வெறுக்காதே வீழ்ந்தே போவேன் நாவல் படித்து முடித்து விட்டேன்.
மிக மிக அருமையாக இருந்தது.மீநனன்யா இவள் வாழ்வில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாள். சிறுவயதில் தந்தை இல்லாமல் தாயை இழந்து தவறான காதலால் கடைசியில் ராமின் கை வந்து சேர்ந்து அதன் பிறகாவது அவளது கஷ்டங்கள் ஒழிந்தால் தானே இந்த அதகனாகரன் செய்த நம்பிக்கை துரோகம் அப்பப்பா பிறகும் அவளை நடிக்க வைத்து ஏமாற்றி அவளை ஒரு வழியாக்கி விட்டான்.
இந்த அதகனாகரனும் செய்த தவறுக்கு அவளிடம் காதல் பிச்சை கேட்டு அவளிடம் கெஞ்சி தன் உயிரையே பணயம் வைத்து தான் ஒரு காதல் தீவிரவாதி என நிரூபித்து அவளின் காதலுக்காக பல இன்னல்களை சந்தித்து கடைசியாக அவளின் காதலை அடைந்து விட்டான்.
அவள் வெறுக்க வெறுக்க அவன் எவ்வாறு வீழ்ந்து போவான் என அவளுக்கு நிரூபித்து தன் காதலை அடைந்து விட்டான்.
ஜெயராம் மாதவி கதாபாத்திரங்களும் தங்கள் பக்க நியாயங்களுடன் அருமை.
மிக மிக நன்றாக இருந்தது கதை.
ஒரு சிறு வருத்தம் நம்ம பூபூ &ஹன்சா இன் கருத்து பதிவுகளை இந்த கதையில் மிகவும் மிஸ் செய்தேன்.
கதையை படிக்க படிக்க ஹீரோ ஹீரோயின் ஆர்மிக்காக அவர்கள் எவ்வாறு கருத்தை பகிர்ந்து கொண்டு இருப்பார்கள் எவ்வாறு உங்களுக்கு பொங்கல் வைத்து இருப்பார்கள் என ஹாஹாஹா
Very nice story Nayanima