Hi sis, இந்த கதை நான் இப்போது தான் 1st time படிக்கிறேன். அதீப் ராகவ் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறையில் வெற்றி பெற்றது பெரும் சாதனையே.. அதே நேரத்தில் திரைத்துறையில் தோல்வி அடையும் பெண்களை எவ்வாறு misuse செய்கிறார்கள் என்பதற்கு சங்கவி உதாரணம். அவளின் நல்ல நேரம் அதீப்பிடம் சிக்கினாள், அதனால் அவளின் தவறை புரிய வைத்தான். அவள் கூறிய 'வெற்றி பெற்றவர்களுக்கு தோல்வி அடைந்தவரின் வேதனை புரியாது மற்றும் திறமையான நடிகர்கள் கொண்டே அவன் டைரக்டர் ஆக வெற்றி பெற்றான் ' என்ற கருத்தை கேட்டு , நடிக்க தெரியாத நடிகையான சங்கவியை அவனின் next heroine ஆக புக் செய்ய வைத்தது. ஜெயிக்க போவது அவளின் நம்பிக்கையா அல்லது அவனின் தன்னம்பிக்கையா?