மாயம் செய்தாயோ ❤ 13 ❤
❤கண்களால் கைது
செய்கிறாய் என்
உயிரை..
பதிலுக்கு
காதலால் கைது
செய்வேனே உன்
உயிரை...❤
மெதுவாக சக்தி பக்கம் திரும்ப நல்ல வேளையாக அவன் யாருடனோ சீரியசாக போனில் கதைத்துக்கொண்டிருந்தான்.
நல்ல வேளை என பெருமூச்செறிந்தவள்..மெதுவாக சார் என சக்தியின் கையை சொறிந்தாள். அவன் சைகையால் பேசாமல் இரு என சொல்லி விட்டு தொடர்ந்து பேச..கொஞ்சம் நேரம் காத்திருந்தவள் கார் கண்ணாடி வழியே எட்டிப்பார்க்க அங்கே நிலா வீட்டினுள் படியேறுவது தெரிந்தது.
மீண்டும் பொறுமையின்றி சக்தி என கையை இழுக்க அவனோ இவள் செய்கைக்கு பதில் இன்றியே அவன் வேலையில் கவனமாக இருந்தான்.
"சக்தி சக்தி சக்தி.." என ஒவ்வொரு சக்திக்கும் அவனை எரிச்சல் கொள்ள வைக்கும் விதமாக இவள் இரு விரல்களால் அவன் கைவிரலில் இருந்து மேல் தோள் வரை முன்னேறிக்கொண்டே சொறிய.. பொறுமையிழந்த சக்தி.."டேமிட் என்ன வேணும் உனக்கு இன்னும் இறங்காம இங்க என்ன பன்னிட்டு இருக்க."
"ஆமா கேளுங்க நல்லா கதவ அடச்சி வெச்சிட்டு." உம் என்று முகத்தை இழுத்துக்கொண்டு கண்களாலே கதவையும் காட்டினாள் சாரு.
"நோ நோ சார் சாரி, உங்கள இல்ல...." அவளை முறைத்துக்கொண்டே கதவை அவன் திறந்து விட சிட்டாய் பறந்தாள் சாரு.
உள்ளே சென்று சில நிமிடங்களிலே நிலாவும் சாருவும் நன்கு நண்பிகளாகி விட..வீடே களைகட்டியது..
போனில் கதைத்து முடித்து விட்டு சக்தி வீட்டினுள் நுழைந்தான். அவனை கண்டதும் நிலாவிற்கு சற்றே பதட்டம் எடுக்க அவனை பார்த்துக்கொண்டே சாருவிடம் கதைத்துக்கெண்டிருந்தாள்.
நேராக சக்தி நிலாவை நோக்கி வரவும் அவளது பதட்டம் அதிகமாக அதே நேரம்...
"அப்புறம் அங்க என்னலாம் இருந்திச்சி நிலா.." உரக்க கேட்டுக்கொண்டிருந்தாள் சாரு.
அவளை நிலா உஷ் உஷ் என வாயை குவித்து அமைதிப்படுத்த அது சாருவின் காதை எட்டவே இல்லை.
நிலாவிற்கு எதிரே சாரு நின்றிருக்க அவளிற்கு பின்னால் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்தான் சக்தி.
"இருந்தாலும் நிலா சதீஷ்தான் ரொம்ப பாவம் நீ வீட்டில இல்லாதத மறைக்க அதுவும் அந்த சிடுமூஞ்சிட்ட மறைக்க எவ்வளோ பாடு பட்டான் தெரியுமா.."
"போச்சு போச்சு.." நிலா பயத்துடன் கையை உதறிக்கொண்டே சக்தியை பார்க்க அவன் சாருவின் பேச்சிற்கு பின்னிருந்து "ஓஹோ" போட்டுக்கொண்டிருந்தான்.
"ஏய் நிலா என்ன ஒன்னுமே பேச மாட்ற.." சாரு நிலாவின் கண்கள் வெறித்துக்கொண்டிருந்த திசையில் திரும்பி பார்க்க..அதே நேரம் மேல்தளத்திலிருந்து.."ஹே நிலா ட்ரிப் போனப்போ என் ஹெட்செட் எடுத்துட்டு போனியே திரும்ப கொடுத்தியா.." என சதீஷ் குரல் கொடுக்க.. நிலாவுக்கு அழுகையே வந்துவிட்டது.
"உட்காருங்க நிலா.." சக்தி மரியாதையாய் அவளுக்கு இடத்தை காட்ட பயத்திலே அமர்ந்து கொண்டாள். சாரு மெதுவாய் அவ்விடம் விட்டு நழுவபோக நிலா அவளை கைபற்றி இழுத்து அமர வைத்துக்கொண்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் சாரு நிலா சதீஷ் மூவரும் வரிசையாய் தலை குனிந்து அமர்ந்திருக்க சக்தி ஒன்றும் பேசாமல் முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.
"பன்னி கொஞ்சம் கீழ எட்டி பார்த்துட்டு பேசிருக்கலாம்லடா.." நிலா தன் இடப்பக்கம் அமர்ந்திருந்த சதீஷிடமும்...
"உனக்கு கண்ணால கண்ணால காட்டினேன்ல அப்போவாது விளங்க வேணாமா.."வலது பக்கம் இருந்த சாருவிடம் முணுமுணுக்க..
"எனக்கு எப்படி தெரியும் நான் நினைச்சேன் உன் கண்ணுல தூசு விழுந்திருச்சி போலன்னு.." சாரு நியாயம் பேச..
"ஷட் அப்.." என கர்ஜித்தான் சக்தி..மூவரும் கப்சிப் என வாயை மூடிக்கொள்ள..ஆழமாய் பார்த்தவன்..சதீஷிடம் பார்வையை வைத்து.."ஸைன்ன காப்பி பன்னுற அளவுக்கு தைரியம் வந்திரிச்சி இல்ல சதீஷ்.."என அவன் உறுமவும் பதிலுக்கு ஏதாவது கூறு என கீழ் கண்ணால் நிலாவை பார்க்க அவளோ என்றும் போல் மூக்கை உறுஞ்ச ஆரம்பித்திருந்தாள்.
"சாரு உன்ன பத்தி பேசவே ஒன்னுமில்ல.. எங்க வீட்டுல இருக்கவங்களுக்கு அறிவு இருக்கனும் முதல்ல..டேமிட்.."
வேறு வழியில்லை என சிந்தித்த சாரு மெதுவாய் எழுந்து நின்று அனைவரையும் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு தன் காதிரண்டையும் பற்றி சட்டென தோப்புக்கரணம் போட ஆரம்பிக்க நிலாவும் சதீஷும் விழிக்க சக்திக்கோ கோபம் எல்லாம் மறந்து சிரப்பு எட்டிப்பார்க்க இருந்தும் அதை மறைத்துக்கொண்டவன்.."ஸ்டாப் திஸ் நான்சன்ஸ் சாரு.."என்றான் சற்றே சத்தமாய்..
"இல்ல சார் நீங்க மன்னிச்சிட்டேன் சொல்லுங்க.." என்றாள் கண்களை மூடிக்கொண்டு தன் வேலையில் கவனமாய்..
அதே நேரம் வாசற்பக்கமாய் "சக்தி சார்" என்ற குரல் கேட்க தன் ஆபிஸ் விஷயமாய் அவன் வரக்கூறியிருந்தவர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் பார்வை சாரு பக்கம் செல்ல அதனை கவனித்த சாரு இன்னும் வேக வேகமாய் தோப்புக்கரணம் போட்டாள்.
"சாரு ஸ்டாப் திஸ்.." சக்தி அடிக்குரலில் கூற..
"மன்னி..ச்சிட்டே..ன் சொ..ல்லுங்க எங்க..ள.." மூச்சிறைக்க இடையிடையே வந்தது வார்த்தைகள்..
"டேமிட்..சரி மன்னிச்சிட்டேன் நிறுத்து.." சக்தி கூறவும் பட்டென நேராய் நின்றவள்..
"சமத்து சக்தி.." என அவள் ஓட நடப்பதை ஆவென பார்த்திருந்த நிலாவும் சதீஷும் விட்டால் போதும் என அவளோடே சேர்ந்து கொண்டனர்.
நாட்கள் செல்ல செல்ல சாருவும் சாவித்ரிக்கும் சிவாவிற்கும் இன்னொரு மகளாகிப்போனாள். வேண்டா வேலை செய்து விட்டு சக்தி முன் திட்டு வாங்கி தலை குனியும் சங்கத்தில் சதீஷ், நிலா உடன் இப்போது சாருவும் சேர்ந்திருந்தாள். இடையிடையே தன் பெற்றோருடனும் பேசியவள் பல நேரங்களில் " அப்பா சார்கூட பேசுங்க.."என்று சக்தியை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாய்ப்போனது.
கம்பனியில் சக்தியினதும் சாருவினதும் சண்டைகளை பார்ப்பவர் கண்கள் பழக்கப்பட்டிருக்க..இடையில் வினோத் தான் திணறிப்போனான். எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது இவர்களது மோதல் காதலாகி விட்டால்??? ஆனால் வினோத்திற்கு சக்தி மேல் அதீத நம்பிக்கை தான் இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று எனவே தன் காதல் சொல்லிட ஓர் சந்தர்ப்பத்திற்காய் காத்திருந்தான். ஆனால் அவனிற்கு அப்போது தெரியவில்லை தன் காதல் சொல்லா காதலாகவே போய்விடும் என்று.
இதற்கிடையில் இவள் வடிவமைத்திருந்த ஆடையைக்கண்டு டிசைங்னர் குழு ஏன் சக்தி கூட பிரம்மித்துதான் போனான். ஆடர் கொடுத்தவர்களும் மிகவும் திருப்தியுடனும் பாராட்டுக்களுடனும் பெற்றுக்கொண்டனர் தங்களது ஆடையை. அதே நேரம் சக்தியையும் ஆடை வடிவமைத்த சாருவையும் கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அந்த நாளும் இதோ நாளை என்று வர அன்றிரவு சக்தியை அழைத்தார் சிவா.
" நாளைக்கு எத்தனை மணிக்கு ப்ளைட் சக்தி?"
"காலைல ஏழு மணிக்கு அப்பா.. ஈவ்னிங் ரிசப்ஷன் தான் போறேன்."
"சாரு கிட்ட சொல்லிட்டயா.?"
"அப்பா அவ..ஹ்ம் ஓகேப்பா சொல்லிட்ரன்."
சிவாவிற்கு தெரியும் எப்படியும் சக்தி சாருவிடம் சொல்லியிருக்க மாட்டான் என்று இருவரும் சிறு பிள்ளை போல முட்டிக்கொண்டே இருக்க சக்தி சாருவை சிவா சொல்லாது அழைத்துச்செல்வான் என்றால் அது அதிசயம் தான்.
படியேறிச்சென்ற சக்தி சாரு அறைக்கதவைத்தட்டினான்.
"ஏஸ் காம்மீன்" உள்ளிருந்து குரல் கேட்க.. " இவள் எப்போதான் இப்பிடி english பேசி கொள்ளுறத விட போறாலோ." எண்ணியவாறே உள்ளே செல்ல அங்கு சாரு தன் குட்டி பொம்பைகள் அனைத்தையும் கட்டிலில் கடை பரப்பி வைத்து விட்டு கட்டிலில் அடியில் சென்று எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
"சாரு.." சக்தி அழைக்க.. கட்டிலின் அடியில் இருந்தவாறே.."ஆஹ் சொல்லுங்க கேட்குது..அய்யோ அம்மா" வெளியே வரும் வழியில் தலையையும் இடித்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
"என்ன தேடுற?" அவன் வினவியது தான் தாமதம்..அந்த பொம்மை ஒவ்வொன்றினதும் வரலாறையும் கூறி முடித்தவள்.." இப்போ சுந்தரிக்கு தெரியாம அவ வீட்டுல அவ அலமாரில இருந்து எடுத்த..என்ன பார்க்கிறீங்க அப்பிடி.. நான் ஒன்னும் திருடல்ல அவள் என்னோட ரோஸ் கலரு ரிப்பன் எடுத்தால்ல அதுக்கு பதிலா நான் எடுத்தேன். பச்ச கலரு சட்டை போட்டு ரெட்ட முடி பின்னின பொம்மைய காணோம்."
உதடு பிதுக்கி அவள் முடிக்க..அவனோ ஏன்டா கேட்டோம் என்று வருத்தப்படும் அளவு இருந்தான்.
"ஓகே கிடைச்சிடும். சாரு நாளைக்கு.." அவன் ஒரு அடி எடுத்து வைத்திருப்பான் இவனது shoeற்கு அடியில் எதுவோ மிதிபடவும் காலை தூக்கி பார்த்த சக்தி அடியில் இருந்த பொருளைக்கண்டவன் ஸ்லோ மோஷனில் சாருவைப்பார்த்தான்.
அவன் பார்வையைத்தொடர்ந்து கீழே பார்தத சாரு ஓடி வந்து அந்த பொம்மையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்களை விரித்து ஒரு விரல் நீட்டி சக்தியிடம் "எதுக்கு என் பொம்மைய கொன்னீங்க?" சத்தமாய் பேசுகிறேன் என்ற பெயரில் கீச் கீச் என சத்தமிட்டாள்.
"வாட் கொன்னுட்டேனா.. ஆர் யூ மேட்..அதுக்கு ஒன்னும் ஆகல்ல.. நான் கால வச்சதும் எடுத்துட்டன்.. நான் சொல்ல வந்தத கேளு.. எனக்கு டைம் ஆச்சு நான் தூங்கனும்..நாளக்கி.."
" மாட்டேன் மாட்டேன் நான் கேட்க மாட்டேன். என் பொம்மைய மிதிச்சி... பாருங்க அழுக்கு பட்டிறிச்சி.. இதுக்கு ஒரு பதில் வேணும்.."
கைகளால் காதை மூடிக்கொண்டு அவள் சத்தமிடவும் அந்த நேரம் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்க இவள் சத்தத்தில் பதட்டமடைந்த சக்தி அவள் வாயை கையால் அழுத்த மூடினான்.
"இங்க தான இருக்கேன் இடியட் எதுக்கு இப்படி ஏழு ஊர்க்கு கேக்குறதுக்கு சத்தம் போடுற.. இப்ப உன் பிரச்சனை தான் என்ன?" கண்கள் விரித்து பார்த்தவள் சரி என இருபக்கம் கண்களை சுருக்கி தலையை ஆட்ட..அவள் செய்கையில் சக்தி சில கணங்கள் செயலற்றுப்போனான்.
"ம்ம்ம்...ம்ம..ம்."
"என்ன ம்ம் ம் ன்னு ராகம் பாடுற ஒழுங்க பேசு.."
அவன் கூற அவனை முறைத்தவள் கண்களால் தன் வாயை மூடியிருக்கும் கையை காட்ட அப்போது தான் நினைவு வந்தவனாக ஓஹ் சாரி என்றவாறு கையை விலக்கினான்.
"இதோ பாருங்க என் பொம்மையில அழுக்கு பட்டிரிச்சி" அவள் காட்டிய இடத்தை கூர்ந்து பார்த்தவன் அங்கிருந்த ஒரு புள்ளி அளவு கொஞ்சமாய் இருந்த தூசியைக்கண்டு அவளை முறைத்து விட்டு "சரி கொடு dry clean பன்னிடலாம் " என்க சந்தோஷமாக தலையை ஆட்டியவள் அவனிடம் தந்து விட்டு " சக்தி.. சாரி சார் சார் அவள மட்டும் டிரையர் கிள்..கிள் சரி ஏதோ பன்னினா மத்த பொம்மை எல்லாம் கோவிச்சிக்கிமே"
கடைசியில் உன் பிளான் இது தானா..ஆனால் இப்போது சரி என்று சொல்லாவிட்டாள் சத்தமிட்டு வீட்டையே ஏன் ஊரேயே கூட எழுப்பி விடுவாள் என்பது சக்தி அறிந்தது என்பதால்"சரி பேக் பன்னி எடுத்து வை" சொல்லி விட்டு அவன் நகர அப்போதுதான் நினைவில் வந்தவளாக "சார் ஏதோ நாளைக்கு என்று ஆரம்பிச்சிங்களே..முழுசா சொல்லல.." அவள் எடுத்துக்கொடுக்க அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு..
"நாளைக்கு அந்த ட்ரெஸ் ஆடர் தந்தவங்க ரிசப்ஷன் போறம். பிளைட் ஏழு மணிக்கு. கரக்ட்டா டைம்ற்கு இருக்கனும்." சொல்லிவிட்டு அவன் சென்று விட..."பிளைட்னா கடல்ல போகுமே.. ச்ச அதல்ல ஆஹ் வானத்துல போறது.. ஹை அப்போ நாம வானத்துல பறக்க போறமா..சார் சார் இருங்க அந்த பீளைட்டு.." இவள் அவன் அறைக்கு செல்ல போக அவனது அடைத்த கதவுதான் வரவேற்றது அவளை.
அறைக்கு திரும்பிய சாரு நாளை வானத்தில் பறக்கப்போகும் கனவுகளோடே உறங்கிப்போனாள் தன் வாழ்வின் அடுத்த மாற்றம் அங்கு நிகழப்போவது அறியாது.
கருத்துக்களை பகிர