All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபதி கோவையின் "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் - கதைத் திரி

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
-: "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -10 :

பொழுது சாய்ந்து கொண்டிருக்கின்ற நேரம் . கடிகார முள் சரியாக ஏழு மணியைத் தொட்டிருந்தது .

இருட்டு மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருந்தது .
தூத்தூர் காவல் நிலையத்தை நோக்கி , போலீஸ் ஜீப் பயணித்திருந்தது .


அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து , யோசித்துக் கொண்டே வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

ஏட்டு கந்தசாமி : சார் ! குமாரசாமி ஐயா , பேயடிச்சு செத்துப் போயிட்டார்ன்னு , ஒரு ஊரையே நம்ப வச்சிருக்கானுங்க . இது எவ்வளோ பெரிய குற்றம் !!!!

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் !!! அது மட்டும் இல்ல ,,,, “ பாவம் அந்த வெண்ணிலாப் பொண்ணு மேல , பழியப் போட்டுட்டு , இவனுங்க சுதந்திரமா நடமாடிக்கிட்டு இருக்கானுங்க “ .

ஏட்டு கந்தசாமி : “ பெரிய மனுஷன்ங்கற போர்வைல , இன்னும் என்னென்ன அட்டூழியங்கள பண்ணிட்டு இருக்கானுங்களோ ??? “

இன்ஸ்பெக்டர் ரவி : “ இவனுங்க மட்டும் இல்ல கந்தசாமி ..................... நம்ம நாட்ல ,,,, இப்படிப்பட்டவங்க நெறைய பேர் இருக்கானுங்க . “ இவர்களோட போலி பிம்பங்கள் உடைத்தெறியப்பட வேண்டும் . பொதுமக்கள் முன்னிலையில் ,இவர்களோட கபட நாடங்கள வெளிக்கொண்டு வரணும் .

ஏட்டு கந்தசாமி : “ சார் !!! ..... இருந்தாலும் ,,,,,, நாங்க பார்த்த அந்த அமானுஷ்யமான விசயங்கள் , கேட்ட சப்தங்கள் எல்லாம் பொய்ன்னு நீங்க நெனைக்கிறீங்களா ???.

இன்ஸ்பெக்டர் ரவி : “ நான் எதையுமே பொய்ன்னு சொல்லல . எல்லாமே ஒரு IMAGINATION தான் .... ஒரு சின்ன லாஜிக் தான் அது . நாம தனியா இருக்கும் போது , ஒரு சின்ன சப்தம் கேட்டாக்கூட , அதுவே நம்மளோட மனசுக்கு , கொஞ்சம் நெருடலாக இருக்கும் . ஆனா இவனுங்க வேண்டுமென்றே , மக்கள் மனசுல , ஒரு அமானுஷ்ய சாயத்த பூசியிருக்கானுங்க .... SO , அதைப் பற்றி நெனைக்க , நெனைக்க , நம்மளோட மனசும் , எந்த ஒரு புது விஷயம் நடந்தாலும் , அதை இதோட தொடர்புபடுத்தியே சிந்திக்கும் . அதுதான் இப்ப மாத்தூர் கிராமத்து மக்கள் மனசுல நடந்துட்டு இருக்கு . குமாரசாமியின் மரணத்துக்கு , கொஞ்சம் நாளைக்கு முன்னாடிதான் , அந்த வெண்ணிலாங்கற பொண்ணு செத்துப் போயிருக்கு ..... SO, இத அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திட்டு , பழியை , அந்தப் பொண்ணு மேல போட்ருக்கானுங்க .................... அப்படிப் பார்க்கும்போது , அன்னிக்கு என் வீட்டுக் கதவத் தட்டினது கூட ,,,,,,, இவனுங்க வேலையா இருக்கலாம்ன்னு எனக்கு நினைக்கத் தோணுது ... “

ஏட்டு கந்தசாமி : “ சார் !!! இதுல எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு . மாத்தூர் கிராமத்துல , அமானுஷ்ய நடமாட்டங்கள் இருக்குதுன்னு , வேதாந்த சுவாமிகள் ஏன் சொல்லணும் ?? “

(....சற்று நேரம் யோசித்துவிட்டு....)

இன்ஸ்பெக்டர் ரவி : “ எனக்கும் அது சந்தேகத்திற்கிடமாத்தான் இருக்குது . ஏன் அவர் இத சொல்லணும் ? . தவபுண்ணியம் , சிவநேசன் , ராமலிங்கம் , வேதாந்த சுவாமிகள் , இவங்க எல்லாருமே , அமானுஷ்யம்ங்கற ஒரே விசயத்துல ஒத்துப்போறாங்க . SO , இந்த விசயத்தில , இவங்க எல்லாருக்குமே தொடர்பு இருக்குமோன்னு நான் சந்தேகப்பட்றேன் . மொதல்ல , விசாரணை பண்ண வேண்டிய விதத்தில , மாத்தூர் கிராமத்தலைவர்கள விசாரிச்சா , பல உண்மைகள் வெளில வந்துரும் . “ என்றார் . திடீரென்று மழை , தூறல்போட ஆரம்பித்திருந்தது . சற்று நேரத்தில் , அதுவே பெரிய மழையாக உருமாறியிருந்தது . அதற்குள் தூத்தூர் காவல் நிலையம் வந்திருந்தது . ஜீப்பிலிருந்து வெளியே இறங்கியதும் ,வேகவேகமாக இருவரும் உள்ளே புறப்பட்டிருந்தார்கள் . காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசார் , சல்யூட்டுடன் அவர்களுக்கு எதிர்பட்டிருந்தார்கள் . உள்ளே விசாரணைக் கைதிகளை விசாரிக்கக் கூடிய அறையில் , இருவரும் தனியாக விவாதிக்க ஆரம்பித்திருந்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ கந்தசாமி ! இப்ப மணி 8 ஆகப்போகுது . இன்னிக்கு ராத்திரி சரியா பத்து மணிக்கு , தவபுண்ணியத்தையும் , அவரோட சகாக்களையும் , விசாரணைங்கற பேர்ல , தனித் தனியா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வரப்போறோம் . நாம அவங்கள கைது பண்ணப் போறோம்ங்கற விஷயம் , எக்காரணத்தைக் கொண்டும் , யாருக்குமே தெரியக்கூடாது . குறிப்பா அவங்க மூணு பேருக்குமே , இந்த விஷயம் தெரியவே கூடாது .

ஏட்டு கந்தசாமி : “ எஸ் சார் ! ... ஆனா இதுல ஏதாவது பிரச்சனை வருமோன்னு நெனக்கிறேன் ... விசாரணைன்னு சொன்னா , அவங்க ஒத்துழைப்பாங்கன்னு நெனைக்கிறீங்களா ! “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ வேற வழியில்ல . அவங்கள எப்படியாச்சும் ஒத்துழைக்க வெச்சு , இங்க கூட்டிட்டு வந்தே ஆகணும் ... ஏன்னா நாம கைது பண்ணப் போறோம்ன்னு , தெரிஞ்சா அவனுங்க ALERT ஆயிருவாங்க . தப்பிக்க நெனைப்பாங்க .அதுக்கு முன்னாடி , மேலிடத்துல உத்தரவு வாங்கிட்டுத்தான் , நாம நம்ம வேலைய ஆரம்பிக்கணும் . நான் இன்னும் கொஞ்ச நேரத்துல மேலிடத்துல பேசி APPROVAL வாங்கிடுவேன் . அதுக்குள்ள நீங்க மத்த வேலைகளைப் பாருங்க . “

ஓகே சார் ! என்ற கந்தசாமி , அடுத்த கட்ட வேளைகளில் துரிதம் காட்டியிருந்தார் .


மேலதிகாரிகளோடு , அரை மணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

சார் ! கவலைப்படாதீங்க ! எந்தப் பிரச்சனையும் வராது .அப்படி வந்தாலும் நான் பாத்துக்குறேன் . நீங்க PERMISSION மட்டும் குடுங்க . “ என அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக , கடைசிவரை பேசிக்கொண்டிருந்தார் .

நேரம் மணி 9 –ஐத் தொட்டிருந்தது . ஒரு வழியாக அவர்களிடம் , சமாதானம் வாங்கிய அவர் , பெருமூச்சு விட்டிருந்தார் .

அதைப் பார்த்த ஏட்டு கந்தசாமி , “ சார் ! ஒரு வழியா அவங்கள ஓகே பண்ணீட்டீங்க போல என்றார் சிரித்துக்கொண்டே “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஆமாய்யா !................ எப்படியோ சம்மதிக்க வச்சுருக்கேன் . இன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா , மாத்தூர் கிராமத்து மர்மத்துக்கு , ஒரு முற்றுப்புள்ளி வச்சிர வேண்டியதுதான் .... சரி கெளம்ப ரெடியா இருங்க .. “

ஏட்டு கந்தசாமி : “ ஓகே சார் ! கண்டிப்பா .....“ என இருவரும் கிளம்ப தயாராயிருந்தார்கள் . மழையும் விட்டிருந்தது . நீடித்திருந்த மர்மம் , நீங்கிய சந்தோஷத்தில் , இன்ஸ்பெக்டர் ரவி , தன்னுடைய முகத்தில் தண்ணீரைத் தெளித்து ,நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்தார் . அந்த நேரம் பார்த்து , ஏட்டு கந்தசாமியின் செல்போன் அலறியது . எடுத்துப் பார்த்த , அவர் ஹலோ என்று பேச ஆரம்பித்தார் ......... கொஞ்ச நேரத்தில் , ஏட்டு கந்தசாமியின் முகம் மாறியிருந்தது . அவரது முகமாற்றத்தை , ஆச்சர்யமாகப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , கந்தசாமியைப் பார்த்து , “ யோவ் ! என்னாச்சுய்யா ????? ” . என்றார்

ஏட்டு கந்தசாமி : “ சார் !!!!!!!!! மாத்தூர் கிராமத்தலைவர்களில் ,, ஒருவரான சிவநேசன் ................................................. இறந்துட்டாராம் “ .

இன்ஸ்பெக்டர் ரவி : (..... பேரதிர்ச்சியுடன் .....) “ WHAT ????????????????? “ .

ஏட்டு கந்தசாமி : “ ஆமா சார் ! , இப்பதான் , நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து , நமக்குத் தகவல் வந்துருக்கு . “ .

மீளாத அதிர்ச்சியில் உறைந்திருந்த , இன்ஸ்பெக்டர் ரவி ,,, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , “ எப்படிடிடிடிடி இறந்தாராம் ???? “ . என்றார் .

ஏட்டு கந்தசாமி : “ தெரியல சார் ! நாம போய்தான் பாக்கணும் . “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ COME ON , LETS GO ...........“ என்றவுடன் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் .

மிகப்பெரிய குழப்பத்தினிடையில் , போலீஸ் ஜீப் , புயலாகக் கிளம்பியிருந்தது .


போலிஸ் ஜீப்பின் வெளிச்சத்தால் , வழிநெடுகிலும் இருந்த இருட்டு , தன்னை விலக்கிக் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டியிருந்தது .

இன்ஸ்பெக்டர் ரவியின் மனதில் , சந்தேக மேகங்கள் சூழ்ந்திருந்தது .

எப்பொழுதும் , எதையாவது பேசிக்கொண்டு வரும் , ஏட்டு கந்தசாமியும் மௌனம் காக்க , ஒரு மயான அமைதி அங்கு நிலவியிருந்தது .

இருபது நிமிடப் பயணத்தில் , மாத்தூரின் எல்லையை அடைந்திருந்தார்கள் .

ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர் . கொஞ்ச நேரத்தில் , சிவநேசனின் தோப்புவீடு வந்திருந்தது .

அந்த இரவு நேர அமைதியிலும் , அழுகுரல் சத்தம் அந்த ஏரியாவையே ,துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது .

தோளில் துண்டுகளோடு , பெருசுகள் தோப்பின் வெளியே நின்றுகொண்டு , பேசிக் கொண்டிருந்தார்கள் .
அவர்களையெல்லாம் தாண்டி , வீட்டை நோக்கி முன்னேறியிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ....


வீட்டின் உள்ளே , போர்வையின் விரிப்பில் , நேராகப் படுத்தவாறு கிடத்தப்பட்டிருந்தார் சிவநேசன் ..

சிவநேசனின் மனைவி , அவரின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் , பிரம்மை பிடித்தவர் போல் ,,, அவர் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார் . அவரைச் சுற்றி , அழுதபடியே பெண்கள் கூட்டம் மொய்த்திருந்தது .

உள்ளே சென்று பார்த்து விட்டு , வெளியே வரும்போது , திண்ணையில் தவபுண்ணியமும் , ராமலிங்கமும் சோகமே உருவாய் உட்காந்திருந்தார்கள் .

சிவந்து கிடந்த தவபுண்ணியத்தின் கண்களில் , தண்ணீர் தடாகம் , ஊற்றெடுத்திருந்தது .

எப்பொழுதும் கம்பீரமாய் தோற்றமளிக்கும் தவபுண்ணியத்தின் முகம் , சிவநேசனின் ஈடுகட்ட முடியாத இழப்பால் ,கலவரமடைந்திருப்பதை அங்கு காண முடிந்திருந்தது .

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ராமலிங்கம் , தவபுண்ணியதைப் பார்த்து

ராமலிங்கம் : “ ஐயா ! நீங்க கவலைப்படாதீங்க ஐயா ! , எனக்குத் தெரிஞ்சு , ,,,,,,,,,,, அந்த NEXTGEN உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரனுங்க தான் , இப்படி பண்ணியிருக்கணும் . அவனுங்கள............. நாளைக்கு காலைலக்குள்ள அவனுங்களோட கதைய முடிச்சிட்றேன் . அப்பதான் என்னோட ஆத்திரம் தீரும்யா . “ என்று எழுந்து நின்றார் கோபமாக .

தவபுண்ணியம் : ( ...... கோபத்துடன் நின்றிருந்த ராமலிங்கத்தைப் பார்த்து , கையமர்த்திய தவபுண்ணியம் ...... ) “ ராமலிங்கம் ! கொஞ்சம் அமைதியா இரு . அவனுங்க இதப் பண்ணீருக்க மாட்டாங்க . அவனுங்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்ல . நல்லா யோசிச்சுப் பாரு ... நம்மளப் பத்தி , நல்லா தெரிஞ்ச எவனோ தான் இதைப் பண்ணீருக்கான் ....... “ .

பக்கத்தில் இருந்த நபர்களிடம் , விசாரித்துக் கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி , இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கத்தில் வந்து ,

சார் ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி , இந்த வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்ருக்குது . சிவநேசன் ஐயா , எழுந்து போய் கதவத் திறந்து பாத்துருக்காரு . வெளில யாருமேயில்ல . அப்ப நல்ல மழை வேற . கையில டார்ச் எடுத்துட்டு வெளில போயிருக்காரு . போனவர் ரொம்ப நேரமா திரும்பி வரலையேன்னு , இவங்கெல்லாம் போய்ப் பார்த்துருக்காங்க . அப்பதான் அவர் அந்த இடத்துலேயே இறந்து கிடந்தது இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு . உடனே நமக்கு தகவல் குடுத்துருக்காங்க . இது ஒரு இயற்கையான மரணாமாக்கூட இருக்கலாம் சார் !!! ஆனா வெண்ணிலாவோட ஆவி தான் இவர பழி வாங்கிருக்குன்னு , ஊர்க்காரங்கல்லாம் பேசிக்கிறாங்க . இவங்க சொல்றபடி பாத்தா , கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் , அவர் இறந்துருக்கார் . ஆனா அவர் உடம்புல எந்தவிதமான காயங்களுமே இல்ல . .... “

இன்ஸ்பெக்டர் ரவி : (................ சற்று நேரம் யோசித்துவிட்டு ................) ஹ்ம்ம் !!! ஓகே !!! . அவர் இறந்து கிடந்த ஸ்பாட்ட நான் பார்க்கணும் . ” என்றார் .

பக்கத்தில் இருந்த நபர் வழியைக் காட்ட , ஏட்டு கந்தசாமியும் , இன்ஸ்பெக்டர் ரவியும் பின்தொடர்ந்திருந்தார்கள் .


கொஞ்ச நேர நடையில் , வீட்டுக்குப் பின்னால் இருந்த , செம்பருத்தித் தோட்டத்தை நெருங்கியிருந்தார்கள் .

சிவநேசன் இறந்து கிடந்த இடத்தை , அடையாளம் காட்டிவிட்டு சென்றிருந்தார் அந்த நபர் ...

( ஏட்டு கந்தசாமி , அடையாளம் காட்டப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு பெரிய வட்டம் போட்டிருந்தார் .)

அந்த இடம் முழுவதையும் , தன் கண்களால் அலசியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் பார்வை , தூரத்தில் இருந்த செம்பருத்திச் செடியை நோக்கிச் சென்றது ..

அந்தச் செடியின் கிளைகள் சற்றே உடைக்கப்பட்டிருந்தது அப்போது தெரியவந்தது .

பக்கத்தில் சென்று அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார் .

அதன் வழியாக , யாரேனும் ஊடுருவி வந்திருக்கலாம் என்கின்ற யூகத்தில் , குறிப்பிட்ட அந்த இடத்தைச் சுற்றியே மேலும் , தனது பார்வையைக் கூர்மைப்படுத்தியிருந்தார் .

கனமழை பெய்ததன் காரணமாக , அந்த இடமே சேறும் சகதியுமாகக் காட்சியளித்திருந்தது .

கொஞ்ச நேரமாகவே , அந்த சகதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி ,
திடீரென இன்ஸ்பெக்டர் ரவியைக் கூப்பிட்டு , அந்த சகதியின் ஓரத்தை நோக்கி , தன் கையைக் காட்டினார் .


அதில் மனிதக் காலடித்தடம் , பதிந்திருந்ததைக் கண்டதும் , திடுக்கிட்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

அதே காலடித்தடம் , தூரத்தில் இருந்த மதில் சுவர் வரை , பரவியிருந்ததை அங்கு பார்க்க முடிந்தது .

அந்த கால்தடங்களையே , நன்கு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , தன்னுடைய செல்போனில் , அவற்றைப் புகைப்படமெடுத்துக் கொண்டார் .

அந்தக் கால்தடங்களின் இடதுகுதிங்காலில் , ஏதோ ஒரு வெட்டு விழுந்திருப்பதைப் போல , எல்லாப் புகைப்படங்களிலும் தெரிந்திருந்தது .

அதை உணர்ந்து கொண்ட இருவரும் , அந்த மதில் சுவர் வரை சென்று பார்த்தார்கள் . வெளியே ஆள் அரவமற்று வெறிச்சோடியிருந்தது .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! , எனக்கு தெரிஞ்சு இது கொலை தான்னு நான் நெனைக்கிறேன் . நமக்கு இப்ப கெடச்சிருக்கிற ஒரே தடயம் , இந்த இடதுகுதிங்கால் வெட்டு தான் சார் ... . “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ இந்த விஷயம் , நமக்குள்ள மட்டுமே இருக்கட்டும் . வெளில தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க . “ என்றார் .

இருவரும் வெளியே நடந்து வந்தார்கள் .


அங்கிருந்த ஒவ்வொருவரையும் , தன் பார்வையால் சலித்துக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ( வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் மரணத்துக்குக் காரணமானவர் , தவபுண்ணியம்தான் என்று தெரிந்தும் , தற்போதைய சூழ்நிலையைக் காரணம் காட்டி , மௌனம் சாதித்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . )

நேரம் ஆக , ஆக , கூட்டம் சற்று குறைய ஆரம்பித்திருந்தது ...

ஒரு கட்டத்தில் நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது . தவபுண்ணியம் மற்றும் ராமலிங்கத்தின் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது .

தவபுண்ணியமும் , ராமலிங்கமும் கிளம்பத் தயாராயிருந்தார்கள் .

தவபுண்ணியத்தைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , “ சாரி சார் ! உங்க நண்பர் இறப்பிற்கு , எங்களோட ஆழ்ந்த அனுதாபங்கள் சார் . “குமாரசாமியின் மரணத்தில் ஆரம்பித்து , இப்பொழுது சிவநேசன் வரை மாத்தூர் சம்பவங்கள் நீண்டுகொண்டிருக்கின்றது . அவர் எப்படி இறந்தார்ன்னு விசாரணை போய்ட்டிருக்கு ....(என்று முடிப்பதற்குள் , தவபுண்ணியம் கறாரான குரலில் பேச ஆரம்பித்தார் ... )

தவபுண்ணியம் : ( .... சிவந்த முகத்துடன் ..... ) இது நிச்சயமா சாதாரணமான சாவு இல்ல . ஆள் யார்ன்னு தெரிஞ்சா , உடனே சொல்லுங்க . மத்தத நான் பாத்துக்கறேன் . நான் இத சாதரணமா விடப்போறதில்ல . நீங்க என்ன வேணாலும் பண்ணிக்குங்க . ஆனா , அவன் யார்ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும் .... “ என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ சரிங்க சார் ! எதுக்கும் , நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க . உங்க வீடுகளுக்கெல்லாம் , கூடுதல் பாதுகாப்பு குடுத்துருக்கோம் . “ என்று அவர்கள் இருவரையும் , அவரவர் கார்களில் வழியனுப்பியிருந்தார் .

உடைந்த மனதுடன் ராமலிங்கமும் , தவபுண்ணியமும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள் .


கூடுதல் பாதுகாப்புக்காக , இரவு நேர ரோந்துப் படையினர் நான்கு பேர் , அவர்களுக்குத் துணையாக அனுப்பி வைக்கப் பட்டிருந்தனர் .

அடுத்த பதினைந்து நிமிடங்களில் , போலீஸ் ஜீப் , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பறந்திருந்தது .

இரவுப் பொழுதை , போலிஸ் ஸ்டேஷனிலேயே கழிக்க முடிவெடுத்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ....

களைப்பு மிகுதியால் , ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த மேசையிலேயே கண்ணயர்ந்திருந்தார் ஏட்டு கந்தசாமி .

இன்ஸ்பெக்டர் ரவியின் கண்கள் உறக்கத்துக்கு , முட்டுக்கட்டை போட்டிருந்தது .

இந்த கேஸ் சம்பந்தமான யோசனையிலேயே உறக்கத்தைத் தொலைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

(தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
-: "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -11 : -

அடுத்த நாள் காலை 9 மணி .


மாத்தூர் கிராமப் பஞ்சாயத்து அரசமரத்தடியே , மிகப்பெரிய மக்கள் கூட்டம் நின்றுகொண்டிருந்தது .

வேதாந்த சுவாமிகள் , தன்னுடைய சீடர்களுடன் அங்கே முகாமிட்டிருந்தார் .

மாத்தூர் சம்பவங்களுக்கான ஒரு தீர்வை எதிர்பார்த்து , கிராம மக்கள் அங்கே காத்துக் கொண்டிருந்தனர் .

அந்த வழியாக வந்த , போலீஸ் ஜீப் , இந்த கூட்டத்தைப் பார்த்ததும் நின்றிருந்தது . புரியாத புதிராய் , அந்த ஜன சங்கமத்தில் கலந்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . சரியாக 09:1௦ மணிக்கு சுவாமிகள் பேச ஆரம்பித்திருந்தார் .

வேதாந்த சுவாமிகள் : “ இங்கு கூடியிருக்கின்ற அனைவருக்கும் , என் முதற்கண் வணக்கங்கள் . நான் முன்பே சொன்னது போல , மாத்தூர் கிராமத்தில் அமானுஷ்ய நடமாட்டங்கள் , மிகவும் மோசமான அளவில் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது . அதற்க்கு உங்களின் கவலை தோய்ந்த முகங்ககளே சாட்சி . இன்று இரவுக்குள் , யாருக்கும் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நாம் இன்று , அதன் முடிவுக்கான கடைசிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறோம் .இன்று இரவு நடைபெறவிருக்கும் அர்த்த சாம யாகத்தோடு , அந்த அமானுஷ்ய நடமாட்டத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறோம் . எனவே அதுவரை பொதுமக்கள் , மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம் . அதற்கான வழிமுறைகளைத் தான் , நான் இப்பொழுது சொல்லப்போகிறேன்என்று பேசலானார் .

இதோ நான் கையில் வைத்திருப்பது , எங்கள் அன்பாலயத்தால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட , ஒரு சுத்தமான தீர்த்தம் .... இதை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் , சரியாக ஆறு மணிக்கு மேல் , தெளிக்க வேண்டும் . அதன் பின்னர் ,மூன்று நெய் விளக்குகளை , மேற்கு நோக்கி , வீட்டைப் பார்த்தவாறு ஏற்ற வேண்டும் . இரவு நேரம் ஆக , ஆக , அந்த அமானுஷ்யத்தின் ஆட்டம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் . எனவே இன்று ஒரு இரவு , அனைவரும் வெளியே செல்வதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது ............................ இந்த யாகத்திற்கு , தங்களால் முடிந்த பொருளுதவியை , காணிக்கையாக அளிக்க முற்பட்டால் , அதை இந்த அன்பாலயம் , பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளும் . ” என்று பேசி முடித்திருந்தார் .

அங்கிருந்த பொதுமக்கள் , தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி விட்டு , அந்த தீர்த்தத்தை வாங்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்திருந்தனர் .


அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , எதுவும் பேசமனதில்லாமல் ,கந்தசாமியைப் பார்த்து ,

வாய்யா போலாம் !!! .... என்றார் எரிச்சலோடு ..

இருவரும் மீண்டும் , ஜீப்பை நோக்கி செல்ல ஆரம்பித்த கணம் , வேதாந்த சுவாமிகள் இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்து ,

ரவி ! ரவிஎன்று கூப்பிட ஆரம்பித்தார் .... திரும்பிப் பார்த்த இருவரும் ,,,, வேதாந்த சுவாமிகளின் பக்கம் வந்தனர் .

வேதாந்த சுவாமிகள் : “ என்ன ரவி ! நீங்க சொன்னமாதிரி , மாத்தூர் கிராமத்துல , நடக்குற சம்பவங்களுக்கான , அறிவியல் பூர்வமான உண்மையை எதையாவது , கண்டுபிடிச்சீங்களா ??? “ என்றார் கேலியாக . “

இன்ஸ்பெக்டர் ரவி : (... மிகுந்த எரிச்சலுடன் ...) “ ஆமாங்க சுவாமி ! இன்னும் கூடிய சீக்கிரத்துல , இந்த மாத்தூர் கிராமத்த ஏமாத்திகிட்டு, சுத்திட்டு இருக்கற, அத்தனை பேர்த்தையும், புடிச்சு ஜெயில் கம்பிக்குள்ள, தள்ளி, களி திங்க வைக்கத்தான் போறேன் . அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை ...... “ என்றார் .

வேதாந்த சுவாமிகள் : (... ரவி மறைமுகமாக , தன்னையும் தாக்குகிறார் என்பதைத் தெரிந்தும் , முகமலர்ச்சியுடன் , சிரித்துக்கொண்டே .... )

“ ..... உங்களோட முயற்சிக்கு , என்னோட வாழ்த்துக்கள் .... ஆனா இதுக்கப்புறம்தான் , நீங்க இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும் ... உங்களுடைய பாதுகாப்புகள துரிதப்படுத்துங்க ... எந்த நேரத்திலும் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். “ என்றார் எச்சரிக்கையோடு .

இன்ஸ்பெக்டர் ரவி : (... உச்ச கட்ட எரிச்சலோடு ...) “ சுவாமிஜி !!! என்ன பண்ணனும்னு , எங்களுக்கு நல்லாத் தெரியும் . உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி .... என்று இருவரும் ,


அங்கிருந்து கிளம்ப முற்பட்ட அடுத்த வினாடி , இன்ஸ்பெக்டர் ரவியின் செல்போன் கதறியது .

எடுத்துப் பேச ஆரம்பித்திருந்த அவரின் முகம் , கொஞ்ச நேரத்தில் , சட்டென்று மாறியிருந்தது .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! என்னாச்சு ??? . “

(... சிரித்தபடியே நின்றுகொண்டிருந்தார் வேதாந்த சுவாமிகள் ....)

இன்ஸ்பெக்டர் ரவி : “ நேத்து ராத்திரி தூங்கச் சென்ற ராமலிங்கம் ஐயாவோட , அறைக்கதவு இதுவரை திறக்கப்படவில்லையாம் .... தட்டுனாலும் , உள்ள சப்தமே இல்லையாம் .. “

(.... வேதாந்த சுவாமிகளின் முகத்தில் இருந்த புன்னகை , இன்னும் மறையவில்லை ....)

வேதாந்த சுவாமிகள் : “ அதனோட ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு ... உங்களுக்கான வேலையும் வந்திடுச்சு ..... “ என்றார் .

அவரின் பேச்சுக்கு மதிப்புகொடுக்காமல் , அடுத்த இரு வினாடிகளில் , அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டிருந்தது போலீஸ் ஜீப் .


15 நிமிடப் பயணத்தில் , ராமலிங்கத்தின் வீட்டை அடைந்திருந்தார்கள் .

அங்கு ஒரு மயான அமைதி நிலவியிருந்தது .

அந்த வீட்டில் இருந்த மேல் தளத்தில் , ராமலிங்கத்தின் உறவினர்கள் , பதற்றத்தின் உச்சத்தில் , நின்று கொண்டிருந்தார்கள் .

வெகுநேரமாக தட்டியும் , ராமலிங்கத்தின் அறைக் கதவு திறக்கப்படாததால் , அது உடைக்கப்பட்டு , கீழே வைக்கப்பட்டிருந்தது .

உள்ளே ராமலிங்கம் மெத்தையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் .

மருத்துவர்கள் அவரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் .

முகத்தில் சேலைத்தலைப்பை வைத்துக்கொண்டு , கண்கள் கலங்கியபடி நின்று கொண்டிருந்தாள் ராமலிங்கத்தின் மனைவி .

மருத்துவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளை எதிர்பார்த்து , ராமலிங்கத்தின் உறவினர்கள் நின்று கொண்டிருந்தார்கள் .

அந்த நேரம் பார்த்து , மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியம் , மனைவி மரகதம் , மற்றும் மகன் கலையரசனோடு அங்கு வேகமாக வந்திருந்தார் .

தவபுண்ணியத்தின் மனைவி மரகதம் , ராமலிங்கத்தின் மனைவிக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தார் .

கனத்த இதயத்தோடு காத்திருந்தார் தவபுண்ணியம் .

திடீரென்று எழுந்த மருத்துவர்கள் , ராமலிங்கம் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள் . அங்கே மரண ஓலம் ஆரம்பமாயிருந்தது .

ராமலிங்கத்தின் மனைவி ,கதறிக்கொண்டிருந்தாள் . கண்ணீர் தாரை தரையாக வழிந்து கொண்டிருந்தது .

ஏட்டு கந்தசாமியின் முகத்தில், ஈ ஆடவில்லை . அதிர்ச்சியில் உறைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

இந்த செய்தியைக் கேட்டுத் திகைத்துப் போயிருந்த தவபுண்ணியம் , சவமாய்க் கிடக்கின்ற தன் நண்பன் ராமலிங்கத்தின் பக்கத்தில் வந்து , தன் தலையில் அடித்துக்கொண்டு , கதறியிருந்தார் .

டேய் ! என்ன மட்டும் , தனியா இங்க விட்டுட்டு , நீங்க ரெண்டு பேரும் , போய்ட்டீங்க . என்னையும் , உங்ககூடவே , கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே ! “ என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுதிருந்தார் .


எத்தனையோ பேர் ஆறுதல் கூறியும் , தவபுண்ணியத்தை சமாதானம் செய்ய முடியவில்லை . பார்ப்பவர்களைப் பதற வைத்திருந்தது அந்தக் காட்சி .

நேரம் ஆக , ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது . உறவினர்கள் சடங்குகளுக்கும் , சம்பிரதாயங்களுக்கும் தயாராயிருந்தார்கள் .

மணி மதியம் 2 –ஐக் கடந்திருந்தது . பல பந்திகள் பரிமாறப் பட்டிருந்தது .

இன்ஸ்பெக்டர் ரவி அந்த வீடு முழுவதையும் , தன் பார்வையால் அலசிக் கொண்டிருந்தார் .

அங்கு இருக்கின்ற ஒவ்வொருவரின் , குதிங்காலையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி .

ராமலிங்கம் இறந்த செய்தி கேட்டு , அவரின் உறவினர்கள் , நாலாப்புறமும் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் .

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக, வேளாண் பேராசிரியர் சதாசிவமும் , அங்கு வந்து துக்கத்தில் பங்கேற்றிருந்தார் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் அவரிடம் , பேசிக் கொண்டிருந்தனர் .

கொஞ்ச நேரத்தில் , NEXTGEN FERTILIZERS LTD உரிமையாளர்களான பிரனேஷும் , திலீபனும் அங்கு இருண்ட முகத்தோடு வந்திருந்தார்கள் .

அவர்களைப் பார்க்கப் பார்க்க , தவபுண்ணியம் முகம் உக்கிரமடைந்திருந்தது .

இருந்தும் காரியம் நடந்து கொண்டிருக்கின்ற இடத்தில் , கலவரம் வேண்டாம் என்று பொறுமையோடு காத்திருந்தார் .

திடீரென்று , தவபுண்ணியத்தின் மகன் கலையரசன் , தவபுண்ணியத்திடம் அழுதுகொண்டே வந்து ,

கலையரசன் : “ அப்பா !! வெண்ணிலாதான்ப்பா !!! இந்த கொலையப் பண்ணது . எனக்கு நல்லாத் தெரியும்ப்பா !!! “ என்றான் . இதை பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி திடுக்கிட்டுப்போனார் . ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த தவபுண்ணியம் , இந்த பதிலைக் கேட்டதும் , கடுப்பான அவர் ,

பைத்தியகார நாயே ! இன்னும் , அந்த செத்துப் போன பொண்ணு நெனப்பாவே சுத்திகிட்டு திரியற ... எந்த நேரத்துல , எதப் பேசணும்னு உனக்குத் தெரியாது ............ “ என்று அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்க ஆரம்பித்தார் ... இது அவங்க குடும்ப விஷயம் என்பதுபோல் , யாரும் அவரைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை .

இன்ஸ்பெக்டர் ரவி இடையில் சென்று , அவரின் கையைப் பிடித்து ,

சார் ! விடுங்க சார் ! ஏன் , தோளுக்கு மேல வளந்த பையனப் போய் , இந்த அடி , அடிக்கறீங்க .. “ என்றார் .....

உடனே ரவியின் பக்கம் திரும்பிய , தவபுண்ணியம் ,

வாய்யா !!! வா !!! , இதுக்கெல்லாம் நல்லா வக்காலத்துக்கு வந்துடு .... என் பையன நான் அடிப்பேன் .. அதைக் கேக்கறதுக்கு நீ யாருய்யா ??? “ என்றார் கோபத்தோடு ..

ஏட்டு கந்தசாமி இடையில் வந்து , தவபுண்ணியத்தை சமாதானப்படுத்தி ,

ஐயா !!! எல்லாரும் பாக்கறாங்க .... கொஞ்சம் பாத்து பேசுங்க .....” என்றார் பௌவ்யமாக ....

இன்னும் கோபம் தணியாத , தவபுண்ணியம் ,

என்னத்தய்யா !!! பாத்துப் பேசணும் ...... நேத்து சிவநேசன் , இன்னிக்கு ராமலிங்கம் , நாளைக்கு நானா ??????????? .... நீங்கெல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க .... இதுவரைக்கும் ஏதாவது துப்பு கிடச்சுதா ..... பெருசா சமாதானம் பேச வந்திட்ட ...... போய்யா ...“ என்றார் . ( இன்ஸ்பெக்டர் ரவியின் கண்கள் சிவந்திருந்தது ...)

ஏட்டு கந்தசாமி : “ ஐயா ! விசாரணை போயிட்டு தான் இருக்கிறது . இது கொலையா இருக்குமேயானால் , இன்னும் கூடிய சீக்கிரத்தில கொலையாளியப் புடிச்சுக் காட்டுறோம் ...”

தவபுண்ணியம் : (.... கோபத்துடன் ....) எப்ப ??? நானும் செத்ததுக்கு அப்புறமா ???? .. எனக்கு என்னமோ , இந்த மரணங்கள்ல போலிஸ் தலையீடு , இருக்குமோன்னு சந்தேகமாயிருக்குதுய்யா ?? ” என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ சார் ! கொஞ்சம் வார்த்தையை , அளந்து பேசுங்க ........ குமாரசாமி , பேய் அடிச்சுத்தான் செத்துப் போயிட்டார்ன்னு , நீங்க சொன்னீங்க ... அப்ப அத நாங்க நம்பினோம் .... இந்த மரணமும் கூட அதே மாதிரி ,இருக்கலாமே .. இதை மட்டும் ஏன் , உங்க மனசு ஏத்துக்க மாட்டிங்குது ??? . “ என்று ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவியைத் தடுத்து நிறுத்திய , ஏட்டு கந்தசாமி ,

சார் !!! சாவு வீட்டுக்கு வந்துருக்கோம் ..... இங்க வந்து , சண்டை போடறது அவ்ளோ , நல்லா இல்லை .... எதுவாக இருந்தாலும் , விசாரணையின் முடிவுல , பேசிக்கலாம் ... “ என்று அவரை சமாதானப் படுத்தினார் ....


கோபம் தணியாத முகத்துடன் , கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார் தவபுண்ணியம் .......

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , ஓரத்தில் இருந்த நாற்காலிகளில் போய் உட்காந்திருந்து , வெறும் யோசனையிலேயே நேரத்தைக் கடத்தியிருந்தார்கள் .....

களைப்பு மிகுதியால் , இன்ஸ்பெக்டர் ரவி அவ்வப்போது , தூங்கித் தூங்கி விழித்துக் கொண்டிருந்தார் .

ராமலிங்கத்தின் உறவினர்கள் , வருவதும் , போவதுமாக இருந்தனர் .

அவர்களைப் பார்த்துக் கொண்டே ,மீண்டும் தன் கண்களை மூடியிருந்த , இன்ஸ்பெக்டர் ரவி திடுக்கிட்டார் .....

நேற்றைய முன்தினம் இரவு , அவருடைய வீட்டில், பார்த்த , அந்த மர்ம உருவம் திடீரென்று அவர் நியாபகத்துக்கு வந்தது .

அதன் நடை , பாவனைகளைக் கொண்ட ஒருவரை, அந்த ஜனக்கூட்டத்தில் , அவருடைய கண்கள் , அவருக்கு அடையாளம் காட்டியிருந்தது ...

திடீரென்று , கண்களைத் திறந்து பார்த்த அவர் , ஏட்டுக் கந்தசாமியைக் கூப்பிட்டு , அந்த ஆசாமியை அவருக்கு அடையாளம் காட்டினார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : “ யோவ் ! கந்தசாமி ! அங்க நிற்கிற ஆள் யார் ??? “ என்றார் பரபரப்பாக .....

ஏட்டு கந்தசாமி : “ சார் ! அவன் பேர் பொன்னையா !!! தவபுண்ணியம் வீட்டு வேலைக்காரன் சார் ....“ என்றார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : (... யோசனையிலேயே ....) “ ஹ்ம்ம் !!! “ என்றார் .

(... அடுத்த 2 நிமிடங்களில் , பொன்னையாவையே , பார்த்துக்கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி சார் ! சார் ! என்று பதறினார்......)

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்னாச்சு கந்தசாமி ???? எனிதிங் சீரியஸ் ??? “

ஏட்டு கந்தசாமி : “ எஸ் சார் ! அவனோட இடது காலைப் பாருங்க ... “ என்றார் .

சேற்றில் பதிந்திருந்த , அந்த இடதுகால் வெட்டுத் தடயம் , அவன் காலில் இருந்தது அவர்களை மேலும் அதிர வைத்திருந்தது ......


இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர், பார்த்துக் கொண்டனர் .

(தொடரும்... ) இதுவரை கதை எப்படி போகுது நண்பர்களே... உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி...
-பூபதி கோவை-



 
Top