All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, ஆதீப் பெற்றோர் மனதை மாற்ற புண்ணிய ஸ்தலம் அனுப்பியது சூப்பர். அருண், விதார்த் அருமையான நண்பர்கள். சங்கவி ஆதிப்பின் plans ஐ execute செய்வது சூப்பர். ஆதீப் wonderful personality... காதலுக்காக மரிக்க துணிவதும், காதலர்கள் இல்லாத பட்சத்தில் மனிதாபிமானதுடன் உதவுவேன் என்றதும் செம....
மதுசூதனனை கட்டம் கட்டி தூக்கியது சூப்பர். அவன் வாயாலேயே ஆதிப்பின் மேல் தவறு இருக்காது என சொல்ல வைத்தது அசத்தல்.. அவனை சிறந்த இயக்குனராக அறிவித்த போது அன்னையிடம் பேச தவித்தது உருக்கம்.. தன் நண்பர்களிடம் விட்ட பொறுப்பை சரியாக செய்வார்கள் என்று வைத்த நம்பிக்கை சிறப்பு..
தாத்தா பாட்டி வைத்த நம்பிக்கை, பாசம் , பெற்றோரிடமும் உடன்பிறந்ததோரிடமும் இல்லாமல் போனது வேதனை..
அவனை நெருங்கும் புகைவண்டியில் சிக்கி உயிர் ஊசலாட போகிறானா??? அவன் உயிருடன் உயிர் சேர்க்க போகிறானா??? Sis..
மிக்க நன்றிகள்...

அதீப்.. அருமையான காதலன் மட்டுமில்லை.. அற்புதமான மனிதன்.

இறுதி யூடிகள் போட்டுட்டேன்.
 

Sarala k

Bronze Winner
Super super... Adeep and kavi oda love and feelings semma ...avarkalin kadalai ellaralium potri padum padi sethutan....semma love story 💕
 

Simmiha vadivel

Active member
hi mam எத்தனை முறை வாசித்தாலும் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது இந்த கதை மீண்டும் தந்ததிட்கு thank-you 💐💐💐💐👏👏👏👏
 

Banumathi Balachandran

Well-known member
மிக அருமையான அற்புதமான படைப்பு இந்த கதை.

அதீப்ராகவன் ஒரு நல்ல காதலனாக,மகனாக மட்டும் இல்லாமல் நல்ல மனிதனாகவும் உயர்ந்து விட்டான்.
தன் காதலை முதலில் அவளிடம் மறைப்பதும் பின் அவளிடம் வெளிப்படுத்திய பின் அவளை கவனமாக இருக்க சொல்லி விட்டு அவன் தடுமாறுவதும் மதுசூதனனால் பிரச்சினை வந்த போது அதை சரிசெய்ய தன்னால் மற்றவர்களுக்கு பிரச்சினை வேண்டாம் என தன் மேல் அனைத்து பழியையும் போட்டுக் கொண்டு தன் பெற்றோர் முன் கூட தலை நிமிர முடியாமல் கஷ்டப்படுவதும் அந்த அவப்பெயரை துடைக்க போராடுவதும் இறுதியில் அனைத்திலும் வெற்றி பெற்று யார் தன் பெயர் கெட காரணமோ அவனாலேயே பெரிய படவாய்ப்பு பெறுமாறு செய்வதும் அவனுக்கு சரியான முடிவு கட்டுவதும் கிராமத்தில் அனைவரின் முன் அவமானப்பட்டு ரயில் தண்டவாளத்தில் இருந்து தப்புவதும்( இந்த இடத்தில் அவனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என வேண்ட வைத்து விட்டீர்கள்) இறுதியில் மேடையில் தன் காதலை அனைவரும் போற்றி பாடும் படி செய்து விட்டான்.
இவனைப் போல் ஒரு காதலன் கணவன் கிடைக்க சங்கவி எத்தனை பிறவியில் எத்தனை தவம் செய்தாலோ

சங்கவி ஆரம்பத்தில் சிறுகுழந்தை தவறு செய்வது போல் தவறு செய்து விட்டு பின் அதனால் வரும் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் கடக்க முயல்வது தான் செய்த தவறால் தன் காதலன் படும் அவமானம் கஷ்டங்களையும் துன்பங்களையும் கண்டு வருந்துவது கடைசியில் மேடையில் அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்டு தன் தவறை சரி செய்ய முயன்று வெற்றியும் கண்டு வாழ்விலும் வெற்றி அடைந்து விட்டால்.
அதீப் போல் நல்ல மனிதன் காதலனாக கிடைத்ததால் அவள் இன்று கோபுரத்தில் இல்லையேல்

பெண்கள் தாங்கள் செய்யும் செயலின் முடிவு சரியானதா என ஆராய்ந்து ஒரு செயலை செய்ய வேண்டும் இல்லையேல் அதை சரிசெய்ய முடியாமல் அவர்கள் வாழ்வு ?

சினிமா துறையில் வெளியே தெரிவதையே நாம் நம்புகிறோம் பார்க்கிறோம் ஆனால் அவர்களும் நம்மை போல் உணர்வு கொண்டவர்கள் அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு என அவர்களோடு வாழவைத்து அவர்களின் உணர்வுகளையும் அழகாக கதையாக எழுதியுள்ளீர்கள் மிக மிக அருமையாக இருந்தது

அதீப்ராகவன் மறக்கமுடியாத ஒரு நாயகன்.

உங்களது கதை பற்றிய என்னுடைய கருத்துகளை கூறியுள்ளேன் ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்
 

Deebha

Well-known member
Hi sis, ஆதிப் தண்டவாளத்தில் இருந்த போது திக் திக் நிமிடங்கள்... ஆதிப் hospitalலில் உணர்வின்றி இருந்த போது கவி, அருண், விதார்த், அவனின் உறவுகள் என எல்லாரையும் உயிருடன் துடிக்க வைத்துவிட்டான். Award function இல் அனைவரையும் அவனை நிமிர்ந்து பார்க்க வைத்து அவனின் காதலையும் உரக்க சொல்லி விட்டான். அவளும் மனதார மன்னிப்பு கேட்டு தன் தவறை திருத்திக் கொண்டாள். தன் உறவுகளையும் அழகாக இணைத்து கொண்டான்...

தன் காதலியின் தவறை புரிய வைத்து , தன் உயிரை விட மேலான மானத்தை பணயம் வைத்து, பின் தன் சூழ்நிலையை ஊடகங்களுக்கு விவரித்து, தங்களின் காதலை தரணி அறிய அறிவித்து, தன் காதலியின் நடிக்கும் ஆசைகாக 4 வருடங்கள் காத்திருந்து, அனைவரின் முன்னிலையில் கைப்பிடித்து, மழலைச் செல்வம் ஈன்ற பின்பும் மனையாளின் ஆசையை நிறைவேற்ற ஈடு கொடுத்து நின்றவனை என்னவென்று சொல்வது????

கவியின் அரிதான வரமாய் அவளவன் ஆதிப் ....

Thank u for a nice story sis.... 💐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis naan indha story second tym padikaran... Still it creates same impact and feel... Realyyyy semma story sis🥰😍....
வாவ்.. மிக்க நன்றிகள்..
 
Top