All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீராவின் ‘மாயம் செய்தாயோ’ - கதை திரி

Status
Not open for further replies.

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 22 ❤

❤ நீளாதோ நிமிடங்கள்
ஏங்கிடும் ஓசை என்னுள்..
நீண்டாலும் உன்னால்
உறையாதோ கணங்கள்..
நான் உன் விழியில்
தொலைவதும்..
நீ என் அருகில்
மறைவதும்..
தொடர் மாயமா இது..❤

சக்திக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு வாரத்திற்கு முன் யாராவது வந்து இந்த காதல் உன்னை இந்த பாடு படுத்தும் என கூறியிருந்தால் வாட் த ஹெல் என கடுகடுத்துவிட்டு சென்றிருப்பான். ஆனால் இப்பொழுதோ நிலைமையே வேறு.. சாரு அறையில் இருந்து சென்று ஒரு மணிநேரம் கூட கடந்திடா நிலையில் அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என இதயம் அடித்துக்கொண்டே இருந்தது.
தான் நினைத்தால் முடியும் தான் எழுந்து அவள் இருக்கும் இடமே சென்று பார்த்து விடலாம். ஆனால் இது எதுவும் அவனிற்கு பழக்கம் இல்லையே. காலை ஆபிஸ் அறைக்குள் வந்தால் மாலை தான் வெளியில் வருபவன்.. மதிய நேர உணவு கூட அறைக்கு தான் வரும். தனக்கு அன்று இனித்த தனிமை இன்று வதைத்துக்கொண்டிருந்தது அவனை. இதற்கு மேல் முடியாது என எழுந்து கொண்டான். எழுந்து அறையை திறந்தவன் முன் அழையாமளே வந்து நின்றிருந்தான் டேவிட்.

"இவன் ஒருத்தன் கூப்பிட்டா வர மாட்டான் கூப்பிடாத நேரம் வந்து நின்னுட்டு இருக்கது..." முணுமுணுத்துக்கொண்டு சக்தி கஷ்டப்பட்டு அவனிடம் ஒரு புன்னகையை அளித்துவிட்டு சுற்றுக்கொண்டு நகர முயல

"சார் சார்..நீங்க எங்க போறீங்க..எதுக்கு நான் இருக்கன்.. சொல்லுங்க என்ன வேணும்.." டேவிட் கதவில் கையை வைத்து அவன் வழியை மறைத்து அவனை இந்த நேரம் வெளியே விடுவது என்னவோ பாவம் என்ற வகையில் முகத்தை சீரியசாக வைத்து நின்றிருந்தான்.

"இல்ல டேவிட் நான் பார்த்துக்குறேன்.." சக்தி மீண்டும் முன்னே செல்ல நகர டேவிட் விடுவதாக இல்லை. கோபம் வந்தாலும் எதை சொல்லி காட்டுவது என பொறுமையாய் அவனை பார்த்து.."போய் ப்ரைட் ரைஸ் வாங்கிட்டு வாங்க.. அதுவும் இப்போவே எல்லாம் கட் பன்னி இப்போவே பன்னி ப்ரஷ்ஷா வேணும் அன்ட் சூடா இருக்கனும்.." சக்தி கூற டேவிட்டும் தலையை ஆட்டி விட்டு நகர்ந்தான்.

உப்.. பெருமூச்சோடு சக்தி சாரு இருந்த இடம் நோக்கி நடந்தான். இவன் சாரு அருகில் சென்று நிற்க அதை கூட கவனிக்காது வெகு தீவிரமாக தன் நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

அங்கு சாருவை தவிர யாருமில்லாததை நோட்டமிட்ட வண்ணம் அவள் பின்னால் சென்று குனிந்து காதருகில் இருந்த முடியை ஊதிவிட திடுக்கிட்டு திரும்பியவள் சுதாரிக்க முன் அவளது நோட்டை எடுத்திருந்தான் சக்தி.

இதை சற்றும் எதிர்பாராத சாரு..

"சார் சார் அதை கொடுங்க..அத எதுக்கு எடுத்தீங்க நீங்க.. இங்க கொடுங்க சார்.." அவனிடம் இருந்து பிடுங்க முயன்றாள்.

சக்திக்கு அவளது பதட்டத்தை பார்த்தவுடன் ஆர்வம் மேலோங்க.. "ஹே இரு இரு.. நான் சும்மா தான் பர்ஸ்ட் இதை எடுத்தேன்.. உன் பதட்டத்த பார்த்தா இதுல ரொம்ப முக்கியமா எதுவோ இருக்கும் போலவே.." என அவளுக்கு எட்டாதவாறு அதனை உயர பிடித்தவண்ணம் பார்த்தான்.

அது அவளது டயரி என புரிய என்ன எழுதி இருப்பாள் என ஆர்வமாய் அதன் பக்கங்களை திருப்பினான் சக்தி.

"சார் அடுத்தவங்க எழுதினத இப்படி படிக்கிறது தப்பு..கொடுங்க அதை.." கோபமாய் சாரு கூற சக்திக்கோ அவளது கோபம் சீறும் குட்டிப்பூனை போல் தெரிந்தது.

"அது உனக்கு தெரியாம படிச்சாதான் தப்பு நீ இருக்கப்போ படிக்கலாம்.." தாள்களை திருப்புவதில் மும்முரமாய் இருந்தான் சக்தி.

அவன், அவள் கடைசியாய் எழுதியிருந்த பக்கத்தை அணுகுவதை உணர்ந்த சாரு..சட்டென அங்கிருந்த கதிரை மேல் ஏறி அவனிடம் இருந்து டயரியை பிடுங்க முயல சக்தி சுதாரித்து பின்னகர இதை எதிர்பார்க்காத சாரு தடுமாறி அவன் மேலே சரிந்தாள்.

நல்ல வேளை கீழே விழுந்த சக்திக்கு அடி ஏதும் பெரிதாக இல்லை என அவனை முதலில் அவசரமாய் ஆராய்ந்தன சாருவின் கண்கள். அவனை பார்த்து விட்டு அவன் கண்களை சந்தித்தவளுக்கு அங்கு தெரிந்த மாறுதல் எதையோ உணர்த்த விழித்துக்கொண்டே குனிந்து பார்த்தாள். அப்போதுதான் புரிந்தது அவள் சக்தியின் மேல் இருப்பது.

இவள் சட்டென விலக முயன்றிட அதை அனுமதிக்காதவண்ணம் அவளை சுற்றி ஒருகையை போட்டு தன்னுடன் இறுக்கியவாரு மறுகையால் மீண்டும் அவன் டயரியை திருப்பினான்.

"சார் கொடுங்க சார் அதை.." தான் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து மீண்டும் அவள் அவனிடம் இருந்து அதனை எடுக்க முயல..அவளை அணைத்திருந்த கையால் அவளது இருகைகளையும் அவளது தலைக்கு மேலாக வைத்து தன் ஒரு கையால் சிறைபிடித்தான் சக்தி. இதை சற்றும் எதிர்பார்க்காத சாரு எழவும் முடியாமல் டயரியை எடுக்கவும் முடியாமல் தடுமாற அதற்கு மேலாக சக்தி மிகவும் நெருக்கமாக அணைத்திருப்பது வேறு ஒரு வித உணர்வில் அவளை தவிக்க விட்டது.

அவளது தவிப்பை உணர்ந்த சக்தி மேலும் தன் பிடியை இறுக்கிக்கொண்டு டயரியை திருப்பி அவள் எழுதிக்கொண்டிருந்த பக்கத்தில் நிறுத்தினான். அவளை ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு அவன் அதை வாசிக்க ஆரம்பிக்க.. சாருவோ முகத்தை வலது பக்கமாய் திருப்பி இனி செய்ய எதுவும் இல்லையே வாசிச்சிட்டு திட்ட போறான் என பேசாமலே இருந்தாள்.

"ஏய் சிட்டு இங்க பாரேன் அந்த சிடுமூஞ்சி அதான் உன்ட சொல்லிருக்கேனே என்னோட சார் சக்தி..அவன் என்ன பன்னான் தெரில..நேத்து மேல போயிருந்தப்போ.." என ஆரம்பித்து நேற்றைய நிகழ்வை சுருக்கமாய் எழுதி அதன் கீழே..

"அதில இருந்து கன்னத்துல குறு குறுன்னே இருக்கு..அது மட்டுமில்ல சிட்டு இப்போ எல்லாம் அவன பார்க்குறப்போ கிட்ட இருக்கப்போ கூட என்ன என்னமோ பன்னுது எனக்கு.. என்னன்னு தெரியலயே.. அடுத்தவாட்டி அப்படி கிட்ட வரட்டும் திரும்ப நானும் அவன் பன்ன மாதிரியே பன்னிருவன் பாரு..அப்போதான் அவனுக்கும் இதெல்லாம் புரியும்..அப்புறம்.." அந்த அப்புறமிற்கு பிறகு பேனா மை இலக்கின்றி கோடாக நீட்டியிருந்தது. தான் பிடுங்கியதால் தான் என எண்ணிக்கொண்டு அவள் எழுதியிருந்ததில் முகத்தில் இருந்த புன்னகை பெரிதாக விரிய டயரியை மூடி அருகில் வைத்தவன்..

"மதி.." என்று மென்மையாய் அழைக்க திடுக்கிட்டு திரும்பி அவனை பார்த்தாள் சாரு.

"நீ பாவம் தான்.. சரி எனக்கும் அப்படியே செஞ்சிரு..அப்போ சரி ஆகிடும்ல.. " அவன் பேச அவன் பார்வையில் முகம் சிவக்க..

"சார் என்ன விடுங்க சார் மொதல்ல..யாராவது பார்த்துட போறாங்க.." அவனை பட்டென தள்ளி விட்டு அவள் எழ முயலவும், விடாது மீண்டும் அவளை அருகே இழுத்து அவளது இருகன்னத்திலும் அழுத்தமாய் இதழ் பதித்துவிட்டு அவளை நகர்த்திவிட்டு அவனும் எழ எதுவோ அவளிடம் இருந்து விடுபட்டது போல் இருந்தது.

குனிந்து பார்க்க அவளது செய்ன் அவனது ஷர்ட் பட்டனில் தொங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்து விட்டு அவன் நிமிர, சாருவோ அதை எடுப்பதற்கு அங்கு இல்லை. வேகமாக கன்டீன் பக்கம் நடந்து கொண்டிருந்தாள்.

சக்தி ஒரு வித மாயபுன்னகையுடன் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்தவண்ணம் விசிலடித்துக்கொண்டே தன் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தான். அறை கதவை திறந்து அவன் உள்ளே நுழைய போகவும் உள்ளே இருந்து வேகமாய் வந்து மோதி நின்றான் டேவிட்.

சக்தி வழமை போல வாட் த ஹெல் என காதை கடிப்பானே என பயந்தவண்ணம் டேவிட் நிமிர்ந்து பார்க்க..சக்தியோ மேலே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். டேவிடும் மேலே பார்க்க அங்கு அவனுக்கு தெரிவது போல் எதுவும் இல்லை.

"சார்..சார்.." டேவிட் அவனை உலுக்கவும் நினைவிற்கு வந்தவன் டேவிட்டை பார்த்து விட்டு அவன் கையில் இருந்த ஹாட் ப்ளேட்டை கேள்வியாய் நோக்கினான்.

"அது சார் நீங்க தான சூடா இருக்கனும் சொன்னீங்க அதான் இதை இங்க வச்சி நீங்க வரும் வரை சூடாக்கிட்டே இருக்கலாம்னு.." டேவிட் பெருமையாய் விளக்க சக்தி அவனை உணர்வற்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளுக்கு கொஞ்சம் தெளிவு வரவும் இங்க இருக்க மத்ததுக்கு எல்லாம் மங்கிருச்சி போல எண்ணியவண்ணம்
"டேவிட் புட் வோர்மர் (food warmer) எதுக்கு இருக்கு..?" மெதுவாய் சக்தி கேட்க.. வாயை திறந்து அப்போதுதான் அதனை ஜீரணித்த டேவிட்.. "சார்.."என்றான் இளிப்புடனே.

சக்தி அங்கிருந்து நகரபோக.."சார் செயின்.." என்றான் டேவிட் அவன் பட்டனில் இருந்த சாருவின் செயினை சுட்டிக்காட்டி.

"ஆஹ்..யெஸ் செயின்..ஆமா என்னோடது.." என்று தடுமாறியவண்ணம் கூறிவிட்டு சக்தி நகர.. "ஹார்ட் வந்த செயின் எல்லாம் சார் போடுவாரா..என்ன இது.." என குழப்பமாய் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

"டேவிட் டேவிட்.." அவன் பெயரை கூவிக்கொண்டே மூச்சிறைக்க அங்கு வந்து நின்றான் வினோத்.

"என்ன வினோத்.. யாருக்கு என்ன ஆச்சு.."டேவிட் அவன் அவசரத்தை பார்த்து பதற..

"அய்யோ யாருக்கும் ஒன்னும் ஆகல..ரம்யா எங்க.." என்றான்.

"ஓஹ்..ரம்யா..ம்ம் கன்டீன் போனாங்க நினைக்கிறேன்.."அவன் கூறி முடிவதற்குள்ளே அந்த திசையில் மீண்டும் ஓட ஆரம்பித்திருந்தான் வினோத்.

"இவனுக்கு என்ன ஆச்சி.." யோசித்து விட்டு நகர்ந்தான் டேவிட்.

மாலை நேரம் நான்கை தொட்டுக்கொண்டிக்க அறையில் இருந்து வந்தவன் அங்கு ரம்யாவை காணவும்.."ரம்யா மெடீரியல் எடுக்க யாரு போனாங்க.." கேட்கவும்..

"எருமையே நீ மாட்ன..நீ பாஸ்ட்ட சொல்லலல.. எனக்கு தெரியாது.. வாங்கி கட்டிக்கோ.." வினிதா பின்னிருந்து ரம்யாவின் காதில் முணுமுணுக்க..சிறு பயத்துடனே..

"சார் அவங்களை கன்டக்ட் பன்னப்போ இன்னைக்கி வர வேணாம் நாளைக்கு வர சொன்னாங்க.." என்றாள்.

"ஆஹ் ஓகே.." சக்தி நகர்ந்துவிடவும் ஆச்சரியமாய் பார்த்திருந்தனர் ரம்யாவும் வினிதாவும்.

"என்னடி உன்ன திட்டவே இல்ல.." வினிதா கேட்க..

"உனக்கு என்ன ஆர்வம்டி அப்படி..ச்சீ பே.." கூறிவிட்டு ரம்யா திரும்ப

"கண்ணாமூச்சி முடிஞ்சதா ?" வினோத் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவண்ணம் ரம்யாவின் எதிரே நின்றிருந்தான்.

சாருவை இன்று தானே வீட்டிற்கு அழைத்துவருவதாக தானாகவே வந்து கூறிய மகனை நல்லாதான் இருக்கானா என மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு சிவா செல்ல.. சக்தி சாரு இருக்கும் இடம் நோக்கி வந்தான்.

சாருவின் இருக்கை காலியாக இருக்க எங்கே என சக்தி தேட அங்கு அவள் மேசைக்கு அடியில் படுத்திருப்பதை பார்த்தவன். குழப்பமாய் மேசைக்கு மற்றைய பக்கம் சென்று குனிந்து பார்க்க..அந்த நேரம் அங்கு சக்தியை அதுவும் அவ்வளவு நெருக்கமாய் எதிர்பார்க்காத சாரு அலறிவிட்டாள்.

அனைவரது பார்வையும் அங்கே நோக்க சட்டென சுதாரித்து சக்தி நிமிர சாருவும் எழுந்து நின்றாள்.

"எதுக்கு இங்க படுத்திருக்க டேமிட்.." அவள் அலறியதில் அனைவரும் திரும்பியதில் சற்றே வழமை போல் கோபம் எட்டி பார்த்தது சக்திக்கு.

"ஏது படுத்திருக்கேனா..ஆமா எனக்கு தூக்கம் வருது அதுதான் படுத்திருக்கேன்..சார் என் மாலைய தேடிட்டு இருக்கேன்..எங்க அம்மாவோடது.." என்றாள் அழுகுரலில் சாரு.

"சரி அது எங்கவாது இருக்கும்..எனக்கு லேட் ஆகுது வா போகலாம்.." சக்தி திரும்பி நடக்க முயல..

"அது இல்லாம நான் வர மாட்டேன்..சாப்பிட்ட இடத்தில இருக்கும்.." அவள் திரும்பி நடக்க..

"அது என்கிட்ட தான் இருக்கு..வா.." கூறிவிட்டு விடு விடு என அங்கிருந்து சென்று விட்டான் அவன்.

____________________________________________

கருத்துக்களை பகிர

 

Meerashalini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்தாயோ ❤ 23 ❤

❤ என் நெஞ்ச வானில்
வானவில் தருபவன்
நீயோ..
மயக்கம் கலந்திட
தயக்கம் பாதியென..
மறைகிறேனடா நான்
உன் பார்வையில்
மாயமாய்..❤

அவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னே மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தாள் சாரு.

"சார் சார் அடுத்தவங்க பொருள திருடுரது தப்பு தெரியாதா..உங்களுக்கு யாரும் சொல்லி தரலயா.."

அவளது கேள்விக்கான பதில் தான் அவனிடம் இருந்து வரவில்லை. அவளும் இது எதிர்பார்த்தது தான்.

கோபமாய் அவனை தாண்டி ஓடி வந்து அவன் வழியை மறைத்து நின்றாள்.

சக்தி அவளை பொருட்படுத்தாது சுற்றிக்கொண்டு நகரப்போக மீண்டும் அவன் வழியை மறைத்தாள் சாரு.

கோபமாய் நிமிர்ந்தவனது கோபம் அனைத்தும் அவள் முகத்தை கோபமாய் வைத்து கையை கட்டி நியாயம் வேண்டும் என்ற ரீதியில் நின்றிருந்த விதம் கண்டு மெழுகென கரைந்து போனது.

முகத்தில் மென்னகை பரவ..

"என்ன.."என்றான் அவன் மென்மையான குரலில்.

என்ன இவன் சிரிக்கிறான்.. தலையை சொறிந்து கொண்ட சாரு..

"என்னோட மால.." என்றாள்.

ஒரு முறை சிரித்து விட்டு அவளது கையை பற்றிக்கொண்டு முன்னே நடந்தான் சக்தி.

"கைய விடுங்க.." எப்போதும் போல் அவள் போராட அவன் பிடியும் வழமை போலவே மென்மையாய் இறுகியது..

அவன் அவளது கையை பற்றி நடந்து கொண்டு பார்கிங்கில் இருந்து வெளியேறவும்..

"சார்..உங்க கார் அங்க இருக்கும்.." என்றாள் சாரு பார்கிங் பக்கமாய் திரும்பி பார்த்துக்கொண்டு நடந்தவண்ணம் ..

"தெரியும் நீ வா.." சக்தி நடக்க சாரு நிற்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் ஓடிக்கொண்டிருந்தாள்.

திடுமென சாருவிற்கு காரணம் என்னவாக இருக்கும் என தோன்ற "சார் வர வர உங்களுக்கு அப்போ அப்போ என்னமோ ஆகுதுல்ல.." அண்ணாந்து அவன் முகத்தை பார்த்து கேட்டாள்.

"என்ன ஆகுது.." வன் பாதையை கடக்க நின்று கொண்டு பாதையில் கவனமாய் கேட்டான்.

"கிட்டத்தட்ட அப்போ அப்போ அதாவது..சார் மனச திடப்படுத்திக்கோங்க.." அவள் பேசிக்கொண்டே போக அவளை ஒரு பார்வை பார்த்த சக்தி அவளது நெற்றியில் கை வைத்து பார்த்தான்.

அவன் என்ன செய்கிறான் என்பது போல் கண்களை உருட்டியவள் பின் புரிய.."சார் எனக்கு காய்ச்சல் இல்ல சார்.." கையை பட்டென தட்டி விட்டவள்.. "உங்களுக்கு தான் மண்டையில அடிபட்டிருக்கு.. மொதல்ல டாக்டர்ட போகனும் வாங்க..இல்லனா பெரிய மூள சின்ன மூளைய விழுங்குற மாதிரி வலிக்க ஆரம்பிச்சிரும்.." படபட என பேசியவளை பார்த்து வாய்விட்டே சிரித்து விட்டான் அவன்.

"என்ன நாம சொன்னது எவ்வளோ பெரிய விஷயம்..இவன் என்னன்னா சிரிச்சிட்டு இருக்கான்.." சாரு முழிக்க..

"சில்லி" அவள் தலையில் தட்டி விட்டு அவளை இழுத்துக்கொண்டு பாதையை கடந்தான் சக்தி.

"சார் சார் கார் வருது..சாக போறோம்.. மெதுவா சார்.." புலம்பலுடனே அவனது கையில் தொங்கிக்கொண்டு வந்து மற்றைய பக்கம் அடைந்து மூச்சை இழுத்து விட்டாள்.

இவர்களது பிணைந்த கையையும் சாரு எதுவோ கூற அதை கேட்டு சக்தி சிரித்து விட்டு தலையில் தட்டியதையும் தொலைவாய் இருந்து கவனித்து விட்டன இரு சோடிக்கண்கள். அதில் ஒரு சோடிக்கண்ணில் வன்மம் வேரூன்றியிருக்க மற்றைய சோடியில் கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது.

சக்தி மெனு கார்டை சாருவிடம் நீட்டி பத்துநிமிடம் கடந்து கொண்டிருந்தது. அவள் ஒன்றை தெரிவு செய்வதாகவும் இல்லை கார்டை சக்தியிடம் கொடுப்பதாகவும் இல்லை.

அங்கிருந்த வெய்டர் மூன்றாவது முறையாக அவர்கள் இருந்த பக்கமாய் வர..சக்தி மெதுவாக சாருவிடம் குனிந்து..

"சாரு ஒன்றை ஸெலக்ட் பன்னு இல்லனா என்கிட்ட கொடு.." என்றான்.

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு..

"எனக்கு தராம நீங்க மட்டும் ஐஸ் சாப்பிடலாம் பார்க்குறீங்களா.." என்றாள் சத்தமாய்..

அங்கிருந்த ஓரிருவர் திரும்பி பார்க்க.. தன் நிலைமையை நினைத்து நொந்து கொண்டவன் பேசாமல் மேசையிலே தலை வைத்து படுத்துக்கொண்டான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில்.."சார் சார் இது சொல்லிடலாம்.." என ஒன்றை காட்ட.. இவ்வளவு நேரம் யோசித்து எதை எடுத்திருக்கிறாள் என சக்தி பார்க்க அவனை பார்த்து அட நான் தான்பா ஸ்ட்ரோபரி ஐஸ்க்ரீம்.. என பல்லை காட்டியது அந்த கார்ட்.

சாருவை பார்த்து.." இத ஸிலக்ட் பன்னதான் இவ்வளவு அலப்பறையா.."என்று விட்டு வெயிட்டரை அழைத்தவன்.."இரண்டு ஸ்ட்ரோபரி.." என கூறி முடிப்பதற்குள்..."சார் எனக்கு அஞ்சி வேணும்.." சாரு இடையில் கூறியிருந்தாள்..

வெயிட்டர் சாருவை பார்த்துவிட்டு சக்தியை பார்க்க.. சக்தி அவள் உரிமையாய் அவனிடம் கேட்டதை இரசித்து புன்னகைத்துக்கொண்டே ஐந்து என கையால் சைகையிலே காட்டினான்.

இவை அனைத்தையும் அதே கடையில் கொஞ்சம் தூரமாய் இருந்து கவனித்திருந்த இருவரையும் தான் யாருமே கவனிக்கவில்லை.

கவனித்திருக்க வேண்டியவனது கண்களோ தன் முன்னே அமர்ந்திருந்த பாவையை தன்னிலை மறந்து இரசித்துக்கொண்டிருந்தான். அடர் பச்சை நிற காலர் வைத்திருந்த டாப் அவள் நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. அடர்த்தியான நீண்ட கூந்தலை தளர பின்னி முன்னே விட்டிருந்தாள். மையிட்டிருந்த கருவிழிகள் இரண்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.. உள்ளே ஏசி குளிரில் கன்னங்கள் இரண்டும் சற்றே சிவந்திருக்க.. அமைதியாய் கைகட்டியிருந்தவளை சீண்டிப்பார்க்க எண்ணிய சக்தி..

"காசு வச்சிருக்கயா ?" என வினவினான்.

சக்தி கேட்கவும் அவனை திரும்பி நேராய் நோக்கியவளுக்கு திடுக் என்றது.

அவனது விழிகள் அவளது கண்களிடம் நுழைய அனுமதி கேட்காமலே இதயம் வரை ஊடூருவிச்சென்றிருந்தன. அவனது பார்வை அவளை ஏதோ செய்வது போல் இருக்க அவனது கேள்விக்கு பதில் கூற வேண்டும் என மூளை நினைவு படுத்தினாலும் இதயம் அதற்கு அவளை ஒத்துழைக்க விடாது பட பட என அடித்து அவளை உறைய வைத்திருந்தது.

கஷ்டப்பட்டு அவனிடம் இருந்து தன் விழிகளை பிரித்து எடுத்தவள் அமைதியாய் குனிந்து கொண்டாள். இருந்தும் அவனது பார்வை அவளிடமே இருப்பதை உணர முடிந்ததால் கைகள் சற்றே நடுங்க ஆரம்பிக்க.. அவன் பார்க்கும் முன் சட்டென இரு கைகளையும் கோர்த்துக்கொண்டாள் சாரு.

வாய் ஓயாமல் பதிலுக்கு பேசி மல்லுக்கு நிற்பவள் தன் ஒரு பார்வைக்கு அமைதியாய் தவிப்பதை நினைத்தவன் அவளது செய்கையை பார்த்து சிரித்துக்கொண்டான் சக்தி.

**************

அவள் பதிலைக்கேட்ட மதன்..."வாட் அது எப்படி நீங்க கரக்ட்டா சொல்லுறீங்க மாயா?" ஆச்சரியமாய் வினவினான்.

அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள்..
"ஆமா மதன் எனக்கு பழையவிடயங்கள் எல்லாம் மறந்திருக்கலாம்..ஆனால் என்னோடயே உணர்வுகள் மாற முடியாதுலயா..அது நான் யாரையோ ஆழமா நேசிச்சிருக்கதா சொல்லுது அதோடு அவங்க எனக்காக காத்திட்டு இருக்காங்கன்னும் சொல்லுது மதன்."

மீண்டும் அறையினுள் அமைதி நிலவ..
" சாரி மாயா..எனக்கு இது எல்லாம் தெரியாதுலயா..உன்ன பார்த்ததும் மிஸ் பன்னிர கூடாது தோணிச்சி சொல்லிட்டன். ப்ரீயா விடு உன்ன என்னால ஒரு நல்ல நண்பனா புரிஞ்சிக்க முடியும். உன் உயிர் சீக்கிரமே உன் நினைவுகளோடு வந்து சேரும்... நீ எதுவும் யோசிக்காத.." என்றான் மதன்.

"ரொம்ப தாங்ஸ் மதன் என்ன புரிஞ்சிக்கிட்டதுக்கு.. கண்டிப்பா அந்த நம்பிக்க எனக்கு எப்பவுமே இருக்குது." என்றாள் புன்னகையுடன்.

அவனும் பதிலுக்கு புன்னகைக்க.."சரி மதன் எனக்கு நேரமாச்சி போய்ட்டு வாரன்.. நீங்களும் இன்னக்கி கிளம்புறீங்கல்ல.. have a safe journey மதன்.. டாட்டா.." அவள் கூறிவிட்டு செல்ல..
செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த மதன் ஒரு பெருமூச்சோடு தன் வேலையில் மூழ்கினான்.

____________________________________________

கருத்துக்களை பகிர

 
Status
Not open for further replies.
Top