் வர அவள் கழுத்தை இறுக்கப்பற்றி சுவருடன் சாய்த்த சக்தி.." சொல்லுடி என் சாருவ என்ன பன்னனு..சொல்லு இல்ல இங்கயே உனக்கு சமாதி கட்ட வேண்டி வரும்.." இருமியவாறே அவன் கையை விலக்க முயன்ற தீக்ஷா.."நான் உன்..உன் சாருவ ஒ..ன்னும் பன்ல கைய எடுடா முதல்ல.."என்றாள்.

அப்போதும் அவன் அதே நிலையில் இருக்க.. இவள் மூச்சுக்கு தவிக்கவும் சக்தியருகில் வந்த வினோத்.."சக்தி கைய எடு..அவ என்ன சொல்லுறா பார்க்கலாம்."என்றான்.
அவளை முறைத்துக்கொண்டே சக்தி கையை எடுக்க..இடைவிடாது இறுமியவள் ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு அங்கிருந்த படிக்கட்டில் சாய்ந்து அலட்சியமாய் பார்த்தாள் சக்தியை.

"இருந்தும் திமிர் குறையுதா பாரேன்.." வினிதா ராஜேஷ் காதில் முணுமுணுத்தாள்.

"நான் உன்ன கல்யாணம் பன்னிட்டு என் காலடில கிடக்க வச்சி தவிக்க விடனும் பார்த்தேன்.. ஆனால் அத விட இப்போ ரொம்பதான் இழைச்சிட்ட.." அவனை தலை முதல் பாதம் வரை பார்த்தவாறு அவள் கூற..சக்தி கையை மடக்கி கோபத்தை அடக்குவதைக்கண்டு நகைத்தாள்..

அவளை அனல் பார்வை பார்த்த சக்தி
"சாருவ என்ன பன்னின? இதுக்கு மேல நான் பேசிட்டு இருக்க மாட்டன் தீக்ஷா.."
அங்கு நடப்பதை அனைவராலும் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. தீக்ஷாவின் தந்தையுமே பயந்துதான் போயிருந்தார் இவன் கோபம் கண்டு.

தன் கை நகங்களை அப்போதுதான் முதல் தடவை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு அவர்களை காக்க வைத்தவள்.."நான் ஒன்னும் பன்னல்லயே.." என்றாள். "ஏய்.." என்றவாறு கையை ஓங்கிக்கொண்டு போனவனை அமைதிப்படுத்திய வினோத்.."இங்க பாரு மரியாதையா சொல்லு சாருவ என்ன செய்த?" என்று கேட்டான்.

"Actually சக்தி நான் தான் அவளுக்கு பிளான் போட்டேன். ஆனால் பாரு அவளுக்கு என் கையால சாகுற வரம் கிட்டல்ல.. ஆனால் இந்நேரம் உன் சாரு உலகத்துக்கு டாட்டா காட்டியிருப்பா..அவளோட இறந்த நாள் என்னோட உன்னோட கூடவான திருமண நாளா இருக்கனும் நினைச்சன். ஆனால் நான் நினைச்சத விட நீ ரொம்பவே உள்ள செத்துட்டு இருக்கத பார்க்கும் போது im ssooo happpyy... இப்படியே அவள நினைச்சி நீயும் சாகுடா.. " கூறிவிட்டு தன் தந்தை அருகில் சென்றவள்.."வாங்க டாட் போகலாம்..நான் நினைச்சது நடந்திருந்தாகூட இவ்வளோ சந்தோஷமாக இருந்திருக்காது." அவள் கூறிவிட்டு முன்னே நடக்க தட்டு தூக்கி வந்த கூட்டமும் இவள் பின்னே நடை போட்டது.

சக்தியோ இடிந்து போய் அமர்ந்திருந்தான் தரையில்..எல்லாருமே அந்த வீடியோ பார்த்து விட்டு ஏன் பொலிஸ் உட்பட சாரு இறந்து விட்டாள் என கூற இவன் நம்பவில்லை..இவனுக்கு தீக்ஷாவை கண்டதும் ஒரு புது நம்பிக்கை பிறந்தது எனலாம். தீக்ஷா தான் ஏதும் பன்னியிருப்பாள் என்று... ஆனால் அவள் இன்று அவன் நம்பிக்கை தவிடு பொடியாக்கப்பட்டது. எப்படியும் அவள் பொய் கூற மாட்டாள். சாருவை ஏதும் பன்னியிருந்தாள் அதைக்கூறி மிரட்டி சக்தியை திருமணம் செய்திருப்பாள். ஆனால்...சாரு அப்போ உண்மையாவே..கண்கள் இருட்டிட மயங்கிச்சரிந்தான் சக்தி.

*************
இரவு மணி ஒன்பதை தொட்டுக்கொண்டிருக்க உறங்க தயாரான மாயா தண்ணீர் தாகம் எடுக்கவே சமயலறைப்பக்கம் போனாள். இப்போதெல்லாம் வாரத்தில் கடைசி இரண்டு நாட்கள் மதன் வீட்டிற்கு வருவதை வழமையாய் கொண்டிருந்தான். சந்தோஷத்தில் சாரதாவும் சற்றே இளமையாய் தோன்றினார் எனலாம். மாயாவிற்கும் அவரை பார்க்க சந்தோஷமாய் இருந்தது.

தண்ணீர் நிரப்பிக்கொண்டு அவள் திரும்ப அங்கே சாரதாவின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அம்மா இன்னும் தூங்கல்லயா என்று யோசித்தவாறு சற்றே இடைவெளியிருந்த கதவில் தட்ட போகவும் உள்ளே கேட்ட பேச்சு சத்தத்தில் சிலையாய் நின்றாள்.

"மதன் பயமா இருக்குடா..மாயாவிற்கு கொஞ்சமா நினைவு திரும்பிட்டே இருக்கு..நினைவு வந்துட்டா போய்டுவாடா நம்மள விட்டு...." அவர் தொடர்ந்து என்ன பேசினார் என்று கேட்க மாயா அங்கிருக்கவில்லை.."எனக்கு பழையது நினைவு வந்தா அம்மா சந்தோஷப்படதானே வேணும்..எதுக்கு பயப்படறாங்க..?" குழப்பமிகுதியில் தலை வலிக்க ஆரம்பிக்க தலையைப்பிடித்துக்கொண்டே வந்தாள் அவளறைக்கு.

அவள் சென்று அரைமணிநேரத்தில் வெளியில் வந்த சாரதா, மாயா அறைக்கு சென்று பார்க்க அங்கு ஜன்னல் வழி இருளை வெறித்துக்ககொண்டிருந்தாள் அவள். அவளருகில் சென்ற சாரதா அவள் தோளில் கை வைக்க வெறித்த பார்வையுடனே அவள் திரும்பினாள்.

அவள் பார்வையில் கொஞ்சம் தடுமாறியவர்.." என்னம்மா தூங்கல்ல?" என கேட்க இல்லை என தலையசைத்தவள் அவரை அழைத்துச்சென்று கட்டிலில் அமர வைத்து விட்டு தானும் அமர்ந்து மடியில் படுத்துக்கொண்டு.."என் அம்மா எங்க...?" என்றாள் அவர் முகம் பார்த்து..

தடுமாறியவர்.."இல்லடா மாயா எனக்கு..எ எப்படி உன் அம்மாவ.." அவர் பேச்சு வராமல் திக்கவும்..
எழுந்தமர்ந்தவள் அவர் கண்களை நேராக நோக்கி.."அத்தை கண்டிப்பா உங்களுக்கு மட்டும் தான் தெரியும் என் அம்மா எங்க..?" அவள் கேட்கவும் அவளது அத்தை என்ற அழைப்பே அவள் தற்போதைய நிலை உணர்த்த பேச்சிழந்து நின்றார் சாரதா.

*************

"ஏய் சார் இன்னும் எவ்வளோ தூரம் இந்த இருட்டுல கூட்டிட்டு போவ நீ.. இந்த காட்டுல நடக்க தொடங்கியே அரைமணிநேரம் ஆக போகுது..இருட்டுல கண்ணு வேற தெரியிதில" தன் எடையை தூக்கிக்கொண்டு இவ்வளவு தூரம் நடந்ததே பெரிய விடயம் என்பது போல் சலித்துக்கொண்டே கேட்டாள் ராஜம்மாள்.

"இன்னும் கொஞ்ச தூரம் தான் வா.." வேலு கூறிவிட்டு நடந்தான்.

"இதையே சொல்லி சொல்லி இவ்வளோ தூரம் கூட்டியான்ட.." ராஜம்மாள் கொஞ்சம் கோபத்தை பேச்சில் கலக்க..நின்று திரும்பி பார்த்த வேலு..
"ஏதோ உனக்கு சும்மா வேல கொடுக்குற போல இது பன்னுற.. துட்டு கொடுக்குறேன்ல.." வேலு துட்டு என்றதுமே அடங்கி விட்டு சிவப்பு சாயம் படிந்த பற்களை காட்டி சிரித்து வைத்தாள்.

"கோவுச்சிக்காத சார்ரு.. நட நட.." வேலுவிற்கு ஏதோ பாதை தெரியாது போன்ற பாவனையில் கையை நீட்டி நடக்குமாறு கூறினாள்.

கையில் கட்டியிலிருந்த கைகுட்டையை அவிழ்த்து முகத்தை துடைத்துக்கொண்டே தன் நடையை தொடர்ந்தான் வேலு.

கடைசியாய் இருவரும் காட்டை கடந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்த சிறு வீட்டை அடைந்திருந்தனர். ஒற்றைக்கதவும் பக்கமாய் அமைந்திருந்த இரு ஜன்னல்களும் பார்க்க கண்கள் இரண்டு போல் தோற்றமளித்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய் கதவிற்கு முன்னே மேல்பக்கமாக ஒற்றை விளக்கு. தூசு படிந்திருந்தாலும் தன்னிடம் இருக்கும் ஒளி போதுமே என்று அப்பாவி விட்டில் பூச்சிகளின் வாழும் காலத்தை விழுங்கிக்கொண்டிருந்தது.

"இங்க பாரு இப்போவே என்ன பத்தி எந்த பேச்சும் எடுக்காத.. கொடுத்த வேலய மட்டும் கர்க்ட்டா பாரு.. அதிகபிரசங்கிதனமா எதும் பன்னி வச்ச அப்புறம் நான் சொல்ல தேவையில்ல தெரியும்ல.." வேலு பேச பேச வெற்றிலையை மடித்து வாயில் அடைத்துக்கொண்டே.."சரி சரி சார்ரு.." என்றாள் ராஜம்மாள்.
____________________________________________

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 29 ❤

❤ கண்ணோடு தோன்றி
கனவில் மாயம்..
கண்விழித்தால் மறையும்
கானல் மாயம்..
இந்த ரணமும்
உணர்வற்றே
மறைந்திட..
மாயம் செய்திடு
மாயவளே..❤

அவள் கேள்வியில் திகைத்த சாரதா.."மாயா...நான் சொல்லுறத கொஞ்சம்..." என ஏதோ கூற தொடங்கும்முன் அவரைத்தடுத்தவள்..

"அத்தை இதுக்கு மேலயும் நடிக்க வேணா..நான் மாயா இல்ல ரம்யா.." என்று கராராய் கூறிவிட்டு

"சொல்லுங்க என் அம்மாவ என்ன செய்தீங்க.." கேட்டாள்..

குற்ற உணர்வில் தலைகுனிந்தவாறே பேச ஆரம்பித்தார் சாரதா..

" அப்போ எனக்கு பணம் மட்டும் தான் தெரிஞ்சது.. என் அண்ணா சொல்லாம உங்க அம்மாவ கல்யாணம் பன்னிகிட்டதுக்கு அப்புறம் எனக்கு ரொம்பவே கோபம்.
உங்க அம்மாக்கு சொத்துன்னு சொல்லிக்க ஒன்னும் இல்ல.. அவங்கள எவளோ கொடுமை செய்தேன் ஆனாலும் சிரிச்சிகிட்டே எல்லாம் செயவாங்க நான் சொல்ர எல்லாத்தையுமே.

ஆனா அண்ணாகிட்ட ஒரு வார்த்த சொன்னது இல்ல என்ன பற்றி..ஒருநாள் அண்ணா வீட்டுக்கு வழமைக்கு முன்னமே வரவும் நான் பேசினத கேட்டு உன் அம்மாவ அழச்சிட்டு வேற வீடு பார்த்துட்டு போய்ட்டாரு.
அதுல இருந்து குடும்பத்த பிரிச்சிட்டான்னு இன்னும் கோபம் அவ மேல.. நான் பிறந்தது முதல் அண்ணாதான் எனக்கு எல்லாம்.. அப்படி இருந்தவர மாத்திட்டான்னு கோபமா வந்திச்சி...

பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் பார்த்துட்டே இருந்தன்.. அண்ணாவோட மறைவுக்கு பின்ன.. ஐந்து வயசான உன்னையும் தூக்கிட்டு என்கிட்ட வந்தா..நான் இங்க இருக்கலாம் என்று சொல்லிட்டு உறவு பிரியுற வலின்னா என்ன என்று உன் அம்மாக்கு உணர வைக்கனும்ன்னு யோசிச்சி அவங்களுக்கு தெரியாமலே உன்ன கொண்டு போய் எங்கயாவது போட சொல்லிட்டன்..உன் அம்மாக்கு தெரியாது இது.. உன்ன தேடி தேடி கெஞ்சி கேட்டா என்கிட்ட..நான் சொல்லல.. அப்புறம் அந்த கவலையிலே..." அவர் இழுக்கவும் அவருக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பிப்பார்த்தார்.

ரம்யா தன் பையை எடுத்துக்கொண்டு கதவை அடைத்துச்செல்வது தெரிந்தது.
பின்னால் ஓடிச்சென்றவர் அவள் கைபற்றி..

" ரம்யா தப்பு தான் மா ரொம்பவே தப்பு தான்..மன்னிச்சிடு சொல்ல முடியாத அளவு தப்புமா.. ஆனா ஆனா தப்பு செய்தவங்க திருந்த கூடாதுன்னு இல்லையேமா..உன் அம்மாவோட மறைவுக்கு அப்புறம் நான் செய்தத நினைச்சி அழுகாத நேரம் இல்ல..உன்னை நினைக்காத நாள் இல்ல..உன்னை தேடி என்னால கண்டுபிடிக்க முடியல.. நிறைய வருஷ தேடல் பலனா தான் அன்னைக்கு உன்ன ஹாஸ்பிடல்ல பார்த்தேன்.." கைபற்றி அழுதவரின் கையை மெதுவாக விலக்கிவிட்ட ரம்யா..

" அத்தை எனக்கு டைம் வேணும்...தப்பு செய்தவங்க திருந்தினா நிச்சயமா ஏத்துக்கனும்.. ஆனால் எனக்கும் ஒரு மனசு இருக்குல்ல.. நான் உங்களுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கன் இல்ல சொல்லல.. அதுக்கான எல்லா செலவையும் உங்க ரூம்ல வச்சிட்டன் அத்தை.. எனக்கு இங்க நிக்கவே மூச்சடைக்குது.." அவர் அழுது கொண்டே இடையில் பேச வரவும்..

" இருங்க அத்தை பேசி முடிச்சிர்ரன் நான்.. உங்க மேல கோபம் தான் எனக்கு அது எனக்கு இருக்க கூடாதுன்னு நீங்க எதிர்பார்க்கிறதும் தப்பு.. கண்டிப்பா இங்க இருந்தா என் கோபம் குறையாது.. உங்களுக்காக ஒரு நாள் என் மனசு மாறினா கண்டிப்பா என் சாரதா அம்மாவ நான் பார்க்க வருவன்.. அதுவரை வேணாம் அத்தை..ப்ளீஸ்"

"இப்போ நீ எங்க போவ மா.. ரம்யா..?" அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாக தோன்ற கண்ணை துடைத்துக்கொண்டே கேட்டார் சாரதா.

"எனக்கு என் வாழ்க்கையில இடையில் இருந்தவங்க நடந்ததுன்னு நினைவில்ல இன்னும்.. அதாவது சொல்லப்போனா எனக்கு எக்ஸிடனட் ஆக முன்னாடி இருந்த எதுவும். ஆனால் டாக்டர் சொன்னது போல இந்த ஒன்றரை மாசத்துல என்னோட கடந்த காலத்துல சில விஷயங்கள் முக்கியமா என்னோட சின்ன வயசுல நடந்தது நினைவு வந்திருக்கு.."

அதுவே அவரிற்கு விளக்கம் போதும் என்று முடிவெடுத்தவளாய் கூறிவிட்டு விலகிச்செல்பவளை செய்வதறியாது கண்ணீருடன் அவள் கேட்டை தாண்டி மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் சாரதா.


***************

அரை மணி நேரமாக கண்ணை திறக்க முயன்றும் தோற்றுக்கொண்டு தான் இருந்தாள் சாரு. தலை வேறு கல்லை தூக்கிக்கொண்டிருப்பது போல் விண் விண் என வலித்துக்கொண்டிருந்தது. கைகளிரண்டும் பின்னால் சேர்த்து கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தாள். தரையில் அமர்ந்திருந்தால் ஆனாலும் கால்களை அசைக்க முடியவில்லை. ஏன் கால்கள் இருப்பதை கூட உணர முடியவில்லை அவளால். மெதுவாக காலை அசைத்துப்பார்க்க முயன்றவள் வலிக்கவும்..

"ம்மா.." என்றவாரு கால்களை மீண்டும் இருந்தது போலே மடித்து வைத்துக்கொண்டாள்.

"ஏலே.. அந்த புள்ள கண்ணு கட்ட அவுத்து விடு.." அதிகாரமாய் ஒரு பெண் குரல் ஒலித்து ஓய்ந்தது.

சாருவின் மனதில் கேள்விகள் தான் முட்டி மோதிக்கொண்டிருந்தன. கண் கட்டை அவிழ்த்தால் ஓரளவு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

கண்களை மறைத்து கட்டப்பட்டிருந்த கட்டு விலகிட.. கிட்டத்தட்ட ஒன்றரை நாள் இருட்டையே பழகி விட்டிருந்த அவளது கண்கள் வெளிச்சத்தை கண்டதும் சட்டென மூடிக்கொள்ள எத்தணிக்க பிடிவாதமாய் திறந்து சுற்றி பார்த்தாள் சாரு.

பழைய மரவீடு போல் தோற்றமளித்தது அந்த இடம். இவள் அருகிலே ஒருவன் அவளையே குறு குறு என பார்த்தவண்ணம் நின்றிருந்தான். அவன் கையிலிருந்த இவளது கண்ணை கட்டியிருந்த துணியை வைத்து அவன் தான் கட்டை அவிழ்த்து விட்டவன் என ஊகித்தாள். இவன் இங்கிருக்கிறான், அவனுக்கு உத்தரவிட்ட அந்த பெண் என சாரு திரும்ப, அந்த பக்கமாய் கதிரை இருப்பது அமர்வதற்கல்ல படுப்பதற்கு தானே என்றது போல் அவள் சரிந்து படுத்திருந்தாள். ஒருவேளை அமர்ந்தால் கதிரை தாங்காதோ என சாருவின் மனம் அந்த தருணத்திலும் யோசித்து விட சட்டென எண்ண ஓட்டத்தை அடக்கிக்கொண்டு "நீங்க யாரு.." என்றாள் பின்னால் கட்டப்பட்டிருந்த கைகளை விடுவிக்க முயன்றபடியே.

சாருவிற்கு பயமாய் தான் இருந்தது சொல்லப்போனால் அந்த இடம், அவள் பக்கத்தில் நின்றிருந்த அவன், கதிரையில் அமர்ந்திருந்த அந்த பெண் என அனைத்தையும் ஒரே பார்வையில் பார்த்தால் திக் என்றிருந்தது. ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது அதுதான் அவர்களால் அவளுக்கு தீங்கு இருக்கப்போவதில்லை என்று. அப்படி நினைத்திருந்தால் அவளை கடத்திய போதே எதாவது செய்திருக்கலாம் அல்லவா. இந்த பாயின்ட் மட்டும் அப்போதைக்கு அவளை இலகுவாய் மூச்சு விட செய்தது.

"இந்தாம்மா.. சும்மா நய்யி நய்யின்னு பேசிட்டு இருக்காதே.. ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்காதே.. சமத்தா இருந்தன்னா நல்லது.." முன்னெச்சரிக்கை என்பது போல் ராஜம்மாள் கூற தான் எண்ணியது தவறோ என இலேசாக பயம் எட்டி பார்த்தது. மெல்ல சுற்றியும் பார்த்தாள்.. ஒரே ஒரு கதவு தான் இருந்தது தப்பிக்க வேண்டும் என்றால் அது ஒன்று தான் வழி..

சட்டென அவள் எண்ண ஓட்டத்தை தடுத்தாள் ராஜம்மாள்..

"சாரு அதான உன் பேரு.. நல்லா கேட்டுக்கோ.. எதாச்சு தப்பிக்கனும்னு ஏடாகூடமா பன்னி வக்காத.. அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்.. அப்படியே நீ இங்க இருந்து வெளில போனாலும் சுத்தியும் காடு தான்.. நீயா போய் மாட்டி சாக மாட்டன்னு நம்புறேன்..டேய் மொதல்ல..அதுக்கு எதாச்சு சாப்பிட எடுத்து வாங்கடா.. இல்லனா அதுக்கும் எனக்கு தான் விழும்.." சாருவிடம் தொடங்கி பக்கத்திலிருந்தவனிடம் அதே கோபத்தோடே முடித்தாள் ராஜம்மாள்.

ஏதோ தட்டில் மூடியவாரு அவன் கொண்டு வந்து வைத்து விட்டு பக்கத்திலே தலைகீழாய் தான் நிற்பேன் என நின்றிருந்த குவளையை மறுபக்கம் நேராய் திருப்பி அதன் தாகம் தீர்க்க அளவுக்கு அதிகமாகவே தண்ணீரையும் நிரப்பினான். உணவை கண்டதும் தான் பசி என்ற ஒன்றையே மறந்திருந்த மூளையின் செல்கள் இப்போ சாப்பிடு உத்தரவாய் அவளை தட்டி எழுப்பியது. சாரு குழப்பமாய் அவனை பார்த்து விட்டு கட்டியிருந்த கைகளை பார்க்க அவனுக்கு என்ன தோன்றியதோ கண்கள் மின்ன..

"பாப்பா நான் ஊட்டி விடறேன்.." என்றான்.

அவன் அத்தனை பற்களும் தெரிய இளித்து வைத்ததே இன்னும் மூன்று மாதத்திற்கு சாருவின் கனவில் வந்து பயமுறுத்தும் போல.. இவள் பேச முன்னே..பேசியவன் கன்னத்தை பிடித்துக்கொண்டு இரண்டடி தள்ளி விழுந்திருந்தான்.

"அறிவு இருக்காடா.. என்னையும் சேர்த்து இழுத்து விட்றாத.. இந்த பொண்ணு மேல உன் விரல் கூட பட்டிச்சி அப்புறம் இருக்கு.. அவன பத்தி தெரியும்ல உனக்கு.. வந்துட்டானாம் ஊட்டி விட.." ராஜம்மாள் கர்ஜித்து விட்டு அவன் பக்கமிருந்து சாரு பக்கம் திரும்பி அவள் கைகட்டை அவிழ்த்து விட்டாள்.

சாருவிற்கு மீண்டும் அந்த பாயின்ட் உறுதியாய் புரிந்தது, அதாவது அவளுக்கு தீங்கு என ஒன்றும் இங்கே நடக்கப்போவதில்லை அவள் கூறிய அந்த அவன் வரும் வரை. வந்த பின் அவனால் ? இந்த அவன் யாரென புரியவில்லை மூளையை கேள்விகளால் குடைந்தால்.. பலனாக சட்டென அவன் யாரென புரிந்தது. சக்தி.. அவன் தானே இவளுக்கு இருக்கும்.. இல்லை அவனுக்கு இருக்கும் எதிரி இவள்.. அதுதான் கடத்த சொல்லியிருப்பானோ.. எத்தனை கதைகள் கேள்விபட்டிருக்கிறாள். கொலை செய்து விட்டு காட்டில் புதைத்து விட்டு கேசை மூடி விடுவார்கள் பணம் கொடுத்து. பின் கேட்பார் பார்பார் இன்றி அனாதையாகவே மண்ணுக்கு இரையாகி விடும் அந்த உடல். சாருவிற்கு தன் பெற்றோரை நினைத்து கண்கள் கலங்கியது.. பார்க்காமலே சாக போகிறோமா என்று..
____________________________________________

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 30 ❤

❤காற்றில் எந்தன்
கைகள் இரண்டும்
உன்னையன்றி
யாரைத் தேடும்..
விலகிப்போகாதே
தொலைந்து
போவேனே நான்..❤

இன்று...

அன்றுடன் எல்லாம் நடந்து முடிந்து ஒன்றரை மாதங்கள் கடந்திருந்தது. ஆனால் சாருவிற்கு இரவும் பகலும் ஒன்றாய் தான் இருந்தது. விடிவதும் தெரியாது பொழுது சாய்வதும் தெரியாது. சரியான நேரத்திற்கு சாப்பாடு வரும். அந்த நான்கு சுவர் மட்டும் நான்கு முறை மாறியிருந்தது. அதாவது அவளை இடம் மாற்றி இருந்தார்கள். அப்போதாவது தப்பித்துவிடலாம் என பார்ப்பாள் ஆனால் இவள் அருகிலே இவளை நசுக்கியவண்ணம் கூடவே வருவாள் அந்த ராஜம்மாள். அதுபோதாது என நான்கு பக்கம் நான்கு அடியாட்கள் வேறு. அதையும் மீறி ஒரு முறை தூரத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை காணவும் வெடுக்கென இவள் ஓட பிடிக்க வந்த ராஜம்மாளும் விழுந்து மூக்கை உடைத்துக்கொண்டாள். ஆனால் சாருவை பிடித்து விட்டாள். மூக்கு உடைந்த கோபத்தின் பலனாய் சாருவின் இடது கையை அலங்கரித்தது கிட்டத்தட்ட ஆறு இன்ச் நீளத்திற்கு சூட்டுக்கோல். துடித்தாள் ஆனால் வலியை காட்டாமல் பல்லைக்கடித்துக்கொண்டாள். ராஜம்மாளுக்கோ குதூகலம். இருந்த கோபம் எல்லாம் காட்ட முடியாமல் இருக்க இன்று வேலுவே செய் என்றதும் சந்தோஷம் இருமடங்கு பொங்கியது.

காயம் ஆறி வர அவ்வப்போது வந்து அதற்கு மிளகாய் பொடி போட்டு இரசிப்பாள் அந்த அரக்கி. சாரு வாய்விட்டு அலறுவது கண்ணிற்கு குளிர்ச்சியாம். இப்போதோ சாருவிற்க்கு இது சக்தியாக இருக்காது என்ற எண்ணம் ஓங்கியிருந்தது காரணம் அவன் என்னதான் கோபக்காரனாக இருந்தாலும் பெண்களை மதிப்பவன். அப்படியே கடத்தியிருந்தாலும் இவளுக்கு தீக்காயம் வைக்க சொல்லும் கயவன் அல்ல என்பதை அவள் அறிவாள். இந்த இருட்டறைக்குள்ளே வாழ்வு மடிந்து விடுமோ என கண்ணீர் அன்றும் என்றும் போல இவளுக்கு ஆறுதலாய் கதை பேச.. இவள் நினைத்தது தவறு என ராஜம்மாள் கையில் ஒரு புடவையுடன் வந்து நின்றாள்.

"இந்தா இத கட்டிக்கோ.." சாருவின் முகத்தில் எரிந்தாள்.

பதிலுக்கு முடியாது என அவள் முகத்திலே விட்டெறிய கை துடித்தது. ஆனால் மறு கையில் நேற்று மிளகாய் பொடி வைத்தியம் வாங்கியிருந்த காயம் வாய் மூடச்செய்தது. ஒன்றும் பேசாமல் இவள் வாங்கிக்கொள்ள..

"ஹாஹா என்ன புடவை எல்லாம்னு பார்க்குறயா.. இன்னைக்கு உனக்கும் எங்க சார்ருக்கும் கல்யாணம்.." ஆடாமல் அசையாமல் குண்டை தூக்கி தலையில் வைத்தாள் ராஜம்மாள்.

சாருவின் நினைவிலேயே தன் காலம் கடத்திய சக்தி இப்போதோ முழுவதுமாய் மாறிப்போயிருந்தான். அவள் காதல் தன்னை மாற்றும் என சிந்தித்து இருந்தவனுக்கோ இப்போது தான் புரிந்தது மாற்றியது அவள் மீது தான் கொண்ட காதலும் அவள் பிரிவும் தான் என்று. கோபம் என்பது இல்லாதே போயிருக்க இப்போதெல்லாம் அனைவரிடமும் மென்மையாய் பழகிட அனைவரும் அவன் கண்ணில் சுமந்து திரியும் வலி கண்டு இவன் பழைய சக்தியாகவே இருந்திருக்கலாம் என சிந்திக்கத்தூண்டியது.

சாருவை பற்றி அவள் குடும்பத்திற்கு இதுவரை யாரும் சொல்லவில்லை. இப்படியிருக்க அவர்கள் தவித்து விடுவார்கள் என சாருவினால் இப்போது தொடர்பு கொள்ள முடியாத நிலை என்று மட்டும் கூறியிருந்தான் சக்தி. சாருவின் விபத்திற்கு காரணம் அந்த பாதையின் சிக்னலில் ஏற்பட்ட தவறு தான் எனவும் கண்டறிந்தவன் அதற்கு யார் காரணம் என சிந்திக்க சமுகத்தில் ஒவ்வொருவருமே தான் காரணம். இதை பற்றி யாரவது ஒருவர் உரிய இடத்திற்கு அறிவித்திருந்தாலுமே இந்த விபத்தை தடுத்து இன்று தன்னோடு தன்னவள் இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. சமுகத்தின் இழப்புக்களுக்கு முதல் காரணம் இதுதான். தான் ஏன் செய்ய வேண்டும் வேறு யாரும் செய்வார்கள் என்ற எண்ணம் தான் இப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் இதனை செய்திட இன்னொருவர் முளைப்பது தான் ஏது.

இதிலிருந்து கொஞ்சமாய் அவன் மீண்டதும் செய்த முதல் வேலை வீதியில் அந்த சிக்னலை சரிசெய்து அந்த பள்ளத்திற்கு உரிய முறையில் காவலிட்டது தான். இது போல் இருந்த அனைத்து இடத்திற்கும் செய்து கொண்டிருந்தான்.

வினோத் ரம்யா இருக்கும் இடம் தேடி தேடி ஓய்ந்து தான் போயிருந்தான். அவள் பற்றி ஒரு விடயம் கூட அவனால் கண்டறிய முடியவில்லை. இவ்வாறே நாட்கள் கழிய அன்றும் விடிந்தது என்றும் போல் அவள் நினைவுகளுடனே இருவருக்கும்..

வழமை போல் கம்பனி வந்த சக்தி தன் அறைக்கு சென்று அன்றைய அலுவல்களைப்பார்க்க ஆரம்பித்து ஒரு பைலில் அன்றைய திகதியை இட்டவன் கைகள் தானாகவே நின்றது..இன்றோடு ஆறுமாதங்கள்... எண்ணங்கள் பின்னோக்கிப்பாய்ந்தது அன்று அவன் சாருவுடன் கதைத்த இறுதித்துளிகளை நோக்கி...

மேசையில் ஏறி அமர்ந்த சக்தி ஒரு காலை தூக்கி அவள் அமர்ந்திருந்த கதிரையின் கைப்பிடியில் வைக்க கண்விரித்துப்பார்த்த சாரு..பின் மூக்கை சுருக்கிக்கொண்டு.."சார் கால கீழ போடுங்க.. சாக்ஸ் கழுவவே இல்லையா.." என்று கேட்க..அவனோ பலமாக சிரித்தான். பல்வரிசை தெரிய மனம்விட்டு சிரித்தவனை அவள் வியந்து நோக்க..சாருவைப்பார்த்து என்ன என்றான் சக்தி.

"இல்ல சார் நீங்க சிரிக்கும் போது ரொம்பவே அழகா இருக்கீங்க.." என்றாள் இரசித்து..

"ஹம் நான் இப்படியே அப்போ சிரிச்சிட்டே இருக்கனுமா? " அவன் யோசனையாய் இழுக்க அவசர அவசரமாக தலையை ஆட்டினாள் சாரு.

"அப்போ நீ தான் முடிவு பன்னனும்." அவன் கூறவும் " நான்னா?...நான் என்ன பன்னனும்?" அவள் அழகாய் நெற்றியை சுருக்கி வினவ..அவளை நெருங்கி வந்த சக்தி.."வாழ்க்க பூரா என்னோட இருக்கனும் நீ.." என்றான்.

அவள் குழப்பமாய் பார்க்க அவளிற்கு எப்படியும் புரிந்திருக்காது என கண்டு கொண்டவன்.."கல்யாணம் பன்னிக்கனும் என்னை.." என்றான் நேரடியாக..ஐயோ சார் என பெரிதாய் வியந்து அவள் வாயில் கை வைக்க..அவள் உங்களைப்போய் நான் எப்படி சார் என கூறுவாள் என்று எண்ணியவன் அதற்கான விளக்கமும் தயார் செய்து வைத்து அவள் பதிலுக்காய் காத்திருந்தான்.

ஆனால் அவளோ.."சார் எனக்கு இப்போ தான் பதினெட்டு வயசாகுது..அதெல்லாம் முடியாது போங்க.."எனவும் அவள் பதிலில் அவள் வெகுளித்தனத்தை வெகுவாக இரசித்தவன்.."பரவாயில்ல எனக்கு உனக்கும் சேர்த்து வயசிருக்கு.. எனக்கு இருபத்தைந்து..." கண்விரித்துப்பார்த்தாள் சாரு.

"சார் சார்.." வினோதின் அழைப்பில் நிகழ்காலத்திற்கு வந்தவன்.."ஆஹ் வினோ சொல்லு.." என்றான்.

"சாரி சார்..பெர்மிஷன் கேட்டேன் பதில் இல்ல.. அதுதான் உள்ள வந்தன்."

"இட்ஸ் ஓகே வினோ.. சார் எல்லாம் வேணாம் சக்தின்னே கூப்பிடு.."

"ஓகே ஆனா கம்பனில.." அவன் இழுக்கவும்..

அவனைப்பார்த்து புன்னகைத்தவன்.."இங்கயும் நான் தான் வெளிலயும் நான் தான் வினோ.." பதிலுக்கு அவனும் புன்னகைத்துக்கொண்டே..
"ஓகே சக்தி நீ கேட்டல்ல **** அங்க போறதுக்கும் அப்புறம் ரிட்டர்ன் டிக்கட் இரண்டும் இதுல இருக்கு.." அவன் ஒரு கவரை நீட்ட வாங்கி மேசையில் வைத்தான் சக்தி.

"சக்தி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டல்ல.." வினோ இழுக்க..பதிலுக்கு சக்தி இல்லை என தலையாட்டினான்..." எதுக்கு **** போகனும் என்று..." அவன் ஆரம்பிக்கும் போதே.."வினோ.. தெரியல்ல அங்க போகனும்ன்னு மனசு சொல்லுது.. இயற்கை நிறைஞ்ச இடம் மனசுக்கு இலேசா இருக்கும் வினோ.." வலி கலந்திருந்த அவன் பேச்சில் ஆறுதலும் என்ன சொல்வதென்று புரியாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு வெளியேறினான் வினோத்.

நேரே வினோதை தேடிக்கொண்டு வந்த ராஜேஷ், "வினோ ரம்யா விஷயத்துல ஒரு க்ளூ கிடைச்சிருக்கு.." அவன் கூறவும் பதிலுக்கு என்ன என்று கூட கேட்க தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான்.

ராஜேஷே தொடர.." ஆமா வினோ.. அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்தவங்க லிஸ்ட்ல அங்க நமக்கிட்ட பார்த்தவங்க சொன்னமாதிரி வயசு ஐம்பது அறுபதுக்கு இடையில அந்த நேரத்த வச்சி பார்த்தா அங்க இருந்தவங்க மொத்தம் பத்து பேரு.ஆனா அவங்க பத்து பேரோட பேர கூட சொல்ல முடியாது சொல்லிட்டாங்க ப்ரைவஸி இஷ்ஷு ஆகும்னு.."

அவன் மேலும் கூற ஆரம்பிக்க முன்னே.."டேய் வண்டிய எடு.." வினோத் நடக்க அவனை பிடித்து நிறுத்தினாள் வினிதா.

"டேய் இருடா.. அப்புறம் கெஞ்சி ஒருமாதிரியா ஒரு வாரம் அங்கயே போய் தொல்ல பன்னதுல என் ப்ரன்டு அங்க தான நர்ஸ்ஸா இருக்கா.. தொல்லை தாங்க முடியாம கொடுத்துட்டா.. இதோ இருக்கு..லிஸ்ட்.." வினிதா அதை கொடுக்கும் முன்னே பிடுங்கி எடுத்திருந்தான் வினோத்.

கண்கள் அனைத்து பெயர்களையும் அட்ரஸ்களையும் ஒரே பார்வையில் பார்த்து மீண்டது. அனைத்தும் அங்கிருந்து இரண்டு மணி நேர பயண எல்லைக்குள் தான் அமைந்திருந்தது.

"ராஜேஷ்..நீ இந்த பர்ஸ்ட் மூணு அட்ரஸ்க்கு போ..வினிதா நீ இந்த இரண்டாவது மூணு.. நான் இந்த நாலு அட்ரஸ்க்கும் போறேன்..போனதுமே நாங்க யாரையும் தேடி வந்தது போல காட்டிக்க வேணாம். லைக் ப்ராடக்ட் அட்வடைஸ்.. ஹ்ம்.. நம்ம கம்பனி சார்பா போறது போல.. ஏன்னா ரம்யாவ எப்படி அங்க வச்சிருப்பாங்க நம்மளுக்கு தெரியாதுல.. ஓகே கம் ஆன்.." படபட என கூறிவிட்டு அவன் லிஸ்ட்டுன் நகர..

"டேய் ஒரு லிஸ்ட் தான் இருக்கு.." என்றான் ராஜேஷ்.

"க்ரூப்ல போட்டோ போடுறன்.." காற்றோடே தேய்ந்து மறைந்தது அவன் குரல்.

அடுத்து நகர்ந்த நான்கு மணி நேரத்திலும் வினோதிற்கு மற்றைய இருவரிடமும் வந்த பதில் இல்லை என்பது தான். இவனும் இரண்டு வீடுகளுக்கு சென்றிருந்தான். எஞ்சியிருந்தது இன்னும் இரண்டு வீடுகள். மனம் அதில் ஒன்றாக இருக்க வேண்டும் என அமைதியாய் கண்ணீர் விட.. அந்த அட்ரசை மனதில் குறித்துக்கொண்டு பைக்கில் ஏறினான் வினோத்.

சென்ற வீடுகளில் சந்தேகம் கொள்ளும் வகையில் எந்த வீடும் மூடியிருக்கவில்லை. சென்று கம்பனி பற்றிய பேச்சை கொடுத்து அந்த வீட்டு மனிதர்கள் பற்றி அறிந்த பின், மெதுவாக ஆக்சிடன் ஹாஸ்பிடல் ரம்யா என கோர்த்தவாறே தான் ஒவ்வொன்றாய் தொடர்ந்தனர். அனைவரும் அன்று ஹாஸ்பிடல் சென்றதாக கூறினர் ஆனால் இவர்கள் கேட்டதற்கு பதில் எங்கு தேடியும் ஓட்டைகளை நிறைக்க முடியுமாய் இருக்கவில்லை.

கடைசி நம்பிக்கையென அந்த எஞ்சியிருந்த இரு முகவரிகளும் தான் இருந்தன. அடுத்த அரைமணிநேரத்தில் அந்த முகவரி கொண்ட வீட்டின் முன் பைக்கை நிறுத்தியிருந்தான் வினோத்.

கேட் அருகில் காவலுக்கென யாரும் இருப்பதாக தெரியவில்லை. மெதுவாக திறந்து உள்ளே நுழைந்தவன் சிறியதாக இருந்த நடைபாதையை கடந்து கதவருகில் சென்றான். கதவு திறந்தே இருக்க ஆனால் யாரும் இருக்கவில்லை.
மெதுவாய் கதவை தட்டினான், பதில் இல்லை. மீண்டும் தட்ட..

"யாரு வேணும்..?" என்றவாரு உள்ளே இருந்து ஒருவன் வர அவன் பக்கம் திரும்பிய வினோதின் பார்வை அவனையும் தாண்டி அவன் பின்னால் சுவரில் இருந்த புகைப்பட ப்ரேமில் சென்று நிலைத்தது.
____________________________________________

கருத்துக்களை பகிர

 
Status
Not open for further replies.
Top